Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா….

நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா….

print
வேலூர் மாவட்டம் குடியேற்றம் (குடியாத்தம்) நகரில் அமைந்துள்ள தொன்மையான காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் 27/09/2015 ஞாயிறன்று மாலை நமது பௌர்ணமி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

பல்வேறு மேடைகளில் நாம் இதுவரை பேசியிருந்தாலும் அவை அனைத்தும் நமது மேடைகள். நாம் நடத்திய விழாவின் மேடைகள். எனவே என்ன பேசவேண்டும் என்பது குறித்த பதட்டம் நம்மிடம் இருந்தது கிடையாது. அரிதாக வெளி மேடைகளில் தோன்றியிருந்தாலும் அவை வரவேற்புரைக்காக மட்டுமே. ஆனால் இந்த நிகழ்ச்சி அப்படி அல்ல. ஒரு சொற்பொழிவு. அதுவும் இரண்டு மணிநேரம் தொடர்ந்து நடைபெறக்கூடிய சொற்பொழிவு. பார்வையாளர்களுக்கு அலுப்பு தட்டாத வகையில் நன்றாக சுவாரஸ்யமாக பேசுவேண்டுமே என்கிற பதட்டம் நமக்கு இருந்தது.

Rathinagiri Murugan Temple

தளத்தின் வழக்கமான பணிகளை சென்ற வாரம் முழுதும் கவனித்து வந்தாலும் இடையிடையே குடியேற்றம் சொற்பொழிவில் பேசவேண்டியது குறித்த தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தோம்.

முந்தைய தினம் (19/09) சனிக்கிழமை மதியம் வேலூர் புறப்பட்டு சென்று காட்பாடியில் உள்ள நண்பர் ராஜேஷ் என்பவர் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் காலை அனைவரும் இரத்தினகிரி முருகன் கோவில் சென்றோம். இரத்தினகிரியில் நம் வாசகர் ஸ்ரீனிவாசன் என்பவர் எங்களுடன் இணைந்துகொண்டார்.

Rathinagiri Murugan Temple2

மாலை நாம் சொற்பொழிவில் பேசவேண்டிய செய்திகளை குறிப்புக்களாக பிரிண்ட் அவுட் எடுத்து வந்திருந்தோம். முருகனின் திருப்பாதங்களில் அவற்றை வைத்து ஆசி பெற நமக்கு ஆசை. அர்ச்சகரிடம் விஷயத்தை சொல்லி அவரிடம் குறிப்புக்கள் அடங்கிய கவரை கொடுத்தவுடன் அவரும் மகிழ்ச்சியுடன் அதை பெற்று முருகனின் பாதங்களில் வைத்தார்.

Rathinagiri Murugan Temple3

ஹப்பா… அதுவரை நமக்கிருந்த ஒரு வித பதட்டம் தணிந்தது. பேசவேண்டியதை முருகனிடம் ஒப்படைத்தாயிற்று. இனி அவன் பார்த்துக்கொள்வான் என்று நம்பிக்கை பிறந்தது. அர்ச்சனை முடிந்து குங்குமம் மற்றும் இதர பிரசாதங்களுடன் குறிப்புக்கள் திரும்ப கிடைத்தன. கண்களில் ஒற்றிக்கொண்டு வெளியே வந்தோம்.

மாலை குடியேற்றம் நகருக்கு சுமார் 5.00 மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். நமக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையில் முகம், கை, கால்கள் கழுவி சுத்தம் செய்துகொண்டு உடை மாற்றிக்கொண்டு தயாரானோம். பேசவேண்டிய விஷயங்களை ஒரு முறை மீண்டும் சரி பார்த்துக்கொண்டோம்.

குடியேற்றம் திருமுறை நன்னெறி சங்கத்தின் சார்பாக திரு.வாசுதேவன் அவர்கள் நம்மை அழைத்துச் செல்ல வந்திருந்தார். கோவில் நல்ல பழமையான கோவில் என்பது பார்த்தாலே புரிந்தது. திருப்பணிகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தன.

Gudiyatham Kasi Viswanadhar Temple 10

திரு.வாசுதேவன் நம்மிடம் பேசுகையில், குடியேற்றத்தில் சற்று முன்னர் பெய்த மழையால் தரை ஈரமாகிவிட்டதாகவும் எனவே வழக்கமாக சொற்பொழிவு நடைபெறும் இடம் மாற்றப்பட்டு அலங்கார மண்டபத்துக்கு முன்பு நாம் அமர்ந்து பேச ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும்  தெரிவித்தார்.

மழையால் ஈரமான பிரகாரம்
மழையால் ஈரமான பிரகாரம்

சுவாமியையும் அம்பாளையும் தரிசித்தபின்னர் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு வந்தோம். சரியாக அலங்கார மண்டபத்திற்கு முன்பாக நடராஜரின் பாதக்கமலங்களுக்கு கீழே நமக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

Gudiyatham Kasi Viswanadhar Temple 9

Gudiyatham Kasi Viswanadhar Temple

நடராஜருக்கு முன்பு அமர்ந்து ‘சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள்’ சொற்பொழிவு நிகழ்த்தும் பொன்னான வாய்ப்பு!! இதைவிட சிறந்த இடம் கிடைக்குமா என்ன? அரங்கேற்றம் செய்யும் குழந்தையின் பயத்தை போக்க, தாயானவள் அருகிலேயே இருந்து தைரியமூட்டுவது போல இது இருந்தது இது.

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா

குடியேற்றம் திருமுறை நன்னெறி சங்கத்தின் நிர்வாகிகள் மைக்கில் நம்மை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தனர். தொடர்ந்து அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துக்கொண்டு அமர்ந்தோம்.

Gudiyatham Kasi Viswanadhar Temple 3Gudiyatham Kasi Viswanadhar Temple 4திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை

என்கிற விநாயகர் துதியை கூறிவிட்டு, முருகனின் பெருமையை பேசாமல் நம் உரையை துவக்குவது கிடையாது என்று கூறி முருகனின் பெருமைகளை கூறத் துவங்கினோம்.

Gudiyatham Kasi Viswanadhar Temple 15

அங்கே குழுமியிருந்த பக்தர்களிடம், ‘சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள்’ என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், முருகனின் பெருமையை முதலில் பேசுகிறாரே என்று நினைக்கவேண்டாம். எந்த அப்பாவுக்குங்க பிள்ளையோட பெருமை பேசுறது பிடிக்காம இருக்கும்? அதுவும் முருகன் தகப்பன் சுவாமி என்று பெயர் பெற்றவன்!” என்று கூறி முருகனின் பெருமைகளை சில நிமிடங்கள் கூறியபின்னர் சொற்பொழிவு துவங்கியது.

Gudiyatham Kasi Viswanadhar Temple 5

அது என்ன அனந்த கல்யாண குணங்கள்?

“சிவபெருமான் எதைச் செய்தாலும் அது அவன் கல்யாண குணங்களையே பறைசாற்றும். அருள்புரிவது, சோதிப்பது, அடியார்க்கு இரங்குவது, தண்டிப்பது, குற்றம் கடிவது, மன்னிப்பது இப்படி. அவன் எதைச் செய்தாலும் அது மங்களமே. நல்லருளே. சிவபெருமான் ஒருவனே அனந்த கல்யாண குணங்களை உடையவன். நாயன்மார்களின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் புரியும் அவன் கல்யாண குணங்கள் எவை எவை என்று!” இவ்வாறு கூறி, சிவபெருமானின் பல்வேறு லீலைகளையும் பக்தர்கள் வாழ்வில் அவன் நிகழ்த்திய பல்வேறு அதிசயங்களையும் ஆதாரபூர்வமாக கூறியபடி சொற்பொழிவை நிகழ்த்தினோம்.

Gudiyatham Kasi Viswanadhar Temple 19

பலத்த கைதட்டல்களோடு அனைவரும் ரசித்துக்கேட்டனர். சுமார் ஒன்றே முக்கால் மணிநேரம் போனதே தெரியவில்லை. அவன் பெருமையை பேசப் பேச பாயிண்ட்டுகள் சரளமாக வந்துவிழுந்தன. முருகன் அருள்.

சமீபத்தில் வெளியிட்ட நமது நூல்கள் கொஞ்சம் சொற்பொழிவு வளாகத்திற்கு எடுத்துச் சென்றிருந்தோம். சொற்பொழிவின் இறுதியில் நமது நூல்கள் பற்றி குறிப்பிட்டு “உங்கள் ஆர்வம் ஆன்மீகமோ அல்லது சுயமுன்னேற்றமோ எதுவாக இருந்தாலும் இந்த நூல்கள் உங்களுக்கு துணைசெய்யும், உங்கள் பிள்ளைகளுக்கும் வழிகாட்டும். படிப்பவர்களை தலைநிமிர்ந்து நிற்கச் செய்யும்” என்று கூறி நம் நூல்களை அறிமுகப்படுத்தினோம். எதிர்பாராத வகையில் அங்கு நூல்கள் நன்கு விற்பனையாகின. கொண்டு சென்ற நூல்களில் பாதிக்கும் மேல் விற்றுத் தீர்ந்தன.

Gudiyatham Kasi Viswanadhar Temple 8

துவக்கத்திலும் இறுதியிலும் குடியேற்றம் திருமுறை நன்னெறிச் சங்கத்தின் சார்பில் நமக்கு சபை மரியாதை செய்யப்பட்டது. சொற்பொழிவு நிறைவு பெற்றவுடன் கோவிலின் மூத்த குருக்கள் திரு.சேகர் குருக்கள் என்பவர் நமக்கு இறைவனின் திவ்ய பிரசாதங்களை அளித்து மாலை சூட்டினார்.

அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் அன்னம்பாலிப்பு நடைபெற்றது. அருமையான உணவை அனைவருக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள் குடியேற்றம் திருமுறை நன்னெறிச் சங்கத்தினர்.

Gudiyatham Kasi Viswanadhar Temple 16

இங்கே காசி விஸ்வநாதர் கோவிலில் பணியாற்றும் சேகர் குருக்கள் என்பவர் இறைவனுக்கு மிகவும் சிரத்தையாக ஒருவித அர்ப்பணிப்பு உணர்வுடன் பூஜைகள் செய்பவர் என்றும் அலங்காரம் செய்வதில் மிகவும் கைதேர்ந்தவர் என்றும் இதனால் அவரது பெயரே அலங்கார குருக்கள் என்றே இங்கே வழங்கப்படுவதாகவும் நமக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நம் தளம் சார்பாக திரு.சேகர் குருக்களை நாம்  கௌரவித்தோம்.

குருக்கள் பணி என்பது பணி அல்ல. அது ஒரு தொண்டு. இறைவனை தீண்டும் உரிமை பெற்றவர்கள் அவர்கள் மட்டுமே. மாறிவரும் சமூக காரணிகளால் வேதம் படித்து ஆலயங்களில் பூஜை செய்யும் வேதியர்கள் குறைந்து வரும் இந்த காலகட்டங்களில், நாம் ஆலயங்களுக்கு செல்லும்போது மறக்காமல் அர்ச்சகர்களை கௌரவிப்பது வழக்கம் என்பது நீங்கள் அறிந்ததே.

(கோ-சம்ரட்சணத்தின் மகிமையையும், வேத சம்ரட்சணத்தின் அவசியத்தையும் நாம் சொற்பொழிவில் எடுத்துக்கூற தவறவில்லை.)

எனவே இங்கே திரு.சேகர் குருக்கள் அவர்களையும் குடியேற்றம் திருமுறை நன்னெறிச் சங்கத்தினர் முன்னிலையில் கௌரவித்தோம்.

தொடர்ந்து நமது தளம் சார்பாக தினசரி பிரார்த்தனை படத்தையும் காசி விஸ்வநாதருக்கு பரிசளித்தோம். குடியேற்றத்தில் வசிக்கும் நமது வாசகரும் நண்பருமான திரு. கோபி என்பவர் தனது சார்பாக தனது நண்பரை சொற்பொழிவுக்கு அனுப்பிவைத்ததோடு இறுதியில் நூல்களையும் வாங்கிக்கொண்டார். அவருக்கும் நமது நன்றி.

Gudiyatham Kasi Viswanadhar Temple 17

புறப்படும்போது, ஒரு பெரியவர் நம்மிடம் வந்து நமது நூல்களில் நமது ஆட்டோகிராஃப் கேட்டார். நாம் சற்று சங்கோஜத்துடன் “ஐயா… நான் அந்தளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை!” என்றோம்.

இருப்பினும் அன்புடன் கேட்கவே அவருக்கு நம் ஆட்டோகிராப்ஃபை போட்டுக் கொடுத்தோம்.

Gudiyatham Kasi Viswanadhar Temple 11

தொடர்ந்து 96 மாதங்களாக ஒவ்வொரு பௌர்ணமியும் திருமுறை சொற்பொழிவை குடியேற்றத்தில் நடத்தி வரும் குடியேற்றம் திருமுறை நன்னெறிச் சங்கத்திற்கு நமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம். அதே போல, இது போன்ற சொற்பொழிவுகள் பொது மக்கள் ஆதரவின்றி நடைபெறாது. எனவே குடியேற்றம் வாழ் மக்களுக்கும் நம் நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயுர் தீர்கவே!

* நமக்கு இந்த பதிவை இப்படி நமது புகைப்படங்களுடன் அளிக்க சிறிய தயக்கம் இருந்தது. இருப்பினும் பல வாசகர்கள் குடியேற்றம் சொற்பொழிவு குறித்து அவசியம் பதிவளிக்க வேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டனர். அவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டு இப்பதிவு அளிக்கப்படுகிறது. பிழை பொறுக்க வேண்டுகிறோம்.

* * குடியேற்ற சொற்பொழிவின் போது நாம் கூறிய ஒரு கதையை இங்கே பதிவாக அளித்த பிறகு இப்பதிவு நிறைவு பெறும்.

Join our Voluntary Subscrition Scheme

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support Rightmantra by becoming Voluntary Subscriber.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

==============================================================

Also check :

சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா?

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!

அது என்ன ‘அனுபவ வாஸ்து’ ?

நான் புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டேன்!

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா…

ஒரு கனவின் பயணம்!

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

==============================================================

[END]

16 thoughts on “நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா….

  1. வணக்கம் சுந்தர் சார்

    மிகவும் அழகான பதிவு

    தங்கள் மென் மேலும் வளர இனிய நல் வாழ்த்துக்கள்

    நன்றி

  2. சுந்தர்ஜி
    மனம் மிகவும் சந்தோசமாக இருக்கிறது. தங்களின் இந்த சொற்பொழிவு நம் தலைவர் சிவபெருமான் அருகில் நடத்த மிகவும் பாக்கியம் செய்தவர் தாங்கள். சொற்பொழிவு முழுவதும் படிக்க,
    ஏற்ப்பாடு செய்து தாருங்கள் ப்ளீஸ் .
    நன்றி

  3. தங்களின் சிறப்பு சொற்பொழிவு இனிதே நடைபெற்றதை அறிய மிக்க மகிழ்ச்சி. மேலும் தாங்கள் பல மேடைகளில் ஈசனின் அனந்த கல்யாண குணங்களைப் பற்றிப் பேச அந்த பரமேஸ்வரன் அருள் புரிய வேண்டும்.

    வாழ்த்துக்கள் … அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  4. சார்,
    தகப்பன் சாமி, தகப்பன் சிவபெருமானின் திருவிளையாடல் மற்றும்
    அலங்கார குருக்கள் உள்ளிட்ட மற்ற குடியாத்த மக்களின் ஆர்வம் எல்லாம் சேர்ந்து தங்களின் வாழ்வின் குறிக்கோளை சென்று அடைய வழி செய்த ஆண்டவனின் அருள் தங்களுக்கு எப்போதும் உண்டு .

    வாழ்க வளர்க தங்கள் சொற்பொழிவு .

    வரிவாக கேற்பதற்கு கேசெட் உண்டா சார்,

    விபரம் சொல்லவும்

    தங்கள்
    சோ. ரவிச்சந்திரன்
    KAIGA , கார்வார்,
    கர்நாடகா

    1. திருப்பணிகள் நடைபெற்று வரும் எளிமையான கோவில் அது. 96 மாதங்களாக தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியும் இந்த சொற்பொழிவை விடாமல் நடத்தி வருகிறார்கள். கோவில் தரப்பில் வீடியோ ஏற்பாடு செய்யவில்லை. நானும் முதல் சொற்பொழிவு என்பதால் அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. நன்றாக பேசினால் போதும் என்கிற மனநிலை தான் இருந்தது. திருவருள் கூடினால், அடுத்து நிச்சயம் ஆவன செய்கிறேன். நன்றி.

  5. சுந்தர்

    உண்மையில் எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. சிவபெருமானின் பாத கமலத்தில் உங்கள் முதல் சொற்பொழிவு, இனி உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து குவிய போகிறது.
    உங்களது வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது.
    வாழ்க வளர்க !!.

    நன்றி

  6. தங்களுக்கு கிடைத்த இந்த மஹா பாக்கியம் right mantra வாசகர்கள் அனைவருக்கும் பெருமை. என்ன தங்களின் கன்னி pechai கேட்கக் முடியவில்லை ஐந்தரை ஒரு வருடம் தான் விரைவில் தங்கள் அடுத்த சொற்பொழிவு நேரில் கேட்க ஆவலாய இருக்கிறது .Jai sathguru Sainath Maharjki Jai

  7. சுந்தர்ஜி
    ‘மாபெரும் சபையில் நீ நடந்தால் மாலைகள் விழ வேண்டும் ! ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றி புகழ வேண்டும்” – இந்த பாடல்தான் பதிவினை பார்த்ததும் எமக்கு நினைவுக்கு வந்தது. மேலும் மேலும் வளர ஈசன் அருளட்டும் ! இனி தங்களை வாழ்த்துவதை விட தங்களிடம் நாங்கள் வாழ்த்து பெற வேண்டும் என நினைக்கிறோம்! நம் தள வாசகர்கள் ஆக இருக்க மீண்டும் மீண்டும் பெருமைப்படுகிறோம் !! நன்றி

  8. அன்புள்ள சுந்தர்

    புத்தக விலை குறிப்பிட்டால் பணம் அனுப்ப வசதியாக இருக்கும்.

  9. சுந்தர் அண்ணா,
    முதல் சொற்பொழிவு… அனைத்து கலைகளின் நாயகரின் முன் அமர்ந்து கொடுத்துள்ளீர்கள். தன்னை நம்பியவர்களை தந்தையும் தாயும் தன் அருகே மேடை அமைத்து கொடுத்து மாலையுடன் பிறர் கவுரவிப்பதையும், தங்கள் பிள்ளையின் கண்ணி பேச்சை காதார கேட்டும் மகிழ்ந்து உள்ளனர் . ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும். மேலும் மேலும் வளர இறைவன் அருள் புரிய வேண்டும்.

  10. தங்களின் முதல் சொற்பொழிவு வெற்றிகரமாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள் . இறைவன் அருளால் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்.

  11. குரு அருளும் திரு அருளும் எப்போதும் தங்களுக்கு துணை இருக்கும் சார்.
    All the best for all things

  12. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.

    என்ற குறளுக்கு இணங்க, குடியாத்தத்தில் 96 வது பௌர்ணமி சொற்பொழிவை தங்களின் குரல் மூலம் நடத்திட அமைந்த விதியை, தங்களின் மதி மூலம் நடதேற்றியது நம் இறையருள்.தாங்கள் பல மேடை கண்டிட எனது வாழ்த்துக்கள் அண்ணா.

    நன்றி அண்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *