Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, March 2, 2024
Please specify the group
Home > Featured > சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா?

சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா?

print
சென்னை புறநகர்ப் பகுதி ஒன்றில் ஹவுஸிங் போர்டு குவார்ட்டர்ஸ் ஒன்று உள்ளது. அந்த குவார்ட்டர்ஸில் குடியிருக்கும் ஒருவர் பூண்டி ஊன்றீஸ்வரர் கோவிலுக்கு செல்லும்போது நமது ‘தினசரி பிரார்த்தனை’ படத்தை அங்கு பார்த்திருக்கிறார்.

அந்த பிரார்த்தனை வரிகள் பிடித்துப் போக, அதை மொபைலில் படமெடுத்துக்கொண்டு வந்தவர், அதிலிருந்த அலைபேசி எண் மூலம் நம்மை தொடர்புகொண்டு அந்த படம் தமக்கும் வேண்டும் என்றார். நாம் சாஃப்ட் காப்பியை மின்னஞ்சல் அனுப்பி அவரை பிரிண்ட் எடுத்துக்கொள்ளச் சொன்னோம். அதன் மூலம் அவரது குடியிருப்பில் நமது தளம் ஓரளவு பிரபலமானது.

Poondi Oondreeswarar

இதற்கிடையே அந்த காலனியில் உள்ள ஒரு சீனியர் தம்பதியினர் காசி-ராமேஸ்வரம் யாத்திரை புறப்பட்டனர். இதையடுத்து அவர்கள் வீட்டில் அன்னதானத்துடன் கூடிய விசேஷ பூஜை நடைபெற்றது.

நம்மை தொடர்பு கொண்ட நம் நண்பர் அந்த பூஜையில் நாம் நம் தளம் சார்பாக பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நாமும் அந்த முதிய தம்பதிகளிடம் ஆசிபெறவேண்டும் என்கிற நோக்கத்திலும் அந்த பூஜையில் கலந்துகொள்ளவேண்டும் என்கிற ஆவலிலும் அவர் அழைப்பை ஏற்றுச் சென்றோம்.

நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் அனைவரும்.

பூஜையின் நிறைவில் நம்மை அழைத்த நண்பர், திருத்தல யாத்திரை செல்வதன் அவசியத்தை பற்றி ஒரு சிறிய உரை நிகழ்த்த முடியுமா என்று கேட்டார். நாமும் அவர் வேண்டுகோளை ஏற்று சிறிய உரை நிகழ்த்தினோம். அனைவரும் பாராட்டும்படி அமைந்தது அந்த உரை. அவர்கள் மத்தியில் நமக்கு இப்படி ஒரு திடீர் முக்கியத்துவம் கிடைத்தது அங்கேயிருந்த ஒரு ஜோடி கண்களுக்கு உறுத்தியதை நாம் கண்டுபிடித்துவிட்டோம். (அட அவர் தாங்க அந்த காலனியோட குட்டி சுகி சிவம்!)

இது நடந்து சில வாரங்களுக்கு பிறகு ஆடி மாதம் வந்தது. ஒவ்வொரு ஆடி மாதமும் வெள்ளிக்கிழமை காலனியின் காம்பவுண்டை ஒட்டியுள்ள சிறிய புற்றுக் கோவில் களை கட்டும். ஹவுஸிங் போர்டில் உள்ளவர்கள் சிறிய அளவில் விழா எடுத்து அன்னதானமும் செய்வார்கள்.

ஆடி துவங்கிய போது ஒருநாள் நம்மை தொடர்புகொண்டவர்கள், ஒரு வெள்ளிக்கிழமை மாலை பூஜை முடிந்தவுடன் நாம் வந்து சொற்பொழிவு நிகழ்த்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள். நாமும் ஒப்புக்கொண்டு மகிழ்ச்சியுடன் அதற்காக நம்மை தயார்படுத்திக்கொண்டு இருந்தோம்.

சொற்பொழிவு நிகழ்த்திவிட்டு பின்னர் அது குறித்து நம் வாசகர்களுக்கு தெரியப்படுத்தி இன்ப அதிர்ச்சி அளிக்கலாம் என்பது நமது திட்டம்.

Amman Arul

குறிப்பிட்ட வெள்ளி அன்று நாம் பிரார்த்தனை கிளப் பதிவை அளித்துவிட்டு  ஆசை ஆசையாக அங்கே புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருந்த தருணம், திடீரென்று அலைபேசி. “சுந்தர் சார்… மன்னிக்கணும். இன்னைக்கு இங்கே உரையை ஏற்பாடு செய்ய முடியாத மாதிரி ஒரு சூழ்நிலை. இன்னொரு முறை நீங்க பேசலாம். தப்பா எடுத்துக்காதீங்க!” என்றார்கள்.

"

ஏமாற்றங்கள் நம் வாழ்க்கையின் ஒரு பார்ட் & பார்ஸல் என்பது நமக்கு தெரியும். எனவே நமக்கு பெரிதாக அதிர்ச்சியோ ஏமாற்றமோ இல்லை. மேலும் இது பொருளுக்கோ, புகழுக்கோ பணத்துக்கோ செய்வதன்று. நட்புக்கு தலைவணங்கி, பக்திக்கு செய்வது.

“சரி… பூஜை இருக்கா… இல்லே…?”

“துர்கா பூஜை கன்ஃபார்மா உண்டு. இப்போ ஹோமம் கூட நடந்துகிட்டுருக்கு. சாயந்திரம் பூஜைக்கு நீங்க தாராளமா வரலாம்… இருந்து சாப்பிட்டுட்டு போகலாம்” என்றனர்.

நாம் பேசவில்லை என்றால் என்ன… போய் புகைப்படமாவது அவர்களுக்கு எடுத்துத் தரலாம் என்று அந்த மாலை சென்றோம்.

அங்கே சென்றால் நாம் பார்த்த காட்சி அதிர்ச்சியடைய வைத்தது. அண்ணன் ‘குட்டி சுகி சிவம்’ கூட்டத்தில் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

ஓ… இது தான் சங்கதியா…!!

என்ன நடந்திருக்கும் என்று நமக்கு விளங்கிவிட்டது.

அவருக்கு வாய்ப்பு கொடுத்ததை பற்றி நமக்கு கவலையில்லை. சந்தோஷமே. ஆனால் நம் வாய்ப்பை முடக்கியது எந்த விதத்தில் நியாயம்?

அடியார்களுக்கு அமுது படைக்க விரதம் இருந்து விருந்து சமைத்த இல்லாளிடம், அவள் அதை பரிமாறும்போது, “உன் விருந்து வேண்டாம்… நீ சமைத்ததை எடுத்துக்கொண்டு போ… அவள் பரிமாறட்டும்” என்று எதிர் வீட்டுக்காரியை அழைத்து அவள் சமைத்ததை உணவருந்தினால் இவள் மனம் என்ன பாடு படும்? அதே மனநிலை தான் நமக்கும்.

நாம் மனதை தேற்றிக்கொண்டோம். நாம் புகைப்படம் எடுக்கும் நமது பணியை அமைதியாக செய்தோம். (மேற்கூறிய கசப்பான அனுபவத்தால் உங்களிடம் புகைப்படங்களை பகிர மனம் வரவில்லை. அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு அத்தோடு விட்டுவிட்டோம்!)

சம்பந்தப்பட்டவர்கள் இது பற்றி எந்தளவு வருந்தினார்கள் என்று தெரியாது. ஒப்புக்கு வருத்தம் தெரிவித்தது போல இருந்ததே தவிர அதற்கு பிறகு நம்மிடம் அவர்கள் பேசவில்லை. நாமும் பேசவில்லை.

மனம் ஈசனிடம் குமுறியது… “ஐயனே.. அன்னையின் புகழையும் உன் பெருமையையும் பேச நான் எத்தனை ஆவலாக வந்தேன்… இப்படியொரு ஏமாற்றம் கிடைத்துவிட்டதே…” என்று வருந்தினோம்.

நமக்குத் தான் கவனம் செலுத்தவும் கவலைப்படவும் ஆயிரம் விஷயங்கள் க்யூ கட்டி இருக்கிறதே. இதைவிட பெரிய மேடையை ஈசன் தருவான் என்று மனதை தேற்றிக்கொண்டோம். அதற்கு பிறகு நாம் அதை மறந்தேவிட்டோம்.

ஆனால் மறதி மனிதனுக்கு தானே… இறைவனுக்கு அல்லவே… இதோ ஈசனருளால் மிகப் பெரியதொரு வாய்ப்பு நம்மை தேடி வந்திருக்கிறது.

Gudiyattam Final Design

சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்பது சிலரது கணிப்பு. எனவே தான் இந்த சொற்பொழிவுக்கு தலைப்பையே ‘கல்யாணம்’ என்று வரும்படி தேர்ந்தெடுத்தோம்.

நண்பர் திருவாசகம் பிச்சையா அவர்கள் தான் நமது பெயரை பரிந்துரைத்து இந்த வாய்ப்பை பெற்று தந்திருக்கிறார்.

வேலூரிலிருந்து சுமார் 31 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள குடியாத்தம் நகரம் தான் ‘குடியேற்றம் ‘என்று அழைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து நேரடி பஸ் வசதியும் ரயில் வசதியும் இங்கு உள்ளது.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் சிவத்திரு.தாமோதரன் ஐயா அவர்களின் திருவாசக முற்றோதல் அங்கு நடைபெற்றபோது நாம் நம் நண்பர்களுடன் அங்கு சென்றிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

நமது பயணத்தில் இது போன்று நாம் சந்திக்கும் அவமதிப்புக்கள் அநேகம்.

நாம் யார் என்று தெரியாமல் நிகழ்வது ஒரு வகை. நம்மை யார் என்று தெரிந்தே நிகழ்வது இரண்டாம் வகை.

இரண்டாம் வகை அவமதிப்புக்களே நாம் அதிகம் சந்தித்து வருகிறோம். காரணத்தை சொல்ல வேண்டுமா என்ன?

நம் மீது ஏற்படும் பொறாமை காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாக நம்மை அவமதிப்பவர்களோ அல்லது புறக்கணிப்பவர்களோ அல்லது புறமுதுகு பேசுகிறவர்களோ அல்லது பேசுபவர்களிடம் காதை கொடுப்பவர்களோ ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். இதனால் நமக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. எப்படிப் பார்த்தாலும் நமக்கு இது லாபம் தான்.

ஒரு நல்ல பதிவுக்கு கருவாக இது போன்ற சம்பவங்கள் அமைந்துவிடும். தவிர நமது வளர்ச்சிக்கு ஒரு உரமாகவும் மாறிவிடும். ஆனால், சம்பந்தப்பட்டவர்களுக்கு??? ஒரு நல்ல நட்பை இழக்கிறார்கள் என்பதை மட்டும் அவர்கள் மனதில் கொள்ளவேண்டும்.

நமக்கு உத்வேகம் அளித்த ஏமாற்றங்களில் மேலே சொன்னது ஒரு வகை! ஆனால் வேறொரு கேட்டகிரி இருக்கிறது. நம்மை மிகவும் பாதித்து மிக அதிகபட்ச ஃபயரை நமக்குள் பற்ற வைத்தது அது தான். மேலே கூறிய ஏமாற்றத்தை எல்லாம் கூட அனாயசமாக தாண்டி ஒருவர் போய்விடலாம். ஆனால் இதை மட்டும் யாராலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. சாதனையாளர்கள் 90% பேர்களுக்கு பின்னே வெளியே தெரியாத இந்த அத்தியாயம் நிச்சயம் இருக்கும்.

நமக்கும் உண்டு! (நாம் இன்னும் சாதிக்கவில்லை என்பது வேறு விஷயம்!)

அது என்ன ????

இறைவன் அருளால் எதிர்காலத்தில் அவைகளை பகிர்ந்துகொள்கிறோம். இப்போது வேண்டாமே!

==============================================================

Also check :

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!

அது என்ன ‘அனுபவ வாஸ்து’ ?

நான் புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டேன்!

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா…

ஒரு கனவின் பயணம்!

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

==============================================================

14 thoughts on “சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா?

 1. சார், பந்தை எவ்வளுதான் தண்ணிக்குள்ளே அழுத்தினாலும் அது மீண்டும் மீண்டும் மேல வரத்தான் வரும்.

  நாளை இந்த உலகம் உங்களை பேசும் போது, பாராட்டும்போது தெரியும் சார்.

  இன்னும் சொல்லபோனால் அந்த நண்பருக்கு நன்றி சொல்லுங்கோ சார். அது மறுக்கபட்டதன் கருணை தான் இந்த அபாரமான சான்ஸ்

  சிவனின் அருள் உங்களிடம் நிறைய இருக்கும் போது மேலும் மேலும் உயர்வீர்கள் சார்.

  தங்கள் வளர்ச்சியை விரும்பும்

  தங்கள்

  S. RAVICHANDRAN,
  KAIGA KARWAR KARNATAKA
  9480553409

 2. வாழ்த்துக்கள் சுந்தர் !!..

  இன்னும் நிறைய மேடைகள் உங்களுக்காக காத்திருகின்றன.. ஜமாயுங்கள் !!

  :

 3. டியர் சுந்தர்ஜி,
  வாழ்த்துக்கள் முதலில்!

  நீங்கள் பல் வேறு சொற்பொழிவுகள் ஆற்றி பல பேரின் அறியாமையை நீக்க எல்லாம் வல்ல இறையை இறைஞ்சுகிறேன்.

  தங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் வர இயலவில்லை! மன்னிக்கவும்.

  நேரில் சந்திக்க விழையும்,
  நாகராஜன் ஏகாம்பரம்

 4. தங்களின் சொற்பொழிவு இனிதே நடைபெற வாழ்த்துக்கள். தாங்கள் நிகழ்த்தப் போகும் அருளுரை எல்லோருக்கும் ஒரு மறக்க முடியாத உரையாக அமையட்டும்

  தாங்கள் அடைந்த ஏமாற்றம் ஒரு நல்ல சந்தர்பத்தை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. தாங்கள் சாதிக்க பிறந்தவர்கள்/ தங்கள் வாழ்கை பயணத்தில் தாங்கள் சந்தித்த அவமானங்களும், வேதனைகளும் தங்களை முன்னேற்ற பாதைக்கு இட்டு செல்கிறது.

  வாழ்க …. வளமுடன்

  நன்றி
  உமா வெங்கட்

 5. நம்மால் மாற்ற முடிந்ததை மாற்றுவோம்.
  நம்மை மீறி ஒன்று நடக்குது என்றால், அது நிச்சயம் அவன் செயல் தான்.

  அவர் நினைப்பதை யவர் அறிவார் !!

  பல மேடைகள் காத்திருகின்றன உங்களுக்கு !!

  வாழ்த்துக்கள்

 6. அருமை சுந்தர் ஜி ,,,,
  இன்னும் நிறைய மேடை காத்துகொண்டு இருக்கிறது

 7. வாழ்த்துக்கள். அங்கே பேசினால் மட்டும் போதாது. அதை இங்கே வெளியிடவேண்டும். இது என் அன்பு வேண்டுகோள்.

 8. இன்னும் போகும் தூரம் அதிகமாக உள்ளது.
  தங்கம் உரச உரச தான் பளபளக்கும்.
  டோன்ட் வொர்ரி. வெற்றி நிச்சியம் என்ற நிலை மாறி வெற்றியை அடைந்தவர் நீங்கள்.
  நீங்கள் ஏற போகும் மேடையும் பல உண்டு. சாதிக்கும் வல்லமையும் உங்களிடம் உண்டு. best of luck

 9. Dear Sundarji,

  Don’t think about those things. He couldn’t be ‘Little Suki Sivam’. If he is so, he wouldn’t snatch the other person’s rights/place.

  So, don’t worry and I’m happy to see the invitation and you’re the main person who’s going to give a speech in it.

  Like you had said in the last article, humiliations and insults are the fire/fuel to many great people.

  And you’re on the way to great success of achieving your dreams. Already you had achieved one step in that.

  My best wishes to you for the great speech. 🙂

 10. வாழ்த்துக்கள் சுந்தர்ஜி . மேடை பேச்சில் மேன் மேலும் சிகரங்களை தொட்டிட வாழ்த்துக்கள் .

 11. Dear Sir,

  Hearty congratulations for achieving this great task of publishing two books. Kindly provide the details regarding how to purchase the books. Kindly provide a link to order the books online. it will be of great use. That link can be shared by readers on their blog, facebook, twitter etc.

  Regards
  Sivaraman

 12. இறைவன், சுந்தர் என்னும் வைரத்தை பட்டை தீட்டி கொண்டே இருக்கிறார். இதை எந்த கிரீடத்தில் இடம் பெற செய்வதற்கு என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கண்டிப்பாக நாங்கள் (தள வாசகர்கள் அனைவரும்) அருகில் இருந்து அதை காணும் வாய்ப்பை இறைவன் தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *