Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > வாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு!!

வாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு!!

print
ங்கில புத்தாண்டு தினத்தை பொருத்தவரை உலகமே கொண்டாடுகிறது. நாமும் கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் எப்படி கொண்டாடுகிறோம் என்பதில் தான் விஷயமே இருக்கிறது.

Vilakku

நட்சத்திர ஹோட்டல் பப்புகளிலும், கிளப்புகளிலும் மதுக்கோப்பைகளை கையில் வைத்துக்கொண்டு ‘சியர்ஸ்’ சொல்லி புத்தாண்டை வரவேற்பவர்கள் ஒருவிதம்.

நட்டநடு ராத்திரி கடற்கரையில் கூடி, பின்னர் பைக்குகளில் அசுரத்தனமான ஆபத்தான வேகத்தில் “ஆ… ஊ…” என்று கூச்சலிட்டபடி  சாலைகளில் “ஹாப்பி நியூ இயர்” என்று கத்திக்கொண்டே புத்தாண்டை வரவேற்பவர் ஒருவிதம்.

தனியார் தொலைக்காட்சிகளில் அரைகுறை ஆடைகளுடன் சுண்ணாம்பு மேக்கப் போட்டுக்கொண்டு தோன்றும் டி.வி.நட்சத்திரங்கள் / தொகுப்பாளர்கள் “ஹாப்பி நியூ இயர்” என்று சொல்வதை கேட்டு புளங்காகிதப்பட்டு புத்தாண்டை வரவேற்பவர் ஒரு விதம்.

இப்படி பலப்பல விதங்களில் புத்தாண்டை வரவேற்கின்றனர். இதெல்லாம் சரி தானா?

உங்கள் மனசாட்சியே கூறுமே இதெல்லாம் சரியில்லை என்று!

அப்போது எப்படித் தான் புத்தாண்டை வரவேற்பது என்றால் அதற்கு பதில் கீழ்கண்ட இந்தப் பதிவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டை இப்படியும் வரவேற்கலாமே!

(சிலர் அன்று இரவு பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சென்று சுவாமியை புத்தாண்டு பிறக்கும் நேரம் தரிசிப்பார்கள். மேலே கூறியவற்றை பார்க்கும்போது அது பன்மடங்கு மேலானது!)

==========================================================

வாக்கு தரும் நல் வாழ்வு தரும் வளமும் நலமும் வழங்க வரும்!

வ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று நாம் நண்பர்களுடன் போரூர் ராமநாதீஸ்வரர் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மர் கோவில், மப்பேடு சின்கீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு பைக்கில் சென்று வருவது நீங்கள் அறிந்ததே. நம்முடன் நமது நண்பர்களும் தள வாசகர்களும் வருவது வழக்கம்.

வறண்ட பிள்ளையார்களை தேடிக் கண்டுபிடித்து விளக்கேற்றி பூஜைகள் செய்வது தொடர்பான முயற்சிக்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக தீபாவளித் திருநாளில் குன்றத்தூர் அடிவாரத்தில் கந்தழீஸ்வரர் கோவிலுக்கு அருகே உள்ள திருமுறை விநாயகருக்கு நம் தளம் சார்பாக அபிஷேக ஆராதனைகளை செய்தது நினைவிருக்கலாம். (அது பற்றிய பதிவு விரைவில் வரும்!)

அது போலவே புத்தாண்டு அன்று நிச்சயம் ஏதேனும் ஒரு வறண்ட பிள்ளையாருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யவேண்டும் என்று விரும்பி ஒரு வறண்ட பிள்ளையாரை தேடி வந்தோம்.

பிள்ளையார் நம் முன் தோன்றி, “நான் இங்கே இருக்கிறேன்!” என்று சொல்வாரா என்ன? நாம் தானே தேடி கண்டுபிடிக்கவேண்டும்…?

மாங்காடு – குன்றத்தூர் சாலையில் சாலை ஓரங்களில் சிறு சிறு கோவில்கள் இருப்பதை பார்த்திருக்கிறோம். அவற்றில் பழமையான வறண்ட பிள்ளையார் கோவில் ஒன்றாவது இருக்காதா என்கிற எண்ணத்தில் இரண்டு வாரத்துக்கு முன்பு ஒரு ஞாயிறு மாலை வீட்டிலிருந்து மாங்காடு புறப்பட்டோம்.

நமது வீட்டிலிருந்து மாங்காடு வரை பல கோவில்களை பார்த்தோம். அவற்றில் பல சிறு சிறு அம்மன் கோவில்கள், அந்தந்த கிராமத்து தேவதைகள். வறண்ட பிள்ளையார் மருந்துக்கு கூட தென்படவில்லை. நேரம் அப்போது மாலை 6.00. குன்றத்தூரிலிருந்து காவனூர் செல்லும் சாலையில் சென்றோம். அங்கு நான்கைந்து கி.மீ. சென்ற பிறகும் ஒரு கோவிலும் அகப்படவில்லை.

குன்றத்தூரில் இருப்பதால் தேவார ஆசிரியர் திரு.சங்கர் அவர்களை எதற்கும் கேட்கலாமே என்று குன்றத்தூர் நாகேஸ்வரர் கோவில் சென்றோம். ஒவ்வொரு ஞாயிறு மாலையும் இங்கு தேவார வகுப்பு நடைபெறுவது வழக்கம்.

வகுப்பில் இருந்த சங்கர் அவர்களை சந்தித்து, நமது வறண்ட பிள்ளையார் தேடல் பற்றி குறிப்பிட்டு அப்படி ஏதாவது பிள்ளையார் கோவில் இங்கே அருகே எங்காவது இருக்கிறதா என்று கேட்டோம்.

சற்று யோசித்தவர், வெளியே குளத்துக் கரையில் அந்தப் பக்கம் ஒரு பிள்ளையார் கோவில் இருப்பதாகவும் அந்த கோவிலுக்கு பூஜை உள்ளிட்ட எதுவும் சரிவர நடப்பதில்லை என்றும் கோவிலுக்கு அருகே உள்ள வீட்டினர் தான் அதை பராமரிக்கிறார்கள் போய் விசாரித்தால் தகவல்கள் கிடைக்கும் என்றும் கூறினார்.

madaththu mandhaara vinaayagar

“அப்படி ஒரு கோவிலைத் தான் தேடிக்கிட்டுருக்கேன் சார்.. ரொம்ப நன்றி!” என்று அவரிடம் கூறிவிட்டு மேற்படி குளக்கரைக்கு விரைந்தோம்.

சாலையின் அந்த பக்கத்தில் இருந்தது கோவில். பிள்ளையாரை பார்த்து வணங்கிவிட்டு, கோவிலை ஒட்டியிருந்த வீட்டில் விசாரித்தோம்.

வயதான ஒருவர் வெளியே வந்தார். நம்மை அறிமுகப் படுத்திக்கொண்டு கோவிலை பற்றி விசாரித்தோம்.

சற்று தயங்கினார்.

நமது தளத்தை பற்றியும் நாம் வறண்ட பிள்ளையார்களை தேடிப் புறப்பட்டிருக்கும் பணியை பற்றியும் சொன்னோம். அதன் பிறகு சகஜமாக பேசத் துவங்கினார்.

madaththu mandhaara vinaayagar 2

“என் பேர் ராஜா குருக்கள். நான் தான் சார் பார்த்துக்குறேன். நான் அடிப்படையில ஒரு அர்ச்சகர். ஹோமம், பூஜை எல்லாம் கூட போறேன். எங்க பெரியப்பா ஐம்பது அறுபது வருஷத்துக்கு முன்னே நாகேஸ்வரர் கோவில்ல குருக்களா இருந்தார். நான் அப்போ சின்னப் பையன். கோவில் கணக்கெழுத, கூட மாட ஒத்தாசைக்கெல்லாம் பெரியப்பா கூட போவேன். அப்படியே குருக்கள் பணிக்கு வந்துட்டேன். என் பையனுக்கு கல்யாணம் ஆகி பேரக்குழந்தைங்க இருக்கு. அவனும் புரோகிதம் தான் பண்றான். வடபழனியில இருக்கான். நான் இங்கே குன்றத்தூரை சுத்தி தினமும் இது மாதிரி பத்து சின்ன கோவிலுக்கு போய் விளக்கேத்தி பூஜை பண்றேன். ஒரு பெருமாள் கோவிலுக்கும் போறேன்….”

“கோவில் சமீபத்தில் வெள்ளையடிச்ச மாதிரி தெரியுதே…”

“இங்கே பக்கத்துல இருக்குற ஒரு புண்ணியவான் அவரே வெள்ளையடிச்சு கொடுத்தார் சார்….”

“இந்தக் கோவிலை யார் கட்டினாங்க? எத்தனை வருஷம் இருக்கும்??”

“இந்த கோவில் கிட்டத்தட்ட நூறு வருஷம் பழமையானதுன்னு மட்டும் தெரியும். தல வரலாறெல்லாம் தெரியாது. இந்த கோவிலை கட்டினவரோட வாரிசுகள் எல்லாம் வெளியூர்ல இருக்காங்க. அவங்க சார்பா இங்கே இதை பராமரிக்கிறதுக்கு அவங்க சொந்தக்காரர் ஒருத்தர் இருந்தார். ஆனா அவர் இப்போ எதுவும் செய்றதில்லை. நம்ம வீட்டுப் பக்கத்துல இருக்குறதாலே ஏதோ என் சக்திக்கு உட்பட்டு அப்பப்போ எண்ணைக் காப்பு போட்டு விளக்கேத்தி பூஜை பண்றேன். அதுவும் இப்போ சரியா செய்ய முடியலே. எனக்கும் வசதியில்லே…”

madaththu mandhaara vinaayagar 3

அவரது குரலில் தெரிந்த நியாயமான வருத்தம் உள்ளத்திலிருந்து தோன்றியது என்பதை பார்க்கும்போதே உணர முடிந்தது. (சில பேருக்கு உள்ளம் பேசுவதும் உதடுகள் சொல்வதும் மேட்ச் ஆகாது!)

“ஓ… உபயம் கிடைச்சா என்ன செய்வீங்க???”

“தினமும் விளக்கேத்தி ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்திக்கும் பிரசாதம் நைவேத்தியம் பண்ணலாம்!”

“எவ்ளோ உபயம் தேவைப்படும்?”

“அவர் ரூ.200/- கொடுத்துகிட்டு இருந்தார்… இப்போ அதுவும் கொடுக்குறதில்லே”

“இனிமே நான் அதை பார்த்துக்குறேன். உங்களுக்கு எவ்வளவு தேவைப்படும்?”

அவர் இதை எதிர்பார்க்கவில்லை. சில வினாடிகள் பிரேக்கிற்கு பின்னர்…

“அந்த இருநூறு ரூபாயே கொடுத்தாக் கூடப்போதும்…. நான் பார்த்துக்குவேன்”

“அதை விட ரெண்டு மடங்கு நான் மாசா மாசம் தர்றேன்.. பிள்ளையாரை பார்த்துக்கோங்க…” என்று கூறி ரூ.500/- ஐ அடுத்த நொடி நமது மணி பர்ஸிலிருந்து எடுத்து அவரிடம் கொடுத்தோம்.

“பிள்ளையாருக்கு ரூ.400 உங்களுக்கு தட்சணை ரூ.100…. பிள்ளையாருக்கு எந்தக் குறையும் வைக்காம சந்தோஷமா கைங்கரியம் பண்ணுங்க… நான் மாசமாசம் உங்களுக்கு இந்த பணத்தை தவறாம தர்றேன்”

அவருக்கு ஒரே சந்தோஷம். அது சுயநலத்தினாலோ பணத்தை பார்த்ததினாலோ வந்த சந்தோஷம் அல்ல. பிள்ளையாரை இனி நன்கு கவனித்துக் கொள்ளமுடியும் என்பதால் வந்த சந்தோஷம்.

நாம் அவரிடம் நமது வறண்ட பிள்ளையார்களை தேடிக்கொண்டிருக்கும் தேடலை சொல்லி, இங்கே இதே குன்றத்தூரில் இப்படி ஒரு அருமையான பிள்ளையார்  கிடைப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று சொன்னோம்.

“இது நிச்சயமா பகவான் சித்தம் தான் சார். ஏன்னா… நேத்திக்கு தான் நினைச்சிகிட்டுருந்தேன். மார்கழி மாசம் வரப்போகுதே… இந்த ஒரு மாசமாவது தொடர்ந்து விளக்கேத்தனுமே… எண்ணைக்கு கூட வழியில்லையே என்ன பண்றதுன்னு யோசிச்சிகிட்டிருந்தேன்… இதோ பிள்ளையாரே உங்களை அனுப்பிருக்கிறார் சார்”

“இந்த பணம் போதும் சார்… இந்த மார்கழி முழுக்க டெய்லி விளக்கேத்தி அப்பப்போ ஏதோ என்னால முடிஞ்ச பிரசாதத்தை செஞ்சி நைவேத்தியம் பண்றேன்” என்றார்.

“முதல்லே போய் இந்த பணத்துல கொஞ்ச எடுத்து வஸ்திரம் வாங்கிட்டு வந்துடுறேன்… பிள்ளையாருக்கு வஸ்திரத்தை முதல்ல மாத்தனும்” – குரலில் ஒரு வித அக்கறை தெரிந்தது.

“ரொம்ப நன்றி சுவாமி… இந்த பிள்ளையாருக்கு வர்ற ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு அன்னைக்கு அபிஷேகம் பண்ணி, வஸ்திரம் சாத்தி, பிரசாதம் நிவேதனம் செஞ்சி, அர்ச்சனை பண்ணனும்னு ஆசைப்படுறேன்… முடியுமா?”

“தாராளமா சார்… எத்தனை மணிக்கு?”

அவரே தொடர்ந்தார்… “காலைல ஒரு ஏழு மணிக்குள்ளே வந்துடுங்க… ஏன்னா நான் அன்னைக்குக் நிறையே கோவில் போகவேண்டியிருக்கும்” என்றார்.

நாம் அவசியம் வருவதாகவும் நமது நண்பர்களையும் வாசகர்களையும் அழைத்து வருவதாகவும் கூறினோம்.

“தாராளமா எத்தனை பேர் வந்தாலும் ஓ.கே. கூட்டிகிட்டு வாங்க… நீங்க வந்தீங்கன்னா… ஒரு மணி நேரத்துல எல்லாத்தையும் முடிச்சிட்டு பிள்ளையாருக்கு அலங்காரம் பண்ணி தீபாராதனை காட்டிடுவேன்” என்றார்.

“ஆனா.. கரெக்டா 7.00 – 7.30 குள்ளே வந்துடுங்க. ஏன்னா அன்னைக்கு எனக்கு நிறைய கோவில் போகவேண்டியிருக்கும்”

“நிச்சயம் சுவாமி… நாங்களும் அன்னைக்கு நிறைய கோவில் போலாம்னு இருக்கோம். இங்கே அபிஷேகம் முடிச்சவுடனே, நாகேஸ்வரர், அப்புறம் மலையடிவாரத்துல இருக்குற  கந்தழீஸ்வரர், திரு ஊரகப் பெருமாள், மலைக்கோவில் அப்புறம் பேரம்பாக்கம் நரசிம்மர், மப்பேடு அப்படின்னு பெரிய பிளான் இருக்கு!”

“ரொம்ப நல்லது ரொம்ப நல்லது!”

தொடர்ந்து அவரிடம் பேசியதில் வஸ்திரம், துண்டு உட்பட அபிஷேகத்திற்கு உரிய பொருட்கள் அனைத்தையும் நாமே கொண்டு வருவதாகவும், பிரசாதத்திற்கான சுண்டல் சர்க்கரை பொங்கல் மட்டும் அவரே தயாரித்துவிடவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் அவரிடம் பூஜை காணாத கோவில்கள் விபரத்தை கேட்டுள்ளோம். அது பற்றிய தகவல் கிடைத்தவுடன் நமது நண்பர்கள் மற்றும் விருப்ப சந்தாதாரர்களுக்கு அத்தகைய கோவில்கள் DIRECT LINK செய்யப்படும். (* நமது பல்வேறு பணிகளில் உறுதுணையாய் இருப்பவர்களுக்கே இத்தகைய கைங்கரியங்களுக்கான வாய்ப்பு செல்லவேண்டும் என்று விரும்புகிறோம். காரணம்… இந்த தளம் நடப்பது அவர்களால் தான்!)

வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

==========================================================

2016 – ஜனவரி 1 புத்தாண்டு ஆலய தரிசன விபரம்

இந்த ஆண்டு ஜனவரி 1 அன்று நமது நண்பர்களுடன் குன்றத்தூர் மற்றும் பேரம்பாக்கம் பயணத்தை திட்டமிட்டுள்ளோம். வேன் பயணம். வரவிரும்பும் அன்பர்கள் அவசியம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். (கட்டணம் ரூ.250/-)

காலை 7.00 மணி  – குன்றத்தூர் மடத்து மந்தார விநாயகர் ஆலயம் + சிறப்பு அபிஷேகம் (நாகேஸ்வரர் கோவில் குளம் அருகே!)

காலை 8.30 மணி – குன்றத்தூர் கந்தழீஸ்வரர், திருஊரகப் பெருமாள் கோவில், சுப்ரமணிய சுவாமி மலைக்கோவில் தரிசனம்

அடுத்து பேரம்பாக்கம் பயணம்.

காலை 10.30 மணி – பேரம்பாக்கம் நரசிம்மர்

பிற்பகல் 12.30 மணி – மப்பேடு சிங்கீஸ்வரர் (லக்ஷார்ச்சனை) + ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு + மதிய உணவு

பிற்பகல் 2.00 மணி – சென்னை திரும்புதல்

* பிள்ளையார் அபிஷேகத்திற்குரிய  பொருட்களை (வெற்றிலைப் பாக்கு, தேங்காய், பூ, பலவகைப் பழங்கள், தேன், அபிஷேகப் பொடி, மஞ்சள் தூள், நாட்டு சர்க்கரை, மாலை இத்யாதி… இத்யாதி) தாங்களே கொண்டு வரலாம்.

** நேரத்தை சற்று BUFFER வைத்து தான் சொல்லியிருக்கிறோம். எனவே அனைத்தும் இறையருளால் உரிய நேரத்தில் முடிந்துவிடும் என்று நம்பலாம்.

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details: 

Name : Rightmantra Soul Solutions   A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account   Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions, Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

Also check :

வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!

குன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!

அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!

ஆங்கிலப் புத்தாண்டை இப்படியும் வரவேற்கலாமே!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!

சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்

வாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!

ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை!!

ஒரு மாலைக்கு கிடைத்த மரியாதை!

மாற்றமும் ஏற்றமும் தரும் மார்கழி – என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது ?

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

கந்தனின் கருணையில் திளைத்து அதில் மூழ்கி எழுந்த ஒரு ஆத்மானுபவம்!

==========================================================

[END]

6 thoughts on “வாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு!!

  1. ஐயா, இந்த 2016 _ம் ஆண்டு முதல் தேதி நடைபெற இருக்கும் பிள்ளையார் அபிஷேகத்திற்கு என்னையும் தங்களது குழுவில் சேர்த்துக் கொள்ளுமாறு தங்களைதங்களைக் கேட்டுக் கொள்கிறேன்

  2. வணக்கம் விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கும்
    இப்புத்தாண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாய் மலர வாழ்த்துக்கள்

  3. Sundar Sir,

    குரு என்றும் துணை இருப்பார். மகா பெரியவா சரணம். இனிய புத்தாண்டில் மேன்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.

    உஷா

  4. சுந்தர்ஜி
    முழுமுதற்கடவுள் விநாயகர் வழிபாட்டுடன் இந்த புத்தாண்டு மலர புத்தாண்டு வாழ்த்துகள் .

  5. வாக்கும் வளமும் தங்களுக்கு கிடைக்கும் சார்…

    தங்களின் இந்த தெய்வ காரியங்கள் எல்லாமே வெகு சிறப்பாக நடக்க விநாயகர் இருக்கிறார்.

    தங்களின்

    சோ ரவிச்சந்திரன்

    கர்நாடகா

  6. What you said about the celebration ways of new year arrival is absolutely right.

    More than looking towards inside, people have come to look outside more than ever. And that’s why people develop themselves – financially, physically but mentally and soul wise???
    **
    About trip on new yr, remembering the last year one and it was nice. This year, I wish all of you have a great darshan and wonderful start.

    Wish all of you a wonderful beginning and life from this new year onwards.

    God bless. 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *