மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் கோ-சாலைக்கு பிரதி மாதமும், நாள் கிழமை விஷேடங்களின் போதும் நம் தளம் சார்பாக தீவனம் அளித்து வருவது நீங்கள் அறிந்ததே. மற்ற இடங்களைப் போலல்லாமல் பசுக்களை இங்கு சிறந்த முறையில் பராமரித்து வருவதால் இந்த கோ-சாலை ஊழியர்களுக்கு அவ்வப்போது நாம் ஏதேனும் மரியாதை செய்து ஊக்கமும் உற்சாகமும் அளித்து வருவதும் நீங்கள் அறிந்ததே.
மேலும் கடந்த மூன்றாண்டுகளாக தீபாவளியின் போது இவர்களுக்கு நம் தளம் சார்பாக வஸ்திரம் அளித்து கௌரவிப்பதை வாடிக்கையாக கொண்டுவருகிறோம். இந்த ஆண்டு அதற்குரிய ஏற்பாடுகளில் இறங்கிய சூழ்நிலையில் இங்கு பவானி என்கிற பசு பெண் கன்று ஒன்றை ஈன்றது. கேட்டை நட்சத்திரம் என்பதால் யசோதா என்று பெயர் சூட்டினோம்.
ஒவ்வொரு முறையும் கோ-சாலையில் உள்ள பசு ஏதேனும் கன்று ஈன்றால் நமது குடும்பத்தில் ஒரு புதிய வரவு போல, அதை ஒரு சுபமங்கள செய்தியாக கருதி கோ-சம்ரட்சணம் செய்து கோ-சாலை ஊழியர்களை கௌரவித்து கொண்டாடுவது வழக்கம். யசோதாவின் வரவையும் விமரிசையாக கொண்டாடவேண்டும் என்று தீர்மானித்தோம்.
அடுத்த இரண்டு வாரங்களில் தீபாவளி வேறு வருவதையொட்டி தீபாவளி சிறப்பு வஸ்திர தானத்தையும் இணைந்து நடத்திவிடுவது என்று முடிவானது.
இதற்கிடையே அக்டோபர் 24 சனிக்கிழமை ‘கோ-வத்ஸ துவாதசி’ என்கிற சிறப்பு வாய்ந்த நாள். கோ-சம்ரட்சணத்திற்கு அதைவிட நல்ல நாள் கிடைக்குமா? எனவே அன்றே கோ-சம்ரட்சணமும் ஏற்பாடு செயப்பட்டது.
யசோதா பிறப்பு + தீபாவளி வஸ்திர தானம் + கோ-துவாதசி சிறப்பு கோ-சமரட்சணம் என இந்த கோ-சமரட்சணம் அன்னை விசாலாக்ஷி அருளால் மிக விசேஷமாக அமைந்தது.
சாதரணமாக கோ-சம்ரட்சணம் என்றாலே முன்னேற்பாடுகளுக்கு மட்டுமே ஒரு நாள் தேவைப்படும். நாம் தீபாவளி சிறப்பு வஸ்திர தானம் வேறு ஏற்பாடு செய்கிறபடியால் நிச்சயம் பொருட்களை வாங்கி வர ஒரு நபர் உதவிக்கு தேவை.
பணத்தை விட சில நேரங்களில் உடலுழைப்பு மிகவும் தேவைப்படும். சிலர் நான் வருகிறேன்…உடனிருக்கிறேன் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், கடைசி நேரத்தில் அவர்களால் வரைவியலாமல் போய்விடும். இது நமக்கு பழகிவிட்டது. எனவே கூடுமானவரை யார் உதவியும் எதிர்பாராமல் தனித்தே இயங்க பழகிக்கொண்டுவிட்டோம்.
ஆனால், கோ-சம்ரட்சணம் மற்றும் தீபாவளி சிறப்பு வஸ்திர தானம் பற்றி கேள்விப்பட்டவுடன் வாசகர் ராகேஷ் அவர்கள் தனது சகோதரர் மனோவை அனுப்பி வைத்தார். மனோ இந்த கோ-சம்ரட்சணத்தில் மிகவும் உதவியாக இருந்தார். காலையே நமது அலுவலகம் வந்த அவர், இதற்கான ஏற்பாடுகளிலும், பொருட்கள் வாங்குவதிலும் நமக்கு முழு உதவியாக இருந்தார். அவர் மட்டும் வரவில்லையெனில் நம் பாடு மிகவும் திண்டாட்டமாகியிருக்கும்.
இந்த வஸ்திர தானத்தை பொருத்தவரை நண்பர் ராஜ்குமார் அவர்களும் நாம் கூப்பிட்டால் வரத் தயாராக இருந்தார். உதவிக்கு ஏற்கனவே ஒருவர் வந்துவிட்டதால் அவரை நாம் அழைக்கவில்லை. மேலும் அவர் அடுத்த நாள் திருமலை வேறு புறப்படவேண்டியிருந்தது. “மாலை நடைபெறும் கோ-சம்ரட்சணத்திற்கும் வஸ்திரதான நிகழ்ச்சிக்கும் குடும்பத்துடன் வாருங்கள்… அதுவே பெரிய கைங்கரியம் தான்” என்றோம்.
மாலை நண்பர்கள் திரு.ராஜ்குமார், தினமலர் உதவி ஆசிரியர் திரு.மணிவண்ணன், திருமதி.கவிதா நாகராஜன், திரு.வெங்கட், திரு.நாராயணன், உள்ளிட்ட அனைவரும் வந்து சேர்ந்த பின்னர் காசி விஸ்வநாதருக்கும், அன்னை விசாலாட்சிக்கும் அர்ச்சனை செய்யப்பட்டது. (திரு.நாராயணன் தவிர மற்ற அனைவரும் குடும்பத்தோடு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.)
இது போன்ற நல்ல விஷயங்கள் குழந்தைகள் வளரும்போதே அவர்கள் மனதில் பதியவேண்டும் என்பதற்காக கோ-சம்ரட்சணத்திற்கு வர விருப்பம் தெரிவிக்கும் வாசகர்களை அவர்களின் குழந்தைகளையும் அழைத்து வரச்சொல்வது நமது வழக்கம். அவர்களின் கைகளிலேயே பசுக்களுக்கு உணவு தருவோம். அவர்கள் முன்னிலையில் கோ-சாலை ஊழியர்களை கௌரவிப்போம். எனவே திரு.ராஜ்குமார் மற்றும் திருமதி.கவிதா நாகராஜன் அவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தார்கள்.
கோ-சாலை ஊழியர்களுக்கு அளிக்கவேண்டிய வஸ்திரம், சட்டை, துண்டு, இனிப்பு, வெற்றிலை பாக்கு, பழம் என அனைத்தும் வாங்கி வைத்து தயாராக இருந்தோம்.
கோ-சம்ரட்சணத்திற்காக பசுக்களுக்கு நெய்யோ பாலோ கலக்காத விசேஷ சர்க்கரை பொங்கல் ஆர்டர் செய்திருந்தோம்.
இது கோ-வத்ஸ துவாதசி சிறப்பு கோ-சம்ரட்சணம் என்பதால் புத்திர பாக்கியம் வேண்டி நம் தளத்தின் பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்பியிருந்த அனைவரின் பெயர்களிலும் அர்ச்சனை செய்யப்பட்டது.
பின்னர் சுவாமிக்கு சர்க்கரை பொங்கலும், சுண்டலும் நிவேதனம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கோ-சாலை பசுக்களுக்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டது.
இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. பல குழந்தைகள் பிரசாதம் பெற்றுக்கொண்டு நம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினர். குழந்தைகள் பங்களிப்பு இல்லாத எந்தவொரு வழிபாடும் நிறைவு பெறாது.
பிரசாத விநியோகம் முடிந்த பின்னர், இறுதியில் கோ-சாலையில் வைத்து கோ-சாலை ஊழியர்கள் பாலாஜி, திருமலை, கீர்த்தி, பத்ரி, கோவிலின் காவலாளி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். (இவர் பார்ப்பது வாட்ச்மேன் உத்தியோகம் என்றாலும் கோ-சாலையை பார்த்துக்கொள்வது, நவராத்திரி கொலு ஏற்பாடுகளின்போது உடனிருந்து உதவுவது என தனது பணியையும் தாண்டி பல தொண்டுகளை இந்த ஆலயத்தில் செய்துவருபவர்.)
பாலாஜி மற்றும் திருமலை ஆகியோர் குடும்பத்துடன் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு வஸ்திரம், சட்டை தவிர புடவை ரவிக்கையும் வைத்து தரப்பட்டது. கோ-சாலை பணியை அவர்களின் மனைவியின் ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல் நிச்சயம் ஒருவர் செய்யவே முடியாது. ஆகவே பாலாஜி மற்றும் திருவேங்கடம் ஆகியோருக்கு தாம்பூலப் பொருட்கள், வேட்டி, சட்டை, துண்டு, புடவை, ரவிக்கை பிட், இனிப்பு மற்றும் காரம் அடங்கிய பலகார செட் வழங்கப்பட்டது.
திரு.பாலாஜிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நவராத்திரி நேரத்தில் அக்குழந்தைகளை நாம் பார்க்கக் நேர்ந்தது. இந்த ஆண்டு அக்குழந்தைகளுக்கும் சேர்த்து புத்தாடைகள் வழங்கப்பட்டது. (கோவிலின் நவராத்திரி கொலு முன்னர் அக்குழந்தைகள் நிற்கும் படத்தை காண்க!)
கோ-சாலை ஊழியர்களை கௌரவிப்பது சாட்சாத் அந்த காமதேனுவையே கௌரவிப்பது போல. ஏனெனில் பசுக்களை பார்த்துக்கொள்வது அத்தனை எளிதல்ல. ஒரு கைக்குழந்தையை பார்த்துகொள்வது போல சவாலானது. ஒரு பசு இருந்தாலே அது போடும் சாணத்தை அளவிட முடியாது. இங்கு இரண்டு ரிஷபங்கள் + ஆறேழு பசுக்கள் + 3 கன்றுகள் உள்ளன. சாணம் விழுந்து கொண்டேயிருக்கும். அதை அப்புறப்படுத்திக் கொண்டேயிருக்கவேண்டும். தீவனம், வைக்கோல் முதலியவற்றை வேளாவேளைக்கு வைக்கவேண்டும். பால் கறக்கவேண்டும். அபிஷேகத்திற்கு தரவேண்டும். இப்படி நான்-ஸ்டாப் வேலை இங்கே.
நமது ஊக்கமும் உற்சாகமும் இவர்களை எந்தளவு மாற்றியிருக்கிறது, பணியை சிறக்கச் செய்திருக்கிறது, உற்சாகத்துடன் அதை செய்யுமாறு இவர்களை தூண்டியிருக்கிறது என்பதை நாமறிவோம். நேரில் சென்றால் நீங்களும் அறிந்துகொள்வீர்கள்.
கோமாதா எங்கள் குலமாதா குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா வண்ணக் கோமாதா
இணங்காதோர் மனம் கூட இணங்கும் நீ எதிர்வந்தால் எதிர்காலம் துலங்கும்
வணங்காதோர் சிரமுன்னை வணங்கும் வலம் வந்தால் நலமெல்லாம் விளங்கும்
கோமாதாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
==========================================================
நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 20
வீட்டில் குடும்பத்திற்குள் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுகிறதா?
சிலர் வீட்டில் கூட்டு குடும்பமாக இருப்பார்கள். இத்தகைய குடும்பங்களில் உறவுகளுக்குள் பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி சண்டை சச்சரவுகள் எழும். எப்போது எந்த பிரச்சனை கிளம்பும் அது எங்கே போய் முடியும் என்கிற பீதியிலே அந்த வீட்டில் இருப்பவர்கள் இருப்பார்கள். (இப்போதெல்லாம் கணவன்-மனைவி என இரண்டு பேர் வசிக்கும் வீட்டிலேயே இது போன்ற சண்டை சச்சரவுகள் அடிக்கடி ஏற்படுகின்றன!).
அத்தகையோர் வெள்ளி தோறும், காலை நீராடி தூய ஆடை தரித்து பசுவின் கோமியத்தை மாவிலை கொண்டு வீடு முழுதும் தெளித்து சாம்பிராணி புகை போட்டு குல தெய்வத்தை மானசீகமாக வேண்டி வந்தால் வீட்டில் சண்டை சச்சரவுகள் குறைந்து சாந்தி நிலவும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். கோமியத்தை தெளிக்கும்போது யாராவது கேட்டால், “வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும்!” என்று கூறிவிடுங்கள். அது உண்மையும் கூட!!
டிப்ஸ் தொடரும்…
==========================================================
Also check…
கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!
அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?
Our 2015 Deepavali Celebrations
நமக்காக உழைப்பவர்களை சிறிது நினைப்போம் – தீபாவளி கொண்டாட்டம் (2)
திருப்பதி முருகனுக்கு அரோகரா… தீபாவளி கொண்டாட்டம் (1)
Our 2014 Deepavali Celebrations
பாக்கு விற்பவன் கூட ஊக்குவித்தால் தேக்கு விற்பான் !
இன்பம் எங்கே, மகிழ்ச்சி எங்கே என்று தேடுகிறீர்களா ?
ஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள் – Part 1
Our 2013 Deepavali Celebrations
கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2
வண்ணத்து பூச்சிகளுக்கு பட்டாடை – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 1
==========================================================
[END]
சுந்தர்ஜி,
அருமையான பதிவு.நேரில் பார்க்காவிட்டாலும் அங்கே இருந்த உணர்வு.இன்றைய தினம் இந்த பதிவை படித்து விட்டு தொடர்கிறேன் .
நன்றி
ரஞ்சினி
கோபுரம் தரிசனம் மற்றும் கோ-தரிசனத்துடன் கூடிய பதிவு மிக அருமை. யசோதாவின் படம் கொள்ளை அழகு.
நாங்களும் உடன் இல்லையே என்று ஏங்க வைத்துவிட்டது. கோ-சாலை பணியாளர்களுக்கு பார்த்து பார்த்து செய்வதில் மிக்க மகிழ்ச்சி.
குழந்தைகள் பிரசாதம் பெறும் படங்கள் தெய்வீகம். நீங்கள் சொல்வது போல, குழந்தைகள் பங்கு பெறாத எந்தவொரு வழிபாடும் நிறைவு பெறுவதில்லை.
இந்த ஆண்டு பாலாஜி அவர்களின் குழந்தைகளும் பலன் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.
இறுதியில் கூறியுள்ள டிப்ஸ் அனைவருக்கும் தேவையான ஒன்று. வெள்ளிக்கிழமைகளில் எங்கள வீட்டில் முன்பெல்லாம் சாம்பிராணி போடும் பழக்கம் இருந்தது. தற்போது குறைந்துவிட்டது. கோமியத்தை பொங்கல் அன்று தெளிப்பேன். தற்போது ஒவ்வொரு வெள்ளியும் தவறாமல் தெளிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
அர்த்தமுள்ள ஆத்மார்த்தமான தீபாவளி கொண்டாட்டத்தை பார்த்ததில் மகிழ்ச்சி
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
சார் நான் கூட உங்கள் உடனே இருந்த மாதிரி ஒரு சந்தோசம் இதை படிக்கும்போது . அடடா எப்போ நான் உங்களுடன் இணைந்து இந்த மாதிரி நல்ல காரியங்களை செய்ய போகிறேன் என்று தெரியவில்லை சார், நான் இருப்பதோ கர்நாடக நீங்களோ சென்னையில் ,
இருந்தாலும் இன்றே இங்கே இருக்கிற கோ களுக்கு வாழைபழம் வாங்கி தருகிறேன் . அப்போதுதான் எனக்கு கொஞ்சமாவது மனசு ஆறும் சார்.
உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் ,
தங்களின்
ரவிச்சந்திரன்
கைகா