சில நூறு அடிகள் நடந்திருப்பார்கள். வானம் பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது. அடைமழை. சூறைக்காற்றுடன் கூடிய அடைமழையில் இவர்கள் வைத்திருக்கும் குடை எம்மாத்திரம்? எனவே இவர்களின் குடியிருப்பு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருவரும் தஞ்சமடைகிறார்கள். அதற்குள் நன்கு இருட்டிவிட்டது. நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. மழை நின்றபாடில்லை. மழை சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கும் மழையால் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கோவிலுக்கு போகலாமா வேண்டாமா என்று திரு.ரவிச்சந்திரனின் மனதிற்குள் போராட்டம்.
இந்த மழையில் கோவிலுக்கு செல்வது சாத்தியமில்லை. ஒருவேளை போனாலும், திரும்ப வருவது சிரமம் என்பதால் ஒரு நீண்ட நெடிய மனப்போராட்டத்திற்கு தங்கள் அபார்ட்மெண்ட்டுக்கே திரும்புகிறார்.
அடைமழையில் நனைந்தபடி சும்மா பேருக்கு குடையை பிடித்தபடி இருவரும் தங்கள் வீட்டுக்கே மறுபடியும் விரைகின்றனர்.
சிறு குழந்தைகளின் கூக்குரல் சத்தம். திரும்ப திரும்ப கேட்கிறது. சுற்றுமுற்றும் பார்த்தால் யாரும் இல்லை. ஒருவேளை குழந்தைகள் ஏதாவது இருட்டில் வழி தெரியாமல் அழுதுகொண்டிருகிறார்களா?
சற்று நேரம் கழித்து தான் புரிகிறது….அது நாய்க்குட்டிகளின் சப்தம். (நாய்க்குட்டி, பூனைக்குட்டிகளின் சத்தம் குழந்தைகளின் அழுகுரல் போலவே இருக்கும்).
சுற்றுமுற்றும் பார்க்கிறார்…. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. மீண்டும் நடக்கிறார்…. மறுபடியும் “வள் வள்”என்று சத்தம். இது நிச்சயம் சில நாட்களுக்கு முன்னர் பிறந்த நாய்க்குட்டிகளின் சத்தம்….!
எங்கிருந்து சத்தம் வருகிறது என்று பார்க்கிறார்… சற்று நேரம் நின்று கேட்டதில், அவர்கள் காம்பவுண்டை ஒட்டி சென்ற கழிவுநீர் கால்வாயில் இருந்து தான் சத்தம்.
ஒருவேளை நாய்க்குட்டிகள் உள்ளே விழுந்திருக்குமோ?
மொபைலில் உள்ள டார்ச்சை ஆன் செய்து கால்வாய்க்குள் எட்டிப் பார்க்கிறார். இவர் யூகம் சரி தான். கழிவுநீர் கால்வாய்க்குள் நான்கைந்து நாய்க்குட்டிகள் தவறி விழுந்திருந்தன.
நொடிக்கு நொடி உயர்ந்து வரும் நீர் மட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஒன்றின் மீது ஒன்று ஏறி, எப்படியாவது கால்வாய்க்குள் இருந்து வெளியே வர முயற்சித்துக் கொண்டிருந்தன. அந்த ஜீவ மரண போராட்டத்தின்போது அவை எழுப்பிய ஒலி தான் அந்த “வள் வள்” சப்தம்.
செய்வதறியாது இவர் திகைக்கிறார். மழையோ அடித்து துவைத்துக் கொண்டிருக்கிறது. திருமதி, “அதெல்லாம் ஆண்டவன் பார்த்துப்பான் நாம போலாம் வாங்க” என்கிறார்.
இவர் ஒரு கணம் யோசிக்கிறார். கண்ணெதிரே சில உயிர்கள் மரணத்தின் விளிம்பில் இருக்கும்போது, ஆண்டவன் பார்த்துப்பான் என்று கூறி இவரால் நகர முடியவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் ரைட்மந்த்ராவில் படித்த ‘சூளைக்குள் சிக்கிய பூனைக்குட்டிகள்’ பதிவு இவர் நினைவுக்கு வருகிறது…. தன் மனதை மாற்றிக்கொள்கிறார்.
“இல்லேம்மா இந்த நாய்க்குட்டிகளை காப்பத்தலேன்னா… கொஞ்ச நேரத்துல அதுங்க செத்துடும்…. காப்பாற்ற நமக்கு வாய்ப்பிருந்தும் நாம அதை செய்யலேன்னா எப்படி? ஒருவேளை இதுகளை காப்பாத்த தான் நம்மளை சிவபெருமான் திருப்பி அனுப்பி வெச்சிட்டாரோ என்னவோ?”
“சரி… என்ன பண்றது இப்போ?”
“நீ ஒரு கையில கொஞ்சம் குடையை பிடிச்சுக்கோ… ஒரு கையில லைட் அடி….” என்று கூறியவர், தனது சட்டை, பேண்ட் பாக்கெட்டில் இருந்தவற்றை மனைவியிடம் கொடுத்து பத்திரப்படுத்தினார்.
"
கால்வாய் புதர் மண்டி பயமுறுத்தியது. ஒருவேளை பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் ஏதேனும் இருந்தால்? இருப்பினும் இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு அடுத்த நொடி, அவர் செய்தது தான் அதிரடி.
சுமார் நான்கடி ஆழமுள்ள அந்த கால்வாய்க்குள் இறங்குகிறார்… தனது முட்டிக்கு மலே இடுப்பு வரை தண்ணீர் ஓடுகிறது. ஒவ்வொரு குட்டியாக எடுத்து வெளியே போடுகிறார்.
பின்னர் தானும் மேலே வந்து ஆளுக்கு கொஞ்சம் குட்டிகளை தூக்கிக்கொண்டு தங்கள் அப்பார்ட்மெண்டில் உள்ள சைக்கிள் ஷெட்டுக்கு ஓடுகின்றனர்.
தண்ணீரை மூச்சு முட்ட குடித்திருந்த குட்டிகள் கீழே வைத்தவுடன் பொத் பொத் என்று விழுந்தன.
இதற்குள் சைக்கிள் ஷெட்டுக்கு அருகே இருந்த ஃபிளாட்டில் இருந்தவர்கள் கோணி ஒன்றை தர, அதில் குட்டிகளை வைத்தவர், அந்த கோணியை கொண்டே ஈரம் போக துடைத்துவிடுகிறார்.
உடனே தனது மனைவியிடம் “ஓடிப்போய் பிஸ்கட் பாக்கெட் ஒன்னு எடுத்துட்டு வாம்மா” சொல்ல அவர் ஓடிப்போய் பிஸ்கட் பாக்கெட் ஒன்று கொண்டு வருகிறார்.
பிஸ்கட்டை உடைத்துப் அவை முன்பு போட இன்னும் பயம் விலகாத அந்த குட்டிகள் அதை சாப்பிட வில்லை.
அடுத்து உடனே பாலை சுட வைத்து ஒரு தாம்பாளத்தில் ஊற்றி எடுத்து வரச் சொல்கிறார். அவர் திருமதியும் உடனே பாலை சுட வைத்து தாம்பாளத்தில் எடுத்து வருகிறார்.
சிறிது நேரம் கழித்து ஓரளவு பயம் விலகிய குட்டிகள் பாலை குடிக்க ஆரம்பித்தன.
அன்று இரவு முழுதும் அடிக்கடி வந்து அவற்றை பார்த்துக்கொண்டார் ரவிச்சந்திரன்.
இந்த சம்பவத்தை நம்மிடம் அலைபேசியில் விவரித்த திரு.ரவிச்சந்திரன், கடந்த சில வாரங்களாகத் தான் நமது தளத்தை பார்த்துவருவதாகவும், நம் தளத்தின் பதிவுகள் அவர் மனதில் நிகழ்த்திய மாற்றங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றார் நெகிழ்ந்து.
“ஒருவேளை சூளைக்குள் சிக்கிய பூனைக் குட்டிகள் பதிவை நான் படித்திருக்காவிட்டால் இதை செய்திருப்பேனா என்று எனக்கு தெரியாது சார்…. அந்த வகையில் ரைட்மந்த்ராவுக்காகத் தான் நன்றி சொல்லவேண்டும்!” என்கிறார்.
நாய்க்குட்டிகளை காப்பாற்றிய அந்த நாள், தன்னால் மறக்க முடியாது என்றும் தான் புதிதாய் பிறந்தது போல உணர்வதாகவும் குறிப்பிட்டார்.
“நான் ஆலயம் சென்று சிவனை வழிபட்டால் கிடைக்கும் மனநிறைவை விட நூறு மடங்கு மனநிறைவு எனக்கு இந்த நாய்க்குட்டிகளை காப்பாற்றியதால் கிடைத்தது… எனக்கு மட்டுமல்ல என் மனைவிக்கும்!!!!!!” என்கிறார் திரு.ரவிச்சந்திரன்.
"
“ஜீவகாருண்யமே சைவத்தின் உயிர்நாடி. ஜீவகாருண்யத்தை புறக்கணித்துவிட்டு சிவனை வணங்குவது என்பது பழத்தை வீசி விட்டு தோலை சாப்பிடுவதற்கு ஒப்பானது. பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கரங்களே புனிதமானவை!” என்றோம்.
கிருஷ்ண ஜெயந்தி பதிவை நாம் அளித்த செப்டம்பர் 5 ஆம் தேதி சிறுவாபுரி பயணத்தில் மும்முரமாக இருந்தோம். இருப்பினும் நிச்சயம் ஏதாவது நல்லதொரு பதிவை அளித்துவிட்டே புறப்படவேண்டும் என்று கருதி ராகா கும்பர் பற்றிய பதிவை அளித்துவிட்டு புறப்பட்டோம். நமது உழைப்பு வீண் போகவில்லை. அந்தப் பதிவு மூலம் சுமார் ஆறு நாய்குட்டிகள் காப்பாற்றப்பட்டன என்பதை அறிந்தபோது நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
நாய்க்குட்டிகளை கால்வாய் என்றும் பாராமல் இறங்கி காப்பாற்றிய திரு.ரவிச்சந்திரனுக்கும் அவரது துணைவியார் திருமதி.கலாவதி ரவிச்சந்திரனுக்கும் நமது நன்றி!
அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் நம்மை தொடர்புகொண்ட திரு.ரவிச்சந்திரன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நடந்தவற்றை விவரித்தார். முடிந்தால் நாய்க்குட்டிகளையும் அந்த கால்வாயையும் புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என்றோம். நாய்க்குட்டிகளை தனது மகள் படமெடுத்திருப்பதாகவும் கால்வாயை தான் எடுத்து அனுப்புவதாகவும் கூறினார்.
நாய்க்குட்டிகளை தன் தந்தை காப்பாற்றியதை கேள்விப்பட்ட திரு.ரவிச்சந்திரன் அவர்களின் மகள் – அவரும் இதே அப்பார்ட்மெண்டில் தான் வேறொரு வீட்டில் வசிக்கிறார் – சம்பவ இடத்திரு வந்து தனது மொபைலில் இந்த புகைப்படங்களை எடுத்தார். “அப்பா… பேஸ்புக்ல யார் யாரோ என்னென்னவோ போடுறாங்க… அதனால யாருக்கு என்ன பிரயோஜனம்? இந்த விஷயாத்தை போடுவோம்பா… இதைப் பார்த்து நாலு பேர் இதே மாதிரி ஒரு சூழ்நிலை வந்தா யோசிக்காம இறங்கி நல்லது செய்வாங்க” என்று கூறி இருக்கிறார். அவருக்கும் நம் நன்றி.
“உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் – இது
வாழும் முறைமையடி பாப்பா!
நம் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களை விட பதிவுகளை படித்துவிட்டு நம் தளம் கூறுகிற கருத்துக்கள் படி நடப்பவர்களே என்றும் நம் உண்மையான வாசகர்கள். அத்தகையவர்களால் தான் நமக்கு பெருமையே. இறைவன் அருளுக்கு அவர்கள் எளிதில் பாத்திரமாகி நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், மன நிம்மதியும், மகிழ்ச்சியும் பெற்று வாழ்வார்கள் என்பதில் எள்ளளவும் நமக்கு ஐயமில்லை.
ரைட்மந்த்ரா கூறுகிறபடி நடப்பது நிச்சயம் சரியான வாழ்க்கை என்பதில் நமக்கு ஐயமேயில்லை. எனவே தான் தளத்தின் லோகோவுக்கு கீழே “The Right way for the right life!” என்றொரு வாக்கியத்தை வைத்திருக்கிறோம்.
* திரு.ரவிச்சந்திரன் அவர்கள் சம்பவத்தை நமக்கு சொல்லச் சொல்ல, சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நமக்கு தோன்ற, நமது வேண்டுகோளின்படி புகைப்படங்களை அனுப்பினார். அவருக்கு நம் நன்றி. இவர்களை போன்றவர்களை ஊக்குவிப்பது நமது கடமை.
==============================================================
* * புத்தக வெளியீட்டு விழா தொடர்பான பணிகளில் நமது முழு கவனமும் இருப்பதால் ஆனைமுகன் பற்றிய சிறப்பு பதிவுகளை அளிக்க முடியவில்லை. இருப்பினும் நாளை அளிக்க முயற்சிக்கிறோம். (கணேசா… எக்ஸ்கியூஸ் மீ ப்ளீஸ்…!)
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
==============================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
==============================================================
Also check :
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி…
சூளைக்குள் சிக்கிய பூனைக்குட்டிகள் – பாண்டுரங்கன் புரிந்த அதிசயம்! கிருஷ்ண ஜெயந்தி SPL
ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!
பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம் பயங்கொள்ளலாகாது பாப்பா!
எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!
ஆயிரக்கணக்கான கிளிகளின் காட்ஃபாதரின் குமுறலை கொஞ்சம் கேளுங்கள்!
ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!
இறைவனின் படைப்பும் மனிதனின் புத்தியும் – மனம் விட்டு பேசலாமா? (1)
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்!
==============================================================
[END]
வணக்கம்……….திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கும் மற்றும் அவரது துணைவியாருக்கும் நமது வணக்கங்கள்……நன்றிகள்………. நமது தளத்தின் பதிவால் ஆறு உயிர்கள் காப்பற்றப் பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது……….. இதற்காக நீங்கள் நிச்சயம் பெருமைப் படலாம்……..
ரைட் மந்த்ரா தளத்தின் வாசகர்கள் என்ற முறையில் நாங்களும் பெருமை கொள்கிறோம்……….. நன்றி….
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்…..
பெருமையுடன் நன்றி சார்
தங்கள்
சோ. ரவிச்சந்திரன்,
கைஹா டவுன்ஷிப்,
கர்நாடகா
9480553409
இவர் எனது மிக சிறந்த நண்பர் என்பதில் பெருமை கொள்ளும் –
வாசுதேவன் NV
நன்றி வாசுதேவன் சார். உண்மையில் படித்தமைக்கு நன்றி.
சார், நடந்ததை நேரிலே பார்த்தமாதிரியே சொல்லிருக்கிருங்க சார் . மனசுக்கு நிறைவா இறுக்கு சார் .
இதை பார்த்தவகள்/படித்தவர்கள் உங்களால் முடிந்த உதவிகளை மத்தவுகளுக்கு பண்ணலாம் . அத்தனை புண்ணியமும் திரு சுந்தர் சார்க்கு தான் சேரணும்.
உங்களாலே இனி வரும் நாட்கள் எல்லாமும் நல்ல நினைவுகளும் நல்லதுக்கு மட்டுமே அமையட்டும் .
என்னுடைய மனைவி ஒவ்வொரு பிரதோஷம் நாளில் நந்திக்கு பால் அபிஷேகமும் சுண்டல், தைரூ சாதம் பிரசாதம் ஏற்பாடு செய்வார் கள். மற்றும் அங்கே உள்ள முருகன் சுவாமிக்கு கார்த்திகை தினம் அர்ச்சனை மற்றும் பிரசாதம் செய்துவிடுவார்கள்.
நம்மால் முடிந்த சிறு சேவை இறைவனுக்கு சார்.
எல்லாமும் இறைவனுக்கே .
நன்றி
சோ. ரவிச்சந்திரன்
கைஹா டவுன்ஷிப்,
கார்வார்.
இந்த பதிவை படிக்கும் பொழுது நெஞ்சம் பதறுகிறது .நாய்க் குட்டிககளை காப்பாற்றிய திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் ,வணக்கங்களும். நம் தளத்தின் புதிய வாசகராக அறிமுகம் ஆகும் பொழுதே எல்லோரும் ஞாபகம் வைத்து கொள்ளும் வாசகராக எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விட்டார். தெய்வம் மனுஷ்ய ரூபானாம் என்று சொல்வது போல் அந்த வாயில்லா ஜீவன்களை தெய்வமே மனித உருவில் வந்து காப்பாற்றியது போல் ஆகி விட்டது.
எல்லாம் அவன் செயல் சார், அந்த நேரத்திலே எனக்கு மனசுக்கு பட்டது ரைட் மந்த்ர சுந்தர்ஜி செயல்கள் தான் . அவரை போல உதவுனும் எல்லார்க்கும் சார் .
நன்றி சுந்தர் சார் க்கு .
தங்கள்
சோ . ரவிச்சந்திரன்
கைஹா , கர்நாடகா
9480553409
எனக்கு இந்த பதிவில் நாய்கள் தொப் தொப் என்று விழுந்தது என்ற வரிகளைப் படிக்கும் பொழுது தங்கள் 2013 அக்டோபர் மாத பதிவான “” பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா ” என்ற பதிவு ஞாபகத்திற்கு வருகிறது. அதில் தாங்கள் பூனைகளை நரிக் குரவர்களிடமிருந்து காப்பாற்ற எப்படி போராடினீர்கள் என்பதையும் கடைசியில் பூனை கோணி பையிலிருந்து விழுந்ததையும் எழுதி இருந்தீர்கள். இப்பொழுதும் அந்த பதிவை படிக்கும் பொழுது என் கண்கள் கலங்கிவிடும்.
தாங்கள் ஸ்ரீ ஜெயந்தி அன்று வெளியிட்ட பதிவால் திரு ரவி அவர்கள் நாய்களை காப்பாற்றி இருப்பது தங்கள் எழுத்துக்கு கிடைத்த மரியாதை.
வாயில்லா ஜீவன்கள் காப்பாற்ற பட்டு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது .
திரு ரவி அவர்கள் எல்லா valamum பெற்று வாழ வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
அந்த நிகழ்ச்சி தான் அதுவும் அந்த அணில்களை அவர் காப்பத்த பட்ட பாடு கண்ணுலே கண்ணீர் கொட்டுதுங்கோ /…
அந்த பயத்தில் தான் உடனே எதாவது சய்யணும் கடவுள் மேல் பாரத்தை போட்டு இறங்கினேன் . இன்று எல்லாம் குட்டிகளும் அவங்க அம்மாவோட சந்தோசமா எங்க வீட்டுக்கு கிழே ஓடி விளையட்ரத்தை பார்க்க பார்க்க சந்தோசமா இறுக்குது சார்.
நன்றி சுந்தர் சார்க்கு தான் .
தங்கள்
சோ. ரவிச்சந்திரன்
கைஹா கர்நாடகா
9480553409
உண்மைதான். திரு. ரவிச்சந்திரனையும் அவரது மனைவியையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இது போல் மனிதாபிமானம் உள்ளவர்களால்தான் இன்னும் நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அதுவும் நம் தளத்தின் பதிவுகளை படித்த பின்தான் இவ்விஷயம் நடந்திருக்கின்றது என்றால் எத்தனையோ பேரை நல் வழிப்படுத்தும்
இந்த சேவை மிகவும் உயர்ந்தது என்றால் மிகையாகாது. அனைத்து உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் மனோபாவம் எல்லோரிடமும் வேண்டும்.
நன்றிகள் பல.
எல்லா புகழும் ரைட் மந்த்ராவுக்கு தான்.
நன்றி
சோ. ரவிச்சந்திரன்
கர்நாடகா
My heartfelt congratulations to Mr. Ravichandran & his wife. What a noble act. I sincerely pray to the almighty to give him good health, joy and happiness throughout his life.
வாழ்துக்கள் சுந்தர் சார்!
ரவிச்சந்திரன் அவர்களுக்கும், அவர் துணைவியாருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ரைட் மந்த்ரா எங்கள் மனதில் நிறைய மாற்றம் தந்திருக்கிறது. எனக்கும் இது போன்று, வேறு ஒரு அனுபவம் சமிபத்தில் நிகழ்ந்தது. அதை இது வரை பகிரவில்லை. இந்த பதிவை படித்தபின் எனது அனுபவத்தையும் உங்களிடம் பகிர விரும்புகிறேன்.
எல்லா பெருமையும் உங்களுக்கே சுந்தர் சார்!
நன்றி… விரைவில் தங்களிடமிருந்து இது குறித்த தகவலை எதிர்பார்க்கிறேன்!
Great work
எனது வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்து கொண்டு அதே நேரம் அவர்கள் எனது தோழியின் பெற்றோர் என்பதை சொல்லி கொள்வதில் பெருமையும் அடைகிறேன்….
நன்றி பாலா /
நம்மால் முடிந்ததை மத்தவுங்களுக்கு செய்வோம் .
தங்கள்
S. RAVICHANDRAN
KAIGA TOWNSHIP, KAIGA
KARWAR, KARNATAKA
9480553409
Dear Fellow Spiritual seekers,
I appreciate the humble deeds of Sri and Sri mathi Ravichandran.
It is very evident from the comments that all are happy to know that these animals are saved from meeting their tragic end.
At the same time why are we not taking steps to stop the cruelty done to meat yielding animals.
My spiritual Guru says,
Meat eating promotes animal qualities.It has been well said that the food one consumes determines one’s thoughts.By eating the flesh of various animals,the qualities of these animals are imbibed.How sinful it is to feed on animals which are sustained by the same 5 elements as human beings!!! Those who seek spirituality,has to give up non-vegetarian food.How can God accept such a person as a devotee?
It is only after giving up meat eating, You are in the guidance of divine hands.
Love and Light to One and All,
Sai Ram
Sai Ram sir i like to share some stories related to your comment.
I am not against your views about non-veg eating habit, but at the same time i like to share something here.The same doubt once arose in my mind. That day i found one story about shri Vivekananda and shri Ramakrishna paramahamsa.
எனக்கு சில சமயம் ஆன்மீக சந்தேகங்கள் எழும் அப்பொழுது ரைட்மந்த்ரா போன்ற வலை தளங்களில் நான் அதற்கான விளக்கங்களை அதிக நேர விரயம் இல்லாமல் உடனுக்குடன் பெற்றிருக்கிறேன். இது கடவுள் எனக்கு அளித்த வரமாக நான் கருதுகிறேன். அதை கிடைக்க செய்த சுந்தர் அண்ணன் போன்றவர்க்கு மனதார வணக்கங்கள். அப்படி படித்த கதை தான் இதுவும், இனி கதைக்கு வருவோம்,
ஒரு நாள் விவேகனந்தருக்கு சந்தேகம் வருகிறது நாம் இறைவன் படைத்த உயிர்களை உண்டு வருவதால் கடவுள் நமக்கு ஆசி வழங்கமாட்டார் அல்லவா (மேற்கு வங்காள பிராமணர்கள் மீன் சாப்பிடுவார்கள் என்று கேள்வி பட்டுள்ளேன் தவறிருந்தால் மண்ணிக்கவும் ) ,நாம் நடக்கும் பொது தூங்கும் பொது கொசு எறும்புகள் இறக்க நேரிடும் அதுவும் நாம் செய்யும் பாவம் அல்லவா என்ற குழப்பத்தில் தன் குருவிடம் இன்று இதற்கு விடை பெற்று விட வேண்டும் என்று ராமகிருஷ்ண பரமஹம்சரை காண செல்கிறார்.
பரமஹம்சர் சாட்சாத் மனித ரூபத்தில் உள்ள இறைவனல்லவா அவர் இன்று நரேந்திரன் ஏன் வந்திருக்கிறான் என்ன கேட்கபோகிறான் என்று முன்பே தெரிந்து வைத்திருந்தார் . அவரிடம் சிஷ்யர்கள் விவேகானந்தர் தங்களை காண வந்துள்ளார் என்று கூறியவுடன் வர சொல்லுங்கள் என்கிறார் .
உள்ளே சென்ற விவேகானந்தர் குருவை வணங்கி நிற்கிறார் இருவரும் புன்னகை புரிகிறார்கள்.எந்த உரையாடலும் இல்லை. விவேகானந்தர் தெளிவான் முகத்துடன் திரும்புகிறார்.
அப்படி என்ன உள்ளே நடந்தது குரு எவ்வாறு அவருக்கு எடுத்துரைத்தார்….மேலும் படியுங்கள்
விவேகானந்தர் உள்ளே சென்ற போது குரு அவரின் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார் அவரின் அருகே குளிருக்காக நெருப்பு மூட்ட பட்டுள்ளது அருகில் உணவு பொருட்கள் உள்ளன,குரு பரமஹம்சர் விவேகானந்தரை பார்த்து புன்னகைத்தவாறே எதையோ உணவில் இருந்து எடுத்து நெருப்பில் இடுகிறார். அப்படி எதை குரு நெருப்பில் இடுகிறார் என்று புரியாமல், விவேகானந்தர் அது என்ன என்று கூர்ந்து கவனிக்கிறார் அப்பொழுது அவர் கேள்விக்கான விடை அங்கு கிடைகிறது …
ஆம் குரு பரமஹம்சர் உணவின் அருகில் அதை உண்ண வந்த எறும்புகளை பிடித்து நெருப்பில் இடுகிறார்.
அதை பார்த்த கணமே விவேகானந்தர் கலங்கிய மனம் தெளிவடைகிறது எதையும் பேசாமல் குருவிடம் உத்தரவு பெற்று அமைதியாக வெளியேறுகிறார்.
இரண்டாவது கதை …. கண்ணப்ப நாயனார் கதை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர் வேடர் மரபில் வந்தவர். வேடர்கள் வேட்டையாடி உண்பார்கள் இதில் இறைவனின் திருவிளையாடல் என்ன என்றால் கண்ணப்ப நாயனார் இறைவனுக்கு மாமிசத்தை உணவாக படித்தார் என்பது தான்.
இறைவன் தன் பக்தர்கள் இப்படி தான் வாழ வேண்டும் என்று எந்த கட்டளையும் நமக்கு இட வில்லை ஆனால் நாம் அவரவர் மனதில் தர்மம் என்று எது படுகிறதோ அதையே செய்ய வேண்டும் அல்லது முயற்சியாவது எடுக்க வேண்டும்.
இவ்வுலகில் பிறந்த மனிதனுக்கு நான்கு வகையான குணங்கள் இருக்கும் என்று வேதங்கள் கூறுவதை நாம் புறம் தள்ளிவிட முடியாதல்லவா. வேதத்தை படைத்தவன் இறைவன்னல்லவா. ஒவ்வரு வரும் வளரும் விதத்தை பொருத்து ஒவ்வொரு குணம் மேலோங்கி இருக்கும்.
யாரையும் வற்புறுத்தி இதை செய் அதை செய்யாதே என்று நாம் கூற முடியாது அதை இறைவனும் விரும்புவதில்லை என்பது என் தாழ்மையான கருத்து தவறிருந்தால் மண்ணிக்கவும் . நன்றி …
நல்ல விளக்கம். நன்றி.
* ஒருவருக்கு பொருந்தும் தர்மம் வேறு ஒருவருக்கு பொருந்தாது. எனவே அவன் செய்கிறானே நான் செய்தால் என்ன தப்பு என்று கேட்பது அறிவீனம். இது குறித்து விளக்கமாக பதிவிடுகிறேன்.
நன்றி அண்ணா, பெரியவர்கள் பலர் வந்து போகும் தளம் நாம் எதாவது கூற போய் தவறாக ஆகி விடுமோ என்ற கலக்கத்துடன் எழுதினேன். தங்கள் பதிவை படிக்க காத்திருக்கிறேன்.
என் மனமார்ந்த நன்றி திரு சாய் ராம் அவர்களுக்கும் நண்பர் திரு நாதன் அவர்களுக்கும் .
நல்ல விளக்கம் . இன்னும் நம்ம சுந்தர் சார் கொடுக்க இருக்கிற விளக்கம் மிக மிக அருமையாக இருக்கும் .
அபாரமான விளக்கம் தேடி தந்தமைக்கு மீண்டும் நன்றி சார்.
இது அத்தனைக்கும் ரைட் மந்த்ர சுந்தர் சார்க்கு தேங்க்ஸ் .
தங்கள்
S. RAVICHANDRAN,
KAIGA , KARWAR, KARNATAKA
9480553409
THANKS FOR YOUR COMMENTS AND VIEWS SHRI SAI RAM SIR.
REGARDS.
S. RAVICHANDRAN
KAIGA, KARNATAKA.
Rightmantra ஜெயித்து விட்டது .
நல்ல ஆரோக்கியமான விவாதம்
நன்றி நாதன் அவர்களுக்கு
வணக்கம் Antony sir,
மண்ணிக்கவும் விவாதம் பண்ணுவதற்காக அதை எழுதவில்லை அந்த கதைகள் சொல்லும் தர்மம் பிறருக்கு தெரிய வேண்டும் என்ற ஆவலால் அதை எழுதினேன்.
மேலும் பல மதங்களில் உள்ள சடங்குகள் வெவ்வேறாய் இருக்க இறைவன் நேரடி தொண்டர்கள் எனப்படும் சித்தர்கள்(தூதர்கள்) எல்லா மதத்திலும் பிறந்து அங்குள்ள நெறிகளை கடைபிடித்து இறைவினிடம் சேர்வதை வைத்து பார்க்கும் போது இக்கதைகள் சரி என தோன்றியதால் எழுதினேன்.
சுந்தர் அண்ணா அதை பத்தி விரிவாக எழுதுவதாக அறிவித்துள்ளார். நல்ல ஒரு பதிவு மற்றும் தெளிவான விளக்கம் கிடைப்பது உறுதி.
வணக்கம்.
இயல்பிலேயே எளிமையாக எல்லோருடனும் பழகுவதும், உதவுவதுமான குணம் கொண்டவர் அண்ணன் ரவிச்சந்திரன் அவர்கள். எங்கள் குடியிருப்பு வளாகத்தில் அவரால் உயிர்கள் காப்பாற்றப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி. ரவிச்சந்திரன் அவர்களுக்கும், அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் இந்த இணையதள நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்.
ஆர். பார்த்தசாரதி
கைகா.
மிக்க நன்றி/ திரு பார்த்தசாரதி அவர்களுக்கு.
இந்த இணைய தளத்தை பார்த்த பிறகு தான் என்னுள் நிறைய மாற்றங்கள் உண்டாகி உள்ளது.
அதற்கும் தங்களின் பகிர்வுக்கும் மீண்டும் நன்றி சார்
இது அனைத்துமே ரைட் மந்த்ரா திரு சுந்தர் சார்க்குத்தான் .
தங்கள்
சோ. ரவிச்சந்திரன்
கைகா
Well done Thiru Ravichandran…The world is surviving only because of act of Kindness ..May God Bless you…CR