சுந்தரர் பல்வேறு தலங்களை தரிசித்துவிட்டு திருப்புக்கொளியூரில் (இன்றைய அவினாசி) முதலை விழுங்கிய பாலகனை மீட்டுக் கொடுத்துவிட்டு தனது நண்பர் சேரமான் பெருமானை காண திருவஞ்சைக்களம் சென்றார்.
(Before proceeding please read : பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்! )
கற்றாரை காமுறுவர் என்பது போல, சேரமான் பெருமான் சுந்தரரை தனது குருவாகவே ஏற்று போற்றி வந்தான். சுந்தரரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகளை செய்தான். சேரமானின் இந்த ஏற்பாடுகளை கண்டு வியந்த சேரநாட்டு மக்கள் அவர்கள் நட்பை எண்ணி வியந்தனர்.
சுந்தரர் வந்ததும் அவரை சகல மரியாதையுடன் வரவேற்று அழைத்துச் சென்று, இருவரும் பேசி மகிழ்ந்தனர். ஈசன் தன்னிடம் புரிந்த பல்வேறு லீலைகளை சுந்தரர் கூற, அது கேட்டு மெய்சிலிர்த்த சேரமான் ஈசனுக்கும் தம் நண்பர் சுந்தரருக்கும் உள்ள நேசத்தை கண்டு உவகையடைந்தான்.
சில காலம் சென்றது… சுந்தரர் மேலும் சில கோவில்கள் சென்று இறைவனை துதித்து பதிகங்கள் பாடினார். இந்நிலையில் சுந்தரருக்கு உலக வாழ்க்கையில் சலிப்பு தோன்றியது.
“நான் வந்த நோக்கம் முடிந்தும் கூட நான் ஏன் இன்னும் இந்த புவியில் ஈசனை தேடிக்கொண்டிருக்கிறேன்? இந்த இளமையும் வாழ்க்கையும் நிலையற்றது. அது புரிந்தும் கூட ஏன் இன்னும் இந்த பூமியில் இருக்கவேண்டும் ? ஈசனின் திருவடிகளே என்றும் நிரந்தரம். இறைவா… இந்த உலக வாழ்க்கை போதும். என்னை உன்னுடன் சேர்த்துக்கொள்” என்று இறைவனிடம் வேண்டுகோள் வைத்தார்.
ஈசனும் சுந்தரரின் வேண்டுகோளுக்கிணங்க அவரை மீண்டும் கயிலையில் சேர்த்துக்கொள்ள தீர்மானித்தார்.
உடனே நான்முகன் முதலான தேவர்கள் அனைவரையும் அழைத்து “அன்பன் சுந்தரனை தக்க மரியாதையுடன் கயிலைக்கு அழைத்து வாருங்கள். அவன் பூவுலகில் பிறந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. நம்மை மீண்டும் சேரும் காலம் நெருங்கிவிட்டது!” என்று உத்தரவிட்டார்.
காலத்தையே நிர்ணயிப்பவனின் நண்பனை கயிலைக்கு அழைத்து வரும் பாக்கியம் தங்களுக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து தேவர்கள் திருவஞ்சைக்களம் விரைந்தனர்.
கொச்சி இருப்புப் பாதையில், ஷோரனூர் சந்திப்பிலிருந்து எர்ணாகுளம் செல்லும் பாதையில் உள்ள, திருச்சூர் ரயில் நிலையத்தில் இறங்கி, கொடுங்கோளூர் சென்று, அங்கிருந்து 2 கி.மீ. தூரம் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். பேருந்துகளிலும் செல்லலாம்.
===========================================================
Don’t miss these articles…
புண்ணியத்துக்கு பதில் பாவத்தை மூட்டை கட்டுவதா? அன்னாபிஷேக அனுபவம் – 1
வேண்டத்தக்கது அறிவோனும் வேண்டமுழுவதும் தருபவனும் – அன்னாபிஷேக அனுபவம் – 2
===========================================================
* சுந்தரரின் அவதாரத் தலம் ‘திருநாவலூர்’.
* இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட தலம் ‘திருவெண்ணை நல்லூர்’.
* முக்தி பெற்ற தலம் கேரளத்தில் அமைந்துள்ள ‘திருஅஞ்சைக்களம் (திருவஞ்சைக்களம்)’.
* சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.
* சுந்தரர் பாடியவை 7ஆம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
* இறைவன்பால் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
திருஅஞ்சைக்களத்தில், தேவர்கள் பூத்தூவி வணங்கவும், இந்திரனும், நான்முகனும், மகா விஷ்ணுவும் எதிர்கொண்டு அழைத்துச் சிறப்பிக்கவும், கையிலை புறப்பட்டார் சுந்தரர். முன்னதாக தம்மை இறைவனிடம் சேர்க்கப்போகும் யானையை மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தார் சுந்தரர். பின்னர் அதன் மீது ஏறி திருக்கயிலை மலைக்கு சென்றார் சுந்தரர்.
தன்னை வரவேற்க வந்தவர்கள் யார் யார் என்பதை திருவஞ்சைகளத்தில் பாடிய பதிகத்தில் சுந்தரர் அழகாக குறிப்பிடுகிறார் பாருங்கள்.
இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்ஆர்என எம்பெருமான்
நம் தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே!!
விளக்கம் : இந்திரன், பிரமன், பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனான திருமால், மற்றும் எழில் மிகு தேவரெல்லாம் வந்து எளியேனை எதிர்கொள்ளவும், யானையையும் அளித்த பெருமான், கயிலையில் மந்திரங்களைக் கூறிக் கொண்டு இருக்கின்ற முனிவர்கள், ‘இவன் யார்?’ என வினவ, ‘இவன் நம் தோழன்; ஆரூரன் என்னும் பெயரினன்’ எனத் திருவாய் மலர்ந்தருளினான். அந்தோ!!! அவன் பேரருளுக்கும் ஒரு எல்லை உண்டோ!!!!!!
இப்புவியில் படைப்பு தோன்றிய காலம் தொட்டு அருளாளர்கள், ரிஷிகள், சித்தர்கள், ஆச்சாரியர்கள், மகான்கள் என்று எந்தவொருவருக்கும் தம்முடைய முக்திப் பயணத்தில் இத்தகையதொரு அரிய வரவேற்பு கிடைத்ததாக வரலாறு இல்லை. சுந்தரருக்கே உரித்தான தனிச் சிறப்பிது.
தன்னுயிர் நண்பர் சுந்தரர் யானை மீதேறி எங்கோ மகத்துவம் மிக்க இடத்திற்கு செல்கிறார் என்பதை அறிந்த சேரமான பெருமான் ஆருயிர் நண்பர் செல்லும் இடத்திற்கு தானும் சென்று விடுவோம் என்று திருவஞ்சைக்கள ஆலயத்துக்கு குதிரை மீதேறி விரைந்து வந்தார்.
அதற்குள் சுந்தரர் புறப்பட்டுவிட, கலங்கித் தவித்தார் சேரமான். நடந்தவற்றை அறிந்து தானும் நண்பரை பின்தொடர்ந்து செல்ல அவா கொண்டு என்ன செய்வதென்று யோசித்தார்.
சுந்தரர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்களை தன்னிடம் சொன்ன போது “இந்த அற்புதங்கள் எப்படி சாத்தியமாயிற்று?” என்று கேட்டதற்கு, “எல்லாம் பஞ்சாட்ஷர மந்திரத்தின் மகிமை” என்று சுந்தரர் கூறியது நினைவுக்கு வந்தது.
உடனே குதிரையின் காதில் அந்த பஞ்சாட்ஷர மந்திரத்தை ஓதி, “என் நண்பன் செல்லுமிடத்திற்கு என்னைக் கொண்டு சேர்ப்பாயாக”, என்று கூற, குதிரையானது மேலெழும்பி பறக்கத் துவங்கியது. சுந்தரரை ஏற்றிச் சென்ற யானையை பின்தொடர்ந்து சுந்தரர் கயிலாயத்தை அடையுமுன் சேரமான் கயிலாயத்தை அடைந்துவிட்டார்.
திருவஞ்சைக்களத்தில் சேரமான் பெருமானுடன் வந்த வீரர்கள் இது கண்டு விக்கித்து, “நம் மன்னனுக்கு கிடைத்த பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லையே” என்று வருந்தி உடைவாளை எடுத்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் சிவலோகப் பிராப்தி கிடைத்தது.
சுந்தரர் “தானெனை முன் படைத்தான்” என்னும் பதிகத்தைப் பாடி கயிலாயத்தின் தென் பகுதியை அடைந்தார். தனக்கு முன் சேரமான் பெருமான் அங்கு வந்து சேர்ந்து தன்னை வரவேற்பதை கண்ட சுந்தரர் வியந்து போற்றினார். சேரனும், சுந்தரரும் பல வாயில்களைக் கடந்து “திருஅணுக்கன்” வாயிலை அடைந்தபோது அங்கிருந்த பூதகணங்கள் சேரமானை அதன் வாயிலில் நிறுத்திவிட்டார்கள். சேரமான் பின் தங்க, சுந்தரருக்கு மட்டும் அனுமதி கிடைத்தது.
கையிலையில் உமையொரு பாகனை தரிசித்த சுந்தரர், இருகரம் கூப்பி தொழுது இறைவனை பலவாறு போற்றித் துதித்து, தமது நெருங்கிய நண்பர் சேரமான் வெளியே நின்றுகொண்டிருப்பதை குறிப்பிட்டு, அவரையும் அழைக்கவேண்டும்” என்று விண்ணப்பித்துக்கொண்டார். ஈசனும் சேரமானை வரச்சொல்லி உத்தரவிட்டார். கணங்கள் ஈசனின் ஆணைக்கேற்ப சேரமானை உள்ளே அழைத்து வந்தனர்.
சேரமானைக் கண்ட ஈசன் “யாம் உன்னை அழைக்கவில்லையே! எவ்வாறு வந்தாய்?” எனக வினவினார். (ஒன்னுமே தெரியாது பாருங்க இவருக்கு… உலகமகா நடிப்புடா சாமி!)
அதற்கு சேரமான் “இறைவா! உன் மெய்யடியாரிடம் நான் கொண்ட பக்தியும் அன்புமே என்னை இங்கு அழைத்து வந்தது. நான் என் நண்பனை பின்தொடர்ந்து புறப்பட்டு வந்தேன். ஆனால் வந்து சேர்ந்த இடம் கயிலை!” என்றார்.
அதைக் கேட்டு புன்முறுவல் செய்த ஈசன், “நலம் பெறுவாய்!” என்று ஆசீர்வதித்தார்.
“நான் தங்கள் மீது ‘ஞான உலா’ ஒன்று எழுதியுள்ளேன். அதனை தங்கள் முன் படித்துக் காட்ட வேண்டும்” என ஈசனிடம் வேண்ட ஈசனும் சம்மதிக்க, சேரமான் ஞான உலாவினைப் பாடினார்.
இருவரது நட்பின் மாண்பையும் தம்மீது கொண்ட பக்தியையும் மெச்சிய ஈசன், “நீங்கள் இருவரும் என் கணங்களுக்குத் தலைவர்களாக இருந்து வாருங்கள்” என்றார்.
திருவாரூரில் இருந்த பரவையாரும் திருவொற்றியூரிலிருந்த சங்கிலி நாச்சியாரும் தங்கள் காலம் முடிந்து கயிலாயத்தையடைந்து முன்ஜென்மாவைப் போல் கமலினியாகவும், அனிந்திதையாகவும் மாறி பார்வதியின் பணிப்பெண்களாக தொண்டு புரிந்தனர்.
சுந்தரர் தாம் வரும் வழியில் பாடிய ‘தானனை முன் படைத்தான்’ என்னும் பதிகத்தை, உலகத்தாரிடம் சேர்ப்பிக்க வேண்டி, வருண பகவானிடம் கொடுத்தார். வருணனும் அதை திருவஞ்சைக்கள கோவிலுக்கு கொண்டு வந்து சேர்த்தான்.
தன் அடியவனை பின்பற்றினாலே போதும் சுலபமாக தன்னை வந்து அடையலாம் என்பதை சேரமானை கொண்டு நடத்திய ஈசன் நிகழ்த்திய நாடகத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல் (குறள் 443)
==========================================================
நல்வாழ்வுக்கு சில டிப்ஸ் – 24
கோவிலிலிருந்து வீடு திரும்பியவுடன்…
* ஆலய தரிசனத்திற்கோ அல்லது திருத்தலங்களுக்கோ சென்றுவிட்டு வீடு திரும்பிய பின்னர் சிலர் உடனடியாக இயற்கையை உபாதையை தணிக்க செல்வது வழக்கம். இது தவிர்க்க முடியாதது. அப்படிப்பட்ட நேரங்களில் ஒரு சில வினாடிகள் பூஜையறைக்கு சென்று சுவாமியை பார்த்துவிட்டு பின்னர் இயற்கை உபாதையை தணிக்க செல்வது நலம். முடிந்தால் சில வினாடிகள் அமர்ந்து ஒரு வாய் தண்ணீர் குடித்துவிட்டு பின்னர் செல்வது மிகவும் நல்லது.
* சிலருக்கு அசௌகரியமான வெளியே சொல்லவியலாத சொப்பனங்கள் அடிக்கடி வரும். அப்படிப்பட்டவர்கள் தலையணைக்கு கீழே ஒரு சிறு படிகாரக் கல்லை வைத்துக்கொண்டு தூங்கினால் துர்சொப்பனம் வராது. செய்து பாருங்கள்! (குழந்தைகள் இருக்கும் வீட்டில் இதை எச்சரிக்கையாக செய்யவேண்டும். கல்கண்டு என்று அவர்கள் நினைத்துவிட வாய்ப்புண்டு. அப்படிப்பட்டவர்கள் படிகாரத்தை தலையணைக்குள் வைத்து தைத்துவிடவேண்டும்.)
டிப்ஸ் தொடரும்…
============================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
===========================================================
Also check…
அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!
திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!
ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்!
நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!
சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
==========================================================
[END]
சுந்தரர் கயிலை சென்ற காட்சியை கண் முன்னே நிறுத்திவிட்டீர்கள். அதற்கு சிகரம் சேர்ப்பது போல ரமீஸ் அவர்களின் ஓவியமும்,திருவஞ்சைக்களக் கோவிலின் படமும் பிரமாதம்.
உண்மையில் சுந்தரருக்கு கிட்டிய பேறு யாருக்கும் கிடைக்காத ஒன்று. இறைவனை நண்பனாக பெற்றவர் அல்லவா?
நல்வாழ்வுக்கான டிப்ஸ் வழக்கம் போல சிம்ப்ளி சூப்பர்ப்.
– பிரேமலதா மணிகண்டன்
நட்பின் இலக்கணத்தையும், ஆருரரின் பெருமையையும் சொல்லும் அற்புதமான பதிவு.
சேரமானுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் ஈசன் கருணை.
திரு. தனுஷ் அவர்களின் 63 நாயன்மார்களின் தொடரில் பார்த்த பாதிப்பு தங்கள் எழுத்தின் கை வண்ணத்தில் அப்படியே உணர்ந்தேன்
நன்றி
ஓவியம் மிக அருமை.
இந்த எபிசோடில் ஔவையார் மிஸ்ஸிங்
அதை பற்றி தனியாக சொல்லவேண்டும். அந்தளவு அதில் விஷயம் இருக்கிறது.
ஆருரான் தியாகேசனின் புகழை பரப்பிய சுந்தரர் — பரவை நாச்சியார்
ஆகியோரின் புண்ணிய தலத்தில் அடியேன் பிறந்தவூராகும்.
சுந்தரரை தொடர்ந்து சேரமானும் உங்களை தொடர்ந்து நாங்களும் கைலை வரை சென்று ஈசனை கண்டோம்///.
வரமனமில்லாமல் வந்தோம் இந்த உலகில் …
மிக்க நன்றி தலைவா//
தங்களின்
சோ. ரவிச்சந்திரன்
கர்நாடகா
அற்புதம் சார்// தாங்கள் இதுவரை வெளியிட்ட 1124 பதிப்பிலும் எங்களை இன்று கைலாயதுக்கே சிவ பார்வதியோட , சுந்தரரையும் அவரது நண்பர் சேரமானுடனும் திரு அணுக்கன் வாயில் வழியாக தரிசனம் கிடைக்க பெற்றோம் .
மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
தங்களின்
ரவிச்சந்திரன்
கர்நாடகா
இரிங்கலகுட ரயில் நிலையம் இறங்கி செல்லலாம்.