Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, February 22, 2024
Please specify the group
Home > Featured > குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்…!

குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்…!

print
வாசகர்களுக்கு வணக்கம். தீபாவளி விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்களும் அலுவலகத்திற்கு நீண்ட விடுப்பு எடுத்திருந்தவர்களும் இன்று நிச்சயம் வந்திருப்பீர்கள். தீபாவளி பரபரப்பிலும் கூட நம் தளம் இடைவிடாமல் இயங்கி பல பதிவுகளை அளித்திருப்பதை பார்த்திருப்பீர்கள். சென்ற வாரம் அளிக்கப்பட்ட பதிவுகள் அனைத்தையும் தவறாமல் பார்க்கவும். ஒவ்வொரு பதிவும் அன்பும் அக்கறையம் கொண்டு உங்களுக்காக தயாரிக்கப்பட்டவை.

நமது தீபாவளி முன்னெப்போதையும் விட அருமையாக ஆத்மார்த்தமாக கழிந்தது. தீபாவளியன்று குன்றத்தூரில் திருமுறை விநாயகருக்கு நடைபெற்ற அபிஷேகத்திற்கு வந்திருந்த நண்பர்களுக்கும் நமது இதர தீபாவளி கொண்டாட்டங்களில் (கைங்கரியங்கள்) உடனிருந்த நண்பர்களுக்கும் அது தெரியும். தீபாவளி கொண்டாட்ட பதிவுகள் இன்னும் இரண்டு பாக்கியிருக்கிறது. தீபாவளி தான் முடிந்துவிட்டதே என்று தலைப்பை பார்த்து தவற விட்டுவிடாதீர்கள்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தை உலுக்கி வரும் மழையினால் சென்னையில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிராட்பேண்ட் இணைப்புக்கள் பழுதடைந்துள்ளன. மின்சாரம் விட்டு விட்டே வருகிறது. எனவே பதிவுகளை தயார் செய்ய தாமதமாகிறது. இருப்பினும் இந்த வாரம் முழுக்க பிரத்தேக அசத்தலான பதிவுகளுடன் சந்திக்க முயற்சிக்கிறோம்.

ஆவலோடு காத்திருக்கும் உங்களுக்காக நாம் படித்து ரசித்த கதை ஒன்றை இங்கே பகிர்கிறோம். தினமலர் ஆன்மீக மலரில் வெளியான தொடர் ஒன்றில் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் எழுதிய கதை இது. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் மிகச் சிறந்த ஆன்மீக எழுத்தாளர். அடக்கமே உருவானவர். அவரை பற்றி நேரம் வரும்போது நிறைய பகிர்கிறோம்.

இது போன்ற கதைகள் நம் தளத்தில் நிறைய வெளிவந்துள்ளன. ஆனால் இந்த கதையின் மூலம் நீங்கள் உணர்ந்துகொண்டது என்ன என்பதை ஒரு சில வாக்கியங்களில் தெரிவிக்கவும்.

========================================================

வள்ளி வரப்போறா… வெள்ளி மணித் தேரா!

அப்புறம் இன்னொரு முக்கிய விஷயம். மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் பவானி என்கிற பசு கன்று ஈன்றதையும், அதற்கு யசோதா என்று பெயரிட்டு கோ-சம்ரட்சணம் செய்ததையும் பார்த்திருப்பீர்கள். தற்போது  மற்றுமொரு நல்ல செய்தி…. அங்குள்ள பாஞ்சாலி என்கிற மூத்த பசு சமீபத்தில் பெண் கன்று ஒன்றை ஈன்றிருக்கிறது. கந்தசஷ்டி நடைபெறும் சமயம் பிறந்துள்ளமையால் ‘வள்ளி’ என்று பெயர்  சூட்டியிருக்கிறோம். பசு கன்று ஈன்ற செய்தியை கேட்பது மிக மிக விசேஷம். பார்ப்பது அதையும்விட விசேஷம். கன்று ஈன்ற பசுவுக்கு உணவிடுவது அதையும் விட விசேஷம்.

Valli 1
தாயின் காலடி நிழலில் வள்ளி!

Valli 2வள்ளி பிறந்துள்ளதையடுத்து விசேஷ கோ-சம்ரட்சணம் வரும் சனிக்கிழமை (21/11/2015) மாலை 6.30 மணியளவில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெறவிருக்கிறது. வழக்கம் போல கோ-சாலை பணியாளர்கள் கௌரவிக்கப்படவிருக்கிறார்கள். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படவிருக்கிறது. வாசகர்கள் வந்திருந்து நிகழ்வை சிறப்பிக்க வேண்டுமென என கேட்டுக்கொள்கிறோம்.

========================================================

ன்பு ஒன்று தான் இறைவனுக்கு பிரதானம். மற்றதெல்லாம் அதற்கு பிறகு தான். சாதாரண மனிதர்களுக்கே அவ்வப்போது அகந்தை தோன்றும் போது இறையருள் பெறும் அடியார்களுக்கு அகந்தை தோன்றுவது இயல்பு. சாதாரண மானிடர்கள் அதற்குரிய விலையை கொடுத்தபின்னர் தங்கள் தவறை உணர்வார்கள்.  ஆனால், இறையடியார்களை பொருத்தவரை இறைவன் ஏதேனும் திருவிளையாடல் நிகழ்த்தி அதை அகற்றுவான். நமது பக்தி இலக்கியங்களில் இந்த ‘கர்வ பங்கம்’ பெரும் பங்காற்றியிருக்கிறது.

நாராயணீயத்தை இயற்றிய நாராயண பட்டத்திரி மற்றும் மெய்யடியார் பூந்தானம் ஆகியோர் வாழ்வில் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் ஒன்றை பார்ப்போம்.

அன்பெனும் அகல்விளக்கை ஏற்றி வைத்தேன்….

– திருப்பூர் கிருஷ்ணன் | தினமலர் – ஆன்மீக மலர்

குருவாயூரில் திருவிழாக் காலம். கண்ணக் கடவுள் உற்சவ மூர்த்தியாக வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். பக்தர்களோடு பக்தர்களாக நாராயண பட்டதிரியும் பூந்தானமும் முன்வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். இருவரும் பக்தியில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர்.

பட்டதிரி மெத்தப் படித்த மேதாவி. நாராயணீயம் என்ற உன்னதக் காவியத்தை எழுதிய புலவர். பூந்தானம் படிப்பறிவற்றவர். “ஞானப்பானை’ என்ற தத்துவ பக்திக் கவிதைகளின் ஆசிரியர். பூந்தானத்திற்கு பட்டதிரியிடம் மிகுந்த மதிப்புண்டு. பட்டதிரி பெரும் கல்வியாளர் அல்லவா? கல்வியறிவற்ற தாம் அவரிடமிருந்து நல்லுரைகள் பெற்று அவற்றின்படி நடக்க வேண்டும் என்று அடக்கமே வடிவான பூந்தானம் நினைப்பதுண்டு.

Guruvayoorappan 3பட்டதிரி பெரும் பக்தராக இருந்தாலும் பூந்தானத்தைக் குறித்து, படிப்பில்லாதவர் அவர் என்று பட்டதிரியிடம் இளக்காரம் தோன்றுவது உண்டு. கண்ணன் இரண்டு மாபெரும் பக்தர்களின் உன்னத பக்தியையும் ஏற்றான். என்றாலும் பட்டதிரியின் கல்விச் செருக்கைச் சற்றுத் தட்டிவைக்கத் திருவுளம் கொண்டான்.

உற்சவ மூர்த்தியைத் தோளில் சுமந்திருந்த அன்பர்கள் பல்லக்கை வெளியே கொண்டுவர முனைந்தார்கள். கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ ஏதோ இடித்தது. எங்கே எது இடித்துத் தடுக்கிறது என்று பல்லக்குத் தூக்கியவர்கள் ஆராய்ந்தார்கள். அவர்கள் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை.

அப்போது பட்டதிரியின் அருகே நின்றிருந்த பூந்தானம் பரபரப்படைந்தார். உற்சவ விக்கிரகத்தையே கூர்ந்து பார்த்த அவர் திடீரென்று ஒரு விந்தையான வாக்கியத்தைச் சொன்னார். அதைக் கேட்டு எல்லோரும் திகைத்தார்கள். பட்டதிரி பூந்தானத்தைப் பார்த்து ஏளனப் புன்முறுவல் பூத்தார்.

எதையும் கவனியாத பூந்தானம், மீண்டும் அதே வாக்கியத்தைச் சொன்னார். அவர் மறுபடி அந்த வாக்கியத்தைச் சொல்லி முடிப்பதற்குள் மூல விக்கிரகத்திற்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் கண்களில் கண்ணீர் வழிய, உற்சவ விக்கிரகத்தை நோக்கி ஓடி வந்தார்.

விம்மலுடன், பூந்தானம் சொன்ன வாக்கியத்திற்கு வலுச்சேர்க்கிற வகையில் தான் கண்ட காட்சியை அவரும் சொன்னார். கூட்டம் அளவற்ற திகைப்பில் ஆழ்ந்தது.

ஒருசில நாட்கள் முன்பு…

குருவாயூர் சன்னிதியில் நாராயணீயத்தைப் பிரவசனம் செய்து கொண்டிருந்தார் பட்டதிரி. பக்தர்கள் அந்தக் கவிச்சுவை நிறைந்த சம்ஸ்க்ருத ஸ்லோகங்களைக் கேட்டுப் பரவசமடைந்தார்கள். அன்றைய பிரவசனம் முடிந்ததும் பட்டதிரி வீட்டிற்குப் புறப்பட்டார்.

அப்போது அவர் அருகே பவ்வியமாய் வந்து நின்றார் பூந்தானம். பட்டதிரி விழிகளில் ஏளனம்.

“என்ன பூந்தானம்? என் நாராயணீயத்தைக் கேட்க வந்தாயா? உனக்கு அதெல்லாம் எங்கே புரியப் போகிறது? படித்தவர்களுக்கான நூல் அல்லவா அது?”

“புரிந்தால் என்ன, புரியாவிட்டால் என்ன சுவாமி? குருவாயூரப்பன் புகழைச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு என் காதெல்லாம் தித்திக்கிறது. நான் தங்களிடம் ஆன்மிக விஷயமாக ஒரு சந்தேகம் கேட்கவே இன்று காத்திருந்தேன்!”

“என்ன சந்தேகம்? கேள்! எதுவானாலும் நான் விளக்கம் தருகிறேன்!”

“சுவாமி! நான் கண்ணை மூடிக் கண்ணனைத் தியானம் செய்கிறேன். சிலநேரம் அவனது மயில் பீலி அசைவது மனக் கண்ணில் தெரிகிறது. சிற்சில நேரம் அவனது புல்லாங்குழலின் காட்சி கிட்டுகிறது. அவனுடைய அருள்பொங்கும் தாமரைக் கண்களை ஒருநாள் மனக்கண்ணால் பார்த்து உருகினேன். ஆனால், சுவாமி, என்னவோ, அவனது முழு உருவையும் சேர்த்துப் பார்க்கும் பாக்கியம் மட்டும் கிட்டுவதில்லை. என் கண்ணனை முழு உருவிலும் பார்க்க வேண்டுமானால் என்ன வடிவத்தில் அவனைத் தியானம் செய்வது நல்லது? தாங்கள் தான் அறிவுறுத்த வேண்டும்!”

குழந்தைபோல் வெகுளியாக பூந்தானம் கேட்ட கேள்வியைப் பட்டதிரி உள்வாங்கிக் கொண்டார். குருவாயூரப்பனை முழு உருவில் தரிசிக்க விரும்புகிறானாமே படிப்பறிவில்லாத இந்தப் பாமரன்! இவனுக்கு என்ன உருவில் தியானம் செய் என்று நான் அறிவுறுத்துவது? இவனுக்கு பக்தி எதற்கு? கல்வியறிவற்ற இவனைப் போன்றவர்கள் மாடு மேய்க்கத்தான் லாயக்கு!” இப்படி நினைத்தார் பட்டதிரி.

Guruvayoorappan 2கண்ணனே மாடு மேய்த்தவன் தான் என்பதும் மாடுமேய்த்த கண்ணன் தான் பண்டிதர்கள் போற்றும் கீதையை உரைத்தவன் என்பதும் அந்த நேரத்தில் அவருக்கு மறந்து போயிற்று. நகைத்தவாறே அவர் பூந்தானத்திடம் சொன்னார்:

“முழு உருவையும் தரிசிக்க வேண்டுமானால் உனக்கு அதிகம் பழக்கமான உருவில் குருவாயூரப்பனை தியானம் செய்யேன்! எருமை மாட்டு வடிவில் கூடக் கண்ணனை நீ தியானம் செய்யலாம்”. அலட்சியமாக இப்படிச் சொல்லிவிட்டு பட்டதிரி சென்றார். ஆனால் பூந்தானம் பட்டதிரியின் மேல் அளவற்ற மரியாதை கொண்டவராயிற்றே? தன்னைக் கிண்டல் செய்யும் விதத்தில் தான் பட்டதிரி அப்படிச் சொன்னார் என்ற உண்மை பூந்தானத்திற்கு உறைக்கவில்லை. அவர் பட்டதிரியின் வாக்கை வேதவாக்காக ஏற்றார். அன்று தொட்டுக் கண்ணனை எருமை மாட்டு வடிவில் தியானம் செய்யலானார்.

கண்ணனுக்கு அளவற்ற ஆனந்தம். இருக்காதா பின்னே! அவன் எடுத்த பத்து அவதாரங்களில் மீனாகவும், ஆமையாகவும், பன்றியாகவுமெல்லாம் உருக் கொண்டானே தவிர எருமை மாடாக உருக் கொள்ள சந்தர்ப்பமே நேரவில்லையே! எருமை மாடும் அவன் சிருஷ்டியில் ஒன்று தானே! இதோ! ஓர் அபூர்வ வாய்ப்பு… தவற விடக் கூடாது இதை!

பூந்தானத்தின் மனத்தில், சேற்றைப் பூசிக் கொண்டும் கொம்புகளை அசைத்துக் கொண்டும் வாலைச் சுழற்றிக் கொண்டும் கம்பீரமான எருமை மாடாகக் காட்சி தரலானான் கண்ணபிரான். ருக்மிணியும் சத்யபாமாவும் வேறுவழியின்றி அவசர அவசரமாக பெண் எருமைகளானார்கள்!

சேற்றிலும் சகதியிலும் கண்ணன் தன் சகதர்மிணிகளோடு ஆனந்தமாக விளையாடுவதை மனக் கண்ணால் கண்ட பூந்தானம் மெய்மறந்தார். எருமை வடிவில் கண்ணனை தரிசித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

உற்சவ மூர்த்தி நடைதாண்டி வெளியே வர இயலாமல் எது தடுக்கிறது? காரணம் தெரியாமல் பல்லக்குத் தூக்கியவர்கள் தவித்தபோது பூந்தானம் உரத்துக் குரல் கொடுத்தார். கொஞ்சம் சாய்த்துப் பல்லக்கை எடுங்கள். மேலே எருமை மாட்டின் வாலாலோ, உடலாலோ எந்தப் பிரச்னையுமில்லை. கொம்புதான் முட்டுகிறது. அதனால் தான் உற்சவ விக்ரகம் வெளியே வர இயலாதிருக்கிறது. சாய்த்து எடுத்தால் வெளியே கொண்டுவந்து விடலாம்!

“இதென்ன பைத்தியக்காரத் தனமான பேச்சு! மயில் பீலியும் புல்லாங்குழலும் காதில் குண்டலங்களும் தலையில் மணி மகுடமுமாய் என்னப்பன் குருவாயூரப்பன் பல்லக்கில் எழிலோவியமாகக் காட்சி தருகிறான்! பூந்தானம் எருமை மாட்டை வர்ணிக்கிறாரே!”

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

பட்டதிரி நகைத்தபோது மூல விக்ரகத்துக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் ஓடோடி வந்தார். உற்சவ விக்கிரகத்தைப் பார்த்துப் படபடவெனக் கன்னத்தில் போட்டுக் கொண்டார். பிறகு சொல்லலானார்:

“அன்பர்களே! நான் அர்ச்சனை செய்துகொண்டே இருந்தபோது குருவாயூரப்பனின் மூல விக்ரகம் திடீரென ஒரு மகிஷமாக (எருமை) மாறியது. தன் எருமைக் குரலில் “என் பக்தன் பூந்தானம் என்னை, நாராயண பட்டதிரி சொன்ன அறிவுரைப்படி, எருமை வடிவில் தியானம் செய்கிறான். அதனால் தான் உனக்கு இந்தக் காட்சி கிட்டியிருக்கிறது. உற்சவ மூர்த்தியைச் சுமந்து செல்பவர்களிடம் இதைத் தெரிவி என எனக்கு உத்தரவிட்டார்! பூந்தானம் சாதாரண பக்தரல்ல. அவர் கடவுளைக் கண்ட மகான்!”

அர்ச்சகர் பூந்தானத்தின் கால்களில் கண்ணீர் பெருக விழுந்து வணங்கினார். இதொன்றையும் கவனியாத பூந்தானம், ஒரே ஒரு கொம்புதான் மேலே இடிக்கிறது. இன்னொரு கொம்பு இடிக்கவில்லை. விரைவில் உற்சவ மூர்த்தியை வெளியே கொண்டு வாருங்கள்!” என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்! அவர் சொன்னபடியே சாய்த்து எடுத்துவந்தவுடன் பல்லக்கு எளிதாக வெளியே வந்துவிட்டது.

மறுகணம் தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. எல்லோரும் கேட்கும் வகையில் உற்சவ விக்கிரகத்திலிருந்து “ம்மா!” என்ற எருமை மாட்டின் கம்பீரக் குரல் எழுந்து அந்தப் பிரதேசமெங்கும் எதிரொலித்தது!

எருமை மாட்டு வடிவில் கண்ணனைக் காணாவிட்டாலும் அந்த சப்தத்தைக் கேட்ட பட்டதிரி மெய்சிலிர்த்தார்.

கண்களில் கண்ணீருடன் உற்சவ மூர்த்தியை வணங்கியவர், தான் சொன்னதை மனப்பூர்வமாக ஏற்று எருமை வடிவில் கண்ணனைக் கண்ட மகான் பூந்தானத்தின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

“படிப்பால் என்ன பயன்! பக்தியல்லவா முக்கியம்! ஏராளமான விஷயங்களைத் தெரிந்துகொண்டதற்காக பகவான் காட்சி கிடைத்துவிடுமா என்ன! உள்ளார்ந்த பக்திக்கல்லவோ என் கண்ணன் உருகுவான்! பஞ்சாங்கத்தில் என்றைக்கு மழைவரும் என்று போட்டிருக்கும். ஆனால், பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராதே! நான் படிப்பறிவுள்ள பஞ்சாங்கம் மட்டும்தான். பூந்தானமே! நீரல்வோ கண்ணனை நீராட்டிய பக்தி மழை!”

பட்டதிரியின் உருக்கமான பேச்சை பூந்தானம் கவனித்தாய்த் தெரியவில்லை. “ஆகா! என் குருவாயூரப்பன் என்ன அழகாக வாலை அசைக்கிறார்!” என மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

=============================================================

நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 21

ரிஷப ராசி அன்பர்கள் கவனத்திற்கு…

ரிஷப ராசி வாசகர்கள் (கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்) ஆண்டுக்கு ஒரு முறையாவது குருவாயூர் சென்று வருவது நல்லது. அவர்களது கிரக பலன்கள் அனைத்தும் அதற்கு பிறகு சாதமாக மாறும் வாய்ப்புள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குருவாயூர் செல்ல முடியாதவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோ-தரிசனம் செய்து பசுவுக்கு மஞ்சள் குங்குமம், பூக்கள் சூட்டி, வாலை தொட்டு வணங்கி வரவேண்டும்.

Ko madha pooja

வீட்டிலும் குருவாயூரப்பன் படத்தை வைத்து வணங்கி வரவேண்டும். இப்படி செய்தால் மகாவிஷ்ணுவின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். அவர்கள் துன்பங்கள் யாவும் முடிவுக்கு வரும்.

டிப்ஸ் தொடரும்…

==========================================================

Also check :

உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

=============================================================

Also check :

ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)

பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)

விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)

=============================================================

பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!

மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !

திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)

ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

=============================================================

[END]

3 thoughts on “குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்…!

 1. பதிவின் தலைப்பே நம்மை குருவாயூருக்கு அழைத்து செல்கிறது

  பாஞ்சாலிக்கு வள்ளி பிறந்த சுப செய்தியை நம் தளம் மூலம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நம் தளம் ஆரம்பித்து 2013 முதல் வேலன், தேவகி, கண்ணன், நந்தினி, யசோதை மற்றும் வள்ளி ஆறு கன்றுகள் காசி விஸ்வநாதர் கோவிலில் பிறந்து விட்டது. தாங்களும் ஒவ்வொரு முறையும் கன்று பிறக்கும் பொழுது கோ சம்ரோக்சனம் என்னும் மிகப் பெரிய கைங்கர்யம் நம் தளம் சார்பாக செய்து அனைத்து வாசகர்களும் இதன் அருமையை பற்றி தெரிய வேண்டும் என்று பதிவாக எழுதி விட்டீர்கள் .
  பூந்தானம் இறைவன் மீது கொண்ட அளவிட முடியாத பக்தியை கண்டு பரவசமாக உள்ளது. தனது பக்தனின் ஆசையை நிறைவேற்றுகிறார் கண்ணன். மிகவும் அழகிய மனதில் நிற்கும் கதையை தொகுத்து அளித்ததற்கு நன்றி . இந்த கதை தனது பக்தனின் பக்திக்கு கிடைத்த உன்னத பரிசு, நாமனும் இறைவனிடம் அன்பு செலுத்தி இறை அருள் பெறுவோம்
  ரிஷப ராசி காரர்களின் டிப்ஸ் அருமை. டிப்பில் உள்ள ரிஷபத்தை பார்க்கும் பொழுது கோதண்டராமர் கோவில் பசு என நினைக்கிறேன். 2014 வைகுண்ட ஏகாதேசி யில் அந்த கோவிலுக்கு சென்ற பொழுது அந்த இடத்தை பார்த்த ஞாபகம் வருகிறது
  வாழ்க … வளமுடன்
  நன்றி
  உமா வெங்கட்

 2. டிப்ஸ் ரொம்ப அருமை.
  படிக்க படிக்க பூந்தானம் அவர்கள் தான் என் கண்ணுக்கு தெரிந்தார் //. குருவயுரப்பனின் தரிசனம் கிட்டிய அவர் பாதத்தை வணங்கிய பட்டதிரியும் நம் கண்ணுக்கு எருமையாக தான் தெரிகிறார்.

  வள்ளி மற்றும் பசு சம்பத்தப்பட்ட நல்ல காரியங்களில் பங்கேற்கும் நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் .

  தங்களின்

  சோ. ரவிச்சந்திரன்

 3. தீபாவளி பரபரப்பில் தளத்தில் பதிவுகள் எங்கே இருக்கப் போகிறது என்று நினைத்து வந்து பார்த்தால் மிரண்டுவிட்டேன். திகட்ட திகட்ட தீபாவளி விருந்தை எங்களுக்கு வைத்திருக்கிறீர்கள். அதற்கு முதலில் நன்றி.

  கந்த சஷ்டியில் பிறந்த வள்ளிக்கு மிக பொருத்தமான பெயர். அழகான பெயர். வள்ளியின் அழகு கண்களை பறிக்கிறது.

  திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் கட்டுரைகளை நானும் பத்திரிக்கைகளில்லும் மாத வார இதழ்களிலும் படித்திருக்கிறேன். உண்மையில் அற்புதமான ஒரு எழுத்தாளர்.

  பூந்தானத்தின் பக்தி நமக்கெல்லாம் வருமா? கண்ணனின் அருள் நமக்கு கிடைக்குமா?

  அருமையான ஒரு கதையை பகிர்ந்தமைக்கு நன்றி.

  இரண்டு படங்களும் WONDERFUL. எருமை மாட்டின் பின்னணியில் இருக்கும் குழலூதும் கண்ணனின் படம் அருமை. வேறென்ன சொல்ல?

  – பிரேமலதா மணிகண்டன்,
  மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *