சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வருகை தந்து நமது நூலை வெளியிட்டு நூல்கள் குறித்து தங்கள் பேருரையை ஆற்றி நம்மை பெருமைப்படுத்தினர்.
நூல்களும் இன்று அரங்கத்தில் நன்கு விற்பனையாகின. இந்த வெற்றியை அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் முருகப்பெருமானின் காலடியில் சமர்ப்பிக்கிறோம். கந்தன் கருணை மட்டும் இல்லையேல் மலையை தாண்டும் இந்த நிகழ்வு சாத்தியப்பட்டிருக்காது.
“உன் வாழ்க்கை உன் கையில்!” நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள திரு.சி.ராஜேந்திரன் IRS அவர்கள் தனது அணிந்துரையில் கூறியிருக்கும் ஒரு வரி: இந்த நூல் புரட்டிப் பார்த்துப் போடும் நூல் அல்ல. படிப்பவர்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் நூல்.
“அது உண்மை தான்… நிச்சயம் இந்த நூல் எங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும். தளத்தில் பதிவாக படித்ததைவிட அதை நூலக படிக்கும்போது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது… திரும்பத் திரும்ப படிக்க தோன்றுகிறது என்று நூலை வாங்கிய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
=======================================
நமது வரலாறும் நாம் கடந்த வந்த கரடு முரடான பாதையை நன்கு உணர்ந்துள்ளவர்களுக்கும் நம்மால் இது எப்படி சாத்தியமானது என்றே கேள்வி அடிமனத்தில் இருப்பது தெரியும்.
இது குறித்து நாம் நன்றியுரையில் கூறியதை இங்கே கூற விரும்புகிறோம்…
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!
“நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி
அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள்
கையில் பணமில்லையே… உடலில் வலுவில்லையே….
என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே
எதற்கும் பயப்படாதே… எதற்கும் தயங்காதே!
இலக்கை நோக்கி அடியெடுத்து வை
தொடர்ந்து முன்னேறு. சோதனைகள் விலகும்.
பாதை தெளிவாகும் நோக்கத்தை அடைந்தே திருவாய்
அதை யாராலும் தடுக்க முடியாது !”
-சுவாமி விவேகானந்தர்
விரிவான அப்டேட் விரைவில்….
சற்று ஓய்வுக்கு பின்னர் சந்திப்போம்!
அண்ணா
மிக்க மகிழ்ச்சி ஆக இருக்கிறது.கண்களில்
நீர் துளிகள் துளிர்பதை தவிர்க்க முடியவில்லை.வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
Dear Sundarji,
Glad to see the event went well and hearty wishes for many more achievements
Regards
Prabu
வாழ்த்துக்கள் சுந்தர்
இறைவனின் ஆசியோடு விழா சிறப்புற நடந்தமைக்கு வாசகர்கள் சார்பில் பாராட்டுதல்கள்
தாங்கள் எழுதிய புத்தகங்கள் விரைவில் எளிதில் கிடைக்க வழி செய்வீர்கள் என்று நம்புகிறோம்
நூல்களை அஞ்சல் வழியாக பெற என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிவிக்கவும்
உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்
வாசகர்கள் கடலில் ஒரு துளி …
சுந்தர்ஜி
தங்கள் முதல் நூல் வெளி வந்தது குறித்து மிக மிக மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. சுந்தர் அவர்களின் முன்னேற்றம் சாத்தியமானதுக்கு காரணம் அவரது மிகுந்த உழைப்பும் தன்னம்பிக்கை மற்றும் இறைவனின் துணையுமே ஆகும்! வாழ்க நீங்கள் வளமுடன் ! தொடர்க உங்கள் பணி ! நன்றி
Sundarji,
Best wishes !
Programmukku vara mudiyadha சூழ்நிலை.
அந்த ஒரு கவலை தான்.
Tks n regards
Ranjini.
ரொம்ப சந்தோசம், சுந்தர்ஜி. மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நம் பெருமான் ஆறுமுகத்தின் தனிப்பெரும் கருணையினால் இனி எல்லாம் ஏறுமுகம் தான்.
Hats off sundarji. Keep going.
எச்செளன்ட் சார் . உங்கள் நன்றி உரையே உங்களின் வளர்ச்சி உரையாகும் . என்றுமே தங்களின் முயற்சி மேன்மலும் வளருமே தவிர தளராது . வாசகர்கள் எல்லாருமே உங்கள் பக்கம் சார்,
அடிச்சி தூள் பண்ரிங்க .
எல்லாம் வல்ல முருகன் துணை உங்களுக்கு உண்டு.
நல்லவங்க வாழ்த்துக்கள் உங்களுடனே இருக்குது சார் .
புத்தங்களை எப்படி வாங்குறது சார், விபரம் தெரிவிக்க வேண்டும்
மனசார வாழ்த்தும்
தங்கள் வாசகர்
சோ. ரவிச்சந்திரன்
கைக கார்வார், கர்நாடகா .
sravichandran@npcil.co.in
9480553409
மனமார்ந்த வாழ்த்துக்கள் சுந்தர். உங்களோட இந்த உழைப்பும் தன்னம்பிக்கையும் உங்களை மென்மேலும் உயர்த்தும் என்பது உறுதி. புக்ஸ் வாங்கி படிக்க ஆவலாக உள்ளேன். சென்னை வந்ததும் வாங்கி கொள்கிறேன். நன்றி
கே. செந்தில்குமார்
வாழ்த்துக்கள் சுந்தர். அற்புதமான ஆரம்பம். மேன்மேலும் உயர கடவுள் அருள் புரியட்டும்.
கண்ணா இது சும்மா trailer தான். Main picture இனிமேதான்.
வாழ்த்துக்கள் சுந்தர்.
Sundarji, Congratulations!
Wish you all the very best!
இந்த ஒரு பொன்னான தருணத்தில் நான் தங்களுடன் இல்லை என்ற மனவேதனை இருந்தாலும்…என்னுடைய பிராத்தனை எப்பொழுதும் இருக்கும். மிக்க மகிழ்ச்சி சுந்தர்….இந்த புக் வாங்க வேண்டும் என்றால் எங்கு கிடைக்கும் என்பதை கொஞ்சம் தெரியபடுத்துங்கள்.
.
நன்றி.
அன்புடன்
மாரீஸ் கண்ணன்
SundarJi,
Congrats and my best wishes again..
Rgds,
Ramesh
வாழ்த்துக்கள் சுந்தர் சார் நீங்கள் மென் மேலும் வளர கடவுளின் ஆசிகள் உங்களுக்கு நிச்சயம் உண்டு.
காங்க்ரத்ஸ்.விஷ் யு ஆல் தி best
ரொம்ப நாள் கழித்து ஒரு நிறைவான விழா (எனக்கு)
அதும் திரு உசேன் அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது
பல நல நெகிழ்ச்சியான விஷயங்கள் நடந்தேறினாலும், அங்கு துப்புரவு பனி செய்தவர்க்கு மரியாதை செய்தது மிகவும் நன்று
வந்தவர் அனைவரும் ஒன்றை அடிகடி கூறினார்கள் அது நடக்க வேண்டும்
தங்கள் வளர்ச்சி கண்டு
மிக்க மகிழ்ச்சி.
தபாலில் நூல் வாங்கும் விவரம் அறிய ஆவலுடன்,
– சோமேஷ்
Congratulation Sir
சார் ஆல் தி பெஸ்ட். வர முடியாததற்கு மன்னிகவும். சந்தர்ப்ப சூழ்நிலை வர முடியவில்லை. தயவு செய்து மன்னிக்கவும். இரண்டு புக்கும் எங்கு கிடைக்கும் என்று தெரியப் படுத்தவும்.
selvi
வாழ்த்துக்கள்
ரைட் மந்த்ரா புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதை நான் மிகவும் பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இந்த விழா எனக்கு வாழ்வின் மறக்க முடியாத விழா. பல ஆன்றோர்களையும், சான்றோர்களையும் ஒரு சேர சந்தித்ததில் பரவசம். இந்த விழா மேள தாளம் நாதஸ்வரம் முழங்க ஒரு திருமண வைபவத்திற்கு சென்று உள்ளம் மகிழ்ந்த நாள் போல் அமைந்தது. அன்று குன்றத்தூரே விழாக் கோலம் பூண்டது போல் ஆகி விட்டது.
தாங்கள் இந்த விழாவைப் பற்றிய பதிவை அளித்ததில் இருந்து ”கவுன்ட் டௌன்” பண்ண ஆரம்பித்து விட்டேன், எப்பொழுது அந்த நன்னாள் வரும் என்று.
தங்கள் வெகு நாள் உழைப்பிற்கு பின் வெற்றி கனியை எட்டிப் பறித்து விட்டீர்கள். தாங்கள் இன்னும் பல அறிய நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட அந்த ஈசன் அருள் புரிய வேண்டும்.
இந்த விழாவைப் பற்றிய பதிவுகளை படிக்க அவா.
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
Congratts JI,
All the very best.
அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி.
நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது. நாதஸ்வர கச்சேரியும், குழந்தைங்களின் கடவுள் வாழ்த்தும் சிறுமியின் பாடலும், சிறப்பு விருந்தினர்களின் உரைகளும் மிக அருமையாக இருந்தது.
எத்தனையோ இடையுருகளில் இருந்து வெற்றி கனியை எட்டி உள்ளீர்கள்.
உங்களின் புத்தகங்கள் மிக அருமை. திரு. உசேன் அய்யா போல் மேற்கோள் காட்டினால் எனக்கு பிடித்த பகுதிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
தங்களின் புத்தகங்கள் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
Dear Mr. Sundar,
Greetings!!!
Happy to be a part of this memorable event.
All the best !!!!
Regard,
MALATHI