Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, May 18, 2024
Please specify the group
Home > Featured > அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

print
பாண்டிநாட்டில் புகழ்பெற்ற வைணவத் தலமாக விளங்குவது திருமோகூர். நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்று இது. இங்கு மடப்பள்ளியில் பரிசாரகராக (தலைமை சமையற்காரராக) இருந்தார் பெரியவர் ஒருவர். பழுத்த வைணவரான அவரது மகன் வரதன். தந்தையின் அடியொற்றி வரதனும் சமையல் கலை கற்று நளபாகமாக சமைப்பதில் வல்லவன் ஆகினான்.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் மடப்பள்ளிக்கு சமையற்காரர் ஒருவர் தேவை என்பதை அறிந்த வரதன், அங்கு பணிக்கு சேர்ந்தான். பெரிய கோவில், நல்ல ஊதியம்.

ஸ்ரீரங்கத்தின் அருகே சில கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது திருவானைக்கா. (அடியேன் பிறந்த ஊர்!) பஞ்சபூத தலங்களில் ‘நீர்’ தலம் இது. சிவபெருமான் இங்கு நீர் வடிவத்தில் காட்சியளிக்கிறார். அன்னைக்கு இங்கு அகிலாண்டேஸ்வரி என்று பெயர்.

திருவானைக்கா
திருவானைக்கா

திருவானைக்காவலில் மோகனாங்கி என்று நாட்டியக்காரி ஒருத்தி இருந்தாள். பேரழகி அவள். நாட்டியத்திலும் வல்லவள். திருவிழாக்களின்போதும் உற்சவங்களின் போதும் பிரகாரத்தை சுற்றி வருகையில் சுவாமி முன்பு நாட்டியமாடுவது இவள் வழக்கம். வரதன் தற்செயலாக இவளை ஒரு நாள் சந்திக்க, இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது.

வரதன் ஒரு பெருமாள் கோயில் பரிசாரகர். மோகனாங்கி, ஒரு சிவன்கோயில் தாசி ! அவர்களின் உறவு சைவர்-வைணவர் ஆகிய இரு திறத்தாராலும் வெறுக்கப்பட்டது.

மோகனாங்கி தனது காதலரிடம் ஒரு உபாயம் கூறினாள். “இன்னும் சில நாட்களில் நவராத்திரி வருகிறது. இங்கே ஜம்புகேஸ்வரர் கோவில் மடப்பள்ளியில் வேலை அதிகம் இருக்கும். நிறைய பிரசாதங்கள் செய்யவேண்டியிருக்கும். அவர்களுக்கு நிச்சயம் நன்கு சமைக்கத் தெரிந்த ஒருவர் தேவை. பேசாமல் நீங்கள் சைவராக மாறி இங்கே சேர்ந்துவிடுங்கள்.” என்றாள்.

இனிய உறவுக்கு இடையூறாக மதக்கொள்கை இருப்பதை வரதனாலும் ஏற்க முடியவில்லை. ஒரு முடிவுடன் திரும்பினார். மறுநாள் காலை ஜம்புகேஸ்வரர் கோயிலை நாடிச் சென்றார். தான் சிவ சமயத்தை ஏற்பதாகக் கூறினார். அங்கிருந்தவர்கள் அதிசயித்தனர். மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அவருக்கு சிவ தீட்சை செய்வித்து அதற்கான சடங்குகளையும் உடனே செய்து வந்தனர். ஜம்புகேஸ்வரர் கோயில் பரிசாரகராகவும் நியமித்தனர்.

வரதனும் மோகனாங்கியும் இதையடுத்து எந்தவித இடையூறும் இன்றி மகிழ்ச்சியுடன் பழகி வந்தனர்.

ஒரு நாள் ஜம்புகேஸ்வரர் கோவிலில் அர்த்தஜாம பூஜை முடிந்தது. அகிலாண்டேஸ்வரி சன்னதி அருகே, ஒரு மண்டபத்தில் ஒரு சக்தி உபாசகர் அம்பாளை நோக்கி தியானித்தபடி அமர்ந்திருந்தார்.

அர்த்தஜாம பூஜை முடிந்தது அன்னை சர்வ அலங்காரமும் தரித்தபடி, வெண்பட்டுடுத்தி சர்வாலங்கார பூஷிதையாக சன்னதியினின்று வெளியே வந்தாள். தன்னையே தியானித்தபடி அமர்ந்திருக்கும் தனது பக்தனுக்கு அருள்புரிய திருவுளம் கொண்டாள்.

அன்னை இயல்பாகவே தீர்க்க சுமங்கலி. மங்களம் என்ற சொல்லுக்கு உரையாய் விளங்குபவள். நாவில் அவள் உண்ட தாம்பூலத்தில் எச்சில் இருந்தது. மேலும் நடக்கும்போது ஜல் ஜல் என்ற கொலுஸின் ஓசையும் வளையல்கள் ஒன்றையொன்று முட்டிக்கொண்டதால் எழுந்த கலகல ஓசையுடனும் சக்தி உபாசகரை நோக்கி நடந்தாள்.

திடீரென்று பரவிய சுகந்த நறுமணத்தால் தியானத்தினின்று விழித்த உபாசகர், தன்னெதிரே ஒரு சுமங்கலி நிற்பதை பார்த்தார். வந்திருப்பவள் சாட்சாத் அகிலாண்டேஸ்வரி அன்னை என்பதை அவரது ஊனக் கண்கள் உணர மறுத்தன.

"

“யாரை மயக்க இப்படி வேஷம் போட்டு வந்திருக்கிறாய்? உடனே போ இங்கேயிருந்து. உன் அழகில் மயங்குபவன் நானல்ல!” என்றார்.

அன்னை நகைத்தாள். “கணபதிக்கும் கந்தனுக்கும் ஞானப்பாலை புகட்டியவள் நான். நான் போட்ட தாம்பூலத்தினால் என் வாயில் ஊறிய ஞானமாகிய உச்சிஷ்டத்தை ஆலயத்தில் உமிழ மனமின்றி உன் வாயில் உமிழ வந்தேன். நீயோ அறியாமையால் என்னை இகழ்ந்துவிட்டாய்….” என்று கூறியபடி நகர்ந்துவிட்டாள்.

Kalamega Pulavar_

அப்போது சற்று தள்ளி தூணில் சாய்ந்தபடி அரைத் தூக்கத்தில் இருந்த வரதனை பார்த்தாள் அன்னை.

“வரதா சற்று வாயைத் திற…!”

கையெடுத்து வணங்கத் தக்க ஒரு திய்வரூப சுந்தரி திடீரென்று தன் முன் வந்து வாயைத் திற என்றதால் மறுபேச்சின்றி உடனே வாயைத் திறந்தான் வரதன்.

அடுத்த நொடி அன்னை அமிர்தத்தை விட மிக உயர்ந்ததான தனது தாம்பூலத்தின் உச்சிஷ்டத்தை வரதனின் வாயில் துப்பினாள். பல கோடி ஆண்டுகள் தவமிருந்தாலும் கிடைக்காத பேறு, வரதனுக்கு கிடைத்தது. “இன்னும் கொஞ்சம் கிடைக்காதா” என்று அவன் ஏங்கித் தவித்த நேரம் அன்னை கல கலவென சிரித்தபடி மறைந்துவிட்டாள். அன்னையின் ஞானமாகிய வாயூறுநீர் அவன் நாவில் பட்டமையால் ஆசுகவியாய் கல்லாமலே கவி மழை பொழியத் தொடங்கினான் வரதன். கவிகாளமேகம் என அது முதல் அழைக்கப்படலானார்.

kalamega pulavar _ akilandeswari
படத்தின் கீழுள்ள எழுத்து உங்களுக்காக பெரிதுபடுத்தி காட்டப்பட்டுள்ளது…

இது ஏதோ புராண காலத்திலும் நால்வர் காலத்திலும் நடந்ததல்ல. 15 ஆம் நூற்றாண்டில் நடந்தது. ‘திருவானைக்கா உலா’, ‘சரஸ்வதி மாலை’, ‘பரப்பிரம்ம விளக்கம்’, ‘சித்திர மடல்’ முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.

அகந்தையால் மிகப் பெரும் பாக்கியத்தை இழந்தார் தேவி உபாசகர். சிவாலய கைங்கரியத்தால் கிடைப்பதற்கரிய பேற்றை பெற்றார் காளமேகம்.

=========================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

==========================================================

நாம் ஈடுபட்டுள்ள ஒரு மிகப் பெரிய பணியில் சில இடர்பாடுகள். எனவே கடந்த இரண்டு நாட்களாக மனம் சரியில்லை. நேற்றும் நேற்று முன்தினமும் சிறுவாபுரியில் முருகன் திருக்கல்யாணத்தில் நேரத்தை செலவிட்டதன் மூலம் மனம் சற்று லேசானது. இன்று காலை அலுவலகம் வந்தோம். எதை எழுதுவது என்று புரியவில்லை. பல பதிவுகள் பாதியுடன் நிற்கின்றன. அவற்றை நிறைவு செய்யவும் இயலவில்லை.

ஏனோ தெரியவில்லை கவி காளமேகத்தின் இந்த கதை மனதுக்கு இதமளித்தது. அமிழ்தினும் இனிய அன்னையின் பெருமையை இந்த கதை உணர்த்தியமையால் வாரத்தின் முதல் நாளை மங்களகரமாக துவக்க இந்த பதிவை அளிக்க தீர்மானித்தோம்.

Kalamega Pulavar 2

திருவானைக்காவில் இருந்தபோது அடிக்கடி ஜம்புகேஸ்வரர் கோவிலுக்கு செல்வோம். அப்போது கவிகாளமேகத்திற்கு  அன்னை அருள் புரிந்த புகைப்படத்தை பார்த்தபடி செல்வோம். படம் அத்தனை அழகு. சுமார் 50 ஆண்டுகளாக இந்தப் படங்கள் அங்கு இருக்கின்றன.

சென்ற ஆண்டு திருச்சி சென்றபோது திருவானைக்காவல் சென்றிருந்தோம். அப்போதும் இந்தப் படத்தை பார்த்தோம். ஒருவேளை புகைப்படம் எடுத்தோமா என்று தெரியவில்லையே… எடுத்ததாக ஞாபகமில்லையே… என்று ஒரு வித பதட்டத்துடன் நமது PHOTO ARCHIVES சென்று பார்த்தோம். நல்லவேளை எடுத்திருந்தோம்.

காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லையே. சென்ற ஆண்டு நாம் கோவிலுக்கு சென்றபோது எடுத்த புகைப்படம் எங்கே எப்படி உதவுகிறது என்று பாருங்கள். நமக்கே ஆச்சரியம் தான்!

அடுத்த முறை ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றால், அங்கு பிராகாரங்களில் மாட்டப்பட்டிருக்கும் இதோ போன்ற படங்களை காணத் தவறவேண்டாம். ஒவ்வொரு படமும் அத்தனை அழகு. உயிர்ப்பு.

==============================================================

நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 12

Tamboolamசர்வ மங்களம் தரும் தாம்பூலம்!

* பெண்கள் இரவு உணவுக்குப்பின் கணவனுக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டும்; பின் தானும் தரித்துக்கொள்ள வேண்டுமென்று ஒரு நியதியுண்டு. தாம்பூலம் மகாலட்சுமிக்கு சமமானது. ஆணுக்கும் சில நியதிகள் உண்டு. ஒரு ஆண் தன் மனைவியின் கையால் மட்டும்தான் தாம்பூலம் வாங்கிப் போட்டுக்கொள்ள வேண்டும். கணவன்- மனைவி இருவர் மட்டுமே தாம்பூலம் பரிமாறிக்கொள்கிறவரை மகாலட்சுமி இல்லத்தில் நிரந்தரமாக இருப்பாள்.

* பிரம்மச்சாரிகள் தாம்பூலம் தரிக்கக்கூடாது.

* ஆலயங்களில் நடைபெறும் உற்சவம் மற்றும் நிகழ்ச்சிகளின் போது வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காய், மாங்கல்ய சரடு, வளையல், துணி வைத்து பக்தர்களுக்கு தானம் செய்யலாம். இந்த தானத்துக்கு ‘தாம்பூல தானம்’ என்று பெயர். இந்த தானம் செய்பவர்களுக்கு உடனே திருமண தடைகள் விலகும்.

==============================================================

Also check :

மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !

திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)

ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)

எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ? ஆடி ஸ்பெஷல் !

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

அன்னையின் அருள் வெளிப்பட்ட ‘தை அமாவாசை’ – திருக்கடையூர் கோவில் குருக்கள் கூறும் தகவல்கள்!

சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1

திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

================================================================

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

================================================================

[END]

6 thoughts on “அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

 1. திங்கள் அன்று அன்னை அருட்கடாட்சம் பெற்ற புலவர் கவி காலமேகத்தை பற்றிய பற்றிய பதிவை போட்டு இந்த வாரம் நறுமணம் தவழ்ந்து வீசும் வாரமாக ஆரம்பித்து விட்டீர்கள்.

  தெரிந்த கதையை நம் தளத்தின் மூலம் படிப்பதில் நெஞ்சில் நீங்காத கதையாக இந்த பதிவு இடம் பிடித்து விட்டது. சக்தி உபாசகருக்கு கிடைக்காத ஒரு பாக்கியம் ஒரு சமையல்காரருக்கு அன்னையின் அருட்ப்ராசாதம் கிடைத்தது அவர் செய்த புண்ணியத்தால்.

  அன்னையின் அருட் பார்வை படும் படம் அருமை.

  திருமோகூர் என்று படிக்கும் பொழுதே என் மனம் மதுரை திருமுகூர் காளமேகப் பெருமாள் (சக்கரத்தாழ்வார்) கோவிலுக்கு சென்று விட்டது. மதுரை செல்லும் பொழுது இந்த கோவிலுக்கும் செல்லும் வழக்கம் உண்டு . 10 கிலோ மீட்டர் தொலைவில் திருவாதவூர் (மாணிக்கவாசகர்) பிறந்த ஊர் உள்ளது.நண்பர்கள் மதுரை சென்றால் அவசியம் இங்கு செல்லவும்.

  தாங்கள் ஒவ்வொரு இடத்திற்கும் செல்லும் பொழுதும் சிரமம் பார்க்காமல் எடுக்கும் படங்கள் உங்களின் பதிவுகளுக்கு உபயோகப் படுகிறது.

  அழகிய பதிவிற்கு நன்றிகள் பல. டிப்ஸ் as usual , பயனுள்ள ஒன்று

  வாழ்க …. வளமுடன்

  நன்றி
  உமா வெங்கட்

 2. சுந்தர் சார்,
  அன்னையின் அருளை உணர்த்தும் அருமையான பதிவு..

  தங்கள் சிறுவாபுரி பதிவுக்கு கோடி நன்றிகள்.. எம் குடும்பத்தினர் நேற்று நடைபெற்ற முருகன் திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்றனர். நாம் அடைந்த மன மகிழ்ச்சி, நிறைவு வெளியிட வார்த்தையில்லை. தங்கள் பணி தளராமல் தொடர வாழ்த்துகிறோம், கந்தன் துணை இருப்பான்..
  நன்றியுடன்,
  க பார்த்தசாரதி

  1. உங்கள் வார்த்தைகள் உள்ளத்திலிருந்து வந்திருப்பதை உணர முடிகிறது. உங்கள் பிரார்த்தனை நிறைவேற முருகன் அருள்புரிவான்.

   மறக்காமல் நமக்கும் அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டுக் குழுவிற்கும் பத்திரிக்கை அனுப்பவும்.

   மிக்க நன்றி !

 3. இந்த பதிவில் தாங்கள் கொடுத்த அன்னையின் உமிழ் நீரை பற்றிய விஷயங்கள் எனக்கு புதிது. மிகவும் அருமை. அதுவும் பதினைந்தாம் நூற்றாண்டில்தான் நடந்துள்ளது என்பதை அறியும் பொழுது மிகவும் சந்தோஷம்.

 4. அன்னையின் அருள் உண்டு!
  அகிலம் ஆள்வீர்கள்!!

  வெல்வது நிச்சயம் .
  சொல்வது இவன்.
  சொல்ல வைப்பது அவன் .

  குருவருளே திருவருள்
  திருவருளே குருவருள் .
  குருவின் மலர் பாதங்களுக்கு
  சரணம் சரணம் சரணம்

 5. Lovely Article Sundarji!
  Thank you!
  “The finest steel has to go through the hottest fire”
  All the set backs are challenges. Get moving and march forward.
  Our prayers for your grand success.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *