Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, June 11, 2023
Please specify the group
Home > Featured > தொண்டும் பேரானந்தமும் – சேக்கிழாருக்காக செலவிட்ட சில மணி நேரங்கள் !

தொண்டும் பேரானந்தமும் – சேக்கிழாருக்காக செலவிட்ட சில மணி நேரங்கள் !

print
குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் மணிமண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும் சேக்கிழார் விழாவையொட்டி மணிமண்டபத்தில் நமது உழவாரப்பணி தவறாமல் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான உழவாரப்பணி ஜூலை 19, 2015 அன்று நடைபெற்றது. அது பற்றிய பதிவு இது.

இந்தப் பதிவில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதால், பிரவுசர் சற்று மெதுவாகத் தான் லோட் ஆகும். எனவே பொறுமையுடன் பதிவை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1) உழவாரப்பணியின் புகைப்படங்கள்

2) நாகேஸ்வரர் கோவிலில் அம்பாளிடம் வைத்து பூஜிக்கப்பட்ட ‘அபிராமி அந்தாதி’யை சேக்கிழார் திருவுருவச் சிலை முன்பு நம் உழவாரப்பணிக்குழு உறுப்பினர்களுக்கு பரிசளித்தது.

3) சேக்கிழார் மணிமண்டபத்தில் துப்புரவு பணி செய்து வரும் ஊழியர்களை கௌரவித்தது.

4) நம் உறுப்பினர்கள் அனைவரின் க்ரூப் ஃபோட்டோ

என புகைப்படங்கள் நான்கு நிலைகளில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதிவின் நோக்கம் இதைப் பார்க்கும் படிக்கும் நம் வாசகர்களுக்கு உழவாரப்பணி மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் மேலும் பணியில் பங்குபெற்ற நம் வாசக அன்பர்களை உற்சாகப்படுத்தவும், அடுத்தடுத்து நாம் செய்யக்கூடிய பணிகளில் அவர்கள் ஆர்வமுடன் கலந்துகொள்ளவுமே அன்றி வேறொன்றுமில்லை.

Sekkizhar Uzhavarappani 1

Sekkizhar Uzhavarappani 2

இது கோவில் அல்ல. மணிமண்டபம். இங்கு உண்டியல் போன்றவை கிடையாது. சேக்கிழார் பிறந்த மண்ணில் அவரின் நினைவாக கட்டுப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இது இருந்தாலும் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையிலான ஒரு தனியார் டிரஸ்ட் மூலம் நிர்வகிக்கப்பட்டு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மணிமண்டபத்தில் திருமுறை படிக்கும் மாணவர்கள் வாரம் ஒரு முறை வந்து திருமுறை பாடுவார்கள். இது தவிர தேவார, திருக்குறள் வகுப்பும் இங்கு நடைபெறுவது வழக்கம். பொதுமக்கள் தியானம் செய்ய தியான மண்டபம், நூலகம் என அனைத்தும் இங்கு உண்டு.

Sekkizhar Uzhavarappani 9

Sekkizhar Uzhavarappani 9இது போன்ற இடங்களில் அவசியம் நமது உழவாரப்பணி நடைபெறவேண்டும், நமது கால்கள் படவேண்டும் என்று விரும்பியே இங்கு பணி செய்ய ஒப்புக்கொண்டோம். அதற்கு ஏற்றார்போல, ஒட்டடை அடிப்பது, ஜன்னல்களை துடைப்பது, தரையை துடைப்பது, உள்ளிட்ட பணிகள் நமக்கு அங்கு இருந்தன.

குன்றத்தூருக்கு பஸ் வசதி இருந்தபடியால் போக்குவரத்திற்கு வேன் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் நாம் உழவாரப்பணி தொடர்பான பொருட்களை குட்டி யானை எனப்படும் வண்டியில் தான் கொண்டு வந்தோம்.

Sekkizhar Uzhavarappani 3

Sekkizhar Uzhavarappani 4Sekkizhar Uzhavarappani 10Sekkizhar Uzhavarappani 11Sekkizhar Uzhavarappani 12Sekkizhar Uzhavarappani 18ஞாயிறன்று பல்வேறு சொந்த அலுவல்களை தியாகம் செய்து இந்த உழவாரப்பணிக்கு வந்திருந்து சிறப்பான முறையில் நடத்திக்கொடுத்த அனைவருக்கும் நம் மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவருக்கும் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமானின் திருவருளும், தொண்டர்க்கெல்லாம் தொண்டன், தலைவர்க்கெல்லாம் தலைவன் நம் பரமேஸ்வரனின் அருளும் பரிபூரணமாய் உரித்தாகுக.

பணி நடைபெற்ற ஜூன் 22 ஞாயிறு காலை சொன்னது போல, 7.30 க்கெல்லாம் அனைவரும் வந்து சேர்ந்துவிட்டனர். முன்னதாக பணி துவங்கும் முன்னர் அனைவரும், அருகில் உள்ள வட திருநாகேஸ்வரம் சன்னதி சென்று நாகேஸ்வரரையும், காமாக்ஷி அம்மனையும் தரிசித்தோம்.

Sekkizhar Uzhavarappani 15

Sekkizhar Uzhavarappani 16அனைவரும் அவரவர் செய்யவேண்டிய பணிகளும் பகுதிகளும் பிரித்துக்கொடுக்கப்பட்டன. மெயின் ஹாலில் சேக்கிழாரின் திருவுருவச் சிலைக்கு அருகே மிகப் பெரிய பித்தளை விளக்கு ஒன்று இருந்தது. தூசி படிந்து நிறம் மாறி காணப்பட்ட அந்த விளக்கு சுத்தம் செய்ய மகளிர் அணியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த விளக்கை நிச்சயம் ஒருவர் மட்டும் தூக்க முடியாது. அத்தனை எடை. எனவே இருவர் சேர்ந்து தான் தூக்கி சென்றோம். ஆனால் சீதை சிவதனுசை சுண்டு விரலால் புரட்டியதை போல, நம் மகளிர் அணியினர் மிக மிக அசால்ட்டாக அந்த விளக்கை தூக்கிச் சென்றதை பார்த்தபோது நமக்கு பகீரென்றது. சுமார் ஒரு மணிநேரம் போராடி மகளிர் அணியினர் அந்த விளக்கை நன்கு தேய்த்து புத்தம் புதிய விளக்கு போலாக்கிவிட்டனர்.

Sekkizhar Uzhavarappani 51

Sekkizhar Uzhavarappani 24

Sekkizhar Uzhavarappani 20

Sekkizhar Uzhavarappani 21Sekkizhar Uzhavarappani 22Sekkizhar Uzhavarappani 26Sekkizhar Uzhavarappani 27Sekkizhar Uzhavarappani 29Sekkizhar Uzhavarappani 32மணிமண்டபத்தில் உள்ள மெயின் ஹால் முழுக்க ஒட்டடைஅடித்தனர். பின்னர் தியானமண்டபத்தில் மேல் உள்ள டூம் முற்றிலும் ஒட்டடை அடிக்கப்பட்டது. இது சற்று உயரம் என்பதால் ஒட்டடை அடிக்க சவாலாக இருந்தது. ஏணியை கொண்டு வந்தும் உயரம் போதவில்லை. ஒரு வழியாக அட்ஜஸ்ட் செய்து நண்பர்கள் ஒட்டடை அடித்து முடித்தனர்.

ஒட்டடை அடித்து முடித்தபின்னர், தரை கூட்டிப் பெருக்கப்பட்டு, மகளிர் குழுவினரை கொண்டு சோப் ஆயில் கொண்டு தரை முழுக்க மாப் செய்யப்பட்டது. இதையடுத்து மணிமண்டபம் முழுக்க பளபளவென சுத்தமாகிவிட்டது.

Sekkizhar Uzhavarappani 25

Sekkizhar Uzhavarappani 50

 

Sekkizhar Uzhavarappani 30

Sekkizhar Uzhavarappani 28

 

 

 

Sekkizhar Uzhavarappani 31

எப்போதும் போல இந்த உழவாரப்பணியின் போதும் மணிமண்டபத்தில் துப்புரவு பணியை திறம்பட செய்து வரும் தீபா மற்றும் சத்யா ஆகிய இரு பெண்களும் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு புடவை, ரவிக்கை மற்றும் இனிப்புக்கள் வழங்கப்பட்டன.

சேக்கிழார் மணிமண்டபத்தில் உள்ள தோட்டத்தையும் புல்வெளிகளையும் பராமரிப்பது இவர்கள் பணி. சம்பளத்துக்கு தான் வேலை என்றாலும், அதையும் ஆத்மார்த்தமாக செய்பவர்கள் இவர்கள்.

Sekkizhar Uzhavarappani 19

Sekkizhar Uzhavarappani 23

பொதுவாக இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும்போது, சம்பந்தப்பட்டவர்களை கௌரவிப்பதற்கு முன்பு, அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் தானா என்று தெரிந்துகொண்டு தான் கௌரவிப்பது நம் வழக்கம். (நான் இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது.)

ஒரு சில கோவில்களில், இப்படி துப்புரவு பணி செய்யும் பெண்களிடம் சாட்சாத் அந்த அம்பிகையையே கண்டு வியந்திருக்கிறோம். தெய்வானாம் மானுஷ ரூபாம்!

நாங்கள் காலை உழவாரப்பணி செய்ய இறங்கியபோது, ‘இவர்கள் தான் வேலை செய்கிறார்களே நாம் சும்மா நிற்போம்’ என்று கருதாமல் தங்கள் கடமையை அவர்கள் பாட்டுக்கு கருத்தாக செய்துவந்தனர். பேச்சு கொடுத்ததில் அவர்கள் குடும்பத்தின் நிலையை தெரிந்துகொண்டோம். இவர்களை போன்றவர்கள் வீட்டு வேலை செய்தாலே சுலபமாக பல ஆயிரங்கள் சம்பாதிக்க முடியும் என்பது தான் யதார்த்தம். அப்படியிருக்க, சேக்கிழார் மணிமண்டபத்தில் பணி செய்வது மிகப் பெரிய விஷயம்.

Support Rightmantra website – Contribute us generously!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support Rightmantra by becoming Voluntary Subscriber.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

நம் வாசகியரை கொண்டு தீபா மற்றும் சத்யா இருவருக்கும் புடவை, ரவிக்கை பிட் மற்றும் இனிப்புக்கள் வழங்கப்பட்டன.

சேக்கிழார் மணிமண்டப உழவாரப்பணியின் போது மணிமண்டபம் தொடங்கியது முதல் மண்டபத்தின் காவலாளியாக பணிபுரிந்துவரும் பெரியவருக்கும் அவரது சேவையை கௌரவிக்கும் விதமாக நம் தளம் சார்பாக சால்வை அணிவித்து வேஷ்டி பரிசளிக்கப்பட்டது.

சேக்கிழார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர் திரு.பாலு அவர்கள் நமது தேவைகளை கேட்டறியவும், மதிய உணவை ஏற்பாடு செய்யவும் வந்திருந்தார்.

பணிக்கு வந்தவர்களுக்கு அன்புப்பரிசு!

நமது உழவாரப்பணிகளில் பங்கேற்பவர்களுக்கு ஏதோ நம்மால் இயன்ற சிறு சிறு அன்புப்பரிசு வழங்குவது நம் வழக்கம்.

Sekkizhar Uzhavarappani 33

Sekkizhar Uzhavarappani 35

Sekkizhar Uzhavarappani 36இந்த பணியில் பங்கேற்றவர்களுக்கு, ‘அபிராமி அந்தாதி & அபிராமி பதிகம்’, வழங்கப்பட்டது. என்ன விசேஷம் என்றால், நாகேஸ்வரர் கோவிலில் அம்பாள் சன்னதியில் இருந்த அர்ச்சகரிடம் “உழவாரப்பணி அன்பர்களுக்கு கொடுக்கப்போகிறோம் அம்பாள் பாதத்தில் நூல்களை வைத்து எடுத்து கொடுங்கள்” என்று கூறி நிறைய மலர்களுடன் சேர்த்து வாங்கிச் சென்ற அனைத்து புத்தகங்களையும் காமாக்ஷி அம்மனின் பாதத்தில் வைத்து ஆசி பெற்றோம்.

Sekkizhar Uzhavarappani 37மணிமண்டபத்தில் நம் உறுப்பினர்களிடம் விஷயத்தை கூறி, அன்னையின் ஆசி பெற்ற தோத்திர நூல்கள் இவை. சக்தி அதிகம் என்று சொல்லியே கொடுத்தோம். அனைவரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்கள்.

பிற்பகல் 1.00 மணியளவில் பணிகள் நிறைவுபெற்ற பின் மதிய உணவு. சுடச் சுட சாம்பார் சாதம், உருளைக் கிழங்கு பொரியல், + தயிர் சாதம். அருமையான சுவையுடன் போதும் போதுமென்ற அளவு மதிய உணவு சாப்பிட்டோம்.

Sekkizhar Uzhavarappani 49

Sekkizhar Uzhavarappani 40

Sekkizhar Uzhavarappani 42Sekkizhar Uzhavarappani 44Sekkizhar Uzhavarappani 45மொத்தத்தில் சேக்கிழார் பெருமான், எங்களுக்கு பணி செய்ய வாய்ப்பை தந்து, எங்களை புனிதர்களாக்கி, மனம் நிறைய வைத்து இறுதியில் வயிற்றையும் நிறைய வைத்துவிட்டார். மனம் வயிறும் ஒருங்கே நிறைந்தது ஈசன் கருணை.

மொத்தத்தில் சேக்கிழாருக்காக நாங்கள் செலவிட்ட சில மணிநேரங்கள் தொண்டினால் கிடைக்கக்கூடிய பேரானந்தத்தை எங்கள் அனைவருக்கும் தந்தது.

Sekkizhar Uzhavarappani 47

Sekkizhar Uzhavarappani 34

Sekkizhar Uzhavarappani 39ஞாயிறன்று பல்வேறு சொந்த அலுவல்களை தியாகம் செய்து இந்த உழவாரப்பணிக்கு வந்திருந்து சிறப்பான முறையில் நடத்திக்கொடுத்த அனைவருக்கும் நம் மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவருக்கும் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமானின் திருவருளும், தொண்டர்க்கெல்லாம் தொண்டன், தலைவர்க்கெல்லாம் தலைவன் நம் பரமேஸ்வரனின் அருளும் பரிபூரணமாய் உரித்தாகுக.

==============================================================

நம் உழவாரப்பணி நடைபெற்ற பின்னர் அடுத்த சில நாட்களில் நடைபெற்ற சேக்கிழார் விழாவில் சில துளிகள் (இதன்பொருட்டு தான் உழவாரப்பணி நடைபெற்றது!)

Sekkizhar Uzhavarappani 52

Sekkizhar Uzhavarappani 57

Sekkizhar Uzhavarappani 56

Sekkizhar Uzhavarappani 55

Sekkizhar Uzhavarappani 53

 

 

Sekkizhar Uzhavarappani 58==============================================================

உழவாரப்பணி அறிவிப்பு!

வரும் ஞாயிறு 11/10/2015 அன்று திருத்தணியை அடுத்துள்ள பொன்பாடி கிராமம் அருகில் அமைந்துள்ள மத்தூர் மகிஷாஷூர மர்த்தனி கோவிலில் உழவாரப்பணி நடைபெறும். வேன் பயணம்.

Maddur Mahisashura Marthini Temple 9

ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்திலிருந்து வேன் காலை 7.00 மணிக்கு புறப்படும். கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் மின்னஞ்சல் மூலமோ அல்லது எஸ்.எம்.எஸ். மூலமோ அவசியம் பதிவு செய்யவேண்டும்.

– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர், ஆசிரியர், Rightmantra.com | E : editor@rightmantra.com | M : 9840169215

==============================================================

For articles on Maddur Mahishashura Marthani Amman please check :

மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !

திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)

அடியார்கள் வழியனுப்பு விழாவும், ஏமாற்றத்தில் வெளிப்பட்ட அருளும்! ஆடி ஸ்பெஷல் (3)

==============================================================

Also check articles on  ‘உழவாரப்பணி’:

அருமையான பணியை தந்து இறுதியில் அற்புதமான பரிசை தந்த திரிசூலநாதர்!

நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்! நெகிழவைக்கும் சம்பவம்!!

தீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு!

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!!  குரு தரிசனம் (32)

இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்” – (3)

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

“எது இன்பம்?” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்!!

பாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம்! — சிவராத்திரி SPL (5)

“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி

‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி !

திருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை !

பாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி! பிரத்யேக பதிவு!!

“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா!

==============================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *