Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, May 19, 2024
Please specify the group
Home > Featured > ‘விதியே உனக்கு ஒரு வேண்டுகோள்!’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் (Rightmantra Prayer Club)

‘விதியே உனக்கு ஒரு வேண்டுகோள்!’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் (Rightmantra Prayer Club)

print
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய திருமுறை பாடல்களின் மகிமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சாலை வசதிகள் எல்லாம் இல்லாத காலகட்டங்களில் தமிழகம் முழுதும் இவர்கள் கால்நடையாகவே பயணம் செய்து, பல திருத்தலங்களை தரிசித்து, நமக்கு ‘திருமுறை’ என்னும் இந்த அரிய பொக்கிஷத்தை வழங்கியிருக்கிறார்கள்.

இவர்கள் பதிகம் பாடி புரியாத அதிசயமே இல்லை எனலாம்.

இந்த பதிவில் சுந்தரர் புரிந்த அதிசயம் ஒன்றை பார்ப்போம்.

விதியையே புரட்டிப் போட்ட இந்த நிகழ்வை படித்த பின்னர் நிச்சயம் மெய்சிலிர்த்துப் போவீர்கள். எப்பேற்ப்பட்ட ஒரு வழிகாட்டிகளை நாம் பெற்றிருக்கிறோம்…!!!!!!!!!! அவர்களது அருமையையும் அவர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள திருமுறைகளின் பெருமையையும் மகத்துவத்தையும் நாம் உணர்ந்திருக்கிறோமா என்று தோன்றும்…

Avinasi Temple Gopuram
அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோவில்..!

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவிநாசி ஈசனை வழிபட வந்தார். அப்போது அங்கு எதிரெதிரே இருந்த இரு வீடுகளில், ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடைபெற்று சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. மற்றொரு வீட்டில் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது.

அழுகுரல் வந்த வீட்டிற்கு சென்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள், அதற்கான காரணத்தை கேட்டார். அப்போது இரு வீட்டிலும் நான்கு வயதுடைய குழந்தைகள் இருந்ததாகவும், தங்கள் வீட்டில் உள்ள குழந்தையை குளத்தில் நீராடச் சென்ற போது முதலை இழுத்துச் சென்று விட்டதாகவும், அந்தக் குழந்தையும் இருந்திருந்தால், எதிர் வீட்டில் உள்ளவர்களைப் போல தற்போது பூணூல் கல்யாணம் செய்து வைத்திருப்போம்’ என்று கண்ணீர் மல்கியபடி கூறினர்.

அவர்கள் மீது இரக்கம் கொண்டு சுந்தரர், அவ்வீட்டாரை அழைத்துக் கொண்டு தாமரைக் குளக்கரைக்குச் சென்றார். அந்த குளத்தில் அச்சமயம் நீர் வற்றிப் போயிருந்தது. அவிநாசியப்பரை மனதில் நிறுத்தி, ‘எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே’ என்றுத் தொடங்கி பதிகம் பாடினார் சுந்தரர்.

எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம் பெருமானையே
உற்றாய் என்றுன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால்
புற்றா டரவப் புக்கொளி யூரவி நாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி யெம் பர மேட்டியே

தொடர்ந்து நான்காவது பாடலை, ‘உரைப்பார் உரையுகந்து உள்க வல்லால் தங்கள் உச்சியாய்! அரைக்காடு அரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்! புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே! கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே!’ என்று பாட அந்த அதிசயம் அடுத்த நொடியே அங்கு அரங்கேறியது.

வறண்டு போய் கிடந்த குளம் திடீரென்று தண்ணீரால் நிரம்பித் தாமரையால் சிரித்தது. கூடவே ஒரு முதலையும் கரை நோக்கி வந்தது. சிவனும் பிரம்மாவும் உருவத்தைக் கொடுக்க, எமன் உயிரைக் கொடுக்க, திருமால் உடலை வளர்க்க, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விழுங்கிய அதே நான்கு வயது பாலகனை, அதே முதலை தற்போது ஏழு வயது பாலகனாக உமிழ்ந்து விட்டு ஒதுங்கியது.

முதலையில் வாயில் இருந்து மீண்ட அந்தப் பிள்ளைக்கு அவிநாசியப்பர் சன்னிதியிலேயே, பூணூல் கல்யாணம் செய்து வைத்தார் சுந்தரர். அவிநாசியில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் ‘முதலைவாய்ப் பிள்ளை உற்சவம்’ நடைபெறுகிறது.

Avinasiyappar

அவிநாசி ஈசன் தாமரைக் குளம் அருகே எழுந்தருள, சுந்தரர் பதிகம் பாட, முதலை குழந்தையை அதன் வாய்க்குள் இருந்து உமிழும் ஐதீக விழாவும், பின்னர் அவிநாசியப்பர் ஆலயத்தில் சுந்தரர் அக்குழந்தைக்கு பூணூல் கல்யாணம் செய்து வைக்கும் வைபவமும் வெகு சிறப்பாக நடைபெறும்.

இவ்விழாவில் கலந்து கொண்டால் குழந்தைகளின் தோஷங்கள், மரண கண்டங்கள் அகலும் என்பது நம்பிக்கை. முதலை வாய்ப் பிள்ளையை சுந்தரர் வரவழைத்த தாமரைக்குளம், அவிநாசியப்பர் கோவிலின் தெற்கே 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அதன் அருகில் சுந்தரருக்கு ஆலயமும் உள்ளது.

 • பொதுப் பிரார்த்தனையை அவசியம் அனைவரும் படிக்கவேண்டும். நம் அனைவருக்கும் அதில் மிகப் பெரிய பாடம் ஒளிந்துள்ளது.

================================================

சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…

Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

(திருமண கோரிக்கைகளை பொருத்தவரை, அந்த பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்கவிருப்பவர் வேறு ஒருவர் தான். அவரும் மிக மிக உயர்ந்த மனிதர். அருளாளர். இருப்பினும், திருமண வரம் வேண்டி பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்புபவர்கள் அனைவரின் பெயர்களிலும் மத்தூரிலும் சிறப்பு வழிபாடு + அர்ச்சனை நடைபெறும். இங்கு அது சமயம், நாமே நேரில் வந்திருந்து அத்தனை பேருக்கும் மணிகண்ட குருக்களை கொண்டு சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்யவிருக்கிறோம். எனவே திருமண ப்ராப்தம் வேண்டி நமது பிரார்த்தனை கிளபுக்கு கோரிக்கை அனுப்பியவர்கள் யாவரும் மீண்டும் நமக்கு அதே மின்னஞ்சலை பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் (தெரியும் என்றால்) குறிப்பிட்டு தங்கள் அலைபேசி எண்ணுடன் நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்! ஏற்கனவே அனுப்பியிருந்தாலும் மீண்டும் அனுப்பவும்!!!)

================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : மயிலை திருவள்ளுவர் திருக்கோவில் குருக்கள் திரு.ஆறுமுகம் அவர்களின் மனைவி, ‘திருமுறை மாமணி’ திருமதி.கற்பகம் ஆறுமுகம் அவர்கள்.

திருமதி. கற்பகம் ஏற்கனவே நமது வாசகர்களுக்கு அறிமுகமானவர் தான். தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளை முறைப்படி கற்ற இவர் சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திருவிழாக்களில் தனது மகள் அனுஷாவுடன் சென்று திருமுறைகளை பாடி வருகிறார்.

2013 செப்டம்பர் நடைபெற்ற நமது தளத்தின் ஆண்டுவிழாவில் திருமதி.கற்பகம் குழுவினர் திருமுறை பாடிய போது...
2013 செப்டம்பர் நடைபெற்ற நமது தளத்தின் ஆண்டுவிழாவில் திருமதி.கற்பகம் குழுவினர் திருமுறை பாடிய போது…

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற நமது தளத்தின் ஆண்டுவிழாவில் இவர் தான் கடவுள் வாழ்த்து பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தை திரு.எம்.பாலசுப்ரமணிய ஓதுவார் மயிலை மாடவீதியில் உள்ள வெள்ளீஸ்வரர் கோவிலில் ஓதுவாராக தொண்டு புரிந்தவர். தந்தையிடம் திருமுறை குறித்த ஆரம்பக் கல்வி கற்ற இவர், பின்னர் மயிலை சைவ சித்தாந்த பெருமன்றதில் நடைபெற்று வந்த திருமுறை வகுப்பில் இனைந்து பிரபல ஓதுவார் கலைமாமணி திரு.சைதை நடராஜன் அவர்களிடம் திருமுறை கற்றார். அப்போது இவருக்கு வயது என்ன தெரியுமா? 15!

 நமது ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினர் 'தெய்வத்தின் குரல்' திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் திரு.ஆறுமுகம் & திருமதி.கற்பகம் ஆறுமுகம் அவர்களை கௌரவித்தபோது...

நமது ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினர் ‘தெய்வத்தின் குரல்’ திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் திரு.ஆறுமுகம் & திருமதி.கற்பகம் ஆறுமுகம் அவர்களை கௌரவித்தபோது…

இன்றும் காரணீஸ்வரர் திருக்கோவில் மற்றும் இதர சிவாலயங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும்போது இவர் வீதி பாராயணம் செய்வார். காரணீஸ்வரர் கோவில் பன்னிரு திருமுறை விழா நடக்கும்போது 12 நாட்களும் மாணவர்களுக்கு அனைத்து திருமுறைகளிலும் தலா ஒரு பதிகம் கற்றுத் தந்து அதன் மூலம் சுமார் 50 மாணவர்கள் பலன்பெறுவார்கள்.

மேலும் மயிலாப்பூர் பாலிகா பாலா ஸ்ரீ கற்பகாம்பாள் பாடசாலையில் மாணவர்களுக்கு தேவாரம் கற்றுத் தந்திருக்கிறார். இவர் மூலம் பல மாணவர்கள் தேவாரம் கற்றுள்ளார்கள்.

இன்றும் ஒவ்வொரு மார்கழி மாதமும் அதிகாலை இவர் அங்கம் வகிக்கும் ஸ்ரீ குமர குருபரர் தமிழிசை குழுவின் சார்பாக சுமார் 20 திருமுறை பாடிக்கொண்டே மயிலையில் முக்கிய வீதிகளில் வலம் வருவார்கள்.

திருவள்ளுவர் கோவிலில் நடைபெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவத்தில் இருவரும் பாடும்போது...
திருவள்ளுவர் கோவிலில் நடைபெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவத்தில் இருவரும் பாடும்போது…

இவரிடம் உள்ள திருமுறை ஆர்வம் இவரது மகள் அனுஷாவிடமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும், திருவள்ளுவர் கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவங்களின் போது திருமுறை பாடி பரவசப்படுத்துவார்கள்.

இவரது மகன் பாலகுமார் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டே தந்தைக்கு அவர் பணிகளில் உறுதுணையாக இருந்து வருகிறார்.

இவர்கள் குடும்பத்தில் அனைவரும் நமக்கு நல்ல அறிமுகம் உள்ளவர்கள். நட்புடன் பழகுபவர்கள்.

நமது பிரார்த்தனை கிளப்புக்கு திரு.ஆறுமுகம் அவர்கள் ஏற்கனவே தலைமை தாங்கியிருக்கிறார் என்பதால் அது பற்றி திருமதி.கற்பகம் அவர்களுக்கு தெரியும். இந்த வாரம் அவர் தான் தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். மேலும் இந்த வார பிரார்த்தனை காரணீஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி சன்னதியில் நடைபெறும். அடுத்த வாரம் திருவள்ளுவர் திருக்கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

அவருக்கு நம் மனமார்ந்த நன்றி!

================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…

இந்த வாரம் பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் அன்பர்களில் முதலாவது கோரிக்கை அனுப்பியிருக்கும் திரு.சேகர் அவர்கள் நம் தளத்தின் தீவிர வாசகர். இயன்றபோதெல்லாம் நமது பணிகளில் துணை நிற்பவர். நமது தளத்தின் பிரார்த்தனை கிளப் மீதும் இவருக்கு அபார நம்பிக்கை உண்டு. திருவெறும்பூர் ஏறும்பீசருக்கு நாம் வேலைவாய்ப்பு சிறப்பு அர்ச்சனை செய்தபோது, தனது பெயரை சேர்த்துக்கொள்ளும்படி சொன்னார்.

நிச்சயம் நல்லது நடக்கும். சற்று தாமதமானாலும் நல்லதே நடக்கும். நமது முயற்சியை மட்டும் கைவிடாமல் இருக்கவேண்டும். திருவருள் தானே கைகூடும்.

(சென்ற ஆண்டு தனது சகோதரி கணவரின் வேலைவாய்ப்புக்காக கோரிக்கை அனுப்பியிருந்த ஒரு வாசகியின் பிரார்த்தனை அண்மையில் இனிதே நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. விபரங்கள் விரைவில்!)

அடுத்து கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர், பல அறப்பணிகளை செய்து வருபவர், மிகவும் இளகிய மனம் கொண்டவர் என்று மட்டும் நம்மால் கூற முடியும். மிகுந்த தெய்வ பக்தி அவருக்கு இருக்கிறது. அவரது வார்த்தைகளில் இருந்தே எந்தளவு வேதனையில் இருப்பார் என்று புரிந்துகொள்ளமுடிகிறது. “பெண்ணைக் கொடுத்தோமா கண்ணைக் கொடுத்தோமா” என்று கூறுவார்கள். அந்தளவு பெண் கொடுப்பது முக்கியமான ஒன்று. என்ன சொல்வது? இது போன்று பலரின் வாழ்க்கை இருக்கிறது என்பது கசப்பான உண்மை. அவரது சகோதரி வாழ்க்கை சிறக்கவும், அவர் தம் குடும்பத்தில் அமைதி பூத்துக் குலுங்கவும் இறைவனை வேண்டுவோம்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே !

என்று சம்பந்தர் வழி நின்று அவர்களை வாழ்த்துவோம்.

பொதுப் பிரார்த்தனையாக அளிக்கப்பட்டுள்ளதை அவசியம் அனைவரும் படிக்கவேண்டும். நம் அனைவருக்கும் அதில் மிகப் பெரிய பாடம் ஒளிந்துள்ளது.

எல்லாரும் எல்லா வளமும் நலனும் பெறவேண்டும்!

================================================

சென்ற வார பிரார்த்தனை எப்படி நடந்தது?

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமையேற்ற மணிகண்ட குருக்கள் நமது பிரார்த்தனையை கடந்த இரண்டு வாரங்களும் மத்தூர் மகிஷாஷுர மர்த்தனி அம்மனிடம் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடுகள் செய்து நிறைவேற்றியிருக்கிறார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

நமது பிரார்த்தனை படத்தை பரிசளித்தபோது...
நமது பிரார்த்தனை படத்தை பரிசளித்தபோது…

சென்ற வாரம் பிரார்த்தனை சமர்பித்தவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறுகிற பட்சத்தில் மத்தூர் சென்று மகிஷாஷூர மர்த்தனி அம்மனை தரிசித்து அபிஷேகம் அர்ச்சனை முதலியவைகளை செய்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். நல்லது நடக்கட்டும்! அதுவும் விரைந்து நடக்கட்டும்!!!

================================================

* பிரார்த்தனைக்கு விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

Good job and peaceful life!

Dear Sundarji,

Greetings of the Day !!!

Hope all is well with God’s wishes and blessings !!

As you are aware of my recent struggles and come back from gulf with God’s grace and struggling for a new job right now.

At this stage and juncture request you to add me and put my request in group prayer for a good job and a peaceful life journey from hereafter .

Thanks & Regards,

Sekar.

================================================

சகோதரியின் வாழ்க்கை சிறக்க வேண்டும்; குடும்பத்தில் அமைதி வேண்டும்!

ரைட்மந்த்ரா ஆசிரியர் சுந்தர் அவர்களுக்கும் வாசகர்களுக்கும் வணக்கம்.

கடந்த சில மாதங்களாக ரைட்மந்த்ரா தளத்தை பார்த்துவருகிறேன். தளத்தில் வெளியாகும் பக்தி கதைகளையும், ஆலய தரிசன பதிவுகளையும் விரும்பி படித்து வருகிறேன். அனைத்தும் அருமை.

ஒரு நான் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பர்சேஸ் மேனஜராக பணிபுரிகிறேன். எனக்கு ஒரே சகோதரி. அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

எங்கள் பிரச்சனையே எங்கள் அக்காவின் கணவர் தான். அவர் கொஞ்சம் கூட குடும்பத்தில் அனுசரணையாக இல்லாமல் எப்போது பார்த்தாலும் ஏதாவது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார். சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் கோபப்படுகிறார். சண்டை போடுகிறார். இதனால் வீட்டில் நிம்மதி இல்லை. எப்போதும் சண்டை சச்சரவு தான்.

மேலும் அத்தானிடம் சிக்கனம் என்பதே மருந்துக்கு கூட இல்லை. இருவரும் பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை கொண்டு தேவையற்ற செலவுகளை செய்கிறார். உடம்பைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிற அக்கறையும் இல்லை. ஆரோக்கியத்தை கெடுக்கும் விதமாக முறையற்ற உணவுப் பழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். எங்கள் அக்கா குழந்தையுடன் படும் கஷ்டத்தை பார்க்க சகிக்கவில்லை. பெண்ணைக் கொடுத்திருக்கிறோம் என்பதால் எங்களால் எதுவும் பேச முடியவில்லை. நாங்கள் ஏதாவது பேசப் போய் பிரச்னை மேலும் பெரிதாகிவிட்டால் என்ன செய்வது என்கிற பயத்தின் காரணமாக அமைதியாக இருக்கிறோம். எங்களுக்கு ஒரே நம்பிக்கை பிரார்த்தனை தான்.

என் சகோதரியின் கணவர், மனம் திருந்தி இல்லறம் நல்லறமாக மாற அனைவரும் பிரார்த்திக்கவேண்டும்.

நன்றி!

பெயர், ஊர் வெளியிட விரும்பாத
வாசகன்

================================================

பொது பிரார்த்தனை

நடிகர் விவேக்கின் மகன் திடீர் மரணம் – உணர்த்துவது என்ன?

நடிகர் விவேக் அவர்களின் மகன் பிரசன்னகுமார் (வயது 13​) எதிர்பாராத விதமாக மூளைக் காய்ச்சலால் நேற்று மரணமடைந்து விட்டார். தீவிர காய்ச்சலால் கடந்த நாற்பது நாட்களுக்கு மேல் வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். இன்னிலையில் நேற்று நண்பகல் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

Actor Vivek Son

ஒட்டுமொத்த திரையுலகமும் இதனால் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறது. இதனால் அவரது குடும்பத்தார் மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறார்கள். விவேக் அவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.

பசுமை கலாம் திட்டத்திற்கு விவேக் எண்ணற்ற உதவிகளை செய்திருக்கிறார். மேலும் TREE BANK முல்லைவனம் அவர்களுக்கு மரக்கன்றுகள் எடுத்துச் செல்ல ஒரு பிக்கப் வாகனத்தையும் வாங்கி கொடுத்திருக்கிறார். மார்கெட் உச்சத்தில் இருக்கும் போது ஒரு நடிகர் செய்யும் இது போன்ற விஷயங்களுக்கும் மார்கெட் இழந்த பின்னர் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இருக்கும்போது வாரி வழங்கும் சினிமா நட்சத்திரங்கள் (அப்படி சீன் போடுபவர்கள்) தங்கள் வரவுக்கான வழி அடைக்கப்பட்ட பிறகு, அள்ளி அல்ல கிள்ளிக் கூட கொடுக்கமாட்டார்கள். அவர்களில் விவேக் வித்தியாசமானவர். பல அறப்பணிகளை செய்து வருபவர். இன்றும் கூட ஒவ்வொரு மாதமும் ஷிர்டி சாய்பாபாவின் பெயரில் அன்னதானம் செய்து வருகிறார். ஊடக வெளிச்சமின்றி.

அவருக்கு இப்படி ஒரு சோகம் எனும்போது அதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

செல்வன் பிரசன்னகுமாரின் ஆன்மா, நற்கதியை அடைந்து சிவபதத்தில் நிலைத்திருக்கவும், அவரை இழந்து வாடும் விவேக் அவர்களின் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் இறைவனை வேண்டுவோம்.

முகநூல் நண்பர் ஷங்கர் ராஜரத்தினம் கூறியதிலிருந்து மேற்கொண்டு தொடர்கிறோம்…

எவ்வளவு பெரிய பைத்தியக்காரர்கள் நாம்..?

இப்போது நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட துயரம்…

இதற்கு முன் பாடகி சித்ராவிற்கு ஏற்பட்டது…

இது போன்ற துயர விபரீதங்கள் நம் மனதை மிகவும் பாதிக்கின்றன… அதீத சோகத்திற்குள் தள்ளுகின்றன..

கஷ்டங்கள் நம்மை தாக்கக் கூடாது; தாக்கினாலும் அதிலிருந்து தப்பிக்கக் கூடிய அளவிற்கு வாய்ப்பும் வசதியையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே, மனிதர்கள் நாம் ஏதேதோ செய்து பணம் ஈட்டுகிறோம்..?

வேலை, சம்பளம் என்று இராப்பகலாக உழைக்கிறோம்..?

மனதிற்கே ஒப்பில்லாத பல காரியங்களும் செய்கிறோம்..?

ஆனால், இது போன்ற நிகழ்வுகளில் நமக்கு புரிவது இதுதான்:

எல்லா விஷயங்களையும், எல்லா நேரமும் மனிதனால் control செய்ய முடியாது..! நாம் செய்யும் காரியங்கள் சக்சஸ்ஃபுல்லாக நடக்கும் போது நாம் அந்நிகழ்வுகள் நம் சாமர்த்தியத்தால் மட்டுமே நடக்கின்றன என்று நினக்கிறோம்…! நம் கையில் இல்லாத ஒரு element நமக்கு சாதகமாய் இருந்திருக்கிறது என்பதை நம்ப மறுக்கிறோம்…!

எல்லாமே நம் கையில்தான் என்று எண்ணும் நிலையில் நாம் இருக்கும் நேரம், நமக்குக் கொஞ்சமும் warning கொடுக்காமல், ‘எங்கிருந்து வருகிறது..?’ என்று நம்மால் யூகிக்கக் கூட முடியாமல், ‘தடால்’ என்று நம் தலையில் ஒரு இடி இறங்குகிறது….!

‘உன் கையில் எதுவுமே இல்லை….!’ என்று மிகக் குரூரமாக சொல்லிவிட்டுப் போகிறது…! அதுதான் விதியின் சுபாவம்……!

எவ்வளவு பெரிய பைத்தியக்காரர்கள் நாம்..?

கடவுளிடம் போய்:
‘எனக்கு நல்ல வேலை, சம்பளம், ப்ரொமொஷன் வேண்டும்..!’
‘எனக்கு அதிகமாய் பணம், செல்வம் வேண்டும்..!‘
‘எனக்கு எல்லோரின் கைதட்டல், புகழ் வேண்டும்..!’
என்றெல்லாம் வேண்டுகிறோமே..?

இவை எவ்வளவு சின்ன விஷயங்கள்…?

இவையெல்லாம் போய்விட்டாலும், நம்மால் மேனேஜ் செய்யக் கூடிய விஷயங்கள்..! இதற்காகவெல்லாம் வேண்டிக் கொண்டிருக்கும் அறிவிலிகள் நாம்…! அந்த எல்லாம் வல்ல இறையிடம், அந்த இரட்சகனிடம், நாம் இரைஞ்சி வேண்ட வேண்டிய ஒன்றே ஒன்று:

“பெருமானே..! எங்களால் வெல்ல முடியாத, ஒன்றுமே செய்ய முடியாத இந்த ‘விதி’, இப்படி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எங்களைத் தாக்கி, வாழ்நாளெல்லாம் செலவிட்டு சிறு குருவி போல் நாங்கள் செய்து வைக்கும் எங்கள் சந்தோஷமான வாழ்க்கை என்னும் கூட்டை விபரீதமாய் அழித்து விட்டுப் போகாமல் எங்களைக் காத்திடு அய்யா..! அது மட்டும் போதும்..!“

இதுவே நாம் இறைவனிடம் சமர்பிக்க கூடிய பொது பிரார்த்தனை.

================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

நண்பர் சேகர் அவர்களுக்கு நல்லதொரு வேலை கிடைத்து அவர்தம் பொருளாதார பிரச்சனைகள் முடிவுக்கு வந்து அவருக்கு மன அமைதி கிடைக்கவும் அவர் தம் சுபிக்ஷமும் சந்தோஷமும் பெருகவும், ஊர் பெயர் அறியா அந்த வாசகரின் சகோதரியின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் பூசல்கள் முடிவுக்கு வந்து அவர் தம் குடும்பத்தினரோடு சந்தோஷமாகவும் சௌக்கியமாகவும் இருக்கவும், அந்த வாசகரின் தொண்டு மேன்மேலும் பெருகவும், எந்த வித மனச் சுமையுமின்ரி அவர் தன் பணிகளையும் திருதொண்டுகளையும் தொடரவும் இறைவனை பிரார்த்திப்போம்.

நடிகர் விவேக் அவர்களின் மகன் பிரசன்னகுமாரின் ஆன்மா நற்கதியை அடைந்து இறைவனின் திருப்பாதத்தில் நிலைத்திருக்க்கவும் பிரார்த்திப்போம்.

மேலும் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திருமதி.கற்பகம் ஆறுமுகம் அவர்கள் மேன்மேலும் பல மேடைகளை காணவும், அவரது திருமுறை இசைத்தொண்டு தொடரவும், அவரும் அவர்தம் குடும்பத்தினரும் சிவனருளால் ஆரோக்கியமான வாழ்வும், அனைத்து வித செல்வங்களையும் குறைவறப் பெறவும், ஆடல்வல்லானை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : நவம்பர் 1, 2015 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மத்தூர் மகிஷாஷுர மர்த்தனி அம்மன் கோவிலில் குருக்களாக தொண்டாற்றும் திரு.மணிகண்ட குருக்கள் (36)

[END]

9 thoughts on “‘விதியே உனக்கு ஒரு வேண்டுகோள்!’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் (Rightmantra Prayer Club)

 1. வேலை நேரம் முடிந்த பிறகு கூட இவ்வளவு நேரம் பிரார்த்தனை கிளப் பதிவுக்காக காத்திருந்தேன். நான் காத்திருந்தது வீண் போகவில்லை.

  எந்த பதிவை நான் படிக்க தவறினாலும் (அப்படி எதுவும் இல்லை. சேர்த்து வைத்து படித்துவிடுவேன்.) பிரார்த்தனை பதிவை மட்டும் படிக்கத் தவறியதில்லை.

  இந்த வார பிரார்த்தனை பதிவின் மையக் கதை அருமை. உண்மை தான். சுந்தர் போன்றார் இந்த பூமியில் நடமாடியிருக்கிறார்கள் என்பதே நமக்கு பெருமை தான். அதுவும் அவர்கள் நமக்கு திருமுறை என்னும் அருமருந்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதை அதை விட பெருமை.

  நம் தளத்திற்கு வந்த பிறகு தான் திருமுறைகளின் அருமைகளை உணர்ந்தேன். தற்போது சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் திருமுறைகளை படித்து வருகிறேன். எளிய சிறிய பாடல்களை என் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறேன்.

  பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் திரு.சேகர் மற்றும் முகமறியா அந்த வாசகரின் கோரிக்கைகள் நிச்சயம் சிவனருளால் நிறைவேறும். மண்ணில் நல்ல வண்ணம் அனைவரும் வாழலாம்.

  விவேக் அவர்களின் மகனுக்கு ஏற்பட்ட இந்த திடீர் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. நல்லவர்களுக்கு தான் எத்தனை எத்தனை சோதனை? நிச்சயம் அவர் மகனின் ஆன்மா நற்கதியை அடைந்திருக்கும். அவரும் அவர் குடும்பத்தினரும் ஆறுதல் பெற மகா பெரியவாவை வேண்டிக்கொள்கிறேன்.

  திரு.ஷங்கர் ராஜரத்தினம் அவர்கள் கூறியிருக்கும் ஒவ்வொரு வரியும் நம் இதயமெநும் கல்வெட்டில் பொரிக்க வேண்டியவை.

  ஒவ்வொரு வரமும் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் சான்றோர்களை நினைக்கும்போது சிலிரிப்பாக இருக்கிறது. திருமதி.கற்பகம் மிக மிக அருமையான தேர்வு. அவர்களை பற்றி ஏற்கனவே ‘பணத்தை தேடி வரவழைத்த பதிகம்’ பதிவில் படித்திருக்கிறேன். அவரது திருமுறை தொண்டு சிலிர்க்க வைக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

  அனைவரின் பிரார்த்தனை நிறைவேறி நலமோடு வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்.

  – பிரேமலதா மணிகண்டன்,
  மேட்டூர்

  1. கூட்டு பிரார்த்தனையில் பங்கு பெற்ற அணைத்து நல்லுங்களுக்கும் மிக்க நன்றி.

 2. மிகவும் அருமை. நவம்பர் 1ல் நானும் பிரார்த்தனை seikiren

 3. விதியே உனக்கொரு வேண்டுகோள்..

  பதிவின் தலைப்பே …பதிவின் ஆவலை தூண்டியது.
  நம்முடைய சொத்து என்ன? அருளா? இல்லை பொருளா? என்று ஆரம்பத்திலேயே ஒரு கேள்வியை கேட்டு ..நம்முடைய சொத்து அருளாகிய திருமுறைகள் தான் என்று எடுத்து சொல்லியது.
  விதியையே புரட்டி போட்ட “எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே” என்ற பதிகம்,பதிகம் ஒட்டிய நிகழ்வு..சிலிர்த்து போனேன்.

  மேலும் அவிநாசியப்பர் மற்றும் பெருங்கருணைநாயகி தரிசனும் வாய்க்க பெற்றோம்.இப்பதிவு படிக்கும் அனைவருக்கும் அவினாசியப்பரின் அருள் கிட்டிட வேண்டுகிறேன்.அப்பர் திருத்தாண்டகத்தில் அவிநாசி கண்டாய், அண்டத்தான் கண்டாய்’ எனப் பாடுகிறார்..என்றால் நாம் அனைவரும் இத்தலத்தின் மகிமையை புரிந்து கொள்ள வேண்டும்.புதிதாய் ஒரு தலம் , ஒரு பதிகம் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

  பொது பிரார்த்தனை – அனைவரும் படிப்பதோடு மட்டும் இன்றி மனதில் நன்றாக இறுத்தி கொள்ள வேண்டும்.பதிவின் தலைப்பை ஒட்டிய பொது பிரார்த்தனை செய்தி..நம்முடைய தினசரி பிரார்த்தனையில் இதனை நாம் சேர்க்க வேண்டும்.

  “பெருமானே..! எங்களால் வெல்ல முடியாத, ஒன்றுமே செய்ய முடியாத இந்த ‘விதி’, இப்படி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எங்களைத் தாக்கி, வாழ்நாளெல்லாம் செலவிட்டு சிறு குருவி போல் நாங்கள் செய்து வைக்கும் எங்கள் சந்தோஷமான வாழ்க்கை என்னும் கூட்டை விபரீதமாய் அழித்து விட்டுப் போகாமல் எங்களைக் காத்திடு அய்யா..! அது மட்டும் போதும்..!“

 4. சுந்தரர் புரிந்த லீலைகள் திருவாரூரில் நடந்ததால் அடியேன் எனக்கும் மிக மிக சந்தோசம் .

  நடிகர் விவேக் அவர்களின் துக்கம் எவருக்கும் தாங்க முடியாத சோகம் //. சொல்லிமாளாது சார்//

  கடவுள் தான் அவர்களின் குடுமபதிருக்கு ஆறுதல் தரவேன்றும் ..
  தங்களின் பிரார்த்தனை கிளப்பில் மனமுருக வேண்டி கொள்வோம் .//
  பிரார்த்தனை கிளப்க்கு தலைமை தாங்கும் திருமதி கற்பகம் , & திரு. ஆறுமுகம் மற்றும் அவர்கள் மகள் அனுஷாவின் ஆன்மிக பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

  வழக்கம் போல் தங்களின் தலைப்பு அட்டகாசம் சார்.

  நன்றி,
  தங்களின்
  சோ. ரவிச்சந்திரன்

 5. சுந்தரரின் கதையை தங்கள் தளம் மூலம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. பங்குனி உத்திரம் என்றால் மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் மற்றும் முருகன் தெய்வானை திருமணங்கள் தான் நினைவுக்கு வரும், இப்பொழுது அவினாசியில் பங்குனி உத்திரத்தில் நடைபெறும் முதலைவாய் பிள்ளை உற்சவமும் நினைவுக்கு வந்து விடும். இந்த கதையை படிக்கும் பொழுது ஞானக் குழந்தை , இறந்து போன பூம்பாவை யை பதிகம் பாடி உயிர் பெறச் செய்த நிகழ்வும் நினைவுக்கு வருகிறது. அவினாசி கோவில் கோபுரம் பார்க்கும் பொழுது நாம் அங்கே நின்று கோபுர தரிசனம் செய்வது போல் உள்ளது. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திருமதி கற்பகம் அவர்களை நம் தளம் சார்பில் திருவள்ளுவர் கோவிலில் நடைபெற்ற விநாயகர் பூஜையின் பொழுது பார்த்து இருக்கிறேன். அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் வாசகர்களின் பிரார்த்தனை ஈசன் அருளால் கண்டிப்பாக நிறைவேறும்/

  திரு விவேக் அவர்களின் மகன் பிரசன்னகுமாரின் விதியை நினைத்து மனம் வேதனை அடைகிறது. பாபா தனது பக்தரை ஏன் இந்த சோதனைக்கு ஆளாகினார் என்று தெரியவில்லை. அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலை அடைய பிரார்த்திப்போம்.

  விதி அதன் விதிப்படி செயல்படுகிறது.

  லோகா சமஸ்தா சுகினோ பவந்து

  ராம் ராம் ராம்

  நன்றி
  உமா வெங்கட்

 6. கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்ற அனைத்து நல்லுங்களுக்கும் மிக்க நன்றி.
  இறைவனின் பேரருள் அனைவர்க்கும் உரியதாகட்டும். . ஓம் சிவ சிவ ஓம்!

 7. சுந்தர்ஜி,

  நடிகர் விவேக் மாதிரியான இழப்பை ஏற்கனவே அறிந்து இருந்தாலும், மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். இந்த மாதிரி நேரங்களில் தான் கடவுள் பெரிதா விதி பெரிதா என மனது ஒரு போராட்டத்தில் ஈடுபடுகிறது. ஒரு சில இழப்புகளை என்ன செய்தாலும் ஈடுகட்ட முடிவதில்லை. உண்மையில் இந்த வார பொது பிரார்த்தனை எல்லா காலங்களிலும் , அனைத்து மக்களுக்கும் உரிய ஒன்று. நம் வாசகர்கள் எல்லோரும் இந்த அகால இழப்புகள் இன்றி வாழ பெரியவா துணை புரிய வேண்டும் என இப்போது மட்டுமல்ல எப்போதும் பிரார்த்தனை செய்வோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *