Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > ஒவ்வொரு மனிதனும் அவசியம் தீர்க்கவேண்டிய ஒரு முக்கியக் கடன்!

ஒவ்வொரு மனிதனும் அவசியம் தீர்க்கவேண்டிய ஒரு முக்கியக் கடன்!

print
காமகம் செல்லவேண்டும் என்று கடைசி நொடி தீர்மானித்தாலும் நம்முடன் வர முடியுமா என்று நாம் முதலில் தொடர்புகொண்டு கேட்டது திரு.முல்லைவனம் அவர்களைத் தான். அவருடன் மகாமகம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அதை விட பெரிய பாக்கியம் எதுவும் இருக்க முடியாது.

அவருக்கு வர விருப்பம் இருந்தாலும் ஏற்கனவே பல இடங்களில் மரம் நடுவது, மரக்கன்று வழங்குவது தொடர்பாக ஒப்புக்கொண்ட கமிட்மெண்ட்டுகள் இருப்பதால் வர இயலாது என்று தெரிவித்தார். நாம் மகாமகம் சென்று வந்து, அந்த புனித நீரை தனக்கு சிறுதுளி அளித்தாலே போதும் அதையே தாம் பாக்கியமாக கருதுவதாக தெரிவித்தார். அவசியம் தருகிறோம் என்று கூறினோம்.

சொன்னது போலவே மகாமகம் சென்று திரும்பியவுடன் அவரை தொடர்புகொண்டு தீர்த்தப் பிரசாதம் அளிக்க அவரது அலுவலகம் வருவதாக தெரிவித்தோம். ஆனால் அவரோ “சுந்தர் சார்… உங்கள் நேரம் மிகவும் மதிப்புமிக்கது. நீங்கள் என் பொருட்டு அலையவேண்டாம். நானே உங்கள் அலுவலகம் வந்து அதை பெற்றுக் கொள்கிறேன்!” என்றார்.

முல்லைவனம் போன்றவர்கள் காலடி நமது அலுவலகத்தில் அடிக்கடி படவேண்டும் என்பதால் நாமும் அதற்கு ஒப்புக்கொண்டோம்.

நேற்று மதியம் தொடர்புகொண்டு, பிற்பகல் 3.00 மணிக்கு வருவதாக தெரிவித்தார். சொன்னபடியே வந்தார். அப்போது கூட ஆலந்தூரில் ஒருவரிடம் இரண்டு மரக்கன்றுகள் கொடுத்துவிட்டு வருவதாக சொன்னார்.

“நீங்க எதுக்கு சார் இதுக்காக போகணும்? பேசாமே அவங்களை வந்து வாங்கிக்க சொல்லலாமே…” என்றோம்.

சம்பந்தப்பட்டவரால் நடக்கமுடியாது என்றும் அவர் ஒரு மாற்றுத் திறனாளி என்பதால் தானே நேரில் சென்று கொடுத்துவிட்டு வந்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் நமது மகாமக அனுபவங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

Mullaivanam treebank

அவருக்கு தீர்த்தப் பிரசாதமும் மகாமக ஸ்பெஷல் காலண்டரும் பரிசளித்தோம்.

“இந்தக் காலண்டரை வருடம் முடிந்ததும் எடுத்து பத்திரமாக வைத்திருங்கள். அடுத்த மகாமகம் வரும்போது எடுத்துப் பாருங்கள்…” என்று கேட்டுக்கொண்டோம்.

மரங்களின் தந்தை முல்லைவனம் ஆகட்டும், கிளிகளின் தந்தை சேகர் ஆகட்டும், நமது அலுவலகம் வரும்போதெல்லாம் அவர்கள் சேவையின் அனுபவங்களை சொல்லச் சொல்லி, இந்த உலகிற்கு அவர்கள் கூறும் கருத்துக்களை கேட்டுக்கொள்வோம்.

முல்லைவனம் அவர்களிடம் பேசும்போது அவர் சொன்ன ஒரு தகவல் மிகவும் சிந்திக்க வைத்தது.

“நாம் பேங்க்ல அங்கே இங்கே கடன் வாங்குறோம். கடன் திருப்பி கட்டமுடியாதபோது அவங்க அந்த பொருளை ஏலம் போட்டுடுறாங்க இல்லே ஜப்தி பண்ணிடுறாங்க. ஆனா இந்த பூமியும் இயற்கையும் நமக்கு எவ்வளவோ விஷயங்களை வட்டியில்லாம, எந்த நிபந்தனையும் இல்லாமல் தருது.  இயற்கை நமக்கு தர்ற இந்த அருட்கொடையின் மதிப்பு தெரியுமா?

சுவாசிக்க பிராணவாயு, (ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 550 லிட்டர் ஆக்சிஜினை சுவாசிக்கிறான்), அத்தியாவசியத் தேவைகளுக்கு தண்ணி, உண்ண உணவு இப்படி நாம் ஒவ்வொருத்தரும் இயற்கைக்கு எவ்வளவோ கடன் பட்டிருக்கோம். இத்தனையையும் இயற்கை கிட்டே அனுபவிக்கிற நாம அதை திருப்பி செலுத்துறது பத்தி யோசிக்கிறதில்லை. அப்படி திருப்பித் தராம நாம இந்த உலகத்தைவிட்டு கடன்காரனா போகும்போது, அடுத்த ஜென்மத்துல இதையெல்லாம் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கிறது கேள்விக்குறி தான்.

எனவே ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் குறைந்த பட்சம் 27 மரங்களையாவது நடவேண்டும். அப்போது தான் இந்தக் கடன் தீரும்! மரம் நடுவது மூலமா சுவாசிக்கிற பிராண வாயு, மழை ரெண்டுமே நல்லா கிடைக்கும். இயற்கைக்கு நாம பட்ட கடனை ஓரளவாவது திருப்பி கொடுக்குற மாதிரி இருக்கும். இதைச் செய்யத் தவறும் ஒவ்வொருவரும் கடன்காரர்களே…!”

எத்தனை அற்புதமான ஒரு விஷயத்தை எவ்வளவு எளிமையாக சொல்லிவிட்டார் முல்லைவனம்?

நமது கடனை தீர்க்க நாம் என்ன செய்யப்போகிறோம்?

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் 27 மரக்கன்றுகளை நடவேண்டும். குறைந்தபட்சம் இரண்டு மரங்களையாவது நட்டு பராமரிக்கவேண்டும். வீடில்லை, வசதியில்லை என்று சொல்லவேண்டாம். உங்கள் வீட்டிலோ, அல்லது வேறு எங்கோ கூட நடலாம்.

உங்கள் வீட்டு பிறந்த நாள் மற்றும் விசேஷங்களின்போது மரக்கன்றுகள் நட முல்லைவனம் அவர்களை நீங்கள் தாராளமாக தொடர்புகொள்ளலாம்.

நமது நூல் வெளியீட்டின்போது பார்வையாளர்களுக்கு தருவதற்கு தயார் நிலையில் மரக்கன்றுகள்
நமது நூல் வெளியீட்டின்போது பார்வையாளர்களுக்கு தருவதற்கு தயார் நிலையில் மரக்கன்றுகள்

நமது நிகழ்ச்சிகள் அனைத்திலும் இவர் பங்கேற்று தனது கைகளால் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி வருகிறார்.

முல்லைவனம் அவர்கள் மிக மிக எளிமையானவர். சில நேரங்களில் அதுவே இவரது பலவீனமாகிவிடுகிறது. இவர் செய்யும் செயலை ஒரு அரசாங்கம் கூட செய்யமுடியாது என்ற நிலையில் தனிமனிதனாக பசுமைக்கு பாடுபட்டு வருகிறார். இவரை அலைகழிப்பதோ இவரது நேரத்தை வீணடிப்பதோ வேண்டாம். இவரது தொண்டின் மகத்துவத்தை உணர்ந்து நடந்துகொள்ளவும்!

தொடர்புக்கு : TREEBANK முல்லைவனம் – 9789892080

* ஏதோ ஃபோன் செய்தால் அவர் வந்து நட்டுவிட்டு செல்வார் என்று நினைக்கவேண்டாம். மரக்கன்றுகளை கொடுப்பதிலும் மரம் நடுவதிலும் உங்கள் உடலுழைப்பு அவசியம் இருக்கவேண்டும். அப்போது தான் அதை நீங்கள கண்ணுக்கருத்துமாக பார்த்துக் கொள்வீர்கள். அந்த மரம் வளர வளர உங்களுக்கும் பெருமிதமாக இருக்கும்.

** உங்கள் இடங்களிலோ அல்லது அவர் கூறும் இடங்களிலோ மரங்களை நடலாம். நடும் மரங்களுக்கு ‘Tree Guard’ உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை ஏற்பாடு செய்து தரலாம்.

இந்தப் பதிவை வெளியிடும் இந்நேரம், அவரை தொடர்புகொண்டு பேசியபோது, நாம் அளித்த மகாம தீர்த்ததை மஞ்சள் நீர் கலந்த ஒரு பக்கெட்டில் ஊற்றி அவரிடம் உள்ள கன்றுகள் அனைத்தின் மீதும் தெளித்ததாக கூறுகிறார். அடடா… எவ்வளவு அருமையான ஒரு தகவல். மகாமகக் குளத்தின் அமுதத்துளி தற்போது இந்த விருட்சங்கள் வாயிலாக பரவவிருக்கிறது. நல்லது நடக்கட்டும். பூமி செழிக்கட்டும்.

*************************************************

மகிழ்ச்சியும் மனநிறைவும் வேண்டுமா ?

றைந்த மக்கள் ஜனாதிபதி டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் உடல் ராமேஸ்வரத்தில் புதைக்கப்பட்ட ஜூலை 30, 2015 அன்று அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை நெசப்பக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், நண்பர் முல்லைவனம் அவர்களின் Treebank சார்பாக நடைபெற்ற மரம் நடு நிகழ்ச்சியில் பங்கேற்று, நம் கைப்பட ஒரு பூவரச மரக்கன்றை நட்டது நினைவிருக்கலாம்.

treebank
ஜூலை மாதம் கன்றை நட்டபோது…

அந்த கன்று எப்படி இருக்கிறது, இந்த இடைப்பட்ட காலத்தில் வளர்ந்திருக்கிறதா என்று அறியும் ஆவலில் நமது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்கள் முன்பு அப்பள்ளி சென்று பார்வையிட்டோம்.

treebank 3
நவம்பர் மாத இறுதியில் மரங்கள் வளர்ந்த நிலையில்….

ஆஹா… மரங்கள் வளர்ந்து நிற்கும் அந்த அழகு… கண்கொள்ளா காட்சி அது.

நட்ட கன்று மரமாக வளரும் அந்த தருணம்...
நட்ட கன்று மரமாக வளரும் அந்த தருணம்…

வாழ்க்கையில் எத்தனையோ விதவிதமான சந்தோஷங்கள், மனநிறைவுகள் இருக்கலாம். ஆனால் நாம் நட்ட செடி ஒன்று சிறு மரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கும்போது அதை தடவிக்கொடுப்பதில் உள்ள சந்தோஷம் இருக்கிறதே… அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

பிறந்த நாள், மற்றும் திருமணம் போன்ற விசேஷங்களின் போது ஆடம்பர ஆரவார கொண்டாட்டங்களை தவிர்த்து, ஒரு விதையை நட்டு அது மரமாக வளரும் அழகை ரசித்துப் பாருங்கள். உண்மையான மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் அர்த்தம் புரியும். நாம் வளர்வதற்கும் ஒரு அர்த்தம் கிடைக்கும்.

நமது நட்சத்திர பிறந்தநாள் அன்று மரம் நட முடிவெடுத்த நேரத்தில் சென்னையை மழை வெள்ளம் உலுக்கியதை அடுத்து அதை செய்யமுடியவில்லை. விரைவில் அதை நிறைவேற்ற உறுதி பூண்டிருக்கிறோம்.

*****************************************************************

Also check :

மரங்களின் தந்தை முல்லைவனம் – நம்மை வெட்கப்படவைக்கும் ஒரு நிஜ ஹீரோ!

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

ஏட்டுச் சுரைக்காய் பசிக்கு உதவும்!

அங்கே புனித உடல் புதைக்கப்பட்டது – இங்கே கனவுகளில் ஒன்று விதைக்கப்பட்டது!

*****************************************************************

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

எது உண்மையான தர்மம்?

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

“எல்லாம் அவ பாத்துப்பா!”

*****************************************************************

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *