Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > ‘அறுமுகனை துதிப்பதால் கிடைக்கக்கூடிய ஆறு பேறுகள்’ – Rightmantra Prayer Club

‘அறுமுகனை துதிப்பதால் கிடைக்கக்கூடிய ஆறு பேறுகள்’ – Rightmantra Prayer Club

print
முருகனின் திருவவதார நிகழ்வு படிக்க படிக்க ஆனந்தம் அளிப்பது. அதி அற்புதமானது. ஆறு விதமான பேறுகளை தரவல்லது. கந்தசஷ்டி துவங்கி நடைபெற்று வருவதையொட்டி கார்த்திகேயனின் திருவவதாரத்தை இந்த பதிவில் பார்ப்போம்!

சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றிய தீப்பொறிகளிலிருந்து கார்த்திகேயன் தோன்றுதல்
சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றிய தீப்பொறிகளிலிருந்து கார்த்திகேயன் தோன்றுதல்

சிவ-பார்வதி கல்யாணம் நடந்து பல நாட்களாகி விட்டன. குமரன் அவதாரம் நிகழவில்லை. சூரபன்மனின் கொடுமை தாங்கமுடியாமல் சென்றுகொண்டிருந்தது. தேவர்கள் சிவபெருமானின் பாதம் பணிந்தனர்.

தேவர்களின் பால் இரக்கங்கொண்டு சிவபெருமான்,”தேவர்களே! இனியும் துன்புறாதீர்கள்; புதல்வனைத் தருவோம்” என்று அருளிச் செய்து, ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம் என்னும் ஐந்து முகங்களோடு ஞானிகள் மட்டுமே தியானம் செய்யும் ஆறாவது முகமாகிய அதோமுகத்தையும் சேர்த்து ஆறு திருமுகங்களோடு விளங்கினார்.

தேவர்கள் அனைவரும் அந்த உருவங்கண்டு அற்புதமடைய அந்த ஆறுமுகங்களின் நெற்றிக் கண்களிலிருந்தும் ஆறு தீக்கொழுந்து எங்கும் பரவியது. அந்த தீப்பொறிகள் எல்லோருக்கும் அச்சத்தை ஊட்டினாலும், ஒரு உயிரைக் கூட ஒழிவு செய்யவில்லை என்று கச்சியப்பர் சொல்லுகிறார்.

தேவர்களெல்லாம் ஓலமிட்டார்கள், ”ஐயனே! நாங்கள் சூரனை ஒழித்தற்கு தேவரீரிடம் கேட்டது தேவரீர் போன்ற ஒரு குழந்தை. ஆயின் தேவரீர் எழுப்பியதோ அச்சமூட்டும் தீ. நாங்கள் இனி எப்படி உய்வோம்,” என்றார்கள்.

திருமாலும், பிரம்மனும் ஏனைய தேவர்களும் இப்படி விண்ணப்பித்துக் கொண்டபோது, “நீங்கள் பயப்படவேண்டாம்” என்று அபய ஹஸ்தம் காட்டியருளினார் சிவபெருமான்.

தேவர்களுக்கு அபயமளித்த சிவபெருமான் ஒரே முகத்தோடு பண்டு போலக் காட்சியளித்தார். முன் ஆறுநெற்றிக் கண்களினின்றும் தோன்றி வானிலும் நிலத்திலும் பரவிய தீப்பொறிகளின் செறிந்த தீப்பிழம்பினைத் தன்முன் வருமாறு நினைத்தருளினார். அவ்வளவில் அத்தீப்பிழம்பு ஆறுத் தீப்பொறிகளாய் இறைவர்முன் வந்தன. சிவபெருமான் வாயுவையும் அக்கினியையும் நோக்கி இத்தீப்பொறிகளை நீவீர் இருவரும் சுமந்து சென்று கங்கையில் விட்டால், அவள் அவைகளைச் சரவணத்தில் விடுப்பாள் என்று கூறியருளினார்.

அவர்கள் இருவரும் இவற்றை எப்படி நாங்கள் தாங்கிச் செல்வோம் என்று அச்சத்துடன் விண்ணப்பித்தனர். இறைவனார் ”அத்தீப்பொறிகளை தங்கி செல்லும் வலிமை உங்களுக்கு ஏற்படுக” என்றருள் செய்தலும், அவர்கள் இருவரும் அவற்றை தாங்கிச் சென்று கங்கையாற்றில் விடுத்தனர். தீப்பொறிகளின் வெம்மை தாங்காது கங்கை நீர் வற்றியது. சிவபெருமானது திருவருள் முறைமையினை அறிந்து கங்கையானவள் அப்பொறிகளை சரவணம் என்னும் பொய்கையில் சேர்த்தனள். கங்கையும் வறத்தலின்றி முன்போல் ஆகியது. கங்கையானவள் அத்தீப்பொறிகளை சரவணத்தில் விட்டவுடன் குமரக் கடவுளின் திருஅவதாரம் நிகழ்ந்தது.

அருவமும் உருவமும் ஆகி, ஆதியும் அந்தமும் அற்றதாகி, ஒன்றாகியும் பலவாகியுமாகிப் பரப்பிரம்மமுமாகி நின்ற (சிவபெருமானின்) சோதியின் திரட்சியே ஒரு திருமேனியாக கொண்டு, கருணைமிக்க ஆறு திருமுகங்களும், திருக்கரங்கள் பன்னிரண்டுந் தாங்கி ஒப்பற்ற அழகுடைய முருகன் அங்கு உலகத்தவர் யாவருமுய்ய திரு அவதாரம் செய்தருளினார்.

Lord Balamurugan“அருவமும் உருவும் ஆகி
அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்க ளாரும்
கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்(கு)
உதித்தனன் உலகம் உய்ய”

இத்திருப்பாடலில் ஈற்றடிக்கு ஒரு திருமுருகன் வந்து அங்கு உதித்தனன் என்றும், வந்ததுபோல் உதித்தனன் என்றும் இருவகையாகப் பொருள் கொள்ளலாம். ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ், செல்வம், ஞானம், வைராக்கியம் என்ற ஆறு குணங்களுமே முருகனுக்கு ஆறு முகங்களாக அமைந்தன என்கிறார் கச்சியப்பர். ஆக… அறுமுகனை துதிப்பதால் கிடைக்கக்கூடிய ஆறு பேறுகள் இவை என்றால் மிகையாகாது.

வேதங்களாலும், மனத்தினாலும்  வாக்கினாலும் அளக்க முடியாத நிமலன், ஆறுமுகங்களுடன் சரவணப் பொய்கையில் தாமரை மலரில் வீற்றிருந்தான்.

மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்கொ ணாமல்
நிறைவுடன் யாண்டு மாகி நின்றிடும் நிமல மூர்த்தி
அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின்
வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந் தருளி னானே”

தேவர்களும், திருமாலும் கார்த்திகைப் பெண்கள் அறுவரையும் அழைத்து அம்முருகனுக்கு நாள்தோறும் அவர்களுடைய திருமுலைப் பாலையூட்டிப் போற்றுதல் செய்யுமாறு பணித்தார்கள். அவ்வண்ணமே அவர்கள் பாலூட்டுவதற்கு எளிதாக ஆறு குழந்தைகளாக ஆனான் முருகப் பெருமான். அந்த ஆறுக் குழந்தைகளும் அற்புதமாக விளையாடியதைக் கச்சியப்பர் அனுபவிக்கிறார்.

”ஆடஓர் உருவம் செங்கை அறையஓர் உருவம் நின்று
பாடஓர் உருவம் நாடிப் பார்க்கஓர் உருவம் ஆங்கண்
ஓடஓர் உருவம் ஓர்பால் ஒளிக்க ஓர்உருவம் யாண்டும்
தேடஓர் உருவ மாகச் சிவன் மகன் புரித லுற்றான்”

ஒரு குழந்தை தவழ்ந்து செல்கிறது. ஒரு குழந்தை தளர்நடை பயிலுகிறது. ஒரு குழந்தை எழுந்து நிற்க முடியாமல் கீழே விழுகிறது. ஒரு குழந்தை உட்கார்ந்திருக்கிறது. ஒரு குழந்தை சரவணப் பொய்கை நீரை கலக்கி விளையாடுகிறது.ஒரு குழந்தை தாய் மடியில் அழகாக அமர்ந்திருக்கிறது. இவ்வாறு ஒருவனே பல குழந்தைகளாக விளையாடும் பான்மையைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து இவன் பெருங்கடவுள் என்று போற்றினார்கள்.

– கந்தபுராணம்

=============================================================

சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…

Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

=============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : போரூர் பாலமுருகன் கோவிலின் அர்ச்சகர் திரு.நித்யானந்த குருக்கள் (40) அவர்கள்.

Porur Balamurugan temple gurukkalஇவரது தந்தை திரு.துரைசாமி குருக்கள். அவர் ஏற்கனவே நமது பிரார்த்தனை கிளபுக்கு தலைமையேற்றிருக்கிறார். இவர்களின் பூர்வீகம் மயிலாடுதுறை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாலமுருகனுக்கு தந்தை வழி நின்று பூஜை செய்துவருகிறார். இவர், இவரது தந்தை, சித்தப்பா, பெரியப்பா என அனைவரும் பரம்பரை பரம்பரையாக இந்த புனிதத் தொண்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த ஆண்டு கந்தசஷ்டியின் போது ஆறு நாட்களும் இங்கு வந்து முருகப் பெருமானின் வெவ்வேறு அலங்காரங்களை தரிசித்து அதை பற்றி நமது வேல்மாறல் தொடரில் நாம் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் கந்தசஷ்டி தரிசனம் செய்ய விரும்பி முதல்நாளான நேற்று பாலமுருகன் திருக்கோவில் சென்றிருந்தோம். அப்போது துரைசாமி குருக்கள் மற்றும் நித்யானந்த குருக்கள் இருவரையும் சந்திக்க நேர்ந்தது. நம்மை வரவேற்றவர்கள் சிறப்பு தரிசனம் செய்வித்தார்கள்.

Porur Balamurugan temple

திரு.நித்யானந்தன் ஆரத்தி காண்பிக்கும்போது தான் அவரை இந்த வார பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்கச் செய்யவேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. முருகன் திருவுள்ளம் அதுவாக இருக்கும் போல. ஏனெனில், நேற்று மாலை வரை இந்த வார பிரார்த்தனை கிளப்புக்கு யாரை தலைமை ஏற்கச் செய்வோம் என்று நமக்கு தெரியாது.

Arumugan

நமது பிரார்த்தனை கிளப் பற்றி திரு.நித்யானந்தன் அவர்களிடம் எடுத்துக் கூறி இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அவரது தந்தை இதற்கு முன்பு நமது பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றது குறித்து அவரிடம் கூறி நினைவுபடுத்தி, தந்தைக்கு அடுத்து தனயனின் முறை… எங்கள் பிரார்த்தனையை குமரக் கடவுளிடம் எடுத்துச் சென்று அதை நிறைவேற்ற ஆவண செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். நிச்சயம் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களுக்கு அர்ச்சனை செய்து பிரார்த்திப்பதாக கூறியிருக்கிறார். நாமும் அது சமயம் உடனிருப்போம். திரு.நித்தியானந்தன் குருக்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

=============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…

முதல் கோரிக்கை அனுப்பியிருக்கும் நண்பர் கார்த்திக், நமது தளத்தின் கருத்துக்களை படிப்பதோடல்லாமல் அதை பின்பற்றும் வாசகர்களில் ஒருவர். அபுதாபியில் ஒரு தனியார் பொறியியல் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சில மாதங்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்தபோது நம்மை நேரில் சந்தித்தார். பொதுநலன் விழையும் பண்பாளர். அவரது இந்த வார பிரார்த்தனையே அதற்கு சான்று.

அடுத்து பிரார்த்தனை அனுப்பியிருக்கும் திரு.மணி நமது புதிய வாசகர். நமது ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ நூலை வாங்கி படித்து அதில் உள்ள பிரார்த்தனை கிளப் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பியிருக்கிறார். நூலை படித்து அதில் கூறியிருப்பவற்றை நடைமுறைப்படுத்தும்படி அவரை கேட்டுக்கொண்டோம். அவரது பிரார்த்தனை விரைவில் நிறைவேற முருகப் பெருமான் திருவருள் புரியட்டும்.

எல்லாரும் எல்லா வளமும் நலனும் பெறவேண்டும்!

=============================================================

சென்ற வார பிரார்த்தனை எப்படி நடந்தது?

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமையேற்ற திருமதி.கற்பகம் ஆறுமுகம் அவர்கள் மயிலை காரணீஸ்வரர் கோவிலில் நமது பிரார்த்தனை கிளப் கோரிக்கைகளுக்காக திருமுறை பாடி பிரார்த்தனை செய்ததோடல்லாமல் அடுத்த வாரம் திருவள்ளுவர் கோவிலி, ஏகாம்பரேஸ்வரர் சன்னதியிலும் பிரார்த்தனை செய்தார். அவருக்கு நம் நன்றி! நல்லது நடக்கட்டும்! அதுவும் விரைந்து நடக்கட்டும்!!

* பிரார்த்தனைக்கு விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

=============================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

நிறுவனத்தில் நிதி நிலைமை சீராக வேண்டும்; வேலை  தொழிலாளர்கள் வேலை பெறவேண்டும்!

திரு.சுந்தர் அவர்களுக்கும் ரைட்மந்த்ரா வாசகர்களுக்கும்,

என் பணிவான வணக்கங்கள்.

நான் இங்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். எங்கள் நிறுவனம் சமீபகாலமாக நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால் பல ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் பல ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை உள்ளது. ஆகவே எங்கள் நிறுவனத்தின் நிதி நிலைமை சீராகவும் வேலை இழந்த ஊழியர்களுக்கு நல்ல வேலை கிடைக்கவும் பிரார்த்தனை செய்யவும்.

நன்றி!
ஜி. கார்த்திகேயன்
அபுதாபி

================================================

கடன்கள் தீரவேண்டும்; பொருளாதாரம் மேம்படவேண்டும், மகள் நன்கு தேர்வு எழுதவேண்டும்!

அனைவருக்கும்  வணக்ககம்.

1. கடன் பிரச்சனை : எனது கம்பெனி நிலம் – Conifer foundation (P) Ltd –   (பங்குதாரர் ஜான்சன், மணி) 80 சென்ட் நிலம் குடிபெரும்பாக்கம் கிராமம், செங்கல்பட்டு தாலுகாவில் உள்ளது. இதனை விற்க நான் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. எனது கடன் பிரச்சனை தீர்ந்தால் என் வாழ்வில் நிம்மதி.

2. மகள் கல்வி : எனது மகள் கீர்த்தி நிஷா 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2016 எழுதவிருக்கிறாள். நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணனும். கொஞ்சம் ஞாபக மறதி உள்ளது. பொறுப்பு உணர்வு வரவேண்டும்.

என் பிரச்சனை தீர்ந்து கடன்கள் அடையவும், என் மகளுக்காகவும் பிரார்த்திக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

பி.மணி,
காவேரி நகர்,
சைதாப்பேட்டை, சென்னை -15.

================================================

பொது பிரார்த்தனை

புயலால் உருக்குலைந்து போயிருக்கும் கடலூர்

அண்மையில் வீசிய புயலாலும் தற்போது உருவாகியிருக்கும் மற்றொரு புயலாலும் தமிழகமே தண்ணீரில் தத்தளித்து வரும் நிலையில், மிக மிக மோசமாக கடலூர் மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.  வெள்ளத்தில் சிக்கி ஆயி ரத்துக்கும் மேற்பட்ட ஆடு- மாடுகள் உயிர் இழந்துள்ளன.

Cuddalore floods

1 லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. நெல், மக்காச்சோளம், காய்கறி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீ ரில் மூழ்கி விட்டன. இதில் 60 ஆயிரம் ஏக்கர் வரை நெற்பயிர்கள் மட்டுமே சேதம் அடைந்துள்ளன.

கடலூர்- சிதம்பரம் சாலையில் இரு பக்கங் களிலும் உள்ள விவசாய நிலங்களில் 10 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது. அவற்றில் இருந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி அழுகி வருகின்றன.

crops submerged

கன மழையுடன், 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதால், பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால், பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. கிராமங்களில், குடிநீருக்காக மக்கள் அவதிப்படுகின்றனர்.

வெள்ளப் பெருக்கில், சென்னை – கும்பகோணம் சாலை அடித்து செல்லப்பட்டதால், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. மொத்தத்தில் கடலூரில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு மக்கள் சொல்லொண்ணா துயரில் மூழ்கியிருக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வீசிய புயல் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்தே கடலூர் மக்கள் மீளாத நிலையில் தற்போது மேலும் புயலுக்கு இரையாகியிருப்பது பட்ட காலிலே படும் என்கிற பழமொழியை மெய்பித்திருக்கிறது.

விரைவில், அங்கு புயலின் பாதிப்பு நீங்கி மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு  திரும்பவேண்டும். அரசு  அவர்களுக்கு உரிய நிவாரணமும் இழப்பீடும் வழங்கவேண்டும். மக்கள் நிம்மதியாக வாழவேண்டும்.

இதுவே நாம் இறைவனிடம் சமர்பிக்க கூடிய பொது பிரார்த்தனை.

=============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

நண்பர் கார்த்திகேயன் அவர்களின் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி நீங்கி, நிறுவனத்தில் பொருளாதாரம் மேம்படவும் அவர்களுக்கு பல புதிய ப்ராஜெக்ட்டுகள் கிடைக்கவும், வேலையை விட்டு நீக்கப்பட்ட தொழிலாளர்கள் நல்லதொரு புதிய வேலை பெறவும், வாசகர் மணி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடன் பிரச்சனை தீர்ந்து அவரின் வசதி வாய்ப்புகள் கூடி நிம்மதியும் மன அமைதியும் கிடைக்கவும், அவுடிய மகள் கீர்த்தி நிஷா நன்கு தேர்வெழுதி நல்ல மதிப்பெண்கள் பெறவும் இறைவனை வேண்டுவோ.

கடலூரில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளை பாதிப்பு நீங்கி, அம்மாநிலத்தில் இயல்புவாழ்க்கை மீண்டும் திரும்பவும், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உரிய இழப்பீடும் நிவாரணமும் பெறவும் இறைவனை வேண்டுவோம்.

மேலும் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.நித்யானந்த குருக்கள் அவர்கள் மேன்மேலும் பல மேடைகளை காணவும், அவரது திருமுறை இசைத்தொண்டு தொடரவும், அவரும் அவர்தம் குடும்பத்தினரும் சிவனருளால் ஆரோக்கியமான வாழ்வும், அனைத்து வித செல்வங்களையும் குறைவறப் பெறவும், ஆடல்வல்லானை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : நவம்பர் 15, 2015 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மயிலை திருவள்ளுவர் திருக்கோவில் குருக்கள் திரு.ஆறுமுகம் அவர்களின் மனைவி, ‘திருமுறை மாமணி’ திருமதி.கற்பகம் ஆறுமுகம் அவர்கள்.

[END]

4 thoughts on “‘அறுமுகனை துதிப்பதால் கிடைக்கக்கூடிய ஆறு பேறுகள்’ – Rightmantra Prayer Club

  1. முருகனின் அவதாரம் படித்’தேன்’. சிலிர்த்’தேன்’, மகிழ்ந்’தேன்’. அனேக கோடி நன்றிகள்.

    கந்தசஷ்டி வாரத்தில் முருகனின் அலங்காரத்தோடு அதுவும் அன்னையுடன் கந்தன் வீற்றிருக்கும் படத்தோடு படிக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    பிரார்த்தனை சமர்பித்துள்ள கார்த்திக், மற்றும் மணி ஆகிய இருவரின் கோரிக்கைகளும் முருகன் அருளால், பெரியவாவின் கருணையால் நிறைவேறுவது திண்ணம்.

    பொதுப் பிரார்த்தனை உண்மையில் அவசியமான ஒன்று. இங்கும் மழை பாதிப்பு உண்டு. ஆனால் சமாளித்த்துவிட்டோம். ஏழை மக்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது.

    எல்லாரும் எல்லா வளமும் நலனும் பெற பிரார்த்திக்கிறேன்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  2. அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறட்டும். சுவாமி படங்கள் SUPERB .

  3. கந்த சஷ்டி மிக சிறப்பாக நடந்தற்கும் நம் கூட்டு பிரரர்தனை நல்ல முறையில் நடக்கவும் முருகனையும் பெரியவரையும் வணங்குவோம் //.

    மழையின் கொடுமை சொல்லி மாளாது//. துயரை கடவுள் தான் மிக விரைவில் நீக்க வேண்டும் ..

    தங்களின்
    RAVICHANDRAN

  4. Your articles are very useful and very happy for mind. and encourages the life. my hearty wishes for continuing your services for people.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *