Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > நமது நூல்கள் எங்கே கிடைக்கும் ? எப்படி வாங்கலாம் ??

நமது நூல்கள் எங்கே கிடைக்கும் ? எப்படி வாங்கலாம் ??

print
ல விதமான பகீரத பிரயத்தனங்கள் மற்றும் தளராத முயற்சிகளுக்கு பிறகு நம் புத்தகங்கள் இரண்டும் நல்லபடியாக வெளியாகிவிட்டன. வாசகர்கள் அனைவரும் நம்மை பாராட்டியும், சிலர் வெளியீட்டு விழாவிலேயே புத்தகங்களை வாங்கியும் நமக்கு ஊக்கமளித்தனர். அவர்கள் அனைவருக்கும் நமது நன்றி.  இன்னும் பலர் புத்தகங்கள் கிடைக்கும் இடம் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

Rightmantra Books 1

DSC_1947 copy
வாரியார் சுவாமிகளின் பேத்தியை (தம்பி வழி) மணந்துள்ள திரு.சீதாராமன் அவர்கள் நம் வெளியீட்டு விழாவில்… நமது புத்தக விற்பனையை பார்த்துக்கொண்டபோது….! (இவர் வாரியார் ஸ்வாமிகள் புத்தகக்கடையை போரூரில் வைத்திருக்கிறார்)

நமது தளத்தில் வெளியாகும் பதிவுகளின் கருத்துக்கள் இணையம் பார்க்காத சாமான்ய மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், நம் கடுமையான உழைப்பில் வந்த பதிவுகளை மற்றவர்கள் கவர்ந்து அளிப்பதை தடுக்கவுமே அவற்றை புத்தகமாக்க விரும்பினோம். மற்றபடி நம் தளமும் அதற்குரிய பணிகளும் தான் நமக்கு முதன்மையானது.

புத்தக வெளியீடு என்பது அதுவும் நம்மைப் போன்ற சுயம்புகளுக்கு மிகவும் சவாலான ஒன்று என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருந்தாலும் ‘சமுத்திரத்தின் ஆழம் இறங்கிப் பார்த்தால் தான் தெரியும்’ என்பது போல, புத்தக வெளியீட்டில் உள்ள நடைமுறை சிரமங்களும் சவால்களும் தற்போது தான் நமக்கு புரிகின்றன.

DSC_1968 copy

DSC_2049 copyநமது புத்தகங்களின் கட்டுரை அனைத்தும் நம் தளத்தில் வந்த பதிவுகளை அடிப்படையாக வைத்து தான் வந்துள்ளன என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆதலால் நம் தளத்தின் பணிகள் எவ்விதத்திலும் பாதிக்காமல் இருந்தால் தான் நாம் மேலும் பல புத்தகங்களை வெளியிட முடியும். தளத்தின் பணிகள் தொய்வின்றி நடக்க வேண்டும் எனில் புத்தக விற்பனையை நாம் கவனிக்க இயலாது. நம்மிடம் அந்த அளவில் ஆள் பலமோ, இட வசதியோ கிடையாது.

நம் தளம் ஏற்கனவே வாசகர்களின் ‘விருப்பசந்தா’ மூலம் நடப்பது நீங்கள் அறிந்ததே. புத்தகங்கள் வாங்குபவர்கள், அவற்றின் வருவாய் மூலம் தளம் நடக்கும் என எண்ணி விடவேண்டாம். இன்னும் இது போல குறைந்த பட்சம் 10 நூல்களை நாம் வெளியிட்டு நமது பெயரை சந்தையில் ஓரளவு பிரபலப்படுத்திய பிறகே புத்தக வெளியீட்டில் லாபத்தையோ வருமானத்தையோ பார்க்க முடியும். இது தான் நிதர்சனம். மேலும் ஒவ்வொரு புத்தகமும் பல பதிப்புக்கள், பல ஆயிரம் பிரதிகள் மார்க்கை தாண்டும் போது தான் வருவாயை தர ஆரம்பிக்கும்.

இது நமது கன்னி முயற்சி! ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைத்து வருகிறோம். முதலில் திட்டமிட்டதைவிட குறைத்தே அச்சிட்டோம். புத்தக வெளியீடு அன்றே பல பிரதிகள் தீர்ந்துவிட்டன. வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் தங்கள் நட்புக்களுக்கு பரிசளிக்க பல பிரதிகளை வாங்கிச் சென்றனர்.

உண்மையில் நமது இன்றைய சூழ்நிலையில் நமது நூல்களை நீங்கள் வாங்கும்போது நமக்கு உதவுகிறீர்கள் என்பதைவிட அவற்றை யாருக்கு பரிசளிக்கிறீர்களோ அவர்களுக்குத்தான் நீங்கள் மிகப் பெரிய உதவியை செய்கிறீர்கள் என்று அர்த்தம்! நிச்சயம் அவர்கள் வாழ்க்கையையே அவை புரட்டிப்போடும்!!

Kadavulai Nambinor Kaividappadaar

Un Vazhkai Un Kaiyil

DSC_2226 copyதளம் நடக்க ஏற்கனவே உதவி வருபவர்கள் மற்றும் ‘விருப்பசந்தா’ செலுத்தி வரும் அன்பர்கள் அதற்கே முன்னுரிமை கொடுக்கவும். பதிவுகளை புத்தகமாக்கும் முயற்சியை விட ஒவ்வொரு பதிவுக்கும் நாம் எடுக்கும் ரிஸ்க், உழைப்பு, பொருளாதாரம், நேரம் அனைத்தும் அதீதமானவை. இதை வாசகர்கள் அறிந்திருந்தாலும், நமக்கு எப்போதும் போல் நீங்கள் நம் தளம் தொய்வின்றி தொடர உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறொம். அதற்காக புத்தகங்கள் வாங்குவது வேண்டாம் என்று அர்த்தமில்லை. நமது தளத்தை போலவே நமது புத்தகங்களுக்கும் நாம் முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறோம் என்பதை அன்போடு தெரிவிக்கிறோம்! அதற்கு உங்கள் மேலான ஒத்துழைப்பையும் விரும்புகிறோம்!!

புத்தகங்களை சந்தைக்கு கொண்டு சேர்ப்பதில் பெரும் பணிகள் (WORKS & FORMALITIES) இருக்கின்றன. கவர் போடுவது முதல் பல பணிகள் இருக்கின்றன. நம்மிடம் அதற்குரிய ஆள் / இட வசதி இல்லை என்பதால் வெளியீட்டு விழாவுக்கு அவசர அவசரமாக தயாரான நூல்கள் போக அச்சகத்திலிருந்த மீதி நூல்கள் அனைத்தையும் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் DISTRIBUTION AGENCY ஒன்றின் வசம் ஒப்படைத்துவிட்டோம். அவர்கள் நமது நூல்களை பரவலாக சந்தையில் கொண்டு சேர்ப்பார்கள். ஆனால் அதற்கு சற்று கால அவகாசம் பிடிக்கும். புத்தகங்களை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் நேர்மையாக நம்மிடம் தொகையை தருவார்கள் என்பது இன்றைய சூழலில் அதுவும் நம்மைப் போன்ற புதியவர்களுக்கு எளியவர்களுக்கு நிச்சயமில்லை. இருப்பினும் நமது பெயரை மக்களிடையே பதியச் செய்ய இது உதவும்.

DSCN3191 copy
நண்பர் கண்ணன் வைரமணி நமக்கு பரிசளித்தபோது…
புத்தகத்தை ஆர்வமுடன் புரட்டும் ஒரு பார்வையாளர்...
புத்தகத்தை ஆர்வமுடன் புரட்டும் ஒரு பார்வையாளர்…

இதற்கிடையே அந்த ஏஜென்சியை கொண்டே நமது நூல்களை ஃபிலிப்கார்ட்டில் போட்டிருக்கிறோம். ஆன்லைனில் ஆர்டர் செய்து நூல்களை வாங்க FLIPKART ஒரு எளிய வழிமுறையாகும். எனவே நமது புத்தகங்களை வாங்க விரும்பும் வாசகர்கள் கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்து வாங்கிக்கொள்ளவும்.

flipkart_logo_detail

‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்!’

http://www.flipkart.com/kadavulai-nambinor-kaividappadar/p/itmebmu7u2etjypt?pid=9788193170106

‘உன் வாழ்க்கை உன் கையில்!’

http://www.flipkart.com/un-vazhkai-kaiyil/p/itmebmu8yehqtzvd?pid=9788193170113

சென்னையில் நேரில் வாங்க விரும்பினால் மேற்கு மாம்பலம் ஆரியா கௌடா சாலையில் (அயோத்யா மண்டபம் அருகே) உள்ள தனலக்ஷ்மி நியூஸ் மார்ட், ஸ்டேஷன் ரோட்டில் உள்ள பவானி புக் சென்டர் மற்றும் போரூரில் வாரியார் ஸ்வாமிகள் புத்தகக் கடைகளில் நமது நூல்கள் கிடைக்கின்றன. தமிழகம் முழுதும் பரவலாக கிடைக்க, உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம். பின்னர் தெரிவிக்கிறோம்!

நன்றி!

‘ரைட்மந்த்ரா’ சுந்தர்
M : 9840169215 | E : editor@rightmantra.com

8 thoughts on “நமது நூல்கள் எங்கே கிடைக்கும் ? எப்படி வாங்கலாம் ??

  1. மிக்க மகிழ்ச்சியான செய்தி.

    தங்களின் விடா முயற்சிக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி.

    இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டும்.
    அதற்கான வித்து இந்த நூல்கள்.

    எதிர்க்கால மாபெரும் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.

  2. ஒரு தாய் தன் குழந்தையை பத்து மாதம் சுமந்து அழகிய இரட்டைக் குழந்தைகளை பெற்றது போல் தாங்கள் பலவித போராட்டங்களுக்கு இடையில் இரண்டு அழகிய வாழ நாள் முழுதும் போற்றி பாதுகாக்கக் கூடிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டுவிட்டீர்கள்.

    எங்களின் ஆதரவு எப்பொழுதும் தங்களுக்கு உண்டு. தாங்கள் எழுத்துலகில் முடி சூட வாழ்த்துக்கள்.

    வாழ்க…. வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

  3. வாழ்க வளமுடன்

    உங்களின் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி

    எல்லாம் இறையருள், மற்றும் குருவருள்

    புத்தகத்தை படித்தேன் ஓவ்வொன்றும் படி தேன்

    நன்றி

  4. தங்களின் இந்த சீரிய முயற்சி ஆல் போல் தழைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

    வாழ்த்துக்கள்

  5. தங்களின் விடா முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி சுந்தர் சார் .
    தங்கள் மென்மேலும் பல நூல்களை வெளியிட வேண்டும். வாழ்த்துக்கள் .
    நன்றி.

  6. Hi Sir,

    Congrats!!

    Expecting your books as ebooks Either as a Kindle or News hunt book.

    My personal point of view is it will reduce the shipping charges also it will always in our hand like mobile, iPad. 🙂

    In my mobile itself I have more than 250 books I bought from News hunt and Kindle it wont acquire much space also.

    It will good for our environment also GO GREEN!! 😉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *