ஒரு கட்டத்தில் பிரபலங்களில் வீடுகளில் மட்டுமே திருடுவான். அதுவே பிரபலங்களுக்குள் பிரஸ்டீஜ் இஸ்யூவாக மாறியது. அவன் கொள்ளையடித்தால் தான் நாம் சமூகத்தில் பெரிய மனிதர் என்று எண்ணவே ஆரம்பித்தனர்.
ஊடகங்கள் அவனுக்கு “நட்சத்திர திருடன்” என்கிற பெயரை கொடுத்தன. ஒவ்வொரு முறையும் இவனது கொள்ளை தலைப்பு செய்தியாகும் போதும் மக்கள் ஆங்காங்கு நின்று இவனை பற்றி பேசுவது வழக்கமாயிற்று. போலீசாருக்கோ அது மிகப் பெரிய கௌரவப் பிரச்னையாக உருவெடுத்தது. அவனை எப்படியாவது பிடிக்கவேண்டி கண்ணி வைத்து காத்திருந்தனர்.
வழக்கம்போல ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் அவன் திருடச் சென்றான். அவர் மேட்சுக்கு போயிருப்பார் என்று கருதி அவர் பங்களாவிற்குள் நுழைந்தான்.
என்ன விஷயம் என்றால் அந்த வீடு முழுக்க முழுக்க ஒரு செக்யூரிட்டி ஏஜென்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. கண்ணுக்கு தெரியாத அல்ட்ரா சானிக் கதிர்களால் வீடு முழுக்க பாதுக்கப்பு வேலி போடப்பட்டிருந்தது. அன்னியர் எவர் பிரவேசித்தாலும் அலாரம் அடிக்க ஆரம்பித்துவிடும். வெளியே இரும்பு கேட்டுகள் தானாகவே லாக் ஆகிவிடும். எனவே இவன் எக்குத்தப்பாக உள்ளே மாட்டிக்கொண்டான்.
மறுநாள் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை தலைமை அதிகாரி நீண்டநாள் கண்ணாமூச்சி காட்டி வந்த நட்சத்திர கொள்ளையன் பிடிப்பட்டான் என்றும் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உரிய தண்டனை பெற்றுத் தருவோம் என்றும் கூறினார்.
அவனது வீட்டை போலீஸார் சோதனையிட்ட போது அவன் ஆண்டுக்கணக்கில் திருடிய பல பொருட்கள் பத்திரமாக மீட்கப்பட்டன. அரிய கலைப் பொக்கிஷங்கள், பிரபலங்களின் உடமைகள், வைரங்கள், தங்க நகைகள், ரத்தினங்கள் என அனைத்தையும் கைப்பற்றினர். கூடவே டஜன் கணக்கில் ஓவியங்களும் கிடைத்தன. மதிப்பிட்டாளரை கொண்டு அவற்றை மதிப்பீடு செய்த போது அவை பல கோடிகள் விலை போகக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து பொருட்களையும் உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்ட நிலையில், ஓவியங்கள் மட்டும் யாரும் உரிமை கோராமல் கிடந்தன.
போலீஸார் அவனை விசாரித்தபோது, அவை யாவும் தான் வரைந்த ஓவியங்கள் என்றும், தான் திருடனாவதற்கு முன்பு ஓவியக் கல்லூரியில் சிறிது காலம் படித்ததாகவும் எனவே ஓவியராக பணியாற்றியதாகவும் கூறினான். அந்த ஓவியங்களின் மதிப்பை அவன் கேட்டபோது அவனால் நம்ப முடியவில்லை.
=============================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
=============================================================
விசாரணை முடிந்து அவனுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவன் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு தொலைக்காட்சிகள் மற்றும் செய்தியாளர்கள் அவனை பேட்டி காண திரண்டனர்.
அவர்கள் அவனிடம் “நீ இதுவரை கொள்ளையடித்ததிலேயே மிகப் பெரிய மனிதர் யார் என்று கருதுகிறாய்?” என்று கேட்டார்கள்.
சில நொடிகள் மௌனத்திற்கு பின் அவன் சொன்னான் : “என்னைத் தான்!” என்றான்.
ஆம்… அவன் சொல்வது உண்மைத் தான். தன்னிடம் உள்ள பொக்கிஷங்களின் மதிப்பை அறியாமல் அவன் வெளியே சென்று பொருளையும் புகழையும் தேடினான். அதற்காக தன் வாழ்க்கையையே அவன் பணயம் வைத்தான்.
ஒவ்வொருவரிடமும் இது போன்ற எண்ணற்ற பொக்கிஷங்கள் உள்ளன. அவற்றின் பேக்கேஜிங் தான் நபருக்கு நபர் வேறுபாடும். அபரிமிதமான தன்னம்பிக்கை உடையவர்களே அதை உணர முடியும். தங்களிடம் உள்ள பொக்கிஷங்களின் மதிப்பை உணராமல், வாழ்க்கையை, தங்களுக்குரிய அங்கீகாரத்தை வெளியே சென்று தேடுபவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வார்கள்.
தங்கள் திறமைகளை அறியாமல் அவற்றை மதிக்கத் தெரியாமல், தங்கள் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கத் தவறி, துடுப்பிழந்த படகு போல கண்மூடித்தனமாக செல்லும் அனைவரும் மிகப் பெரிய திருடர்கள் தான். ஆம், அவர்கள் எதிர்காலத்தை அவர்களிடமே அவர்கள் திருடுகிறார்கள். இவர்களை ஏமாற்ற வெளியே இருந்து யாரும் வரத்தேவையில்லை. அவர்களை அவர்களே ஏமாற்றிக்கொள்வார்கள்.
=============================================================
Also check…
எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!
வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?
எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?
What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?
இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!
பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?
ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?
விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?
நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?
‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?
சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?
இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?
நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!
அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?
நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!
மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?
=============================================================
Also check :
சேவைக்கு சுவாமி விவேகானந்தர் கொடுத்த பரிசு!
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!
‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!
களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!
“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!
பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !
அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?
ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70
வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67
யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!
ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்
நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ?
[END]
எச்செல்லேன்ட் அர்டிச்லே. நாம் நம் மேல் நம்பிக்கை கொண்டள்லே எல்லா கர்ரியகளும் சாதியம்மாகும்.
ச.நாராயணன்.
சென்னை.
அருமையான கதை. அதற்கு சிகரம் வைத்தாற்போல சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி. உண்மையிலும் உண்மை.
“உனக்கு தேவையான எல்லா உதவிகளும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன” என்பது சுவாமி விவேகானந்தரின் வாக்கு.
நம் தளத்தை படிக்கும் சாமானியர் கூட சாதனையாளராக மாறிவிடுவார்கள்.
அருமை சுந்தர் ஜி