Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, November 5, 2024
Please specify the group
Home > Featured > சுபிக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் – வாசகர்கள் வீட்டு கொலு – பாகம் 1

சுபிக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் – வாசகர்கள் வீட்டு கொலு – பாகம் 1

print
கிரகத்தில் சுபிக்ஷமும் லக்ஷ்மி கடாக்ஷமும், தழைத்தோங்க செய்யும் நமது பாரம்பரியங்களில் ஒன்றான நவராத்திரி கொலு குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தவேண்டியும், கொலு வைப்பவர்களை ஊக்குவிக்கவேண்டியும் நம் வாசகர்களிடம் அவரவர் வீட்டு கொலுவை படமெடுத்து அனுப்பும்படியும், நமது தளத்தில் அது வெளியிடப்படும் என்றும் அறிவித்திருந்தோம். இதையடுத்து பல வாசகர்கள் அவர்கள் வீடு கொலு படங்களை அனுப்பியிருக்கிறார்கள்.

கொலுவானது அவரவர் வாழும் சூழ்நிலை, இட வசதி, பணி தொடர்பான நிர்பந்தங்கள், நேரக்குறைவு இவற்றுக்கு நடுவே இக்காலத்தில் வைக்கப்படுகிறது. எளிமையாக ஒரு சில படிகளில் கொலு வைத்தால் கூட போதும், அம்பாள் அகமகிழ்ந்து நல்லன எல்லாம் அள்ளித் தருவாள். தெய்வம் மனதை தான் பார்க்குமே அன்றி வசதியையோ ஆடம்பரத்தையோ அல்ல. எனவே கொலுவின் எளிமை குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை.

அதே நேரம், வசதியும் வாய்ப்பும் மிக்கவர்கள் பெரிதாக பல படிகள் கொண்டு கொலு வைத்து அனைவரையும் வேற்றுமைகள் மறந்து அழைத்து உபசரிக்கவேண்டும்.

எல்லாரும் எல்லா வளமும் நலனும் பெற அம்பிகையை வேண்டுகிறோம்.

DSC05522 copy
மத்தூர் அருள்மிகு மகிஷாஷுர மர்த்தனி அம்பிகை

நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது. கொலு வைப்பதற்கு தெய்வங்களின் பொம்மைகள் அவசியம் தேவை. குறிப்பாக துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் பொம்மைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். முழுமுதற் கடவுளான விநாயகர் பொம்மை இடம் பெறுவதும் சிறப்பு. அது மட்டுமின்றி பல்வேறு பொம்மைகளையும் கொலுவில் வைத்து அழகுபடுத்தலாம்.

கடந்த வருடம் வாங்கிய பொம்மைகளை பத்திரமாக எடுத்து வைத்திருந்து அடுத்த வருடம் தாரளமாக பயன்படுத்தலாம். மேலும் புதிய பொம்மைகளை வாங்கி வைக்கலாம். சிலர் ஆண்டுக்கு ஒரு புது பொம்மையை வாங்கி வைப்பார்கள்.  வீட்டில் வைக்கப்படும் கொலு பல்வேறு அடுக்குகளாக இருக்கும். ஒற்றைப்படை எண்ணில் அந்த கொலு படி அமைக்க வேண்டும். சிலர் ஆண்டுக்கு 2 படி வீதம் கூட்டிக்கொண்டே அமைப்பார்கள். கொலுவில் வைக்க பல்வேறு அம்சத்தை விளக்கும் வகையில் பொம்மைககள் வைப்பார்கள்.

கொலு வைப்பவர்கள் அதற்கான ஏற்பாடுகளை நன்கு திட்டமிட்டு செய்தல் வேண்டும். குறிப்பாக கொலு வைக்கும் அறையை வெள்ளை  அடித்து  தூய்மையாக்க வேண்டும். நல்ல நேரம் பார்த்து கொலு அமைக்க வேண்டும். சூரிய அஸ்தமனம் ஆன பின் இரவில் கூட கொலு வைக்கலாம்.

கொலு வைக்கும் முன்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறப்பு. நவராத்திரி கொண்டாடும் நாட்களில் இரவில் பூஜை நடத்த வேண்டும். அப்போது சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும். வசதி படைத்தவர்கள் பரிசு பொருளும் கொடுக்கலாம். பரிசு பொருளில் குங்குமச்சிமிழ் இடம் பெறுவது நல்லது.

Maddur prasadham

(நமது மத்தூர் உழவாரப் பணியில் பங்கேற்ற அனைவருக்கும் குறிப்பாக மகளிற்கு சுமங்கலி செட் மற்றும் அம்பாள் படம், வேப்பிலை & குங்குமப் பிரசாதத்துடன் கொடுக்கப்பட்டது!)

கடைசி நாள் ஆயுத பூஜை அன்று பூஜையை சிறப்பாக நடத்தலாம். மறுநாள் விஜயதசமி. கொலு வைப்பவர்கள் அதையும் கொண்டாட வேண்டும். அதன் பின்தான் கொலுவை கலைக்க வேண்டும். விஜயதசமி அன்று நாம் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். மேலும் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். புதிய கலை பயில்வோர், இந்த நாளில் தொடங்கலாம்.

வீட்டில் கொலு வைப்பதால் முப்பெருந்தேவியரின் அருள் கிடைக்கும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். குறிப்பாக செல்வம், அறிவு, தைரியம் போன்றவை வந்து சேரும். வீட்டில் துர்தேவதைகள் மற்றும் கிரக பீடைகள் இருந்தால் அகலும். திருமணமான பெண்கள் இந்த பூஜையை நடத்தினால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். குடும்பம் சிறப்படையும். திருமணமாகாத பெண்கள் இந்த பூஜையை நடத்தினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுவதோடு நல்ல வரனாகவும் கிடைக்கும்.

கொலுவின் சிறப்புக்கள் குறித்து அடுத்த பாகத்தில் இன்னும் விளக்கப்படும்.

இந்த கொலு சிறப்பு பதிவின் முதல் தொடரில் மத்தூர் அருள்மிகு மகிஷாஷுர மர்த்தனி அம்பிகையை தரிசித்துவிட்டு கொலுவை பார்வையிடுவோம். கொலுவை பார்ப்பது, சகல நன்மைகளையும் தரக்கூடியது. வாழ்க வளமுடன்! அறமுடன்!!

Also check : நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!

==========================================================

உங்கள் வீட்டு கொலுவின் புகைப்படம் நம் தளத்தில் வெளியாகவேண்டுமா?

நண்பர்கள் தங்கள் இல்லங்களில் எடுத்த கொலு புகைப்படங்களை, தங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண்ணை குறிப்பிட்டு நமக்கு editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பினால் அது நம் Rightmantra.com தளத்தில் நவராத்திரி சிறப்பு பதிவுகளில் வெளியிடப்படும். (பதிவில் கொலு புகைப்படத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் பெயர், ஊர் மட்டும் வெளியிடப்படும்.)

* வாட்ஸ் ஆப்பில் அனுப்ப விரும்புகிறவர்கள் பெயர், மற்றும் ஊரை குறிப்பிட்டு 9840169215 என்ற எண்ணிற்கு அனுப்பலாம். ** இரண்டு அல்லது மூன்று படங்கள் போதுமானது.

உங்கள் நட்பு மற்றும் சுற்றத்திடமும் அவர்கள் வீட்டு கொலுவின் புகைப்படங்களை நமக்கு அனுப்பச் சொல்லலாம். நன்றி.

==========================================================

ஆயர்பாடி குழந்தைகள்…!

இந்த பதிவை மங்களகரமாக துவக்கவேண்டி, மேற்கு மாம்பலம் சுப்பிரமணி தெருவில் உள்ள சத்குரு சபா வேத பாடசாலை கொலுவின் புகைப்படத்துடன் இனிதே துவக்குகிறோம்.

Sathguru Sabha 1

இந்த பாடசாலையின் குழந்தைகள் அனைவரும் நமக்கு நண்பர்கள். சுமார் 15 மாணவர்கள் இங்கு வேதம் படிக்கிறார்கள். அடிக்கடி இங்கு சென்று இங்குள்ள கன்றுகுட்டிகளுடனும் மாணவர்களுடனும் சிறிது நேரத்தை செலவிடுவது நமது வழக்கம். கூடவே இவர்களுக்கு தொண்டு செய்யவும் வாய்ப்பு கிடைக்கும். தொண்டுக்கு தொண்டு. மனதுக்கும் இதம்.

Sathguru Sabha 2

இந்த கொலு சிறப்பு பதிவுக்காக பாடசாலையின் கொலுவை பார்வையிட்டு அப்படியே உங்களுக்காக புகைப்படம் எடுக்க முனைந்த போது, இவர்கள் அடித்த லூட்டி சொல்லி மாளாது. கிருஷ்ணருடன் விளையாடிய ஆயர்பாடி குழந்தைகள் இப்படித் தான் இருந்திருப்பார்களோ?

Sathguru Sabha 4

Sathguru Sabha 3சந்தோஷம் எங்கே, நிம்மதி எங்கே என்று ஓயாமல் தேடுபவர்கள் கொஞ்சம் உங்கள் பார்வையை விசாலப்படுத்துங்கள். அது உங்களுக்கு அருகிலேயே இருப்பது புலப்படும் !

==========================================================

வாசகர்கள் வீட்டு கொலு – பாகம் 1

Kolu_Bhuvaneswari2

Kolu_Bhuvaneswariதிருமதி. எஸ்.புவனேஸ்வரி, கோடம்பாக்கம், சென்னை – 24.

==========================================================

East london

கிழக்கு லண்டன், மஹாலக்ஷ்மி கோவில்

==========================================================

chellappa bharat

திரு.செல்லப்பா பரத், லண்டன்

==========================================================

Navarathiri Golu_Eswar 1

Navarathiri Golu_Eswar 2திரு.எஸ்.ஈஸ்வர், பிதாம்புரா, டெல்லி – 34.

==========================================================

Pradeep Kolu 1

Pradeep Kolu 2திரு.பிரதீப், கிழக்கு தாம்பரம், சென்னை.

==========================================================

Priya Kolu 12

Priya Kolu 12Dதிருமதி.ப்ரியா முத்துக்குமார், தோஹா, கத்தார்

==========================================================

Akila - Golu

Akila - Golu2

திரு.சந்தோஷ் & அகிலாண்டேஸ்வரி, ஊரப்பக்கம், சென்னை

==========================================================

Lalitha 1

திரு.ராமசுப்ரமணியன் &  லலிதா, சூளைமேடு, சென்னை

==========================================================

Viswanath

Viswanath2திரு.விஸ்வநாத் பாரதி, கோவிலாம்பக்கம், சென்னை

==========================================================

Indira

திருமதி. ஜெ.இந்திரா, மன்னார்குடி

வாசகர்கள் வீட்டு கொலு அணிவகுப்பு தொடரும்…!

==========================================================

Support Rightmantra in its functioning!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support Rightmantra by becoming Voluntary Subscriber.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

==================================================================

Also check :

இராமர் அனுஷ்டித்த நவராத்திரி விரதம்! – நவராத்திரி SPL 1

நவராத்திரி — புண்ணியம் தரும் கதை, எளிமையான ஸ்லோகங்கள் & தமிழ் துதிகள் – A FULL PACKAGE!

அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

இனிதே நடைபெற்ற நம் நவராத்திரி (ஆண்டு) விழா!

உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

==================================================================

Also check :

ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)

பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)

விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)

==================================================================

Also check short series on Kalady & Sornaththu Manai :

வையம் செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)

சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)

பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

=====================================================================

பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!

மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !

திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)

ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

==================================================================

[END]

One thought on “சுபிக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் – வாசகர்கள் வீட்டு கொலு – பாகம் 1

  1. rightmantra உடன் கொண்டாடி கொண்டிருக்கும் இந்த நவராத்திரி விழா மிகவும் மறக்க முடியாத ஒன்று..இன்னும் கோவிலுக்கு சென்று கொலு பார்கவில்லை.அந்த குறையை நீக்கிய பதிவு – இந்த பதிவு.

    வண்ணமயமான வாசகர்களின் வீட்டு கொலு – பகுதி 1 – பட்டையை கிளப்பி விட்டதே உண்மை.ஒவ்வொரு கொலு படம் பார்க்க இரு கண்கள் போதாது..கொள்ளை கொள்ளும் அழகு.

    பதிவின் ஊடே – சந்தோசம் பற்றிய தத்துவத்தை கூறியதும் உண்மை. நம் தளத்திற்கு தங்கள் வீட்டு கொலு – வண்ணபடங்கள் அனுப்பிய அணைத்து வாசகர்களுக்கும் நன்றி மற்றும் அனைவரது வீட்டிலும் அம்மன் அருள் பொங்கட்டும்.

    நன்றி அண்ணா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *