நமது பன்னிரு திருமுறைகளில் மிக மிக பழமையான அச்சுப் பிரதிகள் (* சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அச்சில் ஏறிய முதல் பிரதிகள் எனலாம்) அனைத்தும் வைக்கப்பட்டு அதனுடன் பிள்ளையாரையும், சிவலிங்கத்தையும் ஸ்தாபித்து குன்றத்தூரில் (சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர்) கட்டப்பட்டதே திருமுறை விநாயகர் கோவிலாகும்.
திரவங்கள் பட்டால் பாதிக்கப்படும் என்பதால் இந்த திருமுறை மூர்த்தத்துக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது. அத்தர், ஜவ்வாது, புனுகு போன்ற வாசனாதி திரவியங்களே சாத்தப்படுகின்றன. (ஆனால், கீழே எழுந்தருளியிருக்கும் பிள்ளையாருக்கும் சிவலிங்கத்திற்கும் அனைத்தும் உண்டு.)
திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!
திருமுறை விநாயகருக்கு நித்திய பூஜைகள் செய்துவரும் திருச்சிற்றம்பலம் என்றவர் கூறியதிலிருந்து:
”தொண்டைநாடு சான்றோர் உடைத்து” என்பது ஔவையார் திருவாக்கு. சான்றோர் குலத்திலகமாக அவதரித்த சேக்கிழார் பெருமான் திருக்கோயில் குன்றத்தூர் (நத்தம்) திருநகரில் உள்ளது. அவர் இளமைக் காலத்தில் வழிபட்ட கந்தழீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு திருவூரகப் பெருமாள் திருக்கோயில், அருள்மிகு கந்தசாமி என வழங்கப்பெறும் முருகப்பெருமான் மலைக்கோயில் மேலும் இத்திருவூர்க்கு அழகு சேர்ப்பனவாம்.
சேக்கிழார் பெருமான் திருக்கோயிலின் தோரண வாயிலுக்கு அருகே அருள்மிகு திருமுறை விநாயகர் கோயில் உள்ளது.
திருத்தருமையாதீனத்தில் புலவர் பட்டம் பெற்றவரும் திருவாவடுதுறை ஆதீனத்தில் சிவத்தமிழ்ச் செம்மல் என்கின்ற விருது பெற்றவருமான ‘திருமுறைக் களஞ்சியம்’ புலவர் திரு.எம்.கே.பிரபாகர மூர்த்தி அவர்களுக்கு சொந்தமான திருமனை வளாகத்தில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக அமைக்கப்பெற்றதே திருமுறை விநாயகர் கோவில்.
செந்தமிழ் வேதம் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா முதலிய திருமுறைகள், செந்தமிழ் ஆகமம், திருமூலர் திருமந்திரம், பிரபந்தங்களின் தொகுப்பு, பதினோராம் திருமுறை புராணம் திருத்தொண்டர் மாக்கதை இவ்வருள் நூல்களையே கருவறையில் மூலட்டான மூர்த்தியாக வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
திருமுறைகள் நமக்கு கிடைக்கத் துணை நின்ற பெருமான் அருள்மிகு பொல்லாப் பிள்ளையார். அவரை போற்றி வழிபடும் நிலையில் அருள்மிகு திருமுறை விநாயகர் திருமேனியும் கருவறையில் காணலாம்.
அருள்மிகு திருமுறையுகந்த நாதர் என்ற திருப்பெயரோடு சிவலிங்கத் திருமேனியும் வழிபாட்டில் உள்ளது.
சங்கடஹர சதுர்த்தி முதலிய வழிபாட்டிற்குரிய நாட்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
கருவறை முன்பு மண்டபத்தில் நால்வர், சுவாமி, அம்பாள், நந்திகள் இடம்பெற்றுள்ளன. கருவறை விமானத்தில் மூலாதார கணபதியை யோக கணபதி பஞ்சமுக ஹேரம்ப கணபதி போன்ற சுதை சிற்பங்கள் உள்ளன. திருவேற்காடு தவத்திரு.ஐயப்ப சுவாமிகள் குடமுழுக்கு நடத்தியருளினார்.
கடலில் உள்ள மணலின் எண்ணிக்கை மற்றும் வானிலிருந்து வரும் மழைத் துளிகளின் எண்ணிக்கையை எவ்வாறு அளவிடமுடியாதோ அவ்வளவு சிவலிங்க மூர்த்தங்களை சிவாலயங்களை வழிபட்ட சிவபுண்ணியம் திருமுறை கோயிலை அமைத்து வணங்கினால் கிடைக்கும் என்பது உத்தமோத்தம சிவஞானிகள் கருத்து!
அவ்வண்ணமே, அருள்வாக்கால் உணர்ந்து அமைத்தா திருக்கோயிலே அருள்மிகு திருமுறை விநாயகர் திருமுறைக் கோயில்.
திருவாவடுதுறை 24 ஆம் பட்டம் சீர்வளர்சீர் குரு மகா சந்நிதானம் அவர்கள், தொண்டை மண்டல ஆதீனம் சீர்வளர் சீர் குரு மகா சந்நிதானம் அவர்கள் மற்றும் ஸ்ரீமத் தம்பிரான் சுவாமிகள் சாதுக்கள் அறிஞர் பெருமக்கள், அடியார்கள் பலரும் வருகை புரிந்து வழிபாடு செய்த சிறப்பிற்குரிய கோயில் இது.
==========================================================
அடுத்த முறை குன்றத்தூர் செல்லும்போது திருமுறை விநாயகரையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வாருங்கள். மூர்த்தி சிறியதென்றாலும் கீர்த்தி பெரியதன்றோ?
இப்போது தெரிகிறதா தீபாவளி அன்று ஏன் திருமுறை விநாயகரை தரிசித்து, அன்று அபிஷேக ஆராதனைகள் செய்தோம் என்று?
மிக மிக ராசியான பிள்ளையார் இவர். வறண்ட பிள்ளையாரை தேடி புறப்பட்ட நமது பயணத்தை இங்கே தான் முதலில் துவக்கினோம். இவர் வறண்ட பிள்ளையார் அல்ல. இருப்பினும் தனித்துவம் மிக்கவர். இவரருளால், பல வறண்ட பிள்ளையார்கள் நமக்கு கிடைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு அன்றும் நாம் நம் நண்பர்களுடன் பல ஆலயங்களுக்கு சென்று தரிசித்து வருவது நீங்கள் அறிந்ததே. இந்த புத்தாண்டு, நமக்கு கிடைத்த வறண்ட பிள்ளையார் ஒருவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து புத்தாண்டு ஆலய தரிசனத்தை துவக்கவிருக்கிறோம். விபரங்கள் விரைவில்…!
=========================================================
முந்தைய புத்தாண்டு ஆலய தரிசன பதிவுகளுக்கு :
அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!
ஆங்கிலப் புத்தாண்டை இப்படியும் வரவேற்கலாமே!
=========================================================
Our 2015 Deepavali Celebrations
கோ பூஜையும் வேத சம்ரட்சணமும் – தீபாவளி கொண்டாட்டம் (4)
கோமாதா எங்கள் குலமாதா – தீபாவளி கொண்டாட்டம் (3)
நமக்காக உழைப்பவர்களை சிறிது நினைப்போம் – தீபாவளி கொண்டாட்டம் (2)
திருப்பதி முருகனுக்கு அரோகரா… தீபாவளி கொண்டாட்டம் (1)
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions, Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
==========================================================
Also check :
வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!
==========================================================
விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன?
சாதனையாளர்கள் அனைவரிடமும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?
அடேங்கப்பா…..மார்கழி மாசத்துக்கு இவ்வளவு சிறப்பு இருக்கா? MUST READ
மிளகளவு கைங்கரியமும் மலையளவு புண்ணியமும்! மார்கழி முதல் நாள் தரிசனம்!!
எதை தவற விட்டாலும் மார்கழியை தவற விடவேண்டாம்!
மார்கழி முதல் நாள் : பெருமாளின் விஸ்வரூப தரிசனமும் கோ-பூஜையும் காணக்கிடைத்த அனுபவம்!
==========================================================
[END]
திருமுறை விநாயகரை அறிமுகபடித்தியதற்கு மிக்க நன்றி சுந்தர். இன்று கூட அவரின் தரிசனம் கிடைத்தது. நித்யபூஜைகள் நடக்காத கோவில்களை கண்டுபிடித்து நம்மால் முடிந்த திருப்பணிகளை செய்வோம்.
நன்றி,
வெங்கட் சுப்ரமணியம் கே.எஸ்.