Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வழிபாடு

அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வழிபாடு

print
சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வரும் ‘அண்ணாமலை ஆன்மீக வழிபாட்டு குழு’வினர் பல வியத்தகு ஆன்மிக பணிகளை ஆற்றி வருவது அறிந்ததே. ஆண்டு தோறும் நடைபெறும் சிறுவாபுரி வள்ளி மணவாளப் பெருமான் திருக்கல்யாண உற்சவம், பழனி தைப்பூச அன்னதானம் இவர்களது ஆன்மீக பணிகளில் முக்கியமானவை. அது தவிர கல்விப் பணியும் ஆற்றிவருகின்றனர். கல்விப் பணியின்றி ஆன்மீக பணி நிறைவு பெறாது. அந்தவகையில் இக்குழுவினரின் பணி மிகவும் அவசியமான ஒன்று.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதியில் 10 ஆம் வகுப்பு மற்று 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சைதையில் உள்ள காரணீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு, பூஜை இவர்களால் நடத்தப்படுகிறது.

Banner 10 x 8 copy

சான்றோர்களும், அறிஞர் பெருமக்களும், சாதனையாளர்களும் மேற்படி பூஜையில் பங்கேற்று, மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் ஊட்டி, தேர்வு குறித்த அவர்கள் பயத்தை போக்கி, அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுகின்றனர்.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் காலகட்டம் மாணவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டம் எனலாம். எல்.கே.ஜி. யு.கே.ஜி. முதல் பிள்ளைகள் நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்தாலும் – நமது கல்விமுறையில் – இந்த இரண்டு தேர்வுகளை அவர்கள் கடக்கும் விதம் தான் அவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

karaneeswarar prayer

நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் கூட சில சமயம் இந்த தேர்வு என்று வந்தால் திணறிவிடுவார்கள். உளவியல் ரீதியாக இதற்கு பல காரணங்கள் உண்டு. எனவே மாணவர்களை இந்த தேர்வுக்கு தயார் படுத்துதல் மிக மிக அவசியம். அதற்கு உறுதுணையாய் இருப்பது தான் சிறப்பு கூட்டு வழிபாடு.

இது, ஏதோ மந்திரத்தில் மார்க்குகள் வரவழைக்கும் யுக்தியோ கடவுளை காக்காய் பிடிக்கும் விஷயமோ அல்ல. மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தாங்களே தயார் படுத்திக்கொண்டு சிறப்பான முறையில் கேள்வித் தாளை எதிர்கொள்ள உதவி செய்யும் ஒரு நிகழ்ச்சி.

karaneeswarar prayer 2

10th 12th students prayerSSLC +2 students prayer 1SSLC +2 students prayer 2SSLC +2 students prayer 3இதன் மூலம் தோல்வியடைக்கூடிய மாணவர்கள் தேர்ச்சியடைவதும், சுமாரான மதிப்பென்கள எடுக்கக்கூடிய மாணவர்கள நல்ல மதிப்பெண்கள் எடுப்பதும், 80% மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய மாணவர்கள் 90-95% அதற்கும் மேல் எடுப்பதும் சாத்தியப்படும்.

இந்த சிறப்பு வழிபாட்டின் போது மாணவர்களுக்கு யோகா பயிற்சியும் வழங்கப்படுகிறது. முந்தைய ஆண்டு பூஜையில் கலந்து கொண்டு தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து குத்து விளக்கேற்றப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க சிவபுராணம் உள்ளிட்ட பாடல்கள் சிறப்பு அழைப்பாளர்களால் மேடையில் பாடப்படும். ஸ்லோகங்களை மானவர்கள திரும்ப உச்சரிக்கவேண்டும்.

student notice copy

To download the above image:
http://rightmantra.com/wp-content/uploads/2016/02/student-notice-copy.jpg

தொடர்ந்து பூஜையில் வைத்து மந்திரிக்கப்பட்ட காப்பு கயிறுகள் அனைவருக்கும் வழங்கப்படும். தவிர தேர்வை சிறப்பான முறையில் எழுத ஸ்டேஷனரி பொருட்களும் வழங்கப்படும்.

இந்த சிறப்பு வழிபாட்டில் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறவேண்டும்.

முன்பதிவு அவசியம்!

இதற்கான முன்பதிவு வரும் ஞாயிறு 14/02/2016 மதியம் 3.00 முதல் 7.00 மணிவரை காரணீஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ளது. முன்பதிவு செய்பவர்களே பூஜையில் கலந்துகொள்ள முடியும் என்பதால் நமது வாசகர்களின் பிள்ளைகள் யாரேனும் மேற்படி 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதுபவர்கள் இருந்தால் அவசியம் இதில் கலந்துகொண்டு பயன்பெறவும்.

* கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக் குழுவினர் சார்பாக காலை சிற்றுண்டியும் மதிய உணவும் வழங்கப்படும்.

Students Notice back copy

To download the above image:
http://rightmantra.com/wp-content/uploads/2016/02/Students-Notice-back-copy.jpg

இப்பணியில் பங்கேற்று சேவை செய்ய விரும்புபவர்கள் மற்றும் உதவிட விரும்புகிறவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக் குழு :- 9944309719, 9842198889

==================================================

Also check :

உங்கள் பிள்ளை நன்றாக தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களை பெற…!

பிள்ளைகளின் படிப்பை பற்றி இனி கவலைப்படவேண்டாம் – கலைமகளார் திருப்பதிகம்

==================================================

[END]

3 thoughts on “அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வழிபாடு

  1. மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சி உண்மையில் வரப்பிரசாதம். இது போன்ற பூஜைகள், நிகழ்சிகளில் பங்கேற்பதன் மூலம் அவர்கள் சிறப்பான முறையில் தேர்வை எதிர்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

    நீங்கள் கூறுவது போல கல்விப் பணி இன்றி ஆன்மீகப் பணி முழுமை பெறாது. அந்த வகையில், அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழுவினரின் கல்விப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    – பிரேமலதா மணிகண்டன்
    மேட்டூர்

  2. 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யும் அண்ணாமலை ஆன்மிக வழிபாட்டு குழுவிற்கு வாழ்த்துக்கள். மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள் .
    வாழ்க வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

  3. நிச்சயம் இது நல்ல முயற்சி. பிள்ளைகளுக்கு ஆன்மிக பற்று வர இதுவும் துணை செய்யும்.
    அவர்களது தன்னம்பிக்கையை அதிக படுத்தும். இதனை செம்மையுற செய்து வரும் அன்பர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள். இனினகழ்வினை அனைவர்க்கும் தெரிய வைத்தமைக்கு சுந்தர் சார் அவர்களுக்கும் நன்றிகள்.

    மாலதி கோடம்பாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *