Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, July 16, 2024
Please specify the group
Home > Featured > பொன்மழையில் நனைந்த ஏழை பிரம்மச்சாரி – ஸ்ரீஸ்துதி புரிந்த மகிமை!

பொன்மழையில் நனைந்த ஏழை பிரம்மச்சாரி – ஸ்ரீஸ்துதி புரிந்த மகிமை!

print
ரலாற்றில் அன்னை மஹாலக்ஷ்மி பொன்மழை பொழிந்த சம்பவங்கள் மொத்தம் மூன்று (அதாவது நமக்கு தெரிந்து). அவற்றுள் ஒன்றை பார்த்துவிட்டோம். அடுத்ததை தற்போது பார்ப்போம்.

மிழகத்தில் வைணவத்தை தழைக்கச் செய்தவர்களுள் வேதாந்த தேசிகர் மிக மிக முக்கியமான ஒருவர். 1268ஆம் ஆண்டு புரட்டாசி மாதம், சிரவண நட்சத்திரத்தில் ஒரு புதன்கிழமை அனந்தசூரியார் – தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு மகனாக காஞ்சிபுரத்தில் உள்ள ‘தூப்புல்’ எனும் இடத்தில் பிறந்தார். இவர் திருமலை ஸ்ரீனிவாசனின் கோயில் மணியின் அம்சமாக பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன். பின்னாளில் இவர் ‘சுவாமி தேசிகன்’, ‘தூப்புல் நிகமாந்த தேசிகன்’, ‘தூப்புல் பிள்ளை’, ‘உபயவேதாந்தாசாரியார்’, ‘சர்வ தந்திர சுதந்திரர்’ மற்றும் ‘வேதாந்த தேசிகர்’ என்னும் பல்வேறு பெயர்களால் அழைக்கப் பெற்றார்.

வேதாந்த தேசிகர் வைராக்கியத்துக்கு பெயர் பெற்றவர். உஞ்சவ்ருத்தி செய்தே வாழ்ந்து வந்தார். அன்றைன்றைக்கு தேவையான அரிசியை மட்டும் யாசித்து வந்து சமைத்து உண்பார்.

இவர் மீது பெருமதிப்பு கொண்ட சிலர், இவருக்கு தெரியாமல் அரிசியில் பொற்காசுகளை கலந்து இவருக்கு பிச்சையிட்டனர். அரிசியை களையும் போது, அதில் பொற்காசுகள் இருப்பதை கண்டவர், அதை கையால் கூட தொட அஞ்சி, ஒரு குச்சியை எடுத்து தள்ளிவிட்டாராம். அப்படியென்றால் இவரது வைராக்கியம் எப்பேற்பட்டது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒரு சமயம் அவரது ஊருக்கு திருமணம் செய்துகொள்ள பொருள் வேண்டி ஒரு பிரம்மச்சாரி வந்தான். ஊரில் பலரிடம் சென்று உதவி கேட்டான்.

Sri Stuti

வேதாந்த தேசிகர் மீது பொறாமையும் துவேஷமும் கொண்ட சிலர் (ஊருக்கு ஒரு நாலு பேரு இப்படி இல்லேன்னா.. பெரிய பெரிய விஷயங்கள் நமக்கு கிடைச்சிருக்காது போல!) அவரை கேலி செய்யவேண்டி அந்த இளைஞனை அழைத்து, “தம்பி… உன் திருமணத்திற்கு பொருளை தரும் அளவு வசதி கொண்டவர்கள் இங்கே யாரும் இல்லை. நாங்க எல்லாரும் ஆளுக்கு கொஞ்சம் கொடுத்தால் கூட தம்படி தேறாது. நீ பேசாமல் நிகமாந்த தேசிகரை சென்று கேள். இந்த ஊரிலேயே பெரிய செல்வந்தர் அவர் தான். மறுக்காமல் உதவி செய்வார்” என்று அந்த பிரம்மச்சாரியை தேசிகரிடம் அனுப்பினர்.

தேசிகரிடம் வந்த இளைஞன் அவரை நமஸ்கரித்துவிட்டு, “சுவாமி… தங்கள் கொடைத்தன்மையை பற்றி கேள்விப்பட்டேன். எனக்கு தாங்கள் தான் உதவவேண்டும்” என்று வின்னபித்துக்கொண்டான்.

வேதாந்த தேசிகரோ தனக்கென அடுத்த நாளைக்கு எதுவும் சேர்க்காமல் உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்து வருபவர்.

தம்மை கேலி செய்ய தம் எதிரிகள் இந்த அப்பாவி இளைஞனிடம் பொய் கூறி அனுப்பி வைத்துள்ளதை அறிந்துகொண்டார்.

‘பொருளற்ற தம்மிடம் வந்து இந்த பிரம்மச்சாரி யாசகம் கேட்டு சங்கடப்படுத்துகிறானே என்று நினைக்காமல் இந்த ஏழை பிரம்மச்சாரிக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறோமே…’ என்று தான் தேசிகர் வருந்தினார்.

‘இவனுக்கு உதவ முடிந்தால் அதுவே எனக்கு போதும்’ என்று கருதியவர், உடனே அன்னை மஹாலக்ஷ்மியை வேண்டி ஸ்ரீஸ்துதி என்கிற ஸ்லோகத்தை இயற்றி அதை அந்த பிரம்மச்சாரிக்கு போதித்தார். பின்னர் தானும் பாடியபடி அவனை தூப்புல் கோவிலுக்கு அழைத்துச் சென்று, மரகதவல்லி சன்னதியை இந்த ஸ்லோகத்தை கூறியபடியே வலம் வரச் செய்தார்.

************************************************

‘காலடியை நோக்கி ஒரு பயணம்’ தொடர் – முந்தைய பாகங்களுக்கு…

சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)

செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)

சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)

பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

************************************************

ஏன், எதற்கு, என்று கேள்வி கேட்காமல், சலித்துக்கொள்ளாமல், ஆச்சாரியார் சொன்னதை சிரமேற்கொண்டு செய்தான் அந்த பிரம்மச்சாரி.

அன்னை பார்த்தாள். கேட்காதவர் கேட்கிறார். தனக்கென கேட்காமல் பிறருக்கு கேட்கிறார். அதுவும் தகுதியான ஒருவருக்கு கேட்கிறார். இது போதாதா?

“நீ கேட்கவேண்டும்…. நான் அள்ளிக்கொடுக்கவேண்டும். அதற்கு தானே காத்திருந்தேன்” என்று மஹாலக்ஷ்மி பொன் மழையை வருஷித்தாள்.

“யோகாரம்ப த்வரித மனஸோ” என்று துவங்கும் பதினாறாவது ஸ்லோகத்தை கூறியபோது, திருமகள் அந்த இளைஞன் முன்பு பொற்காசுகளை கொட்டினாள்.

“சிந்தாமல் சிதறாமல் பெற்றுகொள்!” என்றார் தேசிகர். அந்த பிரம்மச்சாரி உடனே தன் துண்டை விரித்து அந்த பொற்காசுகளை பிடித்துக்கொண்டான். பின்னர் ஆச்சாரியாரை வணங்கி நன்றி கூறிவிட்டு சென்றான்.

பொருளைத் தேடி ஓடும் இன்றைய உலகில் ஸ்ரீ நிகமாந்த தேசிகர் போல நாம் அப்பழுக்கற்ற துறவு வாழ்க்கை வாழ முடியாவிட்டாலும், பிறர் நிறைவில் பெருமிதம் தினம் காணும் குணத்தை வளர்த்துக்கொள்ள முடியாதா என்ன?

பிறருக்காக வேண்டும் நல்லுள்ளங்களுக்கு ‘திரு’வருள் என்றுமே உண்டு. வினையற்ற செல்வம் அவர்களிடம் பெருகும்!

வாழ்க வளமுடன். அறமுடன். நலமுடன்.

॥ ஶ்ரீஸ்துதி: ॥

மானாதீத ப்ரதி²த விப⁴வாம் மங்க³லம் மங்க³லாநாம்
வக்ஷ: பீடீ²ம் மது⁴ விஜயினோ பூ⁴ஷயந்தீம் ஸ்வகாந்த்யா ।
ப்ரத்யக்ஷானுஶ்ரவிக மஹிம ப்ரார்தி²னீநாம் ப்ரஜாநாம்
ஶ்ரேயோ மூர்தி ஶ்ரியமஶரணஸ்த்வாம் ஶரண்யாம் ப்ரபத்³யே ॥ 1 ॥

ஆவிர்பா⁴வ: கலஶ ஜலதா⁴வத்⁴வரே வாபி யஸ்யா:
ஸ்தா²னம் யஸ்யா: ஸரஸிஜ வனம் விஷ்ணு வக்ஷ: ஸ்த²லம் வா ।
பூ⁴மா யஸ்யா பு⁴வனமகி²லம் தே³வி தி³வ்யம் பத³ம் வா
ஸ்தோக ப்ரஜ்ஞைரனவதி⁴ கு³ணா ஸ்தூயஸே ஸா கத²ம் த்வம் ॥ 2 ॥

ஸ்தோதவ்யத்வம் தி³ஶதி ப⁴வதீ தே³ஹிபி:⁴ ஸ்தூயமானா
தாமேவ த்வாமனிதர க³தி: ஸ்தோதுமாஶம்ஸமான: ।
ஸித்³தா⁴ரம்ப:⁴ ஸகல பு⁴வன ஶ்லாக⁴னீயோ ப⁴வேயம்
ஸேவாபேக்ஷா தவ சரணயோ: ஶ்ரேயஸே கஸ்ய ந ஸ்யாத் ॥ 3 ॥

யத்ஸங்கல்பாத்³ப⁴வதி கமலே யத்ர தே³ஹின்யமீஷாம்
ஜன்ம ஸ்தே²ம ப்ரலய ரசனா ஜங்க³மாஜங்க³மாநாம் ।
தத் கல்யாணம் கிமபி யமிநாமேகலக்ஷ்யம் ஸமாதௌ⁴
பூர்ணம் தேஜ: ஸ்பு²ரதி ப⁴வதீ பாத³ லாக்ஷா ரஸாங்கம் ॥ 4 ॥

நிஷ்ப்ரத்யூஹ ப்ரணய க⁴டிதம் தே³வி நித்யானபாயம்
விஷ்ணுஸ்த்வம் சேத்யனவதி⁴கு³ணம் த்³வந்த்³வமன்யோன்ய லக்ஷ்யம் ।
ஶேஷஶ்சித்தம் விமல மனஸாம் மௌலயஶ்ச ஶ்ருதீநாம்
ஸம்பத்³யந்தே விஹரண விதௌ⁴ யஸ்ய ஶய்யா விஶேஷா: ॥ 5 ॥

உத்³தே³ஶ்யத்வம் ஜனனி ப⁴ஜதோருஜ்சிதோபாதி⁴ க³ந்த⁴ம்
ப்ரத்யக்³ரூபே ஹவிஷி யுவயோரேக ஶேஷித்வ யோகா³த் ।
பத்³மே பத்யுஸ்தவ ச நிக³மைர்னித்யமன்விஷ்யமாணோ
நாவச்சே²த³ம் ப⁴ஜதி மஹிமா நர்தயன் மானஸம் ந: ॥ 6 ॥

பஶ்யந்தீஷு ஶ்ருதிஷு பரித: ஸூரி ப்³ருʼந்தே³ன ஸார்த⁴ம்
மத்⁴யே க்ருʼத்ய த்ரிகு³ண ப²லகம் நிர்மித ஸ்தா²ன பே⁴த³ம் ।
விஶ்வாதீ⁴ஶ ப்ரணயினி ஸதா³ விப்⁴ரம த்³யூத வ்ருʼத்தௌ
ப்³ரஹ்மேஶாத்³யா த³த⁴தி யுவயோரக்ஷ ஶார ப்ரசாரம் ॥ 7 ॥

அஸ்யேஶானா த்வமஸி ஜக³த: ஸம்ஶ்ரயந்தீ முகுந்த³ம்
லக்ஷ்மீ: பத்³மா ஜலதி⁴ தனயா விஷ்ணு பத்னீந்தி³ரேதி ।
யன்நாமானி ஶ்ருதி பரிபணான்யேவமாவர்தயந்தோ
நாவர்தந்தே து³ரித பவன ப்ரேரிதே ஜன்ம சக்ரே ॥ 8 ॥

த்வாமேவாஹு: கதிசித³பரே த்வத்ப்ரியம் லோகனாத²ம்
கிம் தைரந்த: கலஹ மலினை: கிஞ்சிது³த்தீர்ய மக்³னை: ।
த்வத்ஸம்ப்ரீத்யை விஹரதி ஹரௌ ஸம்முகீ²நாம் ஶ்ருதீநாம்
பா⁴வாரூடௌ⁴ ப⁴க³வதி யுவாம் த³ம்பதீ தை³வதம் ந: ॥ 9 ॥

ஆபன்னார்தி ப்ரஶமன விதௌ⁴ ப³த்³த⁴ தீ³க்ஷஸ்ய விஷ்ணோ:
ஆசக்²யுஸ்த்வாம் ப்ரிய ஸஹசரிமைகமத்யோபபன்நாம் ।
ப்ராது³ர்பா⁴வைரபி ஸம தனு: ப்ராத்⁴வமன்வீயஸே த்வம்
தூ³ரோத்க்ஷிப்தைரிவ மது⁴ரதா து³க்³த⁴ராஶேஸ்தரங்கை:³ ॥ 10 ॥

த⁴த்தே ஶோபா⁴ம் ஹரி மரகதே தாவகீ மூர்திராத்³யா
தன்வீ துங்க³ ஸ்தனப⁴ர நதா தப்த ஜாம்பூ³னதா³பா⁴ ।
யஸ்யாம் க³ச்ச²ந்த்யுத³ய விலயைர்னித்யமானந்த³ ஸிந்தௌ⁴
இச்சா² வேகோ³ல்லஸித லஹரீ விப்⁴ரமம் வ்யக்தயஸ்தே ॥ 11 ॥

ஆஸம்ஸாரம் விததமகி²லம் வாங்மயம் யத்³விபூ⁴தி:
யத்³ ப்⁴ரூ ப⁴ங்கா³த் குஸும த⁴னுஷ: கிங்கரோ மேரு த⁴ன்வா ।
யஸ்யாம் நித்யம் நயன ஶதகைரேக லக்ஷ்யோ மஹேந்த்³ர:
பத்³மே தாஸாம் பரிணதிரஸௌ பா⁴வ லேஶைஸ்த்வதீ³யை: ॥ 12 ॥

அக்³ரே ப⁴ர்து: ஸரஸிஜ மயே ப⁴த்³ர பீடே² நிஷண்ணாம்
அம்போ⁴ ராஶேரதி⁴க³த ஸுதா⁴ ஸம்ப்லவாது³த்தி²தாம் த்வாம் ।
புஷ்பாஸார ஸ்த²கி³த பு⁴வனை: புஷ்கலாவர்தகாத்³யை:
க்லுʼப்தாரம்பா:⁴ கனக கலஶைரப்⁴யஷிஞ்சன் க³ஜேந்த்³ரா: ॥ 13 ॥

ஆலோக்ய த்வாமம்ருʼத ஸஹஜே விஷ்ணு வக்ஷ:ஸ்த²லஸ்தா²ம்
ஶாபாக்ராந்தா: ஶரணமக³மன் ஸாவரோதா:⁴ ஸுரேந்த்³ரா: ।
லப்³த்⁴வா பூ⁴யஸ்த்ரிபு⁴வனமித³ம் லக்ஷிதம் த்வத்கடாக்ஷை:
ஸர்வாகார ஸ்தி²ர ஸமுத³யாம் ஸம்பத³ம் நிர்விஶந்தி ॥ 14 ॥

ஆர்த த்ராண வ்ரதிபி⁴ரம்ருʼதாஸார நீலாம்பு³வாஹை:
அம்போ⁴ஜாநாமுஷஸி மிஷதாமந்தரங்கை³ரபாங்கை:³ ।
யஸ்யாம் யஸ்யாம் தி³ஶி விஹரதே தே³வி த்³ருʼஷ்டிஸ்த்வதீ³யா
தஸ்யாம் தஸ்யாமஹமஹமிகாம் தன்வதே ஸம்பதோ³கா:⁴ ॥ 15 ॥

யோகா³ரம்ப⁴ த்வரித மனஸோ யுஷ்மதை³காந்த்ய யுக்தம்
த⁴ர்மம் ப்ராப்தும் ப்ரத²மமிஹ யே தா⁴ரயந்தே த⁴னாயாம் ।
தேஷாம் பூ⁴மேர்த⁴னபதிக்³ருʼஹாத³ம்ப³ராத³ம்பு³தே⁴ர்வா
தா⁴ரா நிர்யாந்த்யதி⁴கமதி⁴கம் வாஞ்சி²தாநாம் வஸூநாம் ॥ 16 ॥

ஶ்ரேயஸ்காமா: கமலனிலயே சித்ரமாம்னாய வாசாம்
சூடா³பீட³ம் தவ பத³ யுக³ம் சேதஸா தா⁴ரயந்த: ।
ச²த்ர ச்சா²யா ஸுப⁴க³ ஶிரஸஶ்சாமர ஸ்மேர பார்ஶ்வா:
ஶ்லாகா⁴ஶப்³த³ ஶ்ரவண முதி³தா: ஸ்ரக்³விண: ஸஞ்சரந்தி ॥ 17 ॥

ஊரீகர்தும் குஶலமகி²லம் ஜேதுமாதீ³னராதீன்
தூ³ரீகர்தும் து³ரித நிவஹம் த்யக்துமாத்³யாமவித்³யாம் ।
அம்ப³ ஸ்தம்பா³வதி⁴க ஜனன க்³ராம ஸீமாந்த ரேகா²ம்
ஆலம்ப³ந்தே விமல மனஸோ விஷ்ணு காந்தே த³யாம் தே ॥ 18 ॥

ஜாதாகாங்க்ஷா ஜனனி யுவயோரேக ஸேவாதி⁴காரே
மாயாலீட⁴ம் விப⁴வமகி²லம் மன்யமானாஸ்த்ருʼணாய ।
ப்ரீத்யை விஷ்ணோஸ்தவ ச க்ருʼதின: ப்ரீதிமந்தோ ப⁴ஜந்தே
வேலாப⁴ங்க:³ ப்ரஶமன ப²லம் வைதி³கம் த⁴ர்மஸேதும் ॥ 19 ॥

ஸேவே தே³வி த்ரித³ஶ மஹிலா மௌலி மாலார்சிதம் தே
ஸித்³தி⁴ க்ஷேத்ரம் ஶமித விபதா³ம் ஸம்பதா³ம் பாத³ பத்³மம் ।
யஸ்மின்னீஷன்னமித ஶிரஸோ யாபயித்வா ஶரீரம்
வர்திஷ்யந்தே விதமஸி பதே³ வாஸுதே³வஸ்ய த⁴ன்யா: ॥ 20 ॥

ஸானுப்ராஸ ப்ரகடித த³யை: ஸாந்த்³ர வாத்ஸல்ய தி³க்³தை:⁴
அம்ப³ ஸ்னிக்³தை⁴ரம்ருʼத லஹரீ லப்³த⁴ ஸப்³ரஹ்யசர்யஈ: ।
த⁴ர்மே தாப த்ர ய விரசிதே கா³ட⁴ தப்தம் க்ஷணம் மாம்
ஆகிஞ்சன்ய க்³லபிதமனகை⁴ரார்த்³ரயேதா:² கடாக்ஷை: ॥ 21 ॥

ஸம்பத்³யந்தே ப⁴வ ப⁴ய தமீ பா⁴னவஸ்த்வத்ப்ரஸாதா³த்
பா⁴வா: ஸர்வே ப⁴க³வதி ஹரௌ ப⁴க்திமுத்³வேலயந்த: ।
யாசே கிம் த்வாமஹமிஹ யத: ஶீதலோதா³ர ஶீலா
பூ⁴யோ பூ⁴யோ தி³ஶஸி மஹதாம் மங்க³லாநாம் ப்ரப³ந்தா⁴ன் ॥ 22 ॥

மாதா தே³வி த்வமஸி ப⁴க³வான் வாஸுதே³வ: பிதா மே
ஜாத: ஸோऽஹம் ஜனனி யுவயோரேகலக்ஷ்யம் த³யாயா: ।
த³த்தோ யுஷ்மத்பரிஜனதயா தே³ஶிகைரப்யதஸ்த்வம்
கிம் தே பூ⁴ய: ப்ரியமிதி கில ஸ்மேர வக்த்ரா விபா⁴ஸி ॥ 23 ॥

கல்யாணாநாமவிகல நிதி:⁴ காऽபி காருண்ய ஸீமா
நித்யாமோதா³ நிக³ம வசஸாம் மௌலி மந்தா³ர மாலா ।
ஸம்பத்³தி³வ்யா மது⁴ விஜயின: ஸன்னித⁴த்தாம் ஸதா³ மே
ஸைஷா தே³வீ ஸகல பு⁴வன ப்ரார்த²னா காமதே⁴னு: ॥ 24 ॥

உபசித கு³ரு ப⁴க்தேருத்தி²தம் வேங்கடேஶாத்
கலி கலுஷ நிவ்ருʼத்த்யை கல்பமானம் ப்ரஜாநாம் ।
ஸரஸிஜ நிலயாயா: ஸ்தோத்ரமேதத் பட²ந்த:
ஸகல குஶல ஸீமா: ஸார்வபௌ⁴மா ப⁴வந்தி ॥ 25 ॥

ஶ்ரீஸ்துதி – Sri Stuthi – Youtube

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

நல்வாழ்வுக்கு சில டிப்ஸ் – 27

சுபகாரியத்தில் பணமுடை ஏற்படாதிருக்க…

Goddess lakshmiமுதலீடுகளில் லாபம் குவிக்க, வினையற்ற செல்வம் பெருக, சுப காரியத்தில் பணமுடை ஏற்படாதிருக்க வேண்டுபவர்கள் அவசியம் இந்த ஸ்ரீஸ்துதியை படிக்கவேண்டும். தினசரி படிக்க முடியாதவர்கள், வெள்ளிக்கிழமை அன்றாவது இதை படித்து வரவேண்டும்.

திருமணம், வீடு கட்டுதல் (கிரகப் பிரவேசம்) மற்றும் இதர சுபகாரியங்களை துவக்குவதற்கு முன்னர் இதை படித்துவிட்டு அந்த பணியை துவங்கினால், பொருள் தட்டுப்பாடின்றி சம்பந்தப்பட்ட சுபகாரியங்கள் நல்லபடியாக நடந்தேறும்.

வீட்டில் என்ன செய்து தரித்திரம் போகவில்லை என்று கருதுபவர்கள், வெள்ளி தோறும் வீட்டில் கோமியம் தெளித்து, சாம்பிராணி புகைபோட்டு பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு இந்த ஸ்தோத்திரத்தை படித்தால் நிச்சயம் நல்ல முன்னேற்றம் தெரியும்.

சமஸ்கிருத உச்சரிப்பை சுலபமாக பற்றிக்கொண்டு படிக்க, யூடியூப் காணொளி இணைக்கப்பட்டுள்ளது. அதை ஓடவிட்டு, அதனுடனே இந்த ஸ்ரீ ஸ்துதியை படிக்கவும். ஸ்தோத்திர வரிகளை டவுன்லோட் செய்தும் படிக்கலாம்.

To download the above sloka in pdf format:
http://rightmantra.com/wp-content/uploads/2016/02/SRI-STUTHI.pdf

டிப்ஸ் தொடரும்…

========================================================

திருப்புக்கொளியூர் (அவினாசி) மற்றும் திருமுருகன்பூண்டி தரிசனம்!

திருவருள் துணைக்கொண்டு இன்றைக்கு இரவு ஒரு நாள் பயணமாக கோவை செல்கிறோம். நாளை அவினாசி மற்றும் திருமுருகன் பூண்டி தரிசனம். புதன்கிழமை (17/02/2106) காலை சென்னை திரும்பிவிடுவோம். வேறு ஒரு பயணத் திட்டம் இருந்தது. அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வியாழன் இரவு கும்பகோணம் (மகாமகம்) பயணம். கோவை பயணம் முடித்து வந்த பின்னர் விரிவாக பேசுகிறோம்.

நன்றி!

ரைட்மந்த்ரா சுந்தர், www.rightmantra.com
M : 9840169215  | E : editor@rightmantra.com

========================================================

Also check…

திருமகளின் அருள்மழையும் பின்னே ஒளிந்திருந்த காரணமும்!

உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

பாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ !

“பணத்திற்கும் காது உண்டு”- பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 6

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

காலடியில் ஒரு வைரச் சுரங்கம் – கண்ணுக்கு தெரிகிறதா?

========================================================

[END]

6 thoughts on “பொன்மழையில் நனைந்த ஏழை பிரம்மச்சாரி – ஸ்ரீஸ்துதி புரிந்த மகிமை!

 1. ஸ்ரீ ஸ்துதி உதயமான விதம் பற்றி தெரிந்து கொண்டேன். கனகதாராவுடன் , ஸ்ரீ ஸ்துதியும் எனக்கு பிடித்த பாடலாக மாறி விட்டது. அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவுவதன் மூலம் நாம் மனநிறைவை அடையலாம். தேசிகர் மூலம் நமக்கு ஸ்ரீ ஸ்துதி கிடைத்து உள்ளது. அழகிய பதிவிற்கு நன்றி
  டிப்ஸ் அருமை.
  வாழ்க வளமுடன்
  நன்றி
  உமா வெங்கட்

 2. தங்கள் கோவை பயணமும், கும்பகோணம் பயணமும் இனிதே நடைபெற வாழ்த்துக்கள். மகா மகம் பற்றிய சிறப்பு பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
  நன்றி
  உமா வெங்கட்

 3. ‘பொன்மழையில் நனைந்த ஏழை பிரம்மச்சாரி’ – தலைப்பே மிக மிக பிரமாதம். பதிவு அதை விட பிரமாதம். ஓவியம் அதையும்விட பிரமாதம்.

  வெறும் பதிவோடு நிறுத்திக்கொள்ளாமல், ஸ்ரீஸ்துதி ஸ்லோகத்தையும் கூடவே அதன் ஆடியோவையும் யூட்யூபில் அளித்தமைக்கு நன்றிகள்.

  எங்களைப் போன்று சமஸ்கிருத உச்சரிப்புக்கு சிரம்மப்படுபவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

  அடுத்த அத்தியாயத்தை காண ஆவலோடு காத்திருக்கிறோம்.

  – பிரேமலதா மணிகண்டன்,
  மேட்டூர்

 4. வணக்கம் சுந்தர் சார்

  அனைத்து பதிவுகளும் அருமை

  அடுத்த பதிவு மிகவும் எதிர்பார்த்து இருக்கிறன்

  நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *