Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி… “இதோ எந்தன் தெய்வம்” – (4)

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி… “இதோ எந்தன் தெய்வம்” – (4)

print
ண்பர் செந்தமிழரசு திரு.கி.சிவக்குமார் அவர்களின் ‘ஞானத்திரள்’ இதழின் 6 ஆம் ஆண்டு விழா திருவாரூரில் தேவாசிரியன் மண்டபத்தில் 26 ஆம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்க நமது உதவியாளருடன் திருவாரூர் சென்றிருந்தோம்.

26 ஆம் தேதி விழாவில் பங்கேற்றுவிட்டு மறுநாள் 27 ஆம் தேதி நம் தளத்தின் ஆலய தரிசன பதிவுகளுக்காக சில திருகோவில்களை இந்த திருவாரூர் பயணத்தில் கவர் செய்ய திட்டமிட்டிருந்தோம். பலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அரிதினும் அரிய பரிகாரத் தலங்கள் – தொன்மை வாய்ந்த தலங்கள் இவை.

அனைத்தும் நல்லபடியாக முடிந்து நாம் திட்டமிடாத – நமது பயணத் திட்டத்தில் இல்லாத – சில தலங்களையும் தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது.

இரண்டு ஆண்டுகள் முயற்சிகள் எடுத்து சாத்தியப்படவேண்டியவை எல்லாம் இரண்டு நாள் பயணத்தில் சாத்தியப்பட்டது என்றால் அது நிச்சயம் திருவருள் இருந்தால் தானே முடியும்? மேற்படி ஆலயங்களில் யாரையுமே நமக்கு தெரியாது. அப்படியிருக்க எப்படி இது சாத்தியப்பட்டது ??

எல்லாம் நமது பி.ஆர்.ஓ. வின் (Public Relations Officer) வேலை தான்.

பி.ஆர்.ஓ…?

நம் தளத்திற்கு அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன?

என்னங்க இப்படி கேட்டுபுட்டீங்க… அவன் பார்க்குற பி.ஆர்.ஓ. வேலையை மனுஷன் பார்க்க முடியுமா?

அவன் கண்ணசைவினால் தானே இந்த தளம் நடந்து வருகிறது. இத்தனை மகத்தான விஷயங்கள் மிக மிக சுலபமாக நடந்தேறின.

வேறு யார்?

அவன் ஒருவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்??

எளியோருக்கு எளியோன்… தலைவர்க்கெல்லாம் தலைவன்… அன்பே உருவான எந்தை ஈசனே அவன்.

நாம் செல்வதற்கு முன் தான் முன் சென்று அவன் செய்த உதவிகளால் தானே இத்தனையும் சாத்தியப்பட்டது!!

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே!

***************************

செவ்வாய்க்கிழமை  (26/01/2016) காலை திருவாரூர் சென்று இறங்கியவுடன் விழாவுக்கு வந்த அனைவரும் தங்க ஏற்பாடு செய்திருந்த ஆரூரன் திருமண மண்டபத்தில் குளித்து முடித்து சிற்றுண்டி அருந்திய பிறகு, குறள்மகன் வீடு இருந்த தெற்கு மாட வீதிக்கு சென்று நமது உடமைகளை அவர் வீட்டில் வைத்துவிட்டு தியாகராஜரையும் கமலாம்பிகையையும் தரிசித்துவிட்டு தேவாசிரியன் மண்டபத்திற்கு சென்றோம். (‘ஞானத்திரள்’ விழா அனுபவம் வேறொரு பதிவில் விரிவாக!)

thiruvarur

‘ஞானத்திரள்’ விழாவில் இருந்தபோது, நமது முகநூல் நண்பர் ரமேஷ் பன்னீர்செல்வம் என்பவர் நம்மை தொடர்பு கொண்டார். நம்மை முகநூலில் தொடர்வதாகவும், புதுவையை சேர்ந்த தான் திருவாரூரில் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிவதாகவும் நமது முகநூல் பதிவுகளை தவறாமல் படித்துவருவதாகவும், நமது பணிகள் தம்மை வெகுவாக கவர்ந்திருப்பதாகவும் நமக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காது தம்மை தொடர்புகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முகநூலை மட்டுமே பார்ப்பதாகவும் தளத்தை பார்க்க நேரம் கிடைப்பதில்லை என்றும் கூறினார். நமது தளத்திற்கு ஆண்டிராய்டு செயலி (Android App – ‘Rightmantra’) இருப்பதை கூறி தளத்தையும் இனி தவறாமல் நேரம்கிடைக்கும்போதெல்லாம் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்.

மறுநாள் ஆலய தரிசனத்திற்கு நாம் திட்டமிட்டிருப்பதை பற்றி கூறி இரவு திருவாரூரில் தங்குவதற்கு நல்லதொரு ஓட்டலை REFER செய்யவேண்டும், மறுநாள் வாடகை கார் ஒன்றை மலிவான வாடைக்கு எடுக்க உதவி செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

திருவாரூரில் செல்வீஸ் என்கிற ஓட்டலை REFER செய்தார். உடனே அங்கே அறையை புக் செய்துவிட்டோம். தங்கள் கஸ்டமர்களுக்கு அவர்களே நல்ல டிஸ்கவுன்ட்டில் கார்கள் வாடகைக்கு தருகிற படியால் அங்கேயே காரையும் புக் செய்துவிட்டோம். (இது பற்றியெல்லாம் விரிவாக பின்னர் சொல்கிறோம்).

மதியத்திற்கு மேல் ‘ஞானத்திரள்’ விழாவுக்கு வந்த திரு.ரமேஷ் அவர்களை திரு.சிவக்குமார் அவர்களிடம் அறிமுகப்படுத்தினோம். நாமும் அவருடன் விழாவை ரசித்தோம்.

தாம் மாலை ஃப்ரீ தான் என்றும், திருவாரூர் சுற்றுப் பகுதிகளில் உள்ள கோவில் எங்கேனும் செல்வதாக இருந்தால் தமது காரிலேயே செல்லலாம் என்றும் கூறினார்.

மறுநாள் நாம் நான்கு தலங்களை தரிசிக்க திட்டமிட்டிருந்தாலும் இன்றும் முடிந்தால் இரண்டு தலங்களை கூடுதலாக தரிசித்துவிடலாமே என்று நமது டைரியை பார்த்து திவ்யதேசங்களில் திருக்கண்ணபுரமும் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றான திருப்புகலூரும் செல்வதென தீர்மானித்தோம்.

திருப்புகலூர் திருநாவுக்கரசர் முக்தி பெற்ற தலமாகும். திருக்கண்ணபுரம் ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.

நாம், நம் உதவியாளர் கார்த்திக் மற்றும் நண்பர் திரு.ரமேஷ் பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் முதலில் திருப்புகலூர் சென்று அக்னிபுரீஸ்வரரை தரிசித்துவிட்டு, அடுத்து திருக்கண்ணபுரம் சென்றோம்.

இங்கு உற்சவரின் பெயர் என்ன தெரியுமா? ‘சௌரிராஜப் பெருமாள்’.

ஆம்… கூந்தலுக்கு உண்டான மற்றொரு பெயரான சௌரி தான்.

இது பற்றி சிலிரிக்க வைக்கும் தகவல் தல வரலாறாக கூறப்படுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இக்கோவில் அர்ச்சகர் ஒருநாள், கோவிலுக்கு வந்த அரசனுக்கு சுவாமிக்கு சூடிய மாலையைத் தர அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால் கோபங்கொண்ட அரசனிடம், அர்ச்சகர் அது பெருமாளின் திருமுடி என்று சொல்லிவிட, அரசன் தான் நாளை வந்து பார்க்கும் போது பெருமாளுக்கு முடி இல்லையெனில் அர்ச்சகர் தண்டனைக்குள்ளாவார் என்று கூறிவிட்டுச் சென்றான். அர்ச்சகர் பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். அவரிடம் இரக்கம்கொண்ட பெருமாள் அவரைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார். அடுத்த நாள் அரசன் வந்து பார்த்தபோது உண்மையிலேயே பெருமாள் தலையில் திருமுடி இருந்தது. இந்நிகழ்வின் காரணமாகவே உற்சவர் சௌரிராஜப்பெருமாள் எனப் பெயர் கொண்டுள்ளார் என்பது நம்பிக்கை.

உற்சவர் உலாவில் அமாவாசையன்று மட்டும் இந்த செளரி திருமுடியை தரிசனம் காணலாம். மற்ற நாட்களில் எத்தனை பிரயத்தனம் செய்தாலும் பார்க்க முடியாது. ஆனால் நாம் சென்றபோது, அரங்கனருளால் பட்டர் நமக்கு காண்பித்தருளினார்.

இறைவனின் கூந்தலை கண்ட அந்த நேரம் “கோவிந்தா…கோவிந்தா….கோவிந்தா…” என்று கத்தியே விட்டோம். நிசப்தமான ஆலயத்தில் நமது கதறல் எதிரொளித்தவண்ணமிருந்தது.

செளரிராஜ பெருமாள், திருக்கண்ணபுரம்
செளரிராஜ பெருமாள், திருக்கண்ணபுரம்

இங்கு தரிசனத்தின் போது ஒரு சிறுமி சௌரிராஜப் பெருமாள் சன்னதி முன்பாக இருந்த விளக்குகளுக்கு தான் கொண்டு வந்த கூடையிலிருந்து எண்ணை பாட்டிலை எடுத்து தனது பிஞ்சு கரங்களால் எண்ணை விட்டாள். பிறகு கண்ணை மூடிக்கொண்டு ஏதோ ஸ்லோகம் சொன்னாள். ஸ்வாமிக்கு பதில் அவளைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அத்தனை கடாஷம். இப்படி ஒரு ஒளி பொருந்திய கண்களை நாம் கண்டதேயில்லை. அந்த BODY LANGUAGE… வாவ்…! இந்த பதமே தவறு. உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக சொல்கிறோம். அந்த தேஜஸ்… அந்த ஒளி… அந்த தீட்சண்யம்… ஆஹா… ஆஹா… விவரிக்க வார்த்தைகள் இல்லை.

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள்

பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது

என்கிற அமரர் சீர்காழி கோவிந்தராஜனின் பாடல் தான் நினைவுக்கு வந்தது.

சுவாமியை தரிசித்துவிட்டு தாயாரையும் சேவித்துவிட்டு பிரசாதம் பெற்றுக்கொண்டு பிரதட்சிணம் வந்தோம். கோவில் பிரகாரம் அத்தனை பிரம்மாண்டம். ஒரே கும்மிருட்டு. ஆங்காங்கே இரு சில விளக்குகள் மட்டும் எரிந்துகொண்டிருந்தன. நாங்கள் நடந்து செல்லும்போது எங்கள் முன் தளிர் நடை போட்டு சென்றாள்.

Thirukkannapuram2

அது மனிதர்கள் நடையோ மழலை நடையோ அல்ல. தேவதைகள் நடக்கும் ஒரு வித நளினமான நடை. இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை.

சிறுமி தனியே செல்கிறாளே… நாம் துணைக்கு செல்வோம் என்று சற்று வேகமாக சென்று சேர்ந்துகொண்டோம்.

அவளை அழைத்து வாஞ்சையுடன் விசாரித்தோம். அருகே தான் வசிப்பதாக சொன்னாள். நான்காம் வகுப்போ ஐந்தாம் வகுப்போ படிப்பதாக சொன்னாள்.

“எங்களை ஆசீர்வதிக்க வேண்டு்மம்மா” என்றோம்.

Padmavathy 12

ஒன்றும் புரியாதது போல பார்த்தாள்.

எங்கள் பெயர்களை குறிப்பிட்டு சௌரிராஜப் பெருமாளிடம் எங்கள் நலத்துக்காக பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாம். சரி சரியென்று புரியாதபடி தலையாட்டினாள். கொடிகம்பம் அருகே சென்று ஸ்வாமியை ஒரு பார்வை பார்த்துவிட்டு துள்ளிக்குதித்து ஓடியபடி மறைந்தாள்.

சொல்ல மறந்துவிட்டேன். அவள் பெயரை கேட்டபோது ‘பத்மாவதி’ என்றாள். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது உண்மையானால் எங்களை பொருத்தவரை அவள் இலக்குமியின் அவதாரமான சாட்சாத் பத்மாவதி தாயாரே தான்.

நாம் பெற்ற அந்த பரவசம் நீங்களும் பெறவேண்டும் என்கிற எண்ணத்தில், அவள் அனுமதியுடன் அவளை புகைப்படமெடுத்தோம். நாமும் அவளுடன் எடுத்துக்கொண்டோம்.

Thirukkannapuram

இது யதார்த்தமான விஷயமா இல்லை இவர் கூறுவது போல இவள் திருமகள் தானா? இல்லை இவர் மிகப்படுத்தி சொல்கிறாரா என்றெல்லாம் சிலர் யோசிப்பது புரிகிறது.

கடவுளை கோவில் கருவறையில் மட்டுமே காண முயற்சிப்பவர்கள் எந்தக் காலத்திலும் காணமுடியாது. உணரவும் முடியாது. இதை நாம் பல பதிவுகளில் வலியுறுத்தி வந்துள்ளோம்.

கலியுகத்தில் கடவுள் சூலம் கொண்டோ… ஒளியின் திருவாய் மலர்ந்தோ நம்மிடம் வருவார் என்று நினைக்க கூடாது. வீழும் போது தூக்கி விடுவோரும், தாளும் போது தோள் கொடுப்போரும், புன்னகையை பரிசளிபவர்களும், கள்ளங்கபடமற்ற மழலைகளும், புண்ணியம் செய்து வாழ்ந்து வருபவர்களும் தான் கடவுள்கள்!

“தெய்வம் மானுஷ ரூபேண” என்கிறன வேதங்கள்.

ஆழ்வார்கள் வரலாற்றையும் நாயன்மார்கள் வரலாற்றையும் எடுத்து பார்த்தால் புரியும் இந்த பேருண்மை.

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

இது ஆழ்வார்கள் காலமும் அல்ல. நாம் அனைவரும் நாயன்மாரும் அல்ல. அப்படியிருக்க, திருமகள் தன் உருவைக் காட்டியபடியா நம் முன்னே வருவாள்? மேற்படி சிறுமி ‘பத்மாவதி’ போன்றவர்களின் உருவில் தான் வருவாள். இவள் பார்வையின் தீட்சன்யத்தினால் தானோ என்னவோ சௌரிராஜப் பெருமாளின் கூந்தலை காண எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது என்று கருதுகிறோம்.

தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே

இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
தெய்வம் ஏற்கும் உனது தொண்டு….

– கவியரசு கண்ணதாசன் 

‘தெய்வம் இருப்பது எங்கே?’ என்பதற்கு இதைவிட அருமையானதொரு விளக்கத்தை கொடுக்க முடியாது.

* திருவாரூர் பயணம் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது. அத்தனை அற்புதம். ஆத்மானுபவம். ஒவ்வொரு பதிவாக விளக்குகிறோம். நன்றி.

Video of சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
– Song by Dr.Sirgazhi Govindarajan

========================================================

Also check previous chapters….

இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்” – (3)

யுக புருஷனை தரிசித்து பாவங்களை தொலைத்தேன்! சிலிர்க்க வைக்கும் ஒரு சந்திப்பு!! “இதோ எந்தன் தெய்வம்” — (2)

தொலைந்த வாழ்க்கை நிமிடங்களில் மீண்ட அதிசயம்
“இதோ எந்தன் தெய்வம்” — (1)

========================================================

Similar articles….

ஏட்டுச் சுரைக்காய் பசிக்கு உதவும்!

வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!

தலைவருடன் ஒரு சந்திப்பு!

========================================================

[END]

9 thoughts on “சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி… “இதோ எந்தன் தெய்வம்” – (4)

  1. தெய்வீக மனம் கமழும் அற்புத பதிவு. இன்று வெள்ளி கிழமையில் சௌரிராஜ பெருமாளின் திவ்ய தரிசனம். சௌரிராஜ பெருமாளின் வரலாறு தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. கோவில் குளம் தண்ணீருடன் கோபுரத்தையும் பார்க்க மன நிறைவை ஏற்படுத்துகிறது. மகாலஷ்மியே குழ்ந்தை உருவில் வந்து பிரமிக்க வைத்து இருக்கிறாள். மற்ற பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
    வாழ்க வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

  2. நீர் நிறைந் கமலாலயத்தை புகைப்படத்தில் பார்க்கும்போதே சிலிரிப்பாக இருக்கிறது. நேரில் பார்த்தல் எப்படி இருக்கும்?

    நீங்கள் பாக்கியசாலி.

    ஞானதிரள் விழா குறித்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

    உண்மை தான். அந்த ஈசன் தான் இந்த தளத்தின் பி.ஆர்.ஒ. அவன் தான் இந்த தளத்தை எனக்கும் அடையாளம் காட்டியது.

    திருக்கண்ணபுரம் கோவிலின் படங்கள் கொள்ளை அழகு. சிறுமியாக வந்த பத்மாவதி உண்மையில் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் ஜொலிக்கிறார். மந்தகாசப் புன்னகையோடு காட்சியாளிக்கும் அந்த படம் உண்மையில் பார்த்துக்கொண்டே இருக்க தோன்றுகிறது.

    உங்கள் கண்களுக்கு மட்டும் இவைஎல்லாம் படுவது எங்களுக்கு வியப்பாக இருக்கிறது.

    பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் அல்லவா இறைவன்!

    திருவாரூர் பயண பதிவுகளை இன்றே அளித்தாலும் விடுப்பு எடுத்துக்கொண்டு படித்து முடித்துவிடுவேன். அத்தனை ஆவலாக இருக்கிறேன்.

    தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். பிரார்த்தனைகள்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. எப்பொழுதெல்லாம் இந்த பாட்டை கேட்கின்றேனோ, எனக்கு நெமிலி ஸ்ரீ பாலா ஞாபகம் வரும். Thanks for Sharing

  4. காணொளி கண்டதும் மீண்டும் படிக்க தூண்டிய பதிவு. நேரில் பத்மாவதி தாயார் தரிசனம் கண்டது போல் உள்ளது.

    சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
    சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள்

    பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
    பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது

    மின்னலை போல் மேனி அன்னை சிவகாமி
    இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
    பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
    பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்

    அன்னையே சரணம்.

    நன்றி சுந்தர் அண்ணா ..

  5. அருமையான பதிவு
    ஈசனையே P .R O என குறிப்பிட உங்களால் மட்டும் தான் சுந்தர் முடியும்.
    சலசலக்கும் நீர் நிறைந்த குளம் பார்க்க மிகவும் அழகாக உள்ளது.
    சௌரிராஜ பெருமாள் சௌரியின் வரலாறு சுருக்கமாக அழகாக கூறினீர்கள். பலர் அறிந்த கதையாக இருந்தாலும் அதை உங்கள் கைவண்ணத்தில் முழுமையாக ஒருமுறை படிக்க ஆசை.
    சிறுமியாக வந்து உங்கள் கருத்தை கவர்ந்தவள் எங்கள் மனதையும் கொள்ளையடித்தால்.
    இரண்டு நாள் ஆலய தரிசனம் எங்களுக்கு பல பதிவுகளை அளிக்கும் என்பது நிச்சயம்.
    நன்றி.

  6. திரு சென்கடங்குடி கோயில் அருகில் தான் உள்ளது . கவர் செய்தீர்களா?

  7. சார் வணக்கம் . அடியேன் பிறந்த ஆரூர் /// திருவாரூர் சார் . இந்த ஊரை சுற்றி 63 திரு கோவில்கள் உள்ளது . பார்க்க பார்க்க தெவிட்டாத இன்பம் கிடைக்கும்.

    தங்கள் பதிவுக்கு மிக மிக நன்றி. நானும் என் மனைவியும் , எனது மகளும் மருமகனும் எல்லோரும் பிறந்த ஊர் திருவாரூர் சார்.
    தங்கள்

    சோ . ரவிச்சந்திரன்
    கர்நாடகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *