FORTUNE FAVOURS ONLY THE BOLD!
“உன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று இந்த உலகம் என்னிடம் சொன்னால், இல்லை என்னால் எதுவும் முடியும் என்று திருப்பி சொல்வேன்” என்கிறார் ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் பொல்லா.
பார்வையற்ற குழந்தையாக அவர் பிறந்தபோது, “இவனை வளர்த்து அவனை கஷ்டப்படுத்தி, நீங்களும் கஷ்டப்படுவதைவிட, அவனை இப்போதே கொன்றுவிடுங்கள்” என்று அக்கம் பக்கத்தினர் அவர் பெற்றோரிடம் கூறினார்களாம்.
“அவனால உங்களுக்கு என்ன பிரயோஜனம்? அவன் பாவம் செஞ்சிருக்கான். அதனால தான் கண்ணில்லாம பொறந்திருக்கான்” போன்ற கமெண்ட்டுகள் வேறு.
இருப்பத்து மூன்று ஆண்டுகள் கழித்து உயர்ந்து நிற்கும் ஸ்ரீகாந்த் “உன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று இந்த உலகம் என்னிடம் சொன்னால், இல்லை என்னால் எதுவும் முடியும் என்று திருப்பி சொல்வேன்” என்கிறார் தன்னம்பிக்கையுடன்.
தற்போது ஸ்ரீகாந்த் பொல்லா, ஹைதராபாத்தை சேர்ந்த Eco-friendly பேக்கேஜிங் பொருட்களை தயார் செய்யும் Bollant Industries என்கிற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO). தனது நிறுவனத்தில் 70% மேல் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.
இந்த உலகிலேயே தன்னையே மிகப் பெரும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறார் திரு.ஸ்ரீகாந்த் பொல்லா. தான் இப்போது கோடீஸ்வரன் என்பதால் அல்ல. மாதம் ரூ.2,000/- மட்டுமே சம்பாதித்து வந்த நிலையிலும் தன்னை அன்புடன் வளர்த்து ஆளாக்கிய எழுதப் படிக்கத் தெரியாத தன் பெற்றோர்களை நினைத்து.
“இந்த உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் அவர்கள் தான்!” என்கிறார் ஸ்ரீகாந்த்.
ஸ்ரீகாந்த் போன்றவர்களின் கதையை கேட்கும்போது நமக்கு ஏன் மிகவும் பிடிக்கிறது?
ஒருவேளை அவர்களின் கற்பனைக்கெட்டாத பொருளாதார அந்தஸ்தா அல்லது நாமும் அவர்களை போன்று சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்படுவதன் காரணமாகவா?
எப்போதுமே வாழ்க்கையில் அடிமட்டத்திலிருந்து மேலெழும்பி வெற்றிக்கொடி நாட்டுபவர்கள் கதை சிலிர்ப்பூட்டும் ஒன்றாகும். காரணம் நம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை சந்திக்கின்றனர். தங்கள் எதிர்காலம் குறித்து கனவு காண்கின்றனர். கடுமையாக உழைக்கின்றனர்.
ஆனால் அப்படி உழைப்பவர்கள் / கனவு காண்கின்றவர்கள் அனைவரும் சமூகத்தின் வரையறைகளை தகர்த்துச் சென்று வெற்றிக் கொடி நாட்டுகின்றனரா?
ஸ்ரீகாந்தின் கதையை பொருத்தவரை எந்த சூழ்நிலையிலும் கைவிடாத அவரது விடாமுயற்சி ஒன்றே அவரது இந்த சாதனைக்கு காரணம்.
அவர் பார்வையற்றவராக பிறந்தார் என்பது அவரது கதையில் ஒரு பகுதி. அவ்வளவே. அவர் வறுமையான சூழலில் பிறந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இது ஒன்று போதாதா? நமது சமூகத்தில் அவர் எப்படியெல்லாம் பந்தாடப்பட்டிருப்பார்?
வகுப்பில் அவரை வேண்டுமென்றே கடைசி பெஞ்சுக்கு தள்ளிவிட்டார்கள். அவரை விளையாட சேர்த்துக்கொள்ளவில்லை.
‘அரவணைப்பது’ என்கிற வார்த்தையையே அவர் படித்த அந்த கிராமத்து பள்ளி அறியவில்லை.
தனது பத்தாம் வகுப்பை அவர் முடித்தபோது, அவர் பார்வையற்றவர் என்பதை காரணம் காட்டி +1 ல் அவர் விரும்பிய சயன்ஸ் க்ரூப் மறுக்கப்பட்டது.
ஆனால் 18 வயதில், அனைத்தையும் தகர்த்தெரிந்ததோடு மட்டுமல்லாமல் அமெரிக்காவின் பிரபல Massachusetts Institute of Technology (MIT) யில் அனுமதிக்கப்பட்ட முதல் சர்வதேச பார்வையற்ற மாணவர் என்கிற பெருமையையும் பெற்றார்.
எழுத்தாளர் பாலோ கோலோ சொல்கிறார் : “வெளிச்சத்தை தேடி போராடிக்கொண்டிருப்பவர்கள் கடினமான காலகட்டங்களில் பொறுமையை கடைபிடிக்கவேண்டும். நம்மால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் இந்த பிரபஞ்சம் நமக்கு சாதகமாகவே நிலைமைகளை தயார் செய்கிறது என்பதை அவர்கள் உணரவேண்டும்!”
எத்தனை சத்தியமான வார்த்தைகள்!
தனது பெற்றோர் மாதம் ரூ.2000/- சம்பாதிப்பதே பெரிய விஷயம் என்கிற நிலையில் இருந்த அவருக்கு தற்போது இந்தியாவில் நான்கு மாநிலங்களில் நான்கு முக்கிய நகரங்களில் உற்பத்திக் கூடங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று முழுக்க முழுக்க சூரிய மின் சக்தியில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரவி மந்தா என்கிற முதலீட்டாளர் ஒருவர் ஸ்ரீகாந்த்தை இரண்டு வருடங்களுக்கு முன்னர் சந்தித்தபோது, அவரிடம் இருந்த வியாபார அறிவையும் நுணுக்கத்தையும் கண்டு வியந்து அவரை நம்பி பலகோடிகள் முதலீடு செய்ய முன்வந்தார்.
“இரண்டு வருடத்துக்கு முன்பு நான் சென்றபோது ஹைதராபாத்தில் ஒரு தொழில்பேட்டையில் தகரத்தில் கூரை வேய்ந்த ஒரு சாதாரண ஷெட் அது. அந்த ஷெட்டுக்கு கீழே மூன்று இயந்திரங்களும் சுமார் எட்டு பேரும் பணிபுரிந்துகொண்டிருந்தனர்…”
“இந்த சமூகத்தில் அவர் ஏற்படுத்த நினைக்கும் மாற்றத்தை பற்றி என்னிடம் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரின் வியாபார திறனையும், சந்தை புரிதலையும், தொழில்நுட்ப அறிவையும் கண்டு வியப்பின் உச்சிக்கே சென்றேன்.” – சொல்கிறார் ரவி மந்தா.
விரைவில் ஸ்ரீகாந்தின் நிறுவனம் பங்குசந்தையில் (IPO) அடியெடுத்து வைக்கவிருக்கிறது.
70% மாற்றுத் திறனாளிகளும் பார்வையற்றவர்களும் கொண்ட ஒரு நிறுவனத்தை நிமிர்ந்து நிற்கச் செய்து வெற்றிகரமாக நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. சவால்கள் நிறைந்தது.
பன்னாட்டு நிறுவனங்கள் வெளியே சென்று செய்யும் CSR போன்றது அல்ல இது. தனது நிறுவனத்திலேயே அதை அமுல்படுத்தி முன்னுதாரணமாக இருக்கிறார் ஸ்ரீகாந்த். கிரேட்!
“மாற்றுத் திறனாளிகளை தனிப்படுத்துவது என்பது அவர்கள் பிறக்கும்போதே தொடங்கிவிடுகிறது” – இது தான் மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் ஆற்றிய முதல் PUBLIC SPEECH.
ஒருவரை வாழவிடுவது, வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்துவது, அவர்களை தன்னிறைவு பெறச் செய்வது – இது தான் பரிவு என்பது. அதாவது COMPASSION.
செல்வம் என்பது பணத்திலிருந்து வருவதல்ல. அது மகிழ்ச்சியிலிருந்து வருவது.
வயல்களில் வேலை செய்ய ஸ்ரீகாந்தின் பெற்றோர் செல்லும்போது அவரையும் உடன் அழைத்துச் செல்வார்கள். ஆனால் அவரால் அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவிட முடியவில்லை.
“சரி பையனை படிக்கவாவது வைப்போம்” என்று கருதி மகனை படிக்கவைத்தனர்.
அருகேயிருக்கும் பள்ளியே குறைந்தது 5 கி.மீ தூரம் என்பதால் பெரும்பாலும் நடந்தே தான் செல்வான் சிறுவன் ஸ்ரீகாந்த்.
“வகுப்பில் நான் ஒருவன் இருப்பதையே யாரும் பொருட்படுத்தியதில்லை. கடைசி பெஞ்சில் தான் அமரவைக்கப்பட்டேன். உடற்பயிற்சி வகுப்பில் கூட கலந்துகொள்ள எனக்கு அனுமதி கிடையாது.”
“இந்த உலகத்திலேயே நான் தான் ஏழை மாணவன் என்று அப்போது நினைத்தேன். வறுமையின் காரணமாக அல்ல. தனிமையின் காரணமாக.”
பள்ளியில் அவனுக்கு எதுவும் கற்றுத் தரப்படுவதில்லை என்பதை ஸ்ரீகாந்தின் தந்தை உணர்ந்தபோது அவரை ஹைதராபாத்தில் உள்ள சிறப்பு பள்ளியில் சேர்த்தார்.
அங்கு காட்டப்பட்ட அன்பிலும் அக்கரையிலும் ஜொலித்தான் ஸ்ரீகாந்த். செஸ், கிரிக்கெட் ஆகியவற்றை கற்றுகொண்டதோடு மட்டுமல்லாமல் பள்ளியில் நடைபெறும் போட்டிகளிலும் வெற்றி பெற்றான். வகுப்பில் ஸ்ரீகாந்த் தான் அனைத்திலும் பர்ஸ்ட். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் LEAD INDIA திட்டத்திலும் இணையும் பொன்னான வாய்ப்பை பெற்றான். (டாக்டர் கலாம் “நீ என்னவாக வரவேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று கேட்டபோது, “இந்தியாவின் முதல் பார்வைத்திறன் சவால் கொண்ட குடியரசுத் தலைவராக வர விரும்புகிறேன்!” என்ற சொன்னவர் இந்த ஸ்ரீகாந்த்.)
ஆனால் என்ன பயன்? 90% மார்க்குகளுடன் 10 ஆம் வகுப்பை இவர் வெற்றிகரமாக முடித்துவிட்டு +1 சேரும்போது, இவருக்கு தகுதி இருந்தும் சயன்ஸ் க்ரூப் மறுக்கப்பட்டது. இவர் கலை பிரிவில் மட்டுமே மேற்கொண்டு தொடரமுடியும் என்று கல்வித்துறை சொன்னது.
“எனக்கு பார்வையில்லை என்பதால் இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதா? இல்லை… நான் இந்த சமூகத்தால் குருடாக்கப்பட்டேன். என்னைப் பற்றிய மக்களின் பார்வையால் நான் குருடானேனே தவிர, எனக்கிருந்த குறைப்பட்டினால் அல்ல…” வெடிக்கிறார் ஸ்ரீகாந்த் கோபத்தில்.
தகுதியிருந்து வாய்ப்பு மறுக்கப்பட்டவுடன் ஸ்ரீகாந்த் அதற்காக போராட முடிவு செய்தார்.
கல்வித் துறைக்கு எதிராக வழக்கு தொடுத்து ஆறு மாதங்கள் சட்டப் போராட்டம் நடத்தினார். “கடைசியில் நான் சயன்ஸ் க்ரூப்பை தேர்வு செய்யலாம் என்றும் அதுவும் எனது சொந்த ரிஸ்கில் தான் படிக்கவேண்டும் என்று கூறினார்கள்.”
ஸ்ரீகாந்தோ தன்னைப் பற்றிய அவர்களது கணிப்பை பொய்யாக்க எந்த ரிஸ்க்கும் எடுக்க தயாராக இருந்தார்.
அனைத்து விதமான பாடப் புத்தகங்களையும் வாங்கி அவற்றை ஆடியோ வடிவில் மாற்றிக்கொண்டார். இரவு பகலாக படித்து +2 தேர்வில் 98% மார்க்குகள் பெற்று அனைவரது முகத்திலும் கரியை பூசினார். (சூப்பர் தலைவா!).
‘FORTUNE FAVOURS THE BOLD’ என்பது சரியல்ல… ‘FORTUNE FAVOURS ONLY THE BOLD’ என்பதே சரி.
சில சமயம் வாழ்க்கை தடைஓட்டப் பந்தயம் போன்றது. குறிப்பாக ஏதேனும் சாதித்தே தீரவேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பவர்களுக்கு.
கஷ்டப்பட்டு போராடி சயன்ஸ் க்ரூப்பில் சேர்ந்து 98% மார்க்குகள் பெற்றாகிவிட்டது. அத்தோடு ஸ்ரீகாந்தின் போராட்டம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா?
அது தான் இல்லை!
பிரபல தொழில்நுட்ப கல்வி நிறுவனமான BITS பிலானி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் B.Tech படிக்க அப்ளை செய்தார். நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் கூட இவருக்கு கிடைக்கவில்லை.
அதற்கு பதில் அவருக்கு வந்தது என்ன தெரியுமா?
“உங்களுக்கு பார்வையில்லை என்பதால் நீங்கள் போட்டித் தேர்வு எழுத தகுதியற்றவராகிறீர். உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது” என்று அனுப்பப்பட்ட கடிதங்கள் தான்.
“I I T க்கு நான் தேவையில்லை என்றால் எனக்கும் I I T தேவையில்லை. அவர்கள் எதிரில் சாதித்து காட்ட விரும்பினேன்.” என்கிறார் ஸ்ரீகாந்த்.
இனி போராடி போராடி நேரத்தை வீணாக்க கூடாது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையுடன் எடுத்து வைக்கவேண்டும் என்று முடிவு செய்தவர் அதற்கு அடுத்து செய்தது தான் சாதுரியம். இணையத்தில் தன்னைப் போன்று இருப்பவர்கள் பொறியியல் படிக்க என்ன செய்யலாம் என்று தேடி வந்தார். அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அப்ளை செய்தார். அவர்கள் திறமையைத் தான் பார்ப்பார்களே தவிர உடல் குறைப்பாட்டை அல்ல. எம்.ஐ.டி., ஸ்டான்போர்ட், பெர்கிலி, கார்னகி மேலான் ஆகிய நான்கு முன்னனி பல்கலைக் கழகங்களில் படிக்க அவருக்கு இடம் கிடைத்தது.
அவர் தேர்ந்தெடுத்தது வெளிநாடுகளில் பொறியியில் படிக்க விரும்பும் மாணவர்களின் கனவுக் கோட்டையான M I T. அந்நிறுவனத்தில் படிக்கும் முதல் பார்வையற்ற மாணவர் என்கிற பெருமையை ஸ்ரீகாந்த் தட்டிச் சென்றார்.
ஆரம்பத்தில் அவருக்கு அந்த சூழல் கடினமாக இருந்தது. ஆனால், போகப் போக அனைத்தும் பழகி சகஜமாகிவிட்டது.
வெற்றிகரமாக அங்கு தனது பொறியியியல் படிப்பை முடித்தவுடன், அடுத்து என்ன என்கிற கேள்வி முன் வந்து நின்றது. மறுபடியும் இங்கே வந்து சேர்ந்தார்.
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions, Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
==========================================================
பலகேள்விகள் என்னை குடைந்து வந்தன. ஒரு மாற்றுத் திறனாளி ஏன் கடைசி பெஞ்சில் உட்கார வைக்கப்படவேண்டும்? இந்திய மக்கள் தொகையில் உள்ள 10% மாற்றுத் திறனாளிகள் ஏன் பொருளாதாரத்தில் எப்போதுமே பின் தங்கியிருக்கிறார்கள்? அவர்களும் தலைநிமிர்ந்து சுயசார்புடன் வாழும் வண்ணம் ஏன் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை?
இந்த கேள்விகள் ஸ்ரீகாந்தின் மனதை குடைந்து வந்தன. இதற்கு விடை காணவேண்டி அமெரிக்காவில் முன்னனி கார்ப்பரேட் கம்பெனிகளில் கிடைத்த பல லட்ச டாலர்கள் கொட்டிக் கொடுக்கக் கூடிய வேலை வாய்ப்புக்களை உதறிவிட்டு தாய்த் திருநாட்டை முன்னேற்ற தன்னை எட்டி உதைத்த தேசத்துக்கே வந்தார் ஸ்ரீகாந்த். (சிலிர்க்கிறது ஐயா… சாரி தலைவா! நீ மனிதனல்ல தெய்வம்!!).
மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்குரிய சமூக, பொருளாதார அங்கீகாரத்தை வழங்கக்கூடிய ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் அந்த அமைப்பின் சார்பாக சுமார் 3000 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு கல்வியும் தொழில் பயிற்சியும் வழங்கப்பட்டன. கல்வியும் தொழில் பயிற்சியும் வழங்கினால் போதுமா? அவர்களுக்கு யார் வேலை தருவார்கள்..? எனவே இவரே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து சுமார் 150 மாற்றுத் திறனாளிகளுக்கு தனது நிறுவனத்தில் வேலையும் கொடுத்திருக்கிறார்.
இது போன்ற சாதனையாளர்களுக்கு அவர்களை எப்போதும் துடிப்புடன் வைத்திருந்து அவர்களின் லட்சியத் தீ அணையாமல் பாதுக்காக ஏதாவது ஒரு துணை, ஆதரவுக் கரம் இருந்தே தீரும். இது எழுதப்படாத விதி.
ஸ்ரீகாந்த்தை பொருத்தவரை அது இந்நிறுவனத்தின் Co-Founder ஸ்வர்ணலதா. ஸ்ரீகாந்த் படித்த சிறப்பு பள்ளியின் ஆசிரியை அவர். அவர் தான் ஸ்ரீகாந்த்தை ஒரு மிகப் பெரிய சாதனையாளராக செதுக்கிய சிற்பி. இந்நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பயிற்சிகளை கொடுத்து அவர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் ஒரு அமைப்பில் அவர்கள் இருக்கவும் காரணம் அவர் தான்.
‘உன்னால் எதையும் சாதிக்க முடியும்’ என்று கண் முன் உணர்த்தும் ஸ்ரீகாந்த் நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம் – ரோல் மாடல் – என்றால் மிகையாகாது.
பிறவியிலேயே பார்வையற்றவராக பிறந்த ஒரு ஏழைச் சிறுவன் இன்று பலருக்கு மகிழ்ச்சிக்கான வழியை காட்டிக்கொண்டிருக்கிறார்.
ஸ்ரீகாந்தின் நண்பரும் முதலீட்டாளருமான ரவி கூறுகிறார் : “தயையுடன் மற்றவர்களை நடத்தி அவர்கள் முன்னேற உதவுங்கள். அவர்களை அரவணைத்து அவர்கள் தனிமையை போக்குங்கள். கடைசியாக ஒன்று. பிறருக்கு நல்லதையே செய்யுங்கள். அது உங்களிடம் திரும்ப வரும்!”
Translated by RIGHTMANTRA.COM from original source @
http://www.rediff.com/getahead/report/achiever-the-blind-ceo-who-built-a-50-crore-company/20151222.htm written by Dipti Nair
பொட்டில் அறைந்து ஒரு பாடம்!
பல்வேறு சலுகைகளை இங்கே நம் நாட்டில் அனுபவித்துவிட்டு, இங்கே அரசு செலவில் உயர்கல்வி தொழில்நுட்ப கல்வி போன்றவற்றை படித்து பின்னர் வெளிநாடுகளுக்கு சென்று செட்டிலாகி கார்ப்பரேட்டுகளுக்கு உழைப்பவர்கள் (?!) எண்ணற்றோர். இவர்களெல்லாம் தாங்கள் படித்த அந்த அரசு பள்ளிக்கு பிற்காலத்தில் ஒரு கரும்பலகை கூட வாங்கித் தர மனமில்லாதவர்கள். தாங்கள் பிறந்து வளர்ந்த அந்த கிராமத்துக்கு ஒரு குடிநீர் தொட்டியைக் கூட கட்டித் தர வழி தெரியாதவர்கள்.
இவர்களுக்கு மத்தியில், பிறந்த நாடு தனது அடிப்படை உரிமையான கல்வியை கூட இவருக்கு தர மறுத்து எட்டி உதைத்த சூழ்நிலையிலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தாய்த்திருநாட்டுக்கு தனது கல்வியை, ஆற்றலை, வசதி வாய்ப்புக்களை அர்பணித்திருக்கும் ஸ்ரீகாந்த் பொல்லா போன்றவர்கள் மனிதர்கள் உருவில் வாழும் தெய்வங்கள் என்றால் மிகையாகாது. (அதிலும் இவர் தேர்ந்தெடுத்த தொழிலை பாருங்கள் Eco-friendly Packaging. Need of the hour!)
ஸ்ரீகாந்த் அவர்களே, உங்களை நினைத்து பாரதத் தாய் பெருமைப்படும் சூழலில் நாங்கள் வெட்கப்படுகிறோம். உங்கள் வெற்றிக்கு பக்கபலமாய் இருந்த உங்கள் பெற்றோருக்கும், சிறப்பு பள்ளி ஆசிரியர் ஸ்வர்ணலதா மற்றும் முதலீட்டாளர் ரவி மந்தா ஆகிய அனைவருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!
==========================================================
Dr.APJ Abdul Kalam’s speech on Srikanth Bolla @ Swami Vivekananda’s 150th anniversary function
==========================================================
Similar articles …
ஸ்ரீகாந்தை போன்றே கார்த்திக் சாவனி என்ற பார்வைத் திறன் சவால் கொண்டவரும் இங்கே நமது ஐ.ஐ.டி.யில் சேர்க்கை மறுக்கப்பட்டு அவர் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பி.டெக். சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் மிகப் பெரிய ROLE MODEL ஆக இருந்ததும் டாக்டர்.கலாம் தான். கார்த்திக்கை பற்றி ஏற்கனவே நமது தளத்தில் “வாழும் வரை போராடு; வழி உண்டு என்றே பாடு!” என்கிற பதிவு வெளியாகியிருக்கிறது.
Also check …
கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?
கீழே விழும்போதெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு வீரனின் கதை!
அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்!
==========================================================
Motivational articles & stories …
தோல்வி என்றால் உண்மையில் என்ன? MONDAY MORNING SPL 87
ஒரு சாதாரண மனிதனை சாதிக்க வைத்தது எது ?
தேவை : வாழ்வில் சாதிக்க துடிக்கும் சில இளைஞர்கள் !
“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!
ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்!
பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!
முடக்கி போட்ட விதி; ஜெயித்து காட்டிய மதி !
ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்!
வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் – இவரைப் போல!
இவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் !
ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 1
ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 2
==========================================================
[END]
வணக்கம் சுந்தர் சார்
போராடி ஜெய் பவரக்களுக்கு சமர்ப்பணம் சார்
நன்றி
என்னா ரோல் மாடல் சார் அந்த தெய்வம்//. போட்டுலே அடிச்சா மாதுரி இருக்குது சார் /
பார்வை உள்ளவன் திருந்த இந்த பார்வை இல்லாத மனிதன் எல்லோருக்கும் ஒரு உயர்ந்த பாடம்.
மறக்க முடியாத பாடம் .
புத்தாண்டு வாழ்த்துக்கள் நம் தளம் சார்ந்த அனைவர்க்கும்
அன்புடன்
சோ. ரவிச்சந்திரன்
Fortune favors only the bold – absolute statement and a fact.
His parents are his real blessings. Not only his perseverance, but his agony to prove himself in the word and to make his parents proud – created a leaf in the indian history.
At every stage of his life, he faced a humiliation which leaded him to a place of very well recognition and reputation.
Very happy and felt inspired to read his story.
Thanks so much sir for letting us know this great person through this post.
**
And wish you all a very happy year ahead. God bless all of you. 🙂
வெரி குட்
நானும் ஒரு மாற்று திறனாளி
எனக்கு அவரை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா நானும் நிறைய சாதிக்கணும் அப்படினு ஆசை அனால் எனக்கு வலி காட்ட யாரும் முன் வரலை .
அவருடைய வரலாறு படித்தேன் என்னை மிகவும் மகிழ வைத்தது ,
“எண்ணில் ஒருவன் என்றுதான் சொல்வேன் “அவருடைய சாதனைக்கு நன் தலை வணங்குகிறேன் , மிகவும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் அவரை நன் இறப்பதற்கு முன்னாள் ஒருமுறை சந்திக்க வேண்டும் . நன் அனுப்பும் தகவல் அவருக்கு சென்று சேர்த்தால் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று நன் நம்புகிறேன் .எனக்கு அவர் பண உதவி செய்ய வேண்டாம் .எஙகளில் ஒருவன் எஙகளுக்காக இருக்கிறார் என்ற பெருமை போதுமானது . அவை இருந்தால் நன் இந்த உலகத்தியே வென்று விடுவேன் . தயவு செய்து அவரை பார்க்க அல்லது பேசுவதற்க்கு வாய்ப்பு த்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனது தோலை பேசி நம்பர் 9043329931
அவர் வேறு மாநிலம். இருப்பினும் முயற்சிக்கிறேன். நன்றி.
தங்கள் தன்னம்பிக்கைக்கு என் பாராட்டுக்கள்.