ஒரு கட்டத்தில் ராமேஸ்வரத்தில் அரிசி மூட்டைகளை வைக்க இடமில்லாமல் போனது. எதற்காக இப்படி அங்கே ஏகமாக ஸ்டாக் செய்ய சொல்கிறார் என்று மடத்து மானேஜருக்கு புரியவில்லை. இது விஷயமாக அவருக்கு பெரியவாளிடம் மனஸ்தாபமே வந்து விடுமோ எனும்படியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு. ஆனாலும் பெரியவா ஒரே பிடிவாதமாக பல நூறு மூட்டைகளை ராமேஸ்வரத்தில் இப்படி சேர்க்க செய்தார். இதற்கு மேலும் ஸ்டாக் வைக்க இடமில்லை என்னும் சூழ்நிலை வந்தது.
செய்வதறியாது தவித்த மடத்தின் மானேஜர் காஞ்சி விரைந்து வந்து பெரியவாளை சந்தித்து, “இதற்கு மேல் நீங்கள் அரிசி மூட்டைகளை ராமேஸ்வரத்துக்கு அனுப்பினால் கடலில் தான் கொட்டவேண்டும்” என்று கூற, “வேண்டாம்… கடலே அதை சுவீகரிக்க வரும்” என்றார் பெரியவா.
அவ்வாண்டு டிசம்பர் இறுதியில் ராமேஸ்வரத்தில் கடும் புயல் வீசியது. தனுஷ்கோடி நகரமே கடலில் மூழ்கியது. இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சுமார் 1800 பேர் பலியாகினர். வரலாற்றில் இது ‘தனுஷ்கோடி துயரம்’ என்று அழைக்கப்படுகிறது.
பாம்பன் பாலம் புயலால் பாதிக்கப்பட்டு ராமேஸ்வரம் தமிழகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு தனித் தீவாகிப் போனது. ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி மக்கள் உண்ண உணவின்றி தவிக்கும் நிலை வந்தபோது, ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீமடத்தின் கிளையிலிருந்து தான் அனைவருக்கும் அரிசி மூட்டைகள் விநியோகிக்கப்பட்டன. ஆம்… பல மாதங்களாக பெரியவா உத்தரவுப்படி அங்கு சேகரித்து வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மூட்டை அரிசிகள் தான் அவை.
நிலைமை சீரடைந்து இந்திய துணைக் கண்டத்துடன் ராமேஸ்வரம் மீண்டும் இணையும் வரையில் சங்கர மடத்தில் இருந்த அரிசியைக் கொண்டு தான் ராமேஸ்வரம் மக்கள் பசியாறினர்.
தனுஷ்கோடி கடலில் மூழ்கப்போவதை தனது ஆன்மஞானத்தால் உணர்ந்து பெரியவா அரிசியை அங்கு இருப்பு வைக்கச் சொன்ன கருணையை என்னவென்று சொல்வது?
இதில் உங்களுக்கு சில சந்தேகங்கள் எழலாம். சில கேள்விகளுக்கு விடைகள் அந்த ஈசன் ஒருவனால் தான் சொல்லமுடியும். அவனது கழல்களை பற்றிக்கொள்வதை தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும் ?
=============================================================
சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…
Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
=============================================================
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மழையால் குடிசை முதல் முதல் அப்பார்ட்மெண்ட் வரை மழை வெள்ளம் சூழ்ந்துகொண்டு திரும்பிச்செல்ல மறுத்துவருகிறது. வீட்டுக்குள் முழங்கால் அளவு தண்ணீர், சாலையில் இடுப்பு அளவு தண்ணீர் எனச் சென்னைப் பிரதேசம் மிதவைக்குடியிருப்பாக மாறியிருக்கிறது. மழை ஓய்ந்தாலும் துயரம் ஓயவில்லை. புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், பம்மல், படப்பை, கொரட்டூர் போன்ற பகுதிகளில் தண்ணீர் இன்னும் வடிந்தபாடில்லை.
கடந்த 23 ஆம் தேதி திங்கட்கிழமை சென்னையை முடக்கிய டிராபிக் ஜாமை மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்கமாட்டார்கள். ஒரு சில ஆயிரங்கள் சம்பளம் குறைவு என்றாலும் அரைமணி நேரத்தில் வீட்டுக்கு செல்வது போல இருக்கும் இடத்தில் தான் பணிபுரியவேண்டும் குறிப்பாக பெண்கள் என்கிற மிகப் பெரிய பாடத்தை சென்னைவாசிகள் உணர்ந்த நாள் அன்று. (நமக்கு தெரிந்து பலர் வீடு திரும்ப நள்ளிரவு 2.00 மணியானது!)
எந்த மழையை வரவேற்க ஏக்கத்துடன் காத்திருந்தனரோ அதே மழையை பார்த்தாலே சென்னைவாசிகளுக்கு திகில் எழும்படியானது சோகம்தான். பணம் என்பது வெறும் காகிதமே அதையும் மீறி இந்த உலகில் பல விஷயங்கள் உண்டு என்று பலர் உணர்ந்துகொண்டுவிட்டனர். இயற்கையை எந்த நாளும் மனிதன் வெல்லமுடியாது என்பதே இந்த சீற்றத்தின் மூலம் இயற்கை நமக்கு வழங்கும் பாடம்.
மக்கள் சொல்லொண்ணா துயரில் மூழ்கியிருக்கும் இந்த வேளையில் நாம் களத்தில் இறங்கி நம்மால் இயன்ற ஒரு சிறு துளி தொண்டை செய்திருந்தாலும் தார்மீக ரீதியிலான ஆதரவையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் விதம் நமது தளத்தின் பிரார்த்தனை கிளப் பதிவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருபவர்களுக்காக இந்த வாரம் நடைபெறவிருக்கிறது.
சென்ற வார பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருந்தவர் சைதையை சேர்ந்த வாசகர் திரு.மணி அவர்கள். கந்தசஷ்டியை முன்னிட்டு நாம் சென்ற வாரம் தினமும் போரூர் பாலமுருகன் ஆலயத்திற்கு சென்று வந்தமையால், அவரையும் பிரார்த்தனை நடைபெற்ற ஞாயிறு மாலை மேற்படி ஆலயத்திற்கு வரச்சொல்லியிருந்தோம். அவரும் வந்திருந்தார். லக்ஷார்ச்சனையில் பங்கேற்று முருகனிடம் பிரார்த்தனையை சமர்பிக்க சொன்னோம். தலைமையேற்ற நித்யானந்த குருக்களும் பிரார்த்தனை செய்ய பிரார்த்தனை நல்லபடியாக முடிந்தது. சென்ற பிரார்த்தனை கிளப் பொது பிரார்த்தனை வெள்ளம் பாதித்த கடலூர் மக்களுக்காக நாம் செய்த நிலையில், இந்த வார பிரார்த்தனை கிளப் பதிவை சென்னை மக்களுக்கு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
நாளை (ஞாயிறு 29/11/2015) மாலை நமது பிரார்த்தனை நேரத்தின்போது (5.30 pm – 5.45 pm) ‘வேல்மாறல்’ நூலை வைத்திருக்கும் நம் வாசகர்கள் யாவரும் ‘வேல்மாறல்’ பாராயணம் செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ‘வேல்மாறல்’ இல்லாதவர்கள் கந்தசஷ்டி கவசத்தை படிக்கவேண்டும்.
சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளை பாதிப்பு முற்றிலும் நீங்கி, இயல்புவாழ்க்கை மீண்டும் திரும்பவும், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உரிய இழப்பீடும் நிவாரணமும் பெறவும் இறைவனை வேண்டுவோம்.
அடுத்த வாரம் வழக்கமான பிரார்த்தனை கிளப் பதிவு இடம்பெறும்!
நன்றி!!
=============================================================
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : நவம்பர் 29, 2015 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
=============================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
=============================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
=============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E : editor@rightmantra.com | M : 9840169215 | W:www.rightmantra.com
=============================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
=============================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : போரூர் பாலமுருகன் கோவிலின் அர்ச்சகர் திரு.நித்யானந்த குருக்கள் (40) அவர்கள்.
[END]
தனுஷ்கோடி புயல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பின்னணியில் உள்ள பெரியவாவின் கருணை பற்றி தெரியாது.
என் மாமனாரின் சகோதரி மருமகன் புயலின்போது ராமேஸ்வரத்தில் இருந்ததாக கூறுவார்கள். ஆனால், அவர் முக்தியடைந்து பல ஆண்டுகளாகிவிட்டது. அந்தளவு மட்டுமிய எனக்கு தெரியும்.
ஞானிகளின் செயகளுக்கு காரணங்களை யார் அறிய முடியும்? அந்த பரம்பொருளைத் தவிர. ஆம்… நீங்கள் கூறுவது போல சில கேள்விகளுக்கான விடைகளை அந்த இறைவன் ஒருவன் தான் சொல்ல முடியும்.
நேற்று பதிவை படித்து பிரார்த்தனை செய்தேன். இன்று அலுவலகத்தில் பின்னூட்டம் இடுகிறேன்.
மற்ற பதிவுகளை ஒவ்வொன்றாக படித்து வருகிறேன்.
மழை வெள்ள பாதிப்பு நீங்கி சென்னை மக்கள் உட்பட எல்லாரும் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
மகா பெரியவாவின் தீர்க்க தரிசனம் பற்றி படித்து மெய் சிலிர்த்தேன். அழகிய தெரியாத நிகழ்வுகளை பிரார்த்தனை பதிவில் போட்டு பிரார்த்தனை பதிவுக்கு மெருகூட்டுகிறீர்கள். போன வாரம் 29ம் தேதி அன்று என் மகன் ஹரிஷ் இற்காக பிரார்த்தனை செய்த நமது தளwhatsapp நண்பர்கள் அனைவருக்கும் நான் எனது நன்றியை காணிக்கை ஆக்குகிறேன். அனைவரின் பிரார்த்தனையால் தற்பொழுது உடல் நலம் சீராகி நார்மலாக உள்ளான். தாங்களும் பலவித அலுவலக வேலைகளுக்கு இடையில் மருத்தவமனை வந்து பார்த்து பதிகம் படித்தது எங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. அதற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாதிரி இக்காட்டான சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதருக்கும் தேவை ஆறுதலான வார்த்தைகள் தான்.
மிக்க நன்றி
வாழ்க … வளமுடன்
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
உமா வெங்கட்