Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா! – தனி ஒருவன் (2)

தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா! – தனி ஒருவன் (2)

print
‘தனிமனிதனால் என்ன செய்துவிடமுடியும்?’ என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, தனிமனிதன் சாதித்து காட்டியுள்ள உண்மை நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டுவதே இந்த தொடரின் நோக்கம்.

Kalam super quote

ஒரு நல்ல விஷயத்தை செயல்படுத்த விரும்பினால், “நான் ஒருத்தன் நினைத்து என்னவாகப்போகிறது?” என்று நினைக்காமல் அதை செயல்படுத்த உறுதியுடன் களமிறங்க வேண்டும். மனதின் சக்தி அளவற்றது. நல்ல நோக்கத்திற்காக அதை திருப்பும்போது அதற்கு யானைபலம் வந்துவிடும். நினைப்பதை எப்படியோ சாதித்துவிடும். சாதனையாளர்கள் வாழ்வில் நிகழ்வது இது தான்.

சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி!

சில மாதங்களுக்கு முன்பு வரை மும்பையில் சாதே நகர் என்னும் சேரிப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் செல்வது என்றால் எளிதான விஷயமல்ல. காரணம் சுமார் நூறடி நீளமுள்ள ஒரு பெரிய சாக்கடையை கடந்து தான் அவர்கள் பள்ளிக்கு செல்லவேண்டும். இல்லையெனில் சுமார் 1.5 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு செல்லவேண்டும்.

தூரத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த பல குழந்தைகள் புத்தகப் பையை சுமந்தபடி அந்த சாக்கடையை தினசரி கஷ்டப்பட்டு கடப்பதை தனது வீட்டு அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து பார்த்து வந்த இஷான் பல்பலே என்னும் 17 வயது மாணவருக்கு என்னவோ செய்தது. இதற்கு ஏதேனும் ஒரு தீர்வை காணவேண்டும் என்று துடித்தவர், தனது பெற்றோரிடமும், நண்பர்களிடமும், சமூக அமைப்புக்களிடமும் இது பற்றி தனது ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.

sate nagar drainage

உள்ளாட்சி அமைப்புக்களிடமும் இது பற்றி புகார் அளித்திருக்கிறார். ஆனால் யாரும் சட்டை செய்யவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து வெறுத்துப் போன, இஷான், தனது சேமிப்பு பணம், பெற்றோரிடம் பெற்ற பணம், நண்பர்களிடம் கடனாக பெற்ற பணம் ஆகியவற்றை சேர்த்து அக்குழந்தைகள் கடக்க சவுக்கு மரங்களால் ஆன ஒரு சிறு பாலத்தையே கட்டிமுடித்துவிட்டார். தற்போது பள்ளிக் குழந்தைகள் மட்டுமின்றி அச்சேரி மக்கள் பலரும் அப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

நான்கடி அகலமும், சுமார் நூறடி நீளமும், உடைய இந்த மரப்பாலம் கட்டி முடிப்பதற்கு எட்டு நாட்களானது.

sate nagar drainage 2

முன்னதாக ஆகஸ்ட் மாதம், இது பற்றி பேச இஷான் சேரிப் பகுதிக்கு மக்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துவிட்டனர். பல பெற்றோர் இந்த பிரச்னையால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. மேலும் ஒன்றரை கி.மீ. தூரம் சுற்றி செல்லவேண்டும். ஆட்டோவும் இந்த பகுதிகளில் கிடையாது. இந்த காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள் பலர்.

“இந்த சாக்கடையை தினசரி கடப்பதால் அந்த குழந்தைகளுக்கு தோல் நோய்கள், அலர்ஜி, மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருகின்றன. அவர்கள் அதில் காலைவைத்து கடப்பதை என்னால் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்கமுடியவில்லை.” என்கிறார் இஷான்.

eshan balbale mumbai

மழைக்காலங்களில் இந்த கால்வாயை கடக்கும்போது ஒரு சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்திருக்கிறதாம்.

இஷான் தானேவில் உள்ள பேடேகர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது இந்த பணிக்கு தனது பெற்றோர் பெருமளவு உதவியதாக கூறு இஷான், கான்க்ரீட் பாலத்தை கட்டலாம் என்றால் அதற்கு மாநகராட்சியின் அனுமதி தேவை. மேலும் அதை கட்டி முடிக்க நிறைய கால அவகாசம் தேவைப்படும். ஆனால் மூங்கில் பாலம் கட்டுவதற்கு எளிது. இது போன்ற செயல்களை ஊக்குவிப்பதற்க்கென்றே ‘நிர்பய் யுவ பிரதிஷ்டான்’ என்கிற தொண்டு நிறுவனத்தை துவக்கியிருப்பதாகவும், தன்னைப் போன்ற ஒத்த கருத்துடைய மேலும் பல இளைஞர்களை அதில் இணைக்கவிருப்பதாகவும் கூறுகிறார்.

balbale“இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை, இந்த பாலத்தின் பராமரிப்பு பணியை நானே மேற்கொள்வேன். அடிக்கடி அங்கு சென்று பார்த்துக்கொள்வேன். ஒரே நேரத்தில் சுமார் 50 பேர் கடக்கும் வகையில் இது கட்டப்பட்டுள்ளது. இதை சரியாக பயன்படுத்தினால் பல ஆண்டுகள் இது உழைக்கும்” என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் இஷான்.

“நான் அனுபவிக்கும் சௌகரியங்களை பலர் அனுபவிக்க இயலவில்லை என்பதை நான் கண்கூடாக கண்டபிறகே அவர்களுக்கு உதவிடும் எண்ணம் எனக்கு தோன்றியது.” என்று பக்குவப்பட்ட மனிதரைப் போல பேசுகிறார் இஷான்.

“நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதே என் பெற்றோர் பல நல்ல விஷயங்களை செய்வதை பார்த்திருக்கிறேன். என்னுடைய பயன்படுத்திய துணிமணிகளை, என்னுடைய ஸ்கூல் பேக், ஆகியவற்றை எங்கள் வீட்டு வேலைக்காரர்களின் குழந்தைகளுக்கு கொடுத்துவிடும்படி சொல்வேன். அடுத்தவர்களின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கு உதவுவதன் மூலம் நான் பல நல்ல விஷயங்களை கற்றுகொள்கிறேன்.”

இளைஞர்கள் நாட்டைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத சினிமா நடிகர்களின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகமும், பீராபிஷேகமும் செய்துகொண்டிருக்க இஷானின் செயல் உண்மையில் நெகிழவைக்கிறது. இந்த தேசத்தின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

நன்றி இஷான். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் பெற்றோருக்கும் தான்.

மனிதனாக வாழ்த்திட வேணும மனதில் வையடா
தம்பி மனதில் வையடா
மனிதனாக வாழ்த்திட வேணும மனதில் வையடா
தம்பி மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா
நீ வலது கையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா
நீ வலது கையடா

தனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
நீ தொண்டு செய்யடா
தனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
நீ தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா
எல்லாம் பழைய பொய்யடா

கோவிலுக்கு செல்பவர்கள் கடவுளை தேடிச் செல்கிறார்கள் ஆனால் சேவை செய்கிறவர்களோ கடவுளையே தங்களை நோக்கி வரச் செய்கிறார்கள் என்று சொல்வார்கள். அது உண்மையென்றால் நீங்கள் தற்போது படித்தது கடவுளின் குழந்தையை பற்றி.  படித்ததே புண்ணியம் தான். சரி தானே?

* சென்ற டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த நமது RIGHTMANTRA பாரதி விழாவில் இஷான் பல்பலே சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள மும்பையிலிருந்து வரவிருந்தார். மும்பையில் உள்ள நம் வாசகர் ஒருவர் மூலம் இதற்கான முயற்சிகள் மேற்கொண்டோம். விழாவுக்கான ஏற்பாடுகள் துவக்கப்பட்ட நிலையில் எதிர்பாராத மழை வெள்ளம் காரணமாக சென்னை கடுமையாக பாதிப்புக்குள்ளானதையடுத்து விழா ரத்து செய்யப்பட்டது.

========================================================

Earlier Episode : அக்கினிக் குஞ்சு மூட்டிய காட்டுத் தீ ! – தனி ஒருவன் (1)

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to SUSTAIN. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions   A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account   Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Rightmantra Soul Solutions, Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also check :

மலையை பிளந்த ஒற்றை மனிதன் – ‘முடியாது’ என்கிற வார்த்தையை இனி நாம் சொல்லலாமா?

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!

‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

யார் உங்கள் தலைவர்?

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்

நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ?

========================================================

[END]

2 thoughts on “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா! – தனி ஒருவன் (2)

  1. இசான் பற்றிய நிகழ்வை படித்து உள்ளேன். நம் தளம் மூலம் மேலும் அவரைப பற்றி படித்து இசானின் சாதனைகளை தெரிந்து கொண்டேன். தனி ஒரு மனிதாக அவர் செய்த சாதனைக்கு பாராட்டுக்கள். வரும் ஆண்டுவிழாவில் இசானைக் காண ஆவல். தாங்களும் தனி ஒரு மனிதனாக நம் தளம் முன்னேற பாடுபடும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்
    வாழ்க … வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *