திருமண வரம் வேண்டி காத்திருந்த பலர் இந்த திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று சுப்ரமணிய சுவாமியின் அருளுக்கு பாத்திரமாகியுள்ளனர்.
திருகல்யாணம் தொடர்பான விரிவான பதிவு மற்றும் புகைப்படங்கள் விரைவில் நம் தளத்தில் வெளியாகும்.
இதனிடையே, கோவிலில் நமக்கு கிடைத்த ஒரு அனுபவம் பற்றி பதிவிட விரும்புகிறோம்.
நாங்கள் கோவிலில் இருந்த இரண்டு நாட்களும் கவனித்தோம் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு ஒன் மேன் ஆர்மி போல் துப்புரவு பணி செய்துகொண்டிருந்தார். ஏற்கனவே இரண்டு வாரத்திற்கு முன்பு அபிஷேகத்திற்கு வந்த அன்றும் இவரை பார்த்தது நினைவுக்கு வந்தது.
கோவில் தரையை பெருக்குவது, மாப் போட்டு துடைப்பது, குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ள பெரிய டிரம்களை அவ்வப்போது வெளியே கொண்டு சென்று கொட்டி சுத்தம் செய்வது, ஏற்றி முடித்த விளக்குகளை அப்புறப்படுத்துவது என பிரமாதமாக இருந்தது அவரது செயல்பாடு. முறுக்கேறிய தோள்களை பார்க்கும்போதே புரியும் அவரது உழைப்பு இங்கு எப்படிப்பட்டது என்று.
அவரைப் பற்றி விசாரித்தபோது தான் தெரிந்தது அவருக்கு காது கேட்காது, வாய் பேச வராது என்பது. பெயர் பரமசிவமாம். கடந்த ஏழு ஆண்டுகளாக சிறுவாபுரி கோவிலில் துப்புரவு பணி செய்து வருகிறாராம். ஓய்வறியா உழைப்பாளி என்றும் சொன்னார்கள்.
அவருக்கு காது கேட்காது வாய் பேசமுடியாது என்று தெரிந்தபோது உருகிக் போனோம். அவரைப் பார்த்தாலே நீங்கள் உணர்வீர்கள் அவர் ஒரு கர்மயோகி, பணத்துக்காக பணி செய்பவர் அல்ல என்பதை!!
(Also check : இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்”)
நேரே போய் அவரை அணைத்துக்கொண்டோம். “உங்களைப் போன்றவர்கள் ஒரு சிலர் இருப்பதால் தான் பல கோவில்கள் ஓரளவாவது தூய்மையாக இருக்கின்றன! உங்கள் தொண்டுக்கு தலைவணங்குகிறேன்… மிக்க நன்றி!” என்றோம்.
"
அவருக்கு காது கேட்கவில்லை என்றாலும் உள்ளத்தின் உணர்வுகளை புரிந்துகொள்ள ஊனம் ஒரு தடையாக இருக்குமா என்ன?
மறுநாள் ஞாயிறன்று திருமண உற்சவம் கோலாகலமாக துவங்கியது.
ஆலயம் பொதுமக்கள் கூட்டத்தாலும் திருமண உற்சவத்தில் பங்கேற்க வந்தவர்களாலும் திணறியது. ஒரு பக்கம் திருமணத்திற்கு வந்த கூட்டம். மறுப்பக்கம் ஞாயிறு வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் இதர பக்தர்கள் கூட்டம் என கோவில் திமிலோகப்பட்டது.
பக்தர்கள் கூட்டம் சேர சேர பிராசதம் சாப்பிட்ட தொன்னைகள், தட்டுக்கள் மற்றும் பூக்கள், வாடிய மாலைகள் என இதர குப்பைகள் சேருவதும் அதிகரித்துக்கொண்டே போனது.
பரமசிவம் தான் பாட்டுக்கு ஒரு பக்கம் களமிறங்கி தன் வேலையை செய்துகொண்டிருந்தார். குப்பைகளை அகற்றுவதும் உடனே அவற்றை வெளியே கொண்டு சென்று கொட்டுவதும், தரையை பெருக்குவது, துடைப்பது என மனிதர் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார்.
இரண்டு நாட்களும் நாம் நமது வேலையை பார்த்துக்கொண்டே அவரை கவனித்து வந்தோம். ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது : அவர் மட்டும் ஒரு அரைமணிநேரம் இங்கே இல்லை என்றால் கூட கோவில் நிச்சயம் குப்பை மேடாக மாறிவிடும் என்று.
திருமணம் நடைபெற்ற சமயமும், சுவாமி பிரகாரத்தை சுற்றி வந்த சமயமும் எள்ளு போட்டால் எள்ளு எடுக்க கூட இடமில்லை. ஆனாலும் அந்த நிலையிலும் பரமசிவம் தனது பணியிலிருந்து பின் வாங்கவில்லை. அவர் பாட்டுக்கு அந்த கூட்டத்துக்கும் ஈடு கொடுத்தபடி தனது வெற்றுடம்புடன் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு தனது பணியை செய்துகொண்டிருந்தார். நிஷ்காமிய கர்மயோகி என்பதற்கு சரியான உதாரணம் இவர் தான்.
நாம் புறப்படுவதற்குள் இவரை நமது குழுவினர் முன்னிலையில் உரிய முறையில் கௌரவிக்கவேண்டும் என்று முடிவு செய்தோம்.
"அவரை தோள் மீது கைபோட்டு அழைத்துக்கொண்டு போய், நெய்விளக்கு பிரிவில் (திருமண பிரார்த்தனையாளர்கள் விளக்கு ஏற்றும் இடம்) பிஸியாக இருந்த நமது மகளிர் குழுவினரிடம், “இவர் என் நண்பர். பெயர் பரமசிவம். இந்த கோவிலில் துப்புரவு பணி செய்துகொண்டிருக்கிறார்” என்று ஒரு நீண்ட நாள் நண்பரை அறிமுகப்படுத்துவது போல அறிமுகப்படுத்தினோம். (முருகனுக்கு தொண்டு செய்பவர்களுக்கு நாம் தோழன் என்று சொல்வதைவிட ஒரு தொண்டன் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்!)
நம் வாசகியர் அவருக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்கள். அவரும் பதிலுக்கு வணக்கம் சொன்னது உண்மையில் ஒரு கவிதை.
திருக்கல்யாண உற்சவம் முடிந்து கோவில் சற்று ஃப்ரீயானவுடன் நாம் இவருக்கு நிச்சயம் மரியாதை செய்யவேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துக்கொண்டோம்.
சுமார் 1.00 மணியளவில் திருக்கல்யாணம் முடிந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. பரமசிவம் எங்கே என்று தேடினோம். அவர் ஒரு ஓரத்தில் தனது வேலையை செய்துகொண்டிருந்தார். நமக்கு அப்போது ஒரு யோசனை உதித்தது.
பேசாமல் சுவாமி புறப்பாடு வரும்போது சுவாமி முன்னால் வைத்து இவரை கௌரவித்தால் என்ன என்று… சுற்றுமுற்றும் பார்த்தோம்… நமது வாசகியர் கோவிலின் அந்தப் பக்கம் இருந்தார்கள் போல. அனைவரையும் அசெம்பிள் செய்வதற்கு நேரமில்லை.
உடனே மண்டபத்திற்கு போய் நமது பையில் வைத்திருந்த சால்வை மற்றும் கேமிராவை எடுத்துக்கொண்டு மீண்டும் கோவிலுக்கு ஓட்டமும் நடையுமாக விரைந்தோம்.
சுவாமி நான்காவது சுற்றோ ஐந்தாவது சுற்றோ வந்துகொண்டிருந்தார். அவருடன் திருமண பிரார்த்தனையாளர்களும் நம்பிக்கை என்னும் மாலையை சூடிக்கொண்டு தங்களும் சுற்றி வந்துகொண்டிருந்தனர். பார்க்கவே கண்கொள்ளா காட்சி அது!
நம்முடன் வந்த நமது குழுவினரில் நண்பர் ராகேஷின் சகோதரர் தம்பி மனோவிடம் கேமராவை கொடுத்து, “சரியாக சுவாமி கொடிமரம் அருகே வரும்போது சுவாமிக்கு முன்னால் பரமசிவம் அவர்களை நிற்க வைத்து நான் கௌரவிப்பேன். அப்போது புகைப்படம் எடுக்கவேண்டும்” என்று இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தோம். மனோவும் தயாராக இருந்தார்.
பரமசிவம் அவர்களிடம் சென்று “கொஞ்சம் என் கூட வரமுடியுமா?’ என்று கேட்டோம். உடனே மறுபேச்சின்றி நம்முடன் வந்தார்.
சரியாக சுவாமி எங்களுக்கு முன்பாக வரும்போது, அவரை முன்னால் நிற்கவைத்து அவருக்கு பொன்னாடை அணிவித்து, கையில் ஒரு நல்ல தொகையை கொடுத்து, அவரை கட்டியணைத்து பாராட்டுக்கள் தெரிவித்தோம்.
நடப்பது என்ன என்று புரிய அனைவருக்கும் ஒரு சில வினாடிகள் ஆனது.
விஷயத்தை புரிந்துகொண்ட பின்னர் அனைவரும் நமது செயலை ஆமோதித்தார்கள். பாராட்டினார்கள்.
“நிச்சயம் இவருக்கு செய்யணும் சார்… கௌரவிக்கப்படவேண்டிய ஒருத்தர்!” என்றார் அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டுக் குழுவின் உறுப்பினர் ஒருவர்.
கோவிலை சுத்தமாக வைத்திருப்பதில் இவர் எந்தளவு முக்கிய பணியாற்றுகிறார் என்று அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டுக் குழுவினருக்கும் சரி, இதர கோவில் ஊழியர்களுக்கும் சரி, அங்கு இருந்தவர்களுக்கும் சரி… நன்கு தெரியும். எனவே நாம் பரமசிவம் அவர்களை கௌரவிக்க சில வினாடிகள் அவகாசம் அளித்து, வேகமாக வந்த சுவாமி ஊர்வலம் சிறிது நின்றது.
மிக மிக வேகமாக இரண்டு மூன்று புகைப்படங்கள் எடுத்தவுடன் சுவாமிக்கு வழிவிட்டோம்.
இதை செய்தது, முருகனுக்கு முன்பாக இவரை கௌரவிக்கவேண்டும் அந்த காட்சியை நீங்கள் பரவசத்துடன் கண்டு பரவசப்படவேண்டும் என்பதற்காகத் தான்.
இதன் பிறகு அனைத்தும் முடிந்து மதியம் 3.00 மணியளவில் வீட்டுக்கு புறப்பட்டோம்.
மறுநாள் காலை புகைப்படத்தை கேமிராவிலிருந்து தரவிறக்கம் செய்ய கேமிராவை ஓப்பன் செய்தால் அங்கே நமக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கேமிராவில் மெமரி கார்ட் இல்லை.
நமக்கு தலைசுற்றியது. என்ன ஆச்சு… எங்கே போயிற்று? எங்கேயாச்சும் விழுந்துவிட்டதா?
அப்புறம் தான் நினைவுக்கு வந்தது கேமிராவில் நாம் மெமரி கார்டை போட மறந்தது. முந்தைய நாள் இரவு சுவாமிக்கு மாப்பிள்ளை அழைப்பு முடிந்ததும் நாம் தங்கிய திருமண மண்டபத்தில் கேமிராவை சார்ஜ் போடும்போது மெமரி கார்டை கழற்றியது நினைவுக்கு வந்தது. அடுத்த நாள் காலை மனோவிடம் கேமிராவை கொடுத்தபோது மெமரி கார்டை மீண்டும் உள்ளே சொருக மறந்துவிட்டதும் நினைவுக்கு வந்தது.
படம் எடுக்கும்போது நிச்சயம் ‘மெமரி கார்ட் இல்லை’ என்கிற அலர்ட் வந்திருக்கும். ஆனால் அப்போதிருந்த பரபரப்பான சூழ்நிலையில் மனோ கவனிக்க தவறிவிட்டார் என்பதை அவருடன் பேசியபோது புரிந்தது.
அரும்பாடுபட்டு நாம் செய்த ஒரு நிகழ்வு கேமிராவில் பதிவாகவில்லை. நாம் எந்தளவு வேதனைப் பட்டிருப்போம் என்று வார்த்தையில் சொல்லவும் வேண்டுமா என்ன?
பரமசிவம் அவர்களை மறுபடியும் ஆலயத்திற்கு சென்று கௌரவிப்பது ஒன்றும் நமக்கு பெரிய விஷயம் இல்லை. நூல் வெளியீடு, மற்றும் இறுதி கட்ட பணிகளில் பிஸியாக இருப்பதால் நம்மால் உடனே சிறுவாபுரி செல்ல முடியாது. மேலும், பரமசிவம் அவர்களை நாம் கௌரவித்த சூழல் ஒரு அருமையான சூழல். சுவாமி சுற்று வரும்போது சுவாமிக்கு முன்பாக வைத்து அல்லவா கௌரவித்தோம்… மறுபடியும் அப்படி ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும் என்றால் அடுத்த வருடம் வரையல்லவா காத்திருக்கவேண்டும்?
சாண்டோ சின்னப்பா தேவரின் பாஷையில் “டேய்… முட்டாப் பயலே முருகா … கோவணாண்டி உன் வேலையை காட்டிட்டியேடா….” என்று முருகனை வையவேண்டும் போல இருந்தது.
இருப்பினும் முருகனையே வாட்ச்மேனாக பெற்ற அவர் எங்கே…. அவன் ஆலயத்தில் ஓரத்தில் முளைத்திருக்கும் புல் நாம் எங்கே என்று மனசாட்சி சாட்டையை சுழற்ற மெளனமாக இருந்தோம்.
“சரி… நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்!” என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டோம்.
இதற்கிடையே, வெளியீட்டு விழாவின் அழைப்பிதழும் நூல்களின் முதல் DUMMY PRINTSம் தயாரானது. அழைப்பிதழை சுவாமி பாதத்தில் வைக்காமல் நாம் வெளியிடுவதில்லை என்பது உங்களுக்கு தெரியும்.
பேரம்பாக்கம் நரசிம்மரை நாம் எந்தளவு வணங்கி வருகிறோமோ அதே அளவு குன்றத்தூர் முருகனையும் வணங்கி வருவது நீங்கள் அறிந்ததே.
முருகன் மீது நாம் வைத்துள்ள பிரேமையை அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. இது பக்தி கூட கிடையாது. அதற்கும் மேல்.
எனவே அழைப்பிதழை நரசிங்கபுரம் நரசிம்மரிடமும் குன்றத்தூர் முருகனிடமும் வைத்துவிட்டு பின்னர் தளத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்தோம்.
இதற்கிடையே, பரமசிவம் அவர்களை நாம் கௌரவித்த அந்த நினைவுகளை படம்பிடிக்க இயலாமல் போன ஆற்றாமை மனதை அரித்துக்கொண்டே இருந்தது.
சரி…. என்ன இப்போது…. பேசாமல் குன்றத்தூருக்கு பதில் சிறுவாபுரி சென்று அங்கு வள்ளி மணாளனின் பாதத்தில் அழைப்பிதழை வைத்துவிட்டு அப்படியே பரமசிவம் அவர்களை பார்த்துவிட்டு வரலாமே என்று தோன்றியது.
ஆனால் இந்த முறை அவரை மிக மிக சிறப்பாக கவனிக்கவேண்டும் என்று கருதி, புதிய பொன்னாடை, வேட்டி, ஷர்ட் பிட், துண்டு இவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டோம் கிளம்பினோம்.
முந்தைய பதிவில் சொன்னது போல முகலிவாக்கம் வெங்கட் அவர்களிடம் திங்கட்கிழமை ஃபோன் செய்து “சிறுவாபுரி + பேரம்பாக்கம் இரண்டு கோவில்களுக்கும் செல்லவேண்டும்… கார் எடுத்து வரமுடியுமா?” என்று கேட்டோம்.
மிக்க மகிழ்ச்சியுடன் வருவதாக சொன்னார்.
புதன்கிழமை (நேற்று) காலை 6.30 க்கெல்லாம் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு நமது வீட்டிற்கு நம்மை பிக்கப் செய்ய வந்துவிட்டார்.
சிறுவாபுரியை அடைந்தவுடன் மாலை, மற்றும் அர்ச்சனை பொருட்களை வாங்கிக்கொண்டோம்.
தினமலர் மணிவண்ணன் அவர்களிடம் ஏற்கனவே பேசி வைத்துவிட்டபடியால் அவர் அர்ச்சகரிடம் நமது வருகை குறித்து பேசி வைத்துவிட்டார். எனவே அந்த டென்ஷன் நமக்கு இல்லை.
உள்ளே தரிசனத்திற்காக சென்றபோது, முதலில் கண்களில் பட்டது பரமசிவம் அவர்கள் தான். நம்பினால் நம்புங்கள் நேரம் அப்போது எப்படியும் 8.00 am இருக்கும்.அந்த காலை நேரத்திலும் மனிதர் சூறாவளியாய் சுழன்றுகொண்டிருந்தார். பார்க்கவே அத்தனை சந்தோஷமாக இருந்தது.
அவர் முன்பு சென்று நின்றோம். நம்மைப் பார்த்தவர் பரவசமானார்.
“அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்” என்னும் நிலை தான்.
“இங்கேயே இருங்க. எங்கேயும் போய்டாதீங்க. தரிசனம் முடிச்சிட்டு வந்துடுறேன்!” என்று சைகையில் சொன்னோம்.
“சரி” என்று தலையை ஆட்டிவிட்டு தன் வேலையை பார்க்க போய்விட்டார்.
உள்ளே சன்னதி சென்று முருகனை தரிசித்தோம். அப்படி ஒரு அலங்காரம். அந்த அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. கூட்டமும் அதிகமில்லை. மிதமாகவே இருந்தது.
அர்ச்சகர் நன்கு தரிசனம் செய்துவைத்தார். பத்திரிக்கையின் முதல் பிரதியையும் நூல்களின் அசல் மாதிரியையும் தாம்பாளத்தில் வைத்துக்கொடுத்து, “எனது கன்னி முயற்சி. முருகன் அருளால் மேலும் மேலும் சிறந்து விளங்கவேண்டும். வளரவேண்டும்” என்று கூறினோம். சங்கல்பத்திற்கு நமது பெயரையும், நமது வாசக குடும்பத்தினர் ஒரு சிலரின் பெயரையும் குறிப்பிட்டோம். வெங்கட் மற்றும் குடும்பத்தினர் சங்கல்பம் செய்துகொண்டார்கள்.
வெங்கட் அவர்கள் திருப்போரூரில் தனது நிலம் ஒன்றை விற்க முடிவு செய்திருக்கிறார். வீடு, நிலம் தொடர்பான அனைத்தையும் நல்லபடியாக முடித்து தருபவர் சிறுவாபுரி பாலசுப்ரமணியர் என்பதால் அந்த நிலம் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட்டுகளையும், கொடுத்து சுவாமி பாதத்தில் வைக்கச் சொன்னார்.
சிறுவாபுரி முருகன் பார்த்தாலே வீடுபேற்றை வழங்குபவன். மேலும் இவனுக்கு துதிப்பவன் துதிக்காதவன் என்கிற பேதமெல்லாம் கிடையவே கிடையாது. கருணாமூர்த்தி என்கிற சொல்லுக்கு உதாரணமாய் திகழ்பவன்.
"நாங்கள் கொடுத்த எங்கள் டாக்குமெண்ட்டுகள் முருகனின் திருப்பாதத்தில் வைக்கப்பட்டது.
நமது நூல்களில் ஒன்றான ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்!’ நூல் சரியாக முருகனின் பாதத்தில் நிமிர்த்தி வைக்கப்பட்டது. மற்றொரு நூல், வேலின் கீழே வைக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் பாதத்தின் கீழ் நிமிர்த்தி வைக்கப்பட்ட புத்தகம் திடீரென சரிந்து, சரியாக முழுமையாக முருகன் திருப்பாதத்தில் சரணடைந்தது.
“சுந்தர்ஜி…. ரொம்ப நல்ல சகுணம்! உங்க புத்தகம் சேல்ஸ்ல ரெக்கார்ட் பண்ணப்போகுது பாருங்க!” என்றார் வெங்கட்.
சன்னதியில் வைத்து வெங்கட் இந்த வார்த்தைகளை சொன்னதால் நாம் பரவசமானோம்.
அண்டசராசரத்தில் தஞ்சமடைய முருகனின் திருப்பாதத்தைவிட சிறந்த இடம் ஒன்று இருக்க முடியுமா என்ன? முருகனின் காலடியில் நம் எதிர்காலமும் கனவும். கண்களில் உணர்ச்சி மேலிட்டு நீர் பெருகி வந்தது.
“துதிக்காதவர்க்கும் அருளும் தண்டபாணியே… எம்மையும் என் வாசகர்களையும் ஒரு குறையும் வாராமல் காக்கவேண்டும். உன்னைவிட்டு விலகிச் சென்றாலும் தடுத்தாட்கொள்ள வேண்டும்!!”
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் நாங்கள் செய்தாலும்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்
பிள்ளையென்று அன்பாய்ப் பிரியம் அளித்து குழந்தைகள் எங்கள் மீது
உன் மனம் மகிழ்ந்தருளித் தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய்!
கந்தர் சஷ்டி கவச வரிகள் மனதில் ஒலித்தது.
அடுத்த சில நிமிடங்களில் அர்ச்சனை முடிந்து தீபாராதனை காண்பிக்கப்பட்ட பிறகு அர்ச்சகர் மாலை உள்ளிட்ட பிரசாதங்களை கொடுத்தார்.
அங்கேயிருந்து வெளியே வர மனம் வரவில்லை. இருப்பினும் அடுத்தவர்களும் தரிசிக்கவேண்டுமே… எனவே வெளியே வந்தோம்.
மிகப் பெரிய கடமை ஒன்று முடிந்தது.
முருகனிடம் நமது நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்களையும் நூல் மாதிரிகளையும் வைத்து ஆசிபெற்றாகிவிட்டது.
மருமகனை பார்த்தாகிவிட்டது. அடுத்து பேரம்பாக்கம் சென்று மாமனை தரிசிக்கவேண்டும்.
ஆனால் அதற்கு முன்னர் ஒரு முக்கியப் பணி இருந்தது.
தொண்டர் திரு.பரமசிவத்தை கௌரவிக்கவேண்டும்.
வெளியே பிரகாரத்தை மும்முறை வலம் வந்தபிறகு கொடிமரம் அருகே உள்ள துளசி மாடத்திற்கு வந்தோம்.
பரமசிவத்தை பார்த்தோம். நம்மை நோக்கி வரும்படி கூற, நம்மருகே வந்தார்.
வெங்கட் அவர்களிடம் கூறி தயாராக இருந்த பொன்னாடையை அவருக்கு அணிவித்தோம். பிறகு ஒரு டிரேயில் வைத்து வேட்டி, துண்டு, ஷர்ட் பிட் மற்றும் ரொக்கம் கொஞ்சம் வைத்து அவருக்கு கொடுத்தோம்.
அடுத்து… சன்னதியில் எங்களுக்கு கொடுத்த மிகப் பெரிய மாலையை அவருக்கு சூட்டினோம். நெகிழ்ச்சியில் அவர் கண்கள் பனித்தன. திக் பிரம்மையாகி அப்படியே நின்றார்.
என்ன நினைத்தாரோ மாலையை கழற்றினார்.
“ஏன் கழற்றுகிறீர்கள்? உங்களுக்காகவே சன்னதியில் ஒரு மாலையை கொடுத்து இதை நாங்கள் பெற்றோம். கொஞ்ச நேரம் சந்தோஷத்திற்காக உங்கள் கழுத்தில் இருக்கட்டும்” என்றோம்.
“இல்லை இல்லை…” என்று தலையசைத்தவாறு பிடிவாதமாக கழற்றியவர், அந்த மாலையை நமக்கு அணிவிக்க விரும்புவதாக சைகையில் கூறினார்.
அவரது அன்பை மறுதலிக்க முடியவில்லை.
நமக்கு சூட்டி அழகு பார்த்தவர் கண்களில் அப்படி ஒரு நிறைவு.
6 ஆம் தேதி அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டுக் குழுவின் சார்பாக நடைபெற்ற வள்ளி மணவாளப் பெருமான் திருமண மகோற்சவத்தில் நாமும் ஒரு பிரார்த்தனையாளராக கலந்துகொண்டாலும் நாம் சர்வீஸ் செய்துகொண்டிருந்தபடியால் பிரார்த்தனையாளர்கள் பெற்றுக்கொண்ட மாலையை நாம் பெறமுடியவில்லை. பிரார்த்தனையாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி நாமும் நமது குழுவினரும் ஒதுங்கியே இருந்தோம். எங்கள் கவனம் சேவையில் மட்டுமே இருந்தது.
இந்நிலையில் ஆலயத்தில் தன்னலமற்று பணி செய்யும் ஒரு தொண்டரின் கரங்களால் நமக்கு மாலை சூட்டப்பட்டது நம்மை நெகிழச் செய்தது. மேலும் நேற்று சுபமுகூர்த்த நாள் வேறு. சுபமுஹூர்த்த நாள் என்பது எங்களுக்கு முருகன் சாட்சியாக தெரியாது. கோவிலில் ஒரு சில புதுமண ஜோடிகளை பார்த்தோம்…. அப்போது வெங்கட் அவர்களிடம் கூட கேட்டோம்… “இன்னைக்கு முஹூர்த்த நாளா என்ன? கோவில்ல நிறைய கல்யாண ஜோடிகள் இருக்காங்க?” என்று. அவரும் “தெரியலையே சுந்தர்… இருக்கலாம்” என்றார்.
ஆனால் பிறகு தான் தெரிந்தது ஞாயிற்றுக் கிழமையைவிட நேற்று (புதன்) தான் விசேஷம் என்பது.
திட்டமிட்டதைவிட மிக சிறப்பாக நல்லதொரு நாளில் திரு.பரமசிவம் அவர்களை கௌரவித்து அவர் கைகாலாலேயே மாலை சூட்டப்பட்டது நாம் எதிர்பார்க்காத ஒன்று.
இதற்காகத் தான் முருகன் அன்று அப்படி ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினான் போல… கண்கள் குளமாகியது மீண்டும்.
நிச்சயம் திரு.பரமசிவம் அவர்களை கௌரவித்ததை புண்ணியத்தை எதிர்பார்த்தோ இல்லை வேறு எதையும் எதிர்பார்த்தோ இல்லை. இதெல்லாம் நமது கடமை. ‘தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே’ என்பதால் இறைவனின் மெய்யடியார்களை கௌரவிப்பது, அவர்களுக்கு சேவை செய்வது, அவர்களுக்கு நம்மால் இயன்ற சின்னச் சின்ன சந்தோஷங்களை தருவது – இதையெல்லாம் நம் மனதிற்குள் எப்போதோ ஆணியடித்து தொங்கவிட்டாயிற்று.
"
முருகன் இதில் புகுந்து ஒரு திருவிளையாடல் நிகழ்த்தி நமது சேவையை மேலும் செம்மைப்படுத்தியதோடு ஒரு நல்ல சுபமுஹூர்த்த நாளில் நமக்கு தனது மாலையை சூட்டி ஆசியையும் வழங்கிவிட்டான். தட்ஸ் ஆல்!
ஆராவமுதென அருள் மழை பெய்யும்
கூரான வேல்கொண்டு கொடுமைகளைக் கொய்யும்
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் – துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்!
==========================================================
* To those who are new to this website
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
நான் புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டேன்!
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா…
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!
‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!
பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!
நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு!
அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!
==========================================================
‘ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்’ – வரிகளின் பின்னே ஒரு உண்மை சம்பவம்!
==========================================================
Also check :
மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி!
“முருகா! முட்டாளே, மவனே, உன்னைச் சும்மா விடமாட்டேன்!!”
சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?
“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…
‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!
==============================================================
‘யாமிருக்க பயமேன்’ தொடருக்கு….
துதிக்காதவரையும் தடுத்தாட்கொள்ளும் தண்டாயுதபாணி!
தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை! – யாமிருக்க பயமேன் ? (10)
தேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் ? (9)
நம் வாசகியின் மகனுக்கு வேல்மாறலால் கிடைத்த வேலை! – யாமிருக்க பயமேன் ? (Part 8)
‘வேல்மாறல் எனும் வரப்பிரசாதம்’ – உண்மை சம்பவம் – (Part 7)
‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)
நம் வாசகர் வீட்டில் ‘வேல்மாறல்’ செய்த அதிசயம் — யாமிருக்க பயமேன்? (Part 5)
கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)
இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)
வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)
வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)
==============================================================
இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்”
கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!
சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)
புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)
நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!
அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !
மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”
==============================================================
[END]
சுபமுகூர்த்த நாளில் சுபமாலை விழுந்துள்ளது.
கூடிய சீக்கிரம் வள்ளி மணாளனை மறுபடியும் மிக சிறப்பாக!! சந்திக்க அவர் அருள் புரிவார்.
உங்களின் புத்தகங்கள் சாதனை படைத்தது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
பரமசிவம் அவர்களை கண்டு பெரு மகிழ்வு கொள்கிறேன். சாதாரண குறையில்லா மக்களில் பலரும், என்னையும் சேர்த்து தான், பணத்திலே நாட்டம் கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறோம். அவரோ தொண்டு செய்வதில் தன்னை அர்பணித்து வாழ்வை மிக சரியாக வாழ்கிறார்.
வாழ்க உங்களின் தொண்டுகள்!!!
**
சிட்டி.
சிறுவாபுரி பதிவினை படித்தேன். அருமை. நானும் அந்த தன்னலமில்லாத மனிதரை பார்த்தேன். உண்மையில் வியப்பு. அவர் செய்யும் சேவை முன்பு நாமெல்லாம் மிகவும் சிறியவர்களே. விசேஷம் நடந்த அன்று கூட்டம் காரணமாக கோவிலில் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. ஆனால் முன் நாள் மாப்பிள்ளை அழைப்பின் போதே வெகு சிறப்பாக அபிஷேகங்களையும் ஆராதனைகளையும் கண்டு மிக்க மிகழ்ச்சி அடைந்தோம். மங்கள இசையும் அற்புதம்.
தங்கள் நூல் வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடக்க கந்தன் அருள் நிச்சயம் கிடைக்கும்.
அருமையான பதிவு.
திரு பரமசிவம் அவர்களின் தொண்டும் தங்களின் அறப்பணியும் மேன்மேலும் சிறக்கட்டும். வாழ்க வளமுடன்.
sundarji,
Seekiram Vivaga Prathisthu. All the Very Best.
Narayanan.
பதிவை படிக்க படிக்க மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. தாங்கள் அன்றைக்கு எங்களிடம் அறிமுகப் படுத்திய பொழுதே அவருக்கு நம் தளம் சார்பாக மரியாதை செய்யும் பொழுது உடன் இருக்க வேண்டும் என நினைத்தேன். நம்மிடம் பேசிக்க கொண்டு இருக்கும் பொழுதே அவரின் மன ஓட்டம் அவர் செய்யும் வேலையில் தான் இருந்தது. தாங்கள் கமெராவில் எடுத்த போட்டோ வரவில்லை என்று படிக்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருந்தது.மீண்டும் முருகன் உங்களை அங்கு வரவழைக்க நடத்திய நாடகம்.
இன்னும் சிறுவாபுரி பயணம் எங்கள் நெஞ்சை விட்டு நீங்கா இடம் பிடித்து விட்டது.தங்களின் குல தெய்வம் வயலூர் முருகனே தங்களின் படைப்பை அவர் பாதத்தில் சமர்பிக்க செய்து விட்டார்.
திரு வெங்கட் அவர்களுக்கும் முருகனின் அடியவருக்கு சால்வை சாற்றும் பாக்கியம் கிடைத்தது.
உங்களின் புத்தக விற்பனை ஓர் பெரிய வரலாற்றை படைத்தது சாதனை படைக்கும்..
வாழ்க. வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
சுந்தர் சார் சூப்பர்…..
ஒரே கல்லில் பல மாங்கனிகள் சாப்பிட்ட அனுபவமாக இருந்தது தங்களுடன் வந்த பயணம். தாங்கள் மிக சிறந்த எழுத்தாளர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் பல புதிய அவதாரங்களை எடுக்கவும், தங்கள் படைப்புகள் பல சாதனைகள் புரியவும் இறைவனை வேண்டுகிறோம்.
கே. எஸ். வெங்கட்
முகலிவாக்கம்.
பதிவினை படித்தேன். மெய் சிலிர்த்தேன்.
தங்களுக்கு முருகபெருமானின் பரிபூர்ண ஆசிகள் கிடைத்தது அறிந்து மட்டற்ற மகிழ்வுற்றேன்.
இனி யாவும் ஜெயமே.
Dear SundarJi,
Very heart touching article.. real hero Mr.Paramasivam.
Rgds,
Ramesh
வணக்கம்……தன்னலமில்லாத் தொண்டு செய்யும் திரு.பரமசிவம் அவர்களுக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்………கடவுளின் குழந்தை அவர்………இப்பேர்ப்பட்ட அடியவர் நம் தளத்தின் மூலம் கவுரவிக்கப் பட்டதில் மிக்க மகிழ்ச்சி………
இனி உங்கள் கேமராவில் எந்த அடியவரின் படமாவது பதிவாகவில்லை எனில் எங்களுக்கு இன்னும் ஒரு அழகிய பதிவு காத்திருக்கிறது என நாங்கள் நிச்சயித்துக் கொள்வோம்………. நீங்களும் இன்னும் ஒரு ஆலய தரிசனம் மற்றும் அடியவர் சந்திப்பு மீதமிருப்பதாக நினைத்துக் கொள்ளலாம்……..நன்றி…….
எல்லா கோயில்களிலும் இப்படி வேலை பார்பவர்கள் இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் கௌரவித்த நபர் வாய் பேசவோ காத்து கேட்கவோ முடியாதவர் என்கிற போது இது தங்களை வைத்து பரமசிவதிற்கு இறைவன் கொடுத்த கௌரவமாகவே கருதுகிறேன். முதல் நாள் நீங்கள் புகைப்படம் பதியவில்லை என்று வருத்தப்படுவதாக கூறியுள்ளீர்கள். சற்று யோசித்து பாருங்கள் அன்று அவரை கௌரவ படுத்த ஏன் கடவுள் நேரே தோன்றி இருந்திருக்கமாட்டார். இறைவன் அற்புதங்களை புரிபவர். உங்கள் அருகில் ஏதோ ரூபத்தில் இறைவன் அன்று நின்றுருப்பார். அவர் அந்த ரூபம் கேமராவில் பதிய விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.