Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > 21 ஆண்டுகள் காத்திருந்து ‘காரியத்தை’ முடித்த ஒரு கர்மயோகி!

21 ஆண்டுகள் காத்திருந்து ‘காரியத்தை’ முடித்த ஒரு கர்மயோகி!

print
ந்திய விடுதலைக்காக தனது இன்னுயிரை ஈந்த ஒவ்வொரு வீரனும் நமக்கு கடவுள் போல என்றாலும் ஒரு சில குறிப்பிட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு சிலிரிப்பூட்டும் ஒன்றாகும். இப்படியெல்லாம் கூட ஒருவர் இருந்திருக்க முடியுமா? இப்படியெல்லாம் கூட ஒருவர் தாய்நாட்டுக்காக தியாகங்களை செய்ய முடியுமா? வாழ்க்கை என்றால் இதுவல்லவா வாழ்க்கை என்று நெகிழ்ந்து போவோம்.

UDHAM_SINGHஅப்படிப்பட்ட ஒருவர் தான் தியாகி உதம்சிங். டிசம்பர் 26, அவரின் பிறந்தநாள். ஆன்மீக பதிவுகளை அளிப்பதைவிட, (மறக்கப்பட்ட) இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் பிறந்தநாளின் போது அவர்களை பற்றிய பதிவை பல அரிய தகவல்களுடன் அளிப்பது நம் வழக்கம் என்பது உங்களுக்கு தெரியும். இருப்பினும் கவனக் குறைவால் தளத்திலோ குறைந்தபட்சம் முகநூலிலோ கூட இந்த வீரனை பற்றிய பதிவளிக்க மறந்தேவிட்டோம்.

கடவுளை மறந்தாலும் நமக்காக பல தியாகங்கள் செய்து தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களை மறக்கவே கூடாது. அப்படி மறக்கும் சமூகம் … சரி விடுங்க… அதை எதுக்கு நம் வாயால் சொல்லவேண்டும்?

BETTER LATE THAN NEVER அல்லவா? எனவே இந்த பதிவு அளிக்கப்படுகிறது.

யார் இந்த் உதம் சிங்? அப்படி என்ன தியாகம் செய்துவிட்டார்?

ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு காரணமாக இருந்த மைக்கல் ஓ டயர் என்ற அதிகாரியை ஐரோப்பா முழுவதும் பல ஆண்டுகளாக பின் தொடர்ந்து புத்தகத்தின் உள்ளே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினால் சுட்டுக் கொன்று சரித்திரம் படைத்தவர் இந்த உதம் சிங். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அவர் இதற்கு எடுத்துக்கொண்டார்.

1919 ஆம் ஆண்டு இந்திய விடுதலை வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கருப்பு வருடம். ஆம் அந்த ஆண்டு தான் பஞ்சாபில் ‘ஜாலியன் வாலாபாக்’ என்கிற இடத்தில் பைசாகி திருவிழாவை முன்னிட்டு கூடிய நூற்றுக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் கூடியிருந்தனர். “இந்த மக்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக புரட்சி செய்ய கூடியிருக்கிறார்கள்” என்று கூறி எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி அம்மக்களை பஞ்சாப் பிரிவின் பிரிட்டிஷ் கமாண்டர் ரெஜினால்ட் டயர் என்பவன் ஆயுதமேந்திய பிரிட்டிஷ் சிப்பாய்களை கொண்டு ஈவிரக்கமின்றி படுகொலை செய்தான். ரெஜினால்ட் டயருக்கு அந்த நேரத்தில் மிக ஆதரவாக இருந்து அவன் செயலை புகழ்ந்தது மைக்கேல் ஓ டயர் என்ற பஞ்சாப் மாகாண ஆளுநர்.

Jalian Wala Bagh

படுகொலை நடந்த அந்நேரம் தீவிரமான சுதந்திர போராட்ட செயல்களில் ஈடுபட்டிருந்த இளைஞரான உதம்சிங் அப்போது மக்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொடுக்கும் பணியிலிருந்தார். உதம் சிங் அந்த துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பிவிட்டாலும் தன் கண்ணெதிரே தன் நாட்டு மக்கள் குருவி சுடுவது போல சுட்டுக் கொல்லப்பட்டதை அவனால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

அதற்கு பிறகு இருபது ஆண்டுகள் காத்திருந்து 1940 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு துணைபோன மைகேல் டயரை இங்கிலாந்தில் சுட்டுகொன்றார் உதம் சிங்.

1899 ஆம் ஆண்டு டிசம்பர் 26, அன்று பஞ்சாப் மாநிலத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் உதம் சிங் எனப்படும் ராம் முஹம்மது சிங் ஆசாத். இந்திய விடுதலை வரலாறு கண்ட ஒப்பற்ற மாவீரர்களில் ஒருவர் ராம் முஹம்மது சிங் ஆசாத். உதம் சிங்கின் தந்தை சிறுவயதிலேயே இறந்து விட அவனுக்கு பத்து வயது இருக்கும்போது அவனை ஒரு ஆதரவற்றோர் விடுதியில் சேர்த்தார் அவன் தாய் மாதா நாராயண் கவுர்.

“நான் ஒரு இந்தியன். என்னை தனிமைப்படுத்தும் எந்த மத அடையாளமும் எனக்கு வேண்டாம்” என்று கூறி தனது இனத்தின் அடையாளங்கள் அனைத்தையும் துறந்தவன் இந்த வீரன். இவரை நேரில் பார்த்தால் இவர் என்ன இனம், மதம் எதுவுமே ஒருவருக்கு புரியாது.

இவர் ஒரு கிறுக்கன் என்றனர் சிலர். மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றனர் சில தேசியத் தலைவர்கள்.

ஆம்… மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அழைக்கப்பட்டவர் தான் 20 ஆண்டுகள் காத்திருந்து பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து, இங்கிலாந்தை அடைந்து, ஆயிரக்கணக்கான அப்பாவி இந்தியர்களை சுட்டுப் பொசுக்கிய கயவனை பழி தீர்த்தார்.

தன்னந்தனியாக யாருடைய உதவியும் இல்லாமல் இதை உதம் சிங் நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து எப்படியோ ஐரோப்பா வழியாக இங்கிலாந்து சென்ற உதம் சிங், தனது ஒவ்வொரு அடியையும் மிக மிக கவனமாக எடுத்து வைத்தார். எப்படி எப்படியோ முயற்சி செய்து தான் யாரை கொல்ல நினைத்தாரோ அதே மைக்கேல் ஓ டயரிடம் ஒரு உதவியாளாராக சேர்ந்து நல்ல முறையில் நடந்துகொண்டு படிப்படியாக அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானார்.

மைக்கேல் ஓ டயர் வேட்டைக்கு கிளம்பும்போதெல்லாம் உதம் சிங் தான் உடன் செல்வார். ஒரு நாள் டயர் இவரிடம் வகையாக சிக்கிக்கொண்டார். துப்பாக்கியை குறிபார்த்து விசையை இழுக்கும் நேரம், மேற்கொண்டு எதுவும் செய்யாமல் நிறுத்திவிட்டார். தனக்கு வேலையளித்த எஜமானரை கொன்றால், அதற்கு பிறகு ஆங்கிலேயேர் யாருமே இந்தியரை நம்பி வேலை தர மாட்டார்கள். அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும். மேலும் இங்கிலாந்தில் வேலை பார்க்கும் அனைத்து இந்தியர்களும் வேலையை இழக்க நேரிடும். அதுமட்டும்மல்ல… டயரை கொல்லும் சம்பவம் உலகம் முழுதும் பரபரப்பாக பேசப்படவேண்டும். அனைவரது கவனத்தை ஈர்க்கவேண்டும் என்றும் கருதினார் உதம் சிங்.

எனவே டயரிடம் பார்த்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெவ்வேறு இடங்களில் வேலை பார்த்துக்கொண்டே டயரை பழி தீர்க்க தகுந்த சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தார்.

Udham singh dyer assasnation

1940 ஆம் ஆண்டு, லண்டனில் உள்ள காக்ஸ்டன் அரங்கில் மைக்கேல் ஒ டயர் பங்கேற்று பேசவிருக்கிறார் என்ற செய்தி உதம் சிங்கிற்கு கிடைத்தது. பல அதிகாரிகள் பங்கேற்கும் அந்த அந்த நிகழ்ச்சி தான் அவனை கொல்ல சரியான வாய்ப்பு என்று தீர்மானித்த உதம் சிங் அந்த அரங்கிற்கு மாறுவேடத்தில் சென்றார். உயர் மட்ட பாதுகாப்பு அந்த அரங்கிற்கு போடப்பட்டிருந்தது. உதம் சிங் ‘பகவத் கீதை’ நூலுக்குள் தனது ரிவால்வரை மறைத்து வைத்து உள்ளே எடுத்துச் சென்றுவிட்டார்.

நிகழ்ச்சி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்தது. கொக்கு மீனுக்காக காத்திருப்பது போல பார்வையாளர்களில் ஒருவராக காத்திருந்தார் உதம் சிங். கூட்டத்தில் பேசிய டயர், “ஜாலியான் வாலா பாக் சம்பவத்திற்கு நான் சிறிதளவும் வருத்தப்படவில்லை. நம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் செய்ததை ஆப்பிரிக்காவிலும் கூட வாய்ப்பு கிடைத்தால் நான் அரங்கேற்றச் சித்தமாக இருக்கிறேன்” என்று ஆணவத்துடன் குறிப்பிட்டான்.

கூட்டத்தில் இருந்த உத்தம் சிங் திடீரென எழுந்தார்…. “அந்த வாய்ப்பு உமக்கு கிடைக்கப்போவதில்லை சர் மைக்கேல் டயர் அவர்களே” எனக் கூறியபடி துப்பாக்கியை எடுத்தார். 20 ஆண்டு கால குறியல்லாவா? ஒரு இன்ச் கூட குறி தவறவில்லை. ரிவால்வரின் முதல் குண்டு அவன் மார்பையும் இரண்டாம் குண்டு அவனது சிறுநீரகத்தையும் துளைக்க, தாக்கப்பட்ட மைக்கேல் டயர் அங்கேயே சுருண்டு விழுந்து செத்துப் போனான். துப்பாக்கி குண்டு உடலில் துளைத்தால் எப்படி இருக்கும் என்று அவன் உணர்ந்தே இறந்திருப்பான். அந்நேரம் டயர் தவிர அப்போது மேடையில் இருந்தவர்களுள் ஒருவரான இந்திய அரசு செக்ரட்டரி செட் லாண்ட் பிரபு எனவரும் காயமடைந்தார். லாமிங்டன் என்கிற பிரிட்டிஷ் பிரபுவின் கை சிதறிப் போனது. என்ன நடக்கிறது என்று மற்றவர்கள் ஊகிக்கும் முன்னே இது நடந்து முடிந்துவிட்டது.

உதம் சிங் தப்பிக்க முயற்சிக்கவில்லை. மிகப் பெரிய சாதனையை நிகழ்த்திவிட்ட களிப்பில் இன்குலாப் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டார். போலீசார் விரைந்து வந்து உதம் சிங்கை பிடித்து கைவிலங்கிட்டனர். எந்தவிட ஆர்ப்பாட்டமும் இன்றி புன்னகைத்தபடியே அவர்களுடன் சென்றார் உதம் சிங்(கம்).

அப்போதைய இங்கிலாந்து நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தி....
அப்போதைய இங்கிலாந்து நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தி….

பிரிட்டிஷாருக்குத் தமது கோட்டையிலேயே தமது சாம்ராஜ்யத்தின் வலிமை வாய்ந்த தளபதியை ஓர் இந்தியன் கொன்றான் என்பது அவமானகரமாக இருந்தது.

தான் மைக்கேல் ஓ டயரை கொன்றது ஏன் என்பது குறித்து கோர்ட்டில் உதம் சிங் கூறிய காரணம் :

“அவனை பழி தீர்க்கவே காத்திருந்து கொன்றேன். அதற்காக நான் 21 ஆண்டுகள் காத்திருந்தேன். எனது கடமை கடைசியில் முடிந்துவிட்டது. சாவைக் கண்டு நான் அஞ்சவில்லை. என் நாட்டிற்காகவே நான் எனது உயிரை கொடுக்கிறேன். அதற்கு பெருமைப்படுகிறேன். என் மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் சொல்லொண்ணா துயரை அனுபவித்து வருகிறார்கள். அதற்கு எதிராகவே இதை செய்தேன். இது என் கடமை. தாய்நாட்டுக்காக உயிர் துரப்பதைவிட எனக்கு வேறு பெருமை கிடைக்கமுடியுமா?”

கோர்ட்டில் வாக்குமூலம் கொடுக்கும்போது சத்தியப் பிரமாணம் எடுத்துகொள்ள ஏதேனும் ஒரு நூலை தேர்வு செய்யச் சொன்னார்கள். உதம் சிங் தேர்வு செய்தது எதைத் தெரியுமா? பஞ்சாபி மொழியில் வெளியான காதல் காவியமான ‘ஹீர் வரிஸ் ஷா’ என்னும் நூலை.

31 ஜூலை 1940 – மாவீரன் தூக்கிலிடப்பட்டான். நூற்றுக்கணக்கான அப்பாவி இந்தியர்களை கொன்ற சதிகாரனுக்கு துணைபோன ஒரு அரக்கனை பழி தீர்த்த மகிழ்ச்சியோடு மனநிறைவோடு தவப்புதல்வன் இந்த பூமியிலிருந்து விடைபெற்றான்.

“தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்துவிடுங்கள். இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்” என்று கேட்டுக்கொண்டார் உத்தம் சிங்.

(* மைகேல் ஓ டயரை உதம் சிங் கொன்று பழி தீர்த்துவிட்டார். மற்றொரு மிருகம் ரெஜினால்ட் டயருக்கு என்ன ஆயிற்று? உதம் சிங் அவனை கொல்லும் முன்பே அவன் இறந்து விட்டான். பல நூறு அப்பாவி மக்களை கொன்று குவித்த ரெஜினால்ட் டயர் இறுதிக் காலத்தில் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு படுக்கையில் வீழ்ந்து வாயும் இழுத்துக்கொண்டு பேசக் கூட முடியாத நிலையில், மூளையில் ரத்தக் குழாய் வெடித்து இறந்துபோனான். கொடுங்கோலனுக்கேற்ற முடிவு தான்!)

உதம் சிங் போன்ற பல வீரர்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நம் இளைஞர்கள் நடிகர்கள் பின்னே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். காந்தியையும் நேருவையும் விட்டால் வேறு யாரும் நம் சுதந்திரத்திற்குப் பாடுபடவில்லையோ என்று குழந்தைகள் கருதும் அளவிற்கு பாடத்திட்டங்கள் பள்ளிகளில் நோஞ்சானாக இருக்கின்றன. உதம் சிங் போன்றவர்களை நம் அடுத்தத் தலைமுறையினர் அறிவார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

பலரின் தியாகத்தின் மூலம் பெற்ற நம் சுதந்திரத்தை, அதன் அருமை தெரியாமல் நாட்டை காட்டிக் கொடுத்தவர்களிடம் அடகு வைத்துவிட்டோம். எப்போது மீட்கப்போகிறோம்?

தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா!
இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்!

பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?

விண்ணில் இரவிதனை விட்டுவிட்டு  (* இரவி – சூரியன்)
எவரும்போய் மின்மினி கொள்வாரோ ? ….

மண்ணில் இன்பங்களை விரும்பிச்
சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ ? 

– மகாகவி பாரதி

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details: 

Name : Rightmantra Soul Solutions |  A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056. IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

Also check : 

நாட்டை உலுக்கிய ‘குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு’ – சுதந்திர தின SPL – MUST READ

அங்கே புனித உடல் புதைக்கப்பட்டது – இங்கே கனவுகளில் ஒன்று விதைக்கப்பட்டது!

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!

மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன? 

சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?

வறுமையில் வாடும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் குடும்பத்தினர் – கல்விக்கே கடன் வாங்கும் பரிதாபம்!

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் – பாரதிக்கு முன்பே வாழ்ந்த புதுமை பெண்!

தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!

“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?

கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து குடுகுடுப்பைக்காரனுக்கு தந்த பாரதி – ஏன் தெரியுமா???

உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!

ஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை!

2 thoughts on “21 ஆண்டுகள் காத்திருந்து ‘காரியத்தை’ முடித்த ஒரு கர்மயோகி!

  1. வணக்கம் உத்தம் சிங் அவர்களின் நாட்டுப்பற்று நம்மை வியக்க வைக்கிறது அவருக்கு நம் வணக்கங்கள் மற்றும் அஞ்சலிகள்

  2. வீரர் உத்தம் சிங் பற்றி படிக்கும் போது தங்களின் வேறு ஒரு பதிவில் எழுதியது இதோ : கையெழுத்துப்போட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார்கள். அந்தக் கடிதத்தில்தான் குறிப்பிட்டார்கள். ‘நீதிமன்றத் தீர்ப்பின்படி நாங்கள் பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போர் தொடுத்தவர்கள். ஆகவே, நாங்கள் யுத்தக் கைதிகள். யுத்தக் கைதிகளை அந்தமாதிரி முறையில் நீங்கள் மரண தண்டனை கொடுங்கள். அந்த அடிப்படையில் எங்களைச் சுட்டுக் கொல்லுங்கள்’ என்று கவர்னருக்கு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார்கள். ஆனால், அதை கவர்னர் ஏற்றுக் கொள்ளவில்லை.

    ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பகத்சிங் தம்மை தூக்கில் இடுவதற்கு முன் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று அவருக்கு அனுமதி தந்தது ஆங்கில அரசு.

    ‘நீதிமன்றத் தீர்ப்பின்படி நாங்கள் பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போர் தொடுத்தவர்கள். ஆகவே, நாங்கள் யுத்தக் கைதிகள். யுத்தக் கைதிகளை அந்தமாதிரி முறையில் நீங்கள் மரண தண்டனை கொடுங்கள். அந்த அடிப்படையில் எங்களைச் சுட்டுக் கொல்லுங்கள்’ என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். “நீ எப்படியும் இறக்கத்தான் போகிறாய், உன்னை எப்படிக் கொன்றால் என்ன?” என்று அலட்சியமாகக் கேட்டனர் ஆங்கிலேய அதிகாரிகள். அதற்கு பகத்சிங்,””தூக்கிலிடும்போது என் கால்கள் என்னுடைய தாய் மண்ணை தொட முடியாத உயரத்தில் இருக்கும். ஆனால் துப்பாக்கியால் சுடும்போது என்னுடைய தாய் மண்ணைத் தழுவியபடியே உயிர்விடுவேன். அதுதான் எனக்குப் பெருமை” என்று கூறினார்.

    ‘அதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று பதில் வந்தது.

    ‘அப்படியானால் எங்கள் கண்களின் கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள். நாங்கள் பிறந்த மண்ணை நாங்கள் மகிழ்ச்சியாக பார்த்துச் சிரித்துக்கொண்டே சாக விரும்புகிறோம்’ என்கிறான். மீண்டும் இந்த மண்ணில் பிறக்க விரும்புகிற நாங்கள் இந்த மண்ணைத் தரிசித்தவாறே சாக விரும்புகிறோம் என்கிறான் பகத்சிங்.

    உடனே அந்த அதிகாரி, தனக்கு இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, கண் கட்டுகளை அவிழ்த்து விடச்சொன்னான். கலகலவெனச் சிரித்தான் பகத்சிங். ‘ஏன் சிரிக்கிறாய்? என்றான். மகிழ்ச்சியாக இந்த மண்ணைத் தரிசித்தவாறே நான் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு நாங்கள் சாகின்ற காட்சியைப் பார்க்கின்ற பாக்கியம், உன்னைத்தவிர இந்த உலகத்தில் வேறு எவனுக்கும் கிடைக்கவில்லை’ என்று சொன்னான். மூவரையும் தனித்தனியாகக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.

    முதலில் பகத்சிங்கைத் தூக்கில் போட்டார்கள், ‘சுகதேவ் வருகிறேன். இராஜகுரு வருகிறேன். புரட்சி ஓங்குக. இன்குலாப் சிந்தாபாத்’ என்று அந்தத் தூக்குக்கயிற்றை வாயால் எடுத்து முத்தமிட்டார், அதற்குப்பிறகு கழுத்தில் தூக்குக்கயிற்றை மாட்டினார்கள். மற்ற இருவரும் அதேபோல ‘இன்குலாப் சிந்தாபாத்’ என்று அவர்களும் அந்தத் தூக்குக்கயிற்றை அணைத்தார்கள்.

    இதில் கொடுமை என்னவென்றால், இது எதுவுமே தெரியாமல் நாளைக் காலையில் தூக்கில் போடுவதற்கு முன்பு கடைசியாக ஒருதடவைப் பார்த்துவிடலாமா என்ற ஏக்கத்தில், பகத்சிங்கின் தாயும் தந்தையும் கிஷன்சிங்கும் வித்யாவதி கெளரும் சிறை வாசலில் நிற்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாது. ஏழரை மணிக்கே தூக்கில் போட்டு விட்டார்கள் என்பது தெரியாமல் அவர்கள் வாசலிலேயே நிற்கிறார்கள். அவர்கள் கடைசியாக ஒருமுறை மகனைப் பார்க்க முடியுமா? என்று கேட்கிறபோது, ‘சிறை அதிகாரி அலுவலகத்தில் இல்லை. நாளை காலையில் வாருங்கள்’ என்று அவர்களை பகத்சிங்கைத் தூக்கில் போடுகிற அதே நேரத்தில் அனுப்பி விட்டார்கள்.

    தூக்கில் போட்ட உடன் சிறைக்குப் பின்வாசல் வழியாக இந்த மூன்று பேருடைய உடலையும் வண்டியில் தூக்கிக் கொண்டு, மண்ணெண்ணெய் டின்னும், விறகுகளும் எடுத்துக் கொண்டு லாரியில், மதகுருக்கள் இருவர் நந்தா சிங் கிரஞ்சி என்ற சீக்கிய மதகுருவையும் ஜெகநாத ஆச்சர்யா என்ற இந்து மதகுருவையும் அதிகாரிகள் உடன் அழைத்துக் கொண்டு சட்லஜ் நதிக்கரைக்குப் போனார்கள். இருட்டி விட்டது இரவு எட்டரை மணி.

    சட்லஜ் நதிக்கரையில் ஒரே சிதையில் மூன்று பேரின் உடலையும் வைக்கிறார்கள். அப்பொழுது சீக்கிய மதகுரு நந்தா சிங் கிரஞ்சா சொல்கிறார்; ‘எங்கள் சீக்கிய மத வழக்கப்படி இருட்டியபிறகு ஈமச்சடங்கு செய்யக்கூடாது, இருட்டியபிறகு தகனம் செய்யக்கூடாது’ என்றவுடன், காவல்துறை அதிகாரி அவரைப் பார்த்து மிரட்டுகிறார். ‘வாயை மூடிக்கொண்டு இரு’ என்கிறார். பயந்து கொண்டு பேசாமல் இருந்து விடுகிறார். அதற்குப்பிறகு சிதையில் மண்ணெண்ணெய் ஊற்றுகிறார்கள். எங்கள் மத வழக்கப்படி மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கக்கூடாது என்கிறார். அப்பொழுதும் மிரட்டுகிறார்.

    Bhagat Singh Death Certificate

    மூன்றுபேரையும் ஒரேசிதையில் வைத்தவுடன், இந்து மதகுரு ஜெகநாத ஆச்சார்யா சொல்கிறார். ஒரு சிதையில் ஒரு பிரேதத்தைத்தான் வைக்கவேண்டும். மூன்று பிரேதத்தையும் ஒரே சிதையில் வைக்கக் கூடாது என்கிறார். அவரையும் மிரட்டுகிறார்கள். இரவு 11.45 தீயை வைக்கிறார்கள். இரண்டரை மணி நேரம் எரிகிறது. நள்ளிரவு கடந்து 2.15 மணிக்குப் பார்க்கிறார்கள். இன்னும் சில பகுதிகள் உடம்பு எரிந்தும் எரியாமலும் இருக்கிறது. என்ன செய்கிறார்கள் என்றால் எரியாமல் இருக்கின்ற பகுதிகளை கோடாரியால் துண்டு துண்டாக வெட்டு கிறார்கள். மீண்டும் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கிறார்கள். அதற்குப்பிறகு துண்டும் துணுக்குகளுமாகக் கிடந்ததை எல்லாம் எடுத்துக்கொண்டு போய் சட்லஜ் நதியில் போடுகிறார்கள்.

    இவ்வளவு கொடுமையும் நடந்து முடிந்து விட்டது. காலையில் போய் பகத்சிங்கை பார்க்கலாம் என்று அவன் பெற்றோர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். விடிந்தும் விடியாத காலைப்பொழுதில், லாகூர் வீதிகளில், பிரிட்டிக்ஷ் அரசு காவல்துறையை வைத்தே ஒரு சுவரொட்டியை ஒட்டுகிறது எல்லா இடங்களிலும். ‘பகத் சிங் – ராஜ குரு – சுகதேவ் நேற்று இரவிலேயே தூக்கிலிடப்பட்டு அவர்களது அஸ்தி சட்லஜ் நதியில் கரைக்கப்பட்டது’ என்று சுவரொட்டிகளை எல்லா இடங்களிலும் ஒட்டிவிட்டார்கள். இதை அறிந்த மக்களின் உள்ளம் எரிமலையாயிற்று. கிளர்ச்சி வெடித்தது. மக்கள் பொங்கி எழுந்தார்கள்.

    தன் வாழ்நாளில் கடைசி நிமிடம் வரையில் இலட்சியத்தை நேசித்து, மரணம் நிச்சயம் என்று தெரிந்ததற்குப்பிறகும்கூட எந்தக் கொள்கையை நேசித்தார்களோ அதற்காக வாழ்ந்த மாவீரன் அப்படிப்பட்ட மாவீரன் பகத்சிங்.

    மாற்றமுடியுமா // மறக்கமுடியுமா / மறந்தால் நாம் மனிதன் தானா?

    எண்ணமும் இன்னுமும் தாங்க முடிய வில்லையே சார்.

    தங்களின் நினைவூட்டும் ஆற்றலுக்கு மிக மிக நன்றி.

    தங்களின்
    சோ RAVICHANDRAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *