வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஒரு DEFINITION கொடுப்பது சுலபமல்ல. அவரவர் பார்வையில் வெற்றிகரமான வாழ்க்கை என்பதன் அர்த்தம் வேறு. சமூகத்தின் பார்வையில் அதன் அர்த்தம் வேறு. ஆண்டவனின் பார்வையிலோ அது முற்றிலும் வேறு.
இந்த ஊர்லயே எட்டு கார் வெச்சிருக்கிறது நான் ஒருத்தன் தான் சார்…
படித்து பட்டம் பெற்று பல நாடுகளுக்கு சென்று பொருளீட்டி, புதிய வியாபாரத்தை துவக்கி வெற்றி மேல் வெற்றி குவித்த இளைஞன் அவன். அவன் தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றவொரு பெண்ணை ஊரே வியக்கும்படியான ஆடம்பரத்துடன் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்தி வந்தான். அவன் சுகபோகத்தை துய்க்க ஒரு பெரிய உறவினர் பட்டாளமே அவன் வீட்டில் இருந்தது.
முன்பு அவன் படித்து பட்டம் பெற்று பிரிவுபச்சாரம் பெற்ற நேரம், அவன் கல்லூரி ஆசிரியர் அனைத்து மாணவர்களிடமும் “உங்களில் யாரேனும் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டதாக கருதினால் என்னை அப்போது தொடர்புகொள்ளுங்கள். நான் உங்களை வந்து நேரில் பார்க்கிறேன்!” என்று கூறியிருந்தார்.
இவனுடன் படித்த மாணவர்களில் பலர் வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்தாலும் இவன் அளவுக்கு யாரும் வாழ்க்கையில் உயரவில்லை. அது அவனுக்கும் தெரியும்.
நமது ஆசிரியரை அழைத்து நமது தற்போதைய அந்தஸ்து பற்றி சொல்வோம். அவர் மகிழ்ச்சியடைவார் என்று கருதி அவரை தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தான்.
ஆசிரியரும் புறப்பட்டு வந்தார்.
அவருக்கு தனது பங்களாவை சுற்றிக் காண்பித்தவன், இது போன்று தனக்கு இதே ஊரில் மேலும் இரண்டு வீடுகள் இருப்பதாகவும், தவிர முக்கிய நகரங்களில் பல ஃபிளாட்டுகள் இருப்பதாவும் பெருமை பொங்க சொன்னான்.
ஆசிரியர் எந்த வித பாராட்டுக்களும் கூறவில்லை. அவன் சொன்னதை கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து இதுவரை அவன் சென்ற உலக நாடுகளை பட்டியலிட்டவன் ஆசிரியரின் ரீயாக்ஷனை கவனித்தான். இம்முறையும் அவர் எதுவும் சொல்லவில்லை.
தன்னுடைய முன்னேற்றத்தை பார்த்து அவரிடமிருந்து ஏதேனும் பாராட்டுக்கள் வரும் என்று எதிர்பார்த்தவன் அவரிடமிருந்து அப்படி எதுவும் வராதது கண்டு ஏமாற்றமடைந்தான்.
“இந்த ஊர்லயே எட்டு கார் வெச்சிருக்கிறது… நான் ஒருத்தன் தான் சார்…” என்றான் அடுத்து சற்று பெருமிதத்துடன்.
அந்த நேரம், அவன் டிரைவர் அவனிடம் வந்து தனக்கு வீட்டுக்கு கிளம்ப நேரமாகிவிட்டது என்றும் தான் போகலாமா என்றும் கேட்டான்.
“சரி சாவி கொடுத்துட்டு நீ கிளம்பு. நாளைக்கு காலைல 5.00 மணிக்கெல்லாம் வந்துடு. கோவிலுக்கு போகணும்…” என்றான்.
“எனக்கு முதல் பஸ்ஸே 5.30 மணிக்கு தான் சார்… 6.00 மணிக்கு தான் வரமுடியும்”
“சரி… 6.00 மணிக்கு ஷார்ப்பா வந்துடு” என்று அவனை அனுப்பிவிட்டு தனது ஆசிரியருடன் பேச்சை தொடர்ந்தான்.
“இந்த டிரைவர் எத்தனை நாளா உன்கிட்டே வேலை பார்க்குறார்?”
“ஒரு ரெண்டு வருஷமா இருக்கும்… ஏன்…?”
“அவர் வீடு எங்கேயிருக்கு…?”
“ஒரு பத்து கி.மீ. தள்ளி ஒரு ரெஸிடென்சியல் ஏரியாவுல…”
“தினமும் வேலைக்கு எப்படி வர்றார்?”
“பஸ்லே தான்”
“ம்… எட்டு கார் வெச்சிருக்குற உனக்கு உன் டிரைவர் வந்துட்டு போறதுக்கு ஒரு டூ-வீலராவது வாங்கித் தரணும்னு தோணலியா??”
“அது… வந்து… வந்து….”
“நம்முடைய வெற்றி அடுத்தவர்களிடம் ஆக்கப்பூர்வ பாதிப்பையோ மாற்றத்தையோ ஏற்படுத்தாத வரையில் அது வெற்றியே அல்ல. எப்போது உன் செல்வம் அடுத்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை சிறிதாவது உயர்த்துகிறதோ அல்லது அவர்களின் அன்றாட பிரச்சனைகளை சிறிதளவாவது தீர்க்கிறதோ அப்போது தான் நீ செல்வந்தன். அதுவரையில் நீ வறியவனே” என்று கூறிவிட்டு விடைபெற்றார்.
தன் ஆசிரியர் கூறியதில் உள்ள நியாயத்தை உணர்ந்து அன்றே தனது டிரைவர், வேலைக்கு வந்து போக ஒரு புதிய டூ-வீலரை தனது அன்பளிப்பாக வாங்கித் தந்தான் அந்த இளைஞன்.
சிலரிடம் இருக்கும் பணமோ அந்தஸ்தோ அவர்களின் டம்பத்தை பறைசாற்றுவதாகத் தான் இருக்குமே தவிர அதனால் யாருக்கும் எந்த பயனும் இருக்காது.
உங்கள் வெற்றி அடுத்தவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தாத வரையில் அது வெற்றியே அல்ல.
================================================
ஒரு படைப்பாளியின் உண்மையான வெற்றி எது?
எது ஒன்று சுலபமாக கிடைக்கிறதோ அதன் அருமையை எவரும் உணர்வதில்லை என்று சொல்வார்கள். நம் தளம் வணிக ரீதியாக இயங்குவதல்ல என்பது உங்களுக்கு தெரியும். வாசகர்களுக்கு எந்த நிர்பந்தத்தையும் அளிக்காமல் அவர்கள் மனமுவந்து அளிக்கும் ‘விருப்ப சந்தா’ அல்லது ‘நிதி’யின் அடிப்படையில் தான் – ஒரு தனி அலுவலகம் அமைத்து – இந்த தளம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வீட்டுக்கு ஏற்படும் செலவைப் போல ஒவ்வொரு மாதமும் தளத்திற்கும் பல செலவுகள் இருக்கின்றன. வசதியும் ஓரளவு வருவாயும் உள்ள பலர் இது பற்றி யோசிக்கக் கூட மனமில்லாமல் நமது பதிவுகளை ஆண்டுக் கணக்கில் படித்து வருவது வேதனை அளிக்கிறது.
பதிப்புலகில் நாம் காலூன்றி படைப்புக்களை வருவாயாக மாற்ற சிறிது காலம் பிடிக்கும். நம் வாசகர்களின் எண்ணிக்கை சுமார் 3000 – 5000 வரை தான். இதில் தளத்தை ரெகுலராக பார்ப்பவர்கள் அதாவது விடாமல் பார்ப்பவர்கள் 2000 க்கும் கீழே தான். சுமார் 50,000 பேராவது ஒரு நாளைக்கு பார்த்து பலனடைய வேண்டிய ஒரு தளம் அதுவும் இறையருளால் தனித்தன்மையுடன் நடக்கும் ஒரு தளம் குறைந்த வாசகர்களால் படிக்கப்படுவது மிகப் பெரிய சோகம். முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் நம் பதிவுகள் பல திருடப்பட்டு தினசரி வெளியாகிறது. தற்போது நாம் COPY PROTECT செய்திருந்தாலும் முன்பு அளிக்கப்பட்ட பல பதிவுகள் பரவலாக பல FORUM களில் வெளியிடப்பட்டிருந்தன. அவற்றை அப்படியே சிலர் எடுத்து தங்களுடைய படைப்பை போல வெளியிட்டு பாராட்டு பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் நம் தளத்தை மறந்தும் கூட இதுவரை ப்ரோமொட் செய்யாதவர்கள் செய்யவும் மனமில்லாதவர்கள். அவர்களுள் சிலர் பொருளாதார ஆதாயங்களுக்கு கூட பயன்படுத்தி வருகிறார்கள். நமது பதிவுகளை முகநூலில் கூட ஷேர் செய்ய மனமில்லாதவர்கள் அவர்கள். நம்மை கவனமாக இருட்டடிப்பு செய்து நமது படைப்புக்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். எந்த விதத்தில் இது நியாயம்? (அட்லீஸ்ட் உங்க ப்ரெண்ட்ஸ் நாலு பேருக்கு இப்படி ஒரு வெப்சைட் இருக்குன்னு சொன்னீங்கன்னா கூட மனசு ஆறிப்போய்டும்யா!) சில நண்பர்கள் அதை நம் பதிவு என்று தெரியாமல் வெளியிடுகிறார்கள். அவர்களிடம் “இது ரைட்மந்த்ரா படைப்பு… என் உழைப்பு!” என்று கூறி நம் தளத்தின் பெயரை வெளியிடுமாறு கேட்டுக்கொள்வது மிகவும் சங்கடமாக உள்ளது. இதைத் தவிர்ப்பது சவாலான விஷயம்.
வாசகர்களை நாம் கேட்டுக்கொள்வதெல்லாம் நீங்கள் நமது தளத்தையும் படைப்புக்களையும் தங்கள் சுற்றத்தினரிடமும் நண்பர்களிடமும் கொண்டு செல்லவும். ஒவ்வொரு வாசகரும் குறைந்தது ஐந்து புதிய வாசகர்களையாவது நம் தளத்திற்கு ஒவ்வொரு மாதமும் அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
ஒரு சிலர் தங்களுக்கு புண்ணியம் சேர்க்க மட்டுமே நம்மிடம் வருகிறார்கள். பிறகு கறிவேப்பில்லையாக நம்மை வீசிவிட்டு போய்விடுகிறார்கள். இந்த தளம் எப்படி நடக்கிறது என்பது தெரிந்தும்.
வருவாய் முக்கியம் தான். ஆனால் அதைவிட முக்கியம் படைப்பின் ரீச். தனது படைப்பு அதிகம் பேர்களை சென்றடைகிறது என்பது தான் ஒரு படைப்பாளிக்கு உண்மையான வெற்றி. அந்த வெற்றி நமக்கு இன்னும் எட்டாக்கனி தான். நம்மால் செய்யக்கூடியது என்றும் எப்போதும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கொடுக்கக் கூடிய உழைப்பு தான். இந்த உழைப்பு நற்பலன்களை பெற்றுத் தந்து நம் அனைவருக்குமே வாழ்க்கையில் ஏற்றமும் மாற்றமும் பெற்றுத் தர இந்த நன்னாளில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்!
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
– மகாகவி பாரதி
================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
================================================
Also check…
எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??
‘வாழ்க்கைத் துணை’ (LIFE PARTNER) என்றால் என்ன?
எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!
வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?
எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?
What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?
இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!
பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?
ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?
விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?
நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?
‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?
சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?
இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?
நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!
அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?
நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!
மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?
================================================
[END]
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு monday spl படித்த திருப்தி.
நல்லதொரு காரணம் கொண்ட அருமையான பதிவு.
தான் மட்டுமல்லாமல் தன்னை சார்ந்தவர்களையும் கவனித்து அவர்களுக்கு வேண்டியது செய்தால் தான் நாம் செய்த நல்ல காரியங்களுக்கு நமக்கு ஒரு திருப்தி இருக்கும்.
வெற்றிகரமான வாழ்க்கைக்கு அருமையான விளக்கம். பொருத்தமான குட்டிக் கதை. கதைக்கு மெருகூட்டுவது போன்ற புகைப்படங்கள். அதுவும் இறுதியில் இடம்பெற்றிருக்கும் ஒத்தாண்டேஸ்வரர் கோவில் கோபுரம் அழகு கண்ணை பறிக்கிறது. பார்க்க வேண்டிய கோவில்கள் பட்டியல் அதிகரித்துக் கொண்டே போகிறது. எப்போது பார்க்கப்போகிறேனோ தெரியவில்லை.
இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள punch சூப்பர்.
– பிரேமலதா மணிகண்டன்
மேட்டூர்
நம் வெற்றியின் மூலம் அடுத்தவர்களும் மன நிறைவை ஏற்படுத்துமாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை அழகான தங்கள் நடையில் எழுதி உள்ளீர்கள் படங்கள் மிகவும் அருமை நம்மால் முடிந்த வரை இந்த தளம் பல பேர் பார்க்கும் தளமாக கண்டிப்பாக மாற்றுவோம்
வாழ்க வளமுடன்
நன்றி
உமா வெங்கட்