Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > நெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)

நெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)

print
ங்கிலத் தேதிப்படி இன்று அடியேன் பிறந்த நாள். பெற்றோர் காலில் விழுந்து ஆசிபெற்றுவிட்டு ஏதேனும் தொன்மையான ஆலயம் சென்று இறைவனை தரிசித்துவிட்டு அலுவலகம் சென்று இன்றைய பணிகளை கவனிப்பது மட்டும் தான் இன்று நமது அதிகபட்ச நடவடிக்கை.

Kundrathur murugan
நேற்று (25/11/2015) திருக்கார்த்திகையின் போது குன்றத்தூர் முருகன் தரிசனம்!

தமிழ் மாதத்தில் வரக்கூடிய நமது பிறந்த நட்சத்திரம் அன்று தான் பிறந்தநாளை கொண்டாடுவது நமது வழக்கம். நட்சத்திரப்படி வரும் பிறந்த நாள் தான் சரியான ஒன்று. மேலும் நமது பாரம்பரியங்களில் ஒன்று. ஆங்கிலத் தேதிப்படி கொண்டாடுவது வெள்ளையர் விட்டுச் சென்ற பழக்கம். கடந்த நூறு ஆண்டுகளாகத் தான் நடைமுறையில் இருக்கிறது. நமது முன்னோர்கள், குருமார்கள், ஏன் நாம் வணங்கும் தெய்வங்கள் அனைவருக்கும் அவர்களது அவாதாரத் திருநாளை (ஜெயந்தி) நட்சத்திரப்படி தான் கடைபிடித்துவருகிறோம். நமக்கு மட்டும் ஏன் ஆங்கிலத் தேதிப்படி பிறந்தநாள் கொண்டாடுகிறோம்? சிந்திப்பீர்!

இருப்பினும் இன்று வாழ்த்துக் கூறும் நண்பர்கள் வாழ்த்தை ஏற்றுக்கொண்டு நன்றி சொல்கிறோம். மற்றபடி வரும் டிசம்பர் 4 அன்று தான் நட்சத்திரப்படி அடியேன் பிறந்த நாள்.

நட்சத்திரப் பிறந்தநாள் அன்று தான் இறையருள் + பிரபஞ்சத்தின் சக்தி பரிபூரணமாக ஒருவர் மீது இறங்கும். அதைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இது பற்றி இரண்டு பதிவுகள் ஏற்கனவே அளித்திருக்கிறோம். எனவே அன்று தான் ஆயுஷ் ஹோமம், அன்னதானம், கோ-சம்ரட்சணம் உள்ளிட்ட எளிய அறப்பணிகளை செய்து, ஏதேனும் தொன்மையான ஆலயம் சென்று இறைவனை தரிசித்து  அர்ச்சனை செய்து நம்மை கூன், குருடு, செவிடு, பேடு இல்லாமல் படைத்த இறைவனுக்கு நன்றி சொல்வோம். இதுவரை கொடுத்தவற்றுக்கும் இனி கொடுக்கவிருப்பதற்கும் நன்றி சொல்வோம். காரணம், நன்றியுடையோருக்கு மட்டுமே அவனிடம் மேலும் கேட்க தகுதி உண்டு. அடியேனுக்கு பெற தகுதியிருக்கிறதோ இல்லையோ கேட்கவாது தகுதி வேண்டுமல்லவா?

இதனிடையே நேற்று நவம்பர் 25 மாலை குன்றத்தூரில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக திருக்கார்த்திகைக்கு குன்றத்தூர் சென்று வருகிறேன். நேற்று மலையில் ஜோதி ஏற்றப்படும்போது அருகே இருந்து ஜோதி தரிசனம் செய்துவிட்டு தொடர்ந்து கோவிலுக்கு சென்று சுப்ரமணிய சுவாமி தரிசனமும் செய்தேன். சிகரமாக கோவிலின் அர்ச்சகர் ரகு குருக்கள் அவர்களின் கரங்கள் மூலம் அருட்பிரசாதமும் கிடைத்தது.

Kundrathur Murugan prasadham

இது அனைவரையும் முந்திக்கொண்டு என்னப்பன் முருகன் கொடுத்த அட்வான்ஸ் பிறந்த நாள் பரிசு என்றே கருதுகிறேன். காரணம், இதை நாம் எதிர்பார்க்கவில்லை. “நாளை என் பிறந்தநாள்” என்றெல்லாம் யாரிடமும் கூறவில்லை. ரகு குருக்கள் தாமாகவே கொஞ்சம் நம்மை காத்திருக்கச் சொல்லி பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தார்.

நமக்கு அலைபேசியிலும், வாட்ஸ் ஆப்பிலும், குறுந்தகவலிலும், முகநூலிலும் நமது தளத்திலும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய, இனி கூறவிருக்கிற அனைவருக்கும் என் உளம்கனிந்த நன்றி!

ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறு செய் தனி வேல் வாழ்க குக்குடம் வாழ்க -செவ்வேல்
ஏறிய மஞ்னைஞ வாழ்க ஆணை தன் அணங்கு வாழ்க
மாசில்லா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம் !

நாம் வேறொரு மிகப் பெரிய பதிவை விரிவாக எழுதி வருகிறோம். நேரமெடுத்து புதுப் புது விஷயங்களுடன் பதிவை எழுத வேண்டியிருக்கிறது.

ஆங்கிலப் பிறந்தநாளான இன்று நல்லதொரு விஷயத்தை சொல்லவேண்டி, கீழ்கண்ட பதிவை அளிக்கிறோம். சிவனைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்று அப்பர் பெருமான் கூறியிருக்கும் நிலையில், இன்று அவனைப் பற்றி பேசவில்லை என்றால் எப்படி?

மேலும் சிவனைப் பற்றி படிக்கும் கேட்கும் புண்ணியம் உங்களுக்கும், சிவனைப் பற்றி பேசிய புண்ணியம் அடியேனுக்கும் கிடைக்குமல்லவா ?

பிரபஞ்சத்தை படைத்தது முதல் இன்றைய கலியுகாதி 2015 ஆண்டு வரை சிவபெருமான் நமது தமிழகத்தில் புரிந்த, புரிந்துவரும் அற்புதங்கள் எண்ணற்றவை. அநேகமாக ‘திரு’ என்கிற அடைமொழி கொண்ட நமது ஊர்கள் அனைத்திலும் சிவபெருமானின் அற்புதம் நிச்சயம் ஏதேனும் ஒன்று (ஏன் பல கூட) இருக்கும். அப்படிப்பட்ட ஒன்றை பார்ப்போம்.

=========================================================

Also check…

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்!

நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!

சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?

=========================================================

நெல்லுக்கு வேலியிட்ட நிமலன்!

முன்னொரு காலத்தில் தீவிர சிவ பக்தரான வேதபட்டர் என்பவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். தமது வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டி ஒவ்வொரு ஊரிலும் அமைந்த சிவனை வழிபட்டு வந்தார். சிவன் அருளால் வேத பட்டருக்கு சகல செல்வங்களும் கிடைத்தது.

‘வேணுவனம்’ என்னும் (வேணு – மூங்கில்) ஊருக்கு வந்த வேதபட்டர் அங்கிருந்த வேணுவனநாதருக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார்.

Nellaiyappar

சிவபூஜை செய்வதையும் சிவபூஜையின் ஒரு அங்கமான அடியார்க்கு அமுது செய்யும் அதிதி பூஜையையும் வேதபட்டார் எந்த சூழ்நிலையிலும் கைவிடவில்லை. குறைந்தது ஒரு அதிதிக்காவது உணவிடாமல் அவர் உண்ணமாட்டார். சோதனையின்றி சிவனருள் சாத்தியமா என்ன? எனவே வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அந்த ஊரில் கடும் பஞ்சத்தை வரவழைத்தார். மழையின்றி காடு, குளம், ஏரி, கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் வற்றின. கால்நடைகள் வளம் குறைந்தது. பசு பால் தரவில்லை.

பிழைப்பை தேடி மக்கள் வேறு ஊர்களுக்கு செல்லத் துவங்கினர். ஆனால் வேதசர்மா மட்டும் வேணுவனநாதரை விட்டு பிரிய மனமின்றி அங்கேயே இருந்தார். பஞ்சம் வாட்டும் இந்த நிலையில் நாமும் ஊரைவிட்டு சென்றால் வேணுவனநாதருக்கு யார் நைவேத்தியம் செய்வார்கள்? என்று கருதி தம்முடைய செல்வத்தை எல்லாம் விற்று வேதசர்மா சிவா பூஜையும் அதிதிபூஜையும் செய்யலானார்.

ஒரு கட்டத்தில் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக வேதபட்டர், பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜையும் அதிதி பூஜையையும் நடத்தி வந்தார்.

ஒரு நாள் வேணுவனநாதருக்கு நைவேத்தியம் செய்ய அமுது செய்யவேண்டி நெல்லை காய வைத்து விட்டு நீராடுவதற்கு பொருநை ஆற்றிற்கு வேதபட்டர் சென்று விட்டார்.’

ஆற்றில் மெல்லிய கோடு போல பெயரளவிற்கு நீர் சென்றுகொண்டிருந்தது. அதில் வேதபட்டார் நீராடிக்கொண்டிருந்தார்.  அப்போது திடீரென மேகம் கறுத்து திவலை திவலையாக நீர்த்துளிகள் இவர் மீது விழுந்தது. சற்று நேரத்தில் பெருமழை பெய்தது. பஞ்சம் போக்க பெய்த மழையால் ஆனந்தக் கூத்தாடினார் வேதசர்மா. அவரது மகிழ்ச்சி சற்று நேரத்தில் சோகமாக மாறியது.

மழை பெய்ததால் இறைவன் நைவேத்தியத்திற்காக காயப்போட்டிருந்த நெல் மழை நீரில் அடித்துச் சென்றுவிடுமே என பதறியபடி கவலையுடன் வேதபட்டர் கோயிலுக்கு ஓடி வந்தார்.

ஆனால் அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் கதிரவன் ஒளியால் நாற்புறமும் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு கொண்டிருந்தது. இதைப்பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார்.

மன்னரும் ஓடோடி வந்து இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம், நெல்வேலி என பெயர் பெற்றது. பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.

திருநெல்வேலி எனப் பெயர் வரக்காரணமாக அமைந்த இந்த நிகழ்வு நெல்லையப்பர் கோயில் தைப்பூசத்திருவிழாவில் ஆண்டுதோறும் 4வது நாள் இந்த நிகழ்ச்சி நெல்லுக்கு வேலியிட்ட திருநாளாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

Nellayappar Gandhimathi

இங்கு இறைவனுக்கு நெல்லையப்பர், வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலிநாதர், சாலிவாடீசர், வேணுவனேஸ்வரர், வேணுவன மகாலிங்கேஸ்வரர் என்று பல பெயர்கள் வழங்கப்படுகின்றது. அம்பாள் பெயர் : காந்திமதி அம்மை, வடிவுடையம்மை.

திருநெல்வேலி என்றால் இனி உங்களுக்கு நெல்லையப்பரின் மேற்கூறிய அற்புதம் தான் நினைவுக்கு வரவேண்டுமே தவிர அருவாளும், அல்வாவும் அல்ல.

=============================================================

மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)

=============================================================

Also check :

அன்னதானம் என்கிற அருந்தவம்!

வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=========================================================

Also check…

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

எது உண்மையான தர்மம்?

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

“எல்லாம் அவ பாத்துப்பா!”

=============================================================

நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 22

உங்க வீட்டில் பரம அன்னம் உண்டா?

Parama Annam

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் நமக்கு பிடித்ததை சமைத்து அதை நைவேத்தியம் என்கிற பெயரில் இறைவனுக்கு காட்டிவிட்டு நாம் சாப்பிடுகிறோம். (இதுதானே முறை. பின்னே வேற என்னவாம் என்கிறீர்களா?)

என்றாவது இறைவனுக்கு பிடித்த ஒன்றை அவனுக்காக சமைப்போம் என்று நினைத்ததுண்டா?

தெய்வங்களுக்குப் படைக்கப்படுகின்ற அன்ன வகைகள் உயர்ந்த தரத்துடனும், சுவையுடனும் அவன் நாமத்தை உச்சரித்தபடி சமைக்கப்பட வேண்டும். பரம அன்னம் தயார் செய்கின்ற விதம் பற்றி பேரூர்ப் புராணத்தில் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“பாலை போன்ற தூய வெள்ளிய அரிசி, ஒரு படிக்கு மூன்று படி பசும்பாலும், காற்படி பசு நெய்யும், போதிய அளவு வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய், சுக்கு இவற்றின் பொடியும், இளந்தேங்காய்த் துருவலும் கலந்து பாகம் பொருந்தச் செய்தபின், வாழைப்பழம் பதினைந்தை உரித்துப் போட்டுக் கிளற வேண்டும்!”

இந்த அன்னத்திற்கே பரம அன்னம் என்று பெயர். அதாவது முழுமையான அன்னம் இதுவே. இதைச் செய்து உங்கள் குல தெய்வதற்கு நைவேத்தியம் செய்து, நாம் அதை பிரசாதமாக உட்கொண்டு, காக்கைக்கு வைத்துவிட்டு எவரேனும் அதிதிக்கும் கொடுக்கவேண்டும். (காக்கைகளை திவச நாட்களை தவிர மற்ற நாட்களில் “கா… கா…” என்று கூவி அழைக்கக் கூடாது. சிறு வாழை இலையை நறுக்கி அதில் அன்புடன் வைக்கவேண்டும்!)

எவ்ளோ பெரிய ஆனால் எளிய பரிகாரம் இது தெரியுமா? ஒரு நாலைந்து முறை செய்து பாருங்கள்… உங்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் தாமே நிறைவேறும்!

டிப்ஸ் தொடரும்…

==========================================================

[END]

8 thoughts on “நெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)

  1. வணக்கம் சுந்தர் சார்

    திருநெல்வேலிக்கு உரிய மகத்தவம் அருமை

    நன்றி

  2. நண்பர்க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    நாராயணன்.

  3. சுந்தர்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாமதமாக தெரிவிப்பதற்கு மன்னிக்கவும். நம் தளம் மேன்மேலும் வளர்ந்து பல உள்ளங்களை பண்படுத்தவும், முதன்மையான தளமாக வரவும் வாழ்த்துகிறேன்.

    குன்றத்தூர் முருகன் புகைப்படமும் தாங்கள் பிரசாதம் பெறும் படமும் அருமை.

    நெல்லுக்கு வெளியிட்ட நிமலன் கதை அற்புதம். நெல்லுக்கு வெளியாக அமைந்ததால் திருநெல்வேலி என்று பெயர் ஏற்பட்டது என்று தெரியும். அனால் அதன் பின்னணியில் உள்ள வேதபட்டரின் கதை இப்போது தான் தெரியும். வேதபட்டரின் பக்தியும் எந்த சூழல் வந்தாலும் அதிதி பூஜை செய்யும் அவர் மனப்பக்குவமும் நமக்கும் வரவேண்டும்.

    பரம அன்னம் குறித்த தகவல் அருமை. அடுத்த முறை எங்கள் வீட்டில் பண்டிகையின்போது முயற்சித்து பார்க்கிறேன். காகத்தை மற்ற நாட்களில் கூவி அழைக்கக்கூடாது என்கிற தகவல் புதியது.

    மொத்தத்தில் அருமையான அற்புதமான பதிவு.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  4. பஞ்சாங்கத்தில் மழை பற்றிய தகவல் உண்மையில் வியக்கவைக்கிறது. நம் முன்னோர்கள் எல்லாம் விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலங்களிலேயே நம் முன்னோர்கள் அனைவரும் அனைத்தையும் யூகித்து எழுதி வைத்துள்ளனர் என்றால் அவர்களின் சூட்சும அறிவை என்னவென்று சொல்வது?

    வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று தெரியாது. தற்போது புரிந்தது. நன்றி.

    உண்மையை சான்றுடன் வெளிக்கொண்டுவர தாங்கள் எடுத்தட முயற்சி சுந்தர்ஜி டச் என்று சொல்லலாம்.

    ஸ்கேன் செய்து உதவிய வெங்கட் அவர்களுக்கும் நன்றி.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  5. அட்வான்ஸ் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

    குன்றத்தூர் முருகனை மனம் குளிர்வித்து தீபம் ஏற்றியதற்கு கை மேல் பலன் தங்களுக்கு பிரசாதம் வடிவில்.

    வேத பட்டர் கதை தெரியாத ஒன்று. அவரின் அதிதி பூஜையும், இறைவன் மேல் உள்ள பற்றும் படிக்க படிக்க கண்களில் கண்ணீர் வருகிறது. அதிதி பூஜையின் சிறப்பு என்ன என்பதை இந்த பதிவை படிக்கும் அனைவரும் தெரிந்து கொள்வர்.
    திருநெல்வேலி கோவில் நெல்லைஅப்பர் பற்றிய செய்தியை இப்பொழுது தான் தெரிந்து கொள்கிறேன். எவ்வளவோ முறை திருச் செந்தூர் சென்ற பொழுது அந்த கோவில் வழியாக சென்று இருக்கிறேன். ஆனால் இறைவனை தரிசித்தது இல்லை. இந்த பதிவை படித்த பின் அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

    ஸ்பெஷல் டிப்ஸ் அருமை. நானும் பரம அன்னம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது .இனிமேல் காகத்திற்கு அன்னம் வைத்த பிறகு கா கா என்று அழைக்க மாட்டேன். இது வரை செய்த தவறு களையப்படும்.

    பதிவுகளில் புதுமையை புகுத்தி தெரியாத பல நல்ல விசயங்களை நம் வாசகர்களுக்காக தொகுத்து அளித்து ஒரு முன்னணி நாளேடு போல் நம் தளம் முன்னேறுவதில் மகிழ்ச்சியாக உள்ளது.

    இறைவனும் இறைவியும் அருமை …

    நன்றி
    உமா வெங்கட்

  6. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுந்தர்ஜி
    – தி செந்தில் சிகாமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *