Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > கொடுத்துக் கெட்டவர் குவலயத்தில் உண்டோ ?

கொடுத்துக் கெட்டவர் குவலயத்தில் உண்டோ ?

print
து 18 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவம். சென்னையை அடுத்த திருநின்றவூரில் இரப்போர்க்கு இல்லை என்று கூறாமல் வாரி வாரி வழங்கிய காளத்தியப்பர் என்ற வள்ளல் வாழ்ந்து வந்தார். மிகப் பெரிய செல்வந்தரான அவருக்கு பல நிலபுலன்கள் இருந்தன. அதன் மூலம் வரும் வருவாய் மற்றும் விளைச்சல்களை ஏழைகளுக்கு அள்ளி வழங்கி வள்ளுவம் வழி நின்று வாழ்ந்து வந்தார்.

இவ்வாறாக பசுமை கொழித்த திருநின்றவூரில் ஒரு சமயம் மழை பொய்த்து பஞ்சம் பீடித்தது. காடு, கழனி, ஏரி, குளம் குட்டைகள் முதலியன நீரின்றி வறண்டன. மக்கள் சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாயினர்.

field

கோவர்த்தனகிரியை எப்படி ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தனது சுண்டு விரலில் குடையாக தாங்கிப் பிடித்தாரோ அதே போல வள்ளல் காளத்தியப்பர் திருநின்றவூர் மக்களை பஞ்சத்தின் கொடுமையிலிருந்து காப்பாற்றினார். ஒரு கட்டத்தில் தனது நிலபுலன்களை எல்லாம் விற்று தான தருமம் செய்தார். பஞ்சம் மேலும் மேலும் கடுமையாகிக்கொண்டே சென்றது.

இதற்கும் மேலும் விற்பதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலை வந்து காளத்தியப்பர் நடுவீதிக்கு வந்தார்.

இரப்போர்க்கு ‘இல்லை’ என்று சொல்ல விரும்பாத காளத்தியப்பர், அதற்கு மேலும் அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல், தனது மனைவியுடன் அவளது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.

செல்லும் வழியில் இரவில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் தம்பதிகள் தங்க நேரிட்டது..

‘திருவிளையாடல்’ படத்தில் ஒரு டயலாக் வரும்.

“பிரிக்க முடியாதது என்னவோ?”  “வறுமையும் புலமையும்” என்று. அது போன்று வறுமையையும் புலமையும் ஒருங்கே பெற்ற மதுரகவிராயர் என்ற புலவர் ஒருவரும் அதே மண்டபத்தில் தங்கியிருந்தார்.

நீண்ட காலம் வறுமையில் போராடி வந்த அவர் திருநின்றவூர் சென்று காளத்தியப்பரை சந்தித்து, போற்றி பாடி தனது வறுமை தீர பொன் பெற்று வரலாம் என்று திட்டமிட்டு வரும் வழியில் இரவு நேரத்தை கழிக்கும் பொருட்டு இந்த மண்டபத்தில் தங்கியிருந்தார்.

திருநின்றவூரில் பஞ்சம் பிடித்ததோ காளத்தியப்பர் அனைத்தையும் இழந்து வீட்டை விட்டு வெளியேறியதோ அவருக்கு தெரியாது. மேலும் இதே மண்டபத்தின் மற்றொரு பக்கத்தில் அவர் மனைவியுடன் தங்கியிருப்பதும் அவருக்கு தெரியாது.

புரண்டு புரண்டு படுத்தவருக்கு கடன்காரர்களை நினைத்து தூக்கம் வரவில்லை. “காளத்தியப்பரின் தயவால் நாளை தன் வறுமை தன்னை விட்டு நீங்கிவிடும்” என்ற நம்பிக்கை அவரிடம் ஏற்பட்டது.

அடுத்த நொடி கவிதை அவர் நாவினின்று ஊற்றாய் பொங்கியது.

நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல
நாளைக் இருப்பாயோ நல்குரவே -காளத்தி
நின்றைக்கே சென்றக்கால் நீயெங்கே நானெங்கே
இன்றைக்கே சற்றே இரு.

இதன் பொருள் : தரித்திரமே! நீங்கா நிழல் போல நீளத் திரிந்துழன்றாய். போகுமிடமெல்லாம் தொடரும் நிழலைப் போல என்னோடு நீ நீண்டகாலமாக இருந்து வருகிறாய்; நாளைக்கு இருப்பாயோ? – நாளைக்கு நீ என்னுடன் இருக்க முடியுமா? (முடியாது) காளத்தி நின்றைக்கே சென்றக்கால் – காளத்தியப்பன் வாழும் திருநின்றவூரை நான் சென்றடைந்த பிறகு, நீ எங்கே நானெங்கே – நீ எங்கே தொலைவாயோ, நான் எங்கே இருப்பேனோ, இன்றைக்கே சற்றே இரு – அதனால் இன்று ஒருபொழுது மட்டும் வறுமையே நீ என்னை வாட்டி முடித்து விடுவதற்கு இருப்பாயாக!

மதுரகவிராயர் இந்தப் பாடலை பாடும்போது இன்னொரு புறம் படுத்துக் கொண்டிருந்த காளத்தியப்பர் செவியில் அந்தச் சொற்கள் பாய்கின்றன. துடித்துப் போகிறார். நம்பிக்கையோடு நம்மை காணச் செல்லும் இவருக்கு நம் வீட்டின் பூட்டிய கதவுகல ஏமாற்றமளிக்காதா… என்று பலவாறு சிந்திக்கிறார்.

அப்போது தான் இவருக்கு நினைவுக்கு வருகிறது. தனது வீட்டின் நிலைக்கதவு சந்தன மரத்தால் ஆனது என்பது. ‘இல்லை’ என்று சொல்லாமல் அதை பெயர்த்து இவருக்கு கொடுத்துவிடலாம் என்று கருதி மனைவியுடன் இரவோடு இரவாக ஊர் திரும்புகிறார்.

ஆனால் அங்கே இவர் கண்ட காட்சி இவருக்கு அதிர்ச்சியளித்தது. எந்தக் கதவை புலவருக்கு கொடுக்க நினைத்தாரோ அந்த கதவையே யாரோ பெயர்த்து எடுத்துச் சென்றிருந்தார்கள்.

அந்த நிலையிலும் இவருக்கு கோபம் வரவில்லை. “பாவம்… பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு ஏழை, நாம் தான் இல்லையே என்று கருதி அதை உடைத்து எடுத்துச் சென்றிருக்கக் கூடும்!” என்று தன்னை தேற்றிக்கொண்டார்.

“நாடி வரும் புலவருக்கு என்ன பதில் சொல்வது? அவர் முகத்தில் விழிக்கக்கூட எனக்கு தெம்பில்லையே… ஈஸ்வரா இது என்ன சோதனை?” – பலவாறாக சிந்தித்தவர், பொழுது புலர்ந்தவுடன் தனது மனைவியை அழைத்து, “என்னிடம் இருக்கும் கொஞ்சம் பணத்தில் நான் மளிகை பொருட்களை எப்படியாவது வாங்கி வருகிறேன். வரும் புலவருக்கு முதலில் பசியை போக்குவோம். மற்றது ஈசன் விட்ட வழி” என்று கூறி, கடைவீதிக்கு சென்று கொஞ்சம் மளிகை பொருட்களை வாங்கி வருகிறார்.

காளத்தியப்பரின் மனைவி, அடுப்பை பற்றவைத்து உணவு  சமைக்க, சற்று நேரத்திற்க்கெல்லாம் மதுரகவி ராயர் வந்துவிட்டார்.

அவரை அன்பொழுக வரவேற்று, உபசரித்த காளத்தியப்பர், தனது மனைவியிடம் அறிமுகப்படுத்தினார்.

புலவருக்கு அமுது படைக்கப்பட்டது.

பசியாறிய புலவர் தயங்கி தயங்கி தான் வந்த நோக்கத்தை கூறினார்.

Join our Voluntary Subscription Scheme

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support Rightmantra by becoming Voluntary Subscriber.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

காளத்தியப்பர் துடிதுடித்துப் போனார். வாழ்வாங்கு வாழ்ந்து நொடித்துப் போனபோது கூட தனது வறுமையை காளத்தியப்பர் உணர்ந்ததில்லை. அது பற்றி கவலைப்பட்டதில்லை. ஆனால், நாடிவருவோர்க்கு இல்லை என்று கூறும் நிலையையே தனது வறுமை என்பதை உணர்ந்தார்.

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு. (குறள் 219)

“இல்லை என்ற சொல்லையே என் வாழ்க்கையில் இதுவரை நான் அறிந்ததில்லையே… இந்த ஏழைப் புலவரிடம் அதை சொல்லும்படி ஆகும் போலிருக்கிறதே.. இதற்கு என் உயிரை விட்டுவிடுவதே மேல்” என்று புலவரை ஒரு நிமிடம் இருக்கச் சொல்லிவிட்டு தன் வீட்டு புழக்கடைக்கு விரைந்தார்.

Vallal Kalathiyappar 2

அங்கே புழக்கடையில் பாம்பு புற்று கண்ணில் படுகிறது. அதில் கையைவிடுகிறார். காளத்தியப்பர் இந்தப் பக்கம் கையைவிட அந்தப் புற்றில் குடியிருந்த பாம்பு ஒன்று அந்தப் பக்கம் வெளியே வந்தது. வெளியே வந்த நாகம் தனது வாயை திறந்து நாகரத்தினக் கல்லை காளத்தியப்பர் முன்பு கக்கிவிட்டுச் சென்றது. இதை சற்றும் எதிர்பாராத காளத்தியப்பர் அகமகிழ்ந்தார்.

“இதுவும் ஈசனின் கருணை தான். இறைவா, இரப்போர்க்கு ஈயாமல் காளத்தி உயிர்நீத்தான் என்ற அவப்பெயரை எனக்கு வராமல் காத்தாய்! புலவருக்கு கொடுக்க இதை விட சிறந்த வெகுமதி கிடைக்குமா..!” என்று உள்ளே ஓடோடிச் சென்று, புலவரிடம் அந்த நாகரத்தினக் கல்லை பணிவன்போடு கொடுத்தார்.

புலவர் அதைப் பெற்று பரவசத்துடன் காளத்தியை பாட, “இதற்கு தகுதியுடையவன் நான் அல்ல. நாகத்தை ஆபரணமாக அணிந்திருக்கும் ஈசன் தான்!” என்று  நடந்தவற்றை கூறினார்.

அதை கேட்டு வியப்பின் உச்சிக்கு சென்ற மதுரகவிராயர்,

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. (குறள் 230)

என்று குறள் வழி நின்று ஈகைக்காக உயிரையும் விட துணிந்த காளத்தியப்பரை போற்றி பணிந்தார்.

கொடுக்கவேண்டும் என்கிற எண்ணம் இருப்பவர்களுக்கு இறைவன் அள்ளிக்கொடுக்கமாட்டான்… கொட்டிக்கொடுப்பான்! எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் அவர்களுக்கு உதவிக்கரம் நீளும். காளத்தியப்பரின் வாழ்க்கையே அதற்கு சிறந்த உதாரணம்.

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை
இது நான்குமறை தீர்ப்பு…!!!

==============================================================

Also check :

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

எது உண்மையான தர்மம்?

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

“எல்லாம் அவ பாத்துப்பா!”

==============================================================

[END]

 

 

5 thoughts on “கொடுத்துக் கெட்டவர் குவலயத்தில் உண்டோ ?

  1. கர்ணனுக்கு மேல இவர் இருந்திருக்கார்.
    நல்லதையே நினைப்போம் .
    நல்லதையே செய்வோம் .
    நன்றி
    தங்களின்
    சோ. ரவிச்சந்திரன்
    கர்நாடகா

  2. கொடுத்து கெட்டவர் இந்த உலகினில் இல்லை என்பதை சொன்ன பதிவு. பதிவை படிக்க படிக்க பதற்றமே ஏற்பட்டு..ஈசனாரின் திருவிளையாடல் எப்படி நடைபெற போகிறது என்று மனம் பதை பதைக்க..அள்ளி கொடுக்காமல்..கொட்டி கொடுத்தார் என்பது உண்மையே.
    இந்த பதிவை படித்த பின்பு கொடுப்பதற்கு பொருள் வேண்டாம்..நல்ல மனமே வேண்டும் என்று நச்சென்று பதிவு சொல்கிறது.அந்த நல் மனதை பெற்றிட நாமும் முயல்வோம்.

    நன்றி அண்ணா..

  3. சுந்தர்,

    உங்கள் பதிவுகளுக்கிடையே சரியான இடங்களில் நீங்கள் இணைக்கும் திருக்குறள்கள்! அப்பப்பா!! குறள் மேல் தங்களுக்கு உள்ள காதலை தெள்ள தெளிவாக தெரிவிக்கின்றன!!!.

    அது சரி… அது என்ன…….. குறளைப் போலவே அங்கங்கே சினிமா பாடல்களும்?

    1. தகுதியுடையவற்றுக்கு தான் நம் தளத்தில் இடம் கிடைக்கும். அந்த வகையில், நான் பயன்படுத்திய சினிமா பாடல் வரிகள் உண்மையில் ‘வைர’வரிகள் என்றே கருதுகிறேன். நன்றி.

  4. Sundarji,
    Good reading. But I was pondering if anyone in these days could possibly be like this.

    Like the well, keep giving….it keeps filling.
    What u give u shall receive.

    Regards,
    Ranjini

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *