அதன் புகைப்படங்கள் அடங்கிய பிரத்யேகப் பதிவு இது. சென்ற பதிவிலேயே புகைப்படங்களை அளித்திருக்கவேண்டியது. மகத்தான விஷயங்களுக்கு காத்திருப்பதில் ஒரு தனி சுகம் உண்டு. எனவே அடுத்த நாள் அளிக்க நினைத்தோம். ஆனால் நமது பிரார்த்தனை கிளப் பதிவை அளிக்கவேண்டியிருந்ததால் அடுத்த நாள் அளிக்க இயலவில்லை. அதற்குள் நேற்றைய நமது வைகுண்ட ஏகாதசி உழவாரப்பணி ஏற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டி வந்தது.
சேற்றுக்குள் நீண்ட காலம் மறைந்திருந்து பின்னர் பெரியவாளின் மகிமையால் வெளிப்பட்ட ஈஸ்வரனையும் ரங்கநாதரையும் பற்றி அறிந்தவுடன் அந்தக் கோவிலை நேரில் காணவேண்டும் என்று ஆவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்தது. நேரே சென்று தரிசித்து தகவல்களை திரட்டி ஒரு பதிவளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
காஞ்சியில் நமக்கு வேறு இரண்டு பணிகளும் இருந்தன. ஒன்று பெரியவாளின் அதிஷ்டானம் சென்று நமது நூல்களை வைத்து ஆசி பெறுவது, மற்றொன்று வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு செல்வது.
நமது நண்பர் ஒருவர் நீண்ட நாட்களாக கோர்ட், கேஸ் என்று அலைந்து வருகிறார். அவரிடம், “காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் சென்று ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்!!” என்று சொல்லியிருந்தோம்
அவர் நம்முடன் வர பிரியப்பட்டு, “நீங்கள் அழைத்துச் செல்லுங்களேன். எப்போது போவதாக இருந்தாலும் நான் வரத் தயார். அலுவலகத்துக்கு விடுப்பு கூட எடுத்து வர நான் ரெடி” என்றார்.
நமக்கும் வழக்கறுத்தீஸ்வரரை தரிசித்துவிட்டு தளத்தில் அது பற்றி விரிவானதொரு பதிவை அளிக்கவேண்டும் என்று அவா. பலர் இன்று அவர்கள் பக்கம் நியாயம் இருந்தும் உடனடி தீர்ப்பு கிடைக்காமல் கோர்ட், கேஸ் என்று அலைந்துகொண்டிருக்கிறார்கள். மேலும் நமது வாசகர்களில் சிலரும் இப்படி வழக்கு தொடர்பான அலைகழிப்புக்களில் உள்ளனர். எனவே அனைவருக்கும் அந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்பது நமது அவா. (* வழக்குகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு விஷேச பிரார்த்தனை கிளப் பதிவு விரைவில் அளிக்கப்படவிருக்கிறது. அத்தகையோர் தங்கள் பிரார்த்தனைகளையும் இறுதியில் அவரவர் அலைபேசி எண், பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் விபரங்களை ஆகியவற்றை அவசியம் குறிப்பிட்டு நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பிரார்த்தனை கோரிக்கை மட்டும் அவரவர் பெயர் மற்றும் ஊருடன் தளத்தில் அளிக்கப்படும். பெயர், ராசி, நட்சத்திரம் வழக்கறுத்தீஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய பயன்படும். ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் வெளியிடப்படாது! சந்தேகங்களுக்கு நம்மை அலைபேசியில் தொடர்புகொள்ளவும்!)
=============================================================
சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…
Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
மகான்களை பற்றிக்கொள்வதால் நமக்கு என்ன நன்மை ? Rightmantra Prayer Club
=============================================================
இதனிடையே மழை வெள்ள பாதிப்பினால் நமது ஓயாத ஓட்டத்தில் ஒரு பிரேக் வர, அதை பயன்படுத்திக்கொண்டு சென்ற வாரம் இடையே ஒரு நாள் (09/12/2015) நண்பரை அழைத்துக் ஒண்டு திடீரென காஞ்சி புறப்பட்டோம்.
காஞ்சி சென்றவுடன் நமக்கு தெரிந்த ஆட்டோ டிரைவர் ஜேசுராஜை அழைத்தோம். நாம் எப்போது காஞ்சி சென்றாலும் நமக்கு அவர் தான் சவாரி. செல்ல வேண்டிய இடங்களை குறிப்பிட்டு மொத்தமாக பேசிக்கொள்வோம். காஞ்சியை சுற்றிலும் அவருக்கு அத்துப்படி. எந்த டென்ஷனும் இல்லாமல் பார்த்துக்கொள்வார். அலைபேசியில் தகவல் தெரிவிக்க அவர் பேருந்து நிலையமே வந்து நம்மை பிக்கப் செய்துகொண்டார். (*திரு.ஜேசுராஜின் அலைபேசி எண்ணை இங்கே பகிர்வதில் நமக்கு தயக்கமில்லை. நமக்கு அவருடன் நல்ல அனுபவம் உண்டு. வாசகர்கள் / நண்பர்கள் நான்கைந்து பேர் அவரிடம் சவாரி செய்து அவருக்கு நல்ல அத்தாட்சி கொடுத்த பின்னர், பொதுப்படையாக அறிவித்தால் நல்லது என்று நினைக்கிறோம். அவர் நம்பரை வேண்டுவோர் அதுவரை தனிப்பட்ட முறையில் நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.)
முதலில் நேரே நேரே லிங்கப்பன் தெரு செல்லுமாறு கூறினோம். “அங்கே எந்த இடம்?” என்றார்.
“சிவன் கோவில்… கூடவே பள்ளிகொண்ட ரங்கநாதர்” என்றோம்.
சற்று யோசித்தவர்… “அப்படி எந்தக் கோவிலும் அங்கேயில்லையே…” என்றார்.
“இல்லே… அங்கே தான் இருக்கு. ஒரு வீட்டுக்கு பின்னால் இருக்கு. அதுனால யாருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை”
காஞ்சி வீதிகளில் ஆட்டோ சீறிப் பாய அடுத்த சில நிமிடங்களில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் முன்பாக நின்றோம். அங்கே கோபுரத்திற்கு சற்று எதிரே ‘லிங்கப்பன் தெரு’ போர்டை பார்த்தவுடன் முகம் பிரகாசமானது. ஆனால் தெருவுக்குள் சென்றபோது, அங்கே அப்படி ஒரு கோவில் இருக்கும் சுவடே தெரியவில்லை. தெருவே அமைதியாக இருந்தது. ஏதாவது வீட்டு முன்னர் கொடிமரம், அல்லது சிறிய ஆர்ச் ஏதாவது போன்ற ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தோம். ம்… ஹூம்… ஒரு சிறு தடயம் கூட அந்த தெருவில் இல்லை. யாரைப் போய் கேட்பது… ஒன்றும் புரியவில்லை.
அந்த நேரம், எங்களை ஒரு பெரியவர் கடந்து நடந்து சென்றார். அவரிடம் இங்கே
“இங்கே சிவன்… கூடவே பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில் எங்கே இருக்கு தெரியுமா ஐயா?” என்று கேட்டோம்.
“இந்த வீட்டுக்குள்ளே ஒரு கோவில் இருக்கு… ஆனா அது சிவன் கோவில். பெருமாள் உள்ளே இருக்காருன்னு நினைக்கிறேன்… நீங்க சொல்ற கோவில் அதுவா இருக்கலாம்” என்றவர், எதிரே இருந்த ஒரு வீட்டை காட்டி, “நானும் அங்கே தான் போறேன்… என் கூட வாங்க…!!”
அவர் காட்டிய திசையை பார்த்தால், அது ஒரு சிறிய சந்து. ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே மட்டுமே செல்லக் கூடிய அளவு சிறிய சந்து.
“இதனுள் கோவிலா ? அதுவும் மஹா ஸ்வாமிகள் கண்டெடுத்த மூர்த்தங்கள் இருக்கும் கோவிலா?”
நம்மாலும் சரி… நம்முடன் வந்த நம் நண்பராலும் சரி, நம் ஆட்டோ டிரைவர் ஆட்டோ டிரைவர் ஜேசுராஜாலும் சரி நம்ப முடியவில்லை.
ஆட்டோவை வெயிட்டிங்கில் போட்டுவிட்டு உள்ளே அந்த பெரியவரின் அடியொற்றி சென்றோம்.
மூன்று நான்கு போர்ஷன்கள் கடந்து உள்ளே சென்றால்… அங்கே நாம் கண்ட காட்சி… நாராயணா… சங்கரா… சங்கர நாராயணா…. நம் கண்களை விரியச் செய்தது.
அரச மரத்தின் கீழே ஒரு அழகிய சிறிய கோவில். மேலே பள்ளிகொண்ட நிலையில் ரங்கநாதர். உள்ளே சிவலிங்கம். அதன் மேலே பின்பக்க சுவற்றில் பதித்த நிலையில் ஸ்ரீ பத்மநாபர். வெளியே பிள்ளையார், முருகன்.
ஒரு வீட்டு புழக்கடையில் இப்படி ஒரு அற்புதமான கோவிலா? அநேகமாக ஷன்மதங்களும் எழுந்தருளியிருக்கும் கோவிலாக இதுவொன்றே இருக்கும். இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்தால் பல விஷயங்கள் தெரியவரும் என நம்பலாம்.
நாம் சென்ற நேரம் ஸ்ரீ மடம் சார்பாக அனுப்பட்ட இரண்டு வேத விக்குகள் பூஜைகளை செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு இந்த கோவிலின் வரலாறு தெரியவில்லை. நம்மை அழைத்து வந்த பெரியவர், நாம் கோவிலை சுற்றி வந்து புகைப்படங்கள் எடுத்துவிட்டு மறுபடியும் முன்னே வந்து நின்றால் அதற்குள் கிளம்பி போயிருந்தார். எப்போது போனார் எங்கே போனார் என்று தெரியவில்லை.
மகா சுவாமிகளே அந்த பெரியவரை எங்களுக்கு வழிகாட்ட அனுப்பியதாகவே நாங்கள் கருதினோம். காரணம், ஒரு நிமிடம் எங்கள் ஆட்டோ முன்னர் பின்னர் சென்றிருந்தால் கூட இந்த வீட்டை கண்டுபிடித்திருக்க முடியாது. நீங்களே பாருங்கள்… கோவில் உள்ளே இருப்பதற்கான அடையாளம் ஏதேனும் தெரிகிறதா?
அந்நேரம் அங்கே வந்த வேறு ஒருவரிடம் கோவிலைப் பற்றி கேட்டபோது அவர் தனக்கு தெரிந்த சில தகவல்களை சொன்னார். (அதை கொண்டே சென்ற பதிவை அளித்தோம். தவிர அந்நேரம் தரிசனத்திற்கு வந்த ஒரு சிலரிடம் கேட்டபோது அவர்களும் சில தகவல்களை சொன்னார்கள்!)
அனந்த பத்மநாப ஈஸ்வரருக்கு நன்றியை தெரிவித்துவிட்டு சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரித்துவிட்டு, அடுத்து நேரே வழக்கறுத்தீஸ்வரரை சென்று தரிசித்தோம். திவ்ய தரிசனம்.
இன்றோ வைகுண்ட ஏகாதேசி. வைகுண்ட ஏகாதேசி அன்று பரந்தாமனுடன் சேர்த்து பரமேஸ்வரனையும் தரிசிப்பது எத்தனை பாக்கியம்!
நமது தர்மத்தில் வடநாட்டு புனித தலங்களில் பிரதானமானது காசி. அதை போலவே தென்னாட்டு புனித தலங்களில் பிரதானமானது காஞ்சிபுரம். சைவம், வைணவம், கௌமாரம் உள்ளிட்ட ஷன்மதங்களும் போற்றும் புனித தலம் இது ஒன்று ! இங்கு 1008 சிவ தலங்களும், 108 வைணவ தலங்களும் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவற்றில் சொற்ப அளவிலானவை தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல காலப்போக்கில் மண்ணுக்குள் புதைந்துவிட்டன. இன்னும் பல ஆக்கிரமிக்கப்பட்டு மூடி மறைக்கப்பட்டுவிட்டன.
(ஒரு சிவாலயம் இன்றும் ஒரு மசூதியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை மீட்க எத்தனையோ போராடியும் முடியவில்லை. நமது மாநிலத்தை கெடுத்த ஒரு சொல் : ‘இலவசம்’. நாட்டைக் கெடுத்த ஒரு சொல் : ‘மதச்சார்பின்மை’! Sorry!!)
மஹா பெரியவா தான் இருந்த காலத்தில் தனது ஞானதிருஷ்டியினால் அவ்வப்போது அத்தகு கோவில்களை கண்டுபிடித்து நியாய தர்மங்களையும் சட்ட நடைமுறைகளையும் அனுசரித்து உரியவர்களிடம் இருந்து அவற்றை மீட்டு பூஜைக்கு ஏற்பாடு செய்து வந்தார். அவரால் அப்படி கண்டுபிடிக்கப்பட்டு இன்றும் பூஜை நடைபெறும் கோவில்கள் அநேகம்.
அப்படிப்பட்டதொரு காலகட்டங்களில் தான் லிங்கப்பன் தெருவில் ஒரு வீட்டில் கழிவறைக்கு கீழே புதைந்திருந்த ஈஸ்வரனும், பத்பநாபனும் அவரது ஞான திருஷ்டியின் மூலம் மீட்கப்பட்டார்கள். ஈஸ்வரனுடன் அரங்கனும் சேர்த்து இருவரும் ஒன்று சேர்த்து கிடைத்தபடியால், அதற்கு பெரியவா ‘ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரன்’ என்று திருநாமம் சூட்டினார்.
மேற்படி சம்பவத்தை முந்தைய பதிவில் படித்தவர்களுக்கு ஒரு கேள்வி எழலாம். “பெரியவா ஈஸ்வரனும், பரந்தமானும் அங்கே புதைந்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டபோதே அதை மீட்டிருக்கலாமே… சந்திரமௌலி ராவ் தானே மனது மாறட்டும் என்று விட்டது ஏன்?’ என்ற கேள்வி எழலாம்.
ஸ்ரீ பெரியவாளின் அனந்த கோடி மகிமைகளில் ஒன்று நினைவுக்கு இங்கே வருகிறது.
காத்திருந்து அருள் புரியும் கருணாமூர்த்தி!
சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த ஒரு என்ஜினீயருக்கு திடீரெனெ கண் பார்வை போய்விட்டது. எத்தனையோ வைத்தியம் பார்த்தும் அவருக்கு இழந்த பார்வை கிடைக்கவில்லை. இதனிடையே பெரியவா மயிலை சமஸ்கிருத கல்லூரியில் முகாம்.
என்ஜினீயர் அது பற்றி கேள்விப்பட்டு, தினந்தோறும் பெரியவாளை தரிசிக்க கிளம்பிவிடுவார்.
(என்னது பார்வையில்லாத நிலையில் தரிசிக்க செல்வாரா? அது எப்படி? இது பற்றி ஒரு நுணுக்கமான பதிவு நமது தளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அவசியம் அதை அனைவரும் படிக்கவேண்டும். நீங்கள் ஆண்டவனை பார்க்கவேண்டுமா? ஆண்டவன் உங்களை பார்க்கவேண்டுமா?)
மஹா சுவாமிகளை பார்க்க முடியாவிட்டால் என்ன? சுவாமிகளால் இவரை பார்க்க முடியும் அல்லவா? மேலும், சுவாமிகளின் பரமேஸ்வர ஸ்வரூபமான குரலை கேட்க முடியுமே! அது எத்தனை பெரிய பாக்கியம்?
ஒரு நாள் அல்ல… இரு நாள் அல்ல… மாதக்கணக்கில் தினசரி பெரியவாளை சென்று தரிசித்து தீர்த்தப் பிரசாதம் பெற்றுவருவார் அந்த எஞ்சினீயர்.
ஒரு கட்டத்தில் அவரை அழைத்து வருபவர்கள்… “பெரியவா இவரது குறையை போக்கணும்” என்று கண்ணீர் மல்க பிரார்த்திப்பார்கள்.
பெரியவாவிடம் எந்த வித ரியாக்ஷனும் இருக்காது. மற்றவர்களுக்கெல்லாம் பதில் சொன்ன புனிதன் இவரை மட்டும் கண்டுகொள்ளவில்லை.
இப்படியே நாட்கள் சென்றது… பார்வையற்றவரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பெரியவாவை வந்து தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
==========================================================
Check our exclusive articles…
மார்கழியில் என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ?
விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன?
ஆங்கிலப் புத்தாண்டை இப்படியும் வரவேற்கலாமே!
வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!
=========================================================
இரண்டு மூன்று மாதங்கள் கழிந்தன. சம்பந்தப்பட்ட எஞ்சினீயருக்கு சோதனைக் காலம் முடிந்து விட்டது போல… ஒரு நாள் காஞ்சியை சேர்ந்த வரதன் என்கிற ஓதுவார் பெரியவாள் தரிசனத்திற்கு வர, அந்த நேரம் தரிசனத்திற்கு எஞ்சினீயரை அழைத்த பெரியவா, “இந்த ஓதுவாரை அழைத்துக் கொண்டு, சுந்தரர் ஈசனைப் பாடி பார்வை பெற்ற திருவொற்றியூர், திருவெண்பாக்கம், திருமுல்லைவாயல், திருக்கச்சி ஏகம்பம், திருஓணகாந்தான்தளி, திருமேற்றளி, திருவாரூர் ஆகிய தலங்களுக்கு சென்று தரிசனம் செய். இவர் அந்தந்த பதிகங்களை அந்தந்த ஆலயத்தில் பாடுவார். உனக்கும் ஈஸ்வர கிருபையால் பார்வை கிடைக்கும்” என்று திருவாய் மலர, அந்த எஞ்சினீயரும் பெரியவாள் சொன்னபடியே திருத்தல யாத்திரை சென்று இழந்த பார்வையை பெற்றாராம்.
மனிதர்களுக்கும் மகான்களுக்கும் மட்டுமல்ல… படைத்தவனுக்கே கூட இந்த நேரம், காலம், யோகம் என்கிற ஒன்று உண்டு.
பிரும்மாவிடம் வரம் பெற்ற மமதையில் தேவர்களை பாடாய்படுத்திய இரண்ய கசிபுவின் கொட்டம் தாங்காமல் வைகுண்டம் சென்று மகா விஷ்ணுவிடம் முறையிட்ட நாரதர்… “நீங்கள் ஏன் உடனே நரசிம்ம அவதாரம் எடுக்கக்கூடாது? இரணியனை சம்ஹரிக்க இன்னும் ஏன் தாமதம் பிரபோ?” என்று குமுறினார்.
அதற்கு பதிலளித்த பரந்தாமன், “ஆண்டவனாக இருந்தாலும் அதற்கும் நேரம் என்று வரவேண்டுமே… அப்போது தானே எல்லாம் கைகூடி வரும்…!” என்றார்.
ஆக, இறைவன் தன் திருவுளப்படி எப்போது வெளியே வரவேண்டும் என்று விரும்புகிறாரோ அப்போது அவரே அதற்குரியவற்றை செய்வார் என்று ஸ்ரீ மஹா பெரியவா கருதினார். அது போலவே சர்வேஸ்வரன் அந்த சந்திரமௌலி ராவுக்கு சில சோதனைகளை (மகனுக்கு உடல் நல பாதிப்பு) கொடுத்து தொடர்ந்து சில நாடங்கங்கள் அரங்கேற்றி பின்னர் வெளியே வந்தார். வந்தவர் சும்மாவா வந்தார்? கூடவே சக்ரதாரியையும் அல்லவே அழைத்து வந்தார்!
அடுத்து எங்கள் ஆட்டோ நின்றது காஞ்சி ஸ்ரீமடம். பிரதான வாயிலை பார்த்து கையெடுத்து வணங்கினோம். உள்ளே நுழையும்போது சிலிர்த்தது. அந்த வாசலை தொட்டு வணங்கிவிட்டு தான் உள்ளே சென்றோம்.
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a non-commercial website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Rightmantra is running on readers’ contributions only. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions, Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
==========================================================
இது சாதாரண வாசலா? வாழ்க்கையின் வாசலல்லவா?
எத்தனை பேரின் வாழ்க்கையை இந்த வாசல் மாற்றியிருக்கிறது!
கொஞ்சி மகிழ குழந்தை இல்லையே என்று கண்ணீர் சொரிந்த எத்தனை தம்பதியினருக்கு சந்தான பாக்கியத்தை கொடுத்திருக்கிறது!
படிப்பும் திறமையும் இருந்தும் வேலையின்றி சிரமப்பட்ட எத்தனை பேருக்கு உத்தியோகே பிராப்தியை ஒரு சிறு பார்வையிலேயே வழங்கியிருக்கிறது!
கொடு நோய் வந்து வைத்தியத்துக்கு வழியின்றி தவித்த எத்தனை பேருக்கு ஃபீஸ் வாங்காமலே வைத்தியம் பார்த்திருக்கிறது!
மண வயது தாண்டியும் பல்வேறு தோஷங்களால் திருமணம் கைகூடாது தவித்த எத்தனை பேருக்கு திருமண பாக்கியத்தை தந்திருக்கிறது!
வானத்தில் உள்ள நட்சத்திரங்களை கூட எண்ணிவிடலாம். ஆனால் காஞ்சி ஸ்ரீ மடம் வந்து மஹா பெரியவாளை தரிசித்து பலன் பெற்றவர்களை கணக்கிடவே முடியாது.
ஒரே கல்லில் முக்கனிகள்!
பல மாதங்கள் திட்டமிட்டு சாதிக்க இயலாததை ஒரே பயணம் அதுவும் அவசர அவசரமாக திட்டமிட்டு மேற்கொல்ல்ம் பயணம் சில சமயம் சாதித்து விடுவதுண்டு. இந்த பயணத்தை பொருத்தவரை இது ஒரு முக்கனி பயணம் என்றே சொல்லலாம். மூன்று மகத்தான விஷயங்களை நாம் குருவருளால் சாதித்தோம். ஒன்று அனந்த பத்ம நாப ஈஸ்வரரை கண்டுபிடித்தது. அடுத்தது ஸ்ரீமடம் சென்று மகா பெரியவாள் அதிஷ்டானத்தில் நமது நூல்களை வைத்து ஆசிபெற்றதோடல்லாமல் அதை புகைப்படமும் எடுக்கும் பாக்கியம் கிடைத்தது. அடுத்து நமது தளத்தின் ‘ஆலய தரிசன’ பகுதிக்காக வழக்கறுத்தீஸ்வரரை தரிசித்தது பல தகவல்களை திரட்டியது. ஆகே ஒரு கல்லில் முக்கனிகள்! எல்லாம் பெரியவா கடாக்ஷம்!♦
(வழக்கறுத்தீஸ்வரர் சிறப்பு தரிசனம், வழக்குகளில் இருந்து விடுபட என்ன செய்யவேண்டும், மகா பெரியவாள் பிருந்தாவனத்தை தரிசித்தது, நமது நூல்களை மகா பெரியவாளிடம் வைத்து ஆசிபெற்றது உள்ளிட்ட நமது ஸ்ரீமட தரிசன அனுபவங்கள் மற்றும் புகைப்படங்கள் வேறொரு பதிவில்…!)
==========================================================
Also check our earlier articles on Maha Periyava…
பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு
திகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’!
ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே – மஹா பெரியவா லீலாம்ருதம்!
மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)
அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!
நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!
நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
==========================================================
[END]
Excellent Article,
I have tear in my Eyes after Reading this Article.
Maha Periyva , Maha Periyva Than.
Jaya Jaya Sankara Hara Hara Sankara.
Narayanan.
அற்புதமான பதிவு. இப்பொழுதே காஞ்சி புறப்பட்டு அனைவரையும் தரிசிக்கும் வேண்டும் என்கிற ஆவல் எழுகிறது.
ஹர ஹர சங்கர; ஜெய ஜெய சங்கர;
வெங்கட் கே. எஸ்.
Thank you
வணக்கம்
புகைப்படங்களும், பதிவின் வார்த்தைகளும் எங்களை கட்டி போட்டது.
நிச்சயம் இது ஒரு மகத்தான பதிவு. சிவனும், விஷ்ணுவும் தனி தனி சன்னதிகளில் தரிசித்த கண்களுக்கு ஒரே சன்னதியில் இரு மூர்த்திகளும் காட்சி கொடுப்பதை காண நம் கண்கள் கொடுத்து வைக்க வேண்டும்.
நேரில் செல்ல முடியாத உள்ளங்களுக்காக இந்த புகைப்படங்கள் மூலம் இருவரும் ஒரே இடத்தில் காட்சி கொடுத்துள்ளது நம் புண்ணியம்.
ஹரியும் சிவனும் ஒன்றே
நன்றி
வணக்கம் சுந்தர் சார்
மிகவும் அருமையான பதிவு
நன்றி