கடிதத்தை படித்தபோது நமக்குள் எழுந்த அந்த இனம்புரியாத ஒரு உணர்வே நம் தளத்திலும் அதை பகிர தூண்டியது. நம் வாசகர்களுக்காக அதை தமிழில் மொழி பெயர்த்து தந்திருக்கிறோம். (ஒரிஜினல் ஆங்கில எழுத்துரு தனியே தரப்பட்டுள்ளது!)
தீபிகா படுகோனேவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கோ அது குறித்த சர்சைகளுக்கோ நாம் போகத் தேவையில்லை. அது நமக்கு தேவையுமில்லை. நமக்கு ஏற்புடைய நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதை நமது வாழ்க்கை சிறக்க பயன்படுத்திக்கொள்ளவேண்டும். புத்திசாலிகள் அதைத் தான் செய்வார்கள்!
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு!
உலகப் பொதுமறையே சொல்லியிருக்கு… அப்புறம் என்ன? கடிதம் யார், யாருக்கு எழுதினார்கள், அவர்கள் தகுதி என்ன, என்றெல்லாம் ஆராயாமல் அதன் மெய்பொருளை காண்போம். நன்றி!!
(* தீபிகாவின் தந்தை திரு.பிரகாஷ் படுகோனே ஓய்வுபெற்ற பிரபல பேட்மிண்டன் வீரர் ஆவார்.)
**********************************************************
ஒரு அப்பாவும் மகளின் மாடலிங் கனவும்!
என் அருமை செல்வங்கள் தீபிகா, அனீஷா…
வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு அடியெடுத்து வைக்க நீங்கள் காத்திருக்கும் இந்த தருணத்தில் வாழ்க்கை எனக்கு போதித்த சில விஷயங்களை நான் உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
பல வருடங்களுக்கு முன்பு, பெங்களூரில் நான் இளைஞனாக வளர்ந்து வரும் காலகட்டங்களில் பேட்மிண்டன் தான் எனது காதலாக இருந்து வந்தது. இப்போதுள்ளது போல அப்போதெல்லாம் விளையாட, பயிற்சி செய்ய பேட்மிண்டன் ஸ்டேடியமோ டென்னிஸ் கோர்ட்டுகளோ கிடையாது. நம் பகுதியில் இருந்த கனரா வங்கிக்கு சொந்தமான ஒரு வெட்டிங் ஹால் தான் எங்களுக்கு அப்போதெல்லாம் பேட்மிண்டன் கோர்ட். அங்கு தான் இந்த விளையாட்டின் நுணுக்கங்களையெல்லாம் கற்றுகொண்டேன்.
ஒவ்வொரு நாளும் அங்கு ஏதாவது நிகழ்ச்சி நடக்கிறதா என்று ஏக்கத்துடன் ஆவலுடன் நாங்கள் பார்ப்போம். நிகழ்ச்சி எதுவும் இல்லை என்றால் பள்ளி முடிந்த பிறகு எங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாட அங்கு சென்றுவிடுவோம்.
திரும்பிப் பார்க்கும்போது ஒன்று புரிகிறது. என் இளமைப் பருவத்தில் முக்கியமான விஷயம் எது தெரியுமா? வாழ்க்கையில் குறைபட்டுக்கொள்ள, குறைகூற எவ்வளவோ விஷயங்கள் இருந்தும் நாங்கள் எது குறித்தும் குறை கூறியதில்லை. அலுத்துகொண்டதுமில்லை.
ஒவ்வொரு வாரமும் எங்களுக்கு பிடித்த விளையாட்டை சில மணிநேரங்கள் மகிழ்ச்சியுடன் விளையாட கிடைத்த அந்த தருணங்களே எங்களுக்கு போதுமானதாக இருந்தது. அதுவே எங்களுக்கு திருப்தியும் அளித்தது.
சொல்லப்போனால் என்னுடைய வாழ்க்கையிலும் தொழிலிலும் (CAREER) நான் அமைத்துக்கொண்ட அடித்தளமே இந்த ‘குறைகூறாமை’ தான்.
இதைத் தான் என் குழந்தைகளான உங்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்வதற்காக நீங்கள் காட்டும் உழைப்பு, விடாமுயற்சி, மனவுறுதி, அதீத ஆர்வம் இவற்றுக்கு ஈடு இணை எதுவுமில்லை. நீங்கள் செய்வதை விரும்பி மனமுவந்து செய்து வந்தால் மற்ற எதுவுமே ஒரு பொருட்டல்ல. விருதோ, பாராட்டோ பதக்கமோ இவை எதுவுமே ஒரு பொருட்டல்ல. அவ்வளவு ஏன்… உங்கள் புகைப்படத்தை பத்திரிக்கைகளிலோ, தொலைக்காட்சியிலோ பார்க்கும்போது கிடைக்கும் அந்த மனநிறைவு கூட ஒரு விஷயமல்ல.
நான் ‘அனைத்து இங்கிலாந்து சாம்பியன்’ பட்டத்தை வென்றபோது, பேட்மிண்டன் போட்டி பரிசுத் தொகையானது கணிசமாக உயர்ந்திருந்தது. 3000 பவுண்டுகள். அப்போதெல்லாம 3000 பவுண்டுகள் என்பது மிகப் பெரிய தொகை. ஆனால் அவ்வளவு பெரிய பரிசுத் தொகை இந்தியாவை அந்த போட்டியில் உலக அரங்கில் இடம்பெறச் செய்த அந்த பெருமிதத்துக்கு ஈடாகவில்லை.
தீபிகா, உனக்கு பதினெட்டு வயதாகும்போது மாடலிங் துறையில் ஈடுபட விரும்புவதாக கூறி நீ மும்பை செல்ல விழைந்தபோது அதற்கு ஒப்புக்கொள்ள எனக்கு முதலில் தயக்கமாக இருந்தது. காரணம் நீ அப்போது மிகச் சிறிய பெண், தனியாக இருக்க உனக்கு போதிய உலக அனுபவமில்லை. மாடலிங் துறை வேறு உனக்கு புதியது. எல்லாவற்றுக்கும் மேல் மும்பையோ அறிமுகம் இல்லாத நகரம். ஆனால் தனக்கு மிகவும் பிடித்த தான் பயணம் செய்ய ஏங்கிய ஒரு பாதையில் மகள் செல்ல நினைப்பதை தடுப்பது தவறு என்பதால் நானும் உன் அம்மாவும் இறுதியில் ஒப்புக்கொண்டோம். நீ ஜெயித்தால் மிகவும் சந்தோஷப்படுவோம். ஒருவேளை தோற்றால் நாம் முயற்சியே செய்யவில்லையே என்கிற வருத்தம் உனக்கு எதுவும் இருக்காது அல்லவா?
நான் கற்றுக்கொண்ட இன்னொரு முக்கிய விஷயம் ‘வாழ்க்கையில் நாம் எல்லா சந்தர்ப்பத்திலும் ஜெயிக்க முடியாது, நாம் விரும்புவது அனைத்தும் நமக்கு கிடைத்துவிடாது, நாம் நினைப்பது எல்லாம் நடந்துவிடாது’ என்பது தான்.
எதையாவது பெறவேண்டும் என்றால் எதையாவது இழக்கவேண்டும். நாம் ஏற்றுகொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இது தான் வாழ்க்கையின் அடிப்படை விதி. வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை அனுசரிக்க பழகிக்கொள்ளவேண்டும். நான் விளையாட்டில் வெற்றி பெற எடுத்துக்கொண்ட அந்த முயற்சி – ஆரம்பம் முதல் நான் பேட்மிண்டன் விளையாட்டிலிருந்து ஒய்வு பெறும் வரை – மாறவேயில்லை.
மிகக் கடினமான காலகட்டங்களில் கூட நான் என்னிடம் இருப்பவற்றுக்கு நன்றி சொன்னேனே தவிர இல்லாததை நினைத்து கவலைப்படவில்லை. பெருமூச்சு விடவில்லை. மிக மிக மோசமான சூழ்நிலைகளில் கூட நமக்கு சாதகமாக என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்க பழகிக்கொண்டு என்னுடைய கேரீரில் நான் கவனம் செலுத்தினேனே தவிர சோர்ந்து உட்கார்ந்துவிடவில்லை.
“உங்களது வாழ்க்கைப் பயணத்தில் நாங்கள் உங்களை வழிநடத்துவோம் என்று காத்திருக்காமல் நீங்களாகவே வழி ஏற்படுத்திக்கொண்டு பயணம் செய்யவேண்டும்…” என்று நான் அடிக்கடி சொல்வேனே ஞாபகமிருக்கிறதா?
குழந்தைகள் தங்கள் கனவுக்காக தாங்கள் உழைக்க வேண்டுமே தவிர பெற்றோர்கள் அதற்கு உழைக்ககூடாது. தங்களிடம் கொடுக்கப்படும் மண்ணைக்கொண்டு தாங்கள் விரும்பிய பொம்மையை குழந்தைகளே செய்யவேண்டும். பெற்றோர் தாங்கள் விரும்பும் பொம்மையை அல்ல.
நீங்கள் இங்கே நம் வீட்டுக்கு வரும்போதெல்லாம் நீங்களே உங்கள் படுக்கையை தயார் செய்யவேண்டும், சாப்பிட்ட பின்பு டேபிளை சுத்தம் செய்யவேண்டும், நீங்களே உங்கள் வேலையை செய்துகொள்ளவேண்டும்… விருந்தினர் யாராவது வந்திருந்தால் தரையில் படுத்துக்கொள்ளவேண்டும்… ஒரு போதும் உங்களை நாங்கள் ஒரு சினிமா நட்சத்திரம் போன்று நடத்தியதில்லை. ஏன் தெரியுமா? முதலில் நீங்கள் எனக்கு பிள்ளைகள். அதன் பிறகு தான் சினிமா நட்சத்திரங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை பின்தொடரும் கேமிராவும், ஃபோகஸ் லைட்டுகளும் ஒரு காலகட்டத்தில் மறைந்து போய்விடும். ஆனால், யதார்த்தமும் நிஜமுமே எஞ்சி நிற்கும். அந்த உலகில் வாழ நீங்கள் இப்போதிலிருந்தே பழகிக்கொள்ளவேண்டும்.
ஒரு களத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தாலும் மிகப் பெரிய மாற்றம் ஒன்றை நீங்கள் ஏற்படுத்தவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு உங்களிடம் ஏற்படும்போது, அதை செய்யக்கூடிய வல்லமை உங்களுக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களை சுற்றி நேர்மறை அலைகளையே ஏற்படுத்தவேண்டும். (Strive to generate positivity around you).
பணமே பிரதானம் என்றிருக்கும் ஒரு துறையில் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் எதைச் செய்தாலும் அதை உங்களால் இயன்றளவு சிறப்பாக செய்வதே பணத்தை விட முக்கியமான ஒன்று என்று நான் நம்புகிறேன்.
உறவுகள், நேர்மை மற்றும் உங்கள் பெற்றோர் மீதான மரியாதை இவை தான் வாழ்க்கையில் பிரதானமாக இருக்கவேண்டும்.
பொருளீட்டுவது வாழ்க்கையில் முக்கியமான தேவையான ஒன்று தான். ஆனால் அது ஒன்று மட்டுமே போதும் மகிழ்ச்சியான மனநிறைவான முழுமையான வாழ்க்கைக்கு போதும் என்று நினைத்துவிடக்கூடாது.
பிரார்த்தனையும் கடவுள் மீது நாம் கொள்ளும் ஒரு சிறு நம்பிக்கையும் எந்தளவு முக்கியம் என்பதை நான் சொல்ல தேவையில்லை. ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் கண்களை மூடி தியானிக்கவும், கடவுளை பற்றி நினைக்கவும் நேரம் ஒதுக்குங்கள். அது எந்தளவு உங்களை பலப்படுத்தும், பக்குவப்படுத்தும் என்பதை பிறகு பாருங்கள்.
கடைசியாக நான் சொல்ல விரும்புவது ஒன்று தான்… உன் தொழில் உனக்கு பின்னால் இருக்கும்போது, உன்னிடம் மீதி இருப்பது யார் தெரியுமா ? நீ சம்பாதித்த உன் குடும்பமும் உன் நண்பர்களும் தான்.
உன் மனசாட்சிப்படி வாழ உன்னை அனுமதிக்கும் வாழ்க்கையையே நீ வாழவேண்டும். மற்ற அனைத்தும் நிலையற்றது. அழியக்கூடியது.
ஆனால் ஒன்று என்ன ஆனாலும் சரி… நாங்கள் உன் பின்னே எப்போதும் எந்த சூழ்நிலையிலும் இருப்போம். ‘
அன்புடன்,
அப்பா
=======================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
========================================================
Original English transcript :
Here’s the inspiring letter, from her father, that Deepika Padukone read at the 61st Filmfare Awards:
Dear Deepika & Anisha,
As you stand on the threshold of life’s journey, I want to share with you some lessons that life has taught me.
Decades ago, as a little boy growing up in Bangalore, I started my tryst with badminton. In those days, there were no stadiums and courts where sports people could train. Our badminton court was the wedding hall of the Canara Union Bank near our house, and it was there that I learned everything about the game. Every day, we would wait to see if there was a function in the hall, and if there was none, we would rush there after school to play to our hearts’ content.
Looking back, I realise that the most important thing about my childhood and adolescent years was my refusal to complain about a lot in life. I was thankful for the few hours a week we had the opportunity to hit the shuttle back and forth. In fact, the foundation on which I based my career and my life was the refusal to whinge or whine about anything. And that is what I want to tell you my children, that there is no substitute for perseverance, hardwork, determination and passion for what you choose to do. If you love what you do, nothing else matters — neither awards nor compensation, not even the gratification of seeing your face in newspapers or television.
When I won the All England Championship, the prize money in badminton became significant — £3,000 — a huge amount in those days. But that did not distract me from the sheer joy of having been instrumental in putting India on the global map of this game. Deepika, at eighteen, when you told us that you wanted to shift to Mumbai for a career in modeling, we felt you were too young and too inexperienced to be alone in a big city and in an industry we knew nothing about. In the end, we decided to let you follow your heart and thought it would be cruel to not give our child the opportunity to go after a dream that she lived and breathed for. If you succeeded, it would make us proud, but even if you didn’t, you would not have any regrets that you did not try.
Deepika, I have learned that you can’t always win in life, that everything you want might not come your way. That events don’t always turn out as you want them to. To win some, you have to lose some. You have to learn to take life’s ups and downs in your stride. The amount of effort that I put in my game never varied from the first day till my retirement. Even during my toughest times, I focused on what I had, instead of dwelling on what I did not. I had the ability to make the best of the worst circumstances and remain steadfast to my goal.
Remember how I constantly tell you both about the importance of making your way up in the world without waiting for your parents to pull strings? I believe it is best for children to work hard to make their dreams come true and to not have things handed to them on a platter.
When you are home visiting us, Deepika, you make your own bed, clear the table after meals, and sleep on the floor if there are guests at home.
If you occasionally wonder why we refuse to treat you like a star, it is because you are our daughter first and a film star later. The cameras that follow you everywhere and the arc lights will eventually fade and what will remain is the real world.
Strive to generate positivity around you even though you are too new and too small a player to effect a big change. You are in an industry where there’s always going to be big money, but I believe that it is important to try to be the best in whatever you do regardless of the money.
The things that really matter in life are relationships, honesty, respect for your parents and elders. Material success is important, not fundamental to happiness and peace of mind.
I can’t tell you enough about the rejuvenating power of prayers and a little faith. Spare a few minutes of your day to close your eyes and meditate, to think about God and you will see how much faith in His power will strengthen you.
In the end, when your career is behind you, what remains is family, the friends that you have made. Live a life that is healthy and one that will allow you to live with your own conscience. Everything else is transient. And remember, no matter what, we are always going to be there for you.
Lovingly,
Pappa
=======================================================
Also check :
ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?
கார்பரேட் அடிமைக்கு கிடைத்த ‘பளார்’ – ஒரு உண்மை சம்பவம்!
“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!
“தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!
உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?
‘வாழ்க்கைத் துணை’ (LIFE PARTNER) என்றால் என்ன?
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
=======================================================
[END]
மிகவும் அருமையாக இருக்கிறது. எல்லாருக்கும் இந்த கடிதம் பேருந்தும். நன்றி
Dear SundarJI,
Very impressive letter.. thanks for sharing to us and translating it…
Thanks,
Rgds,
Ramesh
இந்த கடிதம் வாழ்க்கையில் எல்லோருக்கும் பயன் படக் கூடிய அற்புத கடிதம். தங்களது தமிழாக்கம் அருமை. ஷேர் பண்ணியதற்கு நன்றி. இந்த கடிதம் படிக்கும் பொழுது விவேகானந்தர் தனது சீடர்களுக்கு எழுதிய கடிதங்கள் என் நினைவில் வந்து சென்றது மிகவும் உத்வேகமாக உள்ளது இந்த பதிவு . நம் வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
வாழ்க .. வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
எல்லோருக்கும் பயன்படும் கடிதம் என்றாலும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர்க்கு எல்லா பெற்றோர்களும் சொல்ல நினைக்கும் கருத்துகளை தாங்கி நிற்கும் பதிவை பகிர்ந்ததுக்கு நன்றி.
பல நல்ல விஷயங்களை நாளும் இத் தலத்தில் வெளியிடும் தங்களுக்கு என் வாழ்த்துகளையும் பாராடுகளையும் கூறி கொள்ள கடமை பட்டிருக்கிறேன்.
உங்கள் சேவை நாளும் வாழ்க, வளர்க….
கவிதா கிருஷ்ணா
நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.