மகிஷாசுரன் என்ற அசுரன் தேவர்களையும் ஈரேழு பதினான்கு லோகங்களையும் வெற்றி கொண்டு அரசாட்சி செய்து வரும் காலகட்டங்களில் தேவர்கள் சொல்லொண்ணா துயருக்கு ஆளானார்கள். இனியும் மகிஷாசுரனின் கொடுமைகளை தாங்க முடியாது என்று கட்டத்தில் பிரும்மதேவரை அழைத்துக்கொண்டு சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும் சந்தித்து முறையிட சென்றார்கள்.
அவர்கள் கூறுவதை கேட்ட இரு மூர்த்திகளுக்கு மிகவும் கோபம் உண்டானது. அடுத்து பிரும்மதேவருக்கும் சினம் பொங்கியது. இதர தேவர்களிடமும் கோபம் பொங்கியது. இப்படி பொங்கிய கோப நெருப்பு ஒளி வடிவம் கொண்டது. அவ்வொளிகளிலே ஆயிரம் கோடி சூரியனின் பிரகாசம் கொண்ட சிவபெருமானின் ஒளியானது திருமுகமாயிற்று. யமதர்மனின் ஒளி கூந்தலாயிற்று. மகாவிஷ்ணுவின் ஒளி கைகளானது. சந்திரனின் ஒளி தனங்களாயின. இந்திரனின் ஒளி இடுப்பாயிற்று. வருணனின் ஒளி முழங்கால்களாகவும் பூமாதேவியின் ஒளி நிதம்பமுமாயிற்று.
To download the above pic : http://rightmantra.com/wp-content/uploads/2015/10/Maha-Sakthi.jpg
பிரும்மாவின் ஒளி பாதங்களாகவும், சூரியனின் ஒளி கால் விரல்களாகவும், வசுக்களின் ஒளி கைவிரல்களாகவும், குபேரனின் ஒளி மூக்காகவும், பிரஜாபதியின் ஒளி பற்களாகவும், அக்னி தேவனின் ஒளி முக்கண்களாகவும் சாத்திரியர்களின் ஒளி புருவமாகவும், வாயுவின் ஒளி காதுகளாகவும் ஆயின.
இவ்வாறு தேவர்களின் தேஜோ ரூபங்கள் அனைத்தும் ஒருருவாகி மகிஷாசுரனை சம்ஹரிப்பதற்காக மஹாதேவி, மஹாலக்ஷ்மி என்கிற திருப்பெயர்களோடு அன்னை சக்தி தோன்றினாள்.
அவளுக்கு சிவபெருமான் திரிசூலத்தையும், மகாவிஷ்ணு சக்ராயுதத்தையும், வருணன் சங்கையும், அக்னி சக்தியையும் வாயு வில் முதாலான பாணங்களையும், தேவேந்திரன் வஜ்ராயுதத்தையும் ஐராவதம் காண்டாமணி முதலியவற்றையும் யமன் காலகண்டத்தையும், சூரியன் காந்தி மாலையையும், காலன் கடக கவசங்களையும் சமுத்திர ராஜன் ஹாரம், வஸ்திரம், தோடுகள், சூடாமணி, தோள்வளை, ஒட்டியாணம், சர்ப்பாபரணம், விஸ்வகர்மா மோதிரத்தையும் இமாசாலன் ரத்தினங்களையும் சிம்ம வாகனத்தையும், குபேரன் சுராபான பாத்திரத்தையும் ஆதிசேஷன் நாகஹாரத்தையும் கொடுத்து மகிஷாசுரனை கொல்ல வேண்டும் என்று பலவாறு அன்னையை போற்றி துதித்தனர்.
தேவி மகிழ்ந்து வீர கர்ஜனை புரிந்து மகிஷாசுரனோடு போரிட புறப்பட்டு சென்றாள்.
மகிஷாசுரனோ சிஷூரன், தூர்த்தரன், துன்முகன், பாஷ்கலன் உள்ளிட்ட தனது தளபதிகள் புடைசூழ அன்னையோடு போரிட்டான்.
அவர்கள் அனைவரையும் தேவி அழித்தொழித்து மகிஷாசுரனை பாசத்தால் கட்டி வாளினால் அவன் தலையை அறுத்து அவனை அழித்தாள்.
அதைப் பார்த்த தேவர்கள் அனைவரும் ஆனந்த பரவசமடைந்து தேவியை போற்றி துதித்தார்கள்.
இவ்வாறு மிக்ஷாசுரனை வதைப்பதற்காக அந்த மஹாதேவியே மஹாலக்ஷ்மியாக அவதரித்தாள் என்று சொல்லப்படுகிறது.
இதே போல சும்பன், நிசும்பன் என்கிற இரண்டு அரக்கர்களை அழிப்பதற்காக தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி இமயமலை அடிவாரத்தில் தேவியை நோக்கி தவம் புரிந்தார்கள்.
அப்போது தேவியின் கோசத்திலிருந்து (ஆதாரம்) கௌசிகை என்னும் சக்தியானவள் தோன்றினாள்.
அவள் தேவர்களை நோக்கி, “அவ்வசுரர்களை நான் அழித்தொழிக்கிறேன். கவலை வேண்டாம்.” என்று கூறி, சும்பனம் நிசும்பன் மற்றும் அவர்களது தளபதிகள் சேனைகள் என அனைவரையும் அழித்தாள். சும்ப நிசும்பர்களை சம்ஹரிப்பதற்காகவே மகாதேவி மஹாசரஸ்வதி உருவம் எடுத்தாள்.
முப்பெரும்தேவியர்களின் தத்துவங்களும் குணங்களும்
துர்க்கை
பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு அருள் செய்பவளாக துர்கா தேவி தோன்றினாள். இவள் சிவப்பிரியை. விநாயகப் பெருமான் பிறப்பதற்கு காரணம் இவளே. இவள் விஷ்ணுவின் மாயையாகவும், பிரம்ம சொரூபிணியாகவும் தேவாதி தேவர்களால் துதிக்கப்படுபவளாகவும் விளங்குகிறாள்.
இவள் எல்லாப் பொருள்களிலும் நிறைந்துள்ளவள். புகழ், உயர்வு, மங்களம், மோட்சம், சுகம் முதலியவற்றை வழங்குபவள். துக்கம், பீடை முதலியவற்றை அழிப்பவள். தன்னை சரணடைபவர்களையும் பலஹீனமானவர்களையும் காப்பவள். தேஜோமயமானவள். சகல சக்திகளின் தன் வடிவம். சித்தியை தருபவள். அறிவு, பசி, தூக்கம், தாகம், ஒளி, சோம்பல், கருணை, கவனம், பொறுமை, பிரம்மை, மெய்யறிவு, தைரியம், மாயை இவற்றி சக்தி உருவம் இவளே.
இவள் நாராயணனை அடைந்திருக்கும் போது நாராயணியாக திகழ்கிறாள்.
லக்ஷ்மி
சுத்த தத்துவத்தின் தன்வடிவு இவள். சகல சௌபாக்கியங்களுக்கும் அதிபதி. மனோகரி, சாந்தி, அழகு, அமைதி இவற்றின் வடிவம். நற்குண நங்கை. சர்வ மங்கள சொரூபிணி. காமம், மோகம், லோபம், மதம், மோக்ஷம், அகங்காரம் முதலிய குணங்களை கிரகிப்பவள். இந்திரிய நிக்ரகையாகவும் பக்தர்களிடம் பிரியமும் கொண்டிருப்பாள். இவள் விஷ்ணுவின் அன்புக்குரியவள். அவரது மூச்சைப் போன்றவள். சகல வடிவம் தாங்குபவள்.
இவள் வைகுண்டத்தில் மகா லக்ஷ்மியாகவும் சுவர்க்கத்தில் சுவர்க்க லக்ஷ்மியாகவும் ராஜ்ஜியங்களில் ராஜ்யலக்ஷ்மியாகவும் இல்லறம் நடத்துபவர்களின் கிரகங்களில் கிரக லக்ஷ்மியாகவும் புன்னியாங்களிடம் ப்ரீதி லக்ஷ்மியாகவும் போர்வீரர்களிடம் கீர்த்தி லக்ஷ்மியாகவும் வியாபாரிகளிடம் வர்த்தக லக்ஷ்மியாகவும் அறிஞர்களிடம் தர்க்க லக்ஷ்மியாகவும் பல்வேறு பெயர்களோடு விளங்குகிறாள்.
சரஸ்வதி
எல்லோரும் வணங்கி போற்றும் மூன்றாவது சக்தி இவள். வாக்கு, புத்தி, வித்தை, ஞானம், ஆகியவற்றின் தன்வடிவு இவள். ஆயகலைகளுக்கும் சகல வித்தைகளுக்கு அதிபதி இவளே. எனவே இவளுக்கு வித்யா என்றொரு நாமும் உண்டு. தன்னை வழிபடுகிறவர்களிடம் புத்தி வடிவாகவும் பாடும் கவிதைகளில் கவியுருவிலும் திகழ்கிறாள். மேலும் அனைத்து விதமான சங்கீதங்களின் இசைவடிவாகவும் விளங்குகிறாள். எனவே வீணை மற்றும் புத்தகோத்தொடு காட்சி தருகிறாள்.
இவள் மகாவிஷ்ணுவை ரத்தினங்களால் பூஜிப்பவள். தவடிவமாக இருந்து தவ யோகிகளுக்கு பலனளிப்பவள். இவளைவழிபடாதவர்கள் ஜடங்களாகவே இருப்பார்கள்.
தீயவர்களை அழித்து நல்லவர்களையும் தேவர்களையும் காக்க அன்னை மூன்று சக்திகளாக தோன்றிய இந்த வரலாற்றை கேட்பவர்கள், படிப்பவர்கள் அனைவசுறம் அன்னையின் அருளை பெற்று சகல வித சம்பத்துக்களையும் ஆயுள், ஆரோக்கியம், கீர்த்தி முதலியவற்றையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.
அனைவருக்கும் ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
நமது அலுவலகத்தில் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படவிருக்கிறது. அது பற்றிய பதிவு நாளை வெளியாகும்.
மத்தூர் கொலு மற்றும் உழவாரப்பணி பதிவுகள் அளித்த பின்னர் நவராத்திரி சிறப்பு பதிவுகள் நிறைவு பெறும்.
அம்பிகை அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
==========================================================
Also check :
“கொலுவும் திருவும்!” – வாசகர் வீட்டு கொலு – பாகம் 2
சுபிக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் – வாசகர்கள் வீட்டு கொலு – பாகம் 1
நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!
==========================================================
நமது அலுவலகத்தில் ஆயுத பூஜை !
நமது ரைட்மந்த்ரா அலுவலகத்தில் இன்று மாலை 7.00 மணிக்கு ஆயுத பூஜை கொண்டாடப்படவிருக்கிறது. வாசகர்கள் வந்திருந்து பூஜையில் பங்கேற்று நம்மை வாழ்த்தி பூஜையை சிறப்பிக்கவேண்டும். நன்றி!
Our office address:
Rightmantra.com, Office No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
==========================================================
சைதை அருள்மிகு அன்னை திரிபுரசுந்தர சமேத காரணீஸ்வரர் திருக்கோவில் கொலு!
==========================================================
கூடலழகர் பெருமாள் கோவில், மதுரை (நமது வேண்டுகோளுக்கு இணங்க எடுத்தனுப்பியவர் திருமதி.சுந்தரி வெங்கட், மதுரை)
==========================================================
வாசகர்கள் வீட்டு கொலு – பாகம் 3
நமது வாசகர்கள் வீட்டு கொலு படங்களின் சாம்பிள் தான் இவை. இன்னும் வந்துகொண்டிருக்கிறது. ஆனால், நமக்கு தான் எடுத்து வெளியிட நேரம் இல்லை. எனவே இத்தோடு இந்த பகுதியை நிறைவு செய்கிறோம்.
புகைப்படங்களை பொருத்தவரை மொபைல் காமிராவில் எடுக்கும்போது கிடைக்கும் கிளாரிட்டி அதே புகைப்படத்தை கணினியில் பார்க்கும்போது கிடைக்காது. ஏனெனில், அதன் SCREEN RESOLUTION வேறு. கணினி மானிட்டரின் SCREEN RESOLUTION வேறு. எனவே அடுத்த முறை படம் எடுக்கும்போது இதை கவனத்தில் கொள்ளவும். காமிரா வைத்திருப்பவர்கள் அதில் எடுப்பது சிறந்தது.
அதே போன்று நீங்கள் அனுப்பும் புகைப்படங்களில் ஒரு புகைப்படமேனும் கொலுவை முழுமையாக கவர் செய்வது போல இருக்கவேண்டும்.
மேலும் அதிக புகைப்படங்கள் (நமது சாய்ஸ்க்காக) அனுப்புப்பவர்கள் மின்னஞ்சலில் அனுப்பினால் நன்று. அடுத்த ஆண்டு கொலு புகைப்படங்களை அனுப்பும்போது இதை நினைவில் வைத்திருங்கள்.
நன்றி!
திரு.பிரபு பாலசுப்ரமணியம், துபாய்
==========================================================
திருமதி.பூங்கொடி, அவினாசி, கோவை
==========================================================
திருமதி.எஸ்.வி.மரகதம், கோவை
==========================================================
திருமதி.அனுராதா ஸ்ரீதர், மிஸ்ஸிஸாகா, கனடா
==========================================================
திரு.விஸ்வநாதன், நங்கநல்லூர், சென்னை
==========================================================
திரு.எஸ்.எஸ். கணேஷ், ஆதம்பாக்கம், சென்னை
==========================================================
திரு.சுரேஷ் பிரியன், சைதை, சென்னை
==========================================================
திரு.கிருஷ்ணன், நத்தம் ரோடு, மதுரை. (மும்பையை சேர்ந்த வாசகர் & நண்பர் சந்திரசேகரனின் உறவினர் இவர்!)
வாசகர்கள் அனைவரது இல்லத்திலும் சுபிக்ஷமும் லக்ஷ்மி கடாக்ஷமும் தழைத்தோங்க அம்பாளை பிரார்த்திக்கிறோம்.
தங்கள் வீட்டு கொலு புகைப்படங்களை அனுப்பி நவராத்திரி பதிவுகள் களைகட்ட காரணமாக இருந்த அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி. அம்பிகை அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு. வாழ்க வளமுடன். அறமுடன்.
வாசகர்கள் வீட்டு கொலு அணிவகுப்பு நிறைவு பெற்றது…!
================================================================
Support Rightmantra – Donate us!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support Rightmantra by donating liberally.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
================================================================
Also check :
இராமர் அனுஷ்டித்த நவராத்திரி விரதம்! – நவராத்திரி SPL 1
நவராத்திரி — புண்ணியம் தரும் கதை, எளிமையான ஸ்லோகங்கள் & தமிழ் துதிகள் – A FULL PACKAGE!
அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!
இனிதே நடைபெற்ற நம் நவராத்திரி (ஆண்டு) விழா!
உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?
சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!
“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்!
ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)
அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)
ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)
கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)
உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )
கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!
================================================================
Also check :
ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)
பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)
விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)
================================================================
Also check short series on Kalady & Sornaththu Manai :
வையம் செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)
சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)
பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)
ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!
================================================================
பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!
மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !
திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)
ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)
ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!
================================================================
[END]
முப்பெரும் சக்திகளை எப்படி போற்றினாலும் தகும்///
வாசகர் கொலு அட்டகாசம் போங்கள்///
நமது வாசகர்கள் உலகம் முழுவதுமா///
வாழ்க வளர்க உங்கள் தொண்டு ///
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்//
நன்றி.
தங்களின்
ரைட் மந்த்ராவின் ஆயுத பூஜை சிறப்பாக அமைய எங்களின் இனிய வாழ்த்துக்கள்
சோ. ரவிச்சந்திரன்
நவராத்திரி சமயத்தில் முப்பெரும் தேவியரின் கதையைப் படித்ததில் மிக்க மகிழ்ச்சி
நவராத்திரி பதிவுகள் அனைத்தும் அருமை. இந்த சுப நாளில் தீய குணங்களை நம்மிடமிருந்து களைந்து நல்லனவற்றை பின்பற்றி வாழ்வை வளமாக்குவோம்
இந்த நவராத்திரி பதிவுகளை களைகட்டும் பதிவுகளாக ஆக்க கொலு புகைப்படங்களை அனுப்பிய அனைத்து வாசகர்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்
எல்லோருக்கும் இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்