Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, May 18, 2024
Please specify the group
Home > Featured > பாபா ஓர் கருணாலயம், பாதம் தான் கமலாலயம்!

பாபா ஓர் கருணாலயம், பாதம் தான் கமலாலயம்!

print
ன்று ஷீரடி சாய்பாபா மகாசமாதியடைந்த நாள். இந்த விஜயதசமி திருநாளில் இந்த பதிவை அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஒவ்வொரு பதிவும் நம்மை பொறுத்தவரை ஒரு தவம் போல என்பதை நீங்கள் அறிந்ததே.  எனவே சற்று அலசி ஆராய்ந்து நீண்ட நெடிய தேடலுக்கு பிறகு இதை அளிக்கிறோம். நிச்சயம் உங்களை கவரும் என்று நம்புகிறோம்.

Shirdi Sai 2

* நக்கீரன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘ஓம்’ இதழில் திரு.பா.சி.ராமச்சந்திரன் என்பவர் எழுதிய கட்டுரை இது. சிறந்த முறையில் தனது சாயி அனுபவத்தை வடித்திருக்கும் கட்டுரை ஆசிரியருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

* * புகைப்படங்கள் சென்னை மேற்கு மாம்பலம் ஷோபனா திருமண மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஷிர்டி சாயி சிறப்பு கண்காட்சியில் நாம் எடுத்தவை.

EXPECT THE UNEXPECTED. THAT IS RIGHTMANTRA!

Shirdi Sai 8பாபா ஓர் கருணாலயம், பாதம் தான் கமலாலயம்!

ந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் வியப்பு மேலிடுகிறது; மெய்சிலிர்க்கிறது;  அதைப் பற்றி பேசும்போது நா தழுதழுக்கிறது; கண்களில் மெல்ல நீர் கசிகிறது; அப்படி என்னதான் நடந்துவிட்டது? இது சாத்தியமா? சாத்தியமாகி விட்டதே! அதுதான் சத்தியம்- நிஜம்!

அதைச் சொல்வதற்கு முன்னால், இதற்குள் என் மனம் எப்படி புகுந்தது என்பதையும் சொல்ல வேண்டு மல்லவா?

ஒருநாள் காலை நேரம்; நான் பூஜை புனஸ் காரங்களை முடித்துக்கொண்டு அன்றைய நாளிதழைப் படித்து முடித்தபோது நேரம் ஒன்பது மணி.

Shirdi Sai 3
வீட்டு வாயிலில் யாரோ வந்திருப்பதாக என் மனைவி தெரிவித்தாள். போய் பார்த்தேன். மூன்று பழுத்த பக்தகோடிகள் நெற்றி நிறைய திருநீறும் குங்குமமுமாகக் காட்சியளித்தனர். அதில் ஒருவர் காவி உடையில் இருந்தார்.

மூவரும் என்னைப் பார்த்ததும், “ஜெய் சாய்ராம்’ என்று ஒரே குரலில் உச்சரித்தார்கள். எனக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் கைகூப்பி அவர்களை யாரென்று விசாரித்தேன்.

Shirdi Sai 4“நாங்கள் ஷீரடி பாபாவின் பக்தர்கள். உங்களைப் பற்றி கேள்விப்பட்டோம். அதுதான் பேச வந்திருக் கிறோம்” என்றார்கள். “நான் சாய்பாபா பக்தன் இல்லையே- இவர்கள் ஏன் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள்?’ என்று மனதிற்குள் நினைத்தேன். ஆனால் மூன்று பேரையும் உள்ளே அழைத்து அமர வைத்தேன். பின்பு அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

“சாய் ராம்… இவர் பேரு ராமமூர்த்தி… இவர் திருவொற்றியூர் வடுகர் பாளையத்திலுள்ள ஷீரடி சாய்பாபா கோவிலின் நிறுவனர். இவர் சுதர்ஸனம். கோவில் வேலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். என் பெயர் ஆஞ்சனேய சுவாமி. எனக்கு எல்லாமே பாபாதான்.”

“மிகவும் சந்தோஷம். எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள்?” என நான் கேட்டேன்.

“சாய்ராம்… எங்கள் சாய்பாபா கோவிலில் ஒவ்வொரு குருவாரமும் (வியாழக்கிழமை) மிகப்பெரிய அளவில் பாபாவுக்கு பூஜை நடைபெறும். அதற்குப் பிறகு குறைந் தது ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்கிறோம். பூஜை காலை பத்து மணிக்குள் முடிந்துவிடும். அன்னதானம் பன்னிரண்டரை மணிக்கு ஆரம்பமாகும்.

Shirdi Sai 5அந்த இரண்டரை மணி நேரத்தில் ஒரு ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெறும். பலர் வந்து உரையாற்றி இருக்கிறார்கள். வரும் வியாழக்கிழமை நீங்கள் பேச வேண்டும்” என்றார் ஆஞ்சனேய சுவாமி.

“நானா? மன்னிக்கவும். ஷீரடி சாய்பாபாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, அவர் வரலாறே எனக் குத் தெரியாது! நான் எப்படி பேசுவது?” என்றேன்.

“அப்படி சொல்லக்கூடாது. அவசியம் நீங்கள் பேசியே ஆகவேண்டும்” என்று மூவரும் வற்புறுத்திச் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“ராமாயணம், மகாபாரதம், அடியார்களின் வரலாறு என்றால் பேசுகிறேன். ஆனால் சாய்பாபாவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாதே…” என்று உண்மையைச் சொன்னாலும், “”நீங்கள் பேசப் போகிறீர்கள். பேசியே ஆகவேண்டும். இது பாபாவின் கட்டளை. நோட்டீஸில் உங்கள் பெயரைப் போட்டு விடுகிறோம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். நான் பிரமை பிடித்து உட்கார்ந்திருந்தேன்.

முடிவில், “முயற்சி செய்து பார்க்கலாமே. இன்று திங்கட்கிழமை… இன்னும் வியாழக்கிழமைக்கு மூன்று நாட்கள் இருக்கிறதே’ என்று மனதை திடப்படுத்திக் கொண்டேன். அன்று மாலையே தேரடியில் ஒரு புத்தகக் கடைக்குச் சென்று, ஷீரடி பாபாவின் சரித்திரம், அவர் செய்த அற்புதங்கள் சம்பந்தப்பட்ட சில நூல்களை வாங்கிச் சென்றேன். அன்றிரவே ஏதோ பரீட்சைக்குப் படிக்கும் மாணவனைப்போல் படித்து முடித்தேன். மனம் தெளிவடைந்தது. நமக்குத் தெரியாததைப் பற்றி பேச முடியுமா என்கிற பயம் அகன்றது. மனதிற்குள் பாபா புகுந்துவிட்ட மாதிரி ஓர் எண்ணம் தோன்றியது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ ராகவேந்திரரையே பூஜித்த என் மனத்தின் ஓர் ஓரத்தில் பாபாவும் உட்கார்ந்து கொண்டார். ஜாதி, சமயம், இனப் பாகுபாடுகளை அகற்றிய மகான்கள் துணையிருப்பார்கள் என்கிற துணிவில் வியாழக் கிழமைக்குத் தயாரானேன். முதன்முதலில் பாபாவைப் பற்றி பேசப் போகிறோமே என்பதற்காக ஒரு காகிதத் தில் சில குறிப்புகளை வைத்துக்கொண்டு காத்திருந் தேன். என்னைக் கோவிலுக்கு அழைத்துப் போக ஆஞ்சனேய சுவாமி வந்தார். அவருடன் புறப்பட்டுச் சென்றேன்.

கோவிலுக்கு வெளியேயும் உள்ளேயும் ஏராளமானோர் காத்திருந்தனர். அதில் முக்கால்வாசி பேர் தாய் மார்கள். ஒலிபெருக்கியில் சாய்ராம் பஜனை இனிமை யாக ஒலித்துக் கொண்டிருந்தது. பாபாவின் உயர்ந்த பீடத்தருகே என்னை அழைத்துச் சென்றனர். பாபாவுக்கு மங்கள ஆரத்தி எடுத்தார்கள். நான் அவரை வணங்கி விட்டு, உற்றுப் பார்த்தேன். அவர் என்னையே பார்க்கிற மாதிரி ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. மானசீகமாக, “பாபா, உங்கள் சரித்திரத்தை  முழுவதுமாக இப்போதுதான் அறிந்தேன். உங்களைப் பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொல்ல நீங்கள்தான் அருள்புரிய வேண்டும்…’ என்று மனதார வேண்டிக்கொண்டு மேடை ஏறினேன். ஸ்ரீஆஞ்சனேய சுவாமி என்னைப் பற்றி மக்களுக்கு ஒலிபெருக்கியில் தெரிவித்த பிறகு சொற்பொழிவைத் தொடங்கினேன்.

Shirdi Sai 6முதலில் சுலோகங்களைச் சொல்லிவிட்டு பாபாவைப் பற்றி பேசத் தொடங்கினேன். என்னே ஆச்சரியம்! நான் ஒரு காகிதத்தில் சில குறிப்புகளை எழுதி வைத்திருந்தும், அதை பையிலிருந்து எடுக்காமலேயே அவர் செய்த ஒவ்வொரு அற்புதங்களும் மடமடவென என் நாவிலிருந்து வெளிவரத் தொடங்கின. மக்கள் கண்களில் நீர்மல்க பாபாவின் பெருமைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் கடிகாரத்தைப் பார்த்தேன். சரியாக மணி பன்னிரண்டரை. என்னை அறி யாமலே நான் பேசியிருக்கிறேன். கோவில் நிர்வாகிகளும் மக்களும் பாராட்டினார்கள். ஸ்ரீ ஆஞ்சனேய சுவாமி மட்டும் அட்சரலட்சம் பெறும் ஒரு வார்த்தை சொன்னார்.

“சுவாமி, நீங்கள் பேச வில்லை. பாபாவே உங்களில் புகுந்து உங்களைப் பேச வைத்திருக்கிறார்” என்றார்.

மெய்யான வார்த்தைகள். எந்தக் குறிப்பையும் பார்க்காமல், பாபாவைப் பற்றி இரண்டரை மணி நேரம் என்னால் எப்படிப் பேச முடிந்தது? எனக்கே வியப்பாக இருந்தது. அதுமுதல் அடிக்கடி சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்தேன். பாபா வைப் பற்றியும், வள்ளலார், பட்டினத்தார், ராமாயணம் என பல சொற்பொழிவுகளைச் செய்தேன். எல்லாம் அவர் அருள்!

Shirdi Sai 7

இந்நிலையில் என் மகனின் வேலை காரணமாக தென் சென்னையின் ஓர் எல்லை யில் குடிபோக நேர்ந்தது. திருவொற்றியூரை விட்டுப் பிரிய மனமில்லை. வள்ளலாரும், பட்டினத்தடிகளும், தியாகராஜ சுவாமிகளும், முத்துசுவாமி தீட்சிதரும், காஞ்சி மகா பெரியவரும் அடிக்கடி வந்து சென்ற பூமி அது. திருவண்ணாமலையைப்போல் பல ஞானிகளும் சித்தர்களும் உலாவிய பூமி திருவொற்றியூர். ஆன்மிக நாட்டத்தை நாற்பதாண்டுகட்குமுன் எனக்குள் ஏற்படுத்திய அற்புதத் தலம் அது. இருப்பினும் உலகிற்காக வேறு வாழ்க்கை வாழ வேண்டியிருக்கிறதே? அந்த நேரம் பார்த்து என் மகன்,  “அப்பா… இந்த ஊரிலேயே அற்புத மான சாய்பாபா கோவில் இருக்கிறது. போய் வாருங்கள்” என்றான். அவன் என்னைவிட தீவிர சாய் அடியவன்.

Shirdi Sai 9

நானும், என் மனையாளும் அந்தக் கோவிலுக்கு ஒருநாள் மாலை சென்றோம். பல ஏக்கர் பரப்பளவில், பளிங்கினாலான மிகப் பெரிய கோவில். சிவன், மகாவிஷ்ணு, நவகிரக சந்நிதி என்று எல்லாமே  பளிங்கு மண்டபங்கள்.  பாபாவின் உயர்ந்த பீடத்துக்கு எதிரே ஆயிரம் பேர் அமர்ந்து தியானம் செய்ய மண்டபம். எல்லாவற்றையும் தரிசித்துவிட்டு வெளியே வந்தபோது மனதில் ஒரு நெருடல்.

“பாபா ஒரு பாழடைந்த மசூதியில் இருந்து கொண்டு, வெறும் தரையில் படுத்து, கையையே தலையணையாகக் கொண்டு, “உதி’ என்று சொல்லக் கூடிய விபூதியையும் தானே தயாரித்து மக்களுக்கு அருள் புரிந்தவர். அவ்வளவு ஏழையாக வாழ்ந்த மகானுக்கு இப்படி தாஜ்மஹால் போன்ற மண்டபமா?’ என்ற நெருடல்.

“பாபா ஒரு பாழடைந்த மசூதியில் இருந்து கொண்டு, வெறும் தரையில் படுத்து, கையையே தலையணையாகக் கொண்டு, “உதி’ என்று சொல்லக் கூடிய விபூதியையும் தானே தயாரித்து மக்களுக்கு அருள் புரிந்தவர். அவ்வளவு ஏழையாக வாழ்ந்த மகானுக்கு இப்படி தாஜ்மஹால் போன்ற மண்டபமா?’ என்ற நெருடல். அதை என் மனைவி யிடம் சொன்னேன்.  அவள் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள். “”அப்படியெல்லாம் பேசாதீர்கள்.”

ஆனால், ஏழைகளுக்காகவே வாழ்ந்து, தானும் கடைசிவரை ஏழையாகவே இருந்த ஒரு மகானுக்கு இந்த ஆடம்பரங்கள் பிடிக்குமா என்கிற எண்ணம் என் மனதை நெருடிக் கொண்டே இருந்தது.

அன்றிரவு பத்து மணியளவில் உணவருந்தி விட்டு, வழக்கம்போல் ஸ்ரீராகவேந்திரர் சுலோ கத்தை உச்சரித்துவிட்டுப் படுத்து உறங்கத் துவங்கினேன்.

திடீரென்று என் எதிரே ஷீரடி மகான் தோன்றினார். இரண்டு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு நடனமாடியவாறே என் எதிரில் வந்து நின்றார். என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோட அவர் காலில் வீழ்ந்தேன்.

Shirdi Sai 10

“பாபா… பாபா… என்னை மன்னித்துவிடுங்கள். ஏழையாகவே சமாதியான உங்களுக்கு இத்தனை ஆடம்பரமான கோவிலா என்று நான் பேசியிருக்கக் கூடாது பாபா… என்னை மன்னியுங்கள்” என்று அவர் காலைப் பற்றிக் கொண்டேன்.

பாபா குனிந்து என் தோளைப் பற்றி எழுந்திருக்கச் செய்தார்.

“நான் ஏழைதான். எனக்கு ஏழைகளையும் துன்பப்படுகிறவர்களையும்தான் பிடிக்கும். இதோ பார்… (கையை தூக்கிக் காட்டி)  இந்த கிழிந்துபோன ஜிப்பாவைத்தான்  நான் இன்னமும் அணிந்திருக்கிறேன். தைத்துப் போட்டுக் கொள்ளக்கூட வழி யில்லை.

சிலர் என்னை ஆடம்பரமாக வைத்து வழிபட ஆசைப்படுகிறார்கள். நான் என்ன செய்வது? அவர்களை நான் தடுக்க முடியுமா? அது அவர்கள் இஷ்டம். அவர்களை விட்டுவிடு. அவர்கள் ஆசைப்படுவதுபோலவே வழி படட்டும்…”

மீண்டும் அவர் காலில் விழுந்து கதறுகிறேன். “பாபா… நான் ஒரு பாவி… என்னை மன்னித்து விடுங்கள்.”

Shirdi Sai 1

“பரவாயில்லை… போ… அடுத்தமுறை இங்கு வரும்போது வாசலில் இருக்கும், யாசிக்கும் மனிதர்களுக்கு ஏதாவது இனிப்பு வாங்கிக் கொடு…” என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார் பாபா.

நான் திடுக்கிட்டு எழுந்தேன். இரவு மணி இரண்டரை. என் கண்களில் கண்ணீர். என் மகனும் எழுந்தான். “என்னப்பா. என்ன ஆச்சு உங்களுக்கு?” என்றான்.

இந்த பாபா பக்தன் எப்போது என் பக்கத்தில் வந்து படுத்தான்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. கண்ட கனவை பாபா  தரிசனம், அவர் என்னுடன் பேசியது அனைத்தையும் அவனிடம் சொன்னேன்.

அடுத்த வியாழக்கிழமை ஏழை யாசகர்களுக்கு அவன் இனிப்பு தானம் செய்த பிறகுதான் மனம் லேசானது.

ஜெய் சாய்ராம்!

 • ‘ஓம்’ இதழில் திரு.பா.சி.ராமச்சந்திரன்

=============================================

மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, ரைட்மந்த்ரா  மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் புது வடிவம் செட் ஆவதற்கு ஓரிரு நாள் ஆகலாம். வாசகர்கள் சற்று பொறுத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

=============================================

Support Rightmantra in its functioning!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=============================================

Also check :

மும்மூர்த்திகளின் அருளைப் பெற வழிகாட்டும் ஸ்ரீ குரு சரித்திரம்!

குரு என்பவர் இறைவனை விட உயர்ந்தவரா? MUST READ

யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

தெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும்! – குரு தரிசனம் (4)

குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

கிடைப்பதற்கரிய ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம் !

=============================================

[END]

12 thoughts on “பாபா ஓர் கருணாலயம், பாதம் தான் கமலாலயம்!

 1. இன்று பாபாவின் சமாதி தினத்தில் அவரைப் பற்றிய மெய் சிலிர்க்கும் பதிவை படித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இன்று காலையில் அவர் சமாதி நிலை அடைந்த அத்யாத்தை படித்து கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது. பாபா எனன்க்கும் பல அறிய அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார்

  பாபாவை நம்பியவர்களுக்கு அவரின் ஆசி பரிபூரணமாக உண்டு.

  அழகிய நிகழ்வை தொகுத்து அளித்ததற்கு நன்றிகள் பல. திரு ராமச்சந்திரன் அவர்கள் பாபாவைப் பற்றி உரை நிகழ்த்தியது பாபாவின் திருவிளையாடல் andro.

  இந்த சமயத்தில் குரு சரித்ரா படிப்பதை பற்றியும் நினைவு கூர்கிறேன் பாபாவின் சாய் சரிதத்தில் 18வது அத்யாத்தில் அதன் நன்மைகள் பற்றி பாபா கூறி இருக்கிறார்

  ஓம் ஸ்ரீ சாய் ராம்

  வாழ்க வளமுடன்

  நன்றி
  உமா வெங்கட்

 2. தலைப்பே ஆயிரம் செய்திகள் சொல்லும்..பதிவோ ஓராயிரம் பதில்கள் சொல்லும்..
  பதிவினை படிக்க படிக்க ஆனந்த கண்ணீர்.
  பதிவினை படித்த பின்பு கீழ்க்கண்ட கருத்துக்களே என்னுள் உள்ளது.

  ஒருமுறை பாபாவை அன்புடன் நோக்கினால், அவர் ஆயுள் முழுவதற்க்கும் நம்முடையவர் ஆகிவிடுகிறார். உண்மையான அன்பைத் தவிர நம்மிடம் அவர் வேறெதையும் எதிர்பார்ப்பதில்லை. நாம் கூப்பிடும்போது காப்பாற்ற ஓடிவருகிறார். அந்நேரத்தில் காலமோ, நேரமோ அவருக்குக் குறுக்கே நிற்கமுடியாது. சதாசர்வ காலமும் அவர் நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறார். அவர் எங்கு, எவ்வாறு, எந்த விசையை இயக்குவார் என்று நமக்குத் தெரியாது. அவருடைய செயல்கள் புரிந்துகொள்ளமுடியாதவை. ஸ்ரீ சாய் சத்சரிதம்

  சாய் பாபா சரணம்.

 3. பாபாவின் பதிவு மிகவும் அருமை

  ஓம் ஸ்ரீ சாய் ராம் ஓம் ஸ்ரீ சாய் ராம் ஓம் ஸ்ரீ சாய் ராம்

  நன்றி

  குமார்

 4. 2006 ல் தான் நான் பாபாவை பற்றி அறிய ஆரம்பித்தேன், உடனே சாய் சத் சரிதம் என் உறவினர் மூலம் கிடைத்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன், ஆறு அத்யாயம் படிக்கும் பொழுதே எனக்கு சாய் பெயருடைய ஒரு அலுவகத்தில் வேலை கிடைத்தது. அலுவலகத்தின் பெயர் என்ன என்று தெரியாமல் கூட நேர்காணலுக்கு சென்றேன். உள்ளே நுழைந்தும் பாபாவின் போட்டோவை பார்த்து பயங்கர பரவசம்..

  2008 இல் என் மகன் ஒரு accident இல் தலையில் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டு இருந்தவனை விஜயா மருத்துவ மனையில் சேர்த்து , ஐ சி யூவில் நினைவு இல்லாமல் பிரைன் scull இல் அடிபட்டு பிழைப்பதே கடினம் என்று டாக்டர்கள் சொல்லிய நினைல்யில் பாபாவிடம் கதறினேன், என் அம்மாவும் அவன் தலை அருகில் அமர்ந்து சாய் சரித்தம் படித்து கொண்டே இருந்தார்கள். ஒரு ஆச்சர்யமான விஷயம் 4 நாட்கள் கழித்து ஜெனரல் வார்டு மாறி பின்னர் வீட்டிற்கு discharge ஆனோம். டாக்டர்ஸ் ஆச்சரியப்பட்ட விஷயம் இது

  பாபா பாதம் பற்றினால் அனைவருக்கும் சாந்தி உண்டாகும்

  நன்றி
  உமா வெங்கட்

 5. சாயி பாபாவின் பக்தர்களுக்கு தங்களின் பதிவு பேரானந்தம். திரு.ராமச்சந்திரன் அவர்கள் பெரும் புண்ணியம் செய்தவர். அவரின் பதிவை தாங்கள் தந்து எங்களையும் புனித படுத்தி விட்டீர்கள். புதிய வலை தளம் மிக மிக அருமை. தங்களின் உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது, என்னும் கூட தங்கள் மென்மேலும் உயர்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. மஹா பெரியவரின் பதிவும், சாயி ராமின் பதிவும், நெஞ்சை நெகிழ வைத்து அழவைத்து விட்டது. அடிக்கடி அழ வைக்காதீர்கள் ஜி. தங்களின் சேவையும் பதிவுகளும் அற்புதம். மனம் திறந்த பாராட்டுகள். சாயி அருளால் தங்கள், தங்கள் குடும்பத்திற்கும், நம் RM குடும்பத்திற்கும் ஒரு குறையும் வராது. சாயி நம்மிடம் உள்ளார்.

 6. எந்த பாபா கோவிலுக்கு நீங்கள் சென்றாலும் அவர் தரிசனம் கண்டதும் அவர் உங்களையே பார்ப்பது போலே இருக்கும் //. அதுதான் அவர் மகிமை . மனம் சஞ்சலபட்டால் நீங்கள் ஒரு நிம்டம் பாபாவை மனதுக்குள் தரிசனம் செய்யுங்கள் // பிறகு பாருங்கள் பனிபோல் உங்கள் கஷ்டம் எல்லாம் கரைந்து விடும்// இது என் வாழ்வில் நான் கண்ட உண்மை சார்.. பல முறை அடியேன் ஷ்ரிடி போய் வந்து உள்ளேன் .
  மனதுக்கு பிடித்த பாபா / உள்ளம் உருகுமே பாபா என்றாலே//.

  தங்களின் எல்லா நல்ல தகவலுக்கும் போடோஸ்க்கும் மிக்க நன்றி. இன்று மிக மிக நல்ல தரிசனம் சார்.

  நன்றி,
  தங்களின்

  சோ ரவிச்சந்திரன்

 7. உமா மேடம் தங்கள் கம்மேண்டில் சொன்ன தங்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம் பாபா வின் பரிபூரண ஆசி தங்களுக்கு இருபதைய்யே காட்டுகிறது. நாமிடம் சாயி உள்ளவரை நமக்கு நல்லதே என்றும் நடக்கும். ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி.

  1. உமா அவர்களின் கமெண்ட்டையே தனிப் பதிவாக அளிக்க இருக்கிறேன். சாயி மகிமை குறித்து வேறு சில விஷயங்களும் அவரிடம் இருக்கிறது. அதை தனிப் பதிவாக அளித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  2. ராஜ்குமார்ஜி ,தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
   உமா வெங்கட்

 8. இப்போதுதான் இதைப் படிக்கும் சந்தர்ப்பம் பாபா மூலம் கிடைத்தது. அவரின் அருளை உணர்ந்த அளவுக்கு எழுத்தில் எனக்கு சொல்ல வரலை. சின்ன சின்ன அனுபவங்களாய் நம்மை ஆட்கொள்கிறார். இதை நானும் உணர்ந்திருப்பதால் உங்கள் கட்டுரையை அப்படியே உணரமுடிகிறது.. அவரவர் அனுபவம் அவரவருக்கானதென்றாலும் அவர் பக்தர்களை ஏதோ ஒரு நூற்கண்டில் இணைத்து விடுகிறார். ஓம் சாய் ராம்

  எங்கள் வீட்டில் ஒரு வியாழன் சாய் பூஜையின் கற்பூர ஆரத்தியில் சாயின் வடிவம். பிரத்யக்‌ஷ தெய்வம் சாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *