இந்த தேர்வை மும்பையை ஒரு ஆட்டோ டிரைவரின் மகள் பிரேமா என்பவர் முதல் முயற்சியிலேயே எழுதி பாஸ் செய்ததோடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் முதல் இடத்தையும் பிடித்து நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். (607/800 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் இவர்.)
இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே இவரது குடும்பம் மும்பைக்கு குடி பெயர்ந்துவிட்டது.
“பொறந்த ஊருக்கு புகழைச் சேரு; வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு” என்கிற வரிகளுக்கு இணங்க தற்போது இந்த சாதனையின் மூலம் தமிழகத்தக்கு தேசிய அரங்கில் பெருமை தேடி தந்திருக்கிறார்.
மும்பையில் மலட் பகுதியில் 300 சதுர அடி பரப்பளவில் நெருக்கடி மிகுந்த ஒரு சிறிய வீட்டில் தன் பெற்றோர் மற்றும் சகோதரருடன் வசிக்கும் பிரேமா, நாடு முழுவதுமிலிருந்து பன்னாட்டு நிறுவனங்கள் முதல் மிகப் பெரிய வங்கிகள் வரை குவிந்து வரும் ஆஃபர்களால் திணறி வருகிறார். இவரோடு இவரது சகோதரர் தன்ராஜ் என்பவரும் சி.ஏ. பாஸ் செய்திருக்கிறார்.
==============================================================
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண். (குறள் 615)
பொருள் : தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.
==============================================================
மிகவும் வறுமையான பின்னணியில் வளர்ந்த பிரேமா படிப்பில் படு சுட்டி. இவரது தந்தை ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் ரூ.15,000/-ல் தான் இவர்கள் குடும்பமே நடைபெற்று வந்துள்ளது. இந்த காலத்துல நாலு பேர் இருக்கும் ஒரு குடும்பம் நடத்த அதுவும் மும்பையில ரூ.15.000/- போதுமா?
(இங்கே எனக்கு தெரிந்த ஒருத்தர் ரூ.15,000/-க்கு புது மொபைல் வாங்கி அதை அடுத்த வாரமே தண்ணில (?) ஆப்பரேட் பண்ணி தண்ணிக்குள்ளே போட்டுட்டு வந்துட்டார்!)
பிள்ளைகள் படிப்பதால் அவர்களுக்கு சிரமம் கொடுக்கக்கூடாது என்று கருதி இவர் அம்மாவும் இந்த வயதிலும் ஏதோ வேலைக்கு போய் தன்னால் இயன்றதை குடும்பத்திற்கு தன் பங்கிற்கு கொடுத்து வந்துள்ளார்.
அம்மாவும் அப்பாவும் இவ்ளோ கஷ்டப்பட்டு நம்மளை படிக்க வைக்கிறாங்களே என்று கருதிய பிள்ளைகள் அவர்கள் கடமையை பொறுப்பை உணர்ந்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தனர். இருவரும் சி.ஏ. இன்டர்ன்ஷிப் சேர்ந்து மாத வருமானமாக ரூ.12,000/- பெற்ற பிறகு தான் அம்மாவை வேலைக்கு போக அனுமதிக்கவில்லை.
கல்லூரியில் டிகிரி படிக்கும் போதே பிரேமா படிப்பில் படுசுட்டி தான். ஆகவே அவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்து அதன் மூலமே படித்துள்ளார். கல்லூரி நிர்வாகம் இவரிடம் உள்ள திறமையை உணர்ந்து இவருக்கு அனைத்து உதவிகளையும் செய்தது. இளங்கலை தேர்வில் யூனிவர்சிட்டியில் இரண்டாம் ரேங்க் எடுத்துள்ளார் இவர். அதே போல எம்.காம் தேர்விலும் நல்ல ரேங்க் பெற்றுள்ளார். இன்று சி.ஏ. தேர்விலும் வெற்றி வாகை சூடி இருக்கிறார்.
சி.ஏ. படிப்புக்காக இவர் கோச்சிங் சேர்ந்த இன்ஸ்டிட்யூட்டும் இவருக்கு நல்ல சப்போர்டாக இருந்து இவர் படிக்க உதவியிருக்கிறார்கள். அங்கு கிடைத்த ரூ.40,000/- ஸ்காலர்ஷிப் இவரது குடும்பத்தின் பணக்கஷ்டத்தை ஓரளவு தீர்க்க உதவியிருக்கின்றது.
தனது அக்காவுக்கு எந்த சிரமத்தையும் தரக்கூடாது என்று கருதிய அவரது தம்பி தன்ராஜ், தன் படிப்புக்கும் செலவுக்கும் இரவு கால்-சென்டரில் பணிபுரிந்து அதன் மூலம் கிடைத்த சம்பளத்தில் தனது படிப்பை முடித்துள்ளார்.
பெற்றோருக்கு பொறுப்பான பிள்ளைகளாய் நடந்து படிப்பிலும் வெற்றிவாகை சூடி வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கும் பிரேமாவை – அவர் ஒருவேளை சென்னையில் – இருந்திருந்தால் எப்படியாவது நேரில் சென்று நமது தளத்திற்காக பேட்டி எடுத்து வந்திருப்பேன். ஆனால் மும்பையில் இருக்கிறார் பிரேமா. அதனால் என்ன ஃபோனிலேயே பேட்டி எடுத்தால் போச்சு என்று கடுமையாக முயற்சி செய்து கடைசியில் அவரை ஃபோனில் பிடித்தும் விட்டேன்.
கவர்னரை பார்க்க சென்றுகொண்டிருக்கும் பரபரப்பிலும் நமது தளத்திற்காக பிரத்யேக பேட்டி தந்திருக்கிறார் பிரேமா.
பாரதி கனவு கண்ட புதுமைப் பெண் இவர். மிக சரளமான தமிழில் பேசினார் பிரேமா. எந்தவித பகட்டோ பந்தாவோ இன்றி மிக மிக எளிமையாக நம்மிடம் பேசினார். கஷ்டப்பட்டு வாழ்க்கையில் ஜெயித்தவரல்லவா?
தமிழக வார இதழ்கள் மற்றும் முன்னணி பத்திரிக்கைகள் எதிலும் இவரது பேட்டி இதுவரை வெளிவந்ததாக தெரியவில்லை. (நாளிதழ்களில் வெளியாகியிருந்ததோடு சரி.)
கடின உழைப்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை!
நாம் : முதற்கண் தமிழ் நாட்டுக்கும் தாய் நாட்டுக்கும் பெருமை தேடி தந்திருக்கும் உங்களுக்கு எங்கள் RIGHTMANTRA.COM சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.
செல்வி.பிரேமா : ரொம்ப நன்றி சார். ரொம்ப நன்றி.
நாம் : இந்த வெற்றிக்கு பிறகு…. இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க?
செல்வி.பிரேமா : வார்த்தைகளால் விவரிக்க முடியாத சந்தோஷம் இது. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நாம் : உங்களை பத்தி கொஞ்சம் எங்க வாசகர்களுக்காக கொஞ்சம் சொல்லுங்களேன். உங்க ஸ்கூலிங், எப்போ மும்பைக்கு போனீங்க? படிப்பு இதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்…
செல்வி.பிரேமா : நான் பிறந்தது தமிழ்நாட்டுல என்றாலும் ரெண்டு வயசு இருக்கும்போதே மும்பை வந்துட்டோம். நான் படிச்சது இங்கே மும்பையில மலாட் முனிசிபல் ஸ்கூல்ல தான். ஏழாம் வகுப்பு வரைக்கும் தமிழ் மீடியம் தான் படிச்சேன். அப்புறமா நகிம்தாஸ் காண்ட்வாலா காலேஜ்ல பி.காம். அப்புறமா எம்.காம்.
நாம் : எப்படி இது சாத்தியமாச்சு?
செல்வி.பிரேமா : வேறன்ன…. கடின உழைப்பு ஒன்னு தான்.
நாம் : உங்க குடும்ப உறுப்பினர்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
செல்வி.பிரேமா : எனக்கு ஒரு அக்கா ஒரு தம்பி. அக்காவுக்கு கல்யாணம் ஆயிடிச்சு. தம்பி என் கூட தான் சி.ஏ. படிச்சான். அவனும் பாஸ் பண்ணிட்டான்.
நாம் : வாவ்…. ஒரே குடும்பத்துல ரெண்டு சார்டட் அக்கவுண்டண்ட்ஸ். கங்ராஜுலேஷன்ஸ்.
நாம் : அப்பா அம்மா என்ன சொல்றாங்க ?
செல்வி.பிரேமா : அவங்களுக்கெல்லாம் ரொம்ப பெருமையா இருக்கு. அப்பா அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.
நாம் : மறக்க முடியாத பெரிய பாராட்டு?
செல்வி.பிரேமா : நிறைய பேர் பாராட்டினாங்க. ஒருத்தரைவிட்டு ஒருத்தரை எப்படி சொல்றது. இதோ இப்போ மும்பை கவர்னரை பார்க்க போய்கிட்டுருக்கேன். இது கூட மிகப் பெரிய பாராட்டு தான்.
நாம் : உங்க இன்ஸ்பிரேஷன் யார்?
செல்வி.பிரேமா : என்னோட காலேஜ்ல எனக்கு கிளாஸ் எடுத்த பல ஆசிரியர்கள் சி.ஏஸ். தான். அவங்க தான் இதுல எனக்கு இன்ஸ்பிரேஷன்.
நாம் : இந்த சாதனையை நீங்க செய்றதுக்கு தூண்டுகோளா இருந்தது எது? அதாவது உங்களுக்குள்ளே இந்த வெறியை ஏற்படுத்தியது ஏற்படுத்தியது எது? இதுக்கு பின்னாடி நிச்சயம் ஏதாவது சம்பவம் இருக்கணும்…..
செல்வி.பிரேமா : (சற்று யோசிக்கிறார்…. சொல்லத் தயங்கி பின்னர் சொல்கிறார்) ……..ம்ம்ம்ம்…… சொந்தக்காரங்க மத்தியில நாங்க பட்ட அவமானம் தான். அவங்க எல்லார் எதிர்லயும் எங்க குடும்பத்தை தலை நிமிர வைக்கனும்னு நினைச்சேன். இப்போ புகழ் வந்ததுக்கு பிறகு எங்களை ஒதுக்கி வெச்சவங்க எல்லாம் எங்க கிட்டே பேசணும்னு துடிக்கிறாங்க. எங்களை அவங்க சொந்தம்னு சொல்லிக்க ஆசைப்படுறாங்க. எல்லார்கிட்டேயும் பெருமையா சொல்லிக்கிறாங்க.
சொந்தக்காரங்க மத்தியில நாங்க பட்ட அவமானம் தான். அவங்க எல்லார் எதிர்லயும் எங்க குடுமபத்தை தலை நிமிர வைக்கனும்னு நினைச்சேன். இப்போ புகழ் வந்ததுக்கு பிறகு எங்களை ஒதுக்கி வெச்சவங்க எல்லாம் எங்க கிட்டே பேசணும்னு துடிக்கிறாங்க. எங்களை அவங்க சொந்தம்னு சொல்லிக்க ஆசைப்படுறாங்க. எல்லார்கிட்டேயும் பெருமையா சொல்லிக்கிறாங்க.
நாம் : இந்த சாதனையை நீங்க செய்றதுக்கு காரணமா இருந்தது எது?
செல்வி.பிரேமா : எனக்கு சி.ஏ. படிப்பு மேல் இருந்த ஆர்வமும் என் உழைப்பு மேல் எனக்கு இருந்த நம்பிக்கையும் தான். பாஸ் பண்ணுவேன்னு தெரியும். ஆனா முதல் ரேங்க்ல பாஸ் பண்ணுவேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. இது ஒரு சுவீட் சர்ப்ரைஸ் தான்.
நாம் : இந்த வெற்றியை யாருக்கு டெடிகேட் பண்ண விரும்புறீங்க?
செல்வி.பிரேமா : என்னோட அப்பா அம்மா மற்றும் என்னோட புரொபசர்ஸ், ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் இந்த வெற்றியை டெடிகேட் பண்றேன்.
நாம் : கடவுள் நம்பிக்கை இருக்கா? கடவுளோட அருள் இதுன்னு நினைக்கிறீங்களா?
செல்வி.பிரேமா : நிச்சயமா இருக்கு. ஆனா கடவுள் இருக்காரேன்னு நாம உழைக்காம இருக்க கூடாது. நாம நம்ம பாட்டுக்கு கடினமா உழைச்சிட்டு கடவுள் கிட்டே வேண்டினா… கண்டிப்பா அதுக்கு பலன் இருக்கும்.
[button]கடவுள் இருக்காரேன்னு நாம உழைக்காம இருக்க கூடாது. நாம நம்ம பாட்டுக்கு கடினமா உழைச்சிட்டு கடவுள் கிட்டே வேண்டினா… கண்டிப்பா அதுக்கு பலன் இருக்கும்.[/button]
நாம் : சி.ஏ. ப்ரிப்பேர் பண்றவங்களுக்கு நீங்க சொல்ல விரும்புறது என்ன?
செல்வி.பிரேமா : FOCUSED HARDWORK பண்ணுங்க. நிச்சயம் நீங்க ஜெயிக்கலாம்.
நாம் : தோல்வியில் துவண்டு போகும் உள்ளங்களுக்கு உங்கள் அட்வைஸ் என்ன?
செல்வி.பிரேமா : உங்களோட லட்சியத்தை அடிக்கடி நினைச்சிகிட்டே இருக்கணும். அதையே மூச்சா நினைச்சு வாழனும். அதுக்காக உடல், பொருள் ஆவி அனைத்தையும் அர்பணிக்கணும். வானமும் ஒரு நாள் வசப்படும்.
நாம் : அப்பா அம்மாவை அடுத்து எப்படி கவனிக்கப்போறீங்க ?
செல்வி.பிரேமா : எங்கப்பா எங்களுக்காக நிறைய உழைச்சிட்டார். அவருக்கு நிச்சயம் ஒய்வு தேவை. அடுத்து சென்னையில் ஒரு வீடு வாங்கும் திட்டம் இருக்கு.
நாம் : வேலையில எப்போ சேரப்போகிறீர்கள் ?
செல்வி.பிரேமா : நிறைய ஆபர்ஸ் வருது. நல்ல கம்பெனியா பார்த்து சேரப்போகிறோம்.
நாம் : இறுதியாக எங்கள் தள வாசகர்களுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?
செல்வி.பிரேமா : கடின உழைப்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை. முயன்றால் முடியாதது எதுவமே இல்லை இந்த உலகத்துல. நீங்க எல்லாரும் நல்லா இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இனி நான் இந்த தளத்தின் ரெகுலர் விசிட்டர். உங்களோட எண்ணத்துக்கும் முயற்சிக்கும் என்னோட நன்றி. இந்த தளம் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
நாம் : நீங்கள் மேன்மேலும் சாதனைகள் புரிந்து மேலும் அனைவருக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம். நன்றி!
[END]
Amazing. Kudos to your effort Sundarji.
Congratulations to Ms.Prema.
She’s really a role-model for CA aspirants. I could see pride and humility in her eyes.
Very happy that we got this yet another VVIP visitor for our site henceforth.
வாழ்த்துக்கள் செல்வி பிரேமா அவர்களுக்கு,அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்களுக்கு படிப்பு கொடுத்தது இந்த நாடு அதனால் கண்டிப்பாக இந்த நாட்டில் வேலை செய்யுங்கள் ,சொந்தங்களை போல் தான் வெளிநாட்டு கம்பனிகளும் திறமை வெளி வந்த வுடன் தான் நான் நீ என்று போட்டி போடுவார்கள் ,அதனால் நாட்டிற்க்கு சேவை செயவும்
செல்வி பிரேமா அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பல பேருக்கு உண்டு ,அந்த அனுபவம் எனக்கும் உண்டு கஷ்ட படும் காலத்தில் சொந்தகளிடம் அவமான பட்டது ,ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற வெறி ஏற்படுத்தியது ,வந்தவுடன் தான் சொந்தங்கள் எதாவது விசேசங்களுக்கு கூட சொல்ல வருகிறார்கள் ,ஆனால் நண்பர்கள் எப்பொழுதும் ஒன்றாக தான் பார்ப்பார்கள்
நீங்கள் மென்மேலும் இன்னும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்
தினசரியில் செய்தியாக படிக்கும்போது பெரியதாக ஒன்றும் தெரியவில்லை. நம் தளத்தில் சகோதிரி பிரேமாவின் பேட்டி படிக்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.
.
“வறுமை நிலைக்கு பயந்துவிடாதே” என்ன ஒரு அருமையான தலைப்பு…இந்த புகழ்க்கு பின்னல் சகோதிரி பிரேமாவின் உழைப்பு என்ன இருக்கும் என்பது நினைக்கும்போது பிரம்பிபாக இறக்கிறது.
.
உங்களின் கடுமையான வேலைபளுவிற்கும் இடையில் எங்களுக்காக நேரம் ஒதுக்கி பேட்டி அளித்த உங்களுகு இந்த தளத்தின் வாசகன் என்ற முறையில் மிக்க நன்றியை தருவித்து கொள்கிறேன்.
.
நீங்கள் மென்மேலும் புதிய சாதனைகள் படைத்தது உங்களுக்கும், உங்கள் க்டுமப்திற்கும், இந்த தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க அந்த எல்ல வல்ல இறைவைன பிரதிகிறேன்.
.
மாரீஸ் kannan
வாழ்த்துக்கள்!!!
ரெட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கும் நீங்களும் உங்கள் சகோதரரும் மென்மேலும் வாழ்வில் பல சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல அந்த ஆண்டவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என்றென்றும் துணை இருப்பாராக !!!
வாழ்க வளமுடன் !!!
////அவமானம்//// – இதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான் வாழ்கையின் வெற்றி உள்ளது
சிலர் இதை எதிர்கொள்ளும் போது வாழ்கையை முடிஞ்சு போனது போல …உட்காந்து விடுவார்கள் ..சிலர் வாழ்கையை முடித்து கொள்ளவது உண்டு ….
வெகு சிலரையே அதை ஒரு positive ஆகா பார்த்து அதை நினைத்தே அதையே ஏணியாக பயன் படுத்தி ….நினைத்த இலக்கை அடைவார்கள்
—
வாழ்துகள் பிரேமா …
நன்றி
ஹரி.சிவாஜி
டியர் சுந்தர் ஜி .
செல்வி பிரேமா அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி மேலும் நிறைய சகோதரிகளுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக இருக்கும் என்பதில் மிகவும் மகிழ்ச்சி ………
நன்றி ஜி .
மனோகரன்
Really Great… We can see the pride (not ego) in the eyes of her …
//உங்களோட லட்சியத்தை அடிக்கடி நினைச்சிகிட்டே இருக்கணும். அதையே மூச்சா நினைச்சு வாழனும். அதுக்காக உடல், பொருள் ஆவி அனைத்தையும் அர்பணிக்கணும். வானமும் ஒரு நாள் வசப்படும்.//
Super Sir.
Its a great achievement for RIGHTMANTRA.COM to get such an exclusive article!!and what an achievement!!speechless!!dumbstruck!!by the attitude and humbleness of Ms Prema..and also by the PROGRESS of our website!!
when everyone were blaming their fate , she ( and U) decided to FIGHT against it and the results are for everyone to see!!
Another IMPORTANT THING–
Everyone would have given up saying they don’t have the time and resources to go to mumbai and interview her–but SUNDAR ANNA U DID IT!!:)HATS OFF FOR THIS HIMALAYAN EFFORT AND THE ATTITUDE u have acquired off late!!
Speechless by this article&by the way u Interviewed her!!
It will always remind me and others that “WHEN THERE IS A WILL THERE IS A WAY!!”
OBSTACLES they themselves have decided to move out of your breathtaking path because they have realised that if they stay now, they will be thrown away with ease!! So have a fun filled journey towards your goals now:)
Proud to be a RIGHTMANTRA.COM reader!!ippo collar thookivitukalam kandipa!!:)
Ur articles have the POWER of changing a NATION!!!time will prove dis to all!!
Pray that the Almighty gives you strength and never say die attitude in the quest of your goals!!
Regards
R.HariHaraSudan
“HE WHO KNOWS THE SELF KNOWS ALL”.
———————————————————
ஹரிஹரன்,
ஆண்டவன் மனிதர்களை பூமிக்கு அனுப்பும்போது ஒவ்வொருவர் கையிலும் ஒரு ஊசியை கொடுத்து அனுப்புகிறான்.
ஒரு சிலர் அதை குத்த பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் அதை தைக்க பயன்படுத்துகிறார்கள்.
குத்த பயன்படுத்துகிறவர்கள் தானும் அழிந்து தன்னுடன் இருப்பவர்களையும் இறுதியில் அழித்துவிடுகிறார்கள்.
தைக்க பயன்படுத்துகிறவர்கள் தானும் வாழ்ந்து தன்னுடன் இருப்பவர்களையும் வாழ வைக்கிறார்கள்.
மனித வாழ்க்கையே இது தான். அதன் சூட்சுமமும் இது தான்.
நான் இறைவன் கொடுத்த ஊசியை தைக்க பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
நன்றி….!
– சுந்தர்
Hats off to this girl.
***
I’m just wondering that when I am going to succeed like this girl.
***
And I love what she had told,
” உங்களோட லட்சியத்தை அடிக்கடி நினைச்சிகிட்டே இருக்கணும். அதையே மூச்சா நினைச்சு வாழனும். அதுக்காக உடல், பொருள் ஆவி அனைத்தையும் அர்பணிக்கணும். வானமும் ஒரு நாள் வசப்படும்.”
***
Let the world get rich with successes and blessings.
***
Chitti.
Thoughts becomes things.
Great Great effort Prema… You made us very very proud!!!!
Thx u sundar for giving us access to these gem of a personalities. Luv you loads brother. She is so brave smart and a role model for not only our children but also to us.
முதலில் பிரேமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் …… CA தேர்வில் வெற்றி என்பதே பெரிய விஷயம் …அதுவும் அகில இந்திய அளவில் முதல் இடம் என்பது மிக மிக அருமை ……
//சொந்தக்காரங்க மத்தியில நாங்க பட்ட அவமானம் தான். அவங்க எல்லார் எதிர்லயும் எங்க குடுமபத்தை தலை நிமிர வைக்கனும்னு நினைச்சேன். இப்போ புகழ் வந்ததுக்கு பிறகு எங்களை ஒதுக்கி வெச்சவங்க எல்லாம் எங்க கிட்டே பேசணும்னு துடிக்கிறாங்க. எங்களை அவங்க சொந்தம்னு சொல்லிக்க ஆசைப்படுறாங்க. எல்லார்கிட்டேயும் பெருமையா சொல்லிக்கிறாங்க.//
வெற்றியின் காரணம் …..பட்ட அவமானம் ….அவமானதின் வெளிபாடு மிக பெரிய சாதனை …
அன்புடன்,
விஜி
hats off prema . u make us proud. You are an excellent role model to youngsters.
God bless you.
சுந்தர் சார் ,
13-9-2015 அன்று சைதை காரணீஷ்வர் விழாவுக்கு எங்கள் நுங்கம்பாக்கம் சிவனடியார் குழுவினருடன் வந்த போது தங்கள் வரவேற்புரை கேட்கும் பாக்கியம் கிடைத்தது. உங்கள் ரைட் மந்த்ர பற்றி அறிந்து கொண்டேன். என்னைப் போன்ற ஆன்மிக தேடல் உள்ளோருக்கு மிக மிக உபயோகமான தகவல்களை வெளியிடுகிற உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள். CA தேர்வில் முதலிடம் பிடித்த பிரேமாவின் பேட்டி அற்புதமாக உங்களால் அறிய முடிந்தது. என் மகளும் CA தான் படிக்கிறாள். நடுத்தர வர்க்கத்தினரான எங்களைப் போன்றவர்களுக்கு இந்த உங்களின் பேட்டி ஒரு டானிக். நம் நாட்டில் நடத்தப்படும் மிக மிக கடினமான தேர்வுகளில் ஒன்றான சார்டெட் அக்கவுண்டண்ட் தேர்வில் வெற்றி பெற்ற பிரேமாவை நாளிதழ்கள் மற்றும் மீடியாக்கள் கண்டு கொள்ளாமல் விட்ட போது நீங்கள் அடையாளம் காட்டியது CA தேர்வு எழுதுபவர்களுக்கு ஒரு நம்பிக்கை தரும் ஒரு முயற்சி. வறுமை நிலையிலிருந்து இந்த படிப்பை படிப்போருக்கு நிதி உதவியை விட மேலானது தன்னம்பிக்கை தரும் உங்களை போன்றோரின் முயற்சி தான். உழவாரப் பணி மற்றும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபட ஆசை. உங்கள் குழுவினருடன் இணைந்து சேவை செய்ய என்ன செய்ய வேண்டும்?.
மிக்க நன்றி. தங்கள் மகள் சி.ஏ. தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மற்றும் என் பிரார்த்தனைகள்.
வரும் 20 ஆம் தேதி ஞாயிறு காலை குன்றத்தூர் நாகேஸ்வரர் கோவில் அருகே திருக்குறள் தேவார பாடசாலையில் நடைபெறவுள்ள நம் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தாருங்கள். திரு.சிவக்குமார் ஐயா அவர்கள் வருகை தந்து நூலை வெளியிடவுள்ளார்கள். அங்கு நமது மகளிர் குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அவர்கள் உங்களுடன் தொடர்பில் இருப்பார்கள். நன்றி. உங்கள் வருகையை தெரியப்படுத்தவும். சுந்தர் 9840169215
திருமதி கோமதி மேடம், 20 ம் தேதி ரைட் மந்த்ரா புத்தக வெளியீட்டு விழாவில் தங்களை சந்தித்து பேச ஆவலாக உள்ளேன். தங்கள் பெண் சி ஏ தேர்வில் வெற்றி பெற்று பல சாதனைகள் பெற வாழ்த்துக்கள்
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்