புகைப்பட சி.டி.க்கள் இன்று மாலை கைகளுக்கு வந்தவுடன் முழுமையான படங்களோடு பதிவிடுகிறோம். சற்று பொறுத்திருக்கவும்.
நூல்கள் எங்கு கிடைக்கும்? என்ன விலை? நம்மிடம் பெறுவது என்றால் எப்படி பெறுவது? உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் நாளை அறிவிக்கிறோம்.
இதற்கிடையே, வடலூர் சிவப்பிரகாச சுவாமிகள் நடத்தி வரும் ‘வாழையடி வாழை’ இதழில் வெளியான ஒரு விஷயத்தை இங்கே பகிர ஆசைப்படுகிறோம். சுவாமிகளிடம் பேசி அவரது அனுமதி பெற்றே இங்கு பகிர்கிறோம். படியுங்கள் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அட்டகாசமான கட்டுரை இது. DON’T MISS!
===============================================================
அனுபவ வாஸ்து!
கேள்வி : வாஸ்து பார்த்தல் என்றால் என்ன?
(பி. கந்தன், சின்னசேலம்)
பதில் : –
இந்தக் கேள்வியை ஜோதிடர்கள் அல்லது வாஸ்து பார்க்கும் நிபுணர்கள் இவர்களிடம் கேட்டிருந்தால் சரியான விளக்கமான பதில் தருவார்கள். இதற்குச் சம்பந்தமே இல்லாத எங்களிடம் கேட்டதால் எங்களுக்குத் தெரிந்ததை எழுதுகின்றோம்.
வாஸ்து
‘ஐவகை எனும் பூதம் ஆதியை வகுத்து என்பார் தாயுமானவர். வான், வளி, கனல், புனல், பார் இவ்வைந்தையும் சேர்த்து வாஸ்து புருஷன் என்றும், விராட்புருடன் என்றும் சொல்கின்றார்கள். விராட்புருடனுடைய இருதயத்தலம் என்று சிதம்பரத்தைச் சொல்வார்கள். அதனால் இந்த உலகத்தை இந்த மண் உலகத்தை ஓர் அரசனாக உருவெடுத்து விராட்புருடன் வாஸ்து புருஷன் என்று சொல்கின்றார்கள். இவர் ஓராண்டில் 8 நாட்கள் மட்டும்தான் தூக்கத்தில் இருந்து எழுவார். எழுந்து 24 மணி நேரமும் விழித்து இருக்கமாட்டார். 3 3/4 நாழிகை அல்லது ஒரு முகூர்த்த நேரம்1 1/2மணி நேரம் மட்டும் விழித்திருப்பார்.
இந்த நேரம் முடிந்த உடன் மீண்டும் தூங்கப் போய்விடுவார். இவர் விழித்திருக்கும் நேரத்தில் புதிய சிவாலயங்கள், பெருமாள் கோயில்கள், பஜனை மடங்கள், திருமண மண்டபங்கள், தொழிற்கூடங்கள், மக்கள் வாழும் வீடுகள் இவைகள் கட்ட ஆரம்பிக்கலாம். திருமடங்களும் கட்டலாம். கட்டிடங்கள் சம்பந்தமான அனைத்தையும் செய்ய கால் கோள் நடத்தலாம். வாஸ்து இது மட்டும் அல்ல. இல்லத்தில் பள்ளியறை, படுக்கையறை, யாகசாலை, யோகசாலை, கிணறு, குளியல் அறை, கழிப்பறை, கஜான அறை இவை எல்லாம் எந்தெந்த திசையில் எந்தெந்த அளவில் அமைய வேண்டும் என்பதையும் எந்த அறையின் தளம் கீழே இருக்க வேண்டும் எந்த அறையின் தளம் உயரமாக இருக்க வேண்டும் என்பதையும் இதற்கு மாறுபட்டு இருந்தால் என்ன தீமைகள் உண்டாகும் என்பதையும் வாஸ்து நூல்கள் கூறுகின்றன.
ஓர் உதாரணம்
உங்கள் வீடு கிழக்குப் பார்த்த வீடு என்றால் தெற்கும் மேற்கும் சந்திக்கின்ற இடம் தென்மேற்கு. இந்த தென்மேற்கு மூலையில் உள்ள அறையின் தளம் பள்ளமாக இருக்கக்கூடாது. இருந்தால் அந்த வீட்டின் தலைவனுக்கு இடுப்பு ஒடியும். இது அனுபவம். மேட்டுக்குப்பத்தில் உள்ள எங்கள் மடத்தில் தென்மேற்கு மூலை ஒரு அடி ஆழம் பள்ளமாக இருக்கிறது. அதற்கும் கீழே மலக்கிடங்கு இருப்பதனால் அதை மேடாக்க முடியவில்லை. இது பள்ளமாக இருக்கக்கூடாது என்பது எங்களுக்குத் தெரியும். தெரிந்து என்ன செய்வது ? விதிப்படி இடுப்பு ஒடிந்து கீழே விழுந்த பிறகு, அப்படியே இருக்கட்டும் என விட்டு வைத்திருக்கின்றோம்.
பாத்ரூம், கழிப்பறை எல்லாம் வடமேற்கு மூலையில் அமையவேண்டும். இவைகள் எல்லாம் சரியான திசையில் அமைந்திருந்தால் உண்டாகும் நன்மைகளும் திசைமாறி அமைந்திருந்தால் உண்டாகும் தீமைகளும் உண்டு. ஆனால் வாஸ்துக்கும் பஞ்சாங்க கணக்குக்கும் ஒத்து வராது. வாஸ்து பார்த்தால் பஞ்சாங்கமே பார்க்க வேண்டியதில்லை. பஞ்சாங்கம் பார்த்தால் வாஸ்து பார்க்க வேண்டியதில்லை. இரண்டும் ஒத்து வராது. ஏதோ சில நாள் நல்ல நாட்களில் வாஸ்தும் அமையும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் என்றால் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் இவ்வைந்து அங்கங்களும் சேர்ந்ததுதான். வாஸ்து புருஷன் நித்திரை விட்டு எழும் மாதமும் தேதியும் நேரமும் மாறாது. கிழமை மட்டுமே மாறும். இதுபோல இராகு காலம், எமகண்டம் இவைகளும் மாறாது. இவைகளுக்குள்ள நேரம் 1 1/2மணி நேரம். அதாவது ஒரு முகூர்த்த காலம். இது எப்படி 1 1/2மணி நேரம் அமைத்தார்கள் என்றால் ஒரு நாளைக்கு 24 மணி நேரம். இதில் 16ல் ஒரு கூறு 1 1/2மணி நேரம். புதுமணத்தம்பதிகள் 16 பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக 16ல் ஒரு பங்கு அமைத்துள்ளார்கள்.
மிக நல்ல நேரம்
வாஸ்து நித்திரை விட்டு எழுந்து 3 3/4 நாழிகை விழித்திருப்பார். இதை ஐந்து கூறு ஆக்க வேண்டும். ஒரு கூறுக்கு முக்கால் நாழிகை அல்லது 18 நிமிடம். இதில் நீராடல், குளித்தல், சிவபூஜை, போஜனம், தாம்பூலம், விவகாரம். இதில் போஜனம், தாம்பூலம் இதுதான் நல்ல நேரம். மற்ற குளித்தல் சிவபூஜை விவகாரம் இந்த நேரங்களில் வாஸ்து செய்யக்கூடாது. எது நல்ல நேரம் எனக் கணித்து பஞ்சாங்கத்தில் குறித்து இருப்பார்கள் அதைப் பார்த்து செய்து கொள்ளலாம். இது பஞ்சாங்க வாஸ்து.
அனுபவ வாஸ்து
இதுவல்லாமல் காலம் காலமாக மக்கள் அனுபவத்தில் கண்ட வாஸ்து ஒன்று இருக்கின்றது. இந்த அனுபவ வாஸ்து எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமையாது. ஆனால் நூறில் 99 பேருக்கு சரியாக அமையும். ஏதோ ஒரு நபருக்கு சிறிது மாறுபடும் பஞ்சாங்க வாஸ்து பார்க்கத் தவறினாலும், அனுபவ வாஸ்து அவசியம் பார்க்க வேண்டும்.
நீராடல்
நீங்கள் ஒரு சுப காரியத்தை முன்னிட்டு முக்கியமான ஒருவரைப் பார்க்கப் போகிறீர்கள். போகும்போது அவர் குளித்துக் கொண்டிருக்கின்றார் அல்லது குளிக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றார் அல்லது உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு பலகையில் அமர்ந்திருக்கின்றார்.
ஆண்கள் புதன்கிழமையும், சனிக்கிழமையும் அவசியம் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். காரணம் புதன் வித்யாகாரன் இந்நாளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் வித்தை கல்வி, ஞானம், அறிவு ஓங்கி வளரும். சனி ஆயுள் காரகன் இதில் குளித்தால் ஆயுள் தீர்க்காயுளாகும். அற்ப ஆயுளில் மரணம் வராது அதனால்தான் ஆண்கள் மேற்குறித்த இரண்டு நாட்களும் அவசியம் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
பெண்கள் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். காரணம் செவ்வாய்க் கிழமையை மங்கள வாரம் என்று சொல்வார்கள். இல்லத்திற்கு மங்களம் என்ன என்றால் மக்கட்பேறுதான்.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
என்பது திருக்குறள். அதனால் செவ்வாய்புத்திரகாரகன்.
ஒருபெண் நல்ல கணவனை அடைந்தால் மட்டும் போதாது. மகப்பேறு வாய்க்க வேண்டும். பெண் தாய்மை நிலை பெறவேண்டும். கணவனைப் பெறுதல் கண்பெறுவது போன்றது. பெண்களுக்குக் கணவன்தான் கண். கண்ணவன் என்பதுதான் இடைக்குறையாக கணவன் என ஆனது.
ஆட்டுக்குட்டியைப் பெண் குட்டியைப் பொட்டைக்குட்டி என்று சொல்வார்கள். மாடு, எருமை இவைகளின் பெண் இனத்தைப் பொட்டை என்று சொல்வார்கள். மனித இனத்திலும் பெண் குழந்தையைப் பொட்டைக் குழந்தை என்று சொல்வார்கள். ஆனால் ஆண் மகனைக் கண் பார்வை இல்லாதவனைப் பொட்டையன் என்று சொல்வார்கள். ஆண் மகனைக் கண் பார்வை இல்லாதவனை மட்டும் பொட்டை என்று சொல்கின்றார்கள். பெண் குழந்தைகளைப் பார்வை உள்ளவள், பார்வை இல்லாதவள் என எல்லோரையும் பொட்டை என்று சொல்வார்கள். பெண் இனம் திருமணம் ஆன பிறகுதான் அவளுக்குக் கண் வருகின்றது. அதனால் கண்அவன் கணவன் என ஆயிற்று. கை நிறைந்த பொன்னை விட கண் நிறைந்த கணவனைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமே. கற்புடைய பெண்களின் கண்களில் கணவனின் உருவத்தைக் காணலாம்.
அனுமன் சீதாபிராட்டியைத் தேடி இலங்கை போனபோது யார் சீதை என்று இவனுக்கு எப்படித் தெரியும்? யார் கண்களில் இராமன் இருக்கிறான் என்று தேடினான். சீதையின் கண்களில் இராமனைக் கண்டான் அனுமன்.
கண்டனன் கற்பினுக்கு அணியெனும் கனியைக் கண்களால்
தென்திரை அலைகடல் இலங்கைத் தென்நகர்
அண்டர் நாயக! இனித்தவிர்தி அய்யமும்
பண்டுள துயரமும் என்று அனுமன் பன்னுவான்
ஆகக் கற்புடைப் பெண்களின் கண்களில் கணவன் வாழ்வான். மேலும் அனுமன் விளக்குகின்றான்.
கண்ணிலும் உனை நீ! தையல் கருத்தினும் உளநீ வாயின்
எண்ணிலும் உனைநீ கொங்கை இணைக்குவை தன்னிலோவாது
அண்ணல் வெங்காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறாப்
புண்ணிலும் உனை நீ நின்னைப் பிறிந்தமை பொருந்திற்றாமோ
என அனுமன் கூற்றில் இருந்து பெண்களின் கற்பு நிலையை உணரலாம். அதனால் செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நன்மக்கட் பேற்றிற்காகவும் வெள்ளிக்கிழமை குளிப்பது செல்வப்பெருக்கத்திற்காகவும். இருவரும் ஒரே நாளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத காரணங்களால் குளிக்க நேரிட்டாலும் நிச்சயம் இணை விழைச்சு கூடாது. தெரியாமலோ ஆசை வசப்பட்டோ கூடினால் மரணம் வரும். ஆக நீங்கள் போகும்போது யார் குளித்துக் கொண்டிருந்தாலும் நீங்கள் செய்ய இருக்கும் செயலுக்கு வாஸ்து சரியில்லை. அதனால் தான் வாஸ்து புருஷன் குளிக்கும் நேரத்தைச் சுபகாரியங்களுக்கு வேண்டாம் என ஒதுக்கி உள்ளார்கள்.
சிவபூஜை
சீதப்புனலாடிய பின் வாஸ்து புருடன் தன் ஆத்ம நாயகனை பூஜிக்கின்றார். பூஜையில் இரண்டு விதம் உண்டு. தன்னுடைய வழிபடு கடவுளை ஆத்மநாதனை ஆன்மார்த்த வழிபாடு செய்தல். இதுதான் தன் அளவுக்கு செய்து கொள்ளும் வழிபாடு. அடுத்து பிறருக்காக செய்யும் பரார்த்த வழிபாடு. ஆன்மார்த்த வழிபாடு. அவரவர்கள் வீட்டில் பூஜை அறையில் செய்வது பரார்த்த வழிபாடு. ஆலயங்களில் செய்வது. இது பிறருக்காக செய்வது வாஸ்து புருடன் செய்வது ஆன்மார்த்த வழிபாடு. அதனால்தான் பூஜை செய்யும் நேரத்தை வாஸ்துக்கு ஆகாது என ஒதுக்கி உள்ளார்கள்.
இந்த நேரத்தை ஏன் ஆகாது என ஒதுக்கினார்கள் என்றால் ஆன்மார்த்த வழிபாடு செய்வது நல்லது. ஒருவர் பூஜை செய்து கொண்டிருக்கும்போது மற்றவர்கள் அங்கு சென்றால் அது அவர்களுக்கு இடையூறாக இருக்கும். அவர்கள் தன் கடவுளிடம் மனம்விட்டுப் பேசுவதற்கும், அழுவதற்கும், தொழுவதற்கும் தயங்குவார்கள். அதனால் நீங்கள் எந்தக் காரியத்தை முன்னிட்டு ஒருவரைப் பார்க்கச் சென்றாலும் அவர் பூஜை செய்கின்றார் என்றால் நீங்கள் நிற்கவே கூடாது. நீங்கள் அங்கு இருக்கின்றீர்கள் என்கிற செய்தியே அவருக்கு இடையூறுதான். இந்த நடைமுறை வாஸ்தை அவசியம் கடைப்பிடிக்கலாம்.
ஆனால் ஆன்மார்த்த பூஜை ஒருவர் செய்யும் போது மற்றவர்கள் கலந்து கொள்ளவே கூடாது. பரார்த்த பூஜை செய்யும்போது மற்றவர்கள் அதில் அவசியம் கலந்து கொள்ளலாம். உற்றார் உறவினர் நண்பர்கள் அன்பர்கள் எல்லோரும் சேர்ந்து மணமகளுக்கும் மணமகனுக்கும் கெட்டிமேளம் முழங்கி ஆன்றோர்கள் ஆசி கூற திருமணம் செய்து வைப்பதைப் போன்றது பரார்த்த பூஜை.
அதன் பின் இருமனமும் ஒருமனமாகி திருமணமான தம்பதிகள் சாந்தி முகூர்த்தம் அல்லது பள்ளியறை அல்லது முதல் இரவு இதில் அவர்களைத் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளும் உரிமையில்லை. இந்த நிகழ்ச்சிக்கு ஏகாந்தம் என்றே பெயர். முதலிரவு போன்றது ஆன்மார்த்த பூஜை. திருமணவிழா போன்றது பரார்த்த பூஜை. அதனால் சுபகாரியங்களை முன்னிட்டு ஆலயத்திற்குச் செல்லும் போது பூஜை நிகழ்ந்து கொண்டு இருந்தால் மிகநல்லது. தீபாராதனை செய்து கொண்டிருந்தால் சாலச்சிறந்தது.
உணவு
வாஸ்து புருஷன் எழுந்து நீராடல் 3/4 நாழிகை; சிவபூஜை 3/4 நாழிகை; இவைகளைப் பற்றி தெரிந்து கொண்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்து உணவருந்துதல். சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், அப்பளம், வடை, பாயாசம், காரக்குழம்பு, தயிர்பச்சடி, ஊறுகாய் இவைகளுடன் சாப்பிட்டால் இது விருந்து. இது எல்லா நாட்களும் கிடைக்காது. ஏதோ சில நாட்கள் கிடைக்கும் விருந்து ஏதோ சில நாட்களில் கிடைக்கின்ற உணவுதான். ஆனால் நீங்கள் தினம்தோறும் விருந்துணவே சாப்பிட்டால் வெகுசீக்கிரம் உங்களுக்கு மரணம் வரும். மரணத்தை தள்ளிப் போட வேண்டுமானால் மூன்று நாட்கள் தொடர்ந்து விருந்தில் உணவு அருந்தினால் ஒரு நாள் பேதிக்கு சாப்பிட்டு குடலைக் கழுவ வேண்டும்.
"
பல பேருக்குச் செய்வத்தை பெருக்கிற வழிதெரியும். இரவும் பகலும் ஓயாது உழைத்து பொருள் தேடுவார்கள். திரைகடல் ஓடியும் திரவியம்தேடு என்னும் ஒளைவை மூதாட்டியின் அமுத வாக்குக்கு உயிர் கொடுங்கள். ஆனால் தேடிய செல்வத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டாமா? அதற்கு நீங்கள் நோயில்லாமல் நீண்ட நாள் வாழ்ந்தால் தானே செய்வத்தை அனுபவிக்க முடியும். நேயில்லாமல் நீண்டநாள்வாழ வேண்டும் என ஆசைப்படுபவர்கள் காலையில் இட்லி, இடியாப்பம், இளநீர், பழவகை, மதியம் வரகு, கேழ்வரகு, சாமை, தினை, சோளம். (இதில் ஐந்து வகையான சோளம் உண்டு.
முத்துச்சோளம், மக்காச்சோளம், வெண்சாமரைச்சோளம், வார்ப்புச்சோளம், இருங்கச்சோளம்), கேரள மட்டை அரிசி இதில் ஏதாவது ஒன்று. குழம்புக்கு துவரம் பருப்பு, தட்டைப்பயிர், பச்சைப்பயிர், நரிப்பயிர், காராமணிப்பயிர், மொச்சை இது செடி. அவரை இது கொடி. நிலக்கடலை இதில் ஏதாவது ஒன்றில்குழம்பு வல்லாரைக்கீரை மூளை வளர்ச்சிக்கு உதவுவது. இதன் இலை மூளையின் அமைப்பில் இருக்கும் உடல் பலம். பலம் அல்ல உள்ளத்தின் உறுதி பலம். அந்த உறுதியை உடையவர்கள்தான் வல்லவர்கள் அந்த வல்லமை வல்லாரையினால் கிடைக்கும்.
தூதுவளை இது நினைவாற்றல் மூலிகை. முசு என்றால் குரங்கு. முசுமுசு என்றால் இரண்டு குரங்கு கை. குரங்கின் கை மாதிரி இலையின் சுறுசுறுப்பு சோம்பல் வராது ஒரு குரங்கு இருந்தாலே குறும்பு செய்யும் இரண்டு குரங்கு சேர்ந்தால் சொல்லவா வேண்டும். கரிசாலை இதனுடைய பெருமை அளவிட முடியாது. இதில் 10 செடியை வேருடன் பிடுங்கி மண்தூசு போக கொதிக்க வைத்து அந்த கசாயத்தை குடித்தால் 2000 ஆண்டுகள் வாழலாம். புளியாரை செம்பு பாத்திரத்தில் உள்ள களிம்பை புளி நீக்குவது போல புளியாரை நமது உடம்பில் உள்ள துரிசை நீக்கிவிடும். தினமும் சாப்பிடலாம். அடுத்து எண்ணெய் சேர்ந்த வெந்த பலகாரம் எதையும் சாப்பிடக்கூடாது. எண்ணையே மனிதனுக்கு தேவை இல்லை. மனிதனைத்தவிர மற்ற ஜீவன் எதுவும் எண்ணை சேர்த்துக் கொள்வதில்லை. அனைகள் பாருங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்கிறது என்பதைப் பாருங்கள்.
வெண்மை நிறமான அரிசி, உப்பு , சீனி, பால்
இவை நான்கும் வெள்ளை விடம். ஒயிட் பாய்சன். ஆங்கிலக் காய்கறிகள் வேண்டாம். நம் நாட்டு காய்கறிகளே போதும். பசித்திரு என்றார் வள்ளலார். சாப்பிடாமல் இருந்தால்தானே பசித்திருக்க முடியும். அதாவது பசி எப்பொழுதும் நம்மிடம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். பசி என்பது ஒரு நெருப்பு. உணவை போட்டு இந்த நெருப்பு எப்பொழுதும் அவியாமல் இருக்க வேண்டும்.
தீயளவுஇன்னித் தெரியான்! பெரிது உண்ணிற்
நோய் அளவின்றிப் படும்
சாப்பிட்டு முடிந்து எழுந்திருக்கும் போது பசியிருக்க வேண்டும். அதனால் வாஸ்து புருஷன் சாப்பிடும் நேரம் தான் மிக உயர்ந்த நேரம் இந்த நேரத்தில்தான் உங்களது பணிகளை ஆரம்பிக்கலாம் எந்த ஆன்மாவும்,
மெய் வாய் கண் மூக்கு செவி
ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசை
மேலே உள்ள மெய் முதலாக சொல்லப்படுவது பொறி. ஊறு முதலாக சொல்லப்படுவது புலன். இந்த பத்தும் ஒரே இடத்தில் அதனுக்குரிய இன்பத்தை ஒரே காலத்தில் அனுபவிப்பது காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பெற்ற இன்பம் மட்டும்தான். இதைத் திருவள்ளுவர்,
கண்டு கேட்டு உண்டு உயித்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்தொடிக் கண்ணே உள.
என அருளியுள்ளார்.
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
அடுத்து மேலே குறிப்பிட்டுள்ள மாதிரி இன்பம் கிடைப்பது தான் சாம்பாதித்து கட்டிய வீட்டில் இருந்து தன் சொந்த மனைவி தன்னால் பெற்று வளர்த்தப்பட்ட மக்கள் இவர்களுடன் இவர்களை சார்ந்தவர்களுடன் எளிய உணவு எல்லோருக்கும் ஒரே நேரத்தில் மனைவி பரிமாற மகிழ்ச்சியாக உணவருந்தும் மேலே குறிப்பிட்ட பொறி புலன் அனைத்திற்கும் முழுநிறைவான இன்பம் கிடைக்கும் இதையும் திருவள்ளுவரே அருளியுள்ளார்.
தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு
அதனால் உலகத்தில் பிறந்துள்ள எல்லா ஜீவன்களுக்கும் முழுநிறைவான இன்பம் பெறுவது உண்ணும்போது தான். நீங்கள் ஒருவரைக் காண சென்றால் அந்த நேரத்தில் அவர் உணவருந்திக் கொண்டிருந்தால் அதை விட சிறந்த வாஸ்து வேறு எதுவுமே இல்லை. அதனால் இந்த உணவருந்தும் வேளைதான் அமுதவேளை. மற்ற வேளை எல்லாம் விஜவேளை சோர வேளை மற்றும் உள்ள தன வேளையிலும் செய்யலாம். ஆனால் அமுதவேளைதான் மிகமிக நல்லது.
இதை நாங்கள் பல அனுபவங்களில் பார்த்திருக்கின்றோம்.
தமிழ்நாட்டில் பஞ்சாயத்து தேர்தல் நிகழ்ந்த சமயம் ஒரு அன்பர் வந்தார். இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அதாவது வரும் தேர்தலில் நிற்கலாமா? வேண்டாமா? எனக் கேட்க வருகிறார். அவர் வரும் போது நாங்கள் உணவருந்திக் கொண்டிருந்தோம். அவருக்கு இலை போட்டு எங்கள் உடன் அமர்ந்து சாப்பிட வைத்தோம். சாப்பிட்ட பின் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது வாஸ்துவை பற்றிச் சொல்லி நீங்கள் எங்கே எது குறித்து எவரைப் பார்க்கப் போனாலும் நீங்கள் பார்க்கப் போகும் அன்பர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் நீங்கள் கருதிச் சென்ற காரியம் 100 / 100 வெற்றி கிடைக்கும். இதை ஏன் சாமியார் சொல்கிறார் என்று அவருக்குத் தெரியவில்லை. இப்போது நீங்கள் வரும்போது நாங்கள் உணவருந்திக் கொண்டிருந்தோம். அதனால் நீங்கள் வந்த காரியம் வெற்றி என்று சொன்னோம். அதன் பிறகுதான் வரும் பஞ்சாயத்து தேர்தலில் நான் நின்றால் பலன் கிடைக்குமா கிடைக்காதா எனக் கேட்கத்தான் வந்தேன் என்றார். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் சந்தேகம் வேண்டாம் என்று கூறி ஆசி வழங்கி அனுப்பியுள்ளோம். இவர்தான் வெற்றி பெற்றார். இன்னும் தலைவர் பதவியில் இருக்கிறார்.
இவர் வந்து சென்ற ஓரிரு நாள் கழித்து இவரை எதிர்த்து போட்டி இட்ட அன்பர் வந்தார். இவர் வரும்போது நாங்கள் உணவருந்தி முடித்து கை வாய் கழுவுகின்றோம். அவரையும் சாப்பிட வைத்தோம். இவர்தான் ஏற்கனவே இருந்த தலைவர் தேர்தலில் நிற்கலாமா என்றார். வேண்டாம் உங்களுக்கு வேளை சரியில்லை. அதனால் பணம்தான் வீண் செலவாகும் வேண்டாம் என்றோம். என் மக்கள்தான் என்னை நிற்கச் சொல்கிறார்கள் என்றார்.
நான் வழிபடும் கடவுள் முருகனிடம் கேட்டேன். அவர் நல்ல உத்தரவு கொடுத்தார் என்றார். முருகன் உத்தரவு கொடுத்த பிறகு இங்கு வந்திருக்கக் கூடாது. முருகன் உத்தரவை புறக்கணித்து விட்டு இங்கு ஏன் வந்தீர்கள் என்றேன். ஆனாலும் அவர் தேர்தலில் நின்றார் படுதோல்வி அடைந்தார் ஏன் என்றால் வந்தபோது வாஸ்து கைகழுவி விட்டது.
==============================================================
Also check :
வள்ளலாரின் சத்திய பூமியில் சில மணித்துளிகள் – வடலூர் தைப்பூசம் SPL
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்!
வடலூரின் வாழும் வள்ளலாரின் கருணை இல்லம்! ஒரு ரவுண்ட்-அப்!!
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?
==============================================================
[END]
வாஸ்துவை பற்றி பல விசயங்களை தொகுத்து அளித்ததில், தெரியாததை தெரிந்து கொண்டோம் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. உணவருந்தும் வேளையே நல்ல வாஸ்து நேரம் என்பது அழகாக சொல்லி இருக்கிறார் ஸ்வாமிகள்.
நண்பர் சிட்டியுடன் சுவாமிகளும், குழ்ந்தைகளும் இருக்கும் போட்டோவை பார்க்கும் பொழுது போன வருட மே மாதம் வடலூர் சென்று அந்த குழந்தை களுடன் மிகவும் மகிழ்ச்சியாக ஸ்பென்ட் பண்ணிய நாள் ஞாபகத்திற்கு வருகிறது., பதிவு இன்னும் வெளி வரவில்லை
மொத்தத்தில் வாஸ்துவின் ‘Do’s and Dont’s ” அருமை
நன்றி
வாழ்க … வளமுடன்
உமா வெங்கட்
பொதுவாக வாஸ்து என்றால் ஈசான மூலை, பிரமிட், தோஷம் போன்ற விஷயங்கள் நினைவுக்கு வரும். ஆனால் இந்த கட்டுரை படித்தபிறகு இத்தனை முக்கியமான விஷயங்கள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. சற்றே வித்யாசமான கோணத்தில் இருப்பதால் இது சரியாக புரிவதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும். புரிந்துவிட்டால் வாழ்கை இனிக்கும், எதிலும் வெற்றிதான்.
கணவன் மனைவி உறவு, சத்தான உணவுகள், தவிற்கவேண்டிய உணவு, நல்ல நேரம் என பல கருத்துக்களை கொண்ட அருமையான பதிவு அனுபவ வாஸ்து. வடலூர் சிவப்பிரகாச ஸ்வாமிகள் அவர்களுக்கு நன்றி. பகிர்ந்தமைக்கு சுந்தருக்கு நன்றி.
தங்களுடன் சுவாமிகளை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியும் பேறும் பெற்றேன்.
அதற்க்கு தங்களுக்கு எனது நன்றிகள்.
முதியோர்களையும் அங்கிருந்த பசுக்களையும் தாங்கள் நன்று கவனித்து கொண்டீர்கள். குழந்தைகளையும் தான். மனமிருந்தால் மார்கமுண்டு.
சுவாமிகள் மிக பெரும் காரியங்களை செய்து வருகிறார். ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார்.
வாஸ்து மிக தெளிவான விளக்கத்திற்காக சுவாமிகளுக்கும், பகிர்ந்தமைக்கு உங்களுக்கும் எனது நன்றிகள்.
வாஸ்து பற்றி இவவளுவு செய்திகளா ?
அருமையான நியூஸ் சார்.
மிக்க நன்றி தங்களுக்கு
தங்கள்
சோ. ரவிச்சந்திரன்
கைஹா , கர்நாடகா