நம் வாசகர்கள் அனைவருக்கும் நாம் கொடுக்ககூடிய இந்த ஆண்டிற்கான மெசேஜ் இது தான். இந்த பதிவு தான்.
இதைப் பின்பற்றினால் போதும்… நல்லறம் பெருகி, இல்லறம் சிறக்கும்.
அடியவர் நட்பு அழைத்துச் சென்ற இடம்!
மார்கழி மாதத்தை முன்னிட்டு தினமும் ஒவ்வொரு தொன்மையான ஆலயத்திற்கு சென்று தரிசித்து வருகிறோம். சென்ற வாரத்தில் ஒரு நாள் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்கு செல்ல தீர்மானித்தோம். வேதபுரீஸ்வரரை தரிசிக்கவேண்டும் என்பதை விட நண்பர் ஏழுமலையை பார்க்கவேண்டும் என்கிற ஆவலே மேலோங்கி இருந்தது. வேதபுரீஸ்வரருக்கு பள்ளியெழுச்சியும் தாலாட்டும் பாடிவரும் பாக்கியம் பெற்றவராயிற்றே… (Check : ‘என்னை தாலாட்ட வருவாரோ?’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்!)
சென்ற மார்கழியின் போது ஏழுமலை அவர்களை பார்த்தது தான். அதற்கு பிறகு ஓரிரண்டு முறை பேசியிருப்போம். மீண்டும் எங்கள் சந்திப்பு நிகழவில்லை. சிலரிடம் நாம் பேசாவிட்டாலும் அவர்களுடன் தொடர்பில் இருப்பதை போல ஒரு உணர்வு இருக்கும். அவருக்கு இருந்ததா தெரியாது. ஆனால் நமக்கு இருந்தது.
நாம் செல்வதாக தீர்மானித்த நாளுக்கு முந்தைய தினம் மாலை அலைபேசியில் அவரை தொடர்புகொண்டோம்…. “யாருன்னு தெரியுதா? எப்படியிருக்கீங்க …?” என்றோம்.
ஒரு சில வினாடிகள் தான்… அடையாளம் கண்டுகொண்டார். “சொல்லுங்க ரைட்மந்த்ரா சுந்தர் சார்….” என்றார்.
மார்கழி தரிசனத்திற்கு மறுநாள் காலை ஆலயத்திற்கு வரவிருப்பதை குறிப்பிட்டு அவரை சும்மா பார்க்க விரும்புவதாக கூறினோம்.
“தாராளமா வாங்க… 5.30 மணிக்கு கோயில்ல இருப்பேன்” என்றார்.
மறுநாள் காலை நாம் வழக்கம் போல சீக்கிரம் எழுந்து குளித்து முடித்து தயாராகி திருவேற்காடு விரைந்தோம். நாம் சென்ற நேரம் நடை திறந்துவிட்டார்கள். ஏழுமலை அவர்களை தேடினோம். கண்ணில் படவில்லை. சன்னதி திறந்து இறைவன் திருக்காட்சி கொடுத்துக் கொண்டிருந்தமையால் வேதபுரீஸ்வரரை தரிசித்து விபூதி பிரசாதம் பெற்றுக்கொண்டு ஏழுமலை அவர்களை தேடினோம். பிரகாரத்தில் இருப்பார் என்று சொன்னார்கள். நாம் சென்று பார்த்தபோது, ஏதோ பாடிக்கொண்டே வலம் வந்துகொண்டிருந்தார். எதிர் சென்று இருகரம் கூப்பி வணங்கினோம்.
“என்ன… ஆளே மாறிட்டீங்க?” என்றார் நம்மை பார்த்து வியந்து!
(ஒருவேளை நாம் எடை குறைத்திருப்பதை சொல்லியிருப்பாரோ?)
சில நிமிடங்கள பேசினோம். பரஸ்பர நலம் விசாரிப்பு.
“எப்படி போய்ட்டுருக்கு உங்க வேலை? பில்டிங் காண்டிராக்ட்ஸ்லாம் நல்லா வருதா?”
“ஐயன் ஆசீர்வாதத்துல நல்லா போய்க்கிட்டுருக்கு…”
நம்மைப் பற்றி விசாரித்தார். “கந்தன் கருணையால் அனைத்தும் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது” என்றோம்.
“நீங்க தரிசனம் முடிச்சிட்டு வாங்க… நான் பக்கத்துல இருக்குற துலுக்காணத்தம்மன் கோவில்ல இருப்பேன்… அங்கே வர்றீங்களா?” என்றார்.
அவர் குறிப்பிடுவது சரியாக எந்த இடம் என்று விசாரித்துத் தெரிந்துகொண்டோம்.
“சரிங்க ஐயா… நீங்க போங்க… நான் தரிசனம் முடிச்சுட்டு வர்றேன்”
தொடர்ந்து பாலம்பிகையை தரிசித்துவிட்டு தலைவரிடம் விடைபெற்றுகொண்டு தொண்டரை பார்க்க அவர் குறிப்பிட்ட துலுக்காணத்தம்மன் கோவிலுக்கு சென்றோம்.
திருவேற்காடு கோவிலுக்கு பின்னல் ஒரு கி.மீ. தூரத்தில் ஆற்றங்கரையோரம் ஆவடி செல்லும் சாலையில் வீரராகவபுரத்தில் இருக்கிறது அந்த கோவில்.
ஏழுமலை நமக்காக காத்திருந்தார்.
“என்ன இந்த கோவில்ல…”
“இந்த கோவில்ல நான் தான் தினமும் காலைல பூஜை செய்றேன்…”
இங்குள்ள அம்மன் புற்றிலிருந்து தோன்றிய அம்மன். பின்னர் அது கோவிலாக கட்டப்பட்டுள்ளது.
வெளியே அழைத்து வந்தவர், கோவிலுக்கு முன்னே ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று “ஆத்துக்கு அந்தப் பக்கம்… புதர் மேலே பாருங்க… தெரியும்” என்றார்.
அவர் சொன்ன திசையை பார்த்தோம். “அட… ஆமாம்… சிவ சிவ” கன்னத்தில் போட்டுக்கொண்டோம்.
“இங்கேயிருந்தே பிரசாதத்தை காட்டி சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணிடுவேன்.” என்றார்.
நமக்கு ஒரு சந்தேகம் தோன்றியது.
“இந்த கோவில்ல எத்தனை வருஷமா பூஜை செய்றீங்க ?”
“ரெண்டு வருஷமா”
“அப்போ நான் போன தடவை முதல்முறை வந்து உங்களை பார்த்தப்போவே இந்த கோவில்ல பூசாரியா இருந்தீங்களா?”
“ஆமாம்.. தினமும் காலைல வந்து அம்மாவுக்கு பூஜை, அபிஷேகம் இதெல்லாம் பண்ணுவேன்…”
நல்ல விஷயம் தான். இருந்தாலும் இதை எப்படி அவர் அணுகுகிறார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் எழுந்தது.
“இதுக்கு எதாச்சும் சம்பளம் வாங்குறீங்களா? இல்லே தொண்டா செய்றீங்களா?”
“சம்பளம் வாங்குறேன். மாசம் ரூ.2,500/- கொடுக்குறாங்க.”
அப்போ பணத்துக்காக செய்றாரோ… மனம் லேசான ஏமாற்றமடைந்தது. பணத்துக்காக இருந்தாலும் அதுக்கு கூட (பூசாரி பணிக்கு) இப்போதெல்லாம் ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. பரவாயில்லே…. என்று மனதை தேற்றிக்கொண்டோம்.
பணம் கிடைக்குது ஓ.கே. ஆனால் இதை ஒரு பாக்கியமாக கருதும் உணர்வு இருக்கிறதா இல்லை பணம் கிடைக்கிறதே என்று செய்கிறாரா என்று தெரிந்துகொள்ள மனம் விழைந்தது. காரணம், நாம் பெரு மதிப்பு வைத்திருக்கும் ஒருவர் மீது ஒரு சிறு கறை கூட இருக்கக்கூடாது என்று மனித மனம் ஆசைப்படுவது இயல்பு தானே… அதுவும் நம் தளத்தில் இவரைப் பற்றி வெளியாகியிருக்கும்போது…
“அந்த நேரத்துல வேற ஏதாச்சும் வேலை செஞ்சா இன்னும் நிறைய வருமானம் உங்களுக்கு வரும்ல…”
“இங்கே வந்து அம்மாவுக்கு செய்றதாலே தான் எனக்கு வேலையே வருது…”
தொடர்ந்து… “எனக்கு மேஸ்திரி தொழில் நல்லா போய்ட்டுருக்குன்னா அதுக்கு காரணம் இந்த அம்மா தான்” என்றார்.
அவரது பதிலைக் கேட்டு சிலிர்த்துப் போனோம். உங்களுக்கு ஏதாவது புரியுதா?
ஏழுமலை அடிப்படையில் ஒரு மேஸ்திரி. கட்டிட வேலைகளை காண்டிராக்ட் எடுத்து செய்துவருபவர். சைவத்தில் தீவிர பற்று கொண்டவர். சிவனை அப்பா என்றும் அம்பாளை அம்மா என்றும் அழைப்பவர். சங்கீத ஞானம் இல்லாவிட்டாலும் நல்ல குரல் வளம் கொண்டவர். திருவேற்காடு வேதபுரீஸ்வரருக்கு தினசரி சென்று பள்ளியெழுச்சி பாடி எழுப்பிவிட்டு அவரை தரிசித்துவிட்டு பின்னர் இந்த அம்மன் கோவிலுக்கு வந்து தினசரி பூஜை செய்துவருவதாக அறிந்தோம். இந்த பூசாரிப் பணிக்கு இவர் ஊதியம் பெற்றாலும், அதை ஒரு தொண்டாக கருதி செய்கிறாரா இல்லை ஏதோ கொஞ்சம் ஊதியம் வருகிறதே என்கிற மனப்பான்மையில் செய்கிறாரா என்று அறிந்துகொள்ள ஆசைப்பட்டோம். காரணம் இப்போதெல்லாம் பணத்தைவிட நேரத்தை செலவிடுவதே உயர்ந்த விஷயமாகிவிட்டது. அதைப் பற்றி கேட்டப்போது ஏழுமலை கூறிய பதில் தான் மேலே நீங்கள் படித்தது.
“இங்கே வந்து அம்மாவுக்கு தொண்டு செய்றதாலே தான் எனக்கு வேலையே வருது” – எத்தனை ஆழமான அறிவுப்பூர்வமான விசாலமான பதில். அதாவது அன்னைக்கு தொண்டு செய்வதால் தனது மேஸ்திரி தொழில் நன்றாக போவதாக சொல்கிறார்.
தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
நம்மை பற்றி பேச்சு எழுந்தது. நம்மைப் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டோம்.
“சுந்தர் சார்… நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க…. நல்லவங்க நட்பு, மெய்யடியார்களோட நட்பு உங்களுக்கு இருக்கு. அது ஒன்னே போதும். உங்களுக்கு தேவையான எல்லாம் தானா தேடி வரும். உங்களை மிகப் பெரிய உயரத்துக்கு கொண்டு போய்விட்டுடும். நல்லவங்க சத்சங்கம் ஒன்னு இருந்தாப் போதும். அவங்க கோவிலுக்கு போகவேண்டாம், விரதம் இருக்கவேண்டாம், திருமுறை படிக்கவேண்டாம், விளக்கேத்த வேண்டாம்.. எதுவும் செய்யவேண்டாம். அவங்களுக்கு எல்லாம் தானாவே நடக்கும்.”
மேற்கொண்டு தொடர்ந்தார்…. “சுந்தரரின் நட்பு இருந்த ஒரே காரணத்தால், சுந்தரர் வெள்ளை யானை மீதேறி கயிலை சென்றபோது சேரமான் பெருமானும் அவருக்கு பின்னால் கயிலைக்கு சுலபமாக சென்றுவிட்டார்.
========================================================
Also check :
உங்களுக்கு நல்ல நண்பர்கள் வேண்டுமா?
யார் நட்பை பெறவேண்டும்? யார் நட்பை விடவேண்டும்? FRIENDSHIP DAY SPL
முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள்
========================================================
சிவபெருமான் சேரமானை பார்த்து, “உன்னை இங்கே அழைக்கவில்லையே நீ எப்படி வந்தாய்?” என்று கேட்டபோது, “ஐயனே… என் நண்பன் சுந்தரரை பின்பற்றுவதை தவிர எனக்கு எதுவும் தெரியாது. ஆரூரானை வணங்கிக் கொண்டே வந்தேன். அடியாரிடம் நான் கொண்ட பக்தியும் அன்பும் என்னை இங்கு அழைத்து வந்தது!” என்றாராம்.
ஏழுமலை கூறி முடித்தபோது நமக்கு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்தது. சத்சங்கத்தின் மகத்துவத்தை நல்லவர்ககளின் தொடர்பை இதைவிட அருமையாக யாரும் விளக்கமுடியாது.
ஏழுமலை அதை கூறியவிதம்… பல மேடைகள் கண்ட ஒரு தேர்ந்த பேச்சாளர் கூட அந்த இவ்வளவு எளிதாக அருமையாக விளக்கமுடியுமா என்று தெரியவில்லை.
ஏழுமலை அதிகம் படித்தவர் அல்ல. இருப்பினும் ஈசனின் மெய்யடியார். சிவபெருமானிடம் அவர் கொண்டிருக்கும் அந்த உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று.
அந்த வாரத்துக்கான பிரார்த்தனைகளை அவரிடம் எதற்கும் சொல்வோம் என்று கருதி சொன்னபோது, “நான் அவர் கிட்டே பேசுறேன். கவலைப்படாதீங்க…” என்றார்.
ஒரு நிமிடம் நமக்கு புரியவில்லை.
“யார் கிட்டே?” சற்று புரியாமல் அவரை பார்த்தோம்.
திருவேற்காடு கோவில் கோபுரத்தை காட்டியபடி “ஐயன் கிட்டே தான்” என்று கூறினார்.
அவர் அதைச் சொன்ன விதம், மிக மிக இயல்பாக இருந்தது. தனக்கும் ஈசனுக்கு உள்ள அந்த ஆத்யந்த தொடர்பை பறைசாற்றிக் கொள்ளவோ அல்லது தனக்கு இறைவன் மீதுள்ள பக்தியை நம்மிடம் காட்டிக்கொள்ளும் விதத்திலோ அது இல்லை. மிக மிக இயல்பாக இருந்தது. உள்ளத்தின் உணர்வுகளை உடல் வெளிப்படுத்தும் விதம் (BODY LANGUAGE) அது உண்மையான உணர்வா என்பதை கண்ணாடி போல காட்டிவிடும்.
புற்றீசல் போல ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத நூற்றுக்கணக்கானவர்களிடம் நட்பு கொண்டிருப்பதைவிட நல்லோர் ஒரு நான்கு பேரிடம் நட்புடன் இருந்தாலே போதும். வாழ்க்கையில் நீங்கள் அனைத்தும் பெறலாம்.
ஏன் பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம் என்றால் நல்லவர்கள் உங்களை சரியான விதத்தில் வழிநடத்துவர். “குருட்டு ஆடு, மந்தையோடு சேர்ந்தால் சரியாக வீடு போய் சேர்ந்துவிடும்” என்று ஒரு பழமொழி உண்டு.
கண்ணிருந்தும் குருடராய் வாழும் பலர் செய்யவேண்டியது இதைத் தான். வாழ்வில் கரையேற எங்கு போவது, யாருடன் போவது என்று திக்கு திசை தெரியாமல் தவிப்பவர்கள் செய்யவேண்டியது இதைத் தான்.
இறைவனின் மெய்யடியார்களோடு சேர்ந்தால் போதும். தானாக போய்ச் சேரவேண்டிய இடத்துக்கு சரியாக போய் சேர்ந்துவிடுவார்கள். தகாதவர்களோடு சேர்ந்தால் இறுதியில் செல்லப்போவது கசாப்பு கடைக்கு தான். அது நினைவில் இருக்கட்டும்.
ஒருவருக்கு அனைத்துச் செல்வங்களும் அவரவர் சார்ந்த கர்மாவினால் மட்டும் தான் கிடைக்கும். ஆனால் நல்லாருடன் சேர்ந்திருக்கும்போது, இறைவனின் மெய்யடியார்களுடன் தொடர்பில் இருக்கும் போது அவர்களது நல்லூழால் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் அதன் வீச்சு இருக்கும். நல்லோர் தரிசனம் பாப விமோசனம் என்றே சொல்லும்போது அவர்களுடன் பழகுவது எப்பேற்பட்ட பலனை கொடுக்கும் என்று சொல்லவும் வேண்டுமா என்ன?
அதனால் தான் வள்ளுவரும் ‘உலகப் பொதுமறை’ எனப்படும் திருக்குறளில், நட்புக்கு மட்டுமே நேரடியாகவும் மறைமுகமாகவும் 18 அதிகாரங்கள் ஒதுக்கியிருக்கிறார்.
சத்சங்கமானது உங்களுக்கு வரக்கூடிய மலைபோன்ற துன்பத்தை கடுகாக மாற்றிவிடும் தன்மை கொண்டது. அதே போல சிறு துளி அதிர்ஷ்டத்தை பெரும் யோக மழையாக பொழியச் செய்யும்.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று
இதைவிட நல்லோர் நட்பின் சிறப்பை விளக்கமுடியுமா என்ன?
ஆம்… நல்லோருடன் சேர்ந்து அவர்களுடன் இணங்கியிருத்தலே பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம். செல்வங்களுள் தலையாய செல்வம். இது தான் நாம் நம் வாசகர்களுக்கு கொடுக்கவிரும்பும் இந்த ஆண்டுக்கான மெஸ்ஸேஜ். உணர்ந்துகொண்டவர்கள் பாக்கியசாலிகள்!
(சேரமான் பெருமான் சுந்தரரின் அடியொற்றி கயிலைக்கு சென்ற அந்த அற்புத நிகழ்வு சிறப்பு பதிவாக விரைவில் வெளியாகும்!)
========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056. IFSC Code : UTIB0001182
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
========================================================
Also check :
மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)
ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)
நெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)
தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)
========================================================
‘திருக்குறள்’ தந்த திருப்புமுனை – திருவள்ளுவர் தின ஸ்பெஷல் !
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
========================================================
[END]
ஆண்டின் முதல் நாள் முத்தான முதல் பதிவு.
நீங்கள் சொல்ல வந்த தகவலை சொன்ன விதம் அருமை.
ஆனால் உங்கள் வாசகர்களாகிய நாங்கள் தான் ரைட் மந்த்ரா என்னும் சத் சங்கத்தில் உறுப்பினராக அனைவரும் சேர்ந்து விட்டோமே.
அதில் எவ்வளவு புண்ணியம் சேர்த்துள்ளோம் என்று எங்களுக்கு தான் அதிகம் தெரியும்.
சுந்தரரை பின்பற்றி கைலாயம் செல்லும் பதிவை விரைவில் போடவும்
நன்றி
புது வருட முதல் பதிவே அமர்க்களம். திரு ஏழுமலை கடவுள் மீதான பக்தி படி த்து மெய் சிலிர்த்து. நிறைய நண்பர்கள் வைத்துக் கொள் வதற்கு பதில் நல்லோர்களின் நட்பு கிடைத்தால் நாம் உயரிய நிலை யை அடையாளம். அடுத்த பதிவு எதிர்பார்க்கிறேன். வாழ்க வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
புத்தாண்டின் முதல் பதிவாக இதை விட சிறந்த பதிவை அளிக்க முடியாது. அருமை. அருமை. கோவில் கோபுரத்தை ஹைலைட் செய்து காட்டிய விதம் எங்களின் எதிர்பார்ப்புக்கேற்ற தங்களின் உழைப்புக்கு சான்று.
சுந்தரர் கைலாயம் சென்ற சம்பவத்தை பற்றிய பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
எங்களை பொருத்தவரை ரைட்மந்த்ரா.காம் என்னும் சத்சங்கத்தில் என்றைக்கு இணைந்தோமோ அன்றே எங்கள் வாழ்க்கை மாறிவிட்டது என்றே நினைக்கிறோம்.
நம் தளத்திற்கு வந்து பதிவுகளை படித்த பிறகு பல விஷயங்களில் எனது அணுகுமுறை மாறிவிட்டது. அணுகுமுறை மாறியதால் வாழ்க்கையும் மாறிவிட்டது.
உண்மையான ஆன்மிகம் என்றால் என்ன வழிபாடு என்றால் என்ன என்பதை இங்கு வந்து தான் உணர்ந்துகொண்டேன். நான் இந்த தளத்தை பரிந்துரைத்த என் உறவினர்கள் நண்பர்கள் அக்கம்பக்கத்தினர் அனைவரும் இதை தற்போது தவறாமல் படிக்க ஆரம்பித்துள்ளனர். ஆண்டிராய்டு செயலி வெளியிட்டது மிகப் பெரிய மைல்கல். கணினி இல்லாதவர்கள் கூட சுலபமாக தளத்தை பார்க்க முடிவதாக என்னிடம் கூறினார்கள்.
இந்த ஆண்டு அனைவருக்கும் நல்லதொரு இனிமையான ஆண்டாக அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
மகா பெரியவா திருவடி சரணம்
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
வாழும் நாயன்மார் பற்றி தெரிவித்த ரைட் மந்திர இணைய தளம் சிறக்க வாழ்த்துக்கள் .
2016 ன் ஆரம்பமே – அசத்தல்
எது கிடைத்தால் நாம் பக்கியசாலி என்று யாரும் சொல்லாத புத்தாண்டு செய்தியை சொல்லிட்ட தங்களுக்கு நன்றிகள்
நாங்கள் பாக்கியசாலிகள் என்பதை உணர வைத்த பதிவு.
நன்றி சுந்தர் அண்ணா
சுந்தர்ஜி ,
புத்தாண்டின் முதல் பதிவே அருமையிலும் அருமை !! சத்சங்கத்தின் மகிமை பற்றி நாரதர் மூலம் இறைவன் விளக்குவதாக ஒரு கதையும் உண்டு . சேரமானும் சுந்தரைப்பற்றி சிவபெருமானை அடைந்தார் என்பதைப்போல் நாங்களும் இந்த சுந்தரைப் பற்றி (ரைட் மந்திராவை ) உயர்வை அடைவோம் என நம்புகிறோம் !! சத்சங்கம் மென்மேலும் பெருகட்டும்!! நன்றி
வணக்கம் சுந்தர் சார்
ஆண்டின் முதல் நாள் மிகவும் அருமையான பதிவு
நன்றி
தெள்ள தெளிவான ஒரு அறிவுரை/முகவுரை இந்த ஆண்டிற்கு ///.
சேரமான் சுந்தரரை பின்பற்றி கைலாயம் சென்றார் என்றால்— நமக்கு ஒரு சுந்தர் இருக்கிறார் அதுவும் ரைட் மந்திரத்தில் இருக்கிறார் பிறகுன்ன // பின் பற்றுவோம் // சார். நல்லோர் நடுவில் நல்ல செய்திகளையே நாடும் நம்ம மன்றத்தில் நல்லவருக்கு நல்லதும் நன்றாகவே நல்கும் எம்பெருமான் முருகன் துணை அருள் நம் எல்லோருக்குமே கிட்டும் .
நன்றியுடன்
தங்களின்
சோ. ரவிச்சந்திரன்,
கர்நாடகா
பதிவு அருமை !!!
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை !!!!
நல்லதை நினைப்போம் !! நல்லதை செய்வோம் !! நல்லோரோடு உறைவோம் !!
நல்லதே நடக்கும் !!!
தீதில்லா நல்லோர் திரள் !!!!!
அன்புடன்
நெ வீ வாசுதேவன்
thayum sathsangamum ondrey