Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, July 19, 2024
Please specify the group
Home > Featured > “இந்த காளைகள் இத்தனை அழகாக வசீகரத்துடன் இருக்கின்றனவே என்ன காரணம்?”

“இந்த காளைகள் இத்தனை அழகாக வசீகரத்துடன் இருக்கின்றனவே என்ன காரணம்?”

print
ந்த பதிவு நம் வாசகர்களுக்கு எதிர்பாராத ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம். காரணம், இன்று காலை நாம் அளிக்க நினைத்த பதிவு இதுவல்ல. வேறு ஒன்று. ஆனால், இறைவனின் திருவுள்ளம் இதுவென்று இருக்கும்போது… அது தானே நடக்கும்.

ன்று காலை வழக்கம் போல அலுவகலம் வரும்போது சுமார் 9.30 am அளவில், ஆர்யகௌடா சாலையில் அயோத்தியா மண்டபம் அருகில் இந்த மாட்டு வண்டியை பார்த்தோம்.

Hare Krishna Bullock Cart 1

Hare Krishna Bullock Cart 2வித்தியாசமான தோற்றத்துடன் காணப்பட்ட இந்த மாடுகளை பார்த்தவுடனேயே நம்மையுமறியாமல் கைகள் மேலெழும்பி வணங்கிட துடிக்கும் ஒரு ஆண்மை. சுமப்பது அந்த கிருஷ்ணரையும் பலராமரையும் அல்லவா?

இஸ்கான் சார்பாக அகில பாரத ஹரி நாம சங்கீர்த்தன பாதயாத்திரை 32 வது வருடமாக நடைபெற்றுவருகிறது. 1984 முதல் இந்த ஹரி நாம சங்கீர்த்தன பாதயாத்திரையானது பாரத தேசம் முழுவதையும் ஐந்து முறை வலம் வந்து தற்போது 6 வது முறையாக தமிழகம் வந்திருக்கிறது. இந்த ரதம் துவாரகையில் துவங்கி, குருஷேத்ரம், ஹரித்வார், பத்ரிநாத், மதுரா, பிருந்தாவனம், மாயாப்பூர், பூரி, திருமலை, ஸ்ரீரங்கம் ஆகிய ஷேத்ரங்கள் வழியாக வலம் வருகிறது. தற்போது சென்னை வந்துள்ளது.

Hare Krishna Bullock Cart 4

Hare Krishna Bullock Cart 3Hare Krishna Bullock Cart 8

முன்னே ஸ்ரீஹரி பிரபுபாதா நிஜத்தில் உட்கார்ந்திருப்பது போன்றே அச்சு அசலாக அவரது திருவுருவச்சிலை. பின்னே ரதத்தில் இருப்பவர்கள் கௌரங்கா என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு மற்றும் அவரது நண்பரும் சீடருமான ஸ்ரீ நித்யானந்த மகாபிரபு. இவர்கள் கிருஷ்ணர் மற்றும் பலராமரின் மறுபிறப்பு என்று சொல்லப்படுகிறது. மாடுகளுக்கு தேவையான வைக்கோலுடன் பின்னே இன்னொரு ஜோடி மாடுகளுடன் வண்டி ஒன்று.

நாம் நமது பைக்கை ஓரம்கட்டி அவசர அவசரமாக காமிராவை எடுத்து புகைப்படமெடுத்தோம்.

Hare Krishna Bullock Cart 5

ரதத்தில் இருப்பவர்களிடம் இது குறித்து விசாரிக்கலாம் என்றால், அவர்களுக்கு ஹிந்தியை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. ஹிந்தி தெரியாமல் போனதற்கு நாம் வருத்தப்பட்ட தருணங்களுள் ஒன்று.

போவோர் வருவோர் எல்லாம், அந்த வாகனத்தை பார்த்து பரவசமாகி, பாண்டுரங்க-ருக்மிணியை வணங்கிவிட்டு, அந்த ரிஷபங்களை தொட்டுக் கும்பிட, நாம் தீர்த்தப் பிரசாதம் பெற்றுக்கொண்டு வண்டியை ஒரு முறை வலம் வந்து, பின்னர் நெடுஞ்சாண்கிடையாக சாலையில் அந்த வண்டி முன் விழுந்து வணங்கினோம். “ஹப்பா…. இத்தோடு நான் செய்த பாவங்கள் அனைத்தும் தொலைந்தன!” – நிம்மதி பெருமூச்சு விட்டோம்.

எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தனவோ, உலகை சுமக்கும் அந்த ஸ்ரீஹரியையும் ருக்மிணி தேவியையும் இந்த தேசம் முழுக்க சுமந்து இழுத்து வரும் பாக்கியம் பெற்ற காளைகள் அல்லவா அவை…!

Hare Krishna Bullock Cart 9

Hare Krishna Bullock Cart 10(இவை மாடுகள் என்றா நினைக்கிறீர்கள்? நிச்சயம் இருக்கமுடியாது. கண்ணனை சுமக்கும் பேற்றை பெற ஸ்ரீஹரியின் அடியார்களே இப்படி மாடுகள் ரூபத்தில் வந்திருக்கிறார்கள்!)

வேறு விபரங்கள் எதையும் பெறமுடியவில்லை. அந்த ரதத்தில் இருந்த இஸ்க்கான் பயிற்சி பற்றிய நோட்டீஸை மட்டும் கேட்டு வாங்கிக்கொண்டு வந்தோம். அதிலிருந்து எண்களில் ஒன்றை தொடர்புகொண்டு விசாரித்தோம்.

Hare Krishna Bullock Cart 11
காளைகளை வணங்கும் இளைஞர்…

Hare Krishna Bullock Cart 7அவர்கள் தங்களுக்கு தெரிந்த விபரத்தை சொன்னார்கள். அப்போது கேட்டோம்…

“இந்த காளைகள் இத்தனை அழகாக வசீகரத்துடன் இருக்கின்றனவே… இவை என்ன ரகம்? என்ன காரணம்?”

“இருக்காதா பின்னே.. ஹரிநாம சங்கீர்த்தனத்தை கேட்டபடியே இருப்பதால் அவற்றுக்கு அந்த கம்பீரமும் அழகும் இயற்கையாகவே வந்திருக்கின்றன!” என்றார்.

உண்மை தான்!

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
‘நாராயணா’ என்னும் நாமம்!

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also check…

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சிறப்பும் பிரமிக்க வைக்கும் பாராயண பலன்களும்!

நாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமையும்!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும் மகா பெரியவாவும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!

நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

குன்றத்தூர் கோவிந்தனின் கதை!

=========================================================

திருமால் திருவிளையாடல் தொடர்

ஆச்சார அனுஷ்டானம், பக்தி – எது பிரதானம் ? – திருமால் திருவிளையாடல் (4)

ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)

பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)

விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)

==========================================================

[END]

3 thoughts on ““இந்த காளைகள் இத்தனை அழகாக வசீகரத்துடன் இருக்கின்றனவே என்ன காரணம்?”

 1. வாசகர்களுக்கு தங்கள் பதிவின் மூலம் பாத யாத்திரை பற்றி தெரிய வேண்டும் என்பது இறைவனின் திரு உளம் . காளைகளைப் பார்க்க கம்பீரமாக உள்ளது. தான் பெற்ற இன்பம் தம் வாசகர்களும் பெற வேண்டும் என்று அழகிய போடோக்களை கிளிக் செய்து பதிவை மெருகூட்டி விட்டீர்கள் . தாங்கள் எண்ணை தொடர்பு கொண்டு சொன்ன விபரம் பதிவு செய்யவில்லை …. பதிவு தொடருமா..
  பாண்டு ரங்கனும் ருக்மணியும் கொள்ளை அழகு
  வாழ்க … வளமுடன்
  நன்றி
  உமா வெங்கட்

 2. சுந்தர்ஜி
  சூப்பர்.. உண்மை. காளைகள் பார்க்க பரவசம் ஏற்படுகிறது. ராதா கிருஷ்ணா உருவசிலைகள் சுமபதினால் இந்த வசீகரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *