Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, July 12, 2024
Please specify the group
Home > Featured > ஆச்சார அனுஷ்டானம், பக்தி – எது பிரதானம் ? – திருமால் திருவிளையாடல் (4)

ஆச்சார அனுஷ்டானம், பக்தி – எது பிரதானம் ? – திருமால் திருவிளையாடல் (4)

print
கந்நாதர் பல திருவிளையாடல்கள் புரிந்து வரும் பூரியின் வரலாற்றில் கருமா பாய் என்கிற பெண்ணுக்கு ஒரு தனியிடம் இடம் உண்டு. இவரது காலம் (1615-1691) என்று கூறப்படுகிறது. மராட்டியத்தை பூர்வீகமாக கொண்டவர் கருமா பாய். பூரி ஜகந்நாதரை தரிசிக்க யாத்திரை வந்தவள் அவரை பிரிய மனமின்றி பூரியிலேயே தங்கிவிட்டாள். விதிவசத்தால் தனது கணவனை காலனுக்கு பறிகொடுத்துவிட ஆதரிக்க எவருமின்றி நடை பிணமாய் வாழ்ந்து வந்தாள்.

ஜகந்நாத ஷேத்திரத்துக்கு வந்திருந்த பக்தர்கள் சிலர் அவள் தெய்வ பக்தியையும், அவளுக்கு வந்துற்ற மனத்துயர்களையும் கேட்டுச் சில ஆறுதல் வார்த்தைகளையும் சொல்லித் தேற்ற விரும்பினர். அவர்கள் வீட்டை விசாரித்துக்கொண்டு அவளது இருப்பிடம் சென்றனர். கருமாபாய் தன துயரங்களை மறந்து அவர்களை உபசரித்து வணங்கினாள்.

Lord Krishna Bala“அம்மா… உங்கள் துயரம் சாதாரணமானதன்று. எங்களுக்கு புரிகிறது. இருப்பினும் இந்த அறிய மானிட பிறவியை கடந்த காலங்களை எண்ணி வீணாக்கலாகாது. நீங்கள் வருந்துவதை விடுத்து பஜனையிலும் பாத சேவையிலும் ஈடுபடுவீராக. அதனால் நீங்கள் மட்டுமல்ல  உங்களை சுற்றிலுமுள்ள அனைவரும் பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல் இறைவனின் அருளை பெறுவார்கள்” என்றனர்.

“நீங்கள் கூறுவது புரிகிறது சுவாமி. இருப்பினும் என் மனம் அமைதியற்ற நிலையில் இருக்கிறதே” என்றார் கருமா பாய்.

உடனே அந்த அடியார்கள் அவளுக்கு நாரயண மந்திரத்தை உபதேசித்து, ஸ்ரீ கிருஷ்ணரின் விக்ரகம் ஒன்றை அளித்து, “உனக்கென்று ஒரு மகன் இருந்தால் நீ அவனை எவ்வாறு பார்த்துக்கொள்வாயோ அதே போல இந்த கிருஷ்ணரை பாரத்துக்கொள்…!” என்று கூறி அவளுக்கு ஆசி கூறிவிட்டு புறப்பட்டனர்.

பேருவகை அடைந்த கருமா பாய், அந்த விக்ரகத்தையே தன் குழந்தை என எண்ணி, சீராட்டி வளர்த்து வந்தாள்.

காலையில் எழுந்தவுடன் குழந்தைக்கு பசி தாங்காது என்று அவளுக்கு தோன்றும். ஸ்நானம் செய்ய சென்றால் நேரமாகிவிடும் என்று, ஸ்நானம் செய்யாமலேயே சமையல் செய்து வைப்பாள். பின்னர் விறகடுப்பில் சுட வைத்த வெதுவெதுப்பான நீரில் வாசனைத் திரவியங்களைச் போட்டு பின் அந்த பொம்மைக் கண்ணனை சிறு கைக் குழந்தையை நீராட்டுவது போல காலில் படுக்கவைத்துகொண்டு குளிப்பாட்டுவாள். பிறகு பொம்மைக்கு தலை துவட்டி புதிய ஆடைகளை அணிவித்து மயிற் பீலியும் பொட்டும் வைத்து அலங்கரிப்பாள்.

பிறகு, ஆகாரத்தையும் கொடுத்து தொட்டிலில் போட்டு தாலாட்டி உறங்கச் செய்த பின்பே தனது பிற பணிகளை கவனிக்கச் செல்வாள்.

தனது வாயை திறந்து அண்டசராசரங்களை யசோதைக்கு காட்டிய இறைவனும் அவள் பொருட்டு குழந்தையாகவே அவ்வில்லத்தில் இருந்தான்.

ஒரு நாள் காசிக்கு யாத்திரை செல்லும் சில பாகவதர்கள் இவள் வீட்டுக்கு அதிதியாக வந்தனர். கருமா பாய் காலை எழுந்து குளிக்காமல் சமையல் உள்ளிட்ட இதர பணிகளை செய்வதை பார்த்தவர்கள், “அம்மா… தாங்கள் ஜகந்நாதனின் தீவிர பக்தை என்பதை கேள்விப்பட்டே இங்கே அமுது செய்ய வந்தோம். ஆனால், தாங்களோ நீராடாமல் சமையல் செய்வதாக தெரிகிறது. அனைத்தும் அறிந்த தாங்களே இவ்வாறு செய்யலாமா?” என்றனர்.

“என்ன செய்யட்டும் சுவாமி… என் குழந்தைக்கு பசி பொறுக்காது. என் கைகளால் அன்றி அவன் வேறு யார் கைகளாலும் உண்ண மாட்டான். எனவே அவனுக்கு முதலில் சோறூட்டி தூங்க வைத்து பின்னரே என் பணிகளை கவனிக்கிறேன்… மன்னிக்கவும்.”

“என்ன உன் வீட்டில் குழந்தை இருக்கிறதா? அதற்க்கான சுவடே தெரியவில்லையே?” என்று பாகவதர்கள் வியப்புடன் கேட்க, கருமா பாய் உடனே தூளியிலிருந்த கண்ணனின் விக்ரகத்தை எடுத்து அவார்களிடம் காட்டினாள்.

“இதோ என் குழந்தை!”

பாகவதர்கள் அது கண்டு சிரித்தார்கள். “இந்த பொம்மை உனக்கு குழந்தையா? இது சாப்பிடுமா? இதற்காக நீ நீராடாமல் சமைக்கிறாயா??” என்று நகைத்தனர்.

உடனே கருமாபாய் உள்ளே சென்று அன்று தான் செய்திருந்த சர்க்கரை பொங்கலைக் கொணர்ந்து எதிரில் வைத்து, ”கண்ணே கொஞ்சம் சாப்பிடடா!” என்று வேண்ட, விக்கிரகம் குழந்தையாகி அந்தப் பொங்கலைத் தன் சிறு கையினால் அழகாக எடுத்துண்டது.

பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவளது பக்தியை கண்டு மெய்சிலிர்த்தனர். “இறைவனது சௌலப்யத்தை இதிலே கண்டோம்” என்று மெய்மறந்து துதித்தனர்.

“அம்மா உன் பக்தியின் பெருமை புரிகிறது. இறைவனே வந்து சாப்பிடும்போது நீ இன்னும் ஆச்சாரத்துடன் சமைப்பது தான் முறை. எனவே இனி நீராடிவிட்டு சமை” என்று கூறிவிட்டு புறப்பட்டனர்.

அடுத்த நாள் முதல் கருமா பாய் வழக்கமாக தான் எழும் நேரத்தைவிட சற்று சீக்கிரமே எழுந்து வீடு முழுவதும் மெழுகிப் பெருக்கிக் கோலமிட்டுப் பின் நீராடி சமையல் செய்யத் தொடங்கினாள்.

Puri Jagannath Swamy

அங்கே பூரி ஜகந்நாதர் கோவிலின் தலைமை அர்ச்சகர் கனவில் பக்தவத்சலன் தோன்றினான். “இதுவரை நாம் நம் பக்தி கருமா பாய் வீட்டில் எந்த வித குறையுமின்றி வளர்ந்து வந்தோம். ஆனால், அவளோ யாரோ சில பாகவதர்கள் பேச்சை கேட்டு, நீராடிவிட்டு சமைக்கிறாள். அது வரை எனக்கு பசி பொறுக்கவில்லை. எனக்கு அடியவர்கள் என் மீது வைக்கும் அன்பும் பக்தியும் தான் பிரதானமேயன்றி ஆச்சார அனுஷ்டானங்கள் அல்ல. இதை அவளிடம் கூறு” என்று கூறிவிட்டு மறைந்தார்.

அர்ச்சகர் மறு நாள் கோவில் பூர்ண கும்பத்துடன் சிப்பந்திகள் மற்றும் அதிகாரிகளுடன் கருமா பாயின் இல்லத்துக்கு விரைந்தார். கருமாபாய் எழுந்து வீட்டை கூட்டிப் பெருக்கி முடித்து, தரையை துடைத்துக் கொண்டிருந்தாள்.

அர்ச்சகர் அவரை பணிந்து கருமா பாயிடம் நடந்த அனைத்தையும் கூறி, இறைவன் திருவுள்ளம் என்ன என்பது பற்றி கூறினார்.

=============================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=============================================================

அர்ச்சகர் சொன்ன செய்தியைக் கேட்டதும், ”அடடா! என் அறியாமையால் குழந்தையைப் பசியினால் வாடும்படி செய்துவிட்டேனே… கண்ணா என்னை மன்னிப்பாயா?” என்று ஏங்கி கதறி முன்போலவே விடியற்காலையே உணவு வகைகளைத் தயாரிக்கலானாள்.

“திரிகரண சுத்தியோடு செய்யப்படும் பக்திதான் பிரதானம். ஆசார அனுஷ்டானங்கள் அதற்கு உபகரணங்களே” என்பதை அவள் மூலம் விளக்கியருளினார் பகவான்.

இன்றும் கூட பூரியில் ஜகந்நாதரின் ஆலயத்தில் ஆச்சார அனுஷ்டானங்கள் குறைவு. அதிகம் ஆசாரமற்றவர்களைக் பற்றி இங்கே குறிக்கும் பொழுது, ”அங்கே சர்வம் ஜகந்நாதம்” என்ற பழமொழியும் ஏற்பட்டது.

இதில் உங்களுக்கு சில கேள்விகள் எழலாம்….

1) இறைவன் ஆலயத்தின் அர்ச்சகர் கனவில் தான் போய் கூறவேண்டுமா? ஏன் கருமா பாயின் கனவிலேயே தோன்றி இதைக் கூறியிருக்கலாமே?

பதில் : ஆலய அர்ச்சகர் கனவில் ஜகந்நாதர் தோன்றி இதைச் சொன்னதால் தான் கருமா பாயின் புகழை உலகம் அறிந்துகொண்டது. ஜகந்நாதரின் மகிமைகளிலும் இது இடம்பெற்றது.  இல்லையெனில் பல நூற்றாண்டுகள் கழித்து இன்று கருமா பாயை பற்றி படித்துக்கொண்டிருக்க மாட்டோம்.

2) பக்தியும் அன்பும் தான் இறைவனுக்கு பிரதானம் என்று இந்த கதையில் சொல்லப்பட்டுள்ளது. எனக்கு இறைவன் மீது பெரும் பக்தியும் பேரன்பும் உண்டு. நான் மட்டும் ஏன் ஆச்சார அனுஷ்டானங்ளை பார்க்கவேண்டும். அவற்றை விட்டுவிடலாமா?

பதில் : இதற்கு பகவான் ரமண மகரிஷியின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை பதிலாக தருவது தான் பொருத்தமாக இருக்கும்.

Ramana Maharishi

ஒரு முறை ரமணாஸ்ரமத்தில் ராமநாத பிரம்மச்சாரி என்கிற அடியவர் உணவு உட்கொள்ளாததை பகவான் ரமண மகரிஷி கவனித்தார்.

சிறிது நேரத்திற்கு பிறகு ராமநாத பிரம்மச்சாரியை நோக்கி : “ராமநாதா ஏன் சாப்பிடலே?” என்று விசாரித்தார்.

“இன்னைக்கு சிரார்த்தம். அதான் சாப்பிடலே” என்றார் ராமநாத பிரம்மச்சாரி.

“இங்கே வந்துட்டேல்லியோ ! அதெல்லாம் உனக்கு தேவையில்லை. பேசாம சாப்பிடு. இன்னும் ரெண்டு இட்லி சேர்த்து சாப்பிடு” என்றார் பகவான்.

இதை அங்கிருந்த சேலம் டி.எஸ்.ராஜகோபாலய்யரும் கேட்டுக் கொண்டிருந்தார். அவரும் அதிலிருந்து வருஷாப்திகளை செய்வதில்லை. விட்டுவிட்டார்.

பகவானைத் தரிசிக்க வந்த அவரது உறவினர் இது பற்றி பகவானிடம் முறையிட்டார். அடுத்தமுறை ராஜகோபாலய்யர் தரிசனத்திற்கு வந்தபோது பகவான், “என்ன ஓய்! சிரார்த்தம் எல்லாம் பண்றது இல்லையாமே நீர்?” என்றார்.

“ஆமாம்.. பகவானே… அன்னைக்கு ராமநாத பிரம்மச்சாரிக்கு சொன்னேளோல்லியோ, அதை நானும் கேட்டேன். அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன், நானும் சிரார்த்தம் பண்றது இல்லைன்னு” என்றார் ராஜகோபாலய்யர்.

“ஓஹோ…! அவன் எனக்காக எல்லாத்தையும் விட்டுவிட்டு வந்துட்டான். நீ என்ன விட்டே? அவன் கதை வேறே!” என்றார் பகவான்.

பலவித தியாகங்கள் மற்றும் சோதனைக்கிடையில் பக்தி செலுத்தி வந்தாள் கருமா பாய். எனவே ஆச்சார அனுஷ்டானங்கள் அந்த அன்னைக்கு தேவையில்லை என்று கருதினான் பகவான். நாம் என்ன தியாகம் செய்திருக்கிறோம்?

=============================================================

நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 23

கார்த்திகை சோமவார தரிசனம் – சகல தோஷ நிவாரணம்!

இன்று கார்த்திகை சோமவாரம். கார்த்திகை சோமவாரத்தில் சிவபெருமான் அக்னிப் பிழம்பாக இருப்பார். அவரை குளிர்விக்கும் பொருட்டே அன்று சங்காபிஷேகம் நடக்கிறது.

Sangabishekam 1இன்று ஏதேனும் சிவாலயதிற்கு சென்று குறைந்தது ஒரு நாழிகையாவது (24 நிமிடங்கள்) இருந்துவிட்டு வந்தால் சகல விதமான கிரக தோஷங்களும் அகலும் என்பது நம்பிக்கை.

மேலும் இன்று இறைவனை தரிசிக்கும்போது

“ஓம் பாஞ்ச ஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி,
தந்தோ சங்க: ப்ரசோதயாத்”

என்ற சங்கு காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.

இன்று செல்ல முடியாதவர்கள் அடுத்து வரும் கார்த்திகை சோமவாரத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

டிப்ஸ் தொடரும்…

=============================================================

For earlier episodes…

ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)

பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)

விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)

=============================================================

பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!

மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !

திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)

ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

=============================================================

Also check :

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

=============================================================

Also Check :

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

=============================================================

ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!

“தன்னைப் போல பிறரை எண்ணும்  தன்மை வேண்டுமே!” .

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

மழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க!

=============================================================

[END]

4 thoughts on “ஆச்சார அனுஷ்டானம், பக்தி – எது பிரதானம் ? – திருமால் திருவிளையாடல் (4)

 1. சுந்தர் சார்,

  வணக்கம்

  தெய்வம் உண்மையான பக்தியை மட்டுமே எதிர்பார்க்கும் என்பதை விளக்கும் நிகழ்வு.

  ரொம்ப நல்லா இருந்தது. அதில் எனது opinion,

  பக்வத்சலன் அர்ச்சகர் கனவில் தொண்டியதர்கு காரணம் இதுவும் இருக்கலாம் அல்லவா! அர்ச்சகர் சொன்னால் எந்த பாகவதரும் அபசாரம் என்று சொல்ல மாட்டார்கள் எல்லோரும் முழு மனதுடன் ஏற்பார்கள் என்பதாகவும் இருக்கலாம்.

  மிக்க நன்றி சார்

 2. வெகு நாட்களுக்கு பிறகு தங்கள் தளத்தை படித்ததில் மிக்க மகிழ்ச்சி. கருமாபாயின் கிருஷ்ணரிடம் கொண்ட பக்தி கண்டு பரவசமானோம். இந்த பதிவின் மூலம் ஆச்சார அனுஷ்டானம் மற்றும் பக்தி பற்றி தெளிவு பட விளக்கியதில் எல்லோருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை . வாசகர்களுக்கு மனதில் ஏற்படும் சந்தேகங்களை ரமண மகரிஷியின் மூலம் விளக்கியது அருமை. டிப்ஸ் நன்றாக உள்ளது வாழ்க …. வளமுடன்நன்றிஉமா வெங்கட்

 3. சுந்தர் ஜி அவர்களுக்கு வணக்கம்.
  ரைட் மந்த்ரா நண்பர்கள் அனைவருக்கும் நலமுடன் வாழ்வாங்கு வாழா இறைவனை வேண்டிக்கேட்டு கொள்கிறேன் .நீண்ட இடைவேலைக்கு பிறகு நல்ல பதிவு .
  நன்றி சுந்தர்ஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *