Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, July 16, 2024
Please specify the group
Home > Featured > குருவை மிஞ்சிய சிஷ்யன் – எங்கே, எப்படி? RIGHTMANTRA PRAYER CLUB

குருவை மிஞ்சிய சிஷ்யன் – எங்கே, எப்படி? RIGHTMANTRA PRAYER CLUB

print
ந்துக்களின் புனித நகரான காசியிலே எண்ணற்ற மகான்கள் தோன்றியிருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் ஆக்ரஜி. சிறந்த விஷ்ணு பக்தரான இவர் பல நற்குணங்களை கொண்டவர். இவரது பக்தியின் தன்மையை கண்டு சாட்சாத் அந்த ஸ்ரீமன் நாராயணனே இவருக்கு அடிக்கடி காட்சி தந்து அளவளாவுவதுண்டு. அந்தளவு உத்தமர்.

ஒரு முறை காசியிலே தோன்றிய கடுமையான பஞ்சத்தையடுத்து மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது கூட மிகவும் சிரமமாயிருந்தது. இந்நிலையில் ஒரு இளம்விதவை, பஞ்சத்தின் கொடுமை தாளாமல், கங்கையில் வீழ்ந்து தற்கொலை செய்துகொள்ளும் முடிவுடன் தனது குழந்தையை  அழைத்து வந்து கரை மீது அதனை உட்காரவைத்து தான் கங்கையில் வீழ்ந்து மாண்டுபோனாள்.

தாயை காணாமல் தவித்த குழந்தை ஓவென்று அலறலாயிற்று. அந்தச் சமயம் அக்ரஜி நீராடும் பொருட்டு நதிக்கு வந்து சேர்ந்தார்.

அங்கே பால்மணம் மாறாத ஒரு குழந்தை அழுதுக் கொண்டிருப்பது கண்டு, ”அப்பா! குழந்தாய் உன் பெயர் என்ன? ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்.

அந்தக் குழந்தை தன் மழலை மொழியால், ”அம்மா காணாம போச்சு…. அம்மா வேணும்….” என்றது.

Thiruvelukkai-Sri-Azhagiyasinga-Perumal_011

குழந்தையின் வார்த்தையைக் கேட்ட அகர்ஜி குழந்தையின் தாயை நீண்ட நேரம் தேடியும் யாரும் கிடைக்காது குழந்தையை தன்னுடனேயே தனது மடத்துக்கு அழைத்துச் சென்று ‘நாபாஜி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.

அந்தக் குழந்தை மடத்திலேயே வசித்து வந்தது. அக்ரஜி பூஜை செய்யும் போதெல்லாம் உடனிருந்து பார்த்தபடியே அமர்ந்திருக்கும். மடத்திற்கு வரும் மகான்களை வணங்கி அவர்களுடைய நல்லுரைகளைக் கேட்கும். அவர்களுடன் பஜனையிலும் நாமக் ஸங்கீர்த்தனத்திலும் கலந்து கொள்ளும். ஆகா, சிறுவயது முதலே சத்சங்கதிலேயே அக்குழந்தை திளைக்க ஆரம்பித்தது.

இப்படியே குழந்தை நாபாஜி இளைஞன் நாபாஜி ஆனான். சூழ்நிலையினாலும், பூர்வ புண்ணியத்தினாலும், மிகச் சிறந்த அறிவாளியாகவும், பக்குவமான மனத்தை உடையவனாகவும் தெய்வபக்தி உடையவனவாகவும் ஆனான். ஒருநாள் அக்ரஜி விடியற்காலையிலே எழுந்து, நீராடி பூஜை முடித்து தம் அறைக்குள் ஒருவரையும் விடவேண்டாமென்று சொல்லிப் பின் தியானத்தில் அமர்ந்தார்.

Thiruvelukkai-Sri-Azhagiyasinga-Perumal

அக்ரஜியின் கட்டளைப்படி நாபாஜி வாயிலில் நின்று யாரும் தனது குருவை தொந்தரவு செய்துவிடாதபடி காவல்காத்துக்கொண்டிருந்தான்.

இங்கே அக்ரஜி விரும்பியபோதெல்லாம் காட்சி தரும் இறைவன் அன்று நீண்ட நேரமாகியும் வரவில்லை.

தம் முன் பகவான் தோன்றாதது பற்றி அக்ரஜி வருந்தினார்.

நாபாஜிக்கு முக்காலமும் உணரும் ஞானதிருஷ்டி இருந்ததினால், அக்ரஜி  வருந்துவதைக் அறிந்து உள்ளே சென்று, ”ஸ்வாமீ! கடலின் கொந்தளிப்பினால் ஒரு வியாபாரியின் கப்பல் முழுகும் நிலையில் இருக்கிறது. அவன் பரமபக்தன் ஆகையால் பகவானைக் காப்பாற்றும் படி வேண்டினான். மேலும் அக்கப்பல் தப்பினால் தங்களுக்கு மடத்துக் கைங்கர்யத்தின் பொருட்டு ஐந்தில் ஒரு பங்கு பொன் தருவதாகவும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான். பகவான் அவனைக் காக்க போயிருப்பதனால் தான் தங்களுக்கு சேவைக் கிடைக்கவில்லை” என்று சொல்லிவிட்டு மீண்டும் வாயிலில் நின்று காவல் புரியலானான்.

நாபாஜி சொற்கேட்ட பின் அவர் சற்று நேரம் அமைதியாகி பிறகு மீண்டும் தியானம் செய்யலானார். அப்பொழுது இறைவன் தோன்றி நாபாஜி கூறியது உண்மையே என்றும் தாம் அடியார் ஒருவரை காக்கவே சென்றதாகவும் அந்த அடியவனும் தான் காப்பற்றப்பட்டால் மடத்துக்கு பொன்னும் பொருளும் தருவதாகவும் வேண்டிக்கொண்டதாகவும் கூறினார்.

இறைவன் மறைந்ததும் அக்ரஜி  நாபாஜியை அழைத்து, ”நான் பலகாலமாக பக்தி செய்து இறைவனது அருளைப் பெற்றிருக்கிறேன். ஆனாலும் என் போன்றவர்களுக்கும் இறைவன் என்ன செய்கிறான் என்று விளங்குவதில்லை. வியாபாரிக்கு உதவியது உனக்கு எப்படி தெரிந்தது? ‘இந்த ஞான திருஷ்டி’ உனக்கு எப்படி உண்டாகிற்று?” என்றார்.

அதற்கு நாபாஜி, ”ஸ்வாமிஜி! நான் நாயினும் கடையேன். புண்ணியாத்மாவாகிய தங்களது தரிசனத்தினாலும், மடத்தில் அவ்வப்போது எழுந்தருளும் மகான்களின் அனுக்கிரகத்தினாலும், இறைவன் இந்த சக்தியை எனக்கு அளித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அதைக் கொண்டுதான் இறைவன் வியாபாரிக்கு உதவியதை அறிந்தேன். இவையெல்லாம் தாங்கள்  இட்ட பிச்சைதான். எனக்கு மெய் ஞானத்தை ஊட்டியது தாங்களேயன்றோ?” என்றான்.

தமது அருமையான சீடனை நோக்கி மன மகிழ்ந்தார் அக்ரஜி. இப்படிப்பட்ட அருமையானதொரு சக்தியை நல்ல முறையிலே உலகினருக்கு பயன்படும் வகையில் செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவரது மனதில் உதித்தது. உடனே நாபாஜியை நோக்கி, ”உனது கூர்மையான அறிவும் பக்தியும், உலகில் என்றென்றும் நிலைத்திருக்கும் படி பக்தர்களது அருமையான சரித்திரங்களையெல்லாம் குவாலியர் பாஷையிலும், பிராக்கிருத பாஷையிலும் எழுதுவாயாக” என்று கட்டளையிட்டார்.

குருநாதரது கட்டளையை சிரமேற் கொண்டு நாபாஜி தமது அற்புதமான நடையிலே பாகவதோத்தமர்களின் சரித்திரங்களையெல்லாம் தொகுத்து ஒரு பெருங்கடல் போல் எழுதி வைத்து பிற வசனமும் செய்தார். இந்த அரும்பெரும் செயலை செய்து முடித்ததன் பொருட்டுப் பண்டிதரும் பாமரரும், ஏழைகளும், செல்வந்தர்களும் தம்முள் பேதமின்றி அவரை ஒருமுகமாகப் புகழ்ந்தனர். இவர் செய்த நூலையே முதனூலாகக் கொண்டு நாட்டின் பல்வேறு மொழிகளிலும் பக்தர்களின் சரிதங்கள் வெளி வரலாயின.

இங்கே சேக்கிழார் எப்படி ஒவ்வொரு ஊராக சென்று திருத்தொண்டத்தொகையை அடிப்படையாக கொண்டு சிவனடியார்களின் திவ்ய சரிதமான பெரிய புராணத்தை எழுதினாரோ அதே போன்று நாபாஜி திருமால் அடியவர்களின் சரிதத்தை எழுதினார். ஆக… நாபாஜி வடநாட்டு சேக்கிழார் என்றால் மிகையாகாது.

தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.

(Photograpsh courtesy : Anudinam.org)

=============================================================

சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…

Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

தொடர்புக்கு : Rightmantra Sundar | M: 9840169215 | E : editor@rightmantra.com

=============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோவிலில் மங்கள வாத்தியக் கலைஞராக தொண்டாற்றும் நாதஸ்வர வித்துவான் திரு.டி.கே.சதாசிவம் அவர்கள்

தெய்வம் இருப்பது எங்கே…?

எத்தனையோ இசை வாத்தியங்கள் உள்ளன. ஆனால் அவற்றுக்கு எல்லாம் ‘மங்கள வாத்தியம்’ என்ற பெருமை இல்லை. நாதஸ்வரத்துக்கும், தவிலுக்கும் மட்டும் தான் அந்தப் பெருமை உண்டு.

ஆலயங்களில் தினமும் விடியற்காலை இறைவனுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையின்போது தவில் & நாதஸ்வரம் ஆகிய மங்கள வாத்தியங்கள் இசைக்கப்படுவதுண்டு.

Thirumazhisai

சுபநிகழ்சிகளிலும் கோவில்களிலும் தவறாமல் ஒலித்து வந்த நாதஸ்வர இசை காலப்போக்கில் குறைந்து, இன்றைக்கு அழிந்து வரும் நிலையில் உள்ளது. இந்த கலைஞர்களை ஆதரிக்க வேண்டியது நமது தலையாய கடமை.

ஆலய வழிபாட்டில் அபிஷேக ஆராதனைகளில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த மங்கள வாத்தியக் கலைஞர்கள் பலர் அறநிலையத்துறையின் தற்காலிக ஊழியர்களே. விற்கும் விலைவாசிக்கும், அரசு இவர்களுக்கு வழங்கும் ஊதியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. திருமண நிகழ்சிகளில் மேற்கத்திய இசை ஆதிக்கம் செலுத்திய பிறகு இவர்களுக்கும் ஜீவாதாரத்திற்கு வேறு வழி இல்லாமல் போய்விட்டது.

Sadhasivam4இன்னும் சில ஆண்டுகள் கழித்து கோவில்களில் இது போல மங்கள வாத்தியக் கலைஞர்களை பார்க்க முடியுமா என்று தெரியாது. இருக்கும் ஒரு சிலரின் அருமையையாவது நாம் உணர்ந்து அவர்கள் போற்றவேண்டியது நம் கடமையல்லாவா?

எனவே கோவில்களுக்கு எப்போது சென்றாலும் மங்கள வாத்திய கலைஞர்களை பார்க்க நேர்ந்தால் அவர்களை கௌரவிப்பதை, நம்மாலான சிறு சிறு உதவிகள் செய்வதை நான் வழக்கமாக கொண்டிருக்கிறேன். இதை ஒரு யஞ்யமாகவே செய்துவருகிறேன். இதில் கிடைக்கும் மனநிறைவு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

எதிர்பாராமல் கிடைக்கும் அந்த உதவிகளால் இவர்கள் முகத்தில் ஏற்படும் அந்த ஒரு மலர்ச்சிக்கு ஈடு இணை எதுவும் இல்லை.

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவன் இறைவனல்லவா?

Sadhasivam

14/01/2016 காலை மார்கழி கடைசி நாள் தரிசனத்திற்காக திருமழிசையாழ்வார் அவதாரத் தலமான திருமழிசை ஜகந்நாதப் பெருமாள் கோவிலுக்கு சென்றிருந்தேன். நாம் சென்றபோது நேரம் எப்படியும் 5.30 இருக்கும். அப்போதே கோவிலில் அமர்ந்து தனுர் மாத விடியற்காலை பூஜைக்கு நாதஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தார் இவர்.

கேட்க கேட்க அத்தனை சந்தோஷம். பரவசம்.

இவரது பெயர் சதாசிவம். 12 வயது முதல் நாதஸ்வரம் வசித்துவருகிறார். அப்பா இதே ஊர் தான். அவர் தவில் வித்துவான்.

அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசி, மரியாதை செய்தவுடன், நம்மிடம் வெகு ஆர்வமாக… “சார்… நாளைக்கு காலைல 5.00 – 5.30 ராஜ் டி.வி. பாருங்க சார். பொங்கல் சிறப்பு மங்கள இசையில் நான் நாதஸ்வரம் வாசிக்கிறேன் சார்…” என்றார் பெருமை பொங்க.

நமது மதிப்பு தெரிந்த ஒருவர் வந்திருக்கிறாரே… அவரிடம் சொல்வோம் என்று நினைத்தாரோ என்னவோ… உள்ளுக்குள் தேக்கி வைத்திருந்த அந்த பரவசம் மடைதிறந்த வெள்ளமாய் வெளிவந்தது.

“அவசியம் பார்க்குறேன் சார்… என் நண்பர்களையும் பார்க்கச் சொல்றேன்…” என்றோம்.

அவரை ஒரு ஹீரோவாக உணரச் செய்யும் பொருட்டு… அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். நமது பாரம்பரியம் அழியாமல் பார்த்துக்கொள்ளும் சதாசிவம் போன்றவர்கள் நிஜ ஹீரோக்கள் தானே…?

வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
தெய்வம் ஏற்கும் உனது தொண்டு!

=============================================================

தேவார பாடசாலை மாணவர்களுடன் சுற்றுலா

நாளை (17/01/2016) குன்றத்தூர் நாகேஸ்வரர் கோவில் தேவார பாடசாலை மாணவர்களுடன் சுற்றுலா (சாத்தனூர், வையாவூர், திருவோத்தூர், திருவண்ணாமலை) செல்லவிருக்கிறோம்.

Kundrathur Devara Students

ஒரு நாள் பயணம். நிகழ்ச்சி ஏற்பாடு முழுக்க முழுக்க தேவார பாடசாலை நிர்வாகத்தினர் செய்துள்ளனர். பேருந்து கட்டணம் மட்டும் நம் தளம் சார்பாக வாசகர் ஒருவரிடம் பேசி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுடன் திருமுறை ஆசிரியர் திரு.சங்கர் அவர்களும் உதவி ஆசிரியர்களும் வரவிருக்கின்றனர். நமது தளம் சார்பாக நாம் செல்லவிருக்கிறோம்.

பயணம் முடிந்து வந்தவுடன் அது குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறோம்.

=============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் முதலாமவர்கள் லலிதா பத்மநாபன் தம்பதியினர், சில வாரங்களுக்கு முன்னர் தான் நமக்கு அறிமுகம்  ஆயினர். பிள்ளையின் மகிழ்ச்சியே தங்கள் மகிழ்ச்சி என்று கூறி, தங்கள் மகன் தற்போதிருக்கும் நிலைமை பற்றி தங்கள் கவலையை பகிர்ந்துகொண்டார்கள்.

அவர்கள் இருப்பது மதனந்தபுரம் என்பதால், புத்தாண்டு பிள்ளையார் அபிஷேகத்துக்கு வந்திருந்து அபிஷேகத்தில் கலந்துகொண்டு ஆனைமுகனின் அருளை பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். நமது ஆலோசனையின் பேரில், பிள்ளையார் அபிஷேகத்துக்கு தேன் வாங்கிவதார்கள். அபிஷேகத்திலும் பூஜையிலும் பங்கேற்று சென்றார்கள்.

நமது ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ நூலில் இடம்பெற்றுள்ள பிரார்த்தனை படிவத்தின் மூலம் தங்கள் கோரிக்கையை அனுப்பியிருக்கின்ர்ணனர்.

அடுத்தவர் முகநூல் மூலம் நம் தளத்தை பற்றி அறிந்து பிரார்த்தனையை சமர்பித்திருக்கிறார். அவருடைய பிரார்த்தனையும் விரைவில் நிறைவேறும் என்பது திண்ணம்.

இருவருமே கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில் திருமழிசை ஜகந்நாதரை தரிசித்து நன்றி தெரிவித்துவிட்டு பின்னர் அதே திருமழிசையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் உள்ள குளிர்ந்த நாயகிக்கு பாலாபிஷேகம் செய்யவேண்டும். (இங்கு அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு!).

பொதுப் பிரார்த்தனை மிகவும் அவசியமான ஒன்று. ஏன் என்பதன் காரணத்தை விளக்கியிருக்கிறோம்.

நல்லது  நடக்கும். விரைந்தே நடக்கும். வாழ்க வளமுடன், அறமுடன், நலமுடன்.

=============================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

மகனின் வாழ்க்கை வளம் பெறவேண்டும்; வியாபாரம் நன்றாக நடக்கவேண்டும்!

ரைட்மந்த்ரா வாசகர்களுக்கும் ஆசிரியருக்கும் நமஸ்காரம்.

அமெரிக்காவில் நல்ல வேளையில் இருந்த எங்கள் மகன் பாலகோபால் பத்மநாபன் வேலை பிடிக்காமல் அதை துறந்து தற்போது புதிய பிசினஸ் ஒன்றை துவக்கியிருக்கிறான். இடைப்பட்ட காலத்தில் பல்வேறு கடன்கள் அவனுக்கு ஏற்பட்டிருக்கின்றன. தற்போது துவக்கியுள்ள புதிய வியாபாரம் நன்றாக நடந்து, அவனுக்கிருக்கும் கடன்கள் எல்லாம் அடைக்கப்பட்டு, நிரந்தரமாய் நல்லதொரு வருமானம் அவனுக்கு கிடைக்கவும், அவன் தன் மனைவி குழந்தையுடன் சந்தோஷமாக மனநிம்மதியுடன் இருக்கவும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

பத்மநாபன், லலிதா பத்மநாபன்,
மதனந்தபுரம்,
போரூர், சென்னை – 125

=============================================================

Want Santhana Prapthi!

Dear Sir,

Greetings.

I got to know about Right mantra through face book and immediately felt some relief on seeing the website.

Name (Self): Priya  Husband : Venkat

We are married for 7+ years and we do not have any issues.  We underwent medical treatments for having baby, but they did not give us any success. Though both of us are medically fit, we are unable to conceive naturally and  we are now pushed to a situation  where we are forced to undergo higher levels of medical treatments for having a baby (due to age, married years etc) and as smaller treatments were unfortunately unsuccessful.

Please pray for us to be blessed with a child very soon and  without much of a medical involvement as it involves physical and  mental pain + finances. Maha Periyava can alone help change the situations. So please pray for us.

Request your kind blessings and prayers again.

Regards
Priya and Venkat

=============================================================

பொது பிரார்த்தனை

ஜல்லிக்கட்டு நடைபெறவேண்டும் !

தமிழர்களின்  பாரம்பரியங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு இன்று நீதிமன்றத்தின் தடை காரணமாக முடங்கிப் போயிருக்கிறது. இது தமிழகத்தின் உதிரத்தோடு ஊறிய ஒரு வீரவிளையாட்டு என்பதை நீதிமன்றத்தில் சரியான முறையில் வைக்க வழக்கறிஞர்கள் தவறிவிட்டனர்.

Jallikkattu

ஜல்லிக்கட்டை முன்னைப் போல இஷ்டத்துக்கு நடத்த முடியாத வகையில் பல நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்தது. அதை ஏற்றுகொள்வதாக ஜல்லிக்கட்டு சம்மேளனம் கூறியபோதும் தடை விதிக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

ஜல்லிக்கட்டு என்பது மனிதர்கள்  தங்கள் வீரத்தை வெளிக்காட்டுவதற்காக நடத்தப்படும் விளையாட்டு மட்டுமல்ல.  காளைகளின் ஓட்டத் திறனையும், உடல் வலிவையும் வெளிப்படுத்தும் நிகழ்வாகவும்  அது திகழ்கிறது. எந்த அளவுக்கு தனது காளையை ஆரோக்கியமாக அதன் உரிமையாளர்  வளர்த்திருக்கிறார் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் செயலாகவும்  வெளிப்படுகிறது.

ஏனெனில் ஜல்லிக்கட்டு நடக்கும் காலம் தவிர்த்து மற்ற  நேரங்களில் இனப்பெருக்கத்துக்காகவே அந்தக் காளைகள் பயன்படுகின்றன. காளைகளை  அடக்குபவர்கள் மட்டுமல்ல பசுக்களை வைத்திருக்கும் விவசாயியும்  ஜல்லிக்கட்டுக்கு செல்கிறார். எந்த காளையுடன் தனது பசு சேர வேண்டும் என்று  தீர்மானிக்கிறார். அதாவது, மாடுகளுக்கான சுயம்வர நிகழ்ச்சியே ஜல்லிக்கட்டு.

இந்தியாவில்  35 வரையறுக்கப்பட்ட நாட்டின மாடுகள் உள்ளன. தமிழக ஜல்லிக்கட்டில்  உம்பளாச்சேரி, காங்கேயம், புலிக்குளம், பர்கூர் ஆகிய காளைகள்  பயன்படுத்தப்படுகின்றன. இவை ஐந்தும் பழம்பெருமை வாய்ந்தவை. நூற்றுக்கணக்கான  ஆண்டுகளாக நம் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி அடைந்தவை.

ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற்றால் தான் நமது நாட்டில் உழவும் தொழிலும் சிறந்து விளங்கும். இல்லையேல் ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்பட்ட காளைகள் அடிமாடுகளாக விற்கப்பட வாய்ப்பிருக்கிறது.

மாட்டுக்கும் மனிதர்களுக்கும் பங்கம் இல்லாமல் ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்தில்லை. அதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகளை வரையறுத்து முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மாறாக, ஜல்லிக்கட்டையே ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்துவது முறையல்ல!

=============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgசென்னை மதனந்தபுரத்தை சேர்ந்த பத்மநாபன், லலிதா பத்மநாபன் தம்பதியினரின் மகன் திரு. பாலகோபால் அவர்கள் துவக்கியுள்ள வியாபாரம் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்து, அவரது செல்வம் விருத்தியடைந்து சகல சௌபாக்கியங்களையும் அவர் பெறவும், அவர் தம் பெற்றோர் மகிழவும், திருமதி.ப்ரியா மற்றும் வெங்கட் தம்பதியினருக்கு சந்தான ப்ராப்தி கிட்டி, அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கவும் இறைவனை வேண்டுவோம்.

அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழகத்தின் வீரவிளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு ஏற்பட்டுள்ள சோதனை நீங்கி, ஜல்லிக்கட்டு இனிதே நடைபெறவும், நாமமது பாரம்பரியாம் காக்கப்படவும், கால்நடை இனங்கள் பல்கிபெருகவும் இறைவனை வேண்டுவோம்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள திரு.சதாசிவம் அவர்களின் தொண்டு மேன்மேலும் சிறக்கவும், மங்கள வாத்தியக் கலைஞர்கள் தம் வாழ்க்கைத் தரம்  மேம்படவும்,அவர்கள் பொருளாதார ரீதியிலான தன்னிறைவை அடையவும் இறைவனை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜனவரி 17, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

வழக்குகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு!

அடுத்த பிரார்த்தனை கிளப் வழக்குகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது. அந்த பிரார்த்தனைக்கு வழக்கறுத்தீஸ்வரர் கோவில் குருக்கள் திரு.நாகராஜ் குருக்கள் தலைமை ஏற்கவுள்ளார். எனவே வழக்குகளால் இன்னல்படுபவர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும் இறுதியில் அவரவர் அலைபேசி எண், பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட்டு நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

பிரார்த்தனை கோரிக்கை மட்டும் அவரவர் பெயர் மற்றும் ஊருடன் தளத்தில் அளிக்கப்படும். பெயர், ராசி, நட்சத்திரம் வழக்கறுத்தீஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய பயன்படும். ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் வெளியிடப்படாது!

சந்தேகங்களுக்கு நம்மை அலைபேசியில் தொடர்புகொள்ளவும்! பெயரோ ஊரோ வெளியிட விரும்பவில்லை என்றால் அதையும் குறிப்பிட்டு அனுப்பவும். அவர்கள் பெயர்கள் இல்லாமல் பிரார்த்தனை வெளியிடப்படும்.

For more details please check :

ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!

==========================================================

சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…

Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056 | IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033. | Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்திராள் வேத பாடசாலையில் வேதம் (கிரமம்) படித்து வரும் திரு.வேங்கட நரசிம்மன்

சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமையேற்ற வேங்கட நரசிம்மன், அந்த ஞாயிறு திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் அதிருத்ர பாராயணத்தில் இருந்தபடியால அந்த ஞாயிறு ருத்ர பாராயணதின்போது நமக்காக பிரார்த்தனை செய்தார்.

 அதிருத்ர பாராயணத்தின்போது
அதிருத்ர பாராயணத்தின்போது

அடுத்த வாரம், பகவன் நாம போதேந்திராள் அதிஷ்டானத்தில் பிரார்த்தனை செய்தார். கிடைப்பதர்க்கரிய பாக்கியம் இது.

குருவருளும் திருவருளும் ஒரு சேர கிடைத்தமையால் நிச்சயம் சென்ற வாரம் கோரிக்கை சமர்பித்தவர்களின் பிரார்த்தனை அதிசீக்கிரம் நிறைவேறும் என்பது திண்ணம்.

Venkata Narasimman 3
போதேந்திராள் அதிஷ்டானத்தில்

நமக்காக பிரார்த்தனை செய்த வேங்கட நரசிம்மனுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

* பிரார்த்தனைக்கு விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

=============================================================

[END]

One thought on “குருவை மிஞ்சிய சிஷ்யன் – எங்கே, எப்படி? RIGHTMANTRA PRAYER CLUB

  1. இந்த பதிவின் மூலம் நாபாஜியின் அபார சக்தியை கண்டு மெய் சிலிர்த்தேன். தெரியாத கதையை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து பிரார்த்தனை பதிவை மெருகேற்றிவிடுவது தங்களின் தனித்துவம்…வாசகர்களின் கோரிக்கை நிறைவேற ஈசன் அருள்புரிவான்

    வாழ்க வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *