Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > என்ன தவம் செய்தனை யசோதா…!

என்ன தவம் செய்தனை யசோதா…!

print
மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கோ-சாலையில் பவானி என்கிற பசு, பெண் கன்று ஒன்றை ஈன்றுள்ளது. தளம் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் முதல் பதிவில் அதுவும் விஜயதசமி அன்று இதை விட நல்ல செய்தியை சொல்லமுடியுமா?

Yasodha 1

இந்த கோவிலில் கடந்த மூன்றாண்டுகளாக நம் தளம் சார்பாக ஒவ்வொரு மாதமும், நாள்கிழமை விஷேடங்களின் போதும் கோ-சம்ரட்சணம் நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே. இந்த காலகட்டங்களில் இங்குள்ள பசுக்கள் பல கன்றுகளை ஈன்றுள்ளன. ஒவ்வொரு முறையும் இங்கு கன்று பிறக்கும்போது அதை கோ-சாலை பணியாளர்களுடன் நம் வீட்டு விசேஷம் போல கொண்டாடுவது நமது வழக்கம்.

Yasodha 2

நவராத்திரி நேரத்தில் கன்று பிறந்துள்ளதால் இது உண்மையில் ஸ்பெஷல் தான்.

தாயும் சேயும் நலம். கேட்டை நட்சத்திரம் என்பதால் யசோதா என்று பெயர் சூட்டியுள்ளோம். யசோதா கொள்ளை அழகு. படு சுட்டி. அதே நேரம் சமர்த்து. தாய் பவானிக்கு முதல் குழந்தை இவள்.

Yasodha 3

என்ன தவம் செய்தனை!
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா

எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா

ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில்
ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட நீ

என்ன தவம் செய்தனை யசோதா

எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை!

இது நமது குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது போல. இதையடுத்து சனிக்கிழமை 24/10/2015 அன்று மாலை 7.00 மணியளவில் விசேஷ கோ-சம்ரட்சணம் நடைபெறும். பசுக்கள் அனைத்திற்கும் சிறப்பு உணவு வழங்கப்படும். முதலில் ஞாயிறு (25/10) தான் செய்வதாக இருந்தோம். ஆனால், நாளை 24/10/2015 கோ-துவாதசி. கோ-சம்ரட்சணம் செய்ய ஏற்ற நாள். எனவே நாளை இந்த கோ-சம்ரட்சணம் நடைபெறும்.

காசி விஸ்வநாதருக்கும், அன்னை விசாலாட்சிக்கும் நம் தளம் சார்பாக சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். கோ-சாலை பணியாளர்களும் வழக்கம்போல கௌரவிக்கப்படவிருக்கிறார்கள்.

புத்திர பாக்கியம் வேண்டி இதுவரை பிரார்த்தனை  கிளப்புக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் நம் வாசகர்கள் அனைவரின் பெயர்களிலும் அது சமயம் விஷேட அர்ச்சனை செய்யப்படும். விரைவில் அவர்கள் இல்லத்திலும் மழலைச் சத்தம் கேட்கட்டும். கோமாதா அருள் இருக்கும் பட்சத்தில் எந்த வினையும் எதுவும் செய்ய முடியாது.

கலியுகத்தில்  வினைதீர்க்கும் கண்கண்ட மருந்து கோ-சம்ரட்சணமே.

Yasodha 4

பசுக்களின் பெருமை குறித்து நம் தளத்தில் பல பதிவுகள் அளித்திருக்கிறோம். இந்த இனிய நாளில் இதோ மற்றுமொன்று.

[button color=”” size=”” type=”round” target=”” link=””]ப[/button]சுக்களின் தாய் என்று அழைக்கப்படுபவள் காமதேனு. காமதேனு தோன்றிய கதையை பார்ப்போம். தேவி உபாசகரான துர்வாச முனிவர் ஒரு சமயம் தேவியை பூஜித்து பெற்ற மாலையை இந்திரனிடம் அளிக்க, அவன் அதை அலட்சியத்துடன் அங்குசத்தால் பெற்று ஐராவதத்திடம் அளிக்க, அதன் மகிமை புரியாத ஐராவதம் அதை கீழே போட்டு மிதித்து விடுகிறது. சினம்கொண்ட துர்வாச முனிவர் தேவர்கள் அனைவரையும் அரக்கர்களாக மாறும்படு சபித்துவிடுகிறார். அனைவரும் திருமாலிடமும் சிவபெருமானிடமும் ஓட, பாற்கடலை கடைந்து அமுதத்தை பெற்று அதை தேவர்கள் அருந்துவதே தீர்வு என்று அவர்கள் சொல்கிறார்கள். இதன்பொருட்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய, அப்போது தோன்றியது தான் பசுக்களின் தாய் என்றழைக்கப்படும் ‘காமதேனு’.

காமதேனுவுக்கு மானசீகமாக ஐந்து கன்றுகள் பிறந்தன. அவை பட்டி, விமலி, சயனி, நந்தினி, கொண்டி என்று அழைக்கப்பட்டன. இவற்றை ‘பஞ்ச பசுக்கள்’ என்பார்கள். சிவபூஜையில் ஒரு அங்கமாக பஞ்ச பசுக்களை வழிபடும் வழக்கம் உண்டு. (பட்டி இறைவனை பூஜித்த தலமே பட்டீஸ்வரம்! சுவாமியின் பெயர் தேனுபுரீஸ்வரர், பட்டீஸ்வரர், அம்பாள் பெயர் ஸ்ரீ ஞானாம்பிகை, பல்வளை நாயகி!)

பசுக்களை ஓட்டிச் செல்லும்போது கூட அதற்கு துன்பம் தரக்கூடாதாம். அவை பயப்படக்கூடாது. இரக்கத்தோடு தான் ஓட்டிச் செல்லவேண்டும். பலாசமரம் என்னும் புரசு மரத்தால் ஆன குச்சிக்களையே பசுக்களை மேய்க்க பயன்படுத்தவேண்டும். அந்தக் குச்சியால் அவற்றை மெல்ல தட்டி தட்டி போ போ என்று சொல்லவேண்டும். இரக்கமில்லாது கோபப்படுதல், அதட்டுதல், அடித்தல் போன்றவற்றை செய்தால், நரகத்துக்கு தான் செல்ல நேரிடும்.

எங்கள் வீட்டுக்கு வரும் பசுக்களில் ஒன்று
எங்கள் வீட்டுக்கு வரும் பசுக்களில் ஒன்று

========================================

இன்றும் நம் வீட்டுக்கு இந்த பசு, ரெகுலர் விசிட்டர். பசு வரும் நேரம் வீட்டில் தருவதற்கு எதுவும் இல்லையென்றால், ஃபிரிட்ஜில் உள்ள காய்கறிகளை கொண்டு போய் போட்டுவிடுவது நம் வழக்கம். முட்டைகோஸை பசுக்கள் விரும்பி உண்ணும்.

========================================

எங்கள் பாட்டி சொன்ன சம்பவம் இது. அவர்கள் சிறு வயதில் குடியிருந்த வீட்டிற்கு அக்ரஹாரத்தில் பக்கத்து வீட்டில் ஒரு பெண் குடியிருந்தாள். மகா கருமி. அவர்கள் வீட்டுக் கொல்லையில் தோட்டம் உண்டு. மேய்ச்சலுக்கு வந்த ஒரு சினைப் பசு எப்படியோ கொல்லைக்குள் புகுந்து அங்கிருந்த செடி கொடிகளை மேய ஆரம்பித்தது. இதைக் கண்டு ஆத்திரமுற்ற அந்த பெண், உலக்கையை கொண்டு அந்த சினைப்பசுவை அடிக்க, அது அம்மா என்று கத்திக்கொண்டே ஓடியது. ஆனால் அதற்கு பிறகு அந்த குடும்பத்தில் யாருக்குமே புத்திர பாக்கியம் இல்லாது போய்விட்டதாம். அந்தப் பெண்ணுக்கும் இறுதிக்காலத்தில் கைகள் இழுத்துக்கொண்டுவிட்டதாம். எனவே எந்தக் காரணத்தை கொண்டும் பசுவை அடிக்கக் கூடாது. அடிப்பவர்களுக்கு துணை போகக்கூடாது.

ஆசை ஆசையாய் போட்ட தோட்டத்தை பசு மேய வந்தால் என்ன செய்வது… கோபப்படாமல் இருக்கமுடியுமா? என்று கேட்டால், நீங்கள் கேட்பது நியாயம் தான். ஆனால் பசுவை அது பயம் கொள்ளாத வகையில் நாசூக்காக விரட்டலாமே தவிர, அதை ஒரு போதும் அடிக்கக்கூடாது. மேலும் பசு மேய்வது தோட்டத்தை அல்ல. உங்கள் வினைகளை. பசுவானது உங்கள் கிரகத்தில் கால் பதிக்கவே நீங்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.

‘கோ தீண்டாத கிரகம், கௌலி தங்காத வீடு’ என்று ஒரு வழக்கு உண்டு.  தோஷமுள்ள சில கிரகங்களுக்கு பசுக்கள் என்ன செய்தாலும் வராது. அதே போல சில வீடுகளில் பல்லி இருக்கவே இருக்காது. அப்படி என்றால் அந்த கிரகத்தில் துர்-சக்திகள் இருக்கின்றன என்று அர்த்தம்.பசு, ஏகாதச ருத்ரர்களுக்குத் தாய்; அஷ்ட வசுக்களுக்கு மகள்; பன்னிரண்டு ஆதித்தியர்களுக்கு சகோதரி. சாது என்ற சொல்லுக்கு ஓர் இலக்கணமாக பசு திகழ்கிறது. விலங்குகளில் பசுவின் சாதுத்தன்மை மிகவும் பிரசித்தம்.

பசுவை பேணுவோம். பசுவை போற்றுவோம். இகபர சுகங்கங்களை அடைவோம். கோமாதா சரணம் சரணம்!

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.
– திருநாவுக்கரசர்

========================================

மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, ரைட்மந்த்ரா மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் புது வடிவம் செட் ஆவதற்கு ஓரிரு நாள்  ஆகலாம். வாசகர்கள் சற்று பொறுத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

========================================

Support Rightmantra in its functioning!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================

Also check :

கண்ணனுடன் கொண்டாடிய குரு பெயர்ச்சி!

கலி தீர்க்க பிறந்தான் நம் கண்ணன் !

நம் பாஞ்சாலி பெற்ற குழந்தை ‘தேவகி’!

‘நல்ல காலம் நிச்சயம் வரும்!’

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

நலன்களை அள்ளித்தர இதோ நமக்கு ஒரு நந்தினி!

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?

கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!

நம்ம துர்காவுக்கு வேலன் பொறந்தாச்சு!

எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா? ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’

கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2

========================================

[END]

 

5 thoughts on “என்ன தவம் செய்தனை யசோதா…!

 1. 2015 விஜய தசமி – மிகவும் கொண்டாட்டமே..நம் தளத்தில் விஜய தசமி பதிவை நம் யசோதை பற்றிய பதிவு..
  சொல்லவும் வேண்டுமா? அவ்ளோ சந்தோசம்.நலன்களை அள்ளித்தர பிறந்த நம் யசோதையை காண கண்கள் கோடி வேண்டும்.
  என்ன தவம் செய்தனை! என்று நாங்கள் பாட வேண்டும்..ஏனெனில் நாங்கள் செய்த புண்ணியம் தான் இந்த பதிவை படிக்க வைத்துள்ளது என்பது உண்மை.

  பசுக்களின் பெருமை பற்றி அதிகளவில் தெரிந்து கொண்டோம்.காமதேனு வரலாறும்,ஏனைய செய்திகளும் பதிவினை மேலும் அழகாகுகின்றன.

  நச்சென்று நாவுக்கரசர் பாடல் ..கோமாதா சரணம்.சரணம்.சரணம்.

  Rightmantra வின் மிக சிறந்த டெக்னாலஜி இம்ப்ரூவேமென்ட் என்றே சொல்ல வேண்டும்..

  நன்றி அண்ணா …

 2. Dear Sundarji,

  The revamped website looks quite appealing and wonderful. I believe, the user experience would be good with this though it would take some time to get used to the new look and feel.

  Yasodha arriving on a Vijayadasami day is a wonderful event and adds more speciality to this divine day.

  Prabu

 3. नमस्ते …………….

  டெக்னாலஜி improvement இற்கு பிறகு வந்த முதல் பதிவே அட்டகாசம். தளத்தை ஓபன் செய்து பார்க்கும் பொழுதே ஒரு ரிச் லுக்குடன் ஓர் தனித்துவம் உள்ள தளமாக உள்ளது.

  காசி விஸ்வநாதர் கோவில் கன்றுக்குட்டியின் பெயர் யசோதை ….. மிகவும் அழகான பெயர். தாயின் அருகில் மிகவும் பவ்யமாக நின்று கொண்டு வாஞ்சையுடன் பார்க்கும் யசோதை கொள்ளை அழகு …..

  கோ சம்ரோக்சனம் பற்றி தங்கள் தளத்தில் பல பதிவுகள் படித்தாலும் இந்த பதிவு ஜொலிக்கிறது

  தங்கள் புது பயணம் இனிதே வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  धन्यवाद
  उमा वेंकट

 4. பசு மேய்வது தோட்டத்தை அல்ல. உங்கள் வினைகளை. பசுவானது உங்கள் கிரகத்தில் கால் பதிக்கவே நீங்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும். என்ன வார்த்தைகள் சார்.

  உண்மையிலும் உண்மை .
  கலியுகத்தில் வினைதீர்க்கும் கண்கண்ட மருந்து கோ-சம்ரட்சணமே. என்ன செய்வது எங்களுக்குத்தான் இது போன்ற வாய்ப்புகள் கிட்டுவதில்லை . நாங்கள் இருக்குமிடம் ஒரு கிராமம் .

  நவராத்திரி நேரத்தில் கன்று பிறந்துள்ளதால் இது உண்மையில் ஸ்பெஷல் தான். சார்.

  ஆனாலும் சும்மா சொல்லகூடாது உங்களுக்கு இருக்கிற வேலையில், இது மாதிரி காரியங்கள் மிக மிக மகிழ்வாக இருக்குது. என்ன நான் உங்களுடன் இல்லையே என்பதுதான் வருத்தமாக உள்ளது..

  விரைவிலே அதுவும் நடக்க வேணும் சார்.

  தங்களின்
  நன்றியுடன்
  சோ. ravichandran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *