குருராஜர் அருளால் மேற்படி வைபவத்தில் பங்கேற்று “சோதனைகளை சாதனைகளாக்குவோம்” என்கிற தலைப்பில் அடியேன் ஆன்மிக / சுயமுன்னேற்ற சொற்பொழிவாற்றவிருக்கிறேன்.
நாடு தற்போது மிகவும் சோதனையான ஒரு காலகட்டத்தில் இருப்பதால், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக மேற்படி தலைப்பை தேர்வு செய்தோம்.
வேலூர் மற்றும் சுற்றுப் புறங்களில் வசிக்கும் நண்பர்களும் ரைட்மந்த்ரா வாசகர்களும் இதில் பங்கேற்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் அருள் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இறுதியில் மஹாபிரசாதமாக அன்னதானம் உண்டு.
* மஹா பெரியவாவைப் போலவே மஹாகுரு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பற்றியும் அவரது மகிமைகள் பற்றியும் நம் தளத்தில் பல பதிவுகள் வெளிவந்துள்ளன, வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
– ரைட்மந்த்ரா சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
* அலுவலகத்திலும் வீட்டிலும் பாதிக்கப்பட்டுள்ள இணையத் தொடர்பு இன்னும் சரியாகவில்லை. இரண்டொரு நாளில் அலுவலகத்தில் தொடர்பு சரியாகிவிடும் என்று கருதுகிறோம். எனவே வழக்கமான பதிவுகள் விரைவில் அளிக்கப்படும்.
** அண்மை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நம் தளம் சார்பாக ஏதேனும் உதவிகள் செய்வதாக இருந்தால் தாங்களும் அதில் பொருளாதார ரீதியில் இணைய பல வாசகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி. இந்த மழை பாதிப்பு காலகட்டங்களில் தனிப்பட்ட முறையில் நம்மால் இயன்ற கடுகினும் எளிய பணிகளை செய்து வந்தோம். தளம் சார்பாக செய்வதற்கு சற்று கால அவகாசம் தேவை. காரணம் தற்போது இங்கே கள நிலவரம் சரியில்லை. எனவே சற்று பொறுமையாக நிதானித்து தகுதியுடையவர்களுக்கு தேவையானவற்றை தவறாமல் செவ்வனே செய்யலாம். வாசகர்களிடம் அந்நேரம் அது பற்றி தெரிவிக்கிறோம். நன்றி.
Dear SundarJi,
Good to know all fine at your end.. All the best for your Vellore trip..
Ramesh
குரு ராஜரின் குருவருளால் தங்களின் சொற்பொழிவு வெகு சிறப்பாக நடை பெற்று இருக்கும் என நினைக்கிறேன். தங்களின் ரெகுலர் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நம் தளம் சார்பாக செய்யும் வெள்ள நிவாரணப் பணிக்கு எங்களால் முடிந்த உதவி கண்டிப்பாக உண்டு.
இன்று கார்த்திகை அமாவாசை. ஸ்ரீதர ஐயாவாள் வீட்டில் கிணற்றில் கங்கை நீர் உற்பத்தி ஆகும் நாள்
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
Finally nice to know you all safe. I prayed to the almighty.
குருவருளால் இன்றைய விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்
நன்றி
உமா வெங்கட்
ஐயா,
தங்களை வேலூருக்கு வரவேற்கிறோம். பிரகாஷ், வேலூர்.