Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, June 24, 2024
Please specify the group
Home > Featured > திருமகளின் அருள்மழையும் பின்னே ஒளிந்திருந்த காரணமும்!

திருமகளின் அருள்மழையும் பின்னே ஒளிந்திருந்த காரணமும்!

print
மது ‘காலடியை நோக்கி ஒரு பயணம்’ தொடரை மீண்டும் தொடர விருக்கிறோம். அடுத்து நாம் சந்திக்கப்போவது பால சங்கரரின் வேண்டுகோளுக்கிணங்க அன்னை மகாலட்சுமி தங்க நெல்லி மழை பொழிந்த இடம். அதாவது ‘ஸ்வர்ணத்து மனை’. (இந்த இடத்திற்கு சென்ற ஆண்டு அக்ஷய திரிதியை அன்று நாம் சென்று வந்தது நினைவிருக்கலாம்!) ஆனால், சரித்திரத்தில் திருமகள் ஸ்வர்ண மழை பொழிந்த வேறு இரண்டு சம்பவங்களும் உண்டு. அவற்றை பார்த்துவிட்டு அதன் பிறகு ‘ஸ்வர்ணத்து மனை’ செல்வோம்.

இது போன்ற பதிவுகளை படிப்பது கூட ஒரு வகையில் திருமகளை வணங்குவதற்கு சமம் தான். காரணம் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷத்தை, நம்பிக்கையை ஏற்படுத்த வல்லவை இது போன்ற (உண்மை) சம்பவங்கள். லக்ஷ்மி கடாக்ஷம் ஓரிடத்தில் வந்தால் இந்த உணர்வு கூடவே வரும் தானே?

பதிவில் சுவாரஸ்யத்தை கூட்ட வேண்டி நமது ஓவியரைக் கொண்டு ஓவியம் வரைந்து அளித்திருக்கிறோம்.

திருமகளின் அருள் மழையில் நனைவதற்கு செல்வோமா?

********************************************

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

என்று சும்மாவா சொன்னார் வள்ளுவர்?

அந்தளவு பொருள் எல்லாருக்கும் வேண்டியிருக்கிறது. ஆனால், அந்த பொருள் எப்படிப்பட்டவரை அரவணைக்கும் தெரியுமா?

படியுங்கள்… விடை இறுதியில்!

திருமகளின் அருள் மழை!

சிருங்கேரி சாரதா பீடத்தின் 12 வது பீடாதிபதியாக விளங்கியவர் ஸ்ரீ வித்யாரண்யர் (1268 – 1386).  நான்கு வேதங்களுக்கும் சேர்த்து பாஷ்யம் எழுதிய ஞானச் சூரியன். ஜோதிடம், வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம் இப்படி பலதுறைகளில் அவரது பங்களிப்பு அளப்பரியது.

வித்யாரண்யர் சிறுவயதிலிருந்தே கலைமகளின் நிகரற்ற அருளை பெற்று விளங்கினார். ஆண்டவன எல்லாருக்கும் எல்லாம் கொடுத்துவிடமாட்டானே. கலைமகள் கடாக்ஷம் நிரம்ப இருந்தாலும் திருமகள் கடாக்ஷம் இல்லை. பிரம்மச்சாரியான இவர், பொருள் வேண்டி ஒரு முறை மகாலக்ஷ்மியை நோக்கி கடும் தவம் இருந்தார்.

இவரது தவத்தை கண்டு மனமிரங்கிய மகாலக்ஷ்மி இவர் முன்பு பிரத்யட்சமாகி, “மகனே… இந்த ஜென்மாவில் உனக்கு செல்வத்தை நுகரும் யோகம் இல்லை. அடுத்த ஜென்மாவில் தருகிறேன்….” என்று கூறி மறைந்துவிட்டாள்.

சங்கரர் வழி வந்தவராயிற்றே விடுவாரா?

சங்கரர் எப்படி அன்னை ஆர்யாம்பாளிடம் துறவறம் பெற அனுமதி வேண்டி, முதலையை வைத்து நாடகமாடினாரோ அதே போல, இவரும் சந்நியாசத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் மகாலக்ஷ்மியை நோக்கி தவமியற்றினார். இந்த முறை அன்னை தோன்றியபோது, “அம்மா… சந்நியாசத்தை ஏற்றுக்கொண்டுவிட்டபடியால் இப்போது நான் புனர்ஜென்மம் எடுத்திருக்கிறேன். இப்போது நீ எனக்கு செல்வத்தை தர தடையேதுமில்லையே….!” என்றார்.

vidyaranyar copy

திருமகளுக்கும் வேறு வழியில்லை. வாக்கை காப்பாற்றவேண்டுமே? எனவே பொன் மழையை வருஷித்துவிட்டு மறைந்தாள்.

அதைக் கண்டு வித்யாரண்யர் ஆனந்தக் கூத்தாடினார். அவற்றை மூட்டை கட்ட விழைந்தபோது, அவர் கற்ற கல்வி அவருள் ஞானத்தை துளிர்க்கச் செய்தது. “அடடா… நாமோ அனைத்தையும் துறந்த சந்நியாசி. சந்நியாசி பொன்னை தீண்டவே கூடாதே… இனி இந்த பொன்னும் பொருளும் நமக்கெதற்கு? இனி இதன் தேவை என்ன? அன்னை லக்ஷ்மியை தந்திரத்துடன் மடக்கிவிட்டதாக நினைத்து முட்டாளாய் போனேனே…” என்று பலவாறு வருந்தினார்.

பின்னர் தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டார். “நடந்த அனைத்துக்கும் நிச்சயம் ஏதோ காரணம் இருக்கவேண்டும். இல்லையெனில் திருவருள் நமக்கு இப்படி ஒரு திரவியத்தை கொண்டு வந்து கொட்டியிருக்காது…” ஒரு முடிவுக்கு வந்தவர், “ஹே… லக்ஷ்மி தேவி.. இனி இந்த பொன்னை நான் தொடமாட்டேன். நல்ல காரியத்துக்கு ஒரு கருவியாக இவை பயன்படட்டும்” என்று பிரார்த்தித்துக்கொண்டார்.

அது முகலாயப் பேரரசு இந்திய முழுதும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியிருந்த காலகட்டம். மாலிக் கபூர் தலைமயிலான படையினர் பல ஊர்களுக்கு சென்று நம் ஆலயங்களை தகர்த்து திரவியங்களை கொள்ளையடித்து வந்தனர். அவர்களை எதிர்க்க வலுவான ஒரு ராஜ்ஜியமோ அரசோ அப்போது இல்லை.

************************************************

‘காலடியை நோக்கி ஒரு பயணம்’ தொடர் – முந்தைய பாகங்களுக்கு…

சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)

செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)

சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)

பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

************************************************

VIDYARANYAR TAITTIRIYAKA VIDHYA PRAKASH
வித்யாரண்யர் இயற்றிய ஒரு நூல்

எனவே “சிதறுண்டு போயிருக்கும் ஹிந்து ராஜ்ஜியத்தை மீண்டும் நிலைநாட்ட இந்த செல்வத்தை பயன்படுத்துவோம்” என்று முடிவுக்கு வந்தவர், வேத நெறியை தலைதூக்கச் செய்தே தீரவேண்டும் என்கிற நெஞ்சுரத்துடன் தனியே போராடி வந்த ஹரிஹரன், புக்கன் என்கிற அந்த இரண்டு இளைஞர்களை அழைத்து அவர்களுக்கு முடிசூடி அங்கேயே ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கி தந்தார். அந்த இடம் தான் இன்றைய ஹம்பி.

மஹாலக்ஷ்மியின் அநுக்கிரகத்தால் கிடைத்த செல்வத்தை கொண்டு ஒரு ராஜ்ஜியத்தையே உருவாக்கி மொகலாயர்களை எதிர்த்து போராட ஒரு பெரிய படையையும் உருவாக்கினார் வித்யாரண்யர்.

ஒரு சாம்ராஜ்ஜியத்தை புதிதாக தோற்றுவிப்பது என்ன சாதாரண விஷயமா? அதுவும் முகலாயர்களால் நம் செல்வங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு எதுவும் மிச்சமில்லை என்கிற நிலையில், START FROM THE SCRATCH என்று சொல்வார்களே.. அது போல அடிமட்டத்திலிருந்து ஒரு பேரரசை உருவாக்க எத்தனை பொருள் தேவை… ஆனால் இங்கே பொருளை தந்திருப்பது யார்? செல்வத்துக்கு எல்லாம் அதிபதியான மகாலக்ஷ்மிய அல்லவா? குருவருளும் திருவருளும் சேர்ந்தால் அங்கே வெற்றிக்கு சொல்லவேண்டுமா என்ன? ஹரிஹரரும், புக்கரும் தொட்டதெல்லாம் துலங்கியது.

வித்யாரண்யரை குருவாகக் கொண்ட ஹரிஹர, புக்கர்கள் அந்த ராஜ்ஜியம் அவருக்கே சொந்தமென்று கூறி, அதற்கு ‘வித்யாநகர சாம்ராஜ்யம்’ என்று அவர் பெயரையே வைத்தார்கள். பிற்பாடு அது விஜய நகரம் என்றானது. ராமாயணத்தில் கூட இது வரும். கிஷ்கிந்தை ராஜ்ஜியத்தை சேர்ந்த இடம் இது.

ஹரி ஹர புக்கர்களின் நம்பிக்கைக்குரிய உறவினரான கம்பண்ணன் என்பவரை சேனாதிபதியாக நியமித்து அவரை தெற்கு (தமிழகம்) அனுப்பி இங்கே இருந்த முகலாயப் படைகளை வெற்றிகொள்ளச் செய்தார். மாலிக் கபூர் சீரழித்த நமது கோவில்கலையெல்லாம் மீண்டும் புனரமைத்ததில் இந்த கம்பண்ணணுக்கு பெரும் பங்கு உண்டு. இந்த விஜய நகர வம்சத்தில்தான் பிற்பாடு கிருஷ்ணதேவராயர் வந்தார்.

மேற்கூறிய அனைத்திற்கும் சரித்திர சான்று இன்றும் உண்டு.

அன்னை லக்ஷ்மி வித்யாரண்யருக்கு ஸ்வர்ண மழை பொழிந்தது நிஜம். வித்யாரண்யர் மூலம் அந்த செல்வம் நம் ஹிந்து தர்மம் புத்துயிர் பெற பயன்பட்டதும் நிஜம்.

சரி முதலில் கேட்ட கேள்விக்கு வருகிறோம்….

பொருள் எப்படிப்பட்டவரை அரவணைக்கும் தெரியுமா?

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (குறள் 215)

ஊர் நடுவே உள்ள குளத்து நீர் எப்படி அனைவருக்கும் பயன்படுகிறதோ அதே போல தன்னிடம் உள்ள செல்வத்தை நல்ல விஷயங்களுக்கு எவன் பயன்படுத்த விழைகிறானோ அவனிடம்!

…. அடுத்து அன்னை மகாலக்ஷ்மி இதே போல தங்கமழை பொழிந்த வேறொரு சம்பவத்தை பார்ப்போம். அதன்  பிறகு ஸ்வர்ணத்து மனையை தரிசிக்கலாம்.

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also check…

உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

பாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ !

“பணத்திற்கும் காது உண்டு”- பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 6

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

காலடியில் ஒரு வைரச் சுரங்கம் – கண்ணுக்கு தெரிகிறதா?

========================================================

[END]

 

2 thoughts on “திருமகளின் அருள்மழையும் பின்னே ஒளிந்திருந்த காரணமும்!

 1. ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி பொழிய வைத்த கதை தெரியும். ஆனால், இது புதியது. அரியது.

  அற்புதமான சம்பவம். அதற்கு பொருத்தமான ஓவியம். மணிமகுடம் போன்று திருக்குறள்.

  உண்மையில் இந்த பதிவை படித்த போது மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது. பதிவளித்தமைக்கு மிக்க நன்றி.

  பதிவில் நீங்கள குறிப்பிடும் அடுத்த தங்க மழை பொழிந்த சம்பவத்தை அறிய ஆவலாக உள்ளோம். சுவர்ணத்து மனையை காண இப்போதே மனம் துடிக்கின்றது.

  வாழ்க தங்கள் பணி

  – பிரேமலதா மணிகண்டன்,
  மேட்டூர்

 2. இந்த பதிவை படித்ததே லக்ஷ்மி கடாக்ஷம் பெற்றது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது. நமது ஓவியர் ரமீஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள் . வித்யாரண்யர் கதையை முன்பே கேள்விப்பட்டு இருந்தாலும் தங்கள் நடையில் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. ஒரு வருடம் முடியும் தருவாயில் பதிவை போட்டாலும் அமர்க்களமாக உள்ளது. இவ்வளவு நாட்களாக காத்து இருந்தாலும் , மனதில் நிற்கும் பதிவாக இந்த பதிவு அமைந்து உள்ளது . சுவர்ணத்து மனையை காண ஆவல். நம் தளமும் பொருளாதார பிரச்சனையில் இருந்து மீண்டு முன்னேற்றம் காண மகா லக்ஷ்மி தங்க மழை பொழிவாள்.
  கம்பண்ணன் மூலம் தான் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் விக்கிரகங்களும் காப்பாற்றப்பட்டு உள்ளது என்பதை அக்கோவில் கல்வெட்டு மூலம் அறியலாம்.
  வாழ்க … வளமுடன்
  நன்றி
  உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *