கலியுகத்தில் கடைத்தேற ஒரே வழி – “ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே | ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ||” என்ற நாம ஜபம் தான் என்று நாரதருக்கு கூறுகிறார் பிரம்மா.
“இந்த சாதனைகளுக்கு உரிய விதிகள் யாவை?”
“எந்த விதியும் கிடையாது. எவர் வேண்டுமாயினும் எப்போது வேண்டுமாயினும் – அவர்கள் சுத்தமாக (மடியாக) இல்லாவிட்டாலும் கூட – இவற்றை மொழியலாம்” என்கிறார்.
எந்த மனிதனாயினும் இந்த பதினாறு மந்திரங்களை ஓதினால் அவற்றின் சக்தியால் அவனது ப்ராணாதி நாமாந்தமான பதினாறு கலைகளும் நசிக்கப் பெற்று, அவன் தன் ஆத்மா ஸ்வரூபத்தை பெற்றானாம்.
ஜாதி, குலம், வயது, பால் வித்தியாசமின்றி அனைவரும் நாம ஜபத்தை ஸங்கீர்த்தனத்தை மேற்கொள்ள அதிகாரம் பெற்றிருப்பது அதன் தனிச்சிறப்பு.
சுருங்கச் சொன்னால் மிகவும் சுலபம். மிகவும் சுகம். அதே நேரத்தில் மிகப் பெரிய நற்பலன் தருவது நாம பஜனம். மக்களை எல்லாம் எந்த பேதமுமின்றி ஒன்று கூட்டுவது இதுவே.
“எவ்வித பேதமுமின்ற” என்பதில் குறிப்பாக சிவ – விஷ்ணு அபேதத்தை சொல்லவேண்டும். அத்வைதிகளான நாம சித்தாந்திகள், ‘நாம அபராதம்’ என்று கூறும் பத்துக் குற்றங்களில் ஒன்று ஒரு தெய்வத்தை உயர்த்தி மற்றொன்றை நிந்திப்பது. (குறிப்பாக ஹரி-ஹர தாரதம்யம் கற்பிப்பது). ஒருவருக்கு ஒரு மூர்த்தியிடம் விசேஷ பிடிமானம் இருக்கலாம். தவறில்லை. உதாரணத்துக்கு போதேந்திராளுக்கு ஹரியிடமும், ஸ்ரீதர அய்யாவாளுக்கு ஹரனிடமுமே உளம் நிறைந்த அன்பு பொங்கியெழுந்தது. ஆனால், தன் இஷ்ட தெய்வத்தை போற்றுவதற்காக மற்றவர்களின் இஷ்ட தெய்வத்தை தூற்றுவது தகாது என்கிற உயரிய கொள்கைகளை நாம சித்தாந்திகள் கைக்கொண்டுள்ளனர்.
இனி போதேந்திரர்கள் கூறும் நாமத்திற்கு ஏற்படும் பத்து விதமான குற்றங்களை பார்ப்போம்.
1) நல்லாரை அவமதிப்பது
2) நாமதித்தில் ருசியில்லாத தீயோரிடம் அதன் பெருமையை பேசுவது
3) சிவ-விஷ்ணுக்களை பேத புத்தியோடு நினைப்பது
4) வேதத்தில் அவநம்பிக்கை
5) சாஸ்திரத்தில் அசிரத்தை
6) குருவாக்கியத்தில் அவநம்பிக்கை
7) நாமத்தை மோட்ச சாதனமாக கூறும் வசனங்கள் உள்ளபடி உண்மையில்லை என்றும் அவை நாமத்தில் ருசி ஏற்படுத்துவதற்காக மிகைபடுத்திக் கூறியவை என்றும் எண்ணுவது
8) நாம பலத்தால் எதையும் செய்யலாம் என்று தகாத கர்மங்களை செய்தல்
9) மேற்சொன்ன காரணத்தால் வேத கர்மாக்களை விடுதல்
10) நாம சங்கீர்த்தனத்தை சாமான்ய தர்மங்களுக்கு சமமான ஏதோ ஒன்று என எண்ணுதல்.
இந்த அபராதங்களை விலக்கி நாம ஜபம் செய்தல் வேண்டும்.
(‘காமகோடி ராமகோடி’ என்னும் நூலிலிருந்து)
=============================================================
சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…
Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
தொடர்புக்கு : Rightmantra Sundar | M: 9840169215 | E : editor@rightmantra.com
=============================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்திராள் வேத பாடசாலையில் வேதம் (கிரமம்) படித்து வரும் திரு.வேங்கட நரசிம்மன்
வேங்கட நரசிம்மனை பற்றி தனிப் பதிவே அளித்திருக்கிறோம். வேத நெறி நிச்சயம் அழிவில்லாது தழைத்தோங்கும் என்கிற நம்பிக்கையை நம்மிடையே ஏற்படுத்தும் ஒரு நம்பிக்கைச் சுடர் இந்த வேங்கட நரசிம்மன். வரும் 1 முதல் 6 வரை திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நடைபெறவிருக்கும் அதிருத்ரத்தில் பங்கேற்க வேங்கட நரசிம்மன் திருப்பழனம் செல்வதால், அங்கே ருத்ர ஜபம் நடக்கும் இடத்திலேயே நமது பிரார்த்தனையை செய்வதாக உறுதியளித்திருக்கிறார். அதற்கு அடுத்த வாரம் போதேந்திராள் அதிஷ்டானத்தில் பிரார்த்தனை செய்வார்.
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். வேங்கட நரசிம்மனுக்கு நம் மனமார்ந்த நன்றி!
திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 50வது தலம் ஆகும்.[1] இச்சிவாலயத்தின் மூலவர் ஆபத்சகாயர். தாயார் பெரிய நாயகி. இச்சிவாலயம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பழனம் எனும் ஊரில் அமைந்துள்ளது. திருவையாறுக்குக் கிழக்காக 3 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு சிவன் தாந்தோன்றியாய் சுயம்பு மூர்த்தியாக தோன்றுகிறார் என்று நம்பப்படுகின்றது.
=============================================================
இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…
இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் திரு.தனபால் அவர்கள் நமது ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ நூலை வாங்கிப் படித்து அதன் இறுதியில் உள்ள பிரார்த்தனை விண்ணப்ப படிவத்தை நிரப்பி அதன் மூலம் கோரிக்கை சமர்பித்திருக்கிறார். தனது பிரச்சனை என்ன என்பதை பற்றி வெளிப்படையாக சொல்லியிருப்பது அவருக்கு நமது பிரார்த்தனை மன்றத்தில் உள்ள நம்பிக்கையையே காட்டுகிறது. பொதுவாக எல்லாரும் வெளியே சொல்ல தயங்கக்கூடிய தன் பிரச்னையை / துன்பத்தை பகிரங்கமாக குறிப்பிட்டு பிரார்த்தனை செய்யச் சொல்லியிருக்கிறார் தனபால். அவருடைய நம்பிக்கை வீண்போகாது.
இரண்டாவது பிரார்த்தனை கடைசியில் அவசரம் கருதி சேர்க்கப்பட்டுள்ளது. நம் வாசகி ஒருவர் தன் உறவினருக்காக பிரார்த்தனை சமர்பித்திருக்கிறார். உள்ளம் உருக்கும் ஒன்று. மீண்டு எழவேண்டும் அவர்.
அடுத்து பிரார்த்தனை வெளியிட்டிருக்கும் வாசகர் புதியவர் என்று கருதுகிறேன். பணியிடத்து சூழ்நிலை பற்றிய தனது கவலையை பகிர்ந்து ஏற்றமும் மாற்றமும் பெறவேண்டி கோரிக்கை அனுப்பியிருக்கிறார். விரைவில் அவருக்கு நல்லது நடக்கும் என்று நம்பலாம். நம்பிக்கையே வாழ்க்கை.
பொதுப் பிரார்த்தனை ‘நச்’ ரகம்!
பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருக்கும் அனைவரும் திருப்பழனம் சென்று ஆபத்சகாயேஸ்வரரையும் கோவிந்தபுரம் சென்று போதேந்திராளையும் தரிசிப்பது கோரிக்கைகள் விரைந்து நிறைவேறவழி ஏற்படுத்தும். நன்றி!
எல்லாரும் எல்லா வளமும் நலனும் பெறவேண்டும்!
=============================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
மனம் நன்றாகி (திரு)மணம் கனியவேண்டும்!
ரைட்மந்த்ரா ஆசிரியருக்கும் வாசகர்களுக்கும் வணக்கம்.
என் பெயர் தனபால். எனக்கு பத்தாண்டுகளுக்கு முன்னர் மனச்சிதைவு நோய் ஏற்பட்டு அதனால் நான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் வி.ஆர்.எஸ். பெற்று வந்துவிட்டேன். தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்தது தற்போது கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். மருந்துகள் உட்கொண்டு வருகிறேன். எனக்கு வயிற்றிலும் சில செரிமான பிரச்னைகள் உள்ளன. அதுவும் தொந்தரவாக உள்ளது. அவை யாவும் நீங்கவேண்டும்.
மேலும், எனக்கு நாற்பத்தைந்து வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. என் உடன்பிறந்தவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணத் தடைகள் அகன்று எனக்கு விரைவில் திருமணம் நடக்கவும் பிரார்த்தனை மன்றத்தில் பிரார்த்தனை சமர்பிக்கிறேன்.
நன்றி
தனபால்,
கோவை
=============================================================
வாத நோய் நீங்கி உறவினர் நலம் பெற வேண்டும்
நம் ரைட் மந்த்ரா குடும்பத்தினர் அனைவருக்கும் வணக்கம்.
எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் திருமதி.மேரி (வயது 36) அவர்களுக்காக இந்த பிரார்த்தனையை சமர்ப்பிக்கிறேன். அவர் கடந்த மூன்று மாதங்களாக ஒரு விதமான வாத நோயால் பாதிக்கப்பட்டு எழுந்து நடக்க முடியாமல் இருந்தார். பிசியோதெரபி சிகிச்சைக்குப் பின் தற்போது இன்னொருவர் உதவியுடன் எழ முடிகிறது. இவரின் இந்த நிலையால் அவரின் குடும்பத்தினரும் குழந்தைகளும் மிக்க துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டுமென்று நம் ரைட் மந்த்ரா குடும்பத்தினர் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்.
நன்றி,
ரைட் மந்த்ரா வாசகி
(Don’t want to disclose name)
=============================================================
Want to settle down!
Dear Sundarji and RM readers,
I am working in abroad and due to various reasons i don’t have peace of mind. i sincerely request all to pray for my peace of mind, prospeous life and work place satisfaction with growth and good earnings.
Also pray for my earliest marriage as i am yet to settle down in life with good partner.
yours faithfully,
RM Reader
(Don’t want to disclose name)
=============================================================
பொது பிரார்த்தனை
இந்துக்கள் இந்து மதத்தின் பெருமையை உணரவேண்டும்!
இந்த வார பொதுப் பிரார்த்தனையை தெரிவித்திருப்பவர் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.வேங்கட நரசிம்மன் அவர்கள். பொதுப் பிரார்த்தனை பற்றி குறிப்பிட்டு, நீங்களே ஏதாவது சொல்லுங்களேன் என்றோம்.
அப்போது திரு.வேங்கட நரசிம்மன் கூறியதிலிருந்து….
அவரவர் அவரவர் சார்ந்த மதத்தின் கொள்கைகளை கடைபிடித்தாலே போதும். உலகம் ஷேமமாகிவிடும். மற்ற மதத்தினர் நமது இந்து மதத்தின் அருமையை உணர்வது இருக்கட்டும். முதலில் இந்துக்கள் நாம் அதை உணர்ந்திருக்கிறோமா என்று சிந்திக்கவேண்டும். நமது இந்து மதத்தில் இருப்பவர்கள் அதை முழுமையாக புரிந்துகொள்ளாமல், அதை தூஷித்து வருகின்றனர். எனவே இந்துவாகப்பட்டவர்கள் முதலில் நமது இந்து மதத்தை ஆழ்ந்து படிக்கவேண்டும்.
இந்துக்கள் அனைவரும் கவியரசு கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலை அவசியம் படிக்கவேண்டும். ஒரு நல்லவன் அப்படிப் போகாதே இப்படிப் போ என்று சொல்வதற்கும், தீயவனாக இருந்த ஒருவன், பட்டுத் தெளிந்து மனந்திருந்தி “அந்தப் பாதையில் போகாதே இது தான் சரியான பாதை இப்படிப் போ” என்று சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. முன்னவன் அக்கறையில் சொல்கிறான். பின்னவன் அனுபவப்பட்டு சொல்கிறான். எனவே அத்தகைய அனுபவத்தை பெற்ற கண்ணதாசனின் கூற்றில் உண்மை இருக்கும். நியாயமும் இருக்கும்.
இந்துக்கள் அனைவரும் நமது இந்துமதத்தையும் அதன் பக்தி இலக்கியங்களையும் ஆழப் படித்து அதன் சத்தியத்தையும் அருமையையும் உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும். இதுவே இந்த வார பொது பிரார்த்தனை.
=============================================================
கோவையை சேர்ந்த திரு.தனபால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மனநிலை பாதிப்பும், வயிறு தொடர்பான பிரச்சனைகளும் முற்றிலும் நீங்கி, அவர் ஆரோக்கியத்துடன் திகழவும், அவருக்கு ஏற்பட்டுள்ள திருமண தடைகள் யாவும் நீங்கி அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவும், பெயர் வெளியிட விரும்பாத அந்த அயல்நாட்டு வாசகருக்கு உத்தியோகத்தில் ஏற்றமும் பணியிடத்தில் அமைதியும் மனநிறைவும் கிடைக்கவும் விரைவில் அவருக்கு நல்லதொரு பெண் கிடைத்து திருமணம் நடக்கவும் பரம்பொருளை பிரார்த்திப்போம். நமது தளத்தின் பெயர் வெளியிட விரும்பாத வாசகியின் உறவினருக்கு வாத நோய் பாதிப்பு நீங்கி அவர் நலம் பெற வேண்டும். முன்னைப் போல பணிகளை செய்யவேண்டும். அவர் தம் துன்பம் முடிவுக்கு வரவேண்டும்.
இந்துக்கள் யாவரும் நம் தாய்மதமான இந்துமதத்தின் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் உணர்ந்து ‘அன்பே சிவம்’ என்ற தத்துவத்தை நிலைநாட்டி தலைநிமிரச் செய்யவேண்டும். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திருவேங்கட நரசிம்மன் வேத நெறிப்படியான ஒரு நல்ல வாழ்க்கையுடன் அனைத்து வித நலன்களையும் செல்வங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழவும் பிரார்த்திப்போம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : ஜனவரி 3, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
============================================================
வழக்குகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு!
* வழக்குகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு விஷேச பிரார்த்தனை கிளப் பதிவு (January 2nd week) விரைவில் அளிக்கப்படவிருக்கிறது. அந்த பிரார்த்தனைக்கு வழக்கறுத்தீஸ்வரர் கோவில் குருக்கள் திரு.நாகராஜ் குருக்கள் தலைமை ஏற்கவுள்ளார். எனவே வழக்குகளால் இன்னல்படுபவர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும் இறுதியில் அவரவர் அலைபேசி எண், பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட்டு நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
பிரார்த்தனை கோரிக்கை மட்டும் அவரவர் பெயர் மற்றும் ஊருடன் தளத்தில் அளிக்கப்படும். பெயர், ராசி, நட்சத்திரம் வழக்கறுத்தீஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய பயன்படும். ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் வெளியிடப்படாது! சந்தேகங்களுக்கு நம்மை அலைபேசியில் தொடர்புகொள்ளவும்! பெயரோ ஊரோ வெளியிட விரும்பவில்லை என்றால் அதையும் குறிப்பிட்டு அனுப்பவும். அவர்கள் பெயர்கள் இல்லாமல் பிரார்த்தனை வெளியிடப்படும்.
==========================================================
சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…
Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056 | IFSC Code : UTIB0001182
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033. | Phone : 044-43536170 | Mobile : 9840169215
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
=============================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
=============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E : editor@rightmantra.com | M : 9840169215 | W:www.rightmantra.com
=============================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
=============================================================
சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : குன்றத்தூரில் உள்ள திருமுறை விநாயகர் கோவிலில் நித்திய பூஜைகள் செய்யும் பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.திருச்சிற்றம்பலம்
சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?
சென்ற பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றது குன்றத்தூரில் உள்ள திருமுறை விநாயகர் கோவிலில் நித்திய பூஜைகள் செய்யும் பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.திருச்சிற்றம்பலம் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.திருச்சிற்றம்பலம், பிரார்த்தனை நடைபெற்ற இரண்டு வாரங்களும் விநாயகருக்கு பூஜைகள் செய்து பிரார்த்தனையாளர்களின் பெயர்களுக்கு அர்ச்சனை செய்து, பிரார்த்தனையை சமர்பித்திருக்கிறார்.
முழுமுதற்கடவுள் முன்வந்து துயர் தீர்ப்பார் என்று நம்பலாம். முன்னரே கூறியபடி பிரார்த்தனை சமர்பித்தவர்கள் அது நிறைவேறும் பட்சம், திருமுறை விநாயகரை தரிசித்து அபிஷேகங்கள் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
* பிரார்த்தனைக்கு விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
=============================================================
[END]
இந்த வரம் பிரார்த்தனை கோரி இருக்கும் திரு தனபால் அவர்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி இந்த 2016 இல் முழு குணமடைவார் மற்றும் பெயர் வெளியிட விரும்பாத நண்பர் அவர்களுடைய பிரச்சினைகளும் முழுவதும் நீங்கிவிடும் மற்றும் நமது பிரார்த்தனை கிளப்புக்கு அவர்கள் விண்ணப்பித்து இந்த பதிவு வெளியான உடனே அவர்களுடைய பாதி பிரச்சினை தீர்ந்து விட்டதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்திக்கும் .
நா, சந்திரசேகரன் .(ரைட் மந்த்ரா ஆசிரியர் மற்றும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் )
Dear Sir,
Great job. Keep enchanting the minds with spiritual divine power.
Thanks a lot. Wish you a great, successful new year ahead.
எல்லோருடைய வேண்டுகோளும் நல்ல படியாக நடக்க பெரியவா ஆசிர்வாதமும் உங்கள் முயற்சியும் சிறப்பாக இருக்க வேண்டுகிறேன் .
தங்களின்,
சோ. ரவிச்சந்திரன்
கர்நாடகா