Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)

print
தானத்தில் சிறந்ததும் உயர்ந்ததுமான அன்னதானத்தின் அவசியம் பற்றியும், மகத்துவம் பற்றியும் நாம் நம் தளத்தின் பல்வேறு பதிவுகளில் விளக்கியிருக்கிறோம். இருப்பினும் அன்னதானத்தின் மகத்துவத்தை ஒரு சில பதிவுகளில் அடக்கிவிடமுடியுமா என்ன?

அன்னதானத்திற்கே உரிய தனிச்சிறப்பு என்னவென்றால் யார் வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் செய்யலாம் என்பது தான். பூமி தானம், வஸ்திர தானம், ஸ்வர்ண தானம், கோ தானம் முதலிய ஏனைய தானங்கள் அனைத்தும் அதற்குரிய தகுதியுடையோர் தான் செய்ய இயலும். தகுதியுடையோர்க்கு தான் செய்ய வேண்டும். ஆனால், அன்னதானம் ஒன்று தான் பெறுவோர் தகுதி பார்க்காமல் செய்யக்கூடிய தானம்.

அதிதி பூஜை மற்றும் அன்னதானம் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. அதிதி பூஜை என்னும் அன்னதானத்தை பொருத்தவரை மனமிருந்தால் மார்க்கமும் நிச்சயம் இருக்கும்.

=============================================================

For Episode 1 of this series :  மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)

ரைட்மந்த்ராவில் வெளியாகும் தொடர்கள் சில : திருமால் திருவிளையாடல், ரிஷிகள் தரிசனம், காலடி பயணம், வள்ளிமலை அற்புதங்கள், யாமிருக்க பயமேன் (வேல்மாறலின் அற்புதங்கள் பற்றிய தொடர்) …. தவிர வேறு பல ஆன்மீக தொடர்களும், சுயமுன்னேற்ற தொடர்களும் வெளியாகி வந்துகொண்டிருக்கின்றன.

=============================================================

மழை பொழியும் காரிருள் சூழ்ந்த இரவில், தனக்கு உணவு இல்லை என்றாலும் விதைநெல்லை பொறுக்கி கொண்டு வந்து, கொல்லைப் புறத்தில் விளைந்த கீரைகளை பறித்து வந்து அதிதியாக வந்த சிவபெருமானுக்கு படைத்த இளையான்குடி மாறநாயனாரின் சரிதமும், தங்கள் குடும்பத்திற்கே உணவு இல்லாத சூழ்நிலையிலும் விருந்தினருக்கு அன்னமிட்டு தாங்கள் பட்டினியால் மடிந்த மகாபாரதத்தில் வரும் உஞ்சவிருத்தி அந்தணரின் கதையும்…. அவ்வளவு ஏன், பிக்ஷை கேட்டு வந்த ஆதி சங்கரருக்கு பிக்ஷையிட எதுவுமில்லாத காரணத்தால் வீட்டில் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் பிக்ஷையளித்ததால் ஆதி சங்கரர் ‘கனகதாரா சுலோகம்’ பாடி தங்கநெல்லி மழை பொழிய வைத்த சம்பவமும் உணர்த்துவது இதைத் தான். மேற்கூறிய அனைத்து  சம்பவங்களிலும் மனம் தான் பிரதானமாமேயன்றி அவர்களின் வசதி வாய்ப்புக்கள் அல்ல என்பதை அனைவரும் அறிவீர்கள். எனவே அதிதிபூஜை செய்வதற்கு வசதி, வாய்ப்புக்கள் வேண்டும், பொருள் மற்றும் இட வசதி வேண்டும் என்கிற எண்ணமே தவறானது.

மேலும் அதிதி பூஜை செய்தால், உங்களுக்கான தேவைகள் இறைவனருளால் தாமே  நிறைவேறும் என்பது உறுதி. தேவைகள் என்றால் அதை பொருளாதார தேவைகளோடு மட்டுமே முடிச்சு போட்டு பார்க்கக்கூடாது. நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நல்ல வாழ்க்கைத் துணையும், ஒழுக்கமுடைய பிள்ளைகளும் தான் ஒருவரின் அத்தியாவசியத் தேவைகள். இதற்கு பிறகு தான் ஏனைய செல்வங்கள்.

அதிதி பூஜையின் சிறப்பை விளக்கும் நிகழ்வு ஒன்றை பார்ப்போம். தொடரின் முதல் அத்தியாயத்துக்கு இதைவிட சிறப்பான ஒரு பதிவை அளிக்க முடியாது. நமது தளத்தின் ஓவியர் ரமீஸ் அவர்கள் இந்த தொடருக்காக பிரத்யேகமாக வரைந்த ஓவியம் இது.

Thiruvaroor Nel Malai 1

சுந்தரரின் அதிதி பூஜை செய்த அற்புதம் – நெற்குவியலில் மூழ்கிய திருவாரூர்!

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் பரவை நாச்சியாரை மணம்புரிந்து இனிய இல்லறம் நடத்திவந்த காலகட்டங்களில், அதிதி பூஜை செய்து, அடியார்க்கு தினசரி அமுது படைத்து வந்தார். இதன் மூலம் சுந்தரரின் புகழ் திக்கெட்டும் பரவியது.

திருவாரூருக்கு அருகில் திருக்குவளை என்னும் பதியை ஒட்டியுள்ள குண்டையூர் என்னும் சிற்றூரில் குண்டையூர் கிழார் என்னும் நிலச்சுவான்தார் ஒருவர் வசித்து வந்தார். சுந்தரர்பால் பேரன்பும் மரியாதையும் கொண்டிருந்த அவர் சுந்தரர் பரவையாருடன் சேர்ந்து தினமும் தனது இல்லத்தில் அடியார்க்கு அமுது செய்துவருகிறார் என்று கேள்விப்பட்டவுடன் – சுந்தரர்க்கு தான் ஏதேனும் செய்ய விரும்பி – சுந்தரரும் அமுது செய்ய வரும் அடியவர்களும் பயன்பெறும் விதமாக நெல், பருப்பு, வெல்லம், கரும்பு மற்றும் இதர மளிகை பொருட்களை சுந்தரரின் இல்லத்திற்கு அவ்வப்போது மாட்டு வண்டிகளில் அனுப்பி வந்தார்.

ஒரு சமயம் மழை பொய்த்ததால் குண்டையூரில் கடும் பஞ்சம் ஏற்பட்டு விளைநிலங்கள் வறண்டன. இதனால் சுந்தரருக்கு உணவுப் பொருட்களை அனுப்ப முடியாமல் குண்டையூர் கிழார் பெரிதும் வருந்தினார். அடியாருக்கு அமுது செய்யும் அடியாரான சுந்தரருக்கு தான் நெல் அனுப்பமுடியவில்லையே என்கிற ஏக்கத்துடன் சிவபெருமானிடம் இது பற்றி முறையிட்டபடி தானும் உணவு உட்கொள்ளாது உறங்கச் சென்றார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய சிவபெருமான், “அன்பனே வருந்தற்க… நம்பியாரூரனுக்கு நெல் அளிக்க உமக்கு படியளக்கிறோம்” என்று கூறிவிட்டு மறைந்தார்.

தொடர்ந்து குபேரனை அழைத்த சிவபெருமான், “குண்டையூரில் நெல்லை மலையென குவித்திடுக” என்று ஆணையிட்டார். இதைத் தொடர்ந்து குபேரன், ஒரே இரவில் குண்டையூர் முழுக்க மலையென நெல்லை குவித்துவிட்டான். இதனால் குண்டையூருக்கு உள்ளே செல்லும் வழியும் வெளியே செல்லும் வழியும் அடைபட்டுவிட்டது.

மறுநாள் காலை நெல் மலையை கண்டு பரவசமடைந்த குண்டையூர் கிழார், திருவாரூருக்கு ஓடோடிச் சென்று சுந்தரரிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்தார்.

சுந்தரரும் ஆர்வம் மேலிட உடனே குண்டையூருக்கு விரைந்து வந்து, இறைவன் ஆணையால் குபேரன் குவித்த நெல் மலைகளை கண்டு நெகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தார். ஆனால், அவருக்கு வேறு கவலை தோன்றியது. இத்தனை நெற்குவியல்களை திருவாரூருக்கு கொண்டு செல்வது எப்படி என்று சிந்திக்கலானார். ஏனெனில், அதற்குரிய ஆள்பலம் குண்டையூர் கிழாரிடம் இல்லை தன்னிடமும் இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.

உடனே சப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருக்குவளையில் எழுந்தருளியிருக்கும் கோளிலிநாதரை சென்று தரிசித்து, திருவாரூருக்கு நெல்லை கொண்டு செல்ல பூதகணங்களை அனுப்புமாறு வேண்டி ஒரு பதிகத்தை பாடினார். கோளிலி இறைவனும் அசரீரி மார்க்கமாய் “இன்று இரவு பூத கணங்களைக் கொண்டு நெல்மலைகளை திருவாரூரில் சேர்ப்பிப்போம்” என்று அறிவித்து அருளினார்.

இறைவனின் பெருங்கருணையை எண்ணி மீண்டும் வியந்த சுந்தரர் மகிழ்ச்சியோடு ஆரூர் திரும்பினார்.

இறைவனின் ஆணைப்படி அன்றிரவு, குண்டையூரில் இருந்த நெற்குன்றுகள் முழுவதையும் பூதகணங்கள், திருவாரூரில் கொண்டு வந்து குவித்தன. இதனால் திருவாரூர் வீதிகள் அனைத்தும் நெல் மணிகளால் நிரம்பி வழிந்தன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட இயலாத நிலையில் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் முன்பாக நெல்மணிகள் குன்றென காணப்பட்டன.

=============================================================

Also check : திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

=============================================================

ஏற்கனவே  சுந்தரர் மூலம் நடந்த அனைத்தையும் அறிந்திருந்த பரவையார், “ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு” (குறள் 215) என்ற வள்ளுவரின் வாக்கிற்க்கிணங்க, அவரவர் வீடுகளுக்கு முன்னே குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளை அவரவர் எடுத்துக் கொள்ளலாம் என்று முரசு மூலம் திருவாரூர் வீதிகளில் அறிவிக்கச் செய்தார். இதையடுத்து அவரவர் வீட்டு முன்பாக இருந்த நெல்மணிகளை அவரவர் எடுத்துக்கொண்டு தங்கள் வீட்டு நெற்குதிருக்குள் நிரப்பினர். அப்படியும் நெல்மணிகள் மிகுதியிருன்தன. அடுத்த பல தலைமுறைகளுக்கு உணவிற்கு பஞ்சமில்லை என்கிற இந்த அரிய நிகழ்வால் திருவாரூர் வாழ் மக்கள் பரவையாரையும் சுந்தரரையும் வாழ்த்தி வணங்கினர்.

ஆக… சுந்தரர் ஒருவர் செய்த அதிதி பூஜையால் திருவாரூர் வாழ் மக்கள் அனைவரும் பயன்பெற்றனர். அதிதிபூஜைக்கு உதவிய காரணத்தால் சிவதரிசனம் கிடைக்கப்பெற்றார் குண்டையூர் கிழார். (இது அது  அனைத்தையும் விட பெரிய பாக்கியமல்லவா!!!)

குண்டையூர் கிழார் வாழ்ந்த குண்டையூர் இன்றும் உள்ளது. திருக்குவளையிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் திருக்குவளை-சாட்டியக்குடி சாலையில் உள்ளது. அங்குள்ள இறைவனின் பெயர் சுந்தரேஸ்வரர். அம்பாள் பெயர் மீனாக்ஷி. இது தேவார வைப்பு தலங்களில் ஒன்று. சுந்தரர் நெல் பெற்ற விழா மாசி மக நாளில் இன்றும் இந்த கோவிலில் நடைபெறுகிறது. குண்டையூர் கிழாரின் திருவுருவச் சிலைகள் இக்கோவிலில் உள்ளன.

பிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்லும் அதே நேரம் இதே போன்று சரித்திர சிறப்பு மிக்க தலங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சென்று வரவேண்டும்.

சுந்தரர் கோளிலி நாதரிடம் முறையிட்டு பூதகணங்களை கொண்டு ஆரூருக்கு நெல்லை உதவிய பதிகம் கீழே அளிக்கப்பட்டுள்ளது. இதை தினசரி ஓதிவந்தால், உணவுக்கே என்றும் பஞ்சம்  வராது. நல்ல வேலையாட்களும் அமைவார்கள். (வேலையாட்கள் அமைகிறார்கள் என்றால், உங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதாகத் தானே அர்த்தம்!). எனவே இகபர சுகங்களை தரவல்ல பதிகம் இது.

கடைசி பாடலில் சுந்தரர் பிரயோகப்படுத்தியுள்ள வார்த்தைகளை கவனியுங்கள்!

//நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏந்திய பத்தும் வல்லார்,
அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான்உலகு ஆள்பவரே //

முழுப் பதிகம் இறுதியில் தரப்பட்டுள்ளது.

=============================================================

Also check :

அன்னதானம் என்கிற அருந்தவம்!

வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

=============================================================

தீபாவளி சிறப்பு வழிபாடு & அபிஷேகம் !

தீபாவளியன்று காலை சுமார் 9.00 மணியளவில் நம் தளம் சார்பாக சென்னை குன்றத்தூர் முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரர் கோவில் எதிரே உள்ள “திருமுறை விநாயகர்” கோவிலில், சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாட்டிற்கு வாசகர்கள் அவசியம் வந்திருந்து, விநாயகப் பெருமானின் அருளை பெறவேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.

Thirumurai Pillaiyaar
திருமுறை விநாயகர், குன்றத்தூர்

வரவிரும்பும் அன்பர்கள் அபிஷேகத்திற்குரிய பொருட்களை (தேங்காய், பூ, பழம், தேன், அபிஷேகப் பொடி, மஞ்சள் தூள், நாட்டு சர்க்கரை, வெற்றிலை, மாலை இத்யாதி… இத்யாதி) தாங்களே வாங்கி வரலாம்.

சிறப்பு வழிபாடு நாள் மற்றும் நேரம் : தீபாவளி (செவ்வாய்) 10.11.2015 | நேரம் :  காலை 9.00 am – 11.00 am | இடம் : திருமுறை விநாயகர், குன்றத்தூர் அடிவாரம் (கந்தழீஸ்வரர் கோவில் எதிரே).

    • இந்த திருமுறை விநாயகர் மிகவும் விசேஷமானவர். அச்சில் ஏறிய முதல் திருமுறை இந்த பிள்ளையாரிடம்தான் உள்ளது!
    • இது போன்ற விநாயகர் வழிபாடு + அபிஷேகம் இனி நம் தளம் சார்பாக அடிக்கடி நடைபெறும். உங்கள் பகுதியில் பூஜை காணாத, சரிவர பராமரிக்கப்படாத பிள்ளையார் கோவில்கள் இருப்பின் நமக்கு தகவல் தெரிவிக்கவும். நமது உழவாரப்பணி குழு நண்பர்களுடன் வந்து அபிஷேக, ஆராதனை செய்வித்து, நிவேதனம் செய்து விளக்கேற்றி வைப்போம். இது அனைவருக்கும் நன்மை தரக்கூடிய ஒன்று. (பூஜை செய்ய அர்ச்சகர் இல்லாத கோவில் என்றால் நாமே குருக்களை ஏற்பாடு செய்து அழைத்து வருவோம்!)

அனைவரும் வருக! ஆனைமுகனின் அருளைப் பெறுக!

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=========================================================

நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்!

நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்;
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே,
கோளிலி எம்பெருமான்!குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்!
ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே!

வண்டுஅமரும்குழலாள் உமைநங்கை ஓர்பங்கு உடையாய்!
விண்டடவர்தம் புரம்மூன்று எரிசெய்த எம் வேதியனே!
தெண்திரை நீர் வயல் சூழ் திருக் கோளிலி எம்பெருமான்!
அண்டம்அதுஆயவனே, அவை அட்டித்தரப் பணியே!

பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்;
மாதர்நல்லார் வருத்தம்(ம்)அது நீயும் அறிதி அன்றே!
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;
ஆதியே, அற்புதனே, அவை அட்டிதரப் பணியே!

சொல்லுவது என், உனை நான்? தொண்டைவாய் உமைநங்கையை நீ
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ?
கொல்லை வளம் புறவில் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே!

முல்லைமுறுவல் உமை ஒருபங்கு உடை முக்கணனே!
பல் அயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா!
கொல்லை வளம் புறவில்-திருக் கோளிலி எம்பெருமான்!
அல்லல் களைந்து, அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே!

குரவு அமரும் குழலாள் உமைநங்கை ஒர்பங்கு உடையாய்!
பரவை பசிவருத்தம்(ம்)அது நீயும் அறிதி அன்றே!
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;
அரவம் அசைத்தவனே, அவை அட்டித்தரப் பணியே!

எம்பெருமான்! நுனையே நினைத்து ஏத்துவன், எப்பொழுதும்;
வம்பு அமரும் குழலாள் ஒருபாகம் அமர்ந்தவனே!
செம்பொனின் மாளிகை சூழ் திருக் கோளிலி எம்பெருமான்!
அன்புஅது(வ்)ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே!

அரக்கன் முடிகரங்கள்(ள்) அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்!
பரக்கும் அரவுஅல்குலாள் பரவைஅவள் வாடுகின்றாள்;
குரக்குஇனங்கள் குதிகொள் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;
இரக்கம்அதுஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே!

பண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும்
கண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிதுஆய பிரான்!
தெண்திரைநீர் வயல் சூழ் திருக் கோளிலி என்பெருமான்!
அண்டம்அதுஆயவனே, அவை அட்டித்தரப் பணியே!

கொல்லை வளம் புறவில்-திருக் கோளிலி மேயவனை
நல்லவர்தாம் பரவும் திரு நாவலஊரன்அவன்
நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏந்திய பத்தும் வல்லார்,
அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான்உலகு ஆள்பவரே.

– ஏழாம் திருமுறை | சுந்தரர் | திருக்கோளிலி – கோளிலிநாதர்

=========================================================

Also check…

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

எது உண்மையான தர்மம்?

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

“எல்லாம் அவ பாத்துப்பா!”

=========================================================

Also check…

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்!

நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!

சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?

=========================================================

4 thoughts on “ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)

  1. ஈசனின் தோழரான சுந்தரரைப் பற்றி படித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. தங்கள் தளம் சார்பாக தீபாவளி சிறப்பு வழிபாடு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஓவியர் ரமீசின் ஓவியம் அருமை. இறைவன் இறைவியின் கைலாச காட்சியை நம் கண் உள்ளே கொண்டு வந்து விட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    வாழ்க … வளமுடன்!!!

    நன்றி!
    உமா வெங்கட்

  2. அருமை. அருமை. அருமை. கேள்விப்படாத சம்பவம். அதை பிரத்யேக ஓவியத்துடன் வெளியிட்டு எங்களை அந்த சூழலுக்கே அழைத்தச் சென்றமைக்கு மிக்க நன்றி.

    அன்னதானத்தின் மகத்துவம் குறித்து நீங்கள் கொடுத்திருக்கும் முன்னோட்டம் சிம்ப்ளி சூப்பர்ப்.

    அதிதிகளுக்கு பூஜை செய்து அவர்களுக்கு அமுது செய்து வந்தால் இறைவன் நமக்கு மட்டுமல்ல நாம் இருக்கும் ஊருக்கே படியளப்பான் என்கிற அருமையான் தத்துவத்தை கூறும் சம்பவம் இது.

    அனைவரும் பயன்பெறும் விதமாக் பதிகத்தையும் அளித்தமைக்கு நன்றி.

    அதிதி தேவோ பவ தொடர் மிக விறுவிறுப்பாக செல்கிறது. ஏனைய தொடர்களையும் விரைவில் அளிக்கவும்.

    தொடரட்டும் உங்கள் நற்பணி.

    எல்லாரும் எல்லா வளமும் பெறவேண்டும். இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.

    – பிரேமலதா மணிகண்டன் ,
    மேட்டூர்

  3. இவ்வளவு சிறப்பு பெற்ற அதே சுந்தரர் வசித்த திருவாரூரில் தான் அடியேனும் என் மனைவியும், என் மகளும் , மருமகனும் பிறந்தார்கள். தங்கள் குறிபிட்ட அந்த திருக்குவளையில் எனது உறவினர்களும் உள்ளார்கள் மிகவும் புண்ணியம் நிறைத்த திருவாரூரில் பிறந்தவர்களுக்கு முக்தி கிட்டும் என்பார்கள். சுந்தரர் புகழ் என்றும் சிறக்க வாழ்த்துக்கள்.
    சென்ற வராம் தான் குடமுழுக்கு நடைபெற்றது. முடிந்த வரை அங்கே சென்று வழிபாடு செய்து வாருங்கள்.
    நல்ல செய்திக்கு மிக மிக நன்றி சார்,

    தங்களின் ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *