Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > நேதாஜியுடன் விடுதலை போரில் பணியாற்றிய தொண்டர் கூறும் சிலிர்ப்பூட்டும் தகவல்கள்

நேதாஜியுடன் விடுதலை போரில் பணியாற்றிய தொண்டர் கூறும் சிலிர்ப்பூட்டும் தகவல்கள்

print
“தாக்குண்டால் புழு கூட தரை விட்டு தீ துள்ளும். கழுகு தூக்கினும் குஞ்சுக்காக துடித்து எழும் கோழி. சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது முயல் கூட திருப்பித்தாக்கும். சாக்கடை புழுக்களல்ல நீங்கள். சரித்திரத்தின் சக்கரங்கள்”  என்று முழங்கிய இந்திய சுதந்திர போராட்டத்தின் விடிவெள்ளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 116 வது பிறந்த நாள் இன்று.

‘ஜெய் ஹிந்த்’ என்ற அந்த வீர முழக்கத்தை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மெய் சிலிர்த்துவிடும். அந்த முழக்கத்தை நாட்டிற்கு அளித்த மிகப்பெரும் புரட்சியாளரான சுபாஷ் சந்திர போஸ் பற்றி நினைத்தாலோ ஒவ்வொரு இந்தியனின் உடல் முறுக்கேறி இதயம் வீரத்தாலும் நாட்டுப்பற்றாலும் இந்த உலகையே வெல்லும் உறுதி படைத்ததாகிவிடும்.

‘எனக்கு இரத்தம் கொடுங்கள். உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன். நமக்கு முன்னால் ஒரு நீண்ட போராட்டம் இன்னும் இருக்கிறது. இந்தியாவை வாழ வைக்க வேண்டுமென்றால் நமக்கு ஒரே ஒரு விருப்பம் மட்டும் தான் இருக்க வேண்டும். அது நாட்டிற்காக நம் உயிரையே விடுவது தான் ‘ என்று எந்த வித போலித்தனமும் அரசியல் உள்நோக்கமும் தன்னலமும் இல்லாமல் நாட்டின் விடுதலையே குறிக்கோளாகக் கொண்டு அறைகூவல் விடுத்து மக்களை தட்டி எழுப்பியவர் அவர்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு நம் தளம் சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்த விரும்பிய நாம் முடிவுசெய்த போது  எனக்கு மனதில் சட்டென்று தோன்றியவர் தான் பெரியவர் முத்தப்பா அவர்கள். திரு.முத்தப்பா அவர்களை கடந்த மூன்றாண்டுகளாக நான் அறிவேன்.

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் படையில் மூன்றாண்டுகளுக்கும் மேல் இருந்த வீரர் இவர். அவரின் வீரம் செறிந்த உரைகளை கேட்டு கேட்டு தன்னை முருகேற்றியவர். சுதந்திர போராட்ட தியாகி. நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு கௌரவிக்க இவரை விட பொருத்தமானவர்கள் கிடைப்பார்களா?

சுதந்திரத்துக்கு (1947) முன்பு பர்மாவிலிருந்து அகதியாக இங்கே வந்தவர் இவர். பின்னர் காமராஜருடன் தொடர்பு கிடைத்து அவர் மூலம் வசிக்க இடம் கிடைத்தது.  பின்னர் ஏ.வி.எம். நிறுவனத்தில் மேக்கப் மேனாக பணியில் சேர்ந்து கிட்டத்தட்ட ஆயிரம் படங்களுக்கும் மேல் மேக்கப்-மேனாக பணியாற்றியிருக்கிறார். அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என இவருக்கு தெரியாத & இவரைத் தெரியாத தலைவர்களே இருக்க முடியாது! எளிமையின் சிகரம். குணத்தில் இமயம். நம் நெருங்கிய நண்பர்.

 

இன்று காலை திரு.முத்தப்பா அவர்களை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து நாம தளம் சார்பாக நினைவுப்பரிசு வழங்கினோம். நம்முடன் நண்பர்கள் ராஜா மற்றும் மாரீஸ் கண்ணன் ஆகியோரும் வந்திருந்தனர்.

நேதாஜியின் தியாகங்களை அவரது வீரம் செறிந்த வாழ்க்கைமுறையை அவரது ஆன்மீகத் தேடலை பற்றி பேசச் சொல்லி கேட்டோம்.

திரு.முத்தப்பா நேதாஜியின் தியாகங்களை சொல்ல சொல்ல “தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ” என்ற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த சுபாஷ், 1941 ஜனவரி 17அன்று தப்பினார். பெஷாவர் வழியே காபூல் தொட்டு,கைபர் கணவாய் வழியாக நடந்தே ஆஃப்கானிஸ்தானை அடைந்தார். பிறகு இத்தாலிக்குச் சென்று, இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவில் நுழைந்து, மாஸ்கோ சென்றார். இப்படி 71 நாட்கள் பயணித்து இறுதியில் அவர் பெர்லின் அடைந்ததை `Great Escape’ என்று சிலாகிக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்!

நேதாஜி பிரிட்டிஷ் அரசாங்கத்தை கிடுகிடுக்க வைத்தது முதல், சிங்கப்பூரில் நேதாஜிக்காக பிரிட்டிஷ் போர்க்கப்பலை மனித குண்டாகி தகர்த்த சிங்கப்பூர் இளைஞர் சோனா வரை இவர் கூறு ஒவ்வொரு தகவலும் சிலிர்ப்பூட்டுபவை.

(*முத்தப்பா ஐயா மேலே உட்கார்ந்திருக்க கீழே உட்கார்ந்து சாப்பிடுறது யார் தெரியுதா? இவர் பேரை ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்! இந்த ஒரு ஃபோட்டோவிலிருந்தே தெரிஞ்சிருக்குமே முத்தப்பா எவ்ளோ பெரிய ஆள்னு…!”)

அடுத்த பாகத்தில் விரிவாக பார்க்கலாம்….

ஜெய் ஹிந்த்

…. to be continued in Part 2

14 thoughts on “நேதாஜியுடன் விடுதலை போரில் பணியாற்றிய தொண்டர் கூறும் சிலிர்ப்பூட்டும் தகவல்கள்

  1. இப்படி பட்ட ஒரு மனிதரை காண கண்டிப்பாக நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும்…

    இவர்கள் எல்லோரும் அன்று செய்த தியாகம் தான் இன்று நாம் தலை நிமிர்ந்து நடக்க கரணம் என்று சொல்லி தான் தெரிய வேண்டுமா…

    ” One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next ”

    இவரை போன்ற சுதந்திர போரட்ட தியாகிகளை நாம் போற்றி புகழ வில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் மறக்காமல் இருப்பது தான் உண்மையான தமிழன்…

    “Freedom is not given, it is taken ”

    ஜெய் ஹிந்த்

    PVIJAYSJEC

  2. தாய் மண்ணே வணக்கம் !!!
    சுந்தர் ஜி – தொடரட்டும் உங்கள் நற்பணி !!!

  3. Great that you are doing such a great things despite of your busy schedule of working and managing home things.
    ***
    Now only getting interested in all things – knowing subhash chandra bose, disciples of babaji, phenomenal value of thirukkural and thiruvalluvar..etc after reading your posts.
    ***
    Cool. Good. Keep it up.
    ***
    **Chitti**.
    Thoughts becomes things.

    ———————————
    Chitti, when we indulge in good things, won’t God – the controller of TIME – makes things easy for us?
    This is my experience.
    – Sundar

  4. சூப்பர் ஜி!! U met a great man at correct Time!! Even in daily calender its not mentioned as SUBASH’s birthday!! I dont know how u know these informations.

    Thank you!!!

  5. நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்கள் இந்திய விடுதலை போராட்டத்திலே போர் குணம் நிறைந்தவர் . அஹிம்சையால் மட்டும் இன்றி, பாரத தேசத்திற்கே உரிய வீரமும் ,நெஞ்சில் உறுதியும் கொண்டு ஆங்கில ஏகாதிபத்தியத்தை யுத்த முறையில் எதிர் கொண்டவர். அவரின் பிறந்த நாளில் அவரின் இந்திய தேசிய படையில் போராடிய தியாகியை கௌரவிப்பது மிகவும் பொருத்தமானது. மிக்க நன்றி

  6. வார்த்தைகள் இல்லை ஐயா…ஜெய் ஹிந்த்….சுந்தர் நீங்கள் கொடுத்து வைத்தவர் …உங்களைப் பார்க்கும் போது உண்மையாகாவே பொறாமையாக உள்ளது…

    பொறாமையுடன் ..
    jayasundaram

  7. உண்மையில் கடந்த ஒரு மாதத்தில் நான் சந்தித்த மூன்றாவது சுதந்திர போராட்ட தியாகி இவர் ,முதல் இரண்டு பேர் புத்தக கண்காட்சியில் பாலம் அய்யா புத்தக மையம் திறப்பு விழாவிற்கு சென்ற போது பார்க்கும் வாய்ப்பு ,இப்பொழுது அய்யா முத்தப்பா அவர்களை .

    இவர்கள் மூன்று பேரையுமே நாம் சந்தித்த போது,இவர்கள் மூவருமே ஒற்றுமையாக சொன்ன ஒரே விஷயம் நம் சரித்திரங்களை சரியாக சொல்லாமல் மக்கள் பாதி பேருக்கு உண்மையான சரித்திரங்கள் சொல்லப்படவில்லை என்று தான் ,இது யார் தவறு?

    உண்மையில் சரித்திரங்கள் முழுவதுமாக நம் மக்கள், இளைஞர் களுக்கு தெரிந்து இருந்தால் இநேரம் இந்தியா அமெரிக்காவிற்கு எல்லாம் சவால் விட்டு எங்கோ சென்று இருக்கும் ,ஒரு ராணுவ வசதி ,தொழில் நுட்பம் ,பண பலம் எதுவுமே இல்லாமல் அந்த காலத்திலேயே இவர்கள் போராடிஉள்ளார்கள் ஆனால் இன்று அனைத்தும் இருந்தும் நம் இராணுவீரர்களை தலையை வெட்டி வீசிவர்களுக்கு இன்னும் கண்டனம் மட்டுமே தெரிவித்து கொண்டு இருக்கிறோம்

    மீண்டும் நேதாஜி போன்றவர்கள் பிறக்க வேண்டும் நாடு வேறு பாதைக்கு செல்ல வேண்டும்

    ஜெய்ஹிந்த்

    1. ராஜா அருமை அருமை சும்மா நச்சுனு சொல்லறீங்க …எல்லோருக்கும் புரிந்தால் சரி …

      ஜெயசுந்தரம்

  8. இம்மாதிரி நல்ல மனிதர்களை சந்திக்கும்பொழுது …..நல்ல விஷயங்களையும்…..நல்ல எண்ணங்களையும்….நல்ல செயல்களையும் நம்மில் தானாக தொடருகிறது…
    .
    அவர் சொன்ன ஒவொரு வார்த்தைகளும் நம்மை எழுசியுற்ற்கின்றன… சொற்பநேர உரையாடல் என்றாலும் ஒரு நீண்ட அனுபவத்தை ஏற்படுத்திய இந்த சந்திப்புக்க நம் தளத்திற்கு நன்றி…
    .
    மாரீஸ் கண்ணன்

  9. அண்ணாமலை படத்தில் வரும் ஜோசியக்காரர் போல இருக்கிறார்.

    அய்யா அவர்கள் எவ்வளவு பெரிய ஆள் என்பதற்கு இந்த ஃபோட்டோவே சாட்சி.

    சுந்தர்ஜி பேட்டியில் பல exclusive தகவல்கள் இருப்பது தெரிகிறது. waiting for it

    Divine rule will blossom in Tamilnadu

    ————————————————–
    போல இல்லே…. அவரே தான். அண்ணாமலை படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோசியம் சொல்லும் பெரியவர் இவரே தான்.

    – சுந்தர்

  10. டியர் சுந்தர்ஜி .

    மிகவும் நல்ல தகவல் .இளைய தலைமுறைக்கு புத்துணர்ச்சி ஊட்டும் கட்டுரை .

    நன்றி.

    மனோகரன்

  11. Dear Sundarji

    Nice article and the way you written this article is so interesting to read..

    Aft looking the pictures and gifts you issued to important peoples i could imagine how much Hard work and efforts you put into that with your busy working schedule..

    At the same time the persons you meet every time you will evolved and get new perspective about life which you keep on sharing with us….

    Wishing you all the Very best and this “RightMantra.com” will achieve big success and greater heights in future. I’m fortunate in a way to get chance to communicate with you..

    All the Best…Keep doing the work and spread the inspiring Thoughts..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *