மரவேலைகள் செய்துகொண்டிருந்த ஒருவரிடம் சென்று, “ஐயா, தாங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“பார்த்தால் தெரியவில்லை மரங்களை இழைத்துக்கொண்டிருக்கிறேன்” என்று ஆர்வமற்ற ஒரு பதில் வந்தது.
அடுத்து சிற்பம் ஒன்றை வடித்துக் கொண்டிருந்த சிற்பியிடம் சென்று, “ஐயா, என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “பார்த்தால் தெரியவில்லையா? கல் உடைத்துக் கொண்டிருக்கிறேன்!” என்று சலிப்புடன் பதில் சொன்னார் அந்தச் சிற்பி.
அடுத்து, மதில் சுவருக்காக கல்லை கஷ்டப்பட்டு பிளந்து கொண்டிருந்த ஒருவரிடம் சென்று, “ஐயா, என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டபோது, அவர் தலையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, “நான் சிவாலயம் ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்!” என்றார்.
மூன்று பேர் செய்வதும் ஒரே பணி தான். சொல்லப்போனால் கடைசியாக கல் உடைத்துக்கொண்டிருந்தவர்களை விட, மற்றவர்கள் அதிக ஊதியம் பெறுகிறவர்கள். ஆனால், தாங்கள் மகத்தானதொரு பணியை செய்வதாக அவர்கள் கருதவில்லை. ஆனால் மூன்றாமவர் கல் உடைத்தாலும் தான் சிவாலயத்தின் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம் என்கிற உணர்வு அவர் மனதை ஆட்கொண்டிருந்தமையால் அவரால் அப்படி ஒரு அழகிய பதிலை சொல்ல முடிந்தது.
தொழிலுக்கான கூலியை பெறுவதோடு சிவாலயம் கட்டிய புண்ணியமும் அவருக்கு கிடைக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?
செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், தன்னைப்பற்றியும், அத்தொழிலைப்பற்றியும் ஒருவர் கொண்டிருக்கும் கண்ணோட்டம் உயர்வானதாக, பரந்ததாக இருந்தால், செய்யும் தொழில் உயர்வடையும். அவர்களும் உயர்வடைவார்கள்.
நாம் மிக சாதாரணமாக கருதும் தொழில்களைச் செய்பவர்கள் கூட பல நேரங்களில், அத்தொழிலைச் செய்யும்போது அதில் காட்டும் ஈடுபாடு நம்மைப் பிரமிக்கவைக்கும்.
நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் அது எந்தப் பணியாக இருந்தாலும் சரி நம்மை பற்றிய கருத்தை இந்த உலகத்திற்கு பறைசாற்றும் ஒரு அற்புதமான கருவியாகும்.
தரை துடைப்பது முதல் கழிவறையை சுத்தம் செய்வது வரை எந்த பணி செய்தாலும் அதை ஒரு ஈடுப்பாட்டோடு அற்பணிப்பு உணர்வோடு செய்து வரவேண்டும்.
இத்தாலியை சேர்ந்த பிரபல சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ. இவர் ஒரு முறை ஒரு சிற்பத்தை மிக கவனமாக செதுக்கிக்கொண்டிருந்தார். MINUTE DETAIL எனப்படும் ஒவ்வொரு சிறு சிறு விஷயத்திற்கும் மிக அதிக சிரத்தை எடுத்துக்கொண்டார்.
அதை கவனித்து வந்த அவர் நண்பர் ஒருவர், “இதற்கு ஏன் இவ்வளவு நேரத்தை செலவழிக்கிறீர்கள்? நீங்கள் செய்த மாற்றங்கள் யாருக்கும் புலப்படப்போவதில்லையே…” என்றார்.
அதற்கு பதலளித்த மைக்கேல் ஏஞ்சலோ, “சிறு சிறு மாற்றங்களும் முயற்சிகளும் ஒரு பொருளின் நேர்த்திக்கு வழிவகுக்கும். அதே சமயம், நேர்த்திக்கு அது ஒன்று மட்டுமே போதுமானது அல்ல!” என்றார். “Trifles make perfection and perfection is no trifle.”
ஒரு பணியை நீங்கள் எவ்வளவு சீக்கிரம் செய்தீர்கள் என்பதை உலகம் மறந்துவிடும். ஆனால் நீங்கள் எவ்வளவு நேர்த்தியாக செய்தீர்கள் என்பது காலம் கடந்து நிற்கும்.
ஏனோ தானோவென்று தங்கள் கடமையை செய்பவர்களால் வாழ்வில் வெற்றி பெறவே முடியாது. எனவே எந்த பணியை செய்தாலும் அதை அற்பணிப்பு உணர்வுடனும், நேர்த்தியுடனும் செய்வோம்.
கடமையை செய்தால் வெற்றி…. கடமைக்கு செய்தால் தோல்வி……!
==============================================================
நம் தளத்தின் வெற்றிக்கு என்னென்ன காரணங்கள் என்று நமக்கு தெரியாது. ஆனால் நாம் கருதுவது நாம் ஒவ்வொரு பதிவையும் அளிக்க எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் பதிவை மெருகூட்ட (நேர்த்தி) எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் என்றே. ஜஸ்ட் லைக் தட் ஒரு பதிவை நம்மால் அளிக்கவே முடியாது.
ஒவ்வொரு பதிவையும் அளிக்கும்போது, இதைவிட சிறப்பாக இதை யாராலும் அளிக்க முடியாது என்று சொல்லும்படி அந்தப் பதிவை அளிக்க வேண்டும் என்றே கருதுவோம்.
ஒவ்வொரு பதிவையும் ஒரு சிற்பி ஒரு சிலையை வடிப்பது போலத் தான் கண்ணுங் கருத்துமாக வடிப்போம். காரணம் நாம் வடிப்பது பதிவையல்ல. எம் எதிர்காலத்தை. அதை படிப்பவர்களின் எதிர்காலத்தை. ஒரு பதிவை படிப்பதன் மூலம் எத்தனை பேர் உள்ளத்தை நம்மால் மாற்ற முடிகிறது என்பதில் தான் கவனம் செலுத்தி வருகிறோம்.
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
இது இன்று நேற்றல்ல, இந்த தளம் துவங்கிய காலம் அப்படித்தான் என்றே கருதுகிறோம். எனவே தான் நம்மால் இன்று வரை வணிக ரீதியாக செயல்படாவிட்படாலும் வாசகர்களின் ஆதரவோடு நிற்க முடிகிறது.
இந்த நிமிடம் வரை இந்த தளத்தை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று நம்பர் ஆராய்ச்சியில் (hit count) நாம் ஈடுபட்டதில்லை. அதில் நமக்கு ஆர்வமும் இல்லை. ஒரு தளத்தை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதைவிட எப்படிப்பட்டவர்கள் பார்க்கிறார்கள் என்பது தான் முக்கியம். நம் தளத்தை பொறுத்தவரை இங்கு வருபவர்கள் அனைவரும் தேடல் உள்ள தேனீக்கள் என்பதில் நமக்கு எள்ளளவும் ஐயமில்லை!
==============================================================
நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 13
நல்ல வேலையாட்கள் அமைய!
இப்பொதெல்லாம தொழில் தொடங்குவது சுலபம். ஆனால் நல்ல வேலையாட்கள் கிடைப்பது தான் சிரமம். சிலருக்கு செய்தொழிலில் நல்ல வேலையாட்கள் கிடைக்க மாட்டார்கள். அப்படியே கிடைத்தாலும் நிரந்தரமாக அவர்கள் பணியில் நிற்கமாட்டார்கள். இதனால் வியாபாரம் தடைபடும். வர்த்தகம் பாதிக்கும். முன்னேற்றம் கெடும். இப்படிப்பட்டவர்கள், நல்ல வேலையாட்கள் அமையவேண்டி தொடர்ந்து ஒன்பது வளர்பிறை திருதியையில் விநாயகரை தரிசித்து, அர்ச்சனை செய்து, நெய்விளக்கேற்றி வர, நல்ல வேலையாட்கள் அமைவார்கள்.
இதை சம்பந்தப்பட்ட தொழில் நடத்துபவர் தான் செய்யவேண்டும் என்பதில்லை அவர் சார்பாக அவர் பெற்றோர் அல்லது துணைவியார் என யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
==============================================================
Also check for more motivational stories :
வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?
எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?
What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?
இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!
பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?
ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?
விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?
நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?
‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?
சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?
இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?
நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!
அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?
நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!
மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?
================================================================
[END]
எந்த வேலையை செய்தாலும் நம் தனித்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்பதை அழகாக பதிய வைத்து இருக்கிறீர்கள். நானும் ஒரு மாதமாக மூன்று பேர் வேலையை பார்த்துக்கொண்டு மிகவும் சலிப்படைந்தேன். இது எனக்கு என்னுடைய திறமைக்கு ஓர் சவால் என நினைக்காமல் இருந்தேன்.இந்த பதிவு எனக்கு ஒரு சாட்டை அடி போல் உள்ளது, நாம் மேலும் மேலும் முன்னேற வேண்டுமானால் நாம் சவால்களை மேற்கொள்ள வேண்டும்.
தாங்கள் இவ்வளவு தூரம் பல வாசகர்களைப் பெற்று இருப்பதற்கு தங்களின் நேர்த்தியே காரணம்,
நான் என்னை மாற்றிக்கொள்வதற்கு இந்த பதிவு ஒரு சிறந்த உதாரணம்
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
Excellent article sir. What ever we do, we have to do with full involvement and perfection.
Regards
Harish
வணக்கம்….அருமையான பதிவு…… உள்ளார்ந்த அர்ப்பணிப்போடு செய்தால் எந்த செயலும் வெற்றி பெறும் என்று உணர்ந்து கொண்டோம்………. நன்றிகள் பல…………
Nice Article Sundar G
Thanks for sharing
Nagaraj T.
சுந்தர் சார்,
மிக அருமையான பதிவு. இந்த பதிவு உண்மையின் வெளிப்பாடாக உள்ளது. அதுவே நல் வாழ்விற்கு வெற்றியின் ரகசியத்தையும் சொல்லி இருக்கிறது.
நன்றி.