Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > திருநீற்றின் பெருமையை காக்க உயிர்த் தியாகம் செய்த ஏனாதி நாயனார் – Rightmantra Prayer Club

திருநீற்றின் பெருமையை காக்க உயிர்த் தியாகம் செய்த ஏனாதி நாயனார் – Rightmantra Prayer Club

print
கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் நான்கு மைல் தொலைவில் அமைந்துள்ள ஏனநல்லூர் என்ற ஊரில் பிறந்தவர் ஏனாதிநாத நாயனார். அந்த நாட்களில், சேனாதிபதிக்கு ஏனாதி என்ற பேர் இருந்தது. அரசர்கள் சேனாதிபதிக்கு ஏனாதிப்பட்டம் என்னும் ஓர் ஆபரணம் நெற்றியில் அணியத் தருவார்கள். அரசர்களுக் கும், அவருடைய படைவீரர்களுக்கும் வாள் பயிற்சி கற்றுதரும் வீரராக வாழ்ந்தவர்தான் ஏனாதிநாத நாயனார். மிகச்சிறப்பான பயிற்சி யின் மூலமாக முதன்மை பெற்று, நல்ல வரு மானமும் பெற்று வாழ்ந்தார்.

உயர்ந்த வீரம் உடைய இவர், திருநீற்றின் திருத்தொண்டில் அளவுகடந்த அன்புடன் வாழ்ந்து வந்தார். திருநீறு அணிந்த அடியவர் யாவராக இருந்தாலும், அவரை சிவமாக பாவித்து வணங்கும் பண்புடன் வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாள் பயிற்சியின் மூலமாக கிடைத்த வருமானம் முழுவதையும், திருநீறு அணிந்த அடியவர்க்கே பயன்படுத்தினார்.

Enadhi Nayanar

இவரைப்போலவே, வாள் பயிற்சி அளித்து வரும் அதிசூரன் என்பவருக்கு, ஏனாதிநாத நாயனாரால் வருமானம் இழப்பு ஏற்பட்டது. தன்னைவிட அதிக வருமானம் ஈட்டும் ஏனாதி நாதரை வென்றுவிட்டால், தனக்கு வருமானம் அதிகம் கிடைக்கும் என்ற பொறாமை குணம் குடியேறியது. இதனால் தன்னுடம் துணைக்கு ஆட்களைக் கூட்டிக்கொண்டுச் சென்று ஏனாதிநாயனாரை போருக்கு அழைத்தார்.

வீரம் மிகுந்த ஏனாதிநாயனார், யாரையும் துணைக்கு அழைக்காமல், தனியே போருக்குச் சென்றார். இதை அறிந்த அவருடைய வாள் பயிற்சி மாணவர்களும், சுற்றத்தினரும் அவருக்கு துணையாகச் சென்று இவர்களிடம் போரிட்டு வெற்றிபெற முடியாமல், அதிசூரன் தோற்று ஓடினான்.

வீரத்தால் ஏனாதிநாத நாயனாரை வெற்றிப் பெற முடியாத காரணத்தால், சூழ்ச்சியால் வெற்றிபெற நினைத்தான் அதிசூரன்.

திருநீறு அணிந்து வருபவருக்கு, ஏனாதிநாத நாயனார் பணிவிடை செய்வார் என்று அறிந்த அதிசூரன், நெற்றி நிறைய திருநீறு அணிந்து கொண்டு, அதை தன்னுடைய கேடயத்தால் மறைத்துக்கொண்டு, ஏனாதிநாத நாயனாரைத் தனியே போர் செய்ய அழைத்தார். துணைக்கு பலரை அழைத்துக்கொண்டு படையுடன் போர் செய்தால், நம்மால் அவர்களுக்கு காயம் ஏற்படுகின்றது. அதை தவிர்க்கவே தனியாக போரிட அழைக்கின்றேன் என்றார்.

அனைவரிடம் தயவு, தாட்சிணியம் பார்த்து, “கண்ணோட்டத்துடன்” பழகும் ஏனாதிநாயனாரும், மற்றவர்களுக்கு எதுவும் சொல்லாமல், தனியாக அதிசூரன் அழைத்த இடத்திற்கு போருக்குச் சென்றார். அது அதிகாலை நேரம், கபடமாக திருநீறு அணிந்து, அதையும் மறைத்துக் கொண்டு வந்த அதிசூரன் வாளை வீச, போர் ஆரம்பித்தது.

அதிசூரனின் தாக்குதலை தடுக்க முயன்ற போது, அதுவரை கேடயத்தால் மறைத்திருந்த திருநீற்றை ஏனாதிநாத நாயனார் பார்த்தார். இதுவரை திருநீற்றை அணியாத அதிசூரன், இன்று திருநீற்றை அணிந்துள்ளார். சிவபெரு மானுடைய திருத்தொண்டராக ஆயினார் போலும், இனி இவருடைய குறிப்பு அறிந்து நடப்பேன் என்று எண்ணினார்.

நமக்கு துன்பம் செய்பவராக இருந்தாலும், அவரிடம் இரக்கம் காட்டி, அவருடைய குற்றத்தை பொறுக்கும் பண்பே சிறந்தது என்று சொல்லும் திருக்குறளின்படி, தன்னை கொல்வதுதான், திருநீறு அணிந்த அதிசூரனின் விருப்பம் என்பதால், அந்த திருநீற்றுக்கு மதிப்பு அளிக்கும் விதமாக, ஏனாதிநாதர் அதி சூரனுடன் சண்டையிடாமல், வெறுமனே வாளும், கேடயமும் ஏந்தி நின்றார்.

இத்தருணத்தைப் பயன்படுத்தி அதிசூரன் ஏனாதிநாதரை கொன்றார். ஏனாதிநாதருடைய திருநீற்றின் அன்பை நன்கு அறிந்த சிவபெருமான். அவர் முன் தோன்றி தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

வரும் செப்டம்பர் 23, புராட்டாசி 6, உத்திராடம் நட்சத்திரம் ஏனாதி நாயனார் குருபூஜை!

===============================================================

ஞாயிறன்று நடைபெறவுள்ள நமது நூல் வெளியீடு குறித்து ஒரு நினைவூட்டல்…

நமது வாசகர்களும் உழவாரப்பணி குழு உறுப்பினர்களும் அவசியம் மேற்படி விழாவுக்கு வரவேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம். அனைத்து வசதிகளும் உள்ள இடமே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இடம் : திருக்குறள் தேவார பாடசாலை, (சிவன் கோவில் அருகே), 78, பெரிய தெரு, (பஸ் டெப்போ அருகே), குன்றத்தூர், சென்னை – 69. நேரம் : ஞாயிறு காலை : 9.00 -12.30

Rightmantra Invite Final 1

Rightmantra Invite Final 2

===============================================================

சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…

Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீகிஷிதராக தொண்டாற்றும் திரு.சபாபதி குருக்கள்

தற்போது 45 ஆம் அகவையில் இருக்கும் திரு.சபாபதி குருக்கள் நம் நெருங்கிய நண்பர். பரம்பரை பரம்பரையாக தில்லையில் தொண்டாற்றி வருகின்றனர். தில்லை மூவாயிரம் அந்தணர் மரபில் வந்தவர் இவர். இவரது தந்தை புலவர் ஸ்ரீ ஞானஸ்கந்த தீகிஷிதர்  (75).

Sabapathi Dheeksidhar1

திரு.சபாபதியின் உடன் பிறந்தவர் நான்கு பேர். அவர்கள் அனைவரும் தில்லையில் ஆடல்வல்லானிடம் தீக்ஷிதராக தொண்டாற்றுகிறார்கள்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் நமது இல்லத்திற்கு சபாபதி தீட்சிதர் வருகை தந்திருக்கிறார்.

சமீபத்தில் நாம் வைத்தீஸ்வரன் கோவில், திருபாம்புரம் உள்ளிட்ட தலங்களுக்கு செல்லும்போது தில்லை சென்றிருந்தோம். அப்போது திரு.சபாபதி தீக்ஷிதர் தான் அருகேயிருந்து நமக்கு அருமையானதொரு தரிசனம் செய்வித்தார். நம்முடன் அப்போது கல்பாக்கத்தை சேர்ந்த திரு.வெங்கடேஷ் பாபு – ரேவதி வெங்கடேஷ் பாபு தம்பதியினரும் உடனிருந்தனர்.

Sabapathi Dheeksidhar2

ஆலயத்தில் திரு.சபாபதி தீட்சிதரை நம் தளம் சார்பாக கௌரவித்தது மறக்க முடியாத ஒரு அனுபவம்.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பதோடு நமக்காக நடராஜர் சன்னதியில் அந்த நேரம் (ஞாயிறு 5.30 – 5.45) பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். திரு.சபாபதியும் இசைந்துள்ளார். அவருக்கு நம் நன்றி.

உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவனிடமே நம் பிரார்த்தனை சமர்பிக்க விருக்கிறபடியால், பிரார்த்தனை சமர்பித்திருப்பவர்கள் நம்பிக்கையோடு இருக்கலாம். விரைவில் உங்களிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்க்கிறோம்.

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் திரு.ஸ்ரீகாந்த் அவர்களை நமக்கு கடந்த ஆறு மாதங்களாக தெரியும். வடலூர் சிவப்பிரகாச சுவாமிகள் பற்றிய பதிவை பார்த்துவிட்டு நேரே தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வடலூர் சென்று அக்குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டுவிட்டு வந்தார். நமக்கு மிகவும் மனநிறைவாக இருந்தது.

இவருக்கு பணியில் கடந்த சில மாதங்களாகவே பிரச்சனை இருந்துவந்துள்ளது, எந்நேரமும் வேலை போகும் என்ற நிலையில் இருந்திருக்கிறார் என்பதை அறிந்த போது மிகவும் வருத்தப்பட்டோம். “ஏன் நமது பிரார்த்தனை கிளப்புக்கு முன்பே நீங்கள் கோரிக்கை அனுப்பவில்லை?” என்று கேட்டபோது, “இதுவரை நம் தளத்திற்கு எதுவுமே செய்ததில்லை என்ற உறுத்தல் இருந்ததால் கோரிக்கை அனுப்பவில்லை” என்று பதிலளித்தார். அதை கேள்விப்பட்டு நாம் அடைந்த துயருக்கு அளவேயில்லை.

நம்மை புரிந்துகொண்டவர்கள் இவ்வாறு செய்யமாட்டர்கள். வாழ்க்கையில் துயரத்தில் இருப்பவர்கள், தாள முடியாத பிரச்சனை துன்பத்தில் இருப்பவர்கள், பிரார்த்தனை ஒன்றே தங்களுக்கு தீர்வு என்ற நிலையில் இருப்பவர்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் நம்மை தொடர்புகொண்டு தங்கள் பிரச்சனைகளை கூறி பிரார்த்தனை கிளப்பில் அது வெளியாக முயற்சி எடுக்கவேண்டும். இத்தகையவர்களுக்காக்த் தான் இந்த தளம் நடத்தப்படுகிறது. இவர்களைப் போன்றவர்கள் எதற்காகவும் எதையும் மனதில் வைத்துக்கொண்டு நம்மை அணுக தயங்கவேண்டாம்.

கடந்த காலங்களில் நம் தளம் மூலம் பல அறப்பணிகள் செய்து தங்களுக்கு புண்ணியம் தேடிக்கொண்ட சிலர், தற்போது நம் தளத்திற்கென்று பிரத்யேகமாக அலுவலகத்தை அமைத்து நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தும் கூட பாராமுகமாக இருக்கிறார்கள். பிறருக்காக அள்ளிக்கொடுத்தவர்கள் தற்போது நமக்காக கிள்ளிக்கொடுக்கக் கூட தயங்குகின்றனர். இத்தனைக்கும் வணிக ரீதியாக நம் தளம் இயங்கவில்லை. அத்தகையோர்களை மனதில் வைத்துத் தான் நாம் திரும்ப திரும்ப ‘விருப்ப சந்தா’ குறித்து ஒவ்வொரு பதிவிலும் நினைவூட்டி வருகிறோமே தவிர இவர்களை போன்றவர்களை மனதில் வைத்து அல்ல.

மறுபடியும் சொல்கிறோம்… பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்கள் யாவருக்கும் நம் தளம் என்றும் உற்ற துணையாக விளங்கும். அவர்கள் தளத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றியெல்லாம் நமக்கு கவலையில்லை. அவர்கள் பிரச்சனை தீர்ந்து நல்ல நிலைக்கு வந்தாலே போதுமானது.

அடுத்து புகுந்த வீட்டில் பெற்ற மகள் படும் துயர் பற்றி கோரிக்கை அனுப்பியிருக்கும் வாசகர் தம் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளபடியால் அவரை பற்றி பேசுவது தவிர்க்கப்படுகிறது.

எல்லாரும் எல்லா வளமும் நலனும் பெறவேண்டும்!

===============================================================

நமக்காக பிரார்த்தித்த திருப்பாம்புரம் ஓதுவார்!

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற திருப்பாம்புரம் ஓதுவார் திரு.சண்முகம் அவர்கள் நமக்காக சேஷபுரீஸ்வரர் சன்னதியில் சிறப்பு பிரார்த்தனையும் அர்ச்சனையும் கடந்த இரண்டு வாரங்களும் செய்திருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நமக்கு பிரசாதத்தையும் விரைவில் தபாலில் அனுப்பவிருக்கிறார். அவருக்கு நம் நன்றி!

===============================================================

* பிரார்த்தனைக்கு விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

Terminated from employment; Need a good job!

Dear Sundar sir and Rightmantra readers,
My company has terminated me from employment. They have given me two months notice to find another job.
I am an average middle-class person. My wife is a home-maker and I am the only earning member in the family. My daughter is studying 6th standard.
Please pray for me for getting a good job in Chennai. I have over 20 years of experience in HR, Operations and Training. I have worked as Head of HR for the past 10 years.
I am helpless right now I am hereby sending my prayer request. Please pray for a good job for me. I shall surely reciprocate the Almighty when my prayers are answered.
Thank You,
Sreekkanth A V

===============================================================

புகுந்த வீட்டில் துன்பப்படும் மகளுக்கு வசந்தகாலம் பிறக்கவேண்டும்!

எங்கள் அன்பு மகளுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. மாமியார் வீட்டில் கணவர் மற்றும் மாமனார் மாமியாரால் மிகுந்த துன்பத்துக் உள்ளாகி வருகிறாள். ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மாமியார் மிகவும் தந்திரமாக பையனை சாவி கொடுத்து சண்டை போட வைக்கிறார். இருவரும் சற்று சிரித்து பேசினாலும் உடனே சண்டைக்கு வழி செய்கிறார். மாப்பிளை மிகவும் கொடூர சுபாவி.வார்த்தைகளால் புண் படுத்தகிறார். மாப்பிள்ளை மனம் மாறி என் மகளுடன் நல வாழ்வு வாழ பிரார்த்திக்க வேண்டுகிறேன்

என் மகளின் மாமியார் மந்திரித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். எங்களுடன் பேசுவதற்கும் தடை விதித்து உள்ளார்கள். சரியாக சாப்பாடு கூட போடுவது இல்லை. எங்கள் அன்பு மகள் எங்கே தற்கொலை செய்து கொள்வாளோ என்று பயமாக உள்ளது. அவளுக்கு மன தைரியம்  கிடைத்து அளித்து அவளுக்கிருக்கும் தற்கொலை எண்ணம் மாறவேண்டும், பிரச்சனைகள் யாவும் சூரியனை கண்ட பனி போல மறைய வேண்டும், அவள் வாழ்வில் வசந்தம் வீசவேண்டும், அவள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டுகிறேன்.

பெயர் குறிப்பிட விரும்பாத வாசகர்

===============================================================

பொது பிரார்த்தனை

மெக்கா விபத்தில் பலியானவர்களுக்காக பிரார்த்திப்போம்!

சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணம் செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஹஜ்  24-ந் தேதி தொடங்குகிறது. இருப்பினும், முன்னதாகவே  பல நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் மெக்கா நகருக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

mecca2-1

ஆண்டுதோறும் ஹஜ் பயணிகளின் வருகை அதிகரிப்பதால் அதனை  சமாளிக்க கூடுதல் வசதிகளை செய்ய வசதியாக மெக்காவில் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒரே நேரத்தில் 22 லட்சம் பேர் கூடும் வகையில், பெரிய மசூதியை 4 லட்சம் சதுர மீட்டர் அளவுக்கு விரிவாக்கும் பணிகள் நடைபெறுகின்றன.  அப்பணிக்காக ஆங்காங்கே மிகப்பெரிய கிரேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

சென்ற வாரம் வீசிய பலத்த காற்றில் மசூதி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று எதிர்பாராமல் முறிந்து மசூதியின் கூரை மீது விழுந்தது. இதில் 107 பேர் உயிரிழந்தனர். 237க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. அதேபோல், 15 இந்தியர்கள் இந்த விபத்தில் காயம் அடைந்துள்ளனர். இந்த தகவலை இந்திய வெளியுறவுதுறைஅமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேற்படி விபத்தின் காணொளியை காண நேர்ந்தது. அதிர்ச்சியில் உறைந்தே போனோம். ஒரு நொடியில் நூற்றுக்கணக்கான உயிர்கள் மாண்ட சம்பவம் இன்னும் கண் முன்னே நிற்கிறது.

மேற்படி விபத்தில் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு இறைவன் மன அமைதியையும் ஆறுதலையும் தருவதோடு அவர்கள் ஆன்மாவுக்கு நற்கதியை அருளவும் பிரார்த்திப்போம்.

இதுவே நாம் இறைவனிடம் சமர்பிக்க கூடிய பொது பிரார்த்தனை.

===============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

எதிர்பாராத விதமாக வேலை பறிபோனதால் கலக்கத்தில் இருக்கும் நம் வாசகர் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு விரைவில் நல்ல ஊதியத்தில் நல்லதொரு வேலை கிடைக்கவும், அவரது குடுமபத்தில் சுபிக்ஷமும் அமைதியும் நிலவவும், புகுந்த வீட்டில் பல கொடுமைகளுக்கு உள்ளாகிவரும் நம் வாசகரின் மகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கவும், அவர் தம் கணவர் மற்றும் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியுடன் வாழவும் இறைவனை பிரார்த்திப்போம். எதிர்பாராமல் நிகழ்ந்த மெக்கா கிரேன் விபத்தில் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு இறைவன் மன அமைதியையும் ஆறுதலையும் தருவதோடு அவர்கள் ஆன்மாவுக்கு நற்கதியை அருளவும் பிரார்த்திப்போம்.

இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.சபாபதி தீட்சிதர் எல்லா வளமும் நலமும் பெற்று மேலும் மலெஉம் ஆடல்வல்லானுக்கு தொண்டு செய்யவும் பிரார்த்திப்போம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : செப்டம்பர் 20, 2015 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

===============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

===============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

===============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W: www.rightmantra.com

===============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

===============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருப்பாம்புரம் ஆலயத்தின் ஓதுவார் திரு.கே.எம்.சண்முகம் அவர்கள்

3 thoughts on “திருநீற்றின் பெருமையை காக்க உயிர்த் தியாகம் செய்த ஏனாதி நாயனார் – Rightmantra Prayer Club

  1. ஏனாதி நாயனாரின் கதை தக்க போடோவுடன் பதிவு செய்தது மிகவும் அழகாக உள்ளது. இந்த கதையின் மூலம் நமக்கு தீங்கு நினைப்பவர்களுக்கும் நன்மையே செய்ய வேண்டும் என்ற கருத்து என் மனதில் ஆழப் பதிந்து விட்டது. /// ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன் //

    // மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு /
    சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
    தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
    செந்துவர் வாய் உமை பங்கன் திருஆலவாயன் திரு நீரே //

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் தீக்ஷதர் திரு சபாபதி குருக்களுக்கு என் பணிவான வணக்கங்கள். இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் வாசகர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம். ஈசன் அருளால் கண்டிப்பாக நிறைவேறும்.

    பொதுப் பிரார்த்தனையாக மெக்கா விபத்தில் பலி ஆனவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா வெங்கட்

  2. எங்கே தேடி கண்டு பிடிபபீ ர்களோ \ சார், திருநீறு பற்றி எவ்வளுவு சிறப்பு / என்ன சொல்லி உங்களை பாராட்டுருதனுதே தெரியலியே சார் .
    ஒன்னு மட்டும் சத்தியம் சார் . நீங்க 100 வயசு வாழனும்.

    உங்கள் நூல் வெளியீடு விழா மிக சிறப்பாக இருக்கும் சார்.

    நூல் மாதிரியே நீளமாக நீண்டு இருப்பதை போல் நீங்கள் இன்னும் நூத்து கணக்கான நூல்கள் வெளி இடனும் சார்.

    வாசகர்களுக்கும் தங்களுக்கும்

    மிகுந்த நன்றி.

    தங்கள்
    S . ரவிச்சந்திரன், கைஹா, கர்நாடகா

  3. நூல் வெளியீடு விழா சிறப்புடன் நடக்க வாழ்த்துக்கள்

    அன்புடன்
    மீனாட்சி சுந்தரம்
    .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *