Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!

நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!

print
கா பெரியவா தொடர்புடைய பல அனுபவங்களை சம்பந்தப்பட்ட பக்தர்களையும் அணுக்கத் தொண்டர்களையும் நேரடியாகவே சென்று அவர்கள் இருப்பிடத்திலேயே சந்தித்து அவர்கள் கூறியதை பல முறை இங்கே நம் தளத்தில் பகிர்ந்திருக்கிறோம். அள்ள அள்ள குறையாத அருட்சுனைகள் அவை.

DSC05043 copy

இந்நிலையில் நமது அலுவலகத்திற்கு சென்ற வாரம் நண்பரும் வாசகருமான திரு.திருக்கருகாவூர் ராஜன்கணேஷ் என்பவர் வந்திருந்தார். நீண்ட நாட்களாகவே நம் அலுவலகம் வந்து நம்மை சந்தித்து அளவளாவ வேண்டும் என்று சொல்லிகொண்டிருந்தார். நமது நூல் வெளியீட்டு விழாவில் நிச்சயம் சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார். அதற்கு வர முடியாததால் நேரில் நம்மை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க நமது அலுவலகம் வருகை தந்தார்.

DSC05049
நமது நூல்களை பெற்றுக்கொள்ளும்போது…

பழகுதற்கினியவர். பண்பில் சிறந்தவர். எல்லாவற்றுக்கும் மேல் மஹா பெரியவாவின் ஆத்யந்த பக்தர். கடந்த இரண்டரை ஆண்டுகளாக இவரை நமக்கு தெரியும்.

Thandhadhu Un thannaiரைட்மந்த்ராவின் அடுத்த கட்டம் குறித்த பல முக்கிய விஷயங்களை இருவரும் கருத்து பரிமாற்றாம் செய்துகொண்டோம். பல நல்ல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அண்மையில் நாம் வெளியிட்ட நமது நூல்கள் இரண்டையும் தனது கைப்பட நம்மிடம் வாங்கி நம்மை உற்சாகப்படுத்தினார்.

சந்திப்பின்போது நாம் எதிர்பாராத பரிசு ஒன்றை அளித்து நம்மை திக்குமுக்காடச் செய்தார். “தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை!” – பிரதோஷம் மாமா மற்றும் அவர் மகா பெரியவா மீது கொண்ட பக்தியின் பல்வேறு நிலைகள் குறித்த புத்தகம் இது. இந்த நூலை இதுவரை நாம் படித்ததில்லை. தேடி வரும் குருவருள் என்பது இது தானோ?

பிரதோஷம் மாமாவின் வாழ்க்கையில் மகா பெரியவா நிகழ்த்திய அற்புதங்களை விவரிக்கும் நூல் அது. படிக்க படிக்க தெவிட்டாத தெள்ளமுது. ஒவ்வொரு மகிமையிலும் ஒவ்வொரு பாடம். கருணைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.

அந்த கடலில் மூழ்கியெடுத்த முத்துக்களில் இரண்டை தருகிறோம். இரண்டும் சொல்லும் நீதி ஒன்று தான்.

‘பெரியவாவை நம்பினோர் கைவிடப்படார்!’ என்பது தான்.

==============================================================

Rightmantra Books now available in Flipkart

நமது நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்து வாங்கிக்கொள்ளவும். ஆன்லைனில் ஆர்டர் செய்து நூல்களை வாங்க FLIPKART ஒரு எளிய வழிமுறையாகும்.

Rightmantra Wrapper2

Rightmantra Wrapper1

Just go Flipkart.com and Type ‘Rightmantra Sundar’ in search box

OR use the following link

http://www.flipkart.com/search?q=Rightmantra+Sundar&as=off&as-show=off&otracker=start

விரிவான பதிவுக்கு : நமது நூல்கள் எங்கே கிடைக்கும் ? எப்படி வாங்கலாம் ??

==============================================================

‘பெரியவாவை நம்பினோர் கைவிடப்படார்!’

சென்டிரல் தலைமை அலுவலகத்தில் உத்தியோகம் பார்த்த நாட்களில் பிரதோஷ தரிசனம் தொடர மீளா அடிமைக்கு தடைகள் ஏற்பட்டதுண்டு. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை குறைந்தது நான்கு நாட்கள் விடுப்பு கேட்டு வடக்கே யாத்திரை புரியும் மகானை பிரதோஷ தரிசனம் செய்ய போய் வருதேன்பது கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்றல்லவா?

Periyava 1ஒரு சாதாரண லௌகீக சிந்தனையில் உழல்பவர்கள் ‘சரி பெரியவா வடக்கே எங்கெல்லாமோ போய் கொண்டிருக்கிறார். நாமோ உத்தியோகம் பார்க்கிறோம். மாதம் எட்டு நாள் லீவ் போடுவது எப்படி சாத்தியம். முடிந்த போது போய்க்கொள்ளலாம்.’ என்று சமாதானம் செய்து கொள்வதும் நியாப்படுத்திக்கொள்வதும் இயல்பே.

ஆனால் மீளா அடிமை தன் பிரதோஷ தரிசன சங்கல்பத்தை எந்த சந்தர்ப்பத்திலும் விடுவதாயில்லை.

அரசாங்க உத்தியோகமாயிற்றே! மேல் அதிகாரிகள் விடுவார்களா? மீளா அடிமைக்கு Note எழுதப்பட்டபோது கீழ்கண்டவாறு குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

“… is in the habit of taking leave frequently. He is a sickly man. He is under long sick. I want a dynamic traffic inspector. He may be transferred to his Parent Division”

ரிப்போர்ட் எழுதிய அதிகாரி மீளா அடிமையை SICKLY என குறிப்பிட்டிருந்தது அவர் ஸ்ரீ பெரியவாள் மீது கொண்டிருந்த தீவிர பக்தி எனும் பிணியைத் தானோ என்னவோ?

பிணிதீர்க்கும் பகவானிடம் முறையிடாமல் வேறு எங்கு செல்வார் மீளா அடிமை?

“பிரதோஷ தரிசனத்திற்கு மேல் அதிகாரிகள் எனக்கு லீவ் கொடுக்குறதில்லே. சில தொல்லைகள் எனக்கு இருக்கு. என்னைப் பற்றி ‘ரிப்போர்ட்’ சரியா எழுதலே. என்று அந்த மகா பிரபுவிடம் பிரதோஷ தரிசனத்தின் போது முறையிட்டார்.

ஸ்ரீ பெரியவாள் “யார் அந்த ஆபீசர்?” என்று கேட்டார்.

அதன் அர்த்தமென்ன… அதன் வீரியமென்ன…. அடுத்த பிரதோஷ தரிசனம் எப்படி அத்தனை இலகுவாயிற்று ?

மீளா அடிமைக்கு மாற்றம் செய்ய ரிப்போர்ட் எழுதின அந்த அதிகாரியை அந்த உலக மகா அதிகாரி மாற்றிவிட்டார். இப்படி மாயம் செய்துவிட்ட அந்த மகான் ஒன்றும் தெரியாத வேடதாரியாய் “அந்த ஆபீசர் எப்படி இருக்கார்…” என்று கேட்டிருக்கார்.

மீளா அடிமைக்கு மெய்சிலிர்த்தது. “நா பாத்துக்குறேன்” என்று அந்த நம்பிக்கை நாயகனின் வாக்கில் தான் எத்தனை அர்த்தம்? அதற்காக அந்த தயாளன் எப்படியெல்லாம் கருணை காட்டி தன்னை காப்பாற்றுகிறார்… நன்றி பெருக்கோடு அடிமை அந்த ஆண்டானை வணங்கி நின்றார்.

எங்கோ North East Frontier டிவிஷனுக்கு கடைசியாக வழக்கத்திலில்லாத முறையாக மாற்றலாகி போய்விட்ட அந்த மேலதிகாரியை அன்டாஹ் உலக மகா அதிகாரியான பக்தவத்சலன் “அவர் என்ன ஆனார்?’ என்று அதற்கு பின் பல தரிசனங்களின்போதும் கேட்டுக்கொண்டேயிருந்திருக்கிறார்.

ஆபீசர் என்ன ஆனாரோ, அது அந்த ஆட்டுவிக்கும் உலகநாதனுக்கு மட்டுமல்லவா புரியக்கூடியது.

==============================================================

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

==============================================================

அவன், அவன் இடம், நீ என்னிடம்!

ரு சனிப்பிரதோஷ தரிசனத்திற்கு லீவ் கிடைக்காததால் தடைப்பட்டுவிட்டது. அந்த ஆபீசர் கட்டாயமாக தன்னுடன் இன்ஸ்பெக்ஷனுக்கு வந்தேயாகவேண்டும் என்று அடிமையை வற்புறுத்த அடிமையும் மிக ஆழ்ந்த துயரத்தோடு ஆபீசரோடு போக நேர்ந்தது.

மனம் மிகவும் புண்பட்டுப் போனது. பிரதோஷ தரிசனம் நழுவிப் போய்விட்டதே என்று அடக்க முடியாத ஆதங்கம் அடிமைக்கு. அடிமை நினைத்த மாத்திரத்திலேயே அந்த நீலகண்டன் மனக்கண் முன் வந்து நின்று பிரதோஷ தரிசனம் கொடுத்து சென்றிருப்பார் என்பது உண்மையென்றாலும் ஏனோ அந்த பிரதோஷ தரிசனம் நேருக்கு நேர் கிடைக்காமல் தடைப்பட்டது. மீளா அடிமைக்கு ஆற்ற முடியாத தாபத்துடன் கண்ணீர் மல்க ஆபீசருடன் செல்ல நேர்ந்தது. இதை அறிந்த ஆபீசர் தானே நோட்ஸ் எடுத்து அடிமையின் வேலையைக் குறைத்ததோடல்லாமல் திரும்பிச் செல்ல தக்க ஏற்பாடுகளை செய்து அனுப்பினார். அவர் வேறு மதத்தவரை இருந்தும் அடிமையின் பக்திக்கு மதிப்பளித்தார்.

Periyava _ discourse

பெல்காமில் அடுத்த பிரதோஷம். மீளா அடிமையின் தீவிர பக்திக்கு அங்கீகாரம் கிடைத்தது போல, அங்கிருந்த ஸ்ரீகண்டன் என்னும் கைங்கரியம் செய்பவர் “என்ன மாமா இப்படி பண்ணிட்டீரே போன பிரதோஷம் நீர் வராம போய்ட்டீர். பெரியவாலோ பிரதோஷ பூஜை முடிச்சிட்டு பசுமாடு கன்னுக்குட்டியை தேடுற மாதிரி வெளியே வந்து தேடிட்டு போனா” என்றாராம்.

அடிமைக்கு எப்படி இருந்திருக்கும். காருஞரின் கரிசனத்தை எண்ணி அவர் உள்ளம் கசிந்துருகியது. அதோடு  நின்றுவிடவில்லை.அங்கிருந்த மலக்குடி கிருஷ்ணன் என்பவர், “லீவ் கிடைக்காததாலே வர முடியலேயாம். பிரதோஷ தரிசனம் விடாம கிடைக்கணும்னு பிரதிக்ஞை எடுத்திண்டுருக்கார்” என்று அடிமையின் சார்பாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளிடம் கூட அந்த மாமுனி அதை கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லையாம். அன்று சங்கரர் காஷ்ட மௌனமாம்!

ஆனால் அந்த மௌனத்தின் வீர்யம் அடுத்த பிரதோஷத்திற்குள் வெளிப்பட்டுவிட்டது.

லீவ் கொடுக்க மறுத்த ஆபீஸர் மாற்றலாகிவிட்டார்.

கரடிக்குத்தி கேம்ப்.

“அவன் அவன் ஊருக்கு போய்ட்டான்… நீ என்கிட்டே வந்துட்டே..” இப்படித்தான் தன் விந்தையை மறைத்த மகாதேவன் வேடிக்கையாக கூறினார்.

தடைசெய்த ஆபிசருக்கும் அவர் விருப்பப்பட்ட இடமான திருவனந்தபுரத்திற்கு மாற்றம் கிடைத்து விட, மீளா அடிமைக்கும் தடை அகன்று இவ்விடம் வந்துவிடும் அருள் கிடைத்தது.

பக்தனுக்கும் அருளி, தடை செய்தவருக்கும் சாதகமாக செய்வதென்பது அன்டாஹ் தர்மசீலரின் மகிமையையல்லவா காட்டுகிறது? அந்த  தயசிந்தனைக்கு நம் சிரம் தாழ்த்தி வணங்கவேண்டாமா…

இது தான் நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!

(நன்றி : தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை)

==============================================================

Support Rightmantra and its activities

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support Rightmantra by becoming Voluntary Subscriber.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

==============================================================

Also check : Success Stories of Rightmantra Prayer Club – சந்தான ப்ராப்தி, உத்தியோக ப்ராப்தி, ருண விமோசனம்

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==============================================================

உழவாரப்பணி அறிவிப்பு!

வரும் ஞாயிறு 11/10/2015 அன்று திருத்தணியை அடுத்துள்ள பொன்பாடி கிராமம் அருகில் அமைந்துள்ள மத்தூர் மகிஷாஷூர மர்த்தனி கோவிலில் உழவாரப்பணி நடைபெறும். வேன் பயணம்.

Maddur Mahisashura Marthini Temple 9

ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்திலிருந்து வேன் காலை 7.00 மணிக்கு புறப்படும். கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் மின்னஞ்சல் மூலமோ அல்லது எஸ்.எம்.எஸ். மூலமோ அவசியம் பதிவு செய்யவேண்டும்.

– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர், ஆசிரியர், Rightmantra.com | E : editor@rightmantra.com | M : 9840169215

==============================================================

For articles on Maddur Mahishashura Marthani Amman please check :

மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !

திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)

அடியார்கள் வழியனுப்பு விழாவும், ஏமாற்றத்தில் வெளிப்பட்ட அருளும்! ஆடி ஸ்பெஷல் (3)

==============================================================

Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…

புடவை முதல் கோலம் வரை – மகா பெரியவா பெண்களுக்கு சொல்லும் டிப்ஸ்!

மஹா பெரியவாவின் ஜட்ஜ்மெண்ட்டும் அனுக்ரஹ தெரபியும்!

அலகிலா விளையாட்டுடையான் ஒரு தாயுடன் விளையாடிய விளையாட்டு!

‘சில சமயம் பகவான் மீதே கோபம் வருகிறதே?’ – தெய்வத்திடம் சில கேள்விகள்! (Part II)

“தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது எதை ஸ்வாமி?” தெய்வத்திடம் சில கேள்விகள்!

தெய்வத்தின் குரலில் தெய்வக் குழந்தையின் வரலாறு!

தர்மம் தழைக்க தோன்றிய தயாபரன் – மகா பெரியவா ஜயந்தி Spl & Excl.Pics!

எது நிஜமான பக்தி?

“கேட்டால் கொடுக்கும் தெய்வம். கேளாமலே கொடுப்பவர் குரு!” – குரு தரிசனம் (37)

தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)

மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)

நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)

அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு!  குரு தரிசனம் (33)

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!!  குரு தரிசனம் (32)

சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

===============================================================

[END]

 

 

5 thoughts on “நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!

  1. நாளை சனி மகா பிரதோஷம். இன்று பிரதோஷ மகிமையை தங்கள் தளத்தின் மூலம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி

    மகா பெரியவாவே பரமேஸ்வரனின் அவதாரம் தானே தனது சீடனின் ஆசையை நிறைவேற்றாமல் போவாரா , இரண்டு நிகழ்வுகளும் மிக அருமை. மகா பெரியவா மைக்கின் முன் அமர்ந்து இருப்பது நமக்கு உபதேசம் செய்ய நினைப்பது போல் உள்ளது

    பிரதோஷ மாமா என்ற பெயர் நான் கேள்விப் பட்டு இருக்கிறேன் .

    திரு ராஜன் கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்

    குருவே சரணம்

    வாழ்க … வளமுடன் !!!!

    நன்றி
    உமா வெங்கட்

  2. டியர் சுந்தர் சார்

    எப்படி சொல்வது என்று தெரியவில்லை. பெரியவா பெரியவாதான். தன்னுடைய பக்தைகளின் உண்மையான விருபங்களை நிறைவேற்றுவதில் அவரருக்கு இணை அவர்தான்.

    என்னுடைய பிரச்சனை பற்றி உங்களக்கு தெரியும், எனக்கு வங்கியில் லோன் மகாபெரியவவின் கிருபையால் கிடைத்துவிட்டது. எனக்கு மனதில் இருக்கும் பலம் உடம்பில் இல்லை எனவே பெரியவா நீங்கள் எப்படியாவது என் வீட்டிற்கு வந்து இந்த வியாபாரத்தை நீங்கள் நடத்த வேண்டும். அப்படி இன்னும் இரண்டு நாட்களில் வந்தால் எனக்கு பெரிய நம்பிக்கை வந்துவிடும் என நினைத்து கொண்டே உறங்கிவிட்டேன்.

    என்ன அதிசியம், இன்று காலையில் வெப்சைட் ஓபன் செய்து பார்த்தபொழுது பிரதோஷ மாமாவின் வாழ்கையில் பெரியவா நிகழ்த்திய அற்புதங்களை படித்தேன். அது எனக்கு என்றே வந்தது போல இருந்தது. ரைட் மந்த்ரா மூலம் மகாபெரியவா என்னிடம் வந்துவிட்டார்.

    நன்றி

    Chandrasekaran

  3. இன்று சனி மகா பிரதோஷம். பதிவை உள்வாங்கி கொண்டேன். பிரதோஷ மகிமையையும் புரிந்தது. கருணை கடலின் புதிய தோற்றங்களை இந்த பதிவின் படங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.இப்போது தான் பிரதோஷம் மாமா என்ற பெயர் பற்றி அறிகிறேன் அண்ணா..

    உம்மை நினைத்தேன் உம் நாமம் சொன்னேன்
    உம்மைப் பார்த்தேன் மன நிம்மதி பெற்றேன்
    மஹா பெரியவா உம்
    சாந்த முகமும் உம் கருணைக் கண்களும்
    காந்தப் பார்வையும் உம் ஈர்க்கும் சிரிப்பும்
    எளிய தோற்றமும் உம் பரந்த மனமும்
    அரவணைக்கும் தன்மையும் உம் நலம் காக்கும் பண்பும்
    குறை தீர்க்கும் சக்தியும் உம் பெயரின் வலிமையும்
    அருள் தரும் இன்பமும் உம் ஆறுதல் வார்த்தைகளும்
    இவை எல்லாம் கலந்த உம் ஒரு சுகமான சூழலை
    நாங்கள் அனுதினமும் உணர்கிறோம்
    ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர மஹாஸ்வாமி சரணம்!

    மிக்க நன்றி அண்ணா.

  4. ஆகா என்ன கருணை இன்று சனி மகா பிரதோஷம் எங்க வூர் கைகாவில் இன்று மிக அருமையாக பிரதோஷம் நடந்தது .
    தங்களின் பதிவு மிகவும் அருமை சார்.

    பெரியவர் பெரியவர் தான். அவர் நடமாடும் பரமேஷ்வர்

    தினமும் அவரை நினைத்தாலே போதும் வாழ்கையில் சகலுமும் கிட்டும் என்பதற்கு இதை விட வேறு என்ன வேன்றும்.

    மிக்க நன்றி சார்.

    தங்களின்
    சோ. ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *