Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, December 8, 2024
Please specify the group
Home > Featured > ஏட்டுச் சுரைக்காய் பசிக்கு உதவும்!

ஏட்டுச் சுரைக்காய் பசிக்கு உதவும்!

print
சென்ற வாரம் அளிக்கப்பட்ட நமது தளத்தின் கூட்டுப் பிரார்த்தனை கிளப் பதிவில், வாசகர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளுடன் பொதுப் பிரார்த்தனையாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் நலம்பெறவும் பிரார்த்தனை கோரிக்கை அளித்திருந்தோம். இந்நிலையில் விரைவில் அளிக்கப்படவுள்ள இந்த வார பிரார்த்தனை கிளப் பதிவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை வாழ் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனையை சமர்பிக்கவுள்ளோம்.

இதற்கிடையே மேற்கு மாம்பலம் காசி-விஸ்வநாதர் கோவிலில் கந்தசஷ்டியின் போது அங்குள்ள மூத்த பசு ஒன்று கன்று ஈன்றதையடுத்து (நவராத்திரியின் போது தான் வேறொரு பசு கன்று ஈன்று அதற்கு யசோதா என பெயரிட்டிருந்தோம்!) அதற்கு வள்ளி என்று பெயரிட்டு வழக்கம் போல விசேஷ கோ-சம்ரோக்ஷனம் சனிக்கிழமை (21/11/2015) மாலை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், மழை வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோ-சம்ரோக்ஷனம் இப்போது வேண்டாம் அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்திவைத்துவிட்டோம். மழை வேறு அவ்வப்போது மிரட்டிக்கொண்டிருந்தது. எனவே எதையும் திட்டமிடமுடியவில்லை.

DSC06989

வரக்கூடிய பிரார்த்தனை கிளப் பதிவை ஓரளவு தயார் செய்து வைப்போம் என்று கருதி பதிவை தட்டச்சு செய்து கொண்டிருந்தபோது ஒரே உறுத்தலாக இருந்தது. ஏனெனில் சுவாமி விவேகானந்தர் கூறியதைப் போல இன்றைய உலகம் காத்திருப்பது பிரார்த்தனைக்கு அல்ல. சேவைக்கு. செயல்வீரர்களுக்கு. பிரார்த்தனையைவிட சேவை புனிதமானது.

‘உன் அண்டைவீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ செய்யும் எந்த இறைவழிபட்டுக்கும் பலனிருக்காது’ என்று கூறுவார்கள். இங்கே நம் மக்கள் பலர் பசியோடிருக்கிறார்களே… நம் பிரார்த்தனை எடுபடுமா?

இதை படிக்கும் அனைவரையும் நாம் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான். உங்கள் BRAIN MEMORY & PHONE MEMORY யில் உள்ள, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஃபோன் செய்து, “ஏதேனும் உதவி வேண்டுமா?” என்று கேளுங்கள். அவர்களுக்கு தேவைப்படுகிறதோ இல்லையோ ஆனால் நீங்கள் அவசியம் கேளுங்கள். இந்த நேரத்தில் நீங்கள் அளிக்கும் MORAL SUPPORT ஐ அவர்கள் மறக்கவே மாட்டார்கள். ஏனெனில் உங்கள் கணிப்பைவிட பாதிப்பு பல இடங்களில் அதிகம்.

நாம் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு உதவும் முன்னர், நம்மை சார்ந்த நம் உறவினர்கள் நண்பர்கள் வாசகர்கள் யாராவது வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருக்கிறார்களா அவர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படுகின்றனவா என்று முதலில் விசாரிப்போம் என்று கருதி, நமக்கு தெரிந்து தாழ்வான வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்த நம் உறவினர்கள் நண்பர்களை வாசகர்களை விசாரித்தோம். பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பு இல்லை. பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று தெரிந்து நிம்மதி பெருமூச்சுவிட்டோம். ஒரு சிலர் பாதிப்பு ஏற்பட்டு வெள்ள நீர் உள்ளே வந்தவுடன், பொருட்களை பத்திரப்படுத்திவிட்டு தங்கள் உறவினர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். நம் வட்டத்தில் யாருக்கும் உடனடி உதவிகள் தேவையில்லை என்று தெரிந்துகொண்டதும் மற்றவர்களுக்காக களமிறங்கினோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் நிவாரண உதவிகளை பொருத்தவரை அரசாங்கமும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் ஏற்கனவே களத்தில் இருந்தாலும் நாம் பிரார்த்திப்பதோடு மட்டுமல்லாமல் நம்மால் இயன்ற வரையில் நேரடியாக நமது சக்திக்கு உட்பட்டு ஏதாவது நிச்சயம் செய்யவேண்டும் என்று தோன்றியது.

“தன்னலமற்ற சேவையே உண்மையான ஆன்மிகம்” என்பதை வலியுறுத்தி வந்த நம் மஹா பெரியவாவின் வார்த்தைகள் அடிக்கடி நினைவுக்கு வந்து சென்றது. என்ன செய்வது எப்படி செய்வது யாருக்கு செய்வது ஒன்றும் புரியவில்லை.

Chennai floods

நண்பர் Mullaivanam Treebank அவர்களை தொடர்புகொண்டு அவரிடம் ஆலோசிக்க முடிவு செய்தோம். முல்லைவனம் அவர்கள் கடந்த வாரம் முழுவதும் வெள்ளம் பாதித்த பல்வேறு பகுதிகளுக்கு மீட்பு குழுவினருடன் சென்று வந்திருக்கிறார். எனவே அவரிடம் கேட்டால் மக்களின் உடனடி தேவை என்ன என்பது புரியும் என்பது நம் கணக்கு.

பால் பாக்கெட்டுகள் + உணவுப் பொட்டலங்கள் தரலாம் என்றால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் மின்வசதி இல்லை. மேலும் பால் என்றால் காய்ச்ச வேண்டும், உணவுப் பொட்டலங்கள் என்றால் உடனடியாக CONSUME செய்யவேண்டும். வைத்து சாப்பிடமுடியாது. தொடர்ந்து இருவரும் ஆலோசித்ததில் சுமார் 200 பேருக்கு ப்ரெட் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்டுகள் வாங்கித் தருவது என்று முடிவானது.

ப்ரெட் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுக்கான ஏற்பாடுகளை உடனடியாக நம்மை செய்யச் சொல்லிவிட்டு தகுந்த பயனாளிகளை தேட திரு.முல்லைவனம் களமிறங்கினார்.

Floods banner curves 3x2 copy

இது போன்ற விஷயங்களுக்கு பயனாளிகளை அடையாளம் கண்டு சரியாக அவர்களிடம் பொருட்களை சேர்ப்பது அத்தனை சுலபம் அல்ல. பொருட்களை வாங்க மக்கள் முண்டியடித்துக்கொண்டு வந்து அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் பலர் மூன்று வேளை சாப்பிட்டே பல நாட்கள் ஆகியிருக்கும் சூழலில் மிகுந்த எச்சரிக்கையுடன் காவல்துறையினரின் பாதுகாப்புடன் தான் பொருட்களை விநியோகிக்கவேண்டும். பல இடங்களில் பயனாளிகள் அதிகம். 2000 பேர்களுக்கும் மேல் உள்ளனர். நமது இலக்கோ 200 பேர் தான். எனவே முல்லைவனம் அவர்கள் அதற்கு ஏற்றார்போல இடத்தை தேர்வு செய்ய புறப்பட்டு சென்றார்.

நாம் இங்கே பிஸ்கட் மற்றும் ப்ரெட் பாக்கெட்டுகள் வாங்க பல பேக்கரிகளை, ப்ரெட் தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டதில் பிரெட்டுக்கு கடும் டிமாண்ட் இருப்பது தெரிந்தது. மேலும் 20 பாக்கெட்டுகளுக்கு மேல் எங்கும் ஸ்டாக் இல்லை. நமக்கு தேவை 200 பாக்கெட்டுகள். கடைசியில் ஒரு வழியாக மேற்கு மாம்பலம் + அசோக் நகர் மெக்ரென்னெட் கிளைகளில் நாம் கேட்ட எண்ணிக்கையில் இரண்டும் கிடைத்தது. இதையடுத்து 200 ப்ரெட் பாக்கெட் மற்றும் 150 பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கிக்கொண்டோம்.

இதற்கான பொருளுதவியை நண்பர்களிடமோ வாசகர்களிடமோ யாரிடமும் நாம் பெறவில்லை. அடுத்த மாத அலுவலக வாடகை உள்ளிட்ட இதர முக்கிய செலவுகளுக்கு நம் தளத்தின் கணக்கில் வைத்திருந்த தொகை + எனது தனிப்பட்ட கணக்கில் இருந்த தொகையி என சேர்த்து இந்த பொருட்களை வாங்கினோம்.

DSC06992 copy

Chennai floods relief 1Chennai floods relief 3Chennai floods relief 6
Chennai floods relief 8Chennai floods relief 7இதற்கிடையே திரு.முல்லைவனம் எப்படியோ அலைந்து திரிந்து உண்மையில் தேவையுள்ள ஒரு இடத்தை தேர்வு செய்துவிட்டார்.

“சைதை பனகல் மாளிகை எதிரே உள்ள குடிசைப் பகுதியில் பாதிப்பு அதிகம். அங்கு உணவுப் பொருட்களை வழங்கலாம் போலீசாரும் பாதுகாப்பளிப்பதாக உறுதியளித்திருக்கின்றனர்” என்றார்.

இதையடுத்து ஒரு கால்டாக்ஸி புக் செய்து, மெக்ரென்னெட் சென்று ப்ரெட் மற்றும் பிஸ்கெட்டுக்களை ஏற்றிக்கொண்டு சைதாப்பேட்டை விரைந்தோம்.

நண்பர் முல்லைவனம் தயாராக இருக்க, போலீசார் பாதுகாப்புடன் பொருட்கள் பத்திரமாக இறக்கப்பட்டு அனைத்தும் விநியோகிக்கப்பட்டது.

(அடையாளத்துக்காக கொண்டு சென்ற பேனரில் ‘ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்’ – குறள் 225 என்கிற திருக்குறளுடன் திருவள்ளுரின் படமும் மஹா பெரியவரின் படமும் மட்டுமே வைத்தோம். நம் பெயரோ நம் தளத்தின் பெயரோ வேறு எதுவும் குறிப்பிடவில்லை.)

உணவுப் பொருட்களை விநியோகிக்கிறார்கள் என்று தெரிந்தபோது குடிசைப் பகுதி மக்கள் பலர் ஓடிவந்தனர்.

போலீஸார் “நிவாரணப் உணவு பொருட்களை மொத்தமாக வண்டியிலிருந்து இறக்கவேண்டாம். முதலில் 50 பேருக்கு கொடுங்கள். கொஞ்சம் கேப் விட்டு 50 50 பேராக கொடுங்கள். அப்போது தான் கூட்டத்தை கண்ட்ரோல் செய்ய முடியும்” என்று அறிவுறுத்தினார்கள். அவர்களின் ஆலோசனைப்படி பகுதி பகுதியாக கொடுக்கப்பட்டது.

சிறுவர்கள் நம்மிடம் பொருட்களை வாங்கும்போது, “இதை உங்களுக்கு கொடுப்பது யார் தெரியுமா?” என்று கேட்டு, “திருவள்ளுவர், காஞ்சி பெரியவர்” என்று பேனரில் உள்ள அவர்களின் படங்களை காட்டி கூறுவோம்.

அனைத்து ப்ரெட் பாக்கெட்டுகளும் சடுதியில் விநியோகித்து முடிந்து போனது.

பொதுமக்களும் தாய்மார்களும் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். போலீசார் உடனிருந்தது மிகவும் உபயோகமாக இருந்தது.

Chennai floods relief 5

Chennai floods relief 9அனைத்தும் முடிந்து நாம் பைக்கில் புறப்பட்டபோது, நம்மிடம் ப்ரெட் மற்றும் பிஸ்கட் பாக்கெட் வாங்கிய ஒரு சிறுவன் நம்மை கடந்து சென்றவன், திரும்ப நம் அருகே வந்து “ரொம்ப தாங்க்ஸ் சார்” என்றான்.

நமக்கு அதைக் கேட்டதும் அத்தனை சந்தோஷம்.

Flood releif 10

“எத்தனாவதுப்பா படிக்கிறே?” கேட்டோம். ஒன்பதாம் வகுப்பு படிப்பதாக சொன்னான். பெயரைக் கேட்டோம். “சாகுல் ஹமீது” என்றான்.

பரவாயில்லை படிப்போடு பண்பும் சேர்த்து கற்றுக்கொண்டிருக்கிறான் சாகுல். அவன் பெற்றோருக்கு நன்றி.

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து இன்னொரு சிறுவனும் ஆர்வத்துடன் எங்கள் அருகே வந்தான்.

“நீ ப்ரெட்டும் பிஸ்கெட்டும் வாங்கிட்டேல்ல…” சந்தேகத்துடன் கேட்டோம். (இல்லையென்றால் வாங்கித்தரும் எண்ணத்துடன்).

“ஒ… வாங்கிட்டேன் அங்கிள்”

“உன் பேர் என்னப்பா?”

“ஜான்!”

பெரியவா சரணம்!

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே... நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே!
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே… நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே!

பெருங்கடலில் ஒரு துளி போலத் தான் நாம் செய்த இந்த உதவிகள் என்றாலும், நாம் அனைவரும் இந்தியர்கள். வேற்றுமையிலும் ஒற்றுமையே நமது பலம் என்பதை நமக்கு ஆணித்தரமாக உணர்த்தியது இந்த நிகழ்வு.

* முகநூலில் நடிகர் சந்தானம் தொடர்பாக நாம் சில நாட்களுக்கு முன்னர் அளித்திருந்த பதிவொன்றில் யாரோ ஒரு நண்பரின் நண்பர் “சந்தானத்தை குறை கூறவேண்டாம்… நீங்கல்லாம் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவமாட்டீர்கள்!’ என்று நமது பதிவின் நோக்கத்தை புரிந்துகொள்ளாமல் நம்மை விமர்சித்திருந்தார்.

இந்த ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமோ இல்லையோ பசிக்கு உதவும் சாரே!!

– Rightmantra Sundar,
Editor, Rightmantra.com

==========================================================

Also check similar articles….

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

எது உண்மையான தர்மம்?

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

“எல்லாம் அவ பாத்துப்பா!”

==========================================================

அன்னதானம் என்கிற அருந்தவம்!

பாத்திரமறிந்து பிச்சையிடு!

==========================================================

 

[END]

 

9 thoughts on “ஏட்டுச் சுரைக்காய் பசிக்கு உதவும்!

  1. ஒரு வாரத்திற்கு பிறகு தங்கள் தளத்தின் பதிவுகளை பார்க்கிறேன். கடந்த ஒரு வாரமாக விடுமுறையில் இருந்ததால் பதிவுகளை படிக்க முடியவில்லை. என்னுடைய கைபேசி மூலம் பதிவை படிக்கலாம் என்றால் தளத்தை ஓபன் பண்ணும் பொழுதே ஆப் ஆகி விடுகிறது.

    தாங்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரு முல்லை வனத்துடன் செய்த உதவிகள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. சத்ய சாய் பாபாவும் பிரார்த்தனையை விட சேவை செய்வதே உன்னதமானது என்று கூறியுள்ளார்.
    பாதிக்கப் பட்ட மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.தாங்கள் மேலும் மேலும் பல உன்னத சேவைகளை செய்ய இறைவன் அருள் புரிவான் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் தங்களின் அளப்பரிய சேவையால் …

    வாழ்க வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

  2. வணக்கம் சுந்தர் சார்

    மிகவும் நெகிழ்ச்சியூட்டும் பதிவு

    நன்றி

  3. Excellent Service Sundar Sir. Hats Off!

    காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது.

    பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
    நன்மை கடலில் பெரிது.

    இந்த பதிவை படித்த பின் இந்த இரு குறள்கள் தான் நினைவில் வருகின்றன. தொடரட்டும் உங்கள் சேவை!

  4. அருமை சுந்தர் ஜி
    தன்னலமற்ற உங்கள் தொண்டு மென்மேலும் தொடரட்டும்
    இயல்பு நிலை திரும்பி எல்லோரும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திப்போம்
    லோகா சமஸ்தா சுகினோ பவந்து!!!

  5. Dear Sundar Sir

    You did a maravalous work. You have fulfilled the will of Mahaperiyava. I am really proud of you. I am the lucky person because through Mahaperiyava i gained you and your friendship.

    KEEP IT UP.

    S. CHANDRASEKARAN

  6. டியர் சுந்தர்.
    தங்கள் இந்த தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்…..!!!!

    தொடரட்டும் உங்களது சேவை…
    பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர இறைவனை வேண்டுகிறேன்.

  7. வாவ். அருமையான அற்புதமான ஆதமார்த்தமான தொண்டு என்பதில் சந்தேகமேயில்லை. ஒவ்வொருவரின் முகத்திலும் குறிப்பாக அந்த குடிசைப் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் முகத்தில் தெரியும் அந்த மகிழ்ச்சி ஒன்றே போதும் தங்கள் தொண்டின் மேன்மையை உணர்த்த.

    சாகுல் ஹமீது + ஜான் + சுந்தர்ஜி – நாம் அனைவரும் சகோகாரர்கள். நம்மில் ஒருவருக்கு ஒரு துன்பம் என்றால் மற்றவர்கள் தோள் கொடுக்க தயாராய் இருக்கிறோம் என்பதை உணர்த்தியது.

    பேனரில் பயன்படுத்தியுள்ள வள்ளுவர் மற்றும் மகா பெரியவாவின் புகைப்படங்கள் அருமை. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் குறள் எல்லாவற்றுக்கும் சிகரமாக இருக்கிறது.

    உங்களுக்கும் உறுதுணையாய் இருந்த முல்லைவனம் அவர்களுக்கும் நன்றி!

    பெரியவா கடாக்ஷம்

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  8. சிகரமான குறளை வைத்து இரண்டு சிகரங்களின் பானரோட ஹிந்து இஸ்லாம் கிறிஸ்டியன் என்று எல்லோருடனும் எல்லோருக்கும் பசியாற செய்த தங்களின் உதவியை யாராலும் மறக்கமுடியாது .

    வாழ்க வளமுடன் .

    நன்றி
    சோ ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *