இந்தக் கோயிலுக்கும் காஞ்சிக் கோயிலுக்கும் ஒரு சம்பந்தம் உண்டு. குலோத்துங்க சோழன் இந்தப் பகுதியை ஆண்டு வந்த காலத்தில் அவனை ஒரு தோஷம் பற்றிக் கொண்டது. நிம்மதியில்லாமல் தவித்தான் மன்னன். எத்தனையோ பரிகாரம் செய்து பிரச்னை தீரவில்லை.
ஒருநாள், மன்னன் கனவில் தோன்றினார் மகா விஷ்ணு. “குலோத்துங்கா, காஞ்சியிலே நான் ஊரகப் பெருமாளாக சேவை சாதிக்கிறேன். அங்கே வந்து என்னை வணங்கினால் நீ நலம் பெறுவாய்.'”
உடனே காஞ்சி வந்தான் மன்னன். அங்கே ஆதிசேஷன் சிலைதான் இருந்தது. தான் தவறான கோயிலுக்கு வந்துவிட்டோமோ என்று குழம்பிய அரசன், அன்றிரவு அந்தக் கோயிலிலேயே தங்கினான்.
அன்றிரவு கனவில் தோன்றிய பெருமாள், தானே இங்கே ஆதிசேஷனாக அருள்புரிவதாக கூறி அவனுடைய தோஷத்தைப் போக்கியருளினார்.
குன்றத்தூர் திரும்பிய மன்னன், நன்றிக் கடனாக அங்கே திருஊரகத்தானுக்குக் கோயில் கட்டினான். அப்போது அங்கே பகவான், அவனுக்குத் திருப்பதி வெங்கடாஜலபதி உருவில் காட்சி தந்தார். அதனால் அதே போன்ற பெருமாள் சிலையை மன்னன் எழுப்பினான். சுவாமிக்கு திருவூரகப் பெருமாள் என்றே பெயரிட்டான்.
To download the above pic : http://rightmantra.com/wp-content/uploads/2015/12/Ooragap-Perumal.jpg
இங்கு பிரகாரத்தில் லக்ஷ்மணருடன் கூடிய கல்யாண ராமர் சன்னதி உள்ளது. தனித்தனியே ஆஞ்சநேயர் சன்னதியும், ஆண்டாள் சன்னதியும் உள்ளது. ஆஞ்சநேயருக்கு வெண்ணைக் காப்பு சாத்தி வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும்.
காஞ்சி திருவூரகத்தான் காட்சி கொடுத்ததால் மன்னன் இந்த கோயிலை காஞ்சி ஊரகத்தைப் பார்த்தபடியாக மேற்கு நோக்கிக் அவன் கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வைகுண்ட ஏகாதேசி இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. பங்குனி மாதம் வரக்கூடிய ரோகிணி நட்சத்திரத்தில் இங்கு சுவாமிக்கும் தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
மேலும் சென்ற ஆண்டு, புத்தாண்டுடன் வைகுண்ட ஏகாதசி வந்ததால் அப்படியே மலையில் உள்ள முருகன் கோவில் மற்றும் கீழே அருள்பாலித்து வரும் கந்தழீஸ்வரர் கோவிலுக்கும் நண்பர்களோடு சென்றது குறிப்பிடத்தக்கது.
மாங்காட்டில் உள்ள வைகுண்டப் பெருமாள் ஆலயத்தில் இன்று விஸ்வரூப தரிசனம் செய்த பிறகு, வைகுண்ட ஏகாதேசி தரிசனம் குறித்து கேட்டறிவதற்கு மேற்படி குன்றத்தூர் திருவூரகப் பெருமாள் கோவில் சென்றோம். சென்ற ஆண்டு வைகுண்ட ஏகாதசியின் போது இந்த ஆலயம் தான் நாம் சென்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை ஆலயத்தின் அர்ச்சகர் திரு.சுரேஷ் பட்டரிடம் பேசும்போது தான் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உழவாரப்பணி செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆலயத்தில் புற்களை செதுக்குவது, தரையை துடைப்பது, எலக்ட்ரிகல் பழுதுகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகள் இருக்கின்றன.
சென்ற வாரமே இந்த கோவிலுக்கு வந்து, இது பற்றி பேச திட்டமிட்டிருந்தோம். ஆனால் இடைவிடாத மழையால் குன்றத்தூர் செல்லும் சாலைகள் பெரும் சேதமடைந்ததுவிட்டன. மேலும் தகவல் தொடர்புகள் விடுபட்டு, இயல்பு வாழ்க்கை முடங்கி போனதால் குன்றத்தூர் வர இயலவில்லை. நாட்கள் குறைவாக இருப்பதால் அடுத்த முறை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். இதற்கிடையே இன்று காலை வைகுண்ட ஏகாதசி தரிசனம் குறித்து பட்டரிடம் பேச சென்ற போது, நிச்சயம் நம்மால் இயன்ற எளிய பணி ஏதேனும் செய்யவேண்டும் என்று அரங்கனருளால் தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த முறை குன்றத்தூர் செல்பவர்கள் அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரரையும் கூடவே மறக்காமல் திருவூரகப் பெருமாளையும் தரிசிக்கவேண்டும். கோவிலை அருகிலிருந்து பார்க்கும்போதே மனதில் ஒருவித சாந்தி ஏற்படுவதை உணர்வீர்கள். கோவில் மிக மிக அழகிய கோவில். படங்களே அதற்கு சாட்சி.
==========================================================
* கார்த்திகை தீப தரிசனம் பற்றிய பதிவில் இந்த ஆலயத்தின் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட படங்கள் அளிக்கப்படும்.
* * சென்ற புத்தாண்டு தரிசனம் பற்றிய பதிவில் வைகுண்ட ஏகாதேசி தரிசன அனுபவம் இடம்பெறும்!
==========================================================
உழவாரப்பணி அறிவிப்பு
நமது தளத்தின் வைகுண்ட ஏகாதசி சிறப்பு உழவாரப்பணி மேற்படி திருவிருந்தவல்லி சமேத திருஊரகப் பெருமாள் கோவிலில் வரும் ஞாயிறு (டிசம்பர் 20, 2015) அன்று நடைபெறும். (காலை 7.00 – 12.30 வரை). பணியில் பங்கேற்க விரும்பும் அன்பர்கள் நேரடியாக ஆலயத்திற்கு வந்துவிடவேண்டும். பஸ் வசதி உண்டு. தளம் சார்பாக மதிய உணவு வழங்கப்படும்.
தொடர்புக்கு : ரைட்மந்த்ரா சுந்தர் | M: 9840169215 | E : editor@rightmantra.com
==========================================================
“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி
இது வரை நடைபெற்ற நம் உழவாரப்பணி தொடர்பான பதிவுகளுக்கு :
http://rightmantra.com/?cat=124
==========================================================
விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன?
==========================================================
முந்தைய புத்தாண்டு ஆலய தரிசன பதிவுகளுக்கு :
அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!
ஆங்கிலப் புத்தாண்டை இப்படியும் வரவேற்கலாமே!
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions, Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
==========================================================
Similar articles….
தீராத வினை தீர்க்கும் அடியார்கள் பாத தூளி – நம் இராமநவமி அனுபவம்!
108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!
புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!
வரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்!
மலை மீது ஒரு எழில் கோலம்! சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்! (ஆலய தரிசனம் 1)
விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொடுத்தனுப்பிய என் கோதண்டராமன் – (ஆலய தரிசனம் 2)
நம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்!
ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!
‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!
பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!
நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு!
அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!
==========================================================
[END]
குன்றத்தூர் ஊரக பெருமாள் கோவிலுக்கு 4 முறை சென்று வந்து இருந்தாலும் தல வரலாறு இப்பொழுதான் அறிந்து கொண்டேன். தங்கள் தளம் சார்பாக உழவாரப் பணி செய்வதில் மகிழ்ச்சி. பணி செவ்வனே நடைபெற வாழ்த்துக்கள்
படங்கள் அனைத்தும் அருமை
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
Arumaiyaana padhivu.
Moreover I was browsing your archives of past 2yrs to read more on vaikunda ekadashi. A storehouse of information.
Tks n regds
Ranjini