சொற்பொழிவுகளில் குகனின் பெருமையையும் குருவின் பெருமையையும் பேசிவிட்டு பிறகு தான் சொற்பொழிவையே துவக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறோம்.
‘வள்ளிமலை அற்புதங்கள்’ தொடரில் அடுத்த அத்தியாயத்தை இன்று தைப்பூச ஸ்பெஷலாக அளிக்க நினைத்திருந்தோம். ஆனால் அந்த பதிவை நிறைவு செய்யமுடியவில்லை.
இப்போதைக்கு ஒரு கதையையாவது அளிக்கலாம் என்று கருதி இந்தப் பதிவை தருகிறோம்.
பிரபல சொற்பொழிவாளரும் நம் நண்பருமான செந்தமிழரசு திரு.கி.சிவக்குமார் அவர்கள் ஒரு சொற்பொழிவில் கூறிய கதையை அடிப்படையாக வைத்து நமது பாணியில் தந்திருக்கிறோம்.
* புகைப்படங்கள் இன்று சென்னை வடபழனியில் எடுத்தது
நீ தான் ஏற்கனவே வாங்கிட்டு போய்ட்டேயில்லே…?
அவர் ஒரு வணிகர். மிகவும் தரும சிந்தனை மிக்கவர். கைகளில் ஒரு பத்து ரூபாய் கட்டை எடுத்துக்கொண்டு தினந்தோறும் தனது ஊரில் உள்ள ரயில்நிலையம் சென்று, அங்கு ஒரு பெஞ்சில் அமர்ந்துகொள்வார்.
வரும் போகும் பிச்சைக்காரர்கள் அனைவருக்கும் தலா ஒரு பத்து ரூபாய் நோட்டை கொடுப்பார். இப்படி ஒரு தர்மாத்மாவா என்று ஊரே வியக்கும் அந்த மனிதரை பார்த்து.
அன்றும் அப்படித் தான் வியாபாரத்தை முடித்துவிட்டு ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் அமர்ந்துகொண்டார்!
முதலில் ஒரு வயதான கிழவி… “ஐயா தருமம் பண்ணுங்க சாமி”
“இந்த புடி பத்து ரூபாய்”
அடுத்து கிழிந்த பேண்ட் சட்டையணிந்த யாரோ ஒரு பரட்டைத் தலையன். ஆள்…நன்றாக இருக்கிறான். எந்த நோய் நொடியும் இல்லை. உழைப்பதில் சோம்பேறி அவ்வளவே.
தர்மப் பிரபு யாருக்கும் மறுக்கமாட்டார்.
“இந்தா நீயும் புடி பத்து ரூபாய்”
அடுத்து ஒரு கண் தெரியாத முதியவர்…. “சாமி கண்ணு ரெண்டும் தெரியாது. தர்மம் பண்ணுங்க”
“இந்தாங்க பெரியவரே பத்து ரூபாய்”
“நல்லாயிருக்கனும் சாமி”
========================================================
Don’t miss these…
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
வழியாற் காண மெய்யாய் விளங்கும் கந்தசஷ்டி கவசம்!
========================================================
அடுத்து, ஒரு பெண்மணி தனது கைக்குழந்தையுடன்..
“இந்த பத்து ரூபாய் குழந்தைக்கு பால் வாங்கிக் கொடு”
“ரொம்ப நன்றி ஐயா”
இப்படி பத்து ரூபாய் நோட்டாக தர்மம் செய்துகொண்டிருந்தார்.
அடுத்து முதலில் யாசகம் பெற்ற அதே பரட்டையன். மறுபடியும் இரண்டாம் முறை வாங்க வருகிறான்.
தர்மப் பிரபு பார்த்துவிட்டார்.
சரி போனால் போகிறதென்று கொடுக்கிறார்.
மீண்டும் வேறு பலர் வருகிறார்கள் தர்மம் வாங்கிச் செல்கிறார்கள்.
சற்று இடைவெளி விட்டு மீண்டும் அந்த பரட்டையன் வருகிறான்.
ஒரு கணம் யோசியுங்கள் அவர் என்ன சொல்வார் என்று.
“நீ தான் ஏற்கனவே வாங்கிட்டு போய்ட்டேயில்லே… மறுபடியும் மறுபடியும் வந்து நிக்கிறே… ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை தான். உனக்கு இல்லே போ”
தர்மப் பிரபுவின் பதில் சரியா?
அவரை விடுங்கள்… நீங்கள் அவரிடத்தில் இருந்தால் என்ன சொல்வீர்கள்?
அவர் சொன்னதில் என்ன தப்பு?
‘ஏற்கனவே யாசகம் பெற்று சென்றவன், மறுபடியும் மறுபடியும் வந்து வாங்கிக்கொண்டு சென்றால், எப்படி கொடுப்பதாம்?’
சரியாக சொன்னீர்கள். ஆணியடித்தாற்போல சொன்னீர்கள். சட்டசபையில் சொன்னது போல சொன்னீர்கள்.
ஆனால், நம் முருகப் பெருமானிடம் ஒருவன் எத்தனை முறை வேண்டுமானலும் போய் நிற்கலாம். வேண்டியதை கேட்கலாம்.
மறுக்கமாட்டான் மருதாச்சலமூர்த்தி.
“நம்ம குழந்தை நம்மகிட்டே கேட்காம யாருகிட்டே போய் கேட்பான்” என்று ஆறு கரங்களாலும் அள்ளிக்கொடுப்பானய்யா எங்கள் ஆறுமுகம்.
அது தான் முருகனுக்கும் மற்ற தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு. துதிக்காதவர்க்கும் அருள்பவன் தண்டபாணி தெய்வம்.
அனுதினம் அவனையே துதிப்பவர்களை பற்றி கேட்கவேண்டுமா ?
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழு பிறப்பிலும் உன்னை எட்டுவேன்
சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் – நான் மறவேன்
பக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன் – நான் வருவேன்
========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
If you wish to transfer fund in any other mode please drop in a mail to : editor@rightmantra.com or Call me at : 9840169215
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
========================================================
Also check :
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
‘ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்’ – வரிகளின் பின்னே ஒரு உண்மை சம்பவம்!
மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி!
“முருகா! முட்டாளே, மவனே, உன்னைச் சும்மா விடமாட்டேன்!!”
சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?
“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…
‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!
துதிக்காதவரையும் தடுத்தாட்கொள்ளும் தண்டாயுதபாணி!
========================================================
தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை! – யாமிருக்க பயமேன் ? (10)
தேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் ? (9)
நம் வாசகியின் மகனுக்கு வேல்மாறலால் கிடைத்த வேலை! – யாமிருக்க பயமேன் ? (Part 8)
‘வேல்மாறல் எனும் வரப்பிரசாதம்’ – உண்மை சம்பவம் – (Part 7)
‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)
நம் வாசகர் வீட்டில் ‘வேல்மாறல்’ செய்த அதிசயம் — யாமிருக்க பயமேன்? (Part 5)
கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)
இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)
வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)
வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)
========================================================
இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்”
கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!
சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)
புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)
நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!
அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !
மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”
========================================================
[END]
இனிய காலை வணக்கம்…. வெகு நாட்கள் கழித்து நான் பின்னூட்டம் இடுகிறேன். அதிக வேலை காரணமாக நம் தளம் பார்த்து நாட்கள் ஆகி விட்டது. மன்னிக்கவும். இன்னும் 5 , 6 பதிவுகள் உள்ளது. படித்து விட்டு பின்னூட்டம் இடுகிறேன்,
தைபூச பதிவு மனதில் நிற்கும் பதிவு. நம் குமரன் நாம் கேட்காவிட்டாலும் நம் கோரிக்கைகளை நிறைவேற்றுவான். கந்தன் இருக்க கவலை எதற்கு. நேற்று வடபழனி முருகனை தரிசிக்க வேண்டும் என நினைத்தேன். கூட்டமாக இருக்கும் என நினைத்து அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தேன். வடபழனி உற்சவரை நம் தளம் மூலமாக தரிசித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. எல்லோருக்கும் இந்த நாள் இனிய நாள் ஆக அமைய வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
முருகனின் பெருமையோடு இந்த நாள் துவங்கியமைக்கு மகிழ்ச்சி.
குட்டிக் கதை என்றாலும், கதையின் டுவிஸ்ட் எதிர்பாராதது. சிந்திக்க வைப்பது. உண்மை தான்.
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் – துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்
சொற்பொழிவில் கேட்டதை நினைவில் வைத்திருந்து கதையாக தருவது சாதாரண விஷயமல்ல.
முருகனருளால் உங்களுக்கு அது சாத்தியப்பட்டுள்ளது.
முருகா சரணம்
– பிரேமலதா மணிகண்டன்